பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் சென்னையில் அதிகமாகிவிட்ட நிலையில் அயல்நாட்டவரின் கலாசாரமும் நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது. அலுவலகத்தில் மாதம் ஒருமுறை 5 ஸ்டார் ஹோட்டலில் லன்ச், (அ) டின்னர் ஏற்பாடு செய்கிறார்கள் நட்சத்திர ஹோட்டல்களுக்கு எப்போதாவது இதுபோல் அலுவலக வேலை காரணமாக சென்றிருந்தாலும், வெளிநாட்டரவுடன் சேர்ந்து செல்லும் போது தனி அனுபவமாக தான் இருக்கிறது. குறிப்பாக அசைவ உணவு, வெளிநாட்டு உயர்ந்த வகை மது வகைகள் நிச்சயம் இருக்கும். இவை இல்லாமல் ஆண், பெண் என்ற வித்தியாசம் எங்களிடம் இல்லாமல் எங்களுது வெளிநாட்டு மேலாளர் பார்த்துக்கொள்வார். அவ்வப்போது நடுநடுவே எங்களுக்கு அதற்கான அறிவுரை வழங்கப்படும் அதேசமயம் நம் கலாசாரமும் அவருக்கு தெரிந்து இருப்பதால் எங்களை எதற்கும் அவர் கட்டாயபடுத்துவதும் இல்லை.
இப்படி செல்லும் போது நம் இந்திய நண்பர்களிடம் பார்த்த சில பழக்கவழக்கங்கள், எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது நாங்கள் விருப்பப்பட்ட எதையும் அங்கே சாப்பிடலாம். Standard Menu கிடையாது. ஆண்கள் சிலர், மது சாப்பிடும் பழக்கம் மிக அறிதாக இருந்தாலும், உயர்ந்த ரக மதுபானத்தை பார்த்தவுடன் அதிகமாக குடிப்பார்கள். சொல்லும் காரணம் “ஓசியில் கிடைக்கும் போது அனுபவிக்கனும் என்பதே”. குடித்தாலும் பரவாயில்லை, நேரம் ஆக ஆக அவர்களின் முன்பே அழகாக இருக்கும் முகம் லேசாக மாறிவிடும், பேச்சும் தான்.. தாங்கமுடியாத அளவுக்கு பேசுவார்கள். திருமணம் ஆகாதவர்கள் அதிகம், அதே சமயம் எங்களுடன் சாப்பிட வந்த வெளிநாட்டவர்களும் இவர்களை விட அதிகம் மது அருந்துவார்கள் தான், ஆனால், அவர்கள் முகத்திலோ, பேச்சிலோ அதிக மாற்றம் இருக்காது. இதை நான் நண்பர்களிடம் கேட்கும் போது, அவர்கள் எப்போதுமே சாப்பாட்டுடன் குடிப்பதால் பழகி போய் விட்டாரகள். நாம் அப்படியா, இப்படி எப்போதாவது ஓசியில் கிடைக்கும் போது சாப்பிடுவாதால் உளர ஆரம்பித்துவிடுகிறோம் என்பார்கள். இதில் குறிப்பிட்ட நண்பர்களுக்கு வயது 22- 25 க்குள் தான் இருக்கும். இவர்கள் மட்டும் அல்ல பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கும் பல இளைஞர்கள் குடிப்பது என்பதை தங்களது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக ஆக்கி கொண்டார்கள். இதற்கு அவர்களின் அதிகமான சம்பளம், வாழ்க்கை முறை, நிறுவனங்களில் சொல்லித்தரப்படும் கலாசாரம் எல்லாமும் காரணமாகிறது.
பிச்சா கார்னரில் மொய்க்கும் கூட்டம், எப்போதும் சாட் உணவு என்று தங்களை வெளிநாட்டில் இருப்பது போன்று பாவித்து கொள்கிறார்கள். இந்த உணவு பழக்கவழக்கங்களால், 20 வது வயது மதிக்க தக்க பிள்ளைகள் 30 பது வயது போல் தோற்றமளிக்கிறார்கள். குடி பழக்கம், தூக்கமின்மை காரணமாக கண்களுக்கு அடியில் எப்போதும் ஒரு சிறு வீக்கம் தெரிகிறது.
சாஃப்ட்வேர் டிவலப்மெண்டு என்று எப்போது பார்த்தாலும் கம்பூயட்டரையே வெறித்து கொண்டும், எப்போதும் அதைப்பற்றிய கவனத்துடம் இருப்பது இல்லாமல், “டென்ஷன்னா இருக்கு , ஒரு தம் போட்டுடு வந்தால் சரியாகி போகும்” என்று புகைப்பதும் கூட நிரந்தர பழக்கமாகிவிட்டது. இந்த சாஃப்ட்வேர் கம்பெனிகளில் வேலை பார்க்கும் பல பிள்ளைகளுக்கு தலையில் முடி பஞ்சம். 22-25 வயதுக்குள்ளேயே முடி கொட்டி போகிறது, இள நரை வேறு. முதிற்ச்சியான, வயதான தோற்றம், திருமணம் ஆகி இரண்டு குழந்தை இருக்குமோ என்று எண்ண தோன்றும்.
பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஜன்க் உணவை அதிகமாக சாப்பிட்டு மிகவும் குண்டாகி போய் இருக்கிறார்கள். உடம்பை குறைக்க ஜிம் வேறு தனி. ஜிம், அழகு நிலையத்திற்கு இவர்கள் கொடுக்கும் காசுக்கு இவர்களின் கல்யாண செலவையே பார்த்து விடலாம்.
உணவு பழக்கங்களையும், குடி மற்றும் புகைக்கும் பழக்கத்தை மாற்றினாலே இவர்களின் தோற்றத்தில் நல்ல வேறுபாடு தெரியும். சம்பாதித்தல் என்பது முக்கியமே….அதற்காக சம்பாதிப்பதை இப்படி தான் பயன்படுத்த வேண்டுமா.. அலுவலக நேரம் போக.மீதி நேரத்தை விளையாட்டு, டிரைவிங், நீச்சல் , குடும்பம், நண்பர்கள் என்று செலவிட எத்தனையோ வழிகள் இருக்கிறது..
ஆரோக்கியம் எதில் உள்ளது என்பதை உணர்வார்களா நம் இளைஞர்கள்?.
அணில் குட்டி அணிதா:- முடிச்சிட்டிங்கீங்களா அம்மனி?.. அது எப்படி அம்மனி எப்பவுமே ஊருக்கே உபதேசம் பண்றீங்க?.. என்னவோ நீங்க என்னவோ மார்கேண்டேயினின்னு நெனப்பா?.. வயசானாவே..இப்படிதான்.. சின்ன பசங்க எது பண்ணாலும் உபதேசம் பண்ண தோனும்.. ஆனா நம்ம கவிதா உபதேசம் பண்ணல.. புலம்பறாங்க.. ம்ம்..என்னடா.. நம்மால தம் போட முடியலயே.. ராத்திரியல நைட் கிளப்’ல போய் பீர் அடிச்சிட்டு, dance பண்ணமுடியலேன்னு.. பொறாம.. விடுங்க..அவங்க அப்படிதான்..! அப்புறம் இன்னொரு விஷயம்..காத குடுங்க.. அம்மனி புள்ளைய எப்படி வளக்கறாங்கன்னு கேளுங்க.. புள்ள கேட்கும் போது எல்லாம்..pizza, burger, sandwidch..தான்.. ம்ம்.. வூட்டுகுள்ள ஒன்னும் ..வேளியில ஒன்னு.. கேப்பாரு இல்ல… நானும் ஒவ்வொரு வாட்டியும்..நீங்க யாராவது கேப்பீங்கன்னு டிப்ஸ் குடுக்கறேன்.. ம்ம்ம்.. கவனிங்க!!.
பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கமும், கலாச்சார சீர்கேடும்
Posted by : கவிதா | Kavitha
on 18:29
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
46 - பார்வையிட்டவர்கள்:
//அதே சமயம் எங்களுடன் சாப்பிட வந்த வெளிநாட்டவர்களும் இவர்களை விட அதிகம் மது அருந்துவார்கள் தான், ஆனால், அவர்கள் முகத்திலோ, பேச்சிலோ அதிக மாற்றம் இருக்காது.//
இது முற்றிலும் தவறு. அளவுடன் இரண்டு அல்லது மூன்று பெக்வுடன் பெரும்பாலும் நிறுத்தி கொள்ளவார்கள் என்பதும் உண்மை.
ஆனால் நம் மக்களுக்கு போதை உச்சி மண்டைக்கு ஏறினால் தான் குடித்த மாதிரி இருக்கும். அது தான் காரணம். எவ்வளவு அடித்தாலும் நிதானமாக இருக்கும் பல மக்கள் நம்மிடமும் உண்டு.
//பிச்சா கார்னரில் மொய்க்கும் கூட்டம், எப்போதும் சாட் உணவு என்று தங்களை வெளிநாட்டில் இருப்பது போன்று பாவித்து கொள்கிறார்கள்.//
அது உண்மை தான். நீங்கள் சொன்ன பிசா, பர்கர் போன்றவை தான் வெளிநாட்டில் உணவு என்னும் போது தான் நாக்கு நம் உணவை தேடி அலையும். ஆனால் நான் இந்தியாவில் இருக்கும் போது அந்த கருமத்தை ஒரு தடவை தான் சாப்பிட்டு இருந்தேன். ஆனால் என் நேர கொடுமை Haiti யில் இருக்கும் போது அதான் பெருபாலனா நாட்களில் எனக்கு முக்கிய உணவாக இருந்தது. No Options :((
தோழி 'கவி'தா...
//பிச்சா கார்னரில் மொய்க்கும் கூட்டம், எப்போதும் சாட் உணவு என்று தங்களை வெளிநாட்டில் இருப்பது போன்று பாவித்து கொள்கிறார்கள். இந்த //
என்னது பீட்சா கார்னரில் "பிச்சை" எடுக்கிறார்களா ;-)) அவர்கள் வெளிநாட்டில் இருப்பது "போல"த்தானே பாவித்துக் கொள்கிறார்கள். அது போல பாவித்துக் கொண்டு இங்கு ஒருவர் வந்தார் தானும் அவர்களில் (அமெரிக்க இளைஞர்) ஒருவர் என்று நினைத்துக் கொண்டு, நமக்கெல்லாம் நெனைப்புத்தானே பொழப்ப கெடுக்குது. அப்படி வந்தவரு, அமெரிக்காவ ரொம்ப ந(ண்)ம்பகத்தன்மையோட அணுகி, ஒரு நாள் சரியான பார்ட்டிங்க கையிலெ மாட்டி, அவரோட பாண்ட்ஸ்-லேயே (காத மூடிங்கோங்க) மூச்ச போக வச்சுட்டாங்க...
நம்ம தலைவரு கொஞ்சம் அதிகமாகவே அமெரிக்கத் தனத அட இவங்களே பண்ணதா சேட்டையை பண்ணியிருப்பாரு போல... அங்கிருந்து வெளியிலெ வரும் போது ரொம்ம்ம்ம்பத் தெளிவா இருந்தாரு...
காகம் கூ...கூ...கூ கூப்பிட்ட குயிலு ஆயிடுமாங்க... :-)))
எனக்கென்னவோ இந்த 5 ஸ்டார் உணவு என்றாலே ஒரு அலர்ஜி. காரமே இல்லாமல் ஒரு மாதிரி அசட்டுச் சுவை உள்ள பண்டங்களே அதிகம்.
நீங்கள் சொல்வதுபோல நம்மூர் பசங்களும் ஓசியில் கிடைக்கிறதென்றால் காஞ்சமாடு கம்பில் விழுந்தது போல விழுந்து விடுகிறார்கள்.
ரொம்பச் சிறிய வயதில் அதிகம் சம்பாதிக்க முடிவதில் அவர்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கின்றதென்றாலும் சில சமயங்களில் பேலன்ஸ் தவறுவதும் தடுக்க முடியாமல் போகிறதுதான்.
நான் அங்கெல்லாம் போவது துபாஷி வேலை செய்யும்போதுதான். அப்போது தண்ணியெல்லாம் போட்டால் கதை கந்தரகோலமாகிவிடும். ஒரு பெக்குடன் நிறுத்திக் கொள்வதே நலம், ஏனெனில் அங்கு நான் டியூட்டியில்தான் இருப்பேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அது தான் காரணம். எவ்வளவு அடித்தாலும் நிதானமாக இருக்கும் பல மக்கள் நம்மிடமும் உண்டு.//
சிவா.. ம்ம்.இருக்கலாம்..
//ரொம்பச் சிறிய வயதில் அதிகம் சம்பாதிக்க முடிவதில் அவர்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கின்றதென்றாலும் சில சமயங்களில் பேலன்ஸ் தவறுவதும் தடுக்க முடியாமல் போகிறதுதான்.//
ராகவன் சார் நீங்க சொல்வது சரிதான்.. பேலன்ஸ் தவறுகிறது என்பதை நம் இளைஞர்கள் உணரவேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்..
தேகாஜி..
நீங்க சொன்னது எனக்கு முழுமையா புரியல.. எனக்கு நீங்களாவது..இல்லை நம் நண்பர்கள் யாராவது விளக்கினால் புரிந்து கொள்வேன்.. சில விஷயம் இப்படித்தான்.. சீக்கிரம் புரியமாட்டேன்குது.. என்ன செய்யலாம்?!!
//பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. // பரவாயில்லயே... பெண்களைக்கூட குறை சொல்கிறீர்கள் :)
கவிதா அவர்களுக்கு,
தரமான ஒரு பதிவை அருமையான எண்ணங்களை தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்.
அதற்கு, என் வாழ்த்துக்களும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நம் இளைய சமுதாயம் திடீர் பொருளாதார வசதிகளை பெற்று இந்த கலாச்சார விஷப்புகையை சுவாசித்து வருகிறார்கள்.
இதை நீங்களும் நானும் சீர்கேடு என்று சொன்னாலும், இவர்கள் இவ்வாறு ஒத்துக்கொள்வதில்லை.
இதை ஒரு நாகரீகமான மாற்றம் என்றே சொல்கிறார்கள். இது இவர்களின் அறியாமையை காட்டுகிறது.
குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு பெற்றோர்கள் ஒரு நல்ல value system த்தை தன் சந்ததிகளுக்கு வழங்க தவறிவிடுவதன் விளைவே இது.
பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு எது நல்லது, எது கெட்டது என்று தீர்மானமாக சொல்லிக்கொடுப்பதில்லை. இம்மாதிரி குடிப்பது கூடாது என்று குழந்தைகளுக்கு சொன்னால், ஏன் தவறு என்று குழந்தைகள் மனம் பதியுமாறு சொல்வதில்லை.
பல பெற்றோர்களும் இம்மாதிரி கலாசார சீர்கேடுகளை வரவேற்காவிட்டாலும், சகித்துக்கொள்கிறார்கள். இம்மாதிரி நாகரீகம் நமக்கு நல்லதல்ல என்று அவர்களுக்கு உள் மனதில் தீர்மானமான நம்பிக்கை இருப்பதில்லை. அதனால், அவர்கள் தன் குழந்தைகளுக்கு சரியான பாதையை காட்ட தவறுகிறார்கள்.
பணம் வந்தால் இம்மாதிரி கெடவேண்டுமா. பணத்தை எவ்வாறு ஆள வேண்டும் என்ற அடிப்படை financial wealth building பல பெற்றோர்களுக்கே தெரிவதில்லை.
மற்ற ஒரு முக்கிய காரணம், peer pressure. இன்று பல நிறுவனங்களில் இம்மாதிரி குடிக்காத பசங்களை கேலி செய்கிறார்கள். அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுப்பதில்லை. அவர்களை விளையாட்டாக இந்த கலாசாரத்திற்கு இழுக்கிறார்கள். குடிக்காத பசங்கள், ஆண்களும் கூடி சுற்றாத பெண்களும் 'பத்தாம்பசலிகள்' 'பழைய பஞ்சாங்கங்கள்' என்று சொல்லி இளம் பேர்களை இவ்வாறு இருப்பது முட்டாள்தனம் என்று நினைக்கவைக்கிறார்கள்.
இந்த கம்ப்யூட்டர் கம்பெனிகளும் இம்மாதிரி கலாச்சார சிந்தனை உள்ள இளைஞர்களுக்கு ஏற்றாற்போல இந்த விருந்துகளை செய்ய முன்வருவதில்லை. அங்கு அசைவ உணவும், மதுவும் அருந்துவது அவசியம் என்பதுபோல இவை நடந்து கொள்கின்றன.
பல பார்ட்டிகளில் சைவ உருப்படியான சாப்பாட்டு விஷயங்களை பார்ப்பதே அரிதாய் இருக்கிறது.
மேலும், பல எழுதலாம். பின்னூட்டம் ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் என்பதால் நிறுத்திக்கொள்கிறேன்.
மேலும் பல நல்ல இம்மாதிரி தரமான சுவையான பதிவுகளை தங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
நன்றி
//பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. // பரவாயில்லயே... பெண்களைக்கூட குறை சொல்கிறீர்கள் :) //
அருள், நீங்க ஒன்றை சரியா புரிஞ்சிகனும். இந்த உண்மை, நேர்மை, நியாயம், நீதி - இதற்கெல்லாம் மறுபெயர் "கவிதா" கவிதா" கவிதா"
நன்றி ஜயராமன்ஜி, உங்களின் ஒவ்வொரு கருத்தும் படித்து ஏற்று கொள்ளக்கூடியது, இந்த பதிவை படிப்பவர்கள் அத்தனை பேரும் உங்களின் கருத்துக்களை படிக்குமாறு நான் அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
//பேலன்ஸ் தவறுகிறது என்பதை நம் இளைஞர்கள் உணரவேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.. //
இது எல்லா இளைஞர்களுக்குமா ?
//நம் இளைய சமுதாயம் திடீர் பொருளாதார வசதிகளை பெற்று இந்த கலாச்சார விஷப்புகையை சுவாசித்து வருகிறார்கள்.//
ஐயராமன் சார், இதில் நம் இளைய சமுதாயத்தில் சிலர் என்று போட்டு இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. மற்றபடி தாங்கள் கூறிய அனைத்தனையும் ஒத்துக் கொள்கின்றேன்.
//அருள், நீங்க ஒன்றை சரியா புரிஞ்சிகனும். இந்த உண்மை, நேர்மை, நியாயம், நீதி - இதற்கெல்லாம் மறுபெயர் "கவிதா" கவிதா" கவிதா" //
அப்படியா!!!
அப்படியா!!!
அப்படியா!!!
அப்படியா!!!
சொல்லே இல்ல.......
இதுல உண்மைக்கும், நேர்மைக்கும் என்ன வித்தியாசம்.....
நீதிக்கும், நியாயத்துக்கும் என்ன வித்தாயசம்..........
//இதுல உண்மைக்கும், நேர்மைக்கும் என்ன வித்தியாசம்.....
நீதிக்கும், நியாயத்துக்கும் என்ன வித்தாயசம்.......... //
ஒரு வித்தியாசமும் இல்ல சிவா.. எல்லாத்துக்குமே 'கவிதா' ன்னு ஒரே அர்த்தம் தான்..
//அப்படியா!!!
அப்படியா!!!
அப்படியா!!!
அப்படியா!!!// சிவா, அதப்படிச்சதும் நானும் இதே தான் feel பண்ணேன் :)))
என்னத்த சொல்ல.....
நாகை சிவா அவர்களுக்கு,
தாங்கள் சொன்னது....
===========
//நம் இளைய சமுதாயம் திடீர் பொருளாதார வசதிகளை பெற்று இந்த கலாச்சார விஷப்புகையை சுவாசித்து வருகிறார்கள்.//
ஐயராமன் சார், இதில் நம் இளைய சமுதாயத்தில் சிலர் என்று போட்டு இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. மற்றபடி தாங்கள் கூறிய அனைத்தனையும் ஒத்துக் கொள்கின்றேன்
============
அதாவது, இந்த விபரீத கலாசார மோகம் என்பது விழப்புகை. அது எங்கும் எப்பொழுதும் பரவிக்கொண்டிருக்கிறது.
அதை இந்த இளைய சமுதாயம் சுவாசித்துக்கொண்டேதான் இருக்கிறது.
ஆனால், நல்ல value system, சுற்றுப்புற அனுசரணை முதலிய விடமின்கள் இருப்போர் இந்த விழப்புகையால் 'நோய்வாய்' படுவதில்லை. மற்றவர்கள் இந்த விஷப்புகை தாக்கி சீக்காளியாகி எல்லாவற்றையும் இழக்கிறார்கள்.
நன்றி
பி.கு: வடிவேலு பாஷையில் -- அப்பா... எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது.... ஹி ஹி...
//அப்படியா!!!
அப்படியா!!!
அப்படியா!!!
அப்படியா!!!// சிவா, அதப்படிச்சதும் நானும் இதே தான் feel பண்ணேன் :)))
எப்படியோ !! சரியென்று சொல்லிவிட்டால் போதுமப்பா..
கவிதா, இப்படி திடீர்னு எங்க இன்டஸ்ட்ரி பத்தி எழுதி வாயைத் திறக்க முடியாம பண்ணிட்டீங்க.. :) சரி என்னோட 3 சென்ட்ஸ்:
1. எங்க கூட வேலை பார்த்த ஒரு பையன், இப்படித் தான், முதல் வேலை, முதல் பார்ட்டி, அளவு தெரியாம குடிச்சிட்டு அவனோட மானேஜர் கிட்டயே ஏதோ உளறி (அவர் அளவா ஒரே க்ளாஸ் தான் குடிப்பாரு முக்கியமா இந்த மாதிரி ஆட்களைக் கண்காணிக்கறதுக்காகவே), அதிலிருந்து அவனுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய எந்த பதவி உயர்வும் மறுக்கப்பட்டு ரொம்ப சீக்கிரமாகவே வேலையை விட்டுப் போக வேண்டி வந்தது.
2. எல்லா விதமான peer pressure, manager pressureஉம் இருந்தும் இந்த தண்ணி, தம் அடிக்காம இருக்கிற பசங்களையும் நிறையவே இருக்காங்க. நம்ம லிமிட் எதுன்னு தெரியணும். சுயமரியாதை, கட்டுபாடு, இதோட ஒரு நல்ல ஆரோக்கியமான பொழுதுபோக்கையும் வழக்கப் படுத்திகிட்டா இந்த மாதிரி temptation-லேர்ந்து சுலபமா தப்பிக்கலாம்.
3. இந்த பர்கர் பிஸ்ஸா சாப்பிடுவதை பத்தி: வீட்ல நல்லா வாய்க்கு ருசியா சமைச்சு போட்டு பழக்கி விட்டுட்டாங்கன்னு வைங்க, அப்புறம் இந்த உப்பில்லாத பர்கரையும் பிஸ்ஸாவையும் சாப்பிடுவாங்கன்னு சொல்றீங்க? என்னையே எடுத்துக்குங்க.. இங்க இந்த மாதிரி சாப்பாடுதான் கிடைக்குது. சாப்பிட விருப்பமில்லாம, நானே கொஞம் உப்பு காரத்தோட சுவையா சமைச்சுதான் சாப்பிடுறேன். இங்க நிறைய பேர் அப்படித் தான் இருக்காங்க, நம்மூர்லேர்ந்து(TN) வந்தவங்க..
சரி, காபி பழக்கத்தை விட்டுட்டீங்க, ஒரு நாளைக்கு 'வேலை வேலை'ன்னு சொல்லி 5 காபி குடிக்கிறவங்களைப் பத்தி ஒண்ணும் குட்டு, திட்டு எல்லாம் இல்லையா ? :)) (இல்லை, என்னை மட்டும் இந்தப் பதிவுல திட்டாமயே விட்டுட்டீங்களேன்னு கேட்டு வாங்கிக்கிறேன் :) )
//சரி, காபி பழக்கத்தை விட்டுட்டீங்க, ஒரு நாளைக்கு 'வேலை வேலை'ன்னு சொல்லி 5 காபி குடிக்கிறவங்களைப் பத்தி ஒண்ணும் குட்டு, திட்டு எல்லாம் இல்லையா ? :)) (இல்லை, என்னை மட்டும் இந்தப் பதிவுல திட்டாமயே விட்டுட்டீங்களேன்னு கேட்டு வாங்கிக்கிறேன் :) )//
பொன்ஸ், ஏன் இப்படி அருள் & Group க்கு நீங்களே points எடுத்து கொடுக்கறீங்க.. அவங்களே எப்படா எப்படான்னு காத்துகிட்டு இருக்காங்க..
//இந்த தண்ணி, தம் அடிக்காம இருக்கிற பசங்களையும் நிறையவே இருக்காங்க.// அப்போ என்ன மாதிரி நிறைய பேர் நாட்ல இருக்காங்கன்னு சொல்லுங்க :))
கவிதா,
இந்த உண்மை, நேர்மை, நியாயம், நீதி - இதுக்கெல்லாம் மூணாவது பெயர்.. பொன்ஸ், பொன்ஸ், பொன்ஸ் :))))
-- அப்டீன்னு அருள், சிவா எல்லாம் சொல்றாங்க.. உங்களுக்கு கேட்கலையா? ;)
பொன்ஸ் அவர்களே,,
///
யமரியாதை, கட்டுபாடு, இதோட ஒரு நல்ல ஆரோக்கியமான பொழுதுபோக்கையும் வழக்கப் படுத்திகிட்டா இந்த மாதிரி temptation-லேர்ந்து சுலபமா தப்பிக்கலாம்
///
நூற்றில் ஒரு வார்த்தை. இதைத்தான் நான் நல்ல value system என்று சொன்னேன்.
இது இரு இளைஞன் தனியான உலகில் பழக, தொழில் செய்ய ஆரம்பிக்கும் முன் பெற்றோர்களால் அவன் மனதில் ஆழமாக விதைக்க வேண்டியது.
அவ்வாறு விதைத்த நல்ல கொள்கைகளை இன்னும் உரம் போட்டு வளர்த்து எத்தனை கேலி, எதிர்ப்பு வந்தாலும் அவனை தன் பிடிப்பிலிருந்து தளராமல் செய்ய வேண்டியது.
இதெல்லாம், அந்த சிறுவன் இளைஞனாவதற்கு முன் செய்ய வேண்டியது.
பெரும்பாலும் பெற்றோர்கள் இதில் தவறுகிறார்கள்.
நன்றி
//அப்பா... எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது.... ஹி ஹி... //
நீங்களுமா... U too.....
//எப்படியோ !! சரியென்று சொல்லிவிட்டால் போதுமப்பா.. //
சரினு யாரு சொன்னது, ஒவ்வொன்னுத்துக்கு பக்கத்தில் நாலு ஆச்சரிய குறி இருப்பதை நீங்க பாக்கலையா????
//எல்லா விதமான peer pressure, manager pressureஉம் இருந்தும் இந்த தண்ணி, தம் அடிக்காம இருக்கிற பசங்களையும் நிறையவே இருக்காங்க.//
தாங்க்ஸ்...:)))
//நம்ம லிமிட் எதுன்னு தெரியணும்.//
அதே... எதற்கும் அடிமையாக கூடாது. அவ்வளவே...
//சாப்பிட விருப்பமில்லாம, நானே கொஞம் உப்பு காரத்தோட சுவையா சமைச்சுதான் சாப்பிடுறேன்.//
சமைச்சி சாப்பிடுரது சரி, அதுல என்ன சுவையானு ஒரு வார்த்தையை நீங்களே சேர்த்து இருக்கீங்க... தமாஷு, தமாஷு..
//எப்படியோ !! சரியென்று சொல்லிவிட்டால் போதுமப்பா.. //
சரினு யாரு சொன்னது, ஒவ்வொன்னுத்துக்கு பக்கத்தில் நாலு ஆச்சரிய குறி இருப்பதை நீங்க பாக்கலையா???? //
சிவா இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை.. பேசி தீர்த்துக்கெல்லாம்.. இப்படி அனியாயத்துக்கு கேள்வி குறி, ஆச்சரிய குறியெல்லாம் போட்டு எதிர்ப்ப தெரிவிக்க கூடாது. .இப்படி நீங்க எழுதறத மத்தவங்க (அருள் & Group) படிச்சா நம்ம நட்பை பற்றி என்ன நினைப்பாங்க..?! சொல்லுங்க..நமக்குள்ள ஆயிரம்+1 பிரச்சனை இருக்கலாம் அதை இப்படியா வெளியல காட்டிக்கிறது.. (ஓவரா.... இப்படி என்னைய புலம்ப விட்டுடீங்களே சிவா..)
//நாளைக்கு 'வேலை வேலை'ன்னு சொல்லி 5 காபி குடிக்கிறவங்களைப் பத்தி ஒண்ணும் குட்டு, திட்டு எல்லாம் இல்லையா ? :)) //
ஏதும் வேலையா இல்லாமால் டீ, காபி குடிப்பதையே ஒரு வேலையா வச்சு இருக்கோம். நீங்களுமா, Welcome to the Board.
டீ, காபி குடிப்பதை மட்டும் அவங்க தப்பா எழுதி இருந்தாங்க, இந்த இடத்தில் ஒரு ரணகளமே நடந்து இருக்கும்.
//சமைச்சி சாப்பிடுரது சரி, அதுல என்ன சுவையானு ஒரு வார்த்தையை நீங்களே சேர்த்து இருக்கீங்க... தமாஷு, தமாஷு.. //
ம்ம்..பொன்ஸ்..அப்ப மீட் பண்றதா இருந்தா..(இங்க வந்தவுடன்) வெளியில எங்காவது நல்ல ஹோட்டலா பார்த்து மீட் பண்ணலாம்.. வீட்டுக்கு மட்டும் கூப்பிடாதீங்க..
//இந்த உண்மை, நேர்மை, நியாயம், நீதி - இதுக்கெல்லாம் மூணாவது பெயர்.. பொன்ஸ், பொன்ஸ், பொன்ஸ் :))))
-- அப்டீன்னு அருள், சிவா எல்லாம் சொல்றாங்க.. உங்களுக்கு கேட்கலையா? ;) //
தோடா, எப்படா கேப் கிடைக்கும் பாத்துகிட்டே இருப்பிங்களா. இதற்கு நண்பர்.திரு. அருள் அவர்கள் பதில் சொல்வார் என்று கூறி அமர்கின்றேன்.
//டீ, காபி குடிப்பதை மட்டும் அவங்க தப்பா எழுதி இருந்தாங்க, இந்த இடத்தில் ஒரு ரணகளமே நடந்து இருக்கும்//
சிவா, இது கொஞ்சம் ஒவர் தான் இருந்தாலும் சொல்றேன் டீ,காபிக்கு பதிலா கேழ்வரகு கஞ்சி குடிச்சி பழகுங்க.. ஆமா அது என்ன ரணகலம்' புலி படம் இருக்கப்பவே நினைச்சேன்.. இவரு புடுங்கற டைப்போன்னு... நாங்க புலிய முறத்தால அடிச்சாங்களே அந்த பரம்பரையிலிருந்து direct ஆ வந்தவங்க சொல்லிட்டேன்..
//நமக்குள்ள ஆயிரம்+1 பிரச்சனை இருக்கலாம் அதை இப்படியா வெளியல காட்டிக்கிறது.. (ஓவரா.... இப்படி என்னைய புலம்ப விட்டுடீங்களே சிவா..) //
சரிங்க கவிதா, இந்த பதிவில் இதுக்கு மேல் உங்க கூட எந்த பிரச்சனையும் கிடையாது.
சமாதானம்.... சமாதானம்....
//அப்ப மீட் பண்றதா இருந்தா..(//
பார்க்க போகும் போது ஒரு "அழகான டிபன் பாக்ஸ்ல" சாப்பாடு எடுத்துக் கொண்டு போவது நல்லது. :)))))
//அப்ப மீட் பண்றதா இருந்தா..(//
பார்க்க போகும் போது ஒரு "அழகான டிபன் பாக்ஸ்ல" சாப்பாடு எடுத்துக் கொண்டு போவது நல்லது. :))))) //
சிவா..Thanks இப்படி அடிக்கடி நல்ல ஐடியாவெல்லாம் கொடுத்து பொன்ஸ் சமைக்கற சாப்பாட்டுகிட்ட இருந்து என்னை காப்பாற்றுங்கள்..
//சிவா, இது கொஞ்சம் ஒவர் தான் இருந்தாலும் சொல்றேன் டீ,காபிக்கு பதிலா கேழ்வரகு கஞ்சி குடிச்சி பழகுங்க.. //
டீ, காபிக்கு பதிலாக என்பது தவறு....
கேழ்வரகு கஞ்சியும் குடிச்சி இருக்கோம், அதுல தோசை செய்தும் சாப்பிட்டு இருக்கோம்.
//இவரு புடுங்கற டைப்போன்னு... நாங்க புளிய முறத்தால அடிச்சாங்களே அந்த பரம்பரையிலிருந்து direct ஆ வந்தவங்க சொல்லிட்டேன்.. //
நான் ஏற்கனவே சமாதானம் சொல்லிட்டேன். சொன்ன சொல்லையும், கொடுத்த பொருளையும் திருப்பி வாங்குற பழக்கம் இல்லாத பரம்பரையில் இருந்து directa வராமல் அங்க அங்க கொஞ்சம் சுத்தி வந்தவன். இருந்தாலும் ஒரே ஒரு கேள்வி மட்டும். கொட்டை எடுத்த புளியா? இல்ல கொட்டை எடுக்காத புளியா..?
கவிதா,
நல்ல பதிவு.
(குஷ்பு கலாச்சாரத்தையும் சேர்த்து தாக்கியிருக்கலாம் என்று நினைத்தேன்)
//இருந்தாலும் ஒரே ஒரு கேள்வி மட்டும். கொட்டை எடுத்த புளியா? இல்ல கொட்டை எடுக்காத புளியா..? //
சிவா கவனிச்சிட்டீங்களா?.. எழுத்து பிழைன்னு விட்டுடுவீங்கன்னு பார்த்தேன்.. ஹி ஹி..மரத்துல இருந்து direct ஆ அடிச்சி எடுப்போம்..(இது எல்லாம் வெளியில சொல்லிகிட்டு இருக்காதீங்க, நமக்குள்ள இருக்கட்டும் சரியா..)
//குஷ்பு கலாச்சாரத்தையும் சேர்த்து தாக்கியிருக்கலாம் என்று நினைத்தேன்) //
நன்றி முத்து, இப்போதானே.. சந்தோஷ் பதிவுல ஒரு ஆட்டம் போட்டு ஓய்ந்தது.. திருப்பியும் அதை சேர்க்க வேண்டாம்னு சேர்க்கல..
//இதற்கு நண்பர்.திரு. அருள் அவர்கள் பதில் சொல்வார் என்று கூறி அமர்கின்றேன்.// ஒன்னும் சொல்றதுக்கில்லை சிவா. சில விஷயங்கள் நம்ம கைய மீறிப் போறப்போ பொயிட்டு போகுதுன்னு விட்டுட வேண்டியதுதான் :(
//சிவா..Thanks இப்படி அடிக்கடி நல்ல ஐடியாவெல்லாம் கொடுத்து பொன்ஸ் சமைக்கற சாப்பாட்டுகிட்ட இருந்து என்னை காப்பாற்றுங்கள்.. //
என்னங்க கவிதா... இப்படி சேம் சைட் கோல் போடறீங்க?! பாவம் பொன்ஸ் :(
//சிவா..Thanks இப்படி அடிக்கடி நல்ல ஐடியாவெல்லாம் கொடுத்து பொன்ஸ் சமைக்கற சாப்பாட்டுகிட்ட இருந்து என்னை காப்பாற்றுங்கள்.. //
என்னங்க கவிதா... இப்படி சேம் சைட் கோல் போடறீங்க?! பாவம் பொன்ஸ் :( //
இல்ல அருள், சிவாவை உங்க group ல இருந்து எங்க பக்கம் இழுக்க ஒரு சின்ன முயற்சி. .அவ்வளவுதான்.. பொன்ஸ்க்கு என்னை பற்றி தெரியும், இதையெல்லாம் கண்டும் காணாம விட்டுடுவாங்க..
//என்னங்க கவிதா... இப்படி சேம் சைட் கோல் போடறீங்க?! பாவம் பொன்ஸ் :( //
இருக்கட்டும் அருள்,
//இந்த உண்மை, நேர்மை, நியாயம், நீதி - இதுக்கெல்லாம் மூணாவது பெயர்.. பொன்ஸ், பொன்ஸ், பொன்ஸ் :))))
-- அப்டீன்னு அருள், சிவா எல்லாம் சொல்றாங்க.. உங்களுக்கு கேட்கலையா? ;) //
இதுக்கு நீங்க மறுப்பு சொல்லாததினால, உங்க பக்கம் இழுக்கும் முயற்சின்னு கவிதாவுக்குத் தெரியலை பாருங்க :)
ஒரு வாரம் கழிச்சி படிக்கிறவங்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் உணவுப் பழக்கங்களுக்கும் இந்த முயற்சிகளுக்கும் என்ன தொடர்புன்னு புரியாம முழிக்கப் போறாங்க..
என்னையெ நீங்க, அப்புறம் பொன்ஸு தாயீ எல்லாம் புரியலெ புரியலென்னு மண்டையைப் போட்டு உடைச்சிகிற அளவுக்கு, தாவித் தாவி ரொம்ப எழுதுறெனோ?
சரி இந்தாங்க விளக்கம், நான் எழுதினேத்திற்கே! :-)
//என்னது பீட்சா கார்னரில் "பிச்சை" எடுக்கிறார்களா ;-)) அவர்கள் வெளிநாட்டில் இருப்பது "போல"த்தானே பாவித்துக் கொள்கிறார்கள். //
அது கிண்டல், நம்ம மக்கள்ஸ் அப்படி அடிச்சுப் பிடிச்சு அதை வாங்கி ஸ்டைலா வேற "முள் கரண்டி" அட அந்த Fork-த்தான் அப்படி சொன்னேன் வைச்சு சாப்பிடுற அழகே அழகுதான் போங்க. எதிர்தாப்பில் ஒரு வெள்ளைக்காரன் அப்படியே தூக்கி பீட்சாவை நறுக்குன்னு கடிச்சி சாப்பிட்ட நான் பொறுப்பில்லை ;-)))
//அது போல பாவித்துக் கொண்டு இங்கு ஒருவர் வந்தார் தானும் அவர்களில் (அமெரிக்க இளைஞர்) ஒருவர் //
இது எனக்கு தெரிந்த ஒரு நண்பருக்கு ஏற்பட்ட அனுபவங்க. ஒரு தபா நாங்கெல்லாம் சேர்ந்து பிக்கினி ஷோ (கன்றாவி ;-) பார்க்க ஃப்ளொரிட போயிருந்தோம் (அடப் அல்லப் பசங்களா, அப்படின்னு சொல்லுறீங்க... எல்லாம் தெரிஞ்சுக்கணுங்க) அப்ப அந்த நண்பர் நிறையெ அமெரிக்க கனவுகளோட வந்திருப்பார் போல இந்தியாவிலிருந்து, MTV, VTV FTVன்னு நிழல்லெ பார்த்து பார்த்து, அப்படி நினைச்சுகிட்டு இங்க வந்ததிற்கு அப்புறம் ரொம்ப அலும்பு பண்ணி தொலைவாருன்னு வைச்சுக் கோங்களேன்.
அந்த ட்ரிப்லெ அவருக்கு எல்லாம் தெளிஞ்சுப் போச்சு... கொஞ்சம் கருப்பனுங்க ஒரு ரெஸ்ட்ராண்டுகுளெ வைத்சு நம்மாளே அதான் நான் சொன்ன இந்த மேட்டரு ''''''அவரோட பாண்ட்ஸ்-லேயே (காத மூடிங்கோங்க) மூச்ச போக வச்சுட்டாங்க...(a part of teasing pola) ''''' அதெதான் நான் அப்படி சுருக்கி உங்ககிட்ட சொன்னேன் நீங்க புரியலெயே தெகாஜின்னு போட்டு உடைச்சுப் புட்டீங்க :-)
(நீங்க எல்லாம் ஒரு நண்பனா அப்படின்னு கேக்கிறது எனக்கு கேக்குது, நாங்க பக்கத்திலே வேற இல்லைங்க அதுவுமில்லாமே, அது ஒரு ghetto black guys hang out place), போகதே என்று சொல்லிவிட்டு நாங்க அந்த பக்கமா போயிருந்தோம், இவரு இந்த பக்கமா போயிட்டாரு போல.
கடைசியாக இது....
//காகம் கூ...கூ...கூ கூப்பிட்ட குயிலு ஆயிடுமாங்க... :-)))//
இப்போ நாம நாமலோட லிமிடெஷன் என்ன எங்கே இருக்கோம், எப்படி நடந்துகிட்டா மரியாதையை காவந்துப் பண்ணிக்கிட்டு போன இடத்திலேருந்து திரும்பி வரலாம், அப்படிங்கிற லாஜிக் இருக்கணுங்க. அதைத்தான் நான் சொன்னேன், தான் என்னமோ வெள்ளைத் தோலவே (white guys) மாறியிட்ட மாதிரி பிரவுன் தோல வைச்சுக்கிட்டு பண்ணா அதென் விளைவுதான் நான் சொன்ன இந்த ஒரு சிறு அனுபவ கிட்டல் அந்த அன்பருக்கு.
இது உண்மையிலெயே நடந்தது. அதுக்குத்தான் நான் சொன்னேன், காகம் குயிலு மாதிரி நினைச்சுக்கிட்டு கத்தினா... காகம் குயிலு ஆகீடுமா? அப்படின்னு.
அப்பாடா, ஒரு வழியா சொல்ல வந்ததை சொல்லி முடிச்சுட்டென்.
பொன்ஸு, நீங்க என்னப் பார்த்து சிரிக்கிறது இங்க வரைக்கும் "எக்கோ" அடிக்கிது :-))))
//அப்பாடா, ஒரு வழியா சொல்ல வந்ததை சொல்லி முடிச்சுட்டென். //
நன்றி தேகாஜி..எனக்கும் அப்பாடா என்று தான் இருந்தது படித்து முடித்தவுடன்..
//பொன்ஸு, நீங்க என்னப் பார்த்து சிரிக்கிறது இங்க வரைக்கும் "எக்கோ" அடிக்கிது :-))))
//
தெகா, சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.. பொதுவாவே நீங்க ஒரு மாதிரி உங்க லெவல்ல பேசுறீங்க. எங்களை மாதிரி இன்னும் இந்த செயற்கை வாழ்க்கைல உழன்றுகிட்டு இருக்கிறவங்களுக்குப் புரிய கொஞ்சம் தாமதமாகுது.. அவ்வளவுதான்.. இந்த விளக்கம் கொடுக்குமுன் எனக்கும் நீங்க எழுதினது புரியலை.. சரி, நம்ம தெகா அளவுக்கு நான் இன்னும் வளரலைன்னு விட்டுட்டேன் :)
இப்போ நிசமாவே சிரிக்கப்போறேன்.. பயப்படாதீங்க :))))
ஒன்னும் சொல்றதுகில்லை
இங்கே "டூளிகேட் சர்ட்டிபிகேட் விளையாடுகின்றன"
நீங்க கால் சென்டர்களில் நடக்கும் பார்டிகளையும் அங்கு பெண்ணுங்க அடிக்கும் கூத்துக்களை பாக்க வேண்டும் ஒரு முறை நான் சென்ற ஒரு பார்டியில் பல பொண்ணுங்க தண்ணியை போட்டுட்டு நீச்ச்ல தொட்டில் இரவு ஒரு மணிக்கு ஆடிய ஆட்டம் இருக்கே ஏப்பா அமெரிக்கா எல்லாம் கெட்டுச்சி போங்க..
//நான் சென்ற ஒரு பார்டியில் பல பொண்ணுங்க தண்ணியை போட்டுட்டு நீச்ச்ல தொட்டில் இரவு ஒரு மணிக்கு ஆடிய ஆட்டம் இருக்கே ஏப்பா அமெரிக்கா எல்லாம் கெட்டுச்சி போங்க.. //
சந்தோஷ், அணில் குட்டி சொன்ன மாதிரி போக எனக்கு சந்தர்ப்பம் இல்லை..நானும் கேள்வி பட்டிருக்கிறேன்.. ஆமா நீங்க ஏன் போனிங்க.. பொண்ணுங்க ஆடறாங்கன்னு கேள்விபட்டா..?!!
//இங்கே "டூளிகேட் சர்ட்டிபிகேட் விளையாடுகின்றன" //
இது என்ன செயம்குமார் எனக்கு புரியலையே?!!
பொன்ஸ், தேகாஜி, எழுதிய 2 வதும் எனக்கு முழுசா புரியல.. ஆனா அதவேற நான் சொல்லி, 3ஆவதா அவரு திருப்பியும் விளக்க ஆரம்பிச்சிடுவாரோன்னு பயந்து.. விட்டுடேன்..
//ஆண்கள் சிலர், மது சாப்பிடும் பழக்கம் மிக அறிதாக இருந்தாலும், உயர்ந்த ரக மதுபானத்தை பார்த்தவுடன் அதிகமாக குடிப்பார்கள். சொல்லும் காரணம் “ஓசியில் கிடைக்கும் போது அனுபவிக்கனும் என்பதே”. குடித்தாலும் பரவாயில்லை, நேரம் ஆக ஆக அவர்களின் முன்பே அழகாக இருக்கும் முகம் லேசாக மாறிவிடும், பேச்சும் தான்.. தாங்கமுடியாத அளவுக்கு பேசுவார்கள். திருமணம் ஆகாதவர்கள் அதிகம், அதே சமயம் எங்களுடன் சாப்பிட வந்த வெளிநாட்டவர்களும் இவர்களை விட அதிகம் மது அருந்துவார்கள் தான், ஆனால், அவர்கள் முகத்திலோ, பேச்சிலோ அதிக மாற்றம் இருக்காது.//
இது ஒரு முக்கியமான பிரச்சினை. வெளிநாட்டில் நான் பார்த்த சில இந்தியப் பெண்களும் இந்திய ஆண்களுடன் pubக்குப் போகத் தயங்குவார்கள். நம்ம ஆட்கள் அளவு தெரியாமல் குடித்துவிட்டு அலப்பறை பண்ணி விடுவார்கள். வெளிநாட்டுக் காரர்கள் எவ்வளவு அடித்தாலும் நிலையாக இருப்பார்கள் இல்ல அளவு தெரிஞ்சு குடிப்பாங்க
Post a Comment