Blog நண்பர் ஒருவர் உதவியுடன் நானும் அணில் குட்டி அனிதாவும் இந்த Blogger க்கு அறிமுகம் ஆகிறோம். உங்கள் அனைவரது ஆதரவையும் எதிர் பார்க்கிறோம். ஆமா... இந்த அணில் குட்டி யாருன்னு பார்ககறீங்களா? நம்ம பாதுகாப்புக்குதான்... ..அடிக்கரவங்க திட்டரவங்க எல்லாம் அணில் குட்டியோடு நிறுத்திகிட்டுமேன்னு தான் உஷார் பண்ணி கூட்டிட்டு வந்து இருக்கேன். சும்மா ஒன்னும் இல்லைங்க...! மாத சம்பளத்துக்கு fix பண்ணியிருக்கேன் with all benefits. சம்பளம் மட்டும் இல்லைங்க, இவங்க கொரிக்க காய், பழம், ஜூஸ் எல்லாம் Supply செய்யரேன்னு agreement போட்டு இருக்கேன். அதனால கொஞ்சம் பார்த்து நடந்துகோங்க. ஏடா கூடமா திட்டி துரத்தி விட்டுராதீங்க.. சென்னையில அணில் குட்டி கிடைக்கறது ரொம்ப ரொம்ப கஷ்டம்ங்க.. ..
ஏன் அணில் குட்டி?! ஒரு நாய் குட்டியோ பூனை குட்டியோ கிடைக்கலயான்னு நீங்க நினைக்கலாம். சின்ன வயசுலேர்ந்து அணில் குட்டினா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்கு பின்னாடி ஒரு flash back இருக்கு.. அந்த கண்ணீர் கதையை blog நண்பர்களுக்கு நிச்சயம் சொல்லுகிறேன். முதல் பதிப்பிலேயே உங்களை எல்லாம் அழவைக்க வேண்டாம்னு பார்க்கிறேன்.
நானும் அணில் குட்டி அனிதாவும் சேர்ந்து, சென்னை நகரை ஒரு சுற்று சுற்றி வந்தோம்..இதோ ..
கவிதாவும், அணில் குட்டி அனிதாவும் அறிமுகம்
Posted by : கவிதா | Kavitha
on 21:37
Labels:
கதம்பம்
Subscribe to:
Post Comments (Atom)
6 - பார்வையிட்டவர்கள்:
வாங்க.. வாங்க..
மூன்று பதிவு போட்டு தமிழ்மணத்தில் பதிவும் செய்ங்க...
வாழ்த்துக்கள்.
தோழன்
பாலா
நல்லா சுத்தி வந்தீங்க சென்னையை..
வித்தியாசமான எண்ணங்களோடு இருக்கும் தங்களின் சென்னை பார்வைக்கு வாழ்த்துக்கள்.
//சின்ன வயசுலேர்ந்து அணில் குட்டினா எனக்கு ரொம்ப பிடிக்கும்.//
அட! எனக்கும்.
Thanks seenu..
//சின்ன வயசுலேர்ந்து அணில் குட்டினா எனக்கு ரொம்ப பிடிக்கும்.//
ok. ஆனால அதுக்கு அனிதானு ஏன் பேர்வச்சீங்க? அதுக்கு என்ன flash back?
வாங்க கவிதா, வாங்க வாங்க அணில்குட்டி.
சின்ன வயசில் எங்க வீட்டு தோட்டத்தில் எக்கசக்கமான அணில்கள். சில நேரம் கண் திறக்காத குட்டிகள் எங்க தோட்டத்தில் கீழே விழுந்து கிடக்கும், அவற்றை வீட்டுக்கு கொண்டு வந்து பால் ஊற்றி, பழம் கொடுத்து வளர்ப்போம், பெரியது ஆன பின்னர் விட்டு விடுவோம். நான் ஆசையாக பார்த்த பெரிய பெரிய கொய்யா பழங்களை திருட்டுத்தனமாக சாப்பிட்டு போயிடும் :(.
Post a Comment