பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் சென்னையில் அதிகமாகிவிட்ட நிலையில் அயல்நாட்டவரின் கலாசாரமும் நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது. அலுவலகத்தில் மாதம் ஒருமுறை 5 ஸ்டார் ஹோட்டலில் லன்ச், (அ) டின்னர் ஏற்பாடு செய்கிறார்கள் நட்சத்திர ஹோட்டல்களுக்கு எப்போதாவது இதுபோல் அலுவலக வேலை காரணமாக சென்றிருந்தாலும், வெளிநாட்டரவுடன் சேர்ந்து செல்லும் போது தனி அனுபவமாக தான் இருக்கிறது. குறிப்பாக அசைவ உணவு, வெளிநாட்டு உயர்ந்த வகை மது வகைகள் நிச்சயம் இருக்கும். இவை இல்லாமல் ஆண், பெண் என்ற வித்தியாசம் எங்களிடம் இல்லாமல் எங்களுது வெளிநாட்டு மேலாளர் பார்த்துக்கொள்வார். அவ்வப்போது நடுநடுவே எங்களுக்கு அதற்கான அறிவுரை வழங்கப்படும் அதேசமயம் நம் கலாசாரமும் அவருக்கு தெரிந்து இருப்பதால் எங்களை எதற்கும் அவர் கட்டாயபடுத்துவதும் இல்லை.

இப்படி செல்லும் போது நம் இந்திய நண்பர்களிடம் பார்த்த சில பழக்கவழக்கங்கள், எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது நாங்கள் விருப்பப்பட்ட எதையும் அங்கே சாப்பிடலாம். Standard Menu கிடையாது. ஆண்கள் சிலர், மது சாப்பிடும் பழக்கம் மிக அறிதாக இருந்தாலும், உயர்ந்த ரக மதுபானத்தை பார்த்தவுடன் அதிகமாக குடிப்பார்கள். சொல்லும் காரணம் “ஓசியில் கிடைக்கும் போது அனுபவிக்கனும் என்பதே”. குடித்தாலும் பரவாயில்லை, நேரம் ஆக ஆக அவர்களின் முன்பே அழகாக இருக்கும் முகம் லேசாக மாறிவிடும், பேச்சும் தான்.. தாங்கமுடியாத அளவுக்கு பேசுவார்கள். திருமணம் ஆகாதவர்கள் அதிகம், அதே சமயம் எங்களுடன் சாப்பிட வந்த வெளிநாட்டவர்களும் இவர்களை விட அதிகம் மது அருந்துவார்கள் தான், ஆனால், அவர்கள் முகத்திலோ, பேச்சிலோ அதிக மாற்றம் இருக்காது. இதை நான் நண்பர்களிடம் கேட்கும் போது, அவர்கள் எப்போதுமே சாப்பாட்டுடன் குடிப்பதால் பழகி போய் விட்டாரகள். நாம் அப்படியா, இப்படி எப்போதாவது ஓசியில் கிடைக்கும் போது சாப்பிடுவாதால் உளர ஆரம்பித்துவிடுகிறோம் என்பார்கள். இதில் குறிப்பிட்ட நண்பர்களுக்கு வயது 22- 25 க்குள் தான் இருக்கும். இவர்கள் மட்டும் அல்ல பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கும் பல இளைஞர்கள் குடிப்பது என்பதை தங்களது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக ஆக்கி கொண்டார்கள். இதற்கு அவர்களின் அதிகமான சம்பளம், வாழ்க்கை முறை, நிறுவனங்களில் சொல்லித்தரப்படும் கலாசாரம் எல்லாமும் காரணமாகிறது.

பிச்சா கார்னரில் மொய்க்கும் கூட்டம், எப்போதும் சாட் உணவு என்று தங்களை வெளிநாட்டில் இருப்பது போன்று பாவித்து கொள்கிறார்கள். இந்த உணவு பழக்கவழக்கங்களால், 20 வது வயது மதிக்க தக்க பிள்ளைகள் 30 பது வயது போல் தோற்றமளிக்கிறார்கள். குடி பழக்கம், தூக்கமின்மை காரணமாக கண்களுக்கு அடியில் எப்போதும் ஒரு சிறு வீக்கம் தெரிகிறது.

சாஃப்ட்வேர் டிவலப்மெண்டு என்று எப்போது பார்த்தாலும் கம்பூயட்டரையே வெறித்து கொண்டும், எப்போதும் அதைப்பற்றிய கவனத்துடம் இருப்பது இல்லாமல், “டென்ஷன்னா இருக்கு , ஒரு தம் போட்டுடு வந்தால் சரியாகி போகும்” என்று புகைப்பதும் கூட நிரந்தர பழக்கமாகிவிட்டது. இந்த சாஃப்ட்வேர் கம்பெனிகளில் வேலை பார்க்கும் பல பிள்ளைகளுக்கு தலையில் முடி பஞ்சம். 22-25 வயதுக்குள்ளேயே முடி கொட்டி போகிறது, இள நரை வேறு. முதிற்ச்சியான, வயதான தோற்றம், திருமணம் ஆகி இரண்டு குழந்தை இருக்குமோ என்று எண்ண தோன்றும்.

பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஜன்க் உணவை அதிகமாக சாப்பிட்டு மிகவும் குண்டாகி போய் இருக்கிறார்கள். உடம்பை குறைக்க ஜிம் வேறு தனி. ஜிம், அழகு நிலையத்திற்கு இவர்கள் கொடுக்கும் காசுக்கு இவர்களின் கல்யாண செலவையே பார்த்து விடலாம்.

உணவு பழக்கங்களையும், குடி மற்றும் புகைக்கும் பழக்கத்தை மாற்றினாலே இவர்களின் தோற்றத்தில் நல்ல வேறுபாடு தெரியும். சம்பாதித்தல் என்பது முக்கியமே….அதற்காக சம்பாதிப்பதை இப்படி தான் பயன்படுத்த வேண்டுமா.. அலுவலக நேரம் போக.மீதி நேரத்தை விளையாட்டு, டிரைவிங், நீச்சல் , குடும்பம், நண்பர்கள் என்று செலவிட எத்தனையோ வழிகள் இருக்கிறது..

ஆரோக்கியம் எதில் உள்ளது என்பதை உணர்வார்களா நம் இளைஞர்கள்?.

அணில் குட்டி அணிதா:- முடிச்சிட்டிங்கீங்களா அம்மனி?.. அது எப்படி அம்மனி எப்பவுமே ஊருக்கே உபதேசம் பண்றீங்க?.. என்னவோ நீங்க என்னவோ மார்கேண்டேயினின்னு நெனப்பா?.. வயசானாவே..இப்படிதான்.. சின்ன பசங்க எது பண்ணாலும் உபதேசம் பண்ண தோனும்.. ஆனா நம்ம கவிதா உபதேசம் பண்ணல.. புலம்பறாங்க.. ம்ம்..என்னடா.. நம்மால தம் போட முடியலயே.. ராத்திரியல நைட் கிளப்’ல போய் பீர் அடிச்சிட்டு, dance பண்ணமுடியலேன்னு.. பொறாம.. விடுங்க..அவங்க அப்படிதான்..! அப்புறம் இன்னொரு விஷயம்..காத குடுங்க.. அம்மனி புள்ளைய எப்படி வளக்கறாங்கன்னு கேளுங்க.. புள்ள கேட்கும் போது எல்லாம்..pizza, burger, sandwidch..தான்.. ம்ம்.. வூட்டுகுள்ள ஒன்னும் ..வேளியில ஒன்னு.. கேப்பாரு இல்ல… நானும் ஒவ்வொரு வாட்டியும்..நீங்க யாராவது கேப்பீங்கன்னு டிப்ஸ் குடுக்கறேன்.. ம்ம்ம்.. கவனிங்க!!.