இப்படியே போனால், நாம் பெற்ற சுதந்ததிரத்தை கூட இழந்து விட்டு நிற்போமோ? என்ற கேள்வியுடன்....
சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் படும் அவதியை பற்றி அம்மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், அரட்டை அரங்கத்தில் உணர்ச்சி பொங்க ஆவேசமாகவும், ஆற்றாமையுடனும் கொட்டி தீர்த்ததின் தொகுப்பு இதொ..
வறட்சி அதிகமாக இருக்கும் காலத்தில் சிவகங்கை மாவட்ட மக்களுக்கு என்று கிடைக்கும் மாற்று வேலை கன்மாய்’யை (நீர் தேக்கம்) வெட்டுவதுதான். ஆனால் அரசாங்கம் இந்த பணியை தனியார் பண முதலைகளிடம் பெரும் பணத்திற்கு செய்ய சொல்லிவிட்டது. அவர்கள் பெரிய பெரிய யந்திரத்தை கொண்டு விரைவில் வேலையை முடிப்பது என்னவோ நடக்கிறது. ஆனால், மண் வெட்டும் வேலை க்கூட கிடைக்காமல் சிவகங்கை மாவட்ட மக்கள் பிழைப்பது எப்படி, வயிரை நிரப்புவது எப்படி.?.
சாலைகள் அத்தனையும் மண் சாலைகள், குண்டும் குழியுமாக.... சில கிராமங்கள், அருகில் உள்ள நகரங்களுடன் நேரடியாக இனைக்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் பல கிமி தூரம் சுற்றி செல்ல வேண்டி இருக்கிறது. எத்தனை காலம் ஆனாலும் அரசாங்கம் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருக்க காரணம் என்ன?.
காந்தியடிகளால் திறக்கப்பட்ட அரசாங்க பள்ளி ஒன்று, பராமரிப்பு இன்றி, மேல் கூரை முதல், கதவு, சன்னல், செங்கல் வரை திருடப்பட்டு இப்போது வெறும் குட்டி சுவராக காட்சி அளிக்கிறது. (video clippings காட்டப்பட்டது).
சிவகங்கை மாவட்ட மக்கள், ஆற்றில் தேங்கி இருக்கும் தண்ணீரை கொஞ்சம் போல் எடுத்து சென்று, அவரவரின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். அரசாங்கமோ தண்ணீர் எடுக்கும் உரிமையை ஒரு தனியார் தொழில் நிறுவனத்தின் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தி கொள்ள அனுமதித்துள்ளது. அவர்கள், ஆழ்துளையிட்டு, நீர் அத்தனையும் உறிஞ்சிவிடுகிறார்கள். அத்தனையும் இழந்துவிட்டு நிற்கவேண்டியுள்ளது.
கடற்கரை, சினிமா, தொலைக்காட்சி, கணினி, இணையதளம், ஈமெயில், அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை, ஐரோப்பாவுடம் பேச்சி வார்த்தை, சிங்கப்பூர் சுற்று பயணம், ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு, வைகோ கட்சி தாவல், சரத்குமார் ராதிகா ‘ஜே’ வுடன் சேர்ந்தது சரியா?! என்று நாம் எதை எதையோ பேசிக் கொண்டிருக்க, இதோ இங்கே நம்மை போன்ற ஒரு தமிழன்...
அன்றாட வயிற்று பிரச்சனையின் ஆற்றாமையில்..!
எல்லாம் இருந்தும் கிடைக்காத கொடுமையில்....!
அரசாங்கத்தாலேயே ஏமாற்றப்பட்டும் இயலாமையில் !
நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறாம்..!
அணில் குட்டி அனிதா: இந்த அம்மனிக்கு வேற வேல இல்லப்பா..! எதையாவது பேசிக்கிட்டு.. என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க.. சரியான புலம்பல்ஸ் மன்னி..!
சரி, நாம மேட்டருக்கு வருவோம். நம்ம அண்ணாச்சிங்க 2, 3 பேரு “அண்ணா” ன்னு கூப்படக்கூடாது.. friends ஆவே இருப்போம்னு சொல்லி இருக்காங்க.. நான் என்னவோ ரொம்ப மரியாதையா கூப்பிடலாம்னு பார்த்தா..விடமாட்றாங்கப்பா.. நாட்ல “அண்ணா’ ன்னு அன்பா கூப்பிட்டது தப்பா போச்சு. இனிமே. நாம Friends, அதனால....வாடா மச்சி, போடா வெண்ணைய்..ன்னு சொல்ல வேண்டி இருக்கும்...யாரும் கோச்சிகிட்டு ‘கா’ விட்றகூடாது சரியா..?!!! .. ஆமா யாரு அந்த 2, 3 பேருன்னு உங்களுக்கு எல்லாம் தல வெடிக்குமே.. இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்..!
நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேங்க...... "All Indians are my (sister and brothers க்கு பதிலா) friends” னு அறிவிப்பு கொடுக்கலாம்னு இருக்கேன்.."நீங்க என்ன சொல்றீங்க..சட்டு புட்டுன்னு ஒரு லெட்டர் போடுங்க...
பெற்ற சுதந்ததிரத்தை கூட இழந்து விடுவோமோ...
Posted by : கவிதா | Kavitha
on 17:16
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
33 - பார்வையிட்டவர்கள்:
அது ஏதோ சிவகெங்கை மாவட்டத்தில் மட்டும் நடக்கும் பிரச்சனை போல அந்த நபர் பேசைப்போக...
நீங்க அதை பார்த்து விட்டு எழுதுறீங்க...
என்னங்கத்தா பண்றது...
இலவசத்துக்கு செத்தபயலுங்க நம்ம ஆளு!
சினிமா மாதிரியான விஷயங்களால் அழிவது தெரியாமல் இருக்கான்.
நீங்க பார்த்துட்டு.. சொன்ன அதே மாவட்டத்துலேயும் தினக்கூலி 15க்கும் 25க்கும் வேலை பார்த்துட்டு தினம் சினிமாவுக்கு போற, ஆண்களும் பெண்களையும் காட்டவா?
"நிலமற்ற விவசாயிகளுக்கு 2ஏக்கர் தாரோம்"னு தி.மு.கழகம் சொல்லி இருக்கு.. ஆனா நம்ப ஆளு எதைப்பத்தி அதிகமா விவாதிக்கிறான்/கவலைப் படுறான்? டீ.வி பத்திதான் அவனுங்க கவல. நீங்க வேறு எதனாச்சும் எழுதலாம். கல்வியால் அடித்தட்டு மக்கள் விழிப்புணர்வு அடையாத வரை.. விசு-க்கள்.. அரட்டை அரங்கம் நடத்தட்டும்... கவிதா போன்றோர் அதனை பார்த்து அழுது வடித்து உணர்ச்சி பொங்க பதிவு போடட்டும்... என் போன்றோர்.. இப்படி எழுதிவிட்டு போகட்டம்.
வேற..என்னத்த சொல்ல...
இவ்ளோ எழுச்சியா பேசின அந்த இளைஞர் என்ன பண்ணினாராம்? அதப் பத்தி எதுனா சொன்னாரா??
அணிலு, உனக்கெல்லாம் பிரண்டா இருக்க நம்மால முடியாது, ஒழுங்கா அக்கான்னு கூப்பிடு.. :) என் பிரண்டு கவிதாவைக் கேட்டதா சொல்லு...
//தினக்கூலி 15க்கும் 25க்கும் வேலை பார்த்துட்டு தினம் சினிமாவுக்கு போற, ஆண்களும் பெண்களையும் காட்டவா?//
சினிமா மட்டும் இல்லை, குடி, பெண் என்று போகிறவர்களும் உண்டு. உதாரணத்திற்கு நல்லவைகளை மட்டும் எடுத்து கொள்ளுங்கள் பாலா
//கல்வியால் அடித்தட்டு மக்கள் விழிப்புணர்வு அடையாத வரை.. விசு-க்கள்.. அரட்டை அரங்கம் நடத்தட்டும்... கவிதா போன்றோர் அதனை பார்த்து அழுது வடித்து உணர்ச்சி பொங்க பதிவு போடட்டும்... என் போன்றோர்.. இப்படி எழுதிவிட்டு போகட்டம். வேற..என்னத்த சொல்ல... //
இப்படியே எல்லோரும் “டும்..டும்.. னிட்டு போனா..என்ன ஆகறது பாலா..?..
பொன்ஸ், அவரு என்ன செய்தார் என்பதை விட, எழுதின நான் என்ன செய்தேன்னு யோசிக்கிறேன்-கவிதா
பொன்ஸ் யக்கா...எவ்ளோ ஷொக்கா உங்கள “மச்சி..என்ன செளக்கியமா?.. ன்னு கேட்கலாம்னு இருந்தேன்.. இப்படி கவுத்துட்டீங்களே?!! ஆமா நீங்க மட்டும் அணிலு அணிலு கூப்பிடலாமா... எங்க ஆத்தா எனக்கு எவ்ளோ அழகா..அனிதா ன்னு பேர் வச்சிருக்கு... அனித்துகுட்டி ன்னு கூப்பிட்டா குறஞ்சா போய்டுவீங்க..?!! -அனிதா
வெப்பில் பிலிம்
ஓவராய் காட்டுபவர்க்கும்
ஊர்வதை ஊதி பெரிதாக்கி
பறப்பதாய் சொல்பவர்க்கும்
சான்ஸ் தேடித்தேடி
சந்திலே சுயபுராண சிந்து பாடுபவர்க்கும்
இலக்கிய சுக்கை
இடித்து குடித்துவிட்டதாய்
இறுமாந்து இருப்பவர்க்கும்
இலக்கண பேய்பிடித்து
தலைகனம் ஏறியவர்க்கும்
ஆரிய திராவிட மாயையில்
அல்லலுற்று உழல்பவர்க்கும்
தலித்தை சுரண்டியபடி
தலித்தியம் பேசுபவர்க்கும்
பெண்டாட்டியை மதிக்காமல்
பெண்ணியம் பாடுபவர்க்கும்
ஜால்ரா அடித்தபடி
ஜோரா கைதட்டுபவர்க்கும்
தமிழ் வாந்தி
தமிழ் மலஜலம் கழிக்க சொல்வோர்க்கும்
முற்போக்கு பேசுகிற
பிற்போக்குவாதிக்கும்
இலவசமாய் எமது பிராண்ட்
'தமிழ் ஆப்பு' வைக்கப்படும்.
ஆப்பு அவர்களே,
ஒரே மேட்டரை ஒவ்வொரு blog லும் போட்டு
ஓவராய் அருத்தெடுப்போரையும்,
வேறேதும் எழுத தெரியாமல்
திண்டாடி தெரு சுத்துபவர்களுக்கும்
இந்த lines ஐயும் உங்க பாட்டுல சேர்த்துகோங்க, உங்களுக்கு பொருத்தமா இருக்கும் !
அட! இவ்ளோ serious-ஆ கூட உங்களுக்கு யோசிக்க தெரியுமா? கலக்கறீங்க போங்க. அனித்துகுட்டி வேஸ்ட்ங்க. போன பதிவு பாத்தீங்கல்ல. இவ்ளோ serious matters -லாம் இருக்கப்பொ பாட்டு ரொம்ப அவசியமா அதுக்கு. கொஞ்சம் புத்திமதி சொல்லி திருத்துங்க கவிதா.
நண்பர் பாலபாரதி சொல்ற மாதிரி, எல்லோரும் புலம்பறதோட நிறுத்திக்கறோம். ஏன்னா அதுதானே நம்மால ஈஸியா முடியும். வழக்கம் போல இந்த தேர்தல்லயும் மக்கள்தான் தோக்கப்போறாங்க. இதுக்கு என்ன செய்யலாம்னு ஆளாளுக்கு யோசிச்சு ஒரு முடிவெடுத்து ஏதச்சும் செய்லலாமே. நான் ரெடி. வேற யாராச்சும் ரெடியா?
இப்படி எழுதி எழுதி பேசிப் பேசி கருத்துகள் நம் மனதில் வடிவம் பெறலாம். அடுத்த முறை ஒரு ஏழை
சிறுவன் மேசை துடைக்க வரும்போது, உணவக உரிமையாளரிடம் தட்டிக் கொடுக்க நினைவூட்டலாம். அடுத்த
முறை, கையூட்டு கேட்கும் அரசு ஊழியரிடம், தர மறுக்கும் மனத்திண்மையை கொடுக்கலாம்.
நாம் எழுதி என்ன ஆச்சு என்று சோர்ந்து விடாமல், தப்பு என்று தெரிவதை தவறாமல் எழுதுங்கள். விடியல்
கண்டிப்பாக வரும்.
நன்றி அருள், இந்த தேர்தல்ல ஏதாவது செய்யனும் தான்..நான் ரெடி-கவிதா
அருள்,என்ன துரத்தரதுன்னே முடிவு பண்ணிடீங்களா. வேணாம்..! எதா இருந்தாலும் பேசி தீத்துக்களாம்..சரியா?!!-அனித்துகுட்டி
என் அன்புக்குரிய அணில் குட்டியே.. - இப்போ சரியா அணில்?
எப்படி ,எப்படி , எப்படி அருளோட கருத்த முடக்காம விட்டுட்டீங்க?? !!!
அருள் என்ன செய்ய முடியும்னு நினைக்கிறீங்க??
பொன்ஸ் அக்கா..அருள ஒன்னும் செய்ய முடியல ஒரு முடிவோடதான் இருக்காரு..அதான்..பேச்சு வார்த்தைக்கு அழைச்சிருக்கேன்..ஏதாவது workout ஆகுதான்னு பார்ப்போம்..
நன்றி, சிவகுமார்ஜி, உங்கள் கருத்துக்கு நான் எழுதிய பின்னூட்டத்தை அழித்துவிட்டது வருத்தமாக இருந்தது..ஏன்.??
உணர்ச்சி பொங்க எழுதியிருக்கின்றீர்கள். நமது மக்கள் எப்போது தான் திருந்த போகின்றார்களோ தெரியவில்லை. கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு கட்சியினர் கொடுக்கும் பணத்தினை பெற்றுக் கொண்டு அந்த கட்சிக்கு தன்னுடைய வாக்குகளை கொடுத்து தன்னையும், தன்னுடைய சுற்றாரையும், நாட்டையும் விழி பிதுங்க வைத்து விட்டு அன்று மட்டும் கேலியும், குடியுமாக(டாஸ்மாக்) திரியும் இந்த குடிமகன்களை என்ன செய்வது? இந்த குடிமகன்கள் அதிகமாக இருப்பதால் படித்தவர்களின், நல்லவர்களின், அன்பர்களின் வாக்குகளின் பாச்சா பலிக்காமல் போய் விடுகிறதே இதை எங்கே போய் சொல்ல?
கூரையில் பற்றும் தீ
சட்டையில் பற்றும் வரை
எவனுமே
சப்தம் இடுவதில்லை
- வைரமுத்து
//எத்தனை காலம் ஆனாலும் அரசாங்கம் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருக்க காரணம் என்ன?. //
கூரையில் பற்றும் தீ
சட்டையில் பற்றும் வரை
எவனுமே
சப்தம் இடுவதில்லை
- வைரமுத்து
எந்த பின்னூட்டம்? எந்தக் கருத்து? நான் எதுவும் அழிக்கவில்லையே?
பொன்ஸ், உடனே பெரிசா எதும் செய்யனும்னு யோசிச்சா வேலைக்கே ஆகாது. சிவகுமார் அவர்கள் சொன்னதுபோல் சின்ன சின்ன விஷயங்களாகத்தான் மாற்றவேண்டும்.
பாலபாரதி, கல்வியால் அடித்தட்டு மக்கள் விழிப்புணர்வு அடைந்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கிறீர்களா? எனக்கு அப்படித்தோன்றவில்லை. படிப்பை விட தனிமனித ஒழுக்கம் வரவேண்டும் எல்லோருக்கும்.
படித்த நாமே இன்னும் டிராபிக் சிக்னல்களை வயலேட் செய்கிறோம் தானே. டாகுமெண்ட்ஸ் இல்லாமல் இரவில் பயணித்து விட்டால் போதுமென்று போலீஸுக்கு லஞ்சம் தருகிறோம் தானே. எப்போதச்சும் படத்துக்கு வர்றோம், பாக்காம போறதான்னு பிளாக்ல டிக்கெட் வாங்குகிறோம் தானே. நமக்கு வேலை ஆனால் போதுமென்று 'பார்மாலிட்டீஸ் எல்லாம் பண்ணிக்கலாம் சார்...' என்று பல இடங்களில் லஞ்சம் தர தயாரய் இருக்கிறோம் தானே. எப்படி எத்தனையோ...
நம்ம லெவலுக்கு நாம் செய்யறோம். அரசியல் வாதிங்க அவங்க லெவெலுக்கு செய்யறாங்க. நாம அவங்க இடத்துக்கு போனா நாமும் அந்த லெவலுக்கு செய்யலாம்! சரி தானே.
அருள், நன்றி-பொன்ஸ் உங்களின் கருத்தை ஏற்பார்கள் என நம்புகிறேன்.
நிலவுநண்பரரே நன்றி, நீங்கள் சொல்லவது சரியே..தனக்கெனும் போது ஏதாவது நடக்கலாம்..ஆனால் தன்னுடையதாகவே ஆக்கிகொள்கிறார்களே!..
தமிழ் குழந்தைக்கு நன்றி, உங்களை போன்றே நாம் அனைவருமே கேள்வி குறியுடனே நிண்று விடுகிறோம்..என்ன செய்வது?..(மறுபடியும் கேள்விகுறி)
சிவகுமார்ஜி, உங்கள் பதிப்புகளை பார்த்துவிட்டு பதிலளிக்கிறேன்..
அனிதா,
உங்க அக்கா கிட்ட சொல்லு அரட்டை அரங்கம் பாத்துட்டு டென்ஷன் ஆக வேண்டாம் அப்படின்னு. அது சும்மா டூபாக்கூருன்னு நம்ம பசங்க சொல்லி இருக்காங்க. அங்க பேசறத்துக்கு முன்னாடி பயிற்சி அப்படின்னு ஒரு இரண்டு நாள் நம்ம விசுவும் அவரது குழுவினரும் வகுப்பு எடுப்பாங்க. அப்ப சொல்லுவாங்களாம் ஒரு விஷயத்தை சொல்லும் பொழுது சோகம் பிழிய பிழிய சொல்லணும் அப்படின்னு அப்பத்தான் பாக்குறவங்க சோகமாயி நீங்க அழ அவங்க அழ அப்படியே லேடிஸ் ஆடியன்ஸ நம்ம பக்கம் இழுக்கலாம் அப்படின்னு. அந்த நண்பன் அரட்டை அரங்கத்துல கலந்துக்கொண்டவன் அவன் சொன்னான மச்சான் நம்ம விசுசாரு ஒரு பொண்ணு அத்தோட சோக கதையை சொல்லும் பொழுது சொன்னாராம் இந்த எமோஷன் போதாதுமா இன்னும் கொஞ்சம் சோகத்தை கூட்டு அங்க யாராவது நல்லா பேசினாலும் நம்ம விசு அய்யா அவரை விட நல்லா பேசிடாதபடி பாத்துகுவாராம். அப்படியே மேடையில் நல்லா பேசிட்டா டிவியில அவங்க தெரிய மாட்டாங்களாம். இப்படி போகுது சேதி இதை எல்லாம் ஒரு பெரிய விஷயமா எடுத்து பீல் பண்ணாதிங்க.(நான் நினைக்கிறேன் தமிழ்நாட்டு பெண்களுக்கு பீல் பண்றத்துக்கு வேற எதும் இல்லை அப்படின்னு ஒண்ணு நாடகத்தை பாத்து பீல் பண்றாங்க இல்லை இந்த மாதிரி டூபாக்கூரு நிகழ்ச்சிகளை பாத்து பீல் பண்றாங்க. புருஷங்க அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்க போல வீட்டுகார அம்மாக்களை குடும்ப விஷயங்களை பத்தி பீல் பண்ணவே விடமாடேங்குறாங்க போல :)) .)
அதுக்காக நான் நீங்க போட்டு இருப்பது போல எதுவுமே இல்லை அப்படின்னு சொல்லலை அவங்க பொரும்பாலான விஷயங்களை மிகைப்படுத்து இருப்பாங்க.
//பாலபாரதி, கல்வியால் அடித்தட்டு மக்கள் விழிப்புணர்வு அடைந்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கிறீர்களா? எனக்கு அப்படித்தோன்றவில்லை. படிப்பை விட தனிமனித ஒழுக்கம் வரவேண்டும் எல்லோருக்கும்.
படித்த நாமே இன்னும் டிராபிக் சிக்னல்களை வயலேட் செய்கிறோம் தானே. டாகுமெண்ட்ஸ் இல்லாமல் இரவில் பயணித்து விட்டால் போதுமென்று போலீஸுக்கு லஞ்சம் தருகிறோம் தானே. எப்போதச்சும் படத்துக்கு வர்றோம், பாக்காம போறதான்னு பிளாக்ல டிக்கெட் வாங்குகிறோம் தானே. நமக்கு வேலை ஆனால் போதுமென்று 'பார்மாலிட்டீஸ் எல்லாம் பண்ணிக்கலாம் சார்...' என்று பல இடங்களில் லஞ்சம் தர தயாரய் இருக்கிறோம் தானே. எப்படி எத்தனையோ...//
ஆமாம் அருள்!
நான்ம் சொல்வது அடித்தட்டு மக்களின் விழிப்புணர்வு குறித்து.. நீங்கள் சொல்லியது மேல் தட்டாக பிறந்து.. அப்படியே வளர்ந்து வருபவர்களைப் பற்றி!
சமூகத்தில் எவன் ஒடுக்கப்பட்டவனாக இருக்கிறானோ.. அவனே இச்சமூகத்தின் உண்மையான விடுதலைக்கு போராடமுடியும்.. அவனாளேயே அது சாத்தியமும் ஆகும்...
மற்றபடி நீங்கள் சொல்லும் சட்டமரபுகளை(கவனிக்க சமூக மரபல்ல..) மீராத எத்தனையே நபர்களின் அடியேனும் ஒருவன்!
நீங்கள் சொல்லுவது "கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களுக்கு மட்டுமே பொருந்தும்"
நன்றி சந்தோஷ், விஷயம் அரட்டை அரங்கம் சரியா தவறா என்பது அல்ல. அதில் சொல்லப்பட்ட கருத்து உண்மையா, இல்லையா என்பதுதான். அதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். நான் ஒரு சமையல் நிகழ்ச்சி DD யில் செய்தேன். நான் எல்லாமே வீட்டிலேயே செய்து கொண்டுபோய், கேமரா முன் அப்போது தான் செய்வது போல் செய்து காட்டினேன், எப்படி பேச வேண்டும், எதை பேசக்கூடாது என்றும் எனக்கு விளக்கப்பட்டது..ஒரு சாதாரண சமையல் நிகழ்ச்சிக்கே ஒத்திகை இருக்கிறது.. திரைக்கு பின்னால் இருப்பதையும், தவறுகளையும் விட்டு தள்ளுங்கள்.. பேசி கருத்து உண்மைதானே..?!!
அனிதா :- சந்தோஷ், //.(நான் நினைக்கிறேன் தமிழ்நாட்டு பெண்களுக்கு பீல் பண்றத்துக்கு வேற எதும் இல்லை அப்படின்னு ஒண்ணு நாடகத்தை பாத்து பீல் பண்றாங்க இல்லை இந்த மாதிரி டூபாக்கூரு நிகழ்ச்சிகளை பாத்து பீல் பண்றாங்க. புருஷங்க அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்க போல வீட்டுகார அம்மாக்களை குடும்ப விஷயங்களை பத்தி பீல் பண்ணவே விடமாடேங்குறாங்க போல :)) .)//
இத சொன்னதுக்காகவே உங்க வீட்டுல இருக்கறவங்க உங்கள பார்த்து feel பண்ற அளவுக்கு கவிதாக்கிட்ட வாங்கி கட்ட போறீங்க...உங்களுக்காக waiting sir..அடுத்த இந்திய பயணம் எப்போதோ?!!
சிவகுமார்ஜி, உங்களின் "எம் ஜி ஆர் என்ற "அவமானம" என்ற பதிப்பில் தான், என் கருத்து, முதல் பார்த்த போது இருந்தது, உங்களின் பதிலுக்காக அடுத்தநாள் பார்த்தபோது இல்லை..ஆனால் இப்போது இருக்கிறது.. தவறு என் பார்வையில் இருப்பின் மன்னிக்கவும்.
அரட்டை அரங்கம் விசு அதிமுகப் போயிட்டாராமே அப்படியா?
நன்றி தேவ், ரொம்ப அவசியமா நாம எல்லாம் update செய்து கொள்ள வேண்டிய விஷயம்..தகவலுக்கு நன்றி
அவசியம்னு சொல்லாதீங்க கவிதா.. கட்டாயம்.. அது தான் தமிழாம்.. குமரன் சொல்லி இருக்காரு:)
//விஷயம் அரட்டை அரங்கம் சரியா தவறா என்பது அல்ல. அதில் சொல்லப்பட்ட கருத்து உண்மையா, இல்லையா என்பதுதான். //
இதத் தாங்க சந்தோஷும் சொல்லறாரு.. நல்லா பேசறவங்க பேசும் விஷயம் எதுவா இருந்தாலும் இருட்டடிக்கப் படுகிறது. எமோஷன் வேணும்ங்கரதுக்காக எது பேசினாலும் நாம கேட்டுகிட்டு இருக்க முடியுமா?
இன்னிக்கு இட்லி வடை பதிவுல பாருங்க. விசுவே அரசாங்கம் சில தவறுகளைச் சரி செய்தது ஆனால் அதை சன்டிவி காட்ட விடவில்லை என்று சொல்கிறார். இதுனால தான் நான் அரட்டை அரங்கத்தை நம்புவதில்லை
இல்ல பொன்ஸ், நீங்களும், சந்தோஷும் அரட்டை அரங்கத்தில் விஷயங்கள் மறைக்கப்படுவதையும், மிகைப்படுத்திக்காட்ட படுவதையுமே கவனிக்கிறீர்கள், நான் எழுத நினைத்தது, எழுதி இருப்பது.. நாட்டில் நடக்கிற சில கேடுகளைதான்..! இதில் சொல்ல பட்டிருக்கும் விஷயம் கூட மிகைப்படுத்த பட்டதாகவே வைத்து கொள்ளலாம்..ஆனால் இப்படியெல்லாம் நடக்கிறது என்பது உண்மை. நாம் அரட்டை அரங்கம் பற்றி தனி பதிப்புப் போட்டு, விவாதிப்போமே..அதில் நிச்சயம் நானும் உங்கள் கட்சியே!.
ம்ம் சரிதான்.. 50 காசு குறைப்பது.. அவர் எடையில் செய்யும் குல்.மால்'க்கு.. 1/2 கிலோ வாங்கினால்.. 300 கிராம் தான் இருக்கிறது ஐயா அரையணா அவர்களே!
//ம்ம் சரிதான்.. 50 காசு குறைப்பது.. அவர் எடையில் செய்யும் குல்.மால்'க்கு.. 1/2 கிலோ வாங்கினால்.. 300 கிராம் தான் இருக்கிறது ஐயா அரையணா அவர்களே! //
இது எப்படி இருக்குன்னா அவனை நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துறேன் அப்படிங்கிற மாதிரி இருக்குது. காய்கடைக்காரனை கேட்டா இந்த பொம்பளைங்க பேரம் பேசி பேசி வாங்கறாங்க அவங்களை நிறுத்தச்சொல்லு நாங்க எடை ஏமாற்றுவதை நிறுத்துகிறோம் அப்படிங்க்கிறாங்க.
இந்தியாவுல இதைவிட்க்கொடுமை எல்லாம் நடந்துகிட்டு தான் இருக்கு என்னங்க பண்றது கொஞ்ச நாள் ஆகும் எல்லாம் சரி ஆவதற்கு. 100 ரூபாய்க்கும் கலர் டிவீக்கும் ஆசைப்பட்டு ஓட்டுப்போட்டா இது தான் கிடைக்கும். மக்கள்கிட்ட விழிப்புணர்வு வேணுங்க தலைவர்களை சொல்லித்தப்பு இல்லை.
//இத சொன்னதுக்காகவே உங்க வீட்டுல இருக்கறவங்க உங்கள பார்த்து feel பண்ற அளவுக்கு கவிதாக்கிட்ட வாங்கி கட்ட போறீங்க...உங்களுக்காக waiting sir..அடுத்த இந்திய பயணம் எப்போதோ?!! //
அனிதா அக்கா கிட்ட சொல்லிவையி நான் தனி ஆள் இல்லை எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா வ.வ சங்கமே என் பின்னாடி திரண்டு வரும். கைப்ஸ், தேவு, ஜொள்ளுபாண்டி, பொன்ஸ், சிபி,கார்த்திக் இவங்களை எல்லாரையும் அடிச்சிட்டு தான் என் மேல கைவைக்க முடியும்(அதுக்குள்ள நான் நல்ல இடமா பாத்து ஒளிஞ்சிகுவேன்.)
சந்தோஷ், என்ன சொல்லவரீங்க..
ஓட்டு போடுங்க..ஆனா கொஞ்சம் திருடரவங்களுக்கு போடுங்கன்னு சொல்றீங்க..கொஞ்சமா 100 ரூ திருடரவங்க தான் பின்னால நல்லா வளர்ந்து கலர் டிவி கொடுக்கற ரேன்ஞ்க்கு போய்டறாங்க.. ஓட்டு போட மாட்டோம்னு சொன்னா, டிவி பார்க்கற சோம்பேறிங்கன்னு சொல்றீங்க..
டிவி matter க்கு வருவோம்.! அது என்னங்க நாங்க டிவி பார்க்கறதுல அப்படி உங்களுக்கு எரிச்சல்..நாங்க மட்டுமா பார்க்கிறேஎம், மாலை ஆபிஸ் விட்டு வந்து ஆண்கள் தூங்க போற வரைக்கும் பார்க்கறது என்ன.. எங்களவிட அதிகமா டிவி யில மூழ்கி முத்தெடுக்கறது ஆண்கள் தான்..இதுக்கு ஒரு தனி பதிப்பே போடலாம்..நீங்களே பாருங்க..வந்த 15 நாள்ல எல்லா மெகா சீரியலும் பார்த்து comment அடிச்சிருக்கீங்க.. என்னவோ டிவி பார்க்கறது உலகமகா தப்பு மாதிரி எழுதறீங்க...-கவிதா
ஹா ஹா...என்ன சந்தோஷ்..போதுமா.??.. இனிமே டிவி ன்னு மறந்து போய் கூட சொல்லக்கூடாது ok va.. ஆமா.. என்னப்பு ஒளிஞ்சிக்குவேன்னு எழுதி இருக்கீங்க..அப்ப உங்களுக்கு கவனிக்க நானே போதும் போல... நீங்களே இப்படின்னா உங்க..கூட்டாளிகளும் இப்படிதான் ஒருத்தர் பின்னாடி ஒருத்தரா ஒடி ஒளிய போறாங்க..so, very easily I can trap you...!-அனித்துக்குட்டி.
//இது எப்படி இருக்குன்னா அவனை நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துறேன் அப்படிங்கிற மாதிரி இருக்குது. காய்கடைக்காரனை கேட்டா இந்த பொம்பளைங்க பேரம் பேசி பேசி வாங்கறாங்க அவங்களை நிறுத்தச்சொல்லு நாங்க எடை ஏமாற்றுவதை நிறுத்துகிறோம் அப்படிங்க்கிறாங்க. //
சரி, நாங்க நிறுத்தறோம்..சந்தோஷ், ஆனா அவங்களையும் நீங்க நிறுத்த சொல்லுங்க..(ஓ..நீங்க சொன்னதியே திருப்பி சொல்லிட்டேனோ.?)
சந்தோஷ், என்னங்க, பச்சோந்திகளோடவே ஒரே பாடா இருக்கு.. இப்படி அணிலை வேற சங்கத்துக்கு எதிரா திருப்பி விடறீங்க..
அர்த்தமுள்ள பாட்டு பாடும் அணில் குட்டி, உன்னை தேர்தல் பிரசாரத்துக்குக் கேட்டது நாந்தாம்பா... இப்படி எல்லாம் எங்க சங்கத்துக்கே எதிரா அணி(ல்) திரட்டுறியே.. நியாயமா?
சரி.பொன்ஸ்..நீங்க சொல்றீங்க..என் அருமை பெருமை எல்லாம் தெரிஞ்சவங்க..உங்க தங்க முகத்துக்காக சந்தோஷை சும்மா விடறேன்... பொழச்சிபோகட்டும்..! பார்த்து நடந்துக்க சொல்லுங்க.! -அனித்துகுட்டி
அன்பர் பாலா சொல்வதை போன்று இது விழிப்புணர்வு படலத்தின் மூலமே களையக்கூடிய விசயம்மென்று நானும் கருதுகிறேன்...தோழியே!
காரணம் குழந்தைகளின் மனதில் கல்வியின் மகிமையை உணரவைத்து விட்டால் (அதர்க்காக என்னன்னா முடியுமோ அத்தனையும் செய்யலாம்), நாம் மீன் பிடித்து (என்ன கப்பு அடிக்குதா) அவர்களுக்கு ஒரு வேளை சமைக்க கொடுப்பதை விட, எப்படி தானகவே மீன் பிடிப்பது என்று ஒரு முறை கற்றுக் கொடுப்பது நீண்ட தொலைவு செல்லும்மல்லவா?
அதனால் குழந்தைகள்தான் உங்களின் இலக்காக இருக்க வேண்டும், ஒரு இயக்கம்மென்று ஆரம்பித்தால் அதில் இந்த தெகாவும் வருவான். சிந்தியுங்கள்...மூளை சும்மாதானே இருக்கிறது நம்மில் நிறைய பெயருக்கு.
நன்றாக எழுதுகிறீர்கள், எழுத்தில் ஒரு வேகமிருப்பதை உணரமுடிகிறதி.
அன்பு,
//அதனால் குழந்தைகள்தான் உங்களின் இலக்காக இருக்க வேண்டும், ஒரு இயக்கம்மென்று ஆரம்பித்தால் அதில் இந்த தெகாவும் வருவான்//
நன்றி தெகாஜி, உங்களின் கருத்தை யோசித்தேன், ஆமோதிக்கிறேன்..
முயற்சியும் செய்ய இருக்கிறேன்.. எனக்கு என் கடமைகளை முடிக்க இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் தேவை படிகிறது.. நிச்சயம் செய்வேன்..
Post a Comment