Mobile phone இருப்பது எத்தனை வசதி என்பது உபயோகிக்கும் அத்தனை பேருக்கும் தெரியும், ஆனால் எனக்கு மட்டும் அது உபத்திரமாக தான் இருக்கிறது. அதை நான் இப்போது வைத்திருப்பது என் கணவர், மகனுக்காக மட்டுமே என சொல்லலாம். எனக்கும் எல்லோர் போலவும் உபயோகிக்க ஆசைதான்.. என்ன செய்வது.. எனக்கு ஏற்பட்ட மிக கசப்பான அனுபவம் காரணமாக நான் யாருக்கும் நம்பர் கொடுப்பதில்லை. இந்த நம்பர் கொடுக்காமல் இருப்பது கூட நண்பர்களுக்குள் மிக சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
நான் உபயோகித்தது, உபயோகிப்பது எல்லாமே pre paid தான். முன்னர் வைத்திருந்த நம்பரை யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் எழுதி கொடுத்துவிடுவேன். என்னை சுற்றி உள்ளவர்கள் மேல் எனக்கு அத்தனை நம்பிக்கை.
Mobile phone ல் அலாரம் வைப்பதால், தலை மாட்டில் வைத்துக்கொண்டு தூங்குவது வழக்கம். ஒரு நாள் இரவு மணி 11 இருக்கும், தூங்கி கொண்டிருந்த நான் சத்தம் கேட்டு எடுத்து பார்த்தேன், SMS ல் தகவல்.. “ I Love you “ என்று இருந்தது. நான் பயந்து போய்விட்டேன்.. என்னை சார்ந்தவர்கள், தெரிந்தவர்கள் அத்தனை பேருக்கும் என் தூக்க பழக்கம் தெரியும், இத்தனை மணிக்கு மேல் யார் இப்படி அனுப்புகிறார்கள் அதுவும் இப்படி ஒரு தகவலை..என்று யோசிக்கும் போதே என் கணவர் விழுத்துக்கொண்டு... “என்ன..இந்த நேரத்துல Mobile ல வைச்சுக்கிட்டு என்ன பண்ற” என்றார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அவரின் தூக்கத்தை கெடுக்க வேண்டாம் என, "இல்லை அலாரம் செட் பண்ண மறந்துட்டேன்" என்று சொல்லிவிட்டு Mobile லை ‘off‘ செய்துவிட்டு, யாராய் இருக்கும் என யோசித்து கொண்டே தூங்கி போய்விட்டேன்..
காலையில் எழுந்து எனக்கு Mobile லை ‘On’ செய்யவே பயமாக இருந்தது. சரி அலுவலகம் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.. அலுவலகம் சென்று எனக்கு தெரிந்த அத்தனை நம்பர்களையும் செக் செய்து பார்த்தும், தெரிந்த நம்பராக இல்லை. சரி பார்க்கலாம் என விட்டுவிட்டேன். படுக்கும் முன் silent mode ல் வைத்து விட்டு படுத்துவிட்டேன், அடுத்த நாள் பார்த்தால் முந்தைய இரவும் 11 மணிக்கு மேல் தகவல் வந்திருந்தது..
உன் கண்கள்.............. உதடுகள்........... என்று மிக அசிங்கமாக வர்ணித்து கடைசியில் படுக்கை அறை வரை அவன் என்னை அழைத்திருந்தான் என்பது தாங்கமுடியாத மன உளைச்சலை எனக்கு தந்தது. எத்தனை நம்பிக்கையாக நான் எல்லோரிடமும் என் நம்பரை கொடுத்திருக்கிறேன். ஏன் இத்தனை அசிங்கமாக தகவல் அனுப்புகிறார்கள். பார்க்கும் அத்தனை பேரையும், இவராக இருக்குமோ இவராக இருக்குமோ என என் மனது எண்ண ஆரம்பித்தது. அந்த நம்பரை திருப்பி கூப்பிட்டால் யாரும் எடுப்பதில்லை. பிறகு நானாக “ if you don’t stop this, I’ll call Police” என்று தகவல் அனுப்பினேன். ஆனால் அவனோ..திருப்பி யாரிடம் வேணுமாலும் போ..ஆனால் உன்னை.............தீருவேன் என்றான் இப்படி தினம் தினம் அசிங்கம் அதிகமானது, என் மன உளைச்சலும் அதிகமாகி போனது.
இதில் நான் அதிகம் பயந்தும், அசிங்கபட்டதும் என் மகனின் கண்ணில் இந்த தகவல்கள் பட்டுவிடுமோ என்று தான். செல் ஃபோன் ஆன் செய்யவே பயமாகி போனது. என் மகன் games விளையாட செல் ஃபோனை எடுப்பான்.. என் கணவரும் ஏதாவது நம்பர் தேவைக்கு எடுப்பார்..அவர்கள் இந்த அசிங்கத்தை பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று என்ற எண்ணமே என் நிம்மதியை குலைத்தது.
ஆனால் நாளுக்கு நாள் அதிகமாகி பொறுக்க முடியாமல் என் கணவரிடம், மிக மோசமான தகவல்களை அழித்து விட்டு படிக்கும் படியாக இருந்ததை மட்டுமே காட்டினேன். அவரோ உடனே ‘police’ க்கு போகலாம் என்றார். நான் அதற்கு உடன்படவில்லை. போலிஸ்ஸிடம் போனால் எல்லா தகவல்களையும் காட்டவேண்டும், என்னையே நான் அசிங்கபடுத்தி கொள்ள வேண்டுமா? என தோன்றியது. இது ஒரு 10 நாட்கள் தொடர்ந்தது.. நான் போலிஸ்க்கு வராததால் எனக்கும் என் கணவருக்கும் பிரச்சனையும் ஆனது. பின்பு ஒரு முடிவு செய்து ‘pre paid’ தானே தூக்கி எரிந்து விடலாம் என சிம்’மை எடுத்துவிட்டு புது நம்பர் போட்டுவிட்டேன்.
இப்போது யாருக்குமே கொடுப்பது இல்லை.. இந்த 10 நாள் அனுபவம் என்றாலும் மிக மோசமான அனுபவம்..இது.. இத்தனை அசிங்கமாக எப்படி என்னை சார்ந்தவர்கள், நண்பர்கள் என நான் நம்புபவர்கள் நடந்து கொள்ளுகிறார்கள் என்பதை என்னால் சகித்து கொள்ளவே முடியவில்லை..யாரை நம்புவது என்று ஒட்டு மொத்தமாக யாருக்குமே நான் நம்பர் கொடுக்காமல் இருக்கிறேன் (பெண்கள் உட்பட-அவர்கள் மூலம் யாருக்காவது தெரிந்துவிட்டால்) என்பது தான் உண்மை....
அணில் குட்டி அனிதா:- கவிதா ...நீங்க நினைக்கற மாதிரி உங்களுக்கு பக்கத்துல, இல்ல..உங்கள நேர்ல பாத்தவங்களா இருக்க வாய்ப்பே இல்ல.. ஏன்னா.. உங்கள நேர்ல பாத்தவாங்க எல்லாம் அம்மன் கோயில்ல போய் விபூதி வாங்கி வச்சிக்கிட்டு இராத்திரி ஆன அத பூசிக்கிட்டு தான் தூங்கறதா கேள்விப்பட்டேன்.. அதனால அநாவசியமா அப்பாவிங்க மேல சந்தேக படா...தீ..ங்க.. ..
ஆஆ..அய்யோ....யம்மா..ம்ம்..யப்பா........கவிதா..ப்ளீஸ்..விடுங்க.. இனிமே இப்படி எல்லாம் சொல்லமாட்டேன்...பொய்யா இருந்தாலும் நீங்க 40 kg தாஜ்மகல்’ னு சொல்றேன்.. அய்யோ.. ! யம்மா. ! வலிக்குது... கவிதா..ப்ளீஸ்...விடுங்க..வலிக்குது.. .விடுங்களேன்.. கவிதா ஜஸ்ட்..ஒன் நிமிட் ப்ரேக் ப்ளீஸ்........யா டான்க்ஸ்.......
அட உங்களத்தான்...எங்களதான் தான் இங்க நொக்கறாங்கன்னு தெரியுது இல்ல... அப்புறம் என்ன லுக்கு.. டீசன் ட்டா கிளம்ப வேண்டியது தானே...?.. படிச்சமா.. போனமான்னு இல்லாம...ம்ம்..ம்ம் கிளம்புங்க.. சீக்கிரம்.. வெளியில யாரும் மூச்..புரிஞ்சிதா.....ம்ம்..அது... அம்மனி .நீங்க ஆரம்பிங்க...நாம..அப்படி கொஞ்சம் உள்ளுக்கு போயி..க்...க்..க..லா...மா....................ஆஆஆ.....
SMS முலம் வரும் அசிங்கமான தகவல்களின் பாதிப்பு
Posted by : கவிதா | Kavitha
on 15:15
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
27 - பார்வையிட்டவர்கள்:
வேதனையான விஷயம்தான் கவிதா.
//நான் அதற்கு உடன்படவில்லை. போலிஸ்ஸிடம் போனால் எல்லா தகவல்களையும் காட்டவேண்டும், என்னையே நான் அசிங்கபடுத்தி கொள்ள வேண்டுமா?// இதுதான் அவர்களின் பலம். எவனோ ஒருத்தன் ஏதேதோ சொல்வதேல்லாம் நமக்கு அசிங்கம் என ந்ந்நம் ஏன் நினைக்கவேண்டும். தைரியமாக நீங்கள் போலீசிடம் போயிருக்கலாம். நீங்கள் # மாற்றிவிட்டால் என்ன? இப்போது வேறு யாராவது அப்படி கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருக்கலாம் :(
//பின்பு ஒரு முடிவு செய்து ‘pre paid’ தானே தூக்கி எரிந்து விடலாம் என சிம்’மை எடுத்துவிட்டு புது நம்பர் போட்டுவிட்டேன்.//
தயவு செய்து இப்படி செய்யும்பொழுது SIM-ஐ surrender செய்து விடுங்கள். அடுத்தவருக்குக் கூட கொடுகாதீர்கள். காரணம், அந்த SIM வேறுருத்தர் கைக்கு கிடைத்து, யாருக்காவது கால் போட்டு மிரட்டினாலும் கூட, அந்த SIM-ஐ வாங்கிய உங்கள் வீட்டைத் தேடி போலீஸ் வரும்.
மேலும், உங்கள் செல்போன் எண் நீங்கள் கொடுத்த நண்பர்வட்டம் மூலம் தான் போகவேண்டும் என்பது இல்லை. இப்பொழுதெல்லாம் சில கம்பேனிகளே உங்களைப் பற்றின தகவல்களை "விற்று" விடுகின்றன. உதாரணாம், உங்கள் செல் எண், Bank statement etc.
அருள், நீங்க சொல்றது ஒரு வேளை சரிதான்..ஆனால்..இது செய்தது..என் நண்பர்கள் வட்டத்துக்குள் தான் என்பது எனக்கு நன்றாக தெரிந்தது.. என்னை மட்டுமே தொல்லை தர துணிந்த ஆள் என்றே நான் நினைக்கிறேன்..
//மேலும், உங்கள் செல்போன் எண் நீங்கள் கொடுத்த நண்பர்வட்டம் மூலம் தான் போகவேண்டும் என்பது இல்லை. இப்பொழுதெல்லாம் சில கம்பேனிகளே உங்களைப் பற்றின தகவல்களை "விற்று" விடுகின்றன. உதாரணாம், உங்கள் செல் எண், Bank statement etc. //
இல்லை சீனு, எனக்கு தெரிந்தவர்கள் தான் நான் நம்ப காரணம், வெளி ஆட்களுக்கு என்னை வீட்டில் கூப்பிடும் பெயர் தெரியாது..
//தயவு செய்து இப்படி செய்யும்பொழுது SIM-ஐ surrender செய்து விடுங்கள். அடுத்தவருக்குக் கூட கொடுகாதீர்கள். காரணம், அந்த SIM வேறுருத்தர் கைக்கு கிடைத்து, யாருக்காவது கால் போட்டு மிரட்டினாலும் கூட, அந்த SIM-ஐ வாங்கிய உங்கள் வீட்டைத் தேடி போலீஸ் வரும்//
இல்லை எப்படி யாருக்கோ கொடுக்க முடியும், சிம்' மை உடைத்து போட்டாகி விட்டது..
//இல்லை எப்படி யாருக்கோ கொடுக்க முடியும்//
நான் வைத்திருக்கும் சிம் என் சகோதரனுடைய நண்பனுடையது. உதாரணத்திற்கு, இப்பொழுது நான் யாரையாவது இந்த போன் மூலம் ஏதாவது செய்தாலும், அல்லது மிரட்டினாலும், போலீஸ் நேராக சகோதரனுடைய நண்பனைத் தான் target செய்யும். காரணம், சிம் வாங்கும் பொழுது அவன் தன்னுடைய முகவரியைத் தான் கொடுத்திருப்பான்.
//, சிம்' மை உடைத்து போட்டாகி விட்டது.. //
அது தான் வேண்டாம் என்கிறேன். Duplicate சிம் வாங்குவது சற்றே சுலபம். மேலும், தங்கள் சிம் சில நாட்களுக்குப் பின் தன் validity-ஐ இழந்துவிடும். அந்த எண் இப்பொழுது வேறு யாருக்கோ போய்விடும். (இப்பொழுது அந்த எண்ணிற்கு ஒரு கால் பொடுங்களேன். அது இப்பொழுது யாரிடமாவது இருக்கலாம்.
/////
//மேலும், உங்கள் செல்போன் எண் நீங்கள் கொடுத்த நண்பர்வட்டம் மூலம் தான் போகவேண்டும் என்பது இல்லை. இப்பொழுதெல்லாம் சில கம்பேனிகளே உங்களைப் பற்றின தகவல்களை "விற்று" விடுகின்றன. உதாரணாம், உங்கள் செல் எண், Bank statement etc. //
இல்லை சீனு, எனக்கு தெரிந்தவர்கள் தான் நான் நம்ப காரணம், வெளி ஆட்களுக்கு என்னை வீட்டில் கூப்பிடும் பெயர் தெரியாது..
/////
"உங்கள் செல்போன் எண் நீங்கள் கொடுத்த நண்பர்வட்டம் மூலம் தான் போகவேண்டும் என்பது இல்லை" என்று நான் பொதுவாகக் கூறினேன்.
கருத்து சுதந்திரத்திற்க்கு எதிராக அணில் குட்டி அனிதாவை வதைப்பது சட்டப்படி குற்றம்.:-)
பதிவுக்கு :-(
Block the caller ஆப்சனைப் பயன்படுத்தி incoming mssgகளைத் தடுத்திருக்கலாமே?
//கருத்து சுதந்திரத்திற்க்கு எதிராக அணில் குட்டி அனிதாவை வதைப்பது சட்டப்படி குற்றம்.:-)//
நீங்க சொல்றதை நான் ஏற்று கொள்கிறேன் நன்மனம்..இனிமேல் அணிலையும் என்னை வதைக்காமல் இருக்க சொல்லுங்களேன் ப்ளீஸ்..
//Block the caller ஆப்சனைப் பயன்படுத்தி incoming mssgகளைத் தடுத்திருக்கலாமே?//
நாகு நிஜமாகவே எனக்கு இப்படி ஒரு option இருப்பது தெரியாது.. என் மொபைலை நோண்டி பார்க்கிறேன்.. நன்றி நாகு..
//அது தான் வேண்டாம் என்கிறேன். Duplicate சிம் வாங்குவது சற்றே சுலபம். மேலும், தங்கள் சிம் சில நாட்களுக்குப் பின் தன் validity-ஐ இழந்துவிடும். அந்த எண் இப்பொழுது வேறு யாருக்கோ போய்விடும். (இப்பொழுது அந்த எண்ணிற்கு ஒரு கால் பொடுங்களேன். அது இப்பொழுது யாரிடமாவது இருக்கலாம்.//
நீங்கள் சொல்வது சரியே.. இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்து கொள்கிறேன்.. நன்றி சீனு..
என்ன கவிதாக்கா இதுக்கெல்லாம் பயந்தா எப்படி? போலீஸுக்குப் போக என்ன தயக்கம். அதுவும் சென்னை சைபர் க்ரைம் ப்ராஞ்ச் மிக நன்றாக செயல் படுகிறார்கள். மிகவும் Friendly யாகவும் இருக்கிறார்கள். இம்மாதிரி பிரச்சனைகளுக்கு போலீஸ் உண்மையிலேயே நல்ல நண்பனாக இருக்கிறார்கள் என்பதே நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்த உண்மை :))
//என்ன கவிதாக்கா இதுக்கெல்லாம் பயந்தா எப்படி? போலீஸுக்குப் போக என்ன தயக்கம். அதுவும் சென்னை சைபர் க்ரைம் ப்ராஞ்ச் மிக நன்றாக செயல் படுகிறார்கள்.//
ஜொள்ஸ்..எனக்கு பயம் இல்லை அசிங்கமாக இருந்தது.. அடுத்து என் தோழி போலிஸ்க்கு சென்ற கசப்பான அனுபவம் ஒன்றும் உள்ளது.. ஈமெயில் மூலம் அவளுக்கு இது போன்ற பிரச்சனைக்கு அவள் போலிஸ்'ஸை நாடினாள் .அவர்கள் அவளை கேட்ட முதல் கேள்வியே.."நீயே ஆள் வச்சி அனுப்பிட்டு கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தியா என்று தான்...உனக்கு ஆள் யாருன்னு தெரியும் நீயே சொல்லு என்று அவளை டார்ச்சர் செய்து விட்டனர்..
//மிகவும் Friendly யாகவும் இருக்கிறார்கள். இம்மாதிரி பிரச்சனைகளுக்கு போலீஸ் உண்மையிலேயே நல்ல நண்பனாக இருக்கிறார்கள் என்பதே நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்த உண்மை :)) //
ஏன்.நீங்க யாருக்கிட்டயாவது ஓவரா ஜொள்ளு விட்டு அவங்க உங்கள போலிஸ் ல சொல்லி போலிஸ் உங்கள அவங்க கிட்ட இருந்து நல்ல நண்பனா காப்பாத்தினாங்களா..சொல்லவே இல்ல?!!
//ஏன்.நீங்க யாருக்கிட்டயாவது ஓவரா ஜொள்ளு விட்டு அவங்க உங்கள போலிஸ் ல சொல்லி போலிஸ் உங்கள அவங்க கிட்ட இருந்து நல்ல நண்பனா காப்பாத்தினாங்களா..சொல்லவே இல்ல?!!//
யக்கா இதெல்லாம் ரொம்ப ஓவரு ! ஜொள்ளுப்பாண்டி கோக்கு மாக்கா தெரிஞ்சாலும் ஒரு ஜென்டில் boy ! :))
உங்களைமாதிரியே எனக்கு அக்கா மாதிரி இருக்கரவுகளுக்கு இதே SMS and Email பிரச்சனை. நான் தான் போலீஸ் கிட்டே போய் complaint பண்ணுனேன். பிரச்சனையை மிக நல்ல விதமா அனுகினார்களே!! நானே அசந்து போனேன். இம்மாதிரி செயல்களில் பெரும்பாலும் நாம் நினைத்துப் பார்த்திராத நமக்கு மிகவும் தெரிந்தவர்களே இருப்பார்கள் என்பது மட்டும் நிஜம் !
ஜொள்ஸ், உங்கள மாதிரி ஒரு ஆருயிர் தம்பி எனக்கு உதவ இல்லாம போயிட்டாரு..என்ன செய்ய..
பாத்தீங்களா ஜென்டில்மேன், என் blog ல இருந்து உங்க blog க்கு நம் நண்பர்கள் எல்லாம் வசதியா உங்க ஜொள்ளுல வழுக்காம இருக்க படகு விட்டுருக்கேன்..
ஓஓ boat சர்வீஸ் வேறையா ?! நல்ல பேரு வச்சுருக்கீங்க ! :)) நல்லாத்தேன் இருக்கு :)
விஞ்ஞானம் வளர்ந்திருக்கலாம்; மனிதன் வளரவில்லை.:(
//வந்த பின் கலங்கக் கூடாது.
உங்கள் "உபத்திரத்தை" தந்திரமாக ஏமாற்றிப் பிடித்திருக்க வேண்டும்.//
யோகன்..நன்றி,பிடிக்காமல் விட்டது தவறுதான்..அனுபவம் பாடம் கற்று தந்துள்ளது..இனி அப்படி இருக்க மாட்டேன்..
//விஞ்ஞானம் வளர்ந்திருக்கலாம்; மனிதன் வளரவில்லை.:( //
நன்றி மணியன்..வளரவில்லை என்பதை விட அடுத்தவர்களுக்கு தொந்தரவு வேறு கொடுக்கிறானே..
//ஒரு நாள் இரவு மணி 11 இருக்கும்//
இந்த மாதிரி லூசுகள் 11 மணிக்குதான் வேலையை ஆரம்பிக்கின்றனவோ?
Hi da chellam, i love u da, call me plz போன்ற செய்திகள் 11 மணிவாக்கில் எனது mobile லிலும் எனது மனைவி mobile லிலும் பல முறை வந்துள்ளது. இதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை
நாங்கள் 11 மணிக்கெல்லாம் தூங்குவதில்லை. அதனால் இது பெரிய தொந்தரவாகவும் தெரியவில்லை.
இந்த லூசுக்கெல்லாம் போலீசுக்கு போனா, அங்க பெரிய போலீசு லூசு இருந்தாலும் இருக்கும்.
கவிதா அவர்கள் உங்கள் நண்பர் வட்டத்துக்குள்தான் இருக்கவேண்டும் என்பதில்லை,அவர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும் என்ற தேவையே இல்லை உங்கள் செல்பேசி எண் கூட அவர்களுக்கு தெரிந்திருக்க தேவை இல்லை,ஏதாவது எண்ணுக்கு அனுப்புவார்கள் பதில் அனுப்புவதை வைத்தே நீங்கள் ஆணா பெண்ணா என்று தெரிந்து கொள்வார்கள்.என்னதான் மிரட்டினாலும் பெண்கள் அவ்வளவு சீக்கிரம் காவல்துறைக்கு செல்வதில்லை என்பதும் காவல்துறையும் சீரியஸ் ஆகும் வரை கண்டு கொள்வதில்லை என்பதும் அவர்களின் பலமாகிவிடுகிறது.
இந்தமாதிரி விசயங்களில் பதில் மெசேஜ் அனுப்பாமல் விடுதல் முதல் படி..மேலும் தொடர்ந்தால் கணவரிடம் சொல்லி சில நாட்களுக்கு அவரிடம் செல்பேசியை கொடுத்து வைக்கலாம்.அதன்பின்னாலும் தொடர்ந்தாலும் போலீஸூக்கு போவதில் தவறே இல்லை..இம்மாதிரி விசயங்களில் குற்றப் பதிவு செய்யாமலேயே கூட சைபர் போலீஸ் செயல்படும் என போலீஸ் கமிசனர் சொல்லியிருக்கார் ஒரு பேட்டியில்.
Block the caller ஆப்சனைப் பயன்படுத்தி incoming mssgகளைத் தடுத்திருக்கலாமே? - நாகு
இப்படி ஒரு ஆப்ஷன் இருக்கா?நல்ல விசயம் ஆச்சே
ப்ரியன், நன்றி, முன்னமே குறிப்பிட்டு உள்ளேன் பாருங்கள், அனுப்பிய நபர் என்னை தெரிந்தவரே..என் வீட்டில் அழைக்கும் பெயரை அவர் தகவல் அனுப்பும் போது பயன்படுத்தினார்.. நீங்கள் சொன்னது போல் இனி அப்படி ஒரு பிரச்சனை ஏற்படும் போது நான் நடந்து கொள்கிறேன்..
கவிதா நீங்கள் போலீஸ் உதவியை கோராதது வருத்தமளிக்கிறது. சென்னை போலீசில் சைபர் க்ரைம் துறையானது மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. புகார் கொடுத்திருந்தால் எப்படியும் குற்றவாளியை கண்டுபிடித்து இருப்பார்கள். செய்தித்தாளில் வருகிறதே. தினமும் எவனாவது கைது செய்யப்படுகிறான். தவிர புகார் செய்தவர்களின் விபரம் ரகசியமாக இருக்க அனுமதிக்கப்படுகிறது. நாம் அவமானப்பட்டுவிடுவோமோ என்ற தங்களின் பயம் தான் இது போன்றவர்களின் கேடயம்.
எனக்கு எல்லாம் இது மாதிரி தொல்லைகள் இப்பொழுது வருவதில்லை.எப்படி என்று கேட்கிறீர்களா?எனக்குதான் ஒரு வருடமாக கைத்தொலைபேசியே இல்லையே!உங்களுக்கவது குறுஞ்செய்தி மூலம்தான் தொல்லை.ஒருவன் நேரடியாக பேசி உயிரை எடுத்து விட்டான்.ஒரு வருடமாக ரொம்ம நிம்மதியாக இருக்கின்றேன்.இதைத் தவிர இந்த மாதிரி தொல்லைகளுக்கு தீர்வே இல்லை.
எலிவால் ராஜா,
உங்களை மாதிரி சிந்திப்பவர்கள் போலீஸில் இருக்கக் கூடும் என்பதாலேயே கவிதா அவர்கள் போலிஸிடம் போக தயங்கியிருக்கிறார் என்பது இப்போது நன்றாகவே புரிகிறது.
இம்மாதிரி எஸ்.எம்.எஸ் அனுப்பும் இழிபிறவிகளுக்கு வக்காலத்து வாங்குவதை விடுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கவிதா அக்கா,
When I am browsing today, I got a link from masivakumar blogger in the morning. When I start reading your blogs, it is interesting. Also, I have read your blogs from beginning. At the time of this blog, I am really feeling. The same instant happened to my friend.
You mentioned that you have got a SMS messages. But, my friend (No name plz...) got call at night 11 pm. The person called and speaks like same words... ("உன் கண்கள்.............. உதடுகள்........... என்று மிக அசிங்கமாக வர்ணித்து கடைசியில் படுக்கை அறை வரை அவன் என்னை அழைத்திருந்தான் என்பது தாங்கமுடியாத மன உளைச்சலை எனக்கு தந்தது.") Actually, she is a college going girl, and she got depressed with this call and she didn't sleep at that night. The next day, she told her uncle. He also tried to call that number; but that guy not picks up the phone.
She was really disappointed with that call for 2 days and she didn't concentrate the studies. So, as per her uncle advice she switch off that mobile number and she buy a new number and she gave the number to very important persons only.
PS: This instant happened in last month (Christmas time) and the location is same place (CHENNAI). The persons only changed; not the reason...
எப்பொழுது அத்தனை பேருக்கும் பார்வைகளும் எண்ணங்களும் மாறும்?
//காலையில் எழுந்து எனக்கு Mobile லை ‘On’ செய்யவே பயமாக இருந்தது. சரி அலுவலகம் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.. அலுவலகம் சென்று எனக்கு தெரிந்த அத்தனை நம்பர்களையும் செக் செய்து பார்த்தும், தெரிந்த நம்பராக இல்லை.//
இங்கே தான் பெரும்பாலனவர்கள் (பெண்கள்?!)தவறு செய்கிறார்கள். தற்செயலாக தங்களுடைய கணவர் அந்த மெசேஜை பார்த்திருந்தால்...
அந்த நம்பரை நீங்கள் டிரேஸ் செய்ய முடியும். அது எந்த சர்வீஸ் புரொவைடர் என்று பார்த்து அங்கு சென்று முறையாக கவனித்தால்?!(சில சமயம் அவசியமாகிறது) எல்லாம் முடியும் போலிஸ் இல்லாமலே.
எனக்கு வேறு மாதிரியான அனுபவம். ரிலையன்ஸ் போனில் தேவையற்ற விளம்பர மெசேஸ்கள் வந்ததும் வாடிக்கையாளர் சேவையில் சத்தம் போட்டதும் அது போல் அனுப்புவதை நிறுத்திவிட்டார்கள்.
கடைசியாக இது போன்ற தருணங்களில் தைரியமும் விவேகமும் தேவை
மொபைல் டெக்னாலஜியில் இருப்பதால் இதற்க்கு பதில் அளிக்கவேண்டிய கட்டாயம்...
பொதுவாக இப்படிப்பட்ட வேலையில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாக மன நோயாளிகள்...தங்களை கண்டுபிடிக்க முடியாது என்ற அறிவீனத்தில் இப்படி செயல்படுகிறார்கள்...
கண்டிப்பாக யார் என்று என்று என்னால் கண்டறியமுடியும்...என் தோழி ஒருவருக்கு இதுபோல் எஸ்.எம்.எஸ் வர, அவர் கடுமையான மன உளைச்சளுக்கு ஆளாகி, என்னிடம் கம்பிளைண்டு செய்ய, ஏர்டெல்லில் வேலை செய்யும் என் நன்பருடன் மற்றும் என்னுடைய ஆப்டிஸ் இன்னோவயர்லஸ் ஜிபிஎஸ் கால் பர்மார்மென்ஸ் டூல் உதவியுடன் 5 மணி நேரத்தில் கண்டறிந்து, எங்கள் ஷூ சைஸ் பத்து என்பதை மிக சிறப்பாக உணரும்படி செய்தோம்..
அவன் ஒரு மாணவன் ஆக இருந்ததால் போலீஸ் கம்ப்ளைண்டு கொடுக்க வேண்டாம் என்று விட்டுவிட்டோம்...
தாங்கள் செய்யும் தவறு யாருக்கும் தெரியாது என்ற தெரிந்துவிடாது என்ற நப்பாசையில் இந்த தவறை செய்வதும், ஏதாவது மாட்டாதா என்ற அலையும் போக்கும், யுனிவர்சிட்டி மாதிரி சினிமா வியாபாரமும் இந்த புண்களை ஆறவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது..
விஜயன் நன்றி,, இன்னொரு முறை இப்படி நடந்தால் நிச்சயம் நீங்கல் சொன்னதை கடைப்பிடிக்கிறேன்.
ரவி,
//என் நன்பருடன் மற்றும் என்னுடைய ஆப்டிஸ் இன்னோவயர்லஸ் ஜிபிஎஸ் கால் பர்மார்மென்ஸ் டூல் உதவியுடன் 5 மணி நேரத்தில் கண்டறிந்து, எங்கள் ஷூ சைஸ் பத்து என்பதை மிக சிறப்பாக உணரும்படி செய்தோம்..//
படித்து சிரித்துவிட்டேன்.. நன்றி.. இன்னொரு முறை பிரச்சனை என்றால் உங்களின் உதவியை நாடலாம் என்று நினைக்கிறேன்.. :)
//I really dont know why the problems are happening to you again and again. //
வாங்க கடைகோடிதமிழன், எனக்கு புரியல இது- எனக்கு ஒருமுறை தான் பிரச்சனை வந்தது.. ஒரு பதிவு தான் இது பற்றி போட்டுள்ளேன்.. ம்ம்.. புரியல.. :)
ஆனால் உங்களின் அறிவுரை எனக்கு மிக்க பலன் உள்ளதாக இருக்கிறது, மிக்க நன்றி, இன்னொரு முறை பிரச்சனை வரும் போது நிச்சயம் நீங்கள் அனைவரும் சொல்லியபடி செய்கிறேன்.
//3.As you writing more courageous things in your writeups, you should have gone to police without any fear as there is no fault in your side.//
கடைகோடிதமிழன், எனக்கு போவதை பற்றி எந்த பிரச்சனையும் இல்லை, முன்னர் ஈமெயிலில் இப்படி ஒரு பிரச்சனை வந்த போது அதற்காக உதவும் போலிஸிடம் சென்றேன். தனியாக சென்றேன். அங்கு முதலில் அவர்கள் கேட்ட கேள்வி "யாரு அது.. உன் ஆளு தானே.. நீயே மெயில் அனுப்ப சொல்லிட்டு நீயே கம்ளைன்ட் கொடுக்க வந்தியா? " என்று இன்னும் மரியாதை இல்லாமல் கூட பேசினார்கள். எனக்கு நிஜமாகவே அங்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. பேசாமல் திரும்பு வந்துவிட்டேன்.. !! :) அதனால் இதற்கு நான் போலிஸிடம் போகவில்லை. தனியாக சமாளிக்கலாம் என்ற தைரியம் தான் வேறு என்ன?.. :)
Post a Comment