Mobile phone இருப்பது எத்தனை வசதி என்பது உபயோகிக்கும் அத்தனை பேருக்கும் தெரியும், ஆனால் எனக்கு மட்டும் அது உபத்திரமாக தான் இருக்கிறது. அதை நான் இப்போது வைத்திருப்பது என் கணவர், மகனுக்காக மட்டுமே என சொல்லலாம். எனக்கும் எல்லோர் போலவும் உபயோகிக்க ஆசைதான்.. என்ன செய்வது.. எனக்கு ஏற்பட்ட மிக கசப்பான அனுபவம் காரணமாக நான் யாருக்கும் நம்பர் கொடுப்பதில்லை. இந்த நம்பர் கொடுக்காமல் இருப்பது கூட நண்பர்களுக்குள் மிக சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

நான் உபயோகித்தது, உபயோகிப்பது எல்லாமே pre paid தான். முன்னர் வைத்திருந்த நம்பரை யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் எழுதி கொடுத்துவிடுவேன். என்னை சுற்றி உள்ளவர்கள் மேல் எனக்கு அத்தனை நம்பிக்கை.

Mobile phone ல் அலாரம் வைப்பதால், தலை மாட்டில் வைத்துக்கொண்டு தூங்குவது வழக்கம். ஒரு நாள் இரவு மணி 11 இருக்கும், தூங்கி கொண்டிருந்த நான் சத்தம் கேட்டு எடுத்து பார்த்தேன், SMS ல் தகவல்.. “ I Love you “ என்று இருந்தது. நான் பயந்து போய்விட்டேன்.. என்னை சார்ந்தவர்கள், தெரிந்தவர்கள் அத்தனை பேருக்கும் என் தூக்க பழக்கம் தெரியும், இத்தனை மணிக்கு மேல் யார் இப்படி அனுப்புகிறார்கள் அதுவும் இப்படி ஒரு தகவலை..என்று யோசிக்கும் போதே என் கணவர் விழுத்துக்கொண்டு... “என்ன..இந்த நேரத்துல Mobile ல வைச்சுக்கிட்டு என்ன பண்ற” என்றார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அவரின் தூக்கத்தை கெடுக்க வேண்டாம் என, "இல்லை அலாரம் செட் பண்ண மறந்துட்டேன்" என்று சொல்லிவிட்டு Mobile லை ‘off‘ செய்துவிட்டு, யாராய் இருக்கும் என யோசித்து கொண்டே தூங்கி போய்விட்டேன்..

காலையில் எழுந்து எனக்கு Mobile லை ‘On’ செய்யவே பயமாக இருந்தது. சரி அலுவலகம் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.. அலுவலகம் சென்று எனக்கு தெரிந்த அத்தனை நம்பர்களையும் செக் செய்து பார்த்தும், தெரிந்த நம்பராக இல்லை. சரி பார்க்கலாம் என விட்டுவிட்டேன். படுக்கும் முன் silent mode ல் வைத்து விட்டு படுத்துவிட்டேன், அடுத்த நாள் பார்த்தால் முந்தைய இரவும் 11 மணிக்கு மேல் தகவல் வந்திருந்தது..

உன் கண்கள்.............. உதடுகள்........... என்று மிக அசிங்கமாக வர்ணித்து கடைசியில் படுக்கை அறை வரை அவன் என்னை அழைத்திருந்தான் என்பது தாங்கமுடியாத மன உளைச்சலை எனக்கு தந்தது. எத்தனை நம்பிக்கையாக நான் எல்லோரிடமும் என் நம்பரை கொடுத்திருக்கிறேன். ஏன் இத்தனை அசிங்கமாக தகவல் அனுப்புகிறார்கள். பார்க்கும் அத்தனை பேரையும், இவராக இருக்குமோ இவராக இருக்குமோ என என் மனது எண்ண ஆரம்பித்தது. அந்த நம்பரை திருப்பி கூப்பிட்டால் யாரும் எடுப்பதில்லை. பிறகு நானாக “ if you don’t stop this, I’ll call Police” என்று தகவல் அனுப்பினேன். ஆனால் அவனோ..திருப்பி யாரிடம் வேணுமாலும் போ..ஆனால் உன்னை.............தீருவேன் என்றான் இப்படி தினம் தினம் அசிங்கம் அதிகமானது, என் மன உளைச்சலும் அதிகமாகி போனது.

இதில் நான் அதிகம் பயந்தும், அசிங்கபட்டதும் என் மகனின் கண்ணில் இந்த தகவல்கள் பட்டுவிடுமோ என்று தான். செல் ஃபோன் ஆன் செய்யவே பயமாகி போனது. என் மகன் games விளையாட செல் ஃபோனை எடுப்பான்.. என் கணவரும் ஏதாவது நம்பர் தேவைக்கு எடுப்பார்..அவர்கள் இந்த அசிங்கத்தை பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று என்ற எண்ணமே என் நிம்மதியை குலைத்தது.

ஆனால் நாளுக்கு நாள் அதிகமாகி பொறுக்க முடியாமல் என் கணவரிடம், மிக மோசமான தகவல்களை அழித்து விட்டு படிக்கும் படியாக இருந்ததை மட்டுமே காட்டினேன். அவரோ உடனே ‘police’ க்கு போகலாம் என்றார். நான் அதற்கு உடன்படவில்லை. போலிஸ்ஸிடம் போனால் எல்லா தகவல்களையும் காட்டவேண்டும், என்னையே நான் அசிங்கபடுத்தி கொள்ள வேண்டுமா? என தோன்றியது. இது ஒரு 10 நாட்கள் தொடர்ந்தது.. நான் போலிஸ்க்கு வராததால் எனக்கும் என் கணவருக்கும் பிரச்சனையும் ஆனது. பின்பு ஒரு முடிவு செய்து ‘pre paid’ தானே தூக்கி எரிந்து விடலாம் என சிம்’மை எடுத்துவிட்டு புது நம்பர் போட்டுவிட்டேன்.

இப்போது யாருக்குமே கொடுப்பது இல்லை.. இந்த 10 நாள் அனுபவம் என்றாலும் மிக மோசமான அனுபவம்..இது.. இத்தனை அசிங்கமாக எப்படி என்னை சார்ந்தவர்கள், நண்பர்கள் என நான் நம்புபவர்கள் நடந்து கொள்ளுகிறார்கள் என்பதை என்னால் சகித்து கொள்ளவே முடியவில்லை..யாரை நம்புவது என்று ஒட்டு மொத்தமாக யாருக்குமே நான் நம்பர் கொடுக்காமல் இருக்கிறேன் (பெண்கள் உட்பட-அவர்கள் மூலம் யாருக்காவது தெரிந்துவிட்டால்) என்பது தான் உண்மை....

அணில் குட்டி அனிதா:- கவிதா ...நீங்க நினைக்கற மாதிரி உங்களுக்கு பக்கத்துல, இல்ல..உங்கள நேர்ல பாத்தவங்களா இருக்க வாய்ப்பே இல்ல.. ஏன்னா.. உங்கள நேர்ல பாத்தவாங்க எல்லாம் அம்மன் கோயில்ல போய் விபூதி வாங்கி வச்சிக்கிட்டு இராத்திரி ஆன அத பூசிக்கிட்டு தான் தூங்கறதா கேள்விப்பட்டேன்.. அதனால அநாவசியமா அப்பாவிங்க மேல சந்தேக படா...தீ..ங்க.. ..

ஆஆ..அய்யோ....யம்மா..ம்ம்..யப்பா........கவிதா..ப்ளீஸ்..விடுங்க.. இனிமே இப்படி எல்லாம் சொல்லமாட்டேன்...பொய்யா இருந்தாலும் நீங்க 40 kg தாஜ்மகல்’ னு சொல்றேன்.. அய்யோ.. ! யம்மா. ! வலிக்குது... கவிதா..ப்ளீஸ்...விடுங்க..வலிக்குது.. .விடுங்களேன்.. கவிதா ஜஸ்ட்..ஒன் நிமிட் ப்ரேக் ப்ளீஸ்........யா டான்க்ஸ்.......

அட உங்களத்தான்...எங்களதான் தான் இங்க நொக்கறாங்கன்னு தெரியுது இல்ல... அப்புறம் என்ன லுக்கு.. டீசன் ட்டா கிளம்ப வேண்டியது தானே...?.. படிச்சமா.. போனமான்னு இல்லாம...ம்ம்..ம்ம் கிளம்புங்க.. சீக்கிரம்.. வெளியில யாரும் மூச்..புரிஞ்சிதா.....ம்ம்..அது... அம்மனி .நீங்க ஆரம்பிங்க...நாம..அப்படி கொஞ்சம் உள்ளுக்கு போயி..க்...க்..க..லா...மா....................ஆஆஆ.....