காதல் சின்னம் என்று அழைக்கப்படும் தாஜ்மகல், காதலிக்காக கட்டப்பட்டது இல்லை என்பதை தெரிந்து கொண்டது, மிக சில வருடங்களுக்கு முன் அங்கு சென்ற போது தான்.
சிறு வயதில் பள்ளியில், ஷாஜஹான் தன் காதலி மும்தாஜுக்காக ஆக்ராவில் தாஜ்மகல் கட்டினார். இது உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.. என்று படித்தது மட்டுமே.. கொஞ்சம் பெரிய பிள்ளை ஆனாதும், சினிமாக்களில் காட்டும் போது, பிரம்மிப்பாக இருக்கும், நேரில் சென்று ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் ஆசை நிறைவேறிற்று.. அங்கு மகலின் உள்ளே செல்வதற்கு முன் தாஜ்மகலின் வரலாறை பதித்துள்ளனர். அதை படித்தபிறகு தான் ஷாஜஹான் தன் காதல் மனைவிக்காக கட்டியது என்று தெரிந்தது. மும்தாஜ் தன் 15 ஆவது குழந்தை பிறந்தவுடன், இறந்து போனார், அதற்கு பிறகு அவரின் நினைவாக கட்டியது தான் தாஜ்மகல்.
தாஜ்மகலை நேரில் பார்த்த போது, ஷாஜகான் அவர் மனைவி மேல் வைத்த அன்பு எத்தனை ஆழமானது என்று புரிந்தது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு பெரிய மகலை கட்டியிருக்கிறாரே..என்று மிக பிரம்மிப்பாக இருந்தது.. ஒவ்வொரு கல்லிலும் அவரின் காதல் தெரிகிறது. மறைந்து போன அந்த மனிதரை பார்க்க முடியாவிட்டாலும் அவரின் ஆழமான அன்பை அந்த மகலில் உணரமுடிந்தது.
காதலிக்கும், மனைவிக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.. காதலிக்கும் போது ஆண்களுக்கு பெண்களிடம் உள்ள காதலும் அன்பும், மனைவியான பிறகு இருக்காது என்பது தெரிந்த விஷயம்.. மனைவிக்காக..அதுவும் 15 குழந்தைகள் பிறந்த பிறகும் க்கூட ஒருவர் மனைவி மேல் இருக்கும் அன்பை இப்படி வெளிப்படுத்தமுடியுமா என ஆச்சரியமாக இருந்தது.. என் கணவரிடம் கூட இதைப்பற்றி சொன்னேன்.. “நீங்களும் நம் அன்பின் வெளிப்பாடாக எனக்கு இப்படி ஒரு மாளிகை கட்டுங்களேன்னு...” அவரோ “இது ஷாஜஹான் அவர் மனைவி இறந்தபிறகு கட்டியது.. உனக்கு எப்படி வசதி என்றார்.........”
சரி விஷயத்திற்கு வருவோம்... தாஜ்மகலை பார்த்த போது, ஏன் பெண்கள் ஆண்களுக்காக எதுவுமே இப்படி செய்வதில்லை.. பெண்கள் என்ன அன்பில்லாதவர்களா?.. காதல் இல்லாதவர்களா.. கல் நெஞ்சக்காரர்களா?.. காதலனுக்கோ, கணவருக்கோ இதுவரை எந்த பெண்ணாவது (வரலாற்று கதைகளை தவிர) இப்படி நினைவு சின்னங்களோ, இல்லை ஏதோ ஒரு வகையில் வியக்கும்படி தங்களது அன்பை வெளிப்படுத்தி இருக்காங்களான்னா?.. எனக்கு தெரிந்து இல்லை. தாஜ்மகலை விடுங்கள், ஒரு தெருவில் நடந்து போகும் போது பார்த்தால் வீடுகளின் பெயர் “லஷ்மி இல்லம்” “பத்மாவதி இல்லம்”... இப்படி அந்த வீட்டு குடும்ப தலைவியின் பெயரில் இருக்கும். நிச்சயம் இவை பிள்ளைகள் பெயர் இல்லை, (பொதுவாக பிள்ளைகள் பெயர் வாகனங்களில் (கார், பைக்..) பார்க்கலாம்.) இப்படி ஆண்கள் எல்லாவற்றிலும் அதிகமாக தங்களின் அன்பை வெளிபடுத்தும் போது, பெண்கள் ஏன் வெளிபடுத்துவது இல்லை..?!!
எனக்கு தெரிந்து, பொதுவாக பெண்கள் ஆண்களை விட மன வலிமை பெற்றவர்கள். எதையும் எளிதில் வெளியில் சொல்லிவிட கூடியவர்கள் இல்லை. பெண்ணின் மனதை இதுவரை முழுதும் அறிந்தது யாரும் இல்லை எனும் அளவிற்கு மனதளவில் வலிமை கொண்டவர்கள் என்றாலும் உள்ளுக்குள் ஆண்களை விட அதிக அன்பு, நேசம், பாசம் கொண்டவர்கள் பெண்களே.
ஒரு பத்திரிக்கையில் படித்த உண்மை சம்பவம் இது, ஒரு பெண்ணின் கணவர், சிறு வயதிலேயெ ஒரு விபத்தின் மூலம் நடக்கும் மற்றும், பேசும் சக்தியை இழந்து, படுத்த படுக்கையாகிவிட்டார். அவரை அவரின் மனைவி விட்டு விலகி செல்லாமல், வருட கணக்காக ஒரு குழந்தையை போல் கவனித்து வருகிறார். அவரின் பார்வையில் மட்டுமே அசைவு இருக்கிறது..அதையே தன் வாழ்க்கையாக நினைத்து அந்த பெண்மனி இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு முழு பணிவிடையும் இவரே செய்கிறார் (உணவு கொடுப்பது, குளிப்பாட்டுவது, உடைகள் மாற்றுவது, சிறுநீர், மலம் சுத்தம் செய்வது). இத்தனை வருடம் ஆன பிறகும் கூட அவர் இதை செய்ய சோர்ந்து போகவில்லை என்பது வியக்கதக்க பெண்ணின் குணம் அல்லவா?.. இதில் எத்தனை காதல் உள்ளது. அடுத்து கேரளாவிலும் இதை போன்றே ஒரு பெண் தன் கணவரை பார்த்து கொள்கிறார்..அவர் வெளி உலகை பார்த்தே ஆண்டுகள் பல ஆகிவிட்டன என்ற செய்தியும் கூட என்னை பெண்ணின் அன்பையும் காதலையும் எண்ணி வியக்கவைத்தது. இந்த உண்மை கதை, மலையாளத்தில் நடிகை ரேவதி, நடிகர் மோகன்லால் நடித்து திரைபடமாக வெளிவந்துள்ளது. (படம் பெயர் தெரியவில்லை)
ஆக, ஆண்களை போன்று பெண்கள் காதலை வெளிப்படுத்துவது இல்லையே தவிர..ஆண்களை விட பெண்களின் அன்பிற்கே சக்தியும், ஆயுட்காலமும் அதிகம். ஒரு தாஜ்மகல் என்ன ஒராயிரம் தாஜ்மகல் ஒவ்வொரு பெண்ணின் மனதிற்குள்ளும்......
அணில் குட்டி அனிதா:- ஹா..ஹா..ஹா.. கவிதா சூப்பரா வூடு(தாஜ்மகல்) கட்டி இருக்கீங்க போங்க.. ம்ம்... பெண் மனசு பெண்ணுக்கு தானே தெரியும்.. அது இருக்கட்டும்... உங்களுக்கு போய்.. ஹா..ஹா....தாஜ்மகல் ஹா..ஹா... எல்லாம் கட்ட சொல்லி.. ஹா..ஹா...தமாஷ்ஷு போங்க..வர வர நீங்க பண்ற தமாஷ் தாங்க முடியல...அய்யோ..அய்யோ..இது எல்லாம் கேட்டு வரக்கூடாது..அம்மனி..தானா வரனும்.......ஆனா உங்க hubby correct ஆ பதில் சொல்லி இருக்காரு.. என்னைய மாதிரி அவரும் எப்ப விடுதலை கிடைக்கும்னு காத்துக்கிட்டு இருக்காரு போல........அடடா..உடனே..சும்மா முட்ட கண்ண வச்சிக்கிட்டு முறைக்காதீங்க.. பயம்ம்ம்ம்ம்ம்மா இருக்குது இல்ல......
பெண்ணிற்காக ஒரு தாஜ்மகல், ஆணிற்காக..?
Posted by : கவிதா | Kavitha
on 13:37
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
49 - பார்வையிட்டவர்கள்:
ஏன் மனைவியைக் காதலிக்கக் கூடாதா கவதா? காலம் முழுதும் சாஜகானுக்கு மும்தாஜ் காதலிதான் அப்படி நினைக்கவில்லையா நீங்கள்...
கவிதா,
//என்றாலும் உள்ளுக்குள் ஆண்களை விட அதிக அன்பு, நேசம், பாசம் கொண்டவர்கள் பெண்களே.
//
இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள், பெண்களை விட ஆண்கள் என்றெல்லாம் ஒப்பிடுவது சரியாக இல்லை. அன்பு, நேசம், பாசம் மற்றும் காதல் எல்லாம் பால் சார்ந்த விஷயமாக எனக்குப் படவில்லை. ஆணோ பெண்ணோ, தனிமனிதர் சார்ந்த விஷயமது என்றே தோன்றுகிறது.
அப்பால இன்னோரு மேட்டர்... இன்னொருவரின் மனைவியாக இருந்த மும்தாஜை கவர்ந்து வந்து தன் மனைவியாக ஆக்கிக்கொண்டவர் ஷாஜஹான். அவ்வளவு காதல் :)
தாஜ்மகாலைவிடப் பெரிய அன்பின் வெளிப்பாடு இது என்றும் கொள்ளலாம் :)
நமது கலாச்சாரத்தில் இப்படி ஒரு காதலுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்(அதுவும் அந்த காலத்திலேயே) ஆச்சர்யப்படவைக்கிறது!
//அப்பால இன்னோரு மேட்டர்... இன்னொருவரின் மனைவியாக இருந்த மும்தாஜை கவர்ந்து வந்து தன் மனைவியாக ஆக்கிக்கொண்டவர் ஷாஜஹான். அவ்வளவு காதல் :)
தாஜ்மகாலைவிடப் பெரிய அன்பின் வெளிப்பாடு இது என்றும் கொள்ளலாம் :)//
எனக்கு இது புது விஷயம் தான்..
//ஏன் மனைவியைக் காதலிக்கக் கூடாதா கவதா? காலம் முழுதும் சாஜகானுக்கு மும்தாஜ் காதலிதான் அப்படி நினைக்கவில்லையா நீங்கள்... //
அதான் அகிலன்..அவர் மனைவியை காதலியாக நினைத்திருக்கிறாரே.. ஆன அதிகம் அப்படி நடக்கறது இல்லை என்பது உண்மை தானே..
இந்தப் பதிவை தேசிபண்டில் இணைத்துள்ளேன்..நன்றி.
http://www.desipundit.com/2006/06/29/tajmahal/
அதுசரி ஆளாளுக்கு தாஜ்மகால் கட்ட ஆரம்பிச்சா நாடு தாங்காதுங்க. தவிர கட்டுறதுக்கு பொருளாதார நிலமை சரியா இருக்கனும் இல்லியா... ஷாஜகான் பெரிய அரசன் அதுனால அவரு கட்டுனாரு. தன் மனைவிய நேசிக்கிறவங்க ம்னைவிக்கு தாஜ்மகால் கட்டவேணாம். தாஜ்மகால் முன்னால விற்கிற குட்டி தாஜ்மகால் வாங்கி குடுக்கலாம். அதுகூட காதலின் வெளிப்பாடுதான். இருக்கப்பட்டவங்க அதை பிரம்மாண்டமா வெளிப்படுத்துறாங்க.. இல்லாதவங்க அவங்க சக்திக்கு ஏற்றாப்போல பண்ணவேண்டியது தான்.
அன்புடன்,
மனசு...
//இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள், பெண்களை விட ஆண்கள் என்றெல்லாம் ஒப்பிடுவது சரியாக இல்லை. அன்பு, நேசம், பாசம் மற்றும் காதல் எல்லாம் பால் சார்ந்த விஷயமாக எனக்குப் படவில்லை. ஆணோ பெண்ணோ, தனிமனிதர் சார்ந்த விஷயமது என்றே தோன்றுகிறது.
//
இவ்விஷயத்தில் அருள்குமாரோடு நானும் ஒத்துப்போகிறேன்.
அன்பு, காதல், பாசம் போன்றவை எல்லாமே அவரவர்க்குள் தோன்றுவது. இதில் பாலின பேதமெல்லாம் கிடையாது.
ஏன் விலங்குகளின் பாசத்தைக் கூட கவனியுங்கள். அவைகளும் பாசம் என்று ஒன்று ஏற்பட்டுவிட்டால் எவ்வளவு நன்றாய் வெளிப்படுத்துகின்றன.
மற்றபடி ஆண்கள் தங்களுக்காக தஜ்மஹால் எல்லாம் கட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஒரே ஒரு கடைக் கண் பார்வை போதும் என்றுதான் கூறுகிறார்கள்.
:)
//ஆண்களை விட அதிக அன்பு, நேசம், பாசம் கொண்டவர்கள் பெண்களே. //
என்னங்க கவிதா!
உங்களுக்கும் பொன்ஸ்க்கும் எப்பவும் ஆண்களுடன் பெண்களை கம்பேர் பண்ணுவது தான் வேலையா.............என்னமோ போங்க...........
அது என்னங்க, உள்ளுக்குள்,......??? அன்போ, பாசமோ, நேசமா அதை தனக்கு பிடித்தவர்க்கள் மேல் வெளியில் காட்டினால் தானே அது தெரிய வரும்.........
1. //இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள், பெண்களை விட ஆண்கள் என்றெல்லாம் ஒப்பிடுவது சரியாக இல்லை. அன்பு, நேசம், பாசம் மற்றும் காதல் எல்லாம் பால் சார்ந்த விஷயமாக எனக்குப் படவில்லை. ஆணோ பெண்ணோ, தனிமனிதர் சார்ந்த விஷயமது என்றே தோன்றுகிறது.//
- உண்மை.. 100% ஒத்துப் போகிறேன்.(அருள், மழை தான்னு சொல்லாதீங்க.. எங்கூர்ல இப்போவே புயல் அடிக்குது :)))
2. //தாஜ்மகலை பார்த்த போது, ஏன் பெண்கள் ஆண்களுக்காக எதுவுமே இப்படி செய்வதில்லை..//
ஏங்க, 15 பிள்ளைய பெத்துப் போடுறது என்ன அத்தனை சிம்பிளான விஷயம்னு நினைக்கிறீங்களா?!!!
அதிலும், ஷாஜகானின் வாழ்க்கை வரலாறு பார்த்தீங்கன்னா, அம்மணி மும்தாஜ் கணவரோட போர்க்களத்துக்கெல்லாம் போயிருக்காங்க.. அப்படி இணை பிரியாம இருந்தது சின்ன விஷயமா என்ன?
மதனோட "வந்தார்கள் வென்றார்கள்" படிச்சி பாருங்க.. அதுல இந்த ஷாஜகான், மும்தாஜ், தாஜ் மகல் பத்தி இன்னும் நிறைய புதுச் செய்திகள் கிடைக்கும்.
//உங்களுக்கும் பொன்ஸ்க்கும் எப்பவும் ஆண்களுடன் பெண்களை கம்பேர் பண்ணுவது தான் வேலையா.............என்னமோ போங்க...........//
சிவா, எல்லாரும் எதை எதையோ கம்பேர் பண்ணறாங்க.. நாங்க இந்த மேட்டர் மட்டும் தானே ஒப்பிடறோம்.. அதிலும் பாருங்க, நீங்க சொன்னாலும் சொல்லா விட்டாலும் கடைசில உண்மையை ஒப்புக்கிறோமா இல்லையா?
கவிதா, உங்களுக்கு அவள் விகடன்ல இந்த மேட்டர் மட்டும் தான் கண்ல பட்டுதா? அந்த இந்திய ராணுவத்தில் பெண்கள் பற்றிய செய்தியைப் பார்க்கலியா?
//கவிதா, உங்களுக்கு அவள் விகடன்ல இந்த மேட்டர் மட்டும் தான் கண்ல பட்டுதா? அந்த இந்திய ராணுவத்தில் பெண்கள் பற்றிய செய்தியைப் பார்க்கலியா? //
பொன்ஸ், சரியான்னு தெரியாது..நிஜமாகவே நான் நிறைய புத்தகங்கள் படிப்பதில்லை.. மனிதர்களை கவனிப்பது அதிகம்.. அதை கொண்டுதான் எழுதுகிறேன்.
//என்னங்க கவிதா!
உங்களுக்கும் பொன்ஸ்க்கும் எப்பவும் ஆண்களுடன் பெண்களை கம்பேர் பண்ணுவது தான் வேலையா.............என்னமோ போங்க...........//
அது என்னங்க சிவா, ஆண்களை பற்றிய உண்மைய அடிக்கடி சொல்லறாதேலேயே நீங்க எங்கள இப்படி சொல்லிடீங்க.. "ஆண்களின் நிழலில்" பதிவை தயவு செய்து படித்து பாருங்கள்.. எனக்கு ஆண்களின் மேல் உள்ள எண்ணம் உங்களுக்கு புரியும்.
//ஏங்க, 15 பிள்ளைய பெத்துப் போடுறது என்ன அத்தனை சிம்பிளான விஷயம்னு நினைக்கிறீங்களா?!!!//
கஷ்டம்தான் பொன்ஸ், ஒன்னுக்கே இப்பவெல்லாம்.. பெட் ரெஸ்டு ன்னு சொல்றாங்க.. 15ன்ன்னா.. அம்மாடீ..மும்தாஜ் மட்டும் இல்லை அந்த கால பெண்கள் எல்லாருமே great தான்!
//பெண்கள் குறைந்தவர்கள் அல்ல! இப்போ பாருங்க! எத்தனை ஆண்களுக்குச் "சின்னவீட்டு" வசதியை சகிக்கும் பெண்கள்,கிடைச்சிருக்கிறார்கள். இதோட ஒப்பிடும் போது "தாஷ் மாகால்" என்ன ? பெரிசுங்க!//
பெருசுதாங்க யோகன்..!
//இவ்விஷயத்தில் அருள்குமாரோடு நானும் ஒத்துப்போகிறேன்.
அன்பு, காதல், பாசம் போன்றவை எல்லாமே அவரவர்க்குள் தோன்றுவது. இதில் பாலின பேதமெல்லாம் கிடையாது. //
வாங்க நக்கல் சிபி அவர்களே..! பேதமெல்லாம் இல்லைங்க.. ஆனா நான் சொன்னது.. காதலிக்கும் போது இருக்கற காதல்..மனைவி ஆனதும் ஆண்களுக்கு இருக்கறது இல்லைன்னு தான்..
ஆமா.. முன்னமே அருள், செயகுமார் க்கு என்கிட்ட வம்பிழுக்கலன்னா தூக்கம் வராது.. இப்போ சிவா நீங்களும் சேர்ந்துட்டீங்க போல.. சரி பிடிங்க.. நக்கீரர் -நெ.3. பட்டத்தை..!
//அது என்னங்க, உள்ளுக்குள்,......??? அன்போ, பாசமோ, நேசமா அதை தனக்கு பிடித்தவர்க்கள் மேல் வெளியில் காட்டினால் தானே அது தெரிய வரும்......... //
நாங்க தான் கண்ணாலேயே மயக்கிடுவோமே.. என்ன சிபி.. இதுதானே நீங்க சொன்ன "கடைக்கண் பார்வை ஒன்றே போதுமே" ன்னு
//ஏங்க, 15 பிள்ளைய பெத்துப் போடுறது என்ன அத்தனை சிம்பிளான விஷயம்னு நினைக்கிறீங்களா?!!!//
என்னமோ 15 பிள்ளைகளையும் விருப்பப்பட்டு பெத்துகற மாதிரி சொல்லுரீங்க. அந்த காலத்தில் கு.கா.வெல்லாம் இல்லை. அப்படியே இருந்தாலும் கு.கா.விற்கு இஸ்லாமில் தடை. அதனால் கு.கா. பற்றியெல்லாம் யோசித்திருக்கவே மாட்டார்கள்.
//அந்த காலத்தில் கு.கா.வெல்லாம் இல்லை. அப்படியே இருந்தாலும் கு.கா.விற்கு இஸ்லாமில் தடை. அதனால் கு.கா. பற்றியெல்லாம் யோசித்திருக்கவே மாட்டார்கள். //
சீனு..ஞாயமா இருக்கா?.. நாம பேசிக்கிட்டு இருக்கற விஷயம்.. ஆண்கள், பெண்கள் அன்பு, காதல் வெளிப்ப்டுத்தற விஷயம்.. நீங்க என்னடான்னா.. கு.கா வரைக்கும் மேட்டர கொண்டு வந்துடீங்க.... நீங்க சொல்றத பார்த்தா மும்தாஜ் பிடிக்காம குழந்தை பெற்று கொண்டாங்களா? .. இப்படி நாம பேசிக்கிட்டு போனா.. அதுக்குமேல. நீங்களே சொல்லுங்க..
பெண்களை ஏமாற்ற ஒரு தாஜ்மகால் போதும். அல்லது சாலையோர பூக்கள் போதும். உலகமே தங்களதாய் திருப்தி அடைந்துவிடுகிறார்கள். உலகம் ஆண்கள் கையிலல்லவா இருக்கிறது. ஆணாதிக்க சமுதாயத்தின் கோரமுகங்கள் தான் இந்த தாஜ்மகால்கள். ஒரு குச்சி மிட்டாய் வாங்கிக்கொடுத்துவிட்டு, குழந்தையைத் திருப்திபடுத்திவிட்டு, நீ என்ன வேண்டுமென்றாலும் செய்துகொள்- இதுவே ஆண்களின் எதார்த்த தத்துவம்.
//ஒரே ஒரு கடைக் கண் பார்வை போதும் என்றுதான் கூறுகிறார்கள்.
:) // கரெக்ட் சிபி. ஆனா அதுக்குத்தான் இந்த பொண்ணுங்க என்னா பந்தா விடறாங்க!! :)
//அது என்னங்க, உள்ளுக்குள்,......??? // அப்படி கேளுங்க சிவா.
//- உண்மை.. 100% ஒத்துப் போகிறேன்.// :)
//காதலிக்கும் போது இருக்கற காதல்..மனைவி ஆனதும் ஆண்களுக்கு இருக்கறது இல்லைன்னு தான்.. //
கவிதா... இதுவும் ரெண்டு பக்கமும் இருக்கிற பிரச்சனை தான்! கனவனான பின் காதல் இல்லாத எத்தனை பெண்களை உங்கள் முன் கொண்டுவந்து நிறுத்தட்டும்?
//"ஆண்களின் நிழலில்" பதிவை தயவு செய்து படித்து பாருங்கள்.. // ஆ ஊ ன்னா இத ஒன்னு சொல்லிடுங்க! ஏதோ ஒரு பதிவு இப்படி தெரியாம எழுதிட்டீங்க. அப்புறம் எழுதினதெல்லாமே ஆண்களைக் குறைத்துச் சொல்லித்தானே :(
//////
//தாஜ்மகலை பார்த்த போது, ஏன் பெண்கள் ஆண்களுக்காக எதுவுமே இப்படி செய்வதில்லை..//
ஏங்க, 15 பிள்ளைய பெத்துப் போடுறது என்ன அத்தனை சிம்பிளான விஷயம்னு நினைக்கிறீங்களா?!!!
/////
பொன்ஸ், 15 பிள்ளைக்கும் தாஜ்மகாலுக்கும் (சீரியஸா) முடிச்சு போட்டாங்கன்னு நினைக்கிறேன். அதனால் தான் கு.கா.விற்கு வந்தேன்.
//நீங்க சொல்றத பார்த்தா மும்தாஜ் பிடிக்காம குழந்தை பெற்று கொண்டாங்களா?//
பிடிச்சாலும் பிடிக்காலம் போனாலும், குழந்தை பெற்றுக் கொள்வதை தடுக்க முடியாது (அந்த்க் காலத்தில்). அதற்கு காரணம் தான் நான் சொன்னது. (ஹூம், disclaimer தான் போடனும் போலிருக்கு).
சீனு, அதாங்க சொல்றேன், விருப்பம் இருக்கோ இல்லையோ, வேற வழியே இல்லாம இத்தனை கஷ்டப் பட்டுகிட்டு இருந்தவங்க இன்னும் தாஜ் மகால் எல்லாம் கட்டணும்னு எதிர்பார்த்தா எப்படி?
இதுவே பெரிய விஷயம் தான்..
இந்தக் காலத்துல நானும் கவிதாவும் வேணா ஏதாச்சும் கட்டலாம்.. ஆனா ரியல் எஸ்டேட் ரேட் எல்லம ரொம்ப உயரத்துல இருக்கு.. வீடு கட்டறதே பெரிய விஷயம், தாஜ் மகல் எல்லாம், ம்ம்ம், யோசிக்கலாம் :)
//"ஆண்களின் நிழலில்" பதிவை தயவு செய்து படித்து பாருங்கள்.. // ஆ ஊ ன்னா இத ஒன்னு சொல்லிடுங்க! ஏதோ ஒரு பதிவு இப்படி தெரியாம எழுதிட்டீங்க. அப்புறம் எழுதினதெல்லாமே ஆண்களைக் குறைத்துச் சொல்லித்தானே :( //
அருள் ஏன் இப்படி சொல்றீங்க.. உங்களுக்காகவே அடுத்தது..பெரிய ஐஸ்' சோட ஆண்களுக்கு மட்டுமே ஒரு பதிவு சரியா...
//ஆணாதிக்க சமுதாயத்தின் கோரமுகங்கள் தான் இந்த தாஜ்மகால்கள். ஒரு குச்சி மிட்டாய் வாங்கிக்கொடுத்துவிட்டு, குழந்தையைத் திருப்திபடுத்திவிட்டு, நீ என்ன வேண்டுமென்றாலும் செய்துகொள்- இதுவே ஆண்களின் எதார்த்த தத்துவம். //
சபாஷ்..அப்படி சொல்லுங்க.. புதுமை விரும்பி,
அருளு.. கொஞ்சம் நல்லா படிங்க.. குச்சிமிட்டாய் குடுத்து எல்லாம் என்னையும் பொன்ஸ், ஆங் அப்புறம் என்னோட அணில் குட்டிய எல்லாம் ஏமாத்த முடியாது...
//இந்தக் காலத்துல நானும் கவிதாவும் வேணா ஏதாச்சும் கட்டலாம்.. ஆனா ரியல் எஸ்டேட் ரேட் எல்லம ரொம்ப உயரத்துல இருக்கு.. வீடு கட்டறதே பெரிய விஷயம், தாஜ் மகல் எல்லாம், ம்ம்ம், யோசிக்கலாம் :) //
ம்ம் ..chance ஏ இல்ல.. வேளச்சேரி (ஏரி) யில பிளாட் வில 30 lacs ..முடியாதுப்பா.. ஏதோ முன்னமே சொன்ன மாதிரி கடைக்கண் பார்வை தான் நம்ம ரேன்ஞ்சுக்கு சரிப்பட்டு வரும்..
சீனு..ஏதாவது சொல்லுங்க.. நடுநடுவுல.. காதல் , அன்பு, ஆண், பெண்..மனைவின்னு சேர்த்துக்கோங்க..
நம்ம subject line ஐ தொட்ட மாதிரி இருக்கும்..
//கவிதா... இதுவும் ரெண்டு பக்கமும் இருக்கிற பிரச்சனை தான்! கனவனான பின் காதல் இல்லாத எத்தனை பெண்களை உங்கள் முன் கொண்டுவந்து நிறுத்தட்டும்?//
ஓ..இதே வேலையா இருக்கீங்களா?.. கொண்டுவந்து நிறுத்துங்க..ப்ளீஸ்..
//இந்தக் காலத்துல நானும் கவிதாவும் வேணா ஏதாச்சும் கட்டலாம்.. ஆனா ரியல் எஸ்டேட் ரேட் எல்லம ரொம்ப உயரத்துல இருக்கு.. வீடு கட்டறதே பெரிய விஷயம், தாஜ் மகல் எல்லாம், ம்ம்ம், யோசிக்கலாம் :)//
நீங்க சொல்லுறது எல்லாம் பணம் சம்பந்தப் படுகிற விஷயம். உங்களுக்கு தாஜ்மகால் வெறும் சலவைக் கல்லால் செய்த கட்டிடமாகவே தோன்றுவதாக நான் நினைக்கிறேன். தாஜ்மகால் கட்டியதால் தான் ஷாஜகானின் காதல் நமக்குத் தெரிகிறது. கட்டவில்லையென்றால் ஷாஜகானின் காதல் குறந்தது என்று சொல்ல முடியாது.
//சீனு..ஏதாவது சொல்லுங்க.. நடுநடுவுல.. காதல் , அன்பு, ஆண், பெண்..மனைவின்னு சேர்த்துக்கோங்க..நம்ம subject line ஐ தொட்ட மாதிரி இருக்கும்..//
பரவாயில்லைங்க. குழப்பினாலும் தெளிவாகவே குழப்புறேனே. எதுக்கு குழப்பத்தோட குழப்பனும். out of syllabus போனாதானே மற்ற angle-ல இருந்தும் சாதக பாதகங்களை பார்க்க முடியும்.
பிரச்சனை இல்லாம உல்கத்துல ஏதாவது இருக்கா?
கவிதா,
அப்படியே இதயும் படிங்க.
http://www.hindunet.org/hindu_history/modern/taj_oak.html
http://internationalreporter.com/news/read.php?id=665
http://www.hindunet.org/hindu_history/modern/godbole_taj1.html
//நீங்க சொல்லுறது எல்லாம் பணம் சம்பந்தப் படுகிற விஷயம். உங்களுக்கு தாஜ்மகால் வெறும் சலவைக் கல்லால் செய்த கட்டிடமாகவே தோன்றுவதாக நான் நினைக்கிறேன் //
சீனு சரியா சொன்னீங்க.. பதிவில் சொல்லியிருக்கேன் பாருங்க.. ஒவ்வொரு கல்லிலும் அவரின் அன்பு தெரியுதுன்னு..
//பரவாயில்லைங்க. குழப்பினாலும் தெளிவாகவே குழப்புறேனே. எதுக்கு குழப்பத்தோட குழப்பனும். out of syllabus போனாதானே மற்ற angle-ல இருந்தும் சாதக பாதகங்களை பார்க்க முடியும்.//
ஆஹா..சீனு..ஒரு நல்ல form ல இருக்கற மாதிரி இருக்கு..
சீனு, உண்மை என்னன்னா, ஆயிரக் கணக்கான ஏழைக் கலைஞர்களின் கைகளைக் காவு வாங்கிய கட்டிடமாகத் தான் என்னால தாஜ் மகாலைப் பார்க்க முடியுது..
அதை நேரில் பார்த்து விட்டு வந்த போது கூட இந்த ஒரே எண்ணம் தான் மிஞ்சியது.
ஒருவர் மேல் வைக்கும் அன்பு அடுத்தவருக்கு உபத்திரவமா இல்லாத வரை தான் போற்றுதலுக்குரியது.. அவ்வளவு தான் என்னோட எண்ணம்..
//ஆணாதிக்க சமுதாயத்தின் கோரமுகங்கள் தான் இந்த தாஜ்மகால்கள். // அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது புதுமைவிரும்பி. ஆணாதிக்க சமுதாயம் என்பதால் ஷாஜகான் என்ற ஆணால் தன் விருப்பப்படி தாஜ்மஹால் கட்ட முடிந்தது என்பது நிஜம். ஆனால் அந்த நோக்கத்தை நாம் தவறு சொல்ல முடியாது இல்லையா? just சமாதானப்படுத்த என்றால் தாஜ்மஹால் தேவையில்லையே. நீங்கள் சொன்ன குச்சி மிட்டாய் ரேஞ்சில் ஏதாவது போதுமே!
//ஓ..இதே வேலையா இருக்கீங்களா?.. கொண்டுவந்து நிறுத்துங்க..ப்ளீஸ்..// இதே வேலையெல்லாம் இல்லீங்க. அவ்வளவு கனவன்மார்கள் இப்படி என்னிடம் புலம்பியிருக்கிறார்கள்!
//அருள் ஏன் இப்படி சொல்றீங்க.. உங்களுக்காகவே அடுத்தது..பெரிய ஐஸ்' சோட ஆண்களுக்கு மட்டுமே ஒரு பதிவு சரியா... // ஸாரி மேடம், இதுக்கெல்லாம் நாங்க கவுந்துடமாட்டோம் :)
//ஸாரி மேடம், இதுக்கெல்லாம் நாங்க கவுந்துடமாட்டோம் :) //
அருள் நீங்க தப்பா நினைச்சீட்டீங்க.. நான் அடுத்து எழுத போறது "எஸ்.எம்.எஸ்' வழியா வரும் அசிங்கமான மெஸேஜ் பற்றியது'.. இது யாரு செய்யறது.. ஆண்கள் தானே.. நீங்க (ஆண்கள்) ஏதாவது சரியா செய்தா அதை பற்றி பக்கமா பக்கமா நான் எழுத தயார்.. எங்க விடறீங்க.. இப்படி திட்டிற மாதிரிதான் எழுதவைக்கறீங்க..
//ஒருவர் மேல் வைக்கும் அன்பு அடுத்தவருக்கு உபத்திரவமா இல்லாத வரை தான் போற்றுதலுக்குரியது.. அவ்வளவு தான் என்னோட எண்ணம்..
//
- உண்மை பொன்ஸ்.. 100% ஒத்துப் போகிறேன்.
//எங்க விடறீங்க.. இப்படி திட்டிற மாதிரிதான் எழுதவைக்கறீங்க.. // என்னங்க பன்றது. உங்களுக்கு ஆண்கள் செய்யும் தவறுகள் மட்டும்தானே தெரியும் :(
என்னை மாதிரி, சீனு, சிவா, சிபி, பாலா -இவங்களையும் ஒரு சப்போட்டு சேத்துக்கறேன் ;) - இவங்கள மாதிரி ஆண்கள் செய்யும் நல்லதெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாதே :(
//இது யாரு செய்யறது.. ஆண்கள் தானே//
கரெக்ட் தான். ஆண்கள் செய்யுற தப்பை பெண்கள் வெளிக்கொனறலாம். அதே போல பெண்கள் செய்யுற தப்ப ஆண்கள் வெளிக்கொனறலாம். தப்பில்லை. என்ன பன்னுறது. பெண்களுக்கு ஆண்கள் சப்போர்ட் பன்னுறாங்க, ஆனா ஆண்களுக்கு நாங்களே சப்போர்ட் பண்ணிகிட்டாத்தான் உண்டு (same side goal).
கவிதா, உடனே //"ஆண்களின் நிழலில்" பதிவை தயவு செய்து படித்து பாருங்கள்.. எனக்கு ஆண்களின் மேல் உள்ள எண்ணம் உங்களுக்கு புரியும்.// அப்படீன்னு போடாதீங்க. நீங்க "ஹே ராம்" கமல் ரேஞ்சுக்கு பதிவு போடரீங்களோன்னு எனக்கு ஒரு சந்தேகம் (Just kidding).
//"எஸ்.எம்.எஸ்' வழியா வரும் அசிங்கமான மெஸேஜ் பற்றியது'.. இது யாரு செய்யறது.. ஆண்கள் தானே.. // நினைச்சிகிட்டே இருங்க. எவ்வளவு பள்ளி மற்றும் கல்லூரிப் பெண்கள் இதையே தங்களுக்குள் பரிமாரிக்கொண்டிருப்பது, ஏன் ஆண்களுக்கும் அனுப்புவது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்குத் தெரியும். நிஜத்தில் நடக்கிற விஷய்ம் இது என்பதால் சிரிப்பன் எல்லம் போடவில்லை!
Arul , (tamil font probs), really am not in a mood to fight with you in this posting, since we just posted enough arguments at Santhosh blog..! ..let us take some rest and fight ok..
I think, your comments bring me to fight with you.....
நினைச்சிகிட்டே இருங்க. எவ்வளவு //பள்ளி மற்றும் கல்லூரிப் பெண்கள் இதையே தங்களுக்குள் பரிமாரிக்கொண்டிருப்பது, ஏன் ஆண்களுக்கும் அனுப்புவது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்குத் தெரியும். நிஜத்தில் நடக்கிற விஷய்ம் இது என்பதால் சிரிப்பன் எல்லம் போடவில்லை! //
Arul, I wont agree this, girls wont do like this..even if they do, they never use vulgar words..
//கவிதா, உடனே //"ஆண்களின் நிழலில்" பதிவை தயவு செய்து படித்து பாருங்கள்.. எனக்கு ஆண்களின் மேல் உள்ள எண்ணம் உங்களுக்கு புரியும்.// அப்படீன்னு போடாதீங்க. நீங்க "ஹே ராம்" கமல் ரேஞ்சுக்கு பதிவு போடரீங்களோன்னு எனக்கு ஒரு சந்தேகம் (Just kidding). //
Seenu, why you guys are teasing me today for the post "Aangalin Nizhalil" I just tell you the secret why I posted that first.. I know very well you guys may fight with me for the upcoming posting of mine. If I start with male, I can often show that & make you guys cool right!! .. How is it?!!
Kavitha, I guess this discussion is done.. May be we can go to the next vivatham ;)
//really am not in a mood to fight with you in this posting,// நீங்கள் இதை சண்டை என நினைக்கும் பட்சத்தில் நான் வேறெதுவும் பேசுவதற்கில்லை. நன்றி :)
//சண்டை என நினைக்கும் பட்சத்தில் நான் வேறெதுவும் பேசுவதற்கில்லை. நன்றி :)//
No...No...I dont really mean it ......
//Arul, I wont agree this, girls wont do like this..even if they do, they never use vulgar words..
// ஆம், உங்களுக்கு அவை தெரியாதவரை உங்களால் ஒத்துக்கொள்ள முடியாதுதான்.
////பள்ளி மற்றும் கல்லூரிப் பெண்கள் இதையே தங்களுக்குள் பரிமாரிக்கொண்டிருப்பது, ஏன் ஆண்களுக்கும் அனுப்புவது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்குத் தெரியும். நிஜத்தில் நடக்கிற விஷய்ம் இது என்பதால் சிரிப்பன் எல்லம் போடவில்லை! //
Arul, I wont agree this, girls wont do like this..even if they do, they never use vulgar words..
//
ம்ஹூம்..."பள்ளி மற்றும் கல்லூரிப் பெண்கள் இதையே தங்களுக்குள் பரிமாரிக்கொண்டிருப்பது" நான் இதை நேரடியாகவே பார்த்திருக்கிறேன்.
////really am not in a mood to fight with you in this posting,// நீங்கள் இதை சண்டை என நினைக்கும் பட்சத்தில் நான் வேறெதுவும் பேசுவதற்கில்லை. //
அட! அருள். சண்டையாகவே இருக்கட்டுமே. தப்பில்லை. கலகம் பிறந்தால் தான் நியாயம் கிடைக்கும் (அடங்கப்பா, ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் சேர்த்துதான்).
//சிவா நீங்களும் சேர்ந்துட்டீங்க போல.. சரி பிடிங்க.. நக்கீரர் -நெ.3. பட்டத்தை..!//
மேலும் ஒரு பட்டமா, சரி அன்பா தருவதை ஏன் வேண்டாம் சொல்லுவானே. :)
//என்னை மாதிரி, சீனு, சிவா, சிபி, பாலா -இவங்களையும் ஒரு சப்போட்டு சேத்துக்கறேன் ;) -//
என்னிக்கு நம்ம சப்போட்டு உங்களுக்கு உண்டு அருள்..
// I guess this discussion is done.. May be we can go to the next vivatham ;) //
Oops, So meet u ppl in next post.
//என்னை மாதிரி, சீனு, சிவா, சிபி, பாலா -இவங்களையும் ஒரு சப்போட்டு சேத்துக்கறேன் ;) - இவங்கள மாதிரி ஆண்கள் செய்யும் நல்லதெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாதே :(
//
அருள்குமாருக்கு நம்ம சப்போர்ட் என்னிக்கும் உண்டு!
//அட! அருள். சண்டையாகவே இருக்கட்டுமே. தப்பில்லை. கலகம் பிறந்தால் தான் நியாயம் கிடைக்கும் (அடங்கப்பா, ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் சேர்த்துதான்).
//
அட. எனக்கும் இது பத்தி நிறைய சொல்லணும்.. அடுத்த போஸ்ட்ல பேசலாமே.. ஷாஜகானையும் தாஜ்மகலையும் தொந்தரவு பண்ணாம,.
கவிதா.. அதை அடுத்த பதிவா போடுங்க.. அப்போ தான் இன்னும் தலைப்புக்குட்பட்ட அலசலா இருக்கும்..
//சிவா நீங்களும் சேர்ந்துட்டீங்க போல.. சரி பிடிங்க.. நக்கீரர் -நெ.3. பட்டத்தை..!//
சிவா, இந்த அங்கீகாரத்துக்கு என்ன அர்த்தம்னு கவிதாவோட வலைப்பூ வலது பக்கம் பாருங்க.. புரியும்.. :)))
//Seenu, why you guys are teasing me today for the post "Aangalin Nizhalil" I just tell you the secret why I posted that first.. I know very well you guys may fight with me for the upcoming posting of mine. If I start with male, I can often show that & make you guys cool right!! .. How is it?!!
//
So, நீங்க எப்போ, எப்படி, எங்கே பொய் சொல்லுவீங்கன்னு நாங்க எப்படி கண்டுக்கிறது. Hint கொடுங்களேன் ப்ளீஸ்.
இனிமேல் பின்னூட்டம் இடும்பொழுது யோசித்து இடவேண்டும் போல் இருக்கிறது.
//So, நீங்க எப்போ, எப்படி, எங்கே பொய் சொல்லுவீங்கன்னு நாங்க எப்படி கண்டுக்கிறது. Hint கொடுங்களேன் ப்ளீஸ்.//
சீனு "பொய்" யா..அப்படீன்னா..?!!
Post a Comment