நாத்திகம் பேசவில்லை, நம்பிக்கை உண்டு என்பதை விட, அமைதி வேண்டி கோயில்களுக்கு செல்கிறேன் என்பது உண்மை. கண்களை மூடி கடவுளை வணங்கும் பழக்கமும் இல்லை, காரணங்கள் மூன்று. 1. அற்புதமான அலங்காரம் 2. வேண்டும் என்று எதையும் கேட்பதில்லை. 3. மனசாட்சி க்கு மட்டுமே பயப்படுவது.
நம் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் நிச்சயமாக ஒரு நல்ல காரணம் இருக்கிறது என்பதை எப்போதும் நம்புகிறேன்.
வெகு நாட்களாக இது என் மனதை நெருடிக் கொண்டு உள்ளது. கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம்.. யாருடைய நம்பிக்கையயும் யாரும் தவறு என்று சொல்ல முடியாது. சொல்லவும் அவசியம் இல்லை. ஒருவருடைய நம்பிக்கை , அது தவறாக இருந்தாலும் அது அவர்களுக்கு சந்தோஷத்தை தருகிறது என்றால், அதை நாம் ஏன் கெடுக்க வேண்டும்.
சாஸ்த்திரம் சம்பரதாயம் அத்தனையும் அவசியம்தான், ஆனால் குடம் குடமாக பால், தயிர் அபிஷேகம், அது மட்டுமா? நெய், இளநீர், தேன், வெண்ணைய், பஞ்சாமிர்தம் அத்தனையும் அபிஷேகம் கண் குளிர பார்த்து விட்டு ப்ரகாரம் சுற்றி வந்தால் அத்தனையும் புறவழியாக சாக்கடைக்குள்.. ... பக்தர்கள் செலுத்தும் அபிஷேகப் பொருட்கள் அத்தனையும் ஊற்றப்படுகின்றனவா?. இல்லை உள்ளிருப்பவர்களால் உறிஞ்ச படிகின்றனவா?. தேவையான அளவு அபிஷேகம் செய்துவிட்டு, ஒவ்வொரு நாளும் ஒரு பகுதியை குழந்தைகள் காப்பகங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் அனுப்பலாமே..! கோயில் நிர்வாகமும், சமூக தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இனணந்து இதனை செயற்படுத்தி பலரின் பசியை போக்கலாமே! யாராவது முயற்சி செய்வார்களா?.
அணில் குட்டி அனிதா:- அய்யய்யோ! கவிதா என்ன ...சாமி விஷயத்துல விளயாடரீங்க..சாமீ கண்ண குத்திடும்..தெய்வ குத்தமாகிடும். இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வாரது..நாம நல்லா இருந்தா போதாதா?.. என்னங்க..நான் சொல்றது சரி தானே?. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்னு சொன்னது கவிதா மாதிரி ஆளுங்களுக்கு..நமக்கு இல்லைங்கோ! அம்மணி ஏதோ சொல்லரத சொல்லிட்டு போகட்டும். யாரு பட்டினி கிடந்தா நமக்கு என்னங்க?. இதெல்லாம் நீங்க serious aa எடுத்துக்காதீங்க. அம்மணி இப்படித்தான், நடக்காத விஷயத்தை பேசி நம்மள மாட்டி விட்டுருவாங்க. நீங்க என்ன சொல்றீங்க..?!!
எனக்கு பயந்துக்கிட்டு கருத்து சொல்லாம விட்டுராதிங்கண்ணா.. யக்கோவ் உங்களையும் தான்..! வரட்டா....?!!
கோயில்களில் பால் அபிஷேகம் பட்னியில் பல உயிர்கள்
Posted by : கவிதா | Kavitha
on 15:53
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
65 - பார்வையிட்டவர்கள்:
நன்றி தமியன்.
பாருங்க, இரண்டும் வெவ்வேறு உலகம். கோவில் வாசலில் குழந்தை அழுதால், சாமிக்கு அபிஷேகம் செய்யும் பாலை அந்த குழந்தைக்கு கொடுக்கலாம். அதற்காக, பாலாவிஷேகமே செய்யக் கூடாது என்பது சரியல்ல. அது, அவரவர் நம்பிக்கை. (பி.கு. நான் ஒரு நாத்திகவாதி).
சீனு.
நன்றி சீனு. நிறுத்த சொல்லவில்லை..கொஞ்சம் நிறுத்தி, இல்லாமைக்கு கொடுக்க சொல்லியிருக்கிறேன்.
Dear Kavitha,
I go with you cent percent. Also I had been arguing in this topic with my father and had been thinking to reform it. Nice suggestions you have made and hope the concerned authorities and public will think over it to some extent.
Luv,
Gayathri.
Gaya, நன்றி. உன் முந்தைய கருத்துக்களை பதிக்காதற்கு மன்னிக்கவும்.
hi,
இன்றுதான் உங்கள் பதிவுகளை படித்தேன். நண்பர்களிடம் உரையாடுவது போல் எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது. தொடருங்கள்.
இந்த பதிவினை ஒத்த கருத்துடன் நிவேதா அவர்கள் ஒரு பதிவினை எழுதியிருந்தார்கள். அதற்கு எழுதிய பின்னூட்டத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நேரம் வாய்ப்பின் படித்துப்பார்க்கவும்.
http://whatiwanttosayis.blogspot.com/2005/12/blog-post_16.html
நட்புடன்,
அருள்.
நன்றி அருள். உங்கள் & நிவேதாவின் பதிவுகளை படித்தேன். என்னை போலவே அவரும் எழுதியிருக்கிறார். என் பார்வையில் இப்படி செய்யலாம் என்று நினைக்கிறேன். காய்த்திரி போன்றவர்கள் அதை முயற்சிக்கிறேன் என்பது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. "நடைமுறை சாத்தியம் இல்லை", "அவரவர் நம்பிக்கை" போன்ற கருத்துக்களும் சரியே!. எனக்கு சரி என்று பட்டதை சொல்லியிருக்கிறேன். யாரையும் நாம் நமக்காக கட்டாயபடுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது பொது விஷயமாக இருந்தாலும் சரி. கருத்து பிடித்தவர்கள் ஒருசிலர் செய்யலாம் அல்லவா?..அது போதுமே..!
//கருத்து பிடித்தவர்கள் ஒருசிலர் செய்யலாம் அல்லவா?..அது போதுமே..! //- ஆமோதிக்கிறேன். நமக்கு சரி என்று தோன்றுவதை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லத்தானே எழுதச்செய்கிறோம். நன்றி Mrs. கவிதா.
காலகாலமாக எல்லோரும் கத்திக்கொண்டுதான் இருக்கிறோம் யார் கேட்கிறார்கள்.
இதற்கு காரணம் மற்றவர்களின் நம்பிக்கையில் தலையிடக்கூடாது என்று பலர் நினைப்பதே ...
திருடனின் நம்பிக்கை திருடினால் பணக்காரன் ஆகிவிடலாம் என்று,அதை நாம் அனுமதிக்கிறோமா?
அது போலத்தான் இது போன்ற பொருள் இழப்புகளை நம்பிக்கை என்ற பெயரில் அழிப்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு தேவையானதல்ல.
வளர்ந்த நாடுகள் செய்தாலும் குற்றமே.இன்னும் ஆப்ரிக்காவில் மனிதன் உனவில்லாமல் செத்துக்கொண்டுதான் இருக்கிறான்.
உண்டியலில் போடும் காசை அனாதை இல்லங்களுக்கு வழங்குங்கள்.
எந்த கடவுளும் மனிதனை பட்டினி போட்டு தன்னை பாலல் குளிப்பாட்ட சொல்லவில்லை.
இதை சொன்னால் நாத்திகவாதி என்று பெயர்...ஒரு வேளை உண்மையை பேசினாலே நாத்திகம் போலும்
நல்ல கருத்து கவிதா. இந்தப் பதிவைப் பாருங்கள். முடிந்தால் இதில் கலந்து கொள்ளுங்கள்.
http://abtdreamindia2020.blogspot.com/
மொதல்ல ஒரு +.
இந்த கும்பாபிஷேகமென்று யாக குண்டத்தில் போட்டு
எரிக்கும் பொருட்கள், ஒருத்தருக்கும் பிரயோசனமில்லாமல்
தங்கத்தால் வேய்ந்த கோவில்கள் இப்படி நிறைய இருக்கு
இந்த ஏழை(?) நாட்டில்.
Lots of life in Hungry... But we people wasting resources in Makeup, cell phone (who uses for status), the Car (who buy it for status). You all should abend/restrict those first. Do you all think these are waste of resources. Hope people are wasting money only few % (say in avarage less than 5%) like spending in temples/churches/Mosques etc.. But 30-50% going for status. did you stopped all these to comment others. :)
Before asking Milk for temple, how many you guys donating all your extra money to charity. How many are doing charity work. Anybody can write like this but who is really helping other people won't comment someone rather giving help.
Mr.Dharan spending half of his life and money for others (may be he is running charity), so he is commeting others... Since he is not getting help for charity he asked people to give the milk to his charity. Am I correct.
Since I am saying all these, I am spending 15% of money (After tax), for my charity for my village children education and sports.
Please see your back before commenting others beleifes to community. Change yourself, change your family, change your street. Dont be accuse the religions (All religion has same).
Nathigam - Its a simple joke now a days. The real nathigam is the one came from vallalar, patinathar etc in tamilnadu. EVR also brought nathigam but he did not create good principles for his followers except money making (and doing same athigam at home without knowing others). Example (K.Veeramani, M.Karunanidhi, K.Rasaram ...)
I would appriciate, if you could publish
கவிதா, உங்கள் கார், கம்ப்யூட்டரை வகையறாக்களை விற்று சேரிக்குழந்தைகளுக்கு உணவு, உடை, உறைவிடத்துக்கு உதவு செய்துவிட்டு, கடன் வாங்கிய காசில் வலை நேரம் வாங்கித்தான் இந்தப்பதிவை எழுதி இருக்கிறீர்கள் என நம்புகிறேன்.
//ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்//
ஆமா ஏழை எப்போ சிரிப்பான்? எதுக்கெல்லாம் சிரிப்பா? யாராவது விவரம் சொல்லுங்கப்பா?
ஒண்ணு தெரிஞ்சிக்கங்க.. நீங்க குறிப்பிடும் அந்த இல்லாதவர்களே கடன் வாங்கி கடவுளுக்கு நேர்த்திக் கடன் என இவ்வாறு செய்வது சாதாரணம். இதுல்ல நீங்க யாரைக் குற்றம் சாட்டுறீங்க?
கடவுளை விடுங்க நடிகர்களின் கட் அவுட் களுக்கும் பாலாபிஷேகம் நடக்கும் ஊர் நம்ம ஊர்ங்க...
கவிதா நல்ல முயற்சி...
Dear anony,
Many crores of rupees are squandered in this country by way offering gratitude to God and bribing Him to gain greater and greater wealth...
Decide for yourselves as to what you should thing of those who say there is God, that He is a the Preserver of Justice an that He is the Protector of All, even after seeing that the practice of Untouchablity in the form of man being banned from human sight and contac, from walkinh into the streets, from entering the temples and drawing water from a tank, is rampant in the land and yet that land is spared from being razed by an earthquake, burnt by the fiery lava of a volcano, engulfed in a deluge from the ocean, submerged in the chasm of the earth, or fragemented by thunder-storm...
என்னால் முடிந்த வரை தானம் செய்துகொண்டுதான் இருக்கிறேன்...
அரசியல் பற்றி பேசவேண்டுமானால் அரசியல்வாதியாக இருக்கவேண்டும் என்பது போல் இருக்கிறது உங்கள் வாதம்...
இங்கே charity நடத்துபவர்களில் பலரின் லட்சனங்கள் உலகுக்கே தெரியும்.
தனி மனிதன் அனாவசிய பொருள் அழிப்பை தவிர்த்தாலே அதுவும் ஒரு தானம் தான்..
கடவுள் மறுப்பு வாதம் செய்வதை நான் விரும்புவதில்லை...
விவாதம் நீண்டுகொண்டே போகுமே ஒழிய விடை கிடைக்காது.
நம்பிக்கை என்கிற பெயரில் செய்யப்படும் நாகரிக கோமாளித்தனங்கள் நிறுத்தப்படவேண்டும்...
இனி பெரியார் வரவேண்டும் என்கிற அவசியமில்லை...கவிதா அவர்களை போன்று சிந்திப்பவர்கள் பெருகிவிட்டார்கள்..இதைத்தான் பெரியார் எதிர்பார்த்தார்..
100% சதவீத குறையே இல்லாத மனிதன் மட்டும்தான் மற்ற விஷயங்களை விமர்சிக்க தகுதி உடையவன் என்றால் இங்கு யாருமே Blog எழுத முடியாது.
Every one has the right to refute any opinion. But no one has the right to prevent its expression..
கவிதா,
மிகவும் அருமையாக எழுதியிருக்கீங்க.
இதே சிந்தனை நம் அனைவர் மனதிலும் கட்டாயம் தோன்றும, ஆனால் நாம் அதை செயல்படுத்துகிறோமா என்றால் கண்டிப்பாக இல்லை. நம் வீட்டில் நாம் இதனை தொடங்க வேண்டும், நாம அதற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். அருகில் இருக்கும் அதே பிள்ளையார் சாமி தான் 100 கிலோ மீட்டருக்கு அப்பால இருக்கிறார், ஆனா நாம வீணாக எவ்வளவோ செலவு செய்து அங்கே போகிறோம், இது பழைய காலத்திற்கு சரியான ஒன்று, காரணம் அன்றைக்கு உலக அறிவும், மக்களின் பழக்க வழக்கங்களை அறிய பல இடங்களுக்கு போகச் சொன்னாங்க, சும்மா சொன்னா போவோம்மா, மாட்டோம், அதான் அந்த சாமிக்கு பவர் அதிகம், இந்த சாமியை கும்பிட்டா கூரையை பிச்சிக்கிட்டு பணம் கொட்டும் என்று சொன்னாங்க.
இன்றைக்கு அப்படி தேவையில்லை என்று சொல்ல சரியான ஆட்கள் வரவில்லை, உங்களை போன்று அனைவரும் சிந்தித்தால் நல்லது.
இப்படி நாம் ஒவ்வொருவரும் செயல்பட்டால் மட்டுமே இது போன்ற பழக்க வழக்கங்களை சமுதாயத்திலிருந்து நீக்க முடியும்.
நம் வீட்டில் முன்னால் பசியோடு குழந்தை அமர்ந்திருந்தாலும் நம் வீட்டில் இருக்கும் சாப்பாட்டை கொடுப்பது இல்லை, அதே நேரம் அது வீணாகி, வெளியே குப்பைத் தொட்டியில் வீசுகிறோம் தானே.
இதே மனப்பான்மை தான் என்னிடத்தில் மற்றும் எல்லோரிடமும் இருக்கிறது. இது போன்ற மனப்பான்மையை நாம் நம்மிடமிருந்து நீக்குவோம், வருங்கால சந்ததியினருக்கு நல்வழி காட்டுவோம், கட்டாயம் உலகம் மாறும், நம்புங்கள்.
மிக நல்ல பதிவு!!
மிக மிக நல்ல பதிவு. சிந்திந்தால் சிறப்பு வரும்
நன்றி!
//Please see your back before commenting others beleifes to community. Change yourself, change your family, change your street. Dont be accuse the religions (All religion has same).//
Dear Anony, Don’t you have name to write and identify yourself. Almost all the of my postings , I don’t encourage anony’s comments. (mugamilla manidhara neengal?)
Without knowing about me and others, how can you pre-judge & commented as “see your back” first of all,I don’t understand this. If a person basically doesn’t have such kind of nature, how can he/she writes?.. Don’t you know this. You yourself telling that you have a charity and helping others. It doesn’t mean that others who don’t do this. You are telling , others are not disclosing. “Tharumam saivathai Tharperumai adiththu kolla naan virumbavillai.” If I want to change my family, I can do this wihtout known by the 3rd person, If I want to change my street how I do, I do write like this, this is also a way to change the society. I am not against to our culture, community beliefs. But I request to give something to needy people also. I spent sometime in the temple really all the milk packets given by the devotees. 5 -6 packets not used and kept aside and after sometime it took by the Archagar’s to this home which is next to the temple. Is this correct?.. I am against to our beliefs but I like to say that we should not just do anything blindly. Try to understand the basic of the article. Thanks for your time , next time please come with your face (name)
My sincere thanks to Dev, Dharan, Paranjothi, Sivabalan, Malainadan. I have some problem of writing in tamil. Please excuse.
//இதே மனப்பான்மை தான் என்னிடத்தில் மற்றும் எல்லோரிடமும் இருக்கிறது. இது போன்ற மனப்பான்மையை நாம் நம்மிடமிருந்து நீக்குவோம், வருங்கால சந்ததியினருக்கு நல்வழி காட்டுவோம், கட்டாயம் உலகம் மாறும், நம்புங்கள்.//
well said, Thanks paramjothi
//கவிதா, உங்கள் கார், கம்ப்யூட்டரை வகையறாக்களை விற்று சேரிக்குழந்தைகளுக்கு உணவு, உடை, உறைவிடத்துக்கு உதவு செய்துவிட்டு, கடன் வாங்கிய காசில் வலை நேரம் வாங்கித்தான் இந்தப்பதிவை எழுதி இருக்கிறீர்கள் என நம்புகிறேன்.//
Dear Anony, Please write your comments with your face(name), "mugamilla udambai mundam endrea naam azahikerom.". Well, please read my other article "ungalin oru roobai". Your comments showing that how far worst enough to think about a matter. What you said in your comment is absolutely right , I sold my car, computer and donated to needy's, now ofcourse I am begging for food, could you please help me for my bread and butter for this dinner.
Come next time with your face.(name)
//Every one has the right to refute any opinion. But no one has the right to prevent its expression..//
Thanks Dharan, well said, Anony will understand, most probably he/she will come next time with their own face..?!! if he/she is really having it.
//நிறுத்த சொல்லவில்லை..கொஞ்சம் நிறுத்தி, இல்லாமைக்கு கொடுக்க சொல்லியிருக்கிறேன்//
சாமி சிலைகள் பெரும்பாலும் உலோகங்களாலும், பாசாணாங்களாலும் செய்யப்படுகின்றன (மருத்துவ மூலிகைகள் கொண்டு). அதனால், சாமி சிலைகளின் மேல் அபிஷேகம் செய்து, அதனை தீர்த்தமாக பருகுவார்கள். அதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.
இப்பொழுது அவை தேவை இல்லை என்பதால், மறு பரிசீலனை செய்யலாம்.
I read a post that said there are people in IIM's getting a salary of 1 lakh rupees per month while farmers are committing suicide .
Why is this related ? The argument of stopping abhishekams in temples is the same as above .
The temples are entitled to run with their religious beliefs as you will accept that companies are entitled to run their business while farmers commit suicide
//அது தவறாக இருந்தாலும் அது அவர்களுக்கு சந்தோஷத்தை தருகிறது என்றால், அதை நாம் ஏன் கெடுக்க வேண்டும்.//
humm.. interesting :)
http://sundaravadivel.blogspot.com/2005/01/blog-post_110526933125691119.html
நன்றி, குமரன், ஹரி, சுகா, சீனு, நக்கீரன் & அநானி.
//அதனால், சாமி சிலைகளின் மேல் அபிஷேகம் செய்து, அதனை தீர்த்தமாக பருகுவார்கள். அதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.//
சீனு, அதற்கு பால் தான் என்று அவசியமில்லையே..தண்ணீர் கூட போதுமே?!
நக்கீரன், உங்கள் கருத்துக்களை அப்படியே ஆமோதிக்கிறேன்.. அபிஷேகம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லையே?!! யாருடைய நம்பிக்கையையும் நான் சாடவில்லை.. நிறைய வீணாகாமல் பார்த்துக்கொள்ளலாம் என்கிறேன். மனிதர்களை மனிதர்கள் வணங்குவதை நிறுத்தும் வரை, போஸ்டர்கள், சினிமா போன்றவற்றை பேசி என்ன செய்வது.?!!
//உங்களின் நிறைவுக்கு பூ..இன்னொரு பக்தனுக்கு பாலபிஷேகம்..//
அலங்காரம் என்பது பூக்களால் மட்டுமே செய்வது இல்லை, பூக்களும் அலங்கரிக்க நாம் உபயோகிக்கிறோம்..
//The temples are entitled to run with their religious beliefs as you will accept that companies are entitled to run their business while farmers commit suicide //
Hari, i am not against to any religious beliefs, I am insisting not to waste thismuch amount of milk or other food items, which can be distributed parly to needys.
//சீனு, அதற்கு பால் தான் என்று அவசியமில்லையே..தண்ணீர் கூட
போதுமே?!//
நான் சொல்ல வந்தது வேறு. நம் மத சம்பிரதாயங்களை நான்
என்னவென்றே தெரியாமல் செய்துகொண்டிருக்கிறோம். அதனைப் புரிந்து
கொண்டு செய்தால், தானாகவே தேவையில்லாதது விலகிவிடும். உதா,
சாவு வீட்டில் பறையடிப்பார்கள். அந்தக் காலத்தில் தொற்று நோய்
அதிகம். அதனை உருவாக்கும் கிருமிகள் ஒரு Decibels மேலே உள்ள
இரைச்சலை கேட்டால் இறந்து விடும். பறை மேளங்களில் இருந்து வரும்
சத்தம் இந்த Decibels வேலே ஒலி எழுப்பும். அதனால், அந்த
கிருமிகள் இறந்து விடும். இது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட
ஒன்று. ஆனால், இன்றைய மருத்துவ உலகில் இது தேவை இல்லாத
ஒன்று.
HREF="http://jeeno.blogspot.com/2004/06/vs.html">என்
பதிவைப் பாருங்கள்.
(ஆஹா! எங்கோ ஆரம்பித்து என்கோ போய்விட்டேன்...)
//நான் சொல்ல வந்தது வேறு. நம் மத சம்பிரதாயங்களை நாம் என்னவென்றே தெரியாமல் செய்துகொண்டிருக்கிறோம். அதனைப் புரிந்து கொண்டு செய்தால், தானாகவே தேவையில்லாதது விலகிவிடும்.//
நன்றி சீனு, நான் புரிந்து கொண்டேன்.நீங்கள் கூறிய இந்த பறை சத்தம் எதற்கு என்பதற்க்கான விளக்கம், எனக்கு புதிது. எனக்கு என் வீட்டில் சொல்லி கொடுத்தது, சாவு இந்த வீட்டில் விழுந்து விட்டதை உணர்த்த எழுப்பப்படும் ஓசை என்பது. செய்திக்கு நன்றி.
//
சாவு வீட்டில் பறையடிப்பார்கள். அந்தக் காலத்தில் தொற்று நோய்
அதிகம். அதனை உருவாக்கும் கிருமிகள் ஒரு Decibels மேலே உள்ள
இரைச்சலை கேட்டால் இறந்து விடும். பறை மேளங்களில் இருந்து வரும்
சத்தம் இந்த Decibels வேலே ஒலி எழுப்பும். அதனால், அந்த
கிருமிகள் இறந்து விடும். இது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட
ஒன்று.//
எந்த விஞ்ஞானத்தில் என்று சொன்னால்.. நல்ல இருக்கும்.
முடிந்தால் சுட்டி கொடுங்க சீனு சார்..
// சாவு இந்த வீட்டில் விழுந்து விட்டதை உணர்த்த எழுப்பப்படும் ஓசை என்பது. //
ஐயையோ! கோவில்களிலும் இதை உபயோகிப்பார்கள்.
// சாவு இந்த வீட்டில் விழுந்து விட்டதை உணர்த்த எழுப்பப்படும் ஓசை என்பது. //
ஐயையோ! கோவில்களிலும் இதை உபயோகிப்பார்கள்.//
கோயிலுக்கும், வீட்டிற்கும் அமைப்பில் நிறைய வித்தியாசம் உள்ளதே..அதனால்..வீட்டில் அடித்தால் மக்கள் புரிந்து கொள்வார்கள்.
நன்றி, யாழிசை, உங்களுக்கு, சீனு தான் பதில் அளிக்க வேண்டும்
/////////
//
சாவு வீட்டில் பறையடிப்பார்கள். அந்தக் காலத்தில் தொற்று நோய்
அதிகம். அதனை உருவாக்கும் கிருமிகள் ஒரு Decibels மேலே உள்ள
இரைச்சலை கேட்டால் இறந்து விடும். பறை மேளங்களில் இருந்து வரும்
சத்தம் இந்த Decibels வேலே ஒலி எழுப்பும். அதனால், அந்த
கிருமிகள் இறந்து விடும். இது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட
ஒன்று.//
எந்த விஞ்ஞானத்தில் என்று சொன்னால்.. நல்ல இருக்கும்.
முடிந்தால் சுட்டி கொடுங்க சீனு சார்..
////////////
இங்கே நான் படித்தது.
http://www.yarl.com/forum/viewtopic.php?p=92881&sid=8b954303f327a71eff49b87cc9b8c9ce
"பண்டைய காலத்திலேயே மரணவீடுகளில் பறையடித்தார்கள் அதன் காரணத்தை விஞ்ஞானிகளும் ஒத்துக்கொள்கின்றார்கள். அதாவது குறிப்பிட்ட ஒரு ஒலி அலைகளுக்குமேல் செல்லும்போது கில கிருமிகள் கொல்லப்படுகின்றதாம். பண்டைய காலத்தில் தொற்று நோயால் இறந்தவர்கள் அதிகம் .அதற்காக பறையடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றார்கள் என்றால்
விடியறஆகாலையில் சாணம் தெளிப்பதுவும் கிருமிகளை அழிப்பதற்காத்தான். " - இப்படி போகிறது.
///At 12:53 PM, Suka பார்வையில்...
//அது தவறாக இருந்தாலும் அது அவர்களுக்கு சந்தோஷத்தை தருகிறது என்றால், அதை நாம் ஏன் கெடுக்க வேண்டும்.//
humm.. interesting :)////
இதுல என்ன interesting இருக்கு ?
சமூக அக்கறையின்மைதான் தெரிகிறது.
At 2:32 PM, சீனு பார்வையில்...
/////////
//
சாவு வீட்டில் பறையடிப்பார்கள். அந்தக் காலத்தில் தொற்று நோய்
அதிகம். அதனை உருவாக்கும் கிருமிகள் ஒரு Decibels மேலே உள்ள
இரைச்சலை கேட்டால் இறந்து விடும். பறை மேளங்களில் இருந்து வரும்
சத்தம் இந்த Decibels வேலே ஒலி எழுப்பும். அதனால், அந்த
கிருமிகள் இறந்து விடும். இது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட
ஒன்று.//
எந்த விஞ்ஞானத்தில் என்று சொன்னால்.. நல்ல இருக்கும்.
முடிந்தால் சுட்டி கொடுங்க சீனு சார்..
////////////
இங்கே நான் படித்தது.
http://www.yarl.com/forum/viewtopic.php?p=92881&sid=8b954303f327a71eff49b87cc9b8c9ce
//////////
அட ஏதோ research lab site னு நினைச்சி போய்பாத்தா இப்படி ஏமாத்திப்புட்டீங்களே சீனு....
இது மாதிரியான site களை reference ஆக எடுத்துக்கொள்ள வேண்டாம்...
நாம் (அல்லது நான்) பெரும்பாலும் மற்ற reference வைத்து தான் எழுதுவது வழக்கம். என்னால் proof செய்ய இயலாது. நான் எழுதியிருக்கும் விடயங்கள் கூட just referenced one.
நாம் (அல்லது நான்) பெரும்பாலும் மற்ற reference வைத்து தான் எழுதுவது வழக்கம். என்னால் proof செய்ய இயலாது. நான் எழுதியிருக்கும் விடயங்கள் கூட just referenced one. (வேண்டுமாலால், அடுத்த தடவை இது மாதிரி எழுதினால், just reference-ன்னு போட்டிடுறேன்).
முற்றிலும் தவறான கருத்து. பால் இளநீர் பழ ரசங்கள் மட்டுமே, அபிடேகம் ஆன பிறகு பிறித்து எடுக்க முடியதபடியான நிலை, மற்ற எல்லாவற்றையும் விநியோகம் செய்யபடுகிறது. அதனல்தான் அதை பிர+சாதம் என்கின்றோம். எல்லமே படைத்து, அழித்து, காத்து, தான் மட்டும் ஆண்டியாய் நிற்கும், இறைவனுக்கு ஒரு லிட்டர் பால் கொடுக்க, அல்லது உங்கள் மொழில் சொன்னால், வீனாக்ககூடாத? உலகில் எதனை எதனையோ வீன்செய்கிரார்கள் அது எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லைய. குடிப்பதும், கண்ட சினிமாவை பார்பதும், கூத்தாடுவதும், வீட்டில் ஆடம்பர பொருட்களை செலவு செய்வதும், வட்டிக்கு வட்டி வாங்குவது, இப்படி பல. இதைவிட மேலை நாடுகளில்...அதிகம்.
ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்றால், உங்களில் தேவை இல்லாத செலவை குரைத்து அதை தானம் செயுங்கள்.
சிரிது சிந்த்தியுங்கள்...
//முற்றிலும் தவறான கருத்து. பால் இளநீர் பழ ரசங்கள் மட்டுமே, அபிடேகம் ஆன பிறகு பிறித்து எடுக்க முடியதபடியான நிலை, மற்ற எல்லாவற்றையும் விநியோகம் செய்யபடுகிறது. அதனல்தான் அதை பிர+சாதம் என்கின்றோம். எல்லமே படைத்து, அழித்து, காத்து, தான் மட்டும் ஆண்டியாய் நிற்கும், இறைவனுக்கு ஒரு லிட்டர் பால் கொடுக்க, அல்லது உங்கள் மொழில் சொன்னால், வீனாக்ககூடாத? //
முதலில் கடவுளுக்கு இதை நாம் ஏன் செய்கிறோம்?.. சீனு சொல்லியது போல் -
//சாமி சிலைகள் பெரும்பாலும் உலோகங்களாலும், பாசாணாங்களாலும் செய்யப்படுகின்றன (மருத்துவ மூலிகைகள் கொண்டு). அதனால், சாமி சிலைகளின் மேல் அபிஷேகம் செய்து, அதனை தீர்த்தமாக பருகுவார்கள். அதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.//
இதற்காக மட்டும் என்றால், எத்தனை கோயில்களில் இப்படி சிலைகள் செய்யப்படுகின்றன?.
எல்லாவற்றிக்கும் மேல் கடவுளுக்கு பயந்து வாழ்பவர்களுக்கும், மனசாட்சிக்கு பயந்து வாழ்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் மட்டுமே இதில் உள்ளது. கடவுளுக்கு பயந்து வாழ்பவன், இப்படிப்பட்ட விஷயங்களை நம்பி செய்கிறான். மனசாட்சிக்கு பயப்படுப்பட்டு வாழ்பவன் இதை எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
//எதனையோ வீன்செய்கிரார்கள் அது எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லைய. குடிப்பதும், கண்ட சினிமாவை பார்பதும், கூத்தாடுவதும், வீட்டில் ஆடம்பர பொருட்களை செலவு செய்வதும், வட்டிக்கு வட்டி வாங்குவது, இப்படி பல. இதைவிட மேலை நாடுகளில்...அதிகம். //
அதிகம் தான் யார் இல்லை என்று சொன்னது, அப்படிப்பட்டவர்கள் கூட கடவுளுக்கு பயந்து கோயிலுக்கு வரூகிறார்கள் இல்லையா.. கடவுளூக்கு பயந்தவர்களிடம் இருந்து காசு பெற கோயிலை விட்டால் வேறு இடம் உண்டா?
ஒரு லிட்டர் 2 லிட்டர் இல்லை குடம் குடமாய் பால் அபிஷேகம் நடக்கிறது ஐயா..!. எல்லாவற்றையும் வேண்டாம் ஒரு சிறு பகுதியை ஒதுக்கி இல்லாவதற்கு அளியுங்கள். அதுவும் காப்பங்கங்களுக்கு அளித்தால், அது சரியாக போய் சேரும்.
//ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்றால், உங்களில் தேவை இல்லாத செலவை குரைத்து அதை தானம் செயுங்கள்.
சிரிது சிந்த்தியுங்கள்... //
இதற்கு இந்த பதிவில், அனானி ஒருவருக்கு மிக தெளிவாக பதில் அளித்து உள்ளேன்..
உங்களை நான் கட்டாயப்படுத்தவில்லை, நீங்கள் சிந்தித்து செயல்படுங்கள்..
எந்த கடவுளும் எனக்கு, பால் அபிஷேகம் வேண்டும், பஞ்சாமிருத அபிஷேகம் வேண்டும் என்று நம்மை கேட்கவில்லை.
எல்லாமே மனிதனால் உருவாக்கப்பட்டவை. இதை ஏற்பீர்கள் என்று நினைக்கிறேன்..
//கண்களை மூடி கடவுளை வணங்கும் பழக்கமும் இல்லை, காரணங்கள் மூன்று. 1. அற்புதமான அலங்காரம் 2. வேண்டும் என்று எதையும் கேட்பதில்லை. 3. மனசாட்சி க்கு மட்டுமே பயப்படுவது. //
எனக்கு இது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு கவி!
நான் கேள்விப்பட்ட ஒரு விஷயம் இந்த பதிவிற்கு தொடர்புள்ளது: போகர் தான் பழனி முருகனை வடிவமைத்தது - மூலிகைகளும் மருந்துகளும் கொண்டு வடித்த சிலை. இது வழியா பால் ஊற்றி வரும் பிரசாதம் - மூலிகை மருந்துக்கு சமானம். இவை நிஜத்தில் உடலுக்கு நன்மை தருவதால், எல்லோருக்கும் முக்கியமாய் ஏழைகளுக்கும் இம்மருந்தை பாலில் கரைத்து கொடுக்க இப்படி பணக்காரர்கள் பால் ஊற்ற அழைக்கப்பட்டார்களாய் இருக்கலாம்! இது இவ்வாறு கரையும் என்று அறிந்து போகர் ஒன்பது விக்கிரகம் பழனி மலைக்கு செய்ததாக ஒரு குறிப்பு உண்டு.
இவ்வகை "பொது நல மருத்துவ" எண்ணம் கோவிலானது எனக்கு பிடித்தது.
கருங்கல்லுக்கு மேல பால், தங்க விக்கிரகத்து மேல பால் ... இதெல்லாம் யாரு செஞ்ச குழப்பம்னு தெரியல :)
வாங்க மது, எங்க ரொம்ப நாளா ஆளையே காணலை?.. எப்படி இருக்கீங்க..?!! :)))
//இவ்வகை "பொது நல மருத்துவ" எண்ணம் கோவிலானது எனக்கு பிடித்தது.//
ஆமாம், நிச்சயம் நல்லது கூட, சிறுவயதிலிருந்து எனக்கு திருமணம் முடிந்து கூட என்னுடைய ஆயா என்னை வைதீஸ்வரன் கோயில் குளத்தில் தலை முக்க அழைத்து செல்வார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், சிறுவயதிலே எனக்கு தெரிந்து, 3, 4ஆவது படிக்கும் போதே தலைவலி என்று அடிக்கடி பள்ளிக்கு போகாமல் மட்டம் போடுவேன்.
அதனால் அந்த கோயிலுக்கு சென்று என்னை குளத்தில் குளிக்க வைத்து,தலையில் தண்ணீரை மொண்டு மொண்டு ஊற்றூவார்கள், அந்த குளத்து தண்ணீர் முலிகை குணம் நிறைந்தது, எல்லா வியாதியும் குணமாகும் என்பது நம்பிக்கை மட்டும்ம் இல்லை உண்மையும் கூட என்று ஆயா சொல்லுவார்கள்.
//கருங்கல்லுக்கு மேல பால், தங்க விக்கிரகத்து மேல பால் ... இதெல்லாம் யாரு செஞ்ச குழப்பம்னு தெரியல :) //
ம்ம்..எனக்கும் தான்..!! :))
கடவுள் இல்லை..நான் நல்லவளாக இருக்கிறேன் யார்க்கு பயபடவேண்டும், இதனை நான் ஏன் செய்ய வேண்டும் என்கிறிர்கள் அப்படித்தானே..
"செய்யாதீர்கள்" பூனை கண் மூடிவிடுவதால் உலகம் இருண்டு போவதில்லை. ஆனால், உங்கள் நம்பிக்கையை மற்றவர்களில் மேல் புகுத்ததீர்கள். ஏன் அபிடேகம் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, பதில்: "சாமி வந்து எங்களிடம் கேட்டுதானு" This is a ridiculous statement to prove your argument. உங்களுக்கு பிடித்த ஒருவர் கேட்டல்தான் வாங்கி கொடுபீர்களா? கல்யாணம் செய்பவர்கள் வந்து "எனக்கு பரிசு தா" என்று கேட்க வேண்டுமா? இது எல்லாம் ஒர் அன்பின் வெளிபாடு. இது எப்படி தவறாக முடியும்.
நான் சொன்னது, அப்படி வீன் செய்கின்ற பணத்தை ஏழைளுக்கு செலவிடலாமே என்றேன். PS:கோவிலுக்குள் நுழைபவனெலாம் நல்லவன் இல்லை.
நன் சொன்ன ஒரு லிட்டர் ஒவ்வொரிடமிருந்து, அப்படி பார்த்தால் எல்லவற்றையும் சேர்த்தால் குடம் குடமாக தானே இருக்கும். It is jus a few thousand litres of milk spent everyday for the benefit of poor. You should request the people who are sponsoring the milk to help for poor rather than finding fault with God.
குடம் குடமாக பணத்தை கொள்ளை அடிக்கும் அரசியல்வதிகளுக்கு முதலில் புத்தி செயுங்கள்.
உலகில் மற்ற எல்லா தவறுகளை சரி செய்து பின் நம்மில் எல்லோரும் நீதி நெரிகளை கடைபிடித்து, பின்னர் கோவில், கடவுள் முறைகளையும், நம்பிக்கைகளை குறை கூறுவோம்.
//கடவுள் இல்லை..நான் நல்லவளாக இருக்கிறேன் யார்க்கு பயபடவேண்டும், இதனை நான் ஏன் செய்ய வேண்டும் என்கிறிர்கள் அப்படித்தானே..//
இல்லை நான் ஏன் செய்யவேண்டும் என்று நினைக்கவில்லை, அது தேவையில்லை என்று நினைக்கிறேன்.. நானும் கோயிலுக்கு செல்பவள், மன அமைதிக்காக, சிற்பங்களை ரசிப்பேன், நம்முடைய கலை ஆர்வத்தை கண்டு வியப்பேன்.
//செய்யாதீர்கள்" பூனை கண் மூடிவிடுவதால் உலகம் இருண்டு போவதில்லை. ஆனால், உங்கள் நம்பிக்கையை மற்றவர்களில் மேல் புகுத்ததீர்கள். //
நான் புகுத்தவே இல்லை நீங்களாக அப்படி நினைத்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல..
//ஏன் அபிடேகம் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, பதில்: "சாமி வந்து எங்களிடம் கேட்டுதானு" This is a ridiculous statement to prove your argument. உங்களுக்கு பிடித்த ஒருவர் கேட்டல்தான் வாங்கி கொடுபீர்களா? கல்யாணம் செய்பவர்கள் வந்து "எனக்கு பரிசு தா" என்று கேட்க வேண்டுமா? இது எல்லாம் ஒர் அன்பின் வெளிபாடு. இது எப்படி தவறாக முடியும்.//
தவறு என்று எங்காவது நான் சொல்லியிருக்கிறேனா... கடவுள் நம்பிக்கை வேண்டும், ஆனால் அதுவே மூட நம்பிக்கையாக மாறி நம் அறிவை இழந்து சில விஷயங்கள் செய்வதை நாம் தவிர்க்கலாம். என் கருத்தை மற்றவர்கள் மேல் நான் தினிக்கவில்லை, பிடித்தவர்கள் செய்யலாம், பிடிக்கவில்லை என் நம்பிக்கை இது நான் இப்படித்தான் இருப்பேன் என்றால் அதற்கும் நான் என்ன செய்யபோகிறேன்... நீங்கள் ஊற்றும் பாலை பார்த்து நானும் தூரத்திலிருந்து ரசித்துவிட்டு சென்றுக்கொண்டே இருப்பேன். தனிப்பட்ட தனிநபர்களின் விஷயத்தில் தலையிட நான் யார்?
//நான் சொன்னது, அப்படி வீன் செய்கின்ற பணத்தை ஏழைளுக்கு செலவிடலாமே என்றேன். PS:கோவிலுக்குள் நுழைபவனெலாம் நல்லவன் இல்லை.//
ஐயா, திரும்பவும் சொல்கிறேன், யார் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று விவாதம் அல்ல இது, கோயில்களுக்கு உள் மட்டும் இல்லை வெளியில் கூட எல்லோரும் நல்லவர்களும் அல்ல, கேட்டவர்களும் அல்ல..
கோயில்களின் பக்தர்கள் கொடும் பணத்தை வைத்து தானே அன்னதானம் செய்கிறார்கள், அதே போல் பக்தர்கள் கொடுக்கும் மற்ற பொருட்களையும் ஏன் தானம் செய்ய கூடாது.. என்பது எனது எண்ணம்.
//நன் சொன்ன ஒரு லிட்டர் ஒவ்வொரிடமிருந்து, அப்படி பார்த்தால் எல்லவற்றையும் சேர்த்தால் குடம் குடமாக தானே இருக்கும். It is jus a few thousand litres of milk spent everyday for the benefit of poor. You should request the people who are sponsoring the milk to help for poor rather than finding fault with God.//
போச்சி, எங்கே நான் கடவுளின் மேல் தவறை கண்டுபிடித்தேன், கோயில் அல்லாத வேறு சில விஷயங்களில் கூட நான் இதை தான் செய்தும் சொல்லியும் வருகிறேன். அவற்றில் சில-
பிறந்தநாள் கொண்டாட்டம், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளின் நாம் நிறைய சிலவழிக்கிறோம். ஒவ்வொரு பிறந்த நாளிற்க்கும், திருமணத்திற்கு ஆகும் சிலவுடன், காப்பங்களுக்கு, அல்லது ஒரு குழந்தைக்கு தேவையான படிப்பு அல்லது உணவிற்கான சிலவையும் நம் பட்ஜெட்'டில் சேர்த்து க்கொள்ளலாம்.
இது போன்ற நிகழ்ச்சிகளில் எத்தனையோ பேருக்கு நாம் உணவளிக்கிறோம், அதுனுடன் சேர்த்து காப்பங்களுக்கும் நம் விருப்பத்திற்க்கு ஏற்றார் போன்று செய்யலாம்.
இதையும் நான் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. ஒரூ சின்ன விண்ணப்பம், அல்லது என்னுடைய எண்ணம். ஏற்பவர்கள் ஏற்கலாம் இல்லையேல் அவரவர் இஷ்டம், அவர்கள் எப்படி செலவிட வேண்டும் என்று சொல்ல நான் யார்? :)
//குடம் குடமாக பணத்தை கொள்ளை அடிக்கும் அரசியல்வதிகளுக்கு முதலில் புத்தி செயுங்கள். //
சொல்லி விட்டால் போகிறது. சின்ன விஷயத்தை யதார்த்தை சொல்லும் போதே உங்களை போன்றவர்கள் விவாதம் செய்கிறீர்கள். அரசியல்வாதிகளின் ரீயாக்ஷன் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் நீங்களே கற்பனை செய்து க்கொள்ளுங்கள்.
//உலகில் மற்ற எல்லா தவறுகளை சரி செய்து பின் நம்மில் எல்லோரும் நீதி நெரிகளை கடைபிடித்து, பின்னர் கோவில், கடவுள் முறைகளையும், நம்பிக்கைகளை குறை கூறுவோம்.//
இதை ஏன் நீங்கள் குறை என்றூ நினைக்கிறீர்கள்?. எதையுமே நான் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. உங்களை நிச்சயம் நான் கட்டாயப்படுத்தவில்லை, அதையே உங்களுக்கும் சொல்கிறேன் -
நீங்களும் என்னுடைய எண்ணத்தையும் பார்வையும் தவறோ அல்லது சரியான அனுகுமுறை இல்லை என்றோ சொல்லமுடியாது என்று நினைக்கிறேன்.
நீங்கள் சொன்ன கருத்து தவறு அதுதான் என்னுடைய வாதம். சாண்றோர்கள் கூறியதையே மதிக்காதபோது நான் எல்லாம் எமாத்திரம்.
"சாஸ்த்திரம் சம்பரதாயம் அத்தனையும் அவசியம்தான், ஆனால் குடம் குடமாக பால், தயிர் அபிஷேகம், அது மட்டுமா? நெய், இளநீர், தேன், வெண்ணைய், பஞ்சாமிர்தம் அத்தனையும் அபிஷேகம் கண் குளிர பார்த்து விட்டு ப்ரகாரம் சுற்றி வந்தால் அத்தனையும் புறவழியாக சாக்கடைக்குள்.. ... பக்தர்கள் செலுத்தும் அபிஷேகப் பொருட்கள் அத்தனையும் ஊற்றப்படுகின்றனவா?. இல்லை உள்ளிருப்பவர்களால் உறிஞ்ச படிகின்றனவா?. தேவையான அளவு அபிஷேகம் செய்துவிட்டு, ஒவ்வொரு நாளும் ஒரு பகுதியை குழந்தைகள் காப்பகங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் அனுப்பலாமே..! கோயில் நிர்வாகமும், சமூக தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இனணந்து இதனை செயற்படுத்தி பலரின் பசியை போக்கலாமே! யாராவது முயற்சி செய்வார்களா"
கடவுள்க்காக அன்புடன் பக்த்தர்கள் கொண்டுவந்ததை கோவில் மறுக்காது, அதே போல் பக்தர்களிடம் போய் "இதை தானம் செய்துவிடுங்கள்" என்று சொல்ல முடியுமா? இரண்டுமே முடியாது. நாங்கள் செத்தாலும் பரவாயில்லை, எங்களுடைய அவனுக்கு
செலுத்தவேண்டிய அன்பு தவறாது. அது பாடு அது. இதில் எந்த மாறுதலும் ஆகாது, கிடையாது.
இதில் என்னை புண்படுத்தியது, "கல்லுக்கு", "உலோகத்துக்கும்" என்ற வார்த்தைகள்தான். நீங்கள் கடவுள் நம்பிக்கை இருந்தால் இப்ப்டி ஒருவரின் கருத்துக்கு முற்றுபுள்ளி வைத்திருக்க வேண்டுமல்லவா?
//கருங்கல்லுக்கு மேல பால், தங்க விக்கிரகத்து மேல பால் ... இதெல்லாம் யாரு செஞ்ச குழப்பம்னு தெரியல :) //
ம்ம்..எனக்கும் தான்..!! :)) //
So..கடவுளை கொச்சைபடுத்திவிட்டீர்கள்.
ofcourse it is your page you can write anything you like...
Thanks for replying for my comments.
பீட்டர் தாத்தா-
God is a comedian playing to an audience too afraid to laugh
//நீங்கள் சொன்ன கருத்து தவறு அதுதான் என்னுடைய வாதம்.//
உங்களுக்கு தவறு எனக்கில்லை :))))
இது வரையில் நான் நீங்கள் சொல்லிய எதையும் தவறு என்று சொல்லவில்லை என்பதை கவனியுங்கள்.
உங்களுடைய கருத்தும் எண்ணமும் வேறு, அதை போல் என்னுடையதும், அப்படி இருக்க, தவறு என்று சொல்லுவதே முதலில் சரி என்று தோன்றவில்லை.. :))
//சாண்றோர்கள் கூறியதையே மதிக்காதபோது நான் எல்லாம் எமாத்திரம். //
என்னுடைய பதிவின் முதல் பாராவிலேயே சொல்லிவிட்டேன் நான் எதற்கும் எதிரி இல்லை. ஆனால் நான் எதை செய்தாலும் சுயமாக நம் அறிவையும் பயன்படுத்தி செயல்பட வேண்டும். சில சமயம் நாம் சில விஷயங்களை அடுத்தவரின் திருப்திக்காக செய்ய வேண்டி வரும். ஆனால் அதுவே நமக்காக செய்யும் போது, ஏன், எதற்கு, அதன் பலன், அல்லது அதனால் ஏற்படும் விளைவுகள் என்று எல்லாவற்றையும் ஆராய்ந்து செய்வதில் என்ன தவறு இருக்கிறது.
நான் சுயமாக சிந்திக்கிறேன், எனக்குள் எழும் கேள்விகளுக்கு நானோ, இல்லை வெளியிலிருந்தோ பெற்றோ பதில் அளிக்கிறேன்.
நன்மை தீமைகளை ஆராய்கிறேன்.. இப்படி செய்தால் சரி என்று எனக்கு தோன்றிய பிறகே செய்கிறேன்.. அது உங்களுக்கு தவறாக இருப்பின் அதற்கு நான் பொறுப்பல்ல, ஏனென்றால் இதை நான் அடுத்தவர்களுக்காக செய்யவில்லை.. எனக்காக என் மன திருப்திக்கு செய்கிறேன்.
மேலே சொன்ன அத்தனையும் இந்த விஷயத்திற்கு மட்டும் அல்ல எல்லாவிஷயத்திற்கும் பொருந்தும்.
//கடவுள்க்காக அன்புடன் பக்த்தர்கள் கொண்டுவந்ததை கோவில் மறுக்காது, //
வேண்டாமே, ஏழையின் சிரிப்பில் இறைவன காணலாம் னு சொல்லி இருக்காங்க.. ஏன் கடவுளுக்கு படைப்பதை ஏழைகளுக்கு படைத்து அந்த சிரிப்பில் ஏன் நாம் இறைவனை பார்க்க கூடாது?
//அதே போல் பக்தர்களிடம் போய் "இதை தானம் செய்துவிடுங்கள்" என்று சொல்ல முடியுமா?
ஏன் முடியாது.. எந்த ஒரு விஷயத்திற்குமே.. 'முடியாது' என்ற சொல்லவே முடியாது.. ஒரு வழி இல்லையென்றால் இன்னொரு வழி இருக்கத்தான் செய்யும்.
சரி, கோயிலில் உண்டியலில் கிடைக்கும், அல்லது கோயிலுக்கு தருமம் செய்யும் பணத்தை கொண்டு தானே அண்ணதானம் செய்கிறீர்கள். அப்படி கடவுளுக்கு கொடுக்கப்படும் பொருட்களையும் ஏன் தானம் செய்யக்கூடாது. என்னங்க நீங்க..?.. உங்களுக்கு நீங்களே..contro வா இருக்கீங்க..?
//இரண்டுமே முடியாது. //
முடியும் என்று நினைத்தால் எதுவும் முடியும், முடியாது என்று நீங்கள் நினைத்து விட்டால் எதுவுமே உங்களால் முடியாது தான். :)
//நாங்கள் செத்தாலும் பரவாயில்லை, எங்களுடைய அவனுக்கு
செலுத்தவேண்டிய அன்பு தவறாது. அது பாடு அது. இதில் எந்த மாறுதலும் ஆகாது, கிடையாது. //
வேண்டாம், இது உங்களின் நிலை, அப்படியே இருங்கள் நான் எதுவும் சொல்லவில்லை. அதே போல் என்னுடைய நிலையையும் மாற்ற நினைக்காதீர்கள்.. சரியா?
//இதில் என்னை புண்படுத்தியது, "கல்லுக்கு", "உலோகத்துக்கும்" என்ற வார்த்தைகள்தான். //
இதில் புண்பட்டு போக ஒன்றுமில்லை, எளிதாக எடுத்துக்கொள்ள பழகுங்கள். உங்களுக்கு கடவுளாக தெரியும் சிலைகள், மற்றவர்களுக்கு
கல்லாக,
உலோகமாக
சிற்பமாக
ஏன் சிலையாக மட்டுமே தெரியலாம்.
அது அவரவரின் பார்வை. நாம் எப்படி நினைக்கிறோம், எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை மட்டும் அதிக கவனமாக இருந்தாலே போதுமே.
//நீங்கள் கடவுள் நம்பிக்கை இருந்தால் இப்ப்டி ஒருவரின் கருத்துக்கு முற்றுபுள்ளி வைத்திருக்க வேண்டுமல்லவா?//
எப்படிங்க இது?. நீங்க நான் சொல்லுவதை தவறு என்கிறீர்கள். அதே சமயம் மற்றவருக்கு நானே முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்கிறீர்கள். எப்படி சாத்தியம்.? அவருக்கும் நான் சொல்லுவது தவறாக படலாம் அல்லவா?..
//கருங்கல்லுக்கு மேல பால், தங்க விக்கிரகத்து மேல பால் ... இதெல்லாம் யாரு செஞ்ச குழப்பம்னு தெரியல :) //
ம்ம்..எனக்கும் தான்..!! :)) //
So..கடவுளை கொச்சைபடுத்திவிட்டீர்கள்.//
முதலில் சொல்லிய பதில் தான், கடவுள் சிலைகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை. தானே வந்திருப்பின் உலகம் முழுமைக்கும் ஒரே கடவுள் தான் இருந்திருப்பார். சாதிக்கும், மதத்திற்க்கும் தகுந்தார் போன்று கடவுளும் வேறு பெயர்களில் தோன்றி இருக்க மாட்டார்.
மனிதன் அறிவு பூர்வமாக சிந்தித்து, நமக்கும் மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்னும் நம்பிக்கையை உருவாக்கினான். அது தான் கடவுள். அது இருக்கிறது என்று இன்னும் மக்கள் நம்புவதால் மட்டுமே குற்றங்கள் குறைவாக உள்ளன். அந்த நம்பிக்கை இல்லாதபோது குற்றங்களும் அதிகமாகும்
நீங்கள் நினைக்கற மாதிரி கடவுளை நானோ, இல்லை மதுராவோ நிச்சயம் கொச்சைபடுத்தவில்லை.
சரியாக புரிந்துகொண்டால் தவறாக தெரியாது, ஆரம்பத்திலிருந்து தவறாக பார்க்கபடுவதால் சரியும் தவறாகத்தான் தெரியும்.
அதற்கு நான் பொறுப்பல்ல.. :)))
ofcourse it is your page you can write anything you like...
Thanks for replying for my comments.
//பீட்டர் தாத்தா-
God is a comedian playing to an audience too afraid to laugh //
நன்றி பெருசு, பீட்டர் தாத்ஸ் இல்லாத குறையை நிவர்த்தி செய்துட்டீங்க.. :)
//இது வரையில் நான் நீங்கள் சொல்லிய எதையும் தவறு என்று சொல்லவில்லை என்பதை கவனியுங்கள்.
உங்களுடைய கருத்தும் எண்ணமும் வேறு, அதை போல் என்னுடையதும், அப்படி இருக்க, தவறு என்று சொல்லுவதே முதலில் சரி என்று தோன்றவில்லை.. :))//
தவறை தவறு என்று சொலாம வேறு எப்படி சொல்வது. நான் ஆதாரங்களோடு சொல்வதால் தவறு என்றேன்.
//நன்மை தீமைகளை ஆராய்கிறேன்.. இப்படி செய்தால் சரி என்று எனக்கு தோன்றிய பிறகே செய்கிறேன்.. அது உங்களுக்கு தவறாக இருப்பின் அதற்கு நான் பொறுப்பல்ல, ஏனென்றால் இதை நான் அடுத்தவர்களுக்காக செய்யவில்லை.. எனக்காக என் மன திருப்திக்கு செய்கிறேன்.
மேலே சொன்ன அத்தனையும் இந்த விஷயத்திற்கு மட்டும் அல்ல எல்லாவிஷயத்திற்கும் பொருந்தும்.//
நீங்கள் சுயமாக சிந்தியுங்கள் ஆனால் நான் சொல்ல வந்தது முனோர்கள் கூறியதையும் நடைமுறைபடுத்தங்கள் அதில் ஏதும் மறுப்பு சொலாதீர்கள். கோவியில் இருப்பவர்கள் எல்லாம், பக்த்தர்கள் எல்லாம் முட்டால்கள் இல்லை என்றும் உங்கள் சிந்தையில் சேர்த்துக்கொள்ள் வேண்டும்.
//ஏழையின் சிரிப்பில் இறைவன காணலாம் னு சொல்லி இருக்காங்க.. ஏன் கடவுளுக்கு படைப்பதை ஏழைகளுக்கு படைத்து அந்த சிரிப்பில் ஏன் நாம் இறைவனை பார்க்க கூடாது?//
அதற்கு அர்த்தம் அப்படி அல்ல...ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும் என்பதே.. யார் இப்போது வேண்டாம் என்று சொன்னார்கள்? கோவில் செய்யும் அனைத்து நற்காறியங்காலும் ஏழையை குறி வைத்துதனே உள்ளது. கோவிலில் நீங்கள் அன்ன தானத்தை பார்த்ததில்லையா? அதற்காக சாமிக்கு ஊத்தும் அதே பால் தான் தானம் செய்ய வேண்டும் என்று வாதாடாதீர்கள். கடவுளுக்கு கொடுக்கபட்டது அத்தனையும், முடிந்தவரை எல்லா பொருள்களும் விநியோகிக்கபடுகிறது.
//சரி, கோயிலில் உண்டியலில் கிடைக்கும், அல்லது கோயிலுக்கு தருமம் செய்யும் பணத்தை கொண்டு தானே அண்ணதானம் செய்கிறீர்கள். அப்படி கடவுளுக்கு கொடுக்கப்படும் பொருட்களையும் ஏன் தானம் செய்யக்கூடாது. என்னங்க நீங்க..?.. //
நீங்கள் எடுத்துக்கொண்டது அப்படி...கடவுளுக்கு கொடக்கபட்டது கடவுளுக்கே. குழந்தை போல் அதேதான் ஏழைக்கு கொடுக்க வேண்டும் என்று அடம் செய்யாதீர்கள்.முடிந்தவரை பிரித்து கொடுக்கபடுகிறது.
//உங்களுக்கு நீங்களே..cஒன்ட்ரொ வா இருக்கீங்க..?.//
நான் சொல்ல வந்தது, அப்படி நீங்கள் பக்தர்களிடம் போய் சொன்னல் ..."பேசாம உன் வேலையை பாரம்மா" என்று சொல்வார்களே இன்னும் சொல போனால்,அவர்கள் நம்மைவிட புத்திசாலிகள்.யார்க்கு எப்படி, எத்தினை கொடுக்க வேண்டும் என்று நண்கு அறிந்தவர்கள்.
//வேண்டாம், இது உங்களின் நிலை, அப்படியே இருங்கள் நான் எதுவும் சொல்லவில்லை. அதே போல் என்னுடைய நிலையையும் மாற்ற நினைக்காதீர்கள்.. சரியா?//
நான் சொன்னது என்னை பொருத்தவரை சரி என்றால், நீங்கள் சொல்வது உங்களை போல் சரி என்றால்?
பின்னே எது சரி?
//இதில் புண்பட்டு போக ஒன்றுமில்லை, எளிதாக எடுத்துக்கொள்ள பழகுங்கள். உங்களுக்கு கடவுளாக தெரியும் சிலைகள், மற்றவர்களுக்கு
கல்லாக,
உலோகமாக
சிற்பமாக
ஏன் சிலையாக மட்டுமே தெரியலாம்.
அது அவரவரின் பார்வை. நாம் எப்படி நினைக்கிறோம், எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை மட்டும் அதிக கவனமாக இருந்தாலே போதுமே//
உங்கள் புகைபடத்தை ஒருவர் உங்கள் முன்னல் காரி துப்பினால்? அதே பதிலை நான் சொல்றேன்,
இதில் புண்பட்டு போக ஒன்றுமில்லை, எளிதாக எடுத்துக்கொள்ள பழகுங்கள்.
உங்கள் குடும்பத்துக்கு மகளாக தெரியும் அந்த புகைபடம், மற்றவர்க்கு அது வெரும் பேபராக தெரியும்.
அது அவரவரின் பார்வை.
//எப்படிங்க இது?. நீங்க நான் சொல்லுவதை தவறு என்கிறீர்கள். அதே சமயம் மற்றவருக்கு நானே முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்கிறீர்கள். எப்படி சாத்தியம்.? அவருக்கும் நான் சொல்லுவது தவறாக படலாம் அல்லவா?.. //
நான் சொல்ல வந்தது, நீங்கள் கடவுள் பக்தை இல்லை என்று அவர் கூறியதை மறுப்பு சொலாதில் இருந்து புலபடுகிறது. அவர்க்கு பதில் கருத்து சொலச்சொல வில்லை. An inference from the statement and not arguing why you didn't reply.
//முதலில் சொல்லிய பதில் தான், கடவுள் சிலைகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை. தானே வந்திருப்பின் உலகம் முழுமைக்கும் ஒரே கடவுள் தான் இருந்திருப்பார். சாதிக்கும், மதத்திற்க்கும் தகுந்தார் போன்று கடவுளும் வேறு பெயர்களில் தோன்றி இருக்க மாட்டார்.
மனிதன் அறிவு பூர்வமாக சிந்தித்து, நமக்கும் மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்னும் நம்பிக்கையை உருவாக்கினான். அது தான் கடவுள். அது இருக்கிறது என்று இன்னும் மக்கள் நம்புவதால் மட்டுமே குற்றங்கள் குறைவாக உள்ளன். அந்த நம்பிக்கை இல்லாதபோது குற்றங்களும் அதிகமாகும்
நீங்கள் நினைக்கற மாதிரி கடவுளை நானோ, இல்லை மதுராவோ நிச்சயம் கொச்சைபடுத்தவில்லை.
சரியாக புரிந்துகொண்டால் தவறாக தெரியாது, ஆரம்பத்திலிருந்து தவறாக பார்க்கபடுவதால் சரியும் தவறாகத்தான் தெரியும்.
அதற்கு நான் பொறுப்பல்ல.. :)))//
இதுதான் நம்பிக்கை. இதற்காக கடவுள் உங்கள் முன் தோன்றி மந்திரம் காண்பிக்க வேண்டுமா?
God is not a Magician and He doesn't need to prove that he is existing. if you ask for the proof, அது மாதிரி ஒரு கெட்ட எண்ணம் உலகில் இருக்க முடியாது.
நான் எப்ப்டி இந்த உலகதுக்கு வந்தேன் என்று, என் அப்பா யார் என்று, நான் என்ன குலம் என்று என் தாய் சொனதை நான் நம்பியாக வேண்டும். இதைவிட்டு இவர் தான் என் உன்மையான தந்தையா என்று ஆராய்ச்சி செய்ய முடியுமா?
அப்போ, மனிதன் தோன்றியது முதல் இன்று வரை எழுதியது, பாடியது, கலாச்சாரம், மொழி, முனிவர்கள் சொன்னது எல்லாம் பொய், அவர்கள் எல்லாம், முட்டால்கள், கோவில் எல்லாம் வெறும் கட்டிட்டம், நீங்கள் பத்து பேர்தான் புத்திசாலிகள், எல்லா இலக்கியஙல், வேதம், தேவாரம், Bible, Kuran, எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, கோவிலை எல்லாம் பூட்டிவிட்டு, உங்கள் வாக்குதான் முற்றிலும் உண்மை என்று நாங்கள் உங்கள் பின் வர வேண்டுமா?
வைரு, நீங்கள் ஒரு முடிவோட இருக்கற மாதிரி தெரியுது. :)
//தவறை தவறு என்று சொலாம வேறு எப்படி சொல்வது. நான் ஆதாரங்களோடு சொல்வதால் தவறு என்றேன். //
அது எப்படிங்க நீங்க தவறுன்னு முடிவு செய்வீங்க?. என்ன ஆதாரம் சொல்லியிருக்கீங்க.....?!! திரும்பவும் சொல்கிறேன்.. நீங்கள் தவறு என்று சொல்லிவிட்டால் அது தவறாகிவிடாது.
//நீங்கள் சுயமாக சிந்தியுங்கள் ஆனால் நான் சொல்ல வந்தது முனோர்கள் கூறியதையும் நடைமுறைபடுத்தங்கள் அதில் ஏதும் மறுப்பு சொலாதீர்கள்.//
எல்லாவற்றிற்க்கும் மறுப்பு சொல்லவில்லை. மூடநம்பிக்கைக்கு மட்டுமே சொல்கிறேன். நெருப்பில் இறங்கி நடத்தல், தீ சட்டி தூக்குதல், பலி கொடுத்தல், அலகு குத்துதல் போன்றவை எப்படியோ.. அப்படித்தான் இந்த பால் அபிஷேகம் எல்லாம்..
// கோவியில் இருப்பவர்கள் எல்லாம், பக்த்தர்கள் எல்லாம் முட்டால்கள் இல்லை என்றும் உங்கள் சிந்தையில் சேர்த்துக்கொள்ள் வேண்டும்.//
ஐயா.. நான் அவர்களை முட்டாள் என்று சொன்னேனா..??? நாம் நமக்காக கொண்டுவந்த சில வழிமுறைகளை ஏன் நமக்காக நாம் மாற்றக்கூடாது..?!!
//அதற்கு அர்த்தம் அப்படி அல்ல...ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும் என்பதே.. யார் இப்போது வேண்டாம் என்று சொன்னார்கள்? கோவில் செய்யும் அனைத்து நற்காறியங்காலும் ஏழையை குறி வைத்துதனே உள்ளது. கோவிலில் நீங்கள் அன்ன தானத்தை பார்த்ததில்லையா? அதற்காக சாமிக்கு ஊத்தும் அதே பால் தான் தானம் செய்ய வேண்டும் என்று வாதாடாதீர்கள். கடவுளுக்கு கொடுக்கபட்டது அத்தனையும், முடிந்தவரை எல்லா பொருள்களும் விநியோகிக்கபடுகிறது.//
என்னங்க நீங்க.. நீங்களே சொல்றீங்க..// கடவுளுக்கு கொடுக்கப்படும் அத்தனை பொருட்களும் முடிந்தவரை??? எல்லா ???? பொருட்களும் விநயோகிக்கபடுகின்றன்//
இதுல ஏன் பாலை மட்டும் சேர்த்துக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள் ? எனக்கு நீங்கள் வீண்வாதம் செய்வதாக தான் தோன்றுகிறது.
//நான் சொல்ல வந்தது, அப்படி நீங்கள் பக்தர்களிடம் போய் சொன்னல் ..."பேசாம உன் வேலையை பாரம்மா" என்று சொல்வார்களே இன்னும் சொல போனால்,அவர்கள் நம்மைவிட புத்திசாலிகள்.யார்க்கு எப்படி, எத்தினை கொடுக்க வேண்டும் என்று நண்கு அறிந்தவர்கள். //
ஆமாங்க அவங்க புத்திசாலிதான்.. அவங்களுக்கு தெரியும் யாருக்கு என்ன கொடுக்க வேண்டும்? அவர்கள் வீட்டுக்கு கடவுளின் பெயரால் என்ன எடுத்த செல்லமுடியும் என்று, அவர்கள் அல்லவா புத்திசாலிகள். திருப்பதி கோயிலில் ஏழைகள் கூட மஞ்சள் துணியில் முடிந்து வைத்து கொண்டு காணிக்கை செலுத்துகிறார்கள் ஆனால் வருடத்திற்கு ஒரு முறை கோடியாகவோ, லட்சமாகவோ திருடு போகின்றன. இது எப்படிங்க?.. உள்ளிருப்பவர்களின் உதவி இல்லாமலா திருட்டு போகும்?. அவர்கள் அதிக புத்திசாலிகள், காணிக்கை செலுத்தும் பக்தர்கல் எல்லாம் முட்டாள்களே..
//பின்னே எது சரி? //
உங்களுக்கு நீங்கள் சரி, எனக்கு நான் சரி..
//உங்கள் புகைபடத்தை ஒருவர் உங்கள் முன்னல் காரி துப்பினால்? அதே பதிலை நான் சொல்றேன், இதில் புண்பட்டு போக ஒன்றுமில்லை, எளிதாக எடுத்துக்கொள்ள பழகுங்கள். //
ஏங்க உங்களுக்கு என் மேல் இத்தனை கோபம், என் புகைப்படம் என்ன, என்னை நேரில் ஒருவர் அப்படி செய்தால் கூட நான் கவலைப்பட மாட்டேன். :) அறியாதவர்கள் செய்யும் தவறு, இன்று இல்லாவிட்டால் மற்றோரு நாள் புரிந்து திருந்து வார்கள் என்று விட்டுவிடுவேன்.
// உங்கள் குடும்பத்துக்கு மகளாக தெரியும் அந்த புகைபடம், மற்றவர்க்கு அது வெரும் பேபராக தெரியும். அது அவரவரின் பார்வை. //
உண்மை
//நான் சொல்ல வந்தது, நீங்கள் கடவுள் பக்தை இல்லை என்று அவர் கூறியதை மறுப்பு சொலாதில் இருந்து புலபடுகிறது. அவர்க்கு பதில் கருத்து சொலச்சொல வில்லை. An inference from the statement and not arguing why you didn't reply. //
என்னுடைய விருப்பம் மட்டுமே இதில் உள்ளது. அவருக்கு என்னுடைய விவாதம் தேவையில்லை என்று நான் நினைத்தேன், தவிர்த்தேன். Absolutely my wish right !! :)
//இதுதான் நம்பிக்கை. இதற்காக கடவுள் உங்கள் முன் தோன்றி மந்திரம் காண்பிக்க வேண்டுமா? God is not a Magician and He doesn't need to prove that he is existing. if you ask for the proof, அது மாதிரி ஒரு கெட்ட எண்ணம் உலகில் இருக்க முடியாது. //
ஒன்றை தெளிவா புரிஞ்சிகோங்க. நம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம், கடவுள் நம்பிக்கை என்பது நான் மனசாட்சியையும், நமக்கு மேல் ஒரு சக்தி (இதை விதி என்று கூட சொல்லலாம்) இருக்கிறது என்று மட்டுமெ நினைக்கிறேன், நம்புகிறேன்.
நீங்கள் அதையே - சிலைவடிவமாக பார்க்கிறீர்கள்.
//நான் எப்ப்டி இந்த உலகதுக்கு வந்தேன் என்று, என் அப்பா யார் என்று, நான் என்ன குலம் என்று என் தாய் சொனதை நான் நம்பியாக வேண்டும். இதைவிட்டு இவர் தான் என் உன்மையான தந்தையா என்று ஆராய்ச்சி செய்ய முடியுமா?//
இப்போது எல்லாம் முடியும். DNA பரிசோதனை மூலம் அப்பா யார் என்பதை அறிய முடியுமே.. இது அம்மாவின் மேல் உள்ள சந்தேகத்தினால் இல்லை.. உங்களுக்கு பதில் சொல்லும் பொருட்டு சொல்லியது. அறிவியல் வளர வளர நாமும் அதனுடன் சேர்ந்து வளர்ந்து கொண்டுதானெ இருக்கிறோம்.
//அப்போ, மனிதன் தோன்றியது முதல் இன்று வரை எழுதியது, பாடியது, கலாச்சாரம், மொழி, முனிவர்கள் சொன்னது எல்லாம் பொய், அவர்கள் எல்லாம், முட்டால்கள், கோவில் எல்லாம் வெறும் கட்டிட்டம், நீங்கள் பத்து பேர்தான் புத்திசாலிகள், எல்லா இலக்கியஙல், வேதம், தேவாரம், Bible, Kuran, எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, கோவிலை எல்லாம் பூட்டிவிட்டு, உங்கள் வாக்குதான் முற்றிலும் உண்மை என்று நாங்கள் உங்கள் பின் வர வேண்டுமா?//
யாருங்க உங்களை என் பின்னால் வர சொன்னது.?
புத்தகங்கள், இதிகாசங்கள், வரலாறுகள், கலாசாரம், மொழி, பைபில், குறான், முனிவர்கள் சொன்னவை எல்லாம் நம் வாழ்க்கை முறையை சரியாக்கி, நல்லமுறையில் நடக்க. அதன் சாரத்தை எடுத்து க்கொண்டு நம்மை நாம் சரியான வழியில் கொண்டு செல்ல வேண்டும். அவ்வளவே. அதை கோயிலில் சென்று தான் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லாமே நம் சிந்தனையிலும், நாம் நடந்து கொள்ளும் முறையிலும், நம் நாகரீகத்திலும் தான் இருக்கிறது.
//அதை கோயிலில் சென்று தான் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லாமே நம் சிந்தனையிலும், நாம் நடந்து கொள்ளும் முறையிலும், நம் நாகரீகத்திலும் தான் இருக்கிறது.//
//அப்படித்தான் இந்த பால் அபிஷேகம் எல்லாம்.. oru மூடநம்பிக்கைக்கு//
Can you prove these statements are right? I can prove these statements are wrong. You collect all the statements which are from a wise men and not from periyar, kamalahasan, comments on rear side of an auto.. etc.. all should a valid comments from a wise person. who ever gives more number of proofs point is the right..Are you ok with this? you paste on your proofs on your website I will reply my comments on my website. bcos we don't have to trust each other.
//Can you prove these statements are right? //
Yes I can prove..
//I can prove these statements are wrong.//
Yes prove it
//You collect all the statements which are from a wise men and not from periyar, kamalahasan, comments on rear side of an auto.. etc.. all should a valid comments from a wise person.//
Why not Periyar? What do you mean by this.. he is not wise is it? How you say this..?!! Are you that much experienced and wise person than Periyar??? how wonder you simply use this kind of words..?!!
// who ever gives more number of proofs point is the right..Are you ok with this? //
Yes
//you paste on your proofs on your website I will reply my comments on my website. bcos we don't have to trust each other.//
But why here and there.. let us keep our argument any one place..
ok whatever it is...only one comment from one wise person.
//ok whatever it is...only one comment from one wise person. //
ha ha :)
Dont know what to say.. but see if we keep the arguments here and there.. not really a good idea & not a professional way of exchange views right..
//இப்போது எல்லாம் முடியும். DNA பரிசோதனை மூலம் அப்பா யார் என்பதை அறிய முடியுமே.. இது அம்மாவின் மேல் உள்ள சந்தேகத்தினால் இல்லை.. உங்களுக்கு பதில் சொல்லும் பொருட்டு சொல்லியது. அறிவியல் வளர வளர நாமும் அதனுடன் சேர்ந்து வளர்ந்து கொண்டுதானெ இருக்கிறோம். //
கவிதாம்மா: DNA, அது, இது என்று ஜல்லியடிப்பதை நிறுத்தவும். ஒருவருடைய DNA சரி. அதை ஒப்பிட்டுப் பார்க்க அவர்களின் தந்தை என்று சந்தேகப்படும் நபர்(கள்)ன் DNA தேவை. அந்த சந்தேக லிஸ்டில் ஆள் சேர்க்கவே ஒரு தாயின் உதவி தேவை. என்ன தான் நீங்கள் விஞ்ஞானம் என்று சப்பைக்கட்டு கட்டினாலும், அதனால் விளக்க முடியாத எத்தனையோ விஷயங்கள் உலகத்தில் உள்ளன / இனிமேலும் இருக்கும்.
இப்போது நாமிருக்கும் உலகில், தவறுகள் குறைவாக நடப்பது தெய்வங்களின் உறைவிடங்களாகக் கருதப் படும் கோவில்களில் தான். நீங்கள் சீர்திருத்தவாதியாக உங்களை முன்னிறுத்த முயற்சிப்பதற்கு கோவில்களை விட வேறு எத்தனையோ இடங்கள் உள்ளன. உங்கள் வீட்டு சுவற்றில் அசிங்கம் பண்ணுபவனை தட்டிக் கேட்கும் தைரியத்தை முதலில் வரவழைத்துக் கொள்ளுங்கள். அங்கெல்லாம் முதலில் போய் திருத்திவிட்டு பிறகு சமய நம்பிக்கைகளைப் பற்றி யோசியுங்கள். உங்களுக்கு தெரிந்ததே உலகம் என்று யோசிக்காமல், மேலும் தேடுதலைத் தொடருங்கள். அதைவிடுத்து பாலாபிஷேகம் அனாவசியம், அதை தானமாக குடு என்று உளறுவதில்லை சீர்திருத்தம். அதே ஏழைகளிடம் அதே பாலினைக் கொடுத்து, நீங்கள் குடியுங்கள் என்று குடுத்துப் பாருங்கள். எத்தனை பேர் அதை இறைவனுக்கு படைப்பதே மேல் என நினைப்பார்கள் என்பது புரியும். நம் சமுதாயத்தில் சமயம் வெறும் வயிற்றுப் பாடல்ல. எப்படிப் பட்ட தியாகங்கள் புரிவதற்கும் நம்மை செம்மைப் படுத்தியுள்ளது நம் சமய நம்பிக்கைகள். இதென்ன குவாட்டருக்கும், பிரியாணிக்கும் சேரும் குஞ்சுக் கும்பல் என நினைத்தீர்களா? அங்கு போய் உங்கள் சீர்திருத்த கருத்துக்களை ஓதுங்கள். சமய விஷயங்களில் வேண்டாம்.
//vairu said...
//அதை கோயிலில் சென்று தான் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லாமே நம் சிந்தனையிலும், நாம் நடந்து கொள்ளும் முறையிலும், நம் நாகரீகத்திலும் தான் இருக்கிறது.//
//அப்படித்தான் இந்த பால் அபிஷேகம் எல்லாம்.. oru மூடநம்பிக்கைக்கு//
Can you prove these statements are right? I can prove these statements are wrong. You collect all the statements which are from a
//
wise men and not from periyar, kamalahasan, comments on rear side of an auto.. etc.//.
all should a valid comments from a wise person. who ever gives more number of proofs point is the right..Are you ok with this? you paste on your proofs on your website I will reply my comments on my website. bcos we don't have to trust each other///
KAVITHA PLEASE REFER Wise man like SAI BABA, SANKARACHARY, ASHOK SINGHAL, PAUL THAKARAY, ATHVANI,UMA BHRATHY, etc...
ஐயா சப்தரிஷி,
எதுக்குங்க இத்தனை டென்ஷன், நானா உங்கள் பின்னாடி வந்து என்னுடைய எழுத்தை படிச்சி, முதலில் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். என்னவோ நீங்களே வந்து படிச்சிட்டு, நீங்களே ஒரு முடிவு செய்துக்கிட்டு BP ஐ அதிகம் ஆக்கிகிட்டீங்க போல இருக்கு.?
நம்முடைய கருத்துக்கு ஒத்த கருத்து இல்லையா?.. நம்மால் இதை பொறுத்துக்கொள்ள முடியாதா?.. பேசாம போயிடுங்க.. அந்த அளவு கூட பக்குவம் இல்லாதவர்கள் கடவுளை பற்றி பேசி என்னங்க பிரயோசனம். அதிகமாத்தான் சத்தம் போட்டுட்டு போயிருக்கீங்க போல இருக்கிறது. ம்ம் என்ன செய்யறது உங்களால் முடிந்தது இதுவே.
முதலில் தைரியத்தை பற்றி நீங்க பேசறது ஆச்சரியமா இருக்கு. உங்க சொந்த பெயரில் ஒரு பின்னூட்டம் கூட போட தைரியமில்லாத நீங்கள் என்னோட தைரியத்தை பற்றி எப்படிங்க பேசறீங்க..? உங்களை பொருத்தவரை நீங்கள் சொல்லுவது பேசுவது சரிதானே. .அப்புறம் ஏங்க முகத்தை மறைத்துக்கொள்கிறீர்கள்.
சரி இப்ப விஷயத்துக்கு வருவோம்.
//கவிதாம்மா: DNA, அது, இது என்று ஜல்லியடிப்பதை நிறுத்தவும்.//
உங்கள் பதிவில் நான் வந்து பேசியிருந்தால் அது தான் ஜல்லி என்னுடைய பதிவில் என்னுடைய கருத்தை சொல்லியிருக்கிறேன்.. அதனால் இனி நீங்கள் என் பதிவில் இப்படி ஜல்லி அடிப்பதை நிறுத்திவிட்டு...... உங்களின் காழ்புணர்ச்சியை நல்லவிதமாக எழுதுங்கள். நீங்கள் யாரென்பதை தெரிந்து இதை சொல்கிறேன்.
//ஒருவருடைய DNA சரி. அதை ஒப்பிட்டுப் பார்க்க அவர்களின் தந்தை என்று சந்தேகப்படும் நபர்(கள்)ன் DNA தேவை.//
அப்படியாங்க? அடடா..! எனக்கு நீங்க சொல்லி இப்பதாங்க தெரியும். எத்தனை அறிவுபூர்வமான விளக்கம் நன்றிங்க..:)
//அந்த சந்தேக லிஸ்டில் ஆள் சேர்க்கவே ஒரு தாயின் உதவி தேவை. என்ன தான் நீங்கள் விஞ்ஞானம் என்று சப்பைக்கட்டு கட்டினாலும், அதனால் விளக்க முடியாத எத்தனையோ விஷயங்கள் உலகத்தில் உள்ளன / இனிமேலும் இருக்கும்.//
அப்படியாங்க..? அடடா.. இதுவும் கூட எனக்கு தெரியாதுங்க.. இப்படி பல உண்மைகளை எனக்கு விளக்கி சொன்னதற்கு நன்றிங்க.. அப்புறம்..?!!
//இப்போது நாமிருக்கும் உலகில், தவறுகள் குறைவாக நடப்பது தெய்வங்களின் உறைவிடங்களாகக் கருதப் படும் கோவில்களில் தான். //
ஓஓஓஓஒ அப்படியாங்க.. ? இதுவும் எனக்கு புது விஷயம் தாங்க. ஏன்னா கோயிலிருந்து வெளியில் கொண்டு வந்தாங்க அது தவறு. உள்ள இருக்கறவங்க என்ன செய்தாலும் எதை கொண்டு சென்றாலும் அது வெளியில் தெரிய வாய்ப்பே இல்லைங்க.
//நீங்கள் சீர்திருத்தவாதியாக உங்களை முன்னிறுத்த முயற்சிப்பதற்கு கோவில்களை விட வேறு எத்தனையோ இடங்கள் உள்ளன. //
அது என்ன என்ன என்றும் சொல்லி இருந்தீங்கன்ன இன்னும் நல்லா எனக்கு தெளிவா புரிஞ்சி இருக்கும். மறந்துட்டீங்களா?
//உங்கள் வீட்டு சுவற்றில் அசிங்கம் பண்ணுபவனை தட்டிக் கேட்கும் தைரியத்தை முதலில் வரவழைத்துக் கொள்ளுங்கள். அங்கெல்லாம் முதலில் போய் திருத்திவிட்டு பிறகு சமய நம்பிக்கைகளைப் பற்றி யோசியுங்கள்.//
சரியா சொன்னீங்க அதனால் தான் உங்களை போன்றவர்களை நான் என்னுடைய எழுத்தை படிக்க சொல்லி வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை என்று மிக தெளிவாக முதலிலேயே சொல்லிவிட்டேன். எனக்கு உபதேசன் செய்வதை நிறுத்திவிட்டு முதலில் உங்களின் உண்மையான திருநாமத்துடன் வந்து என்னுடன் தைரியமாக பேசுங்கள், அது உங்களால் முடிந்தால்..
//உங்களுக்கு தெரிந்ததே உலகம் என்று யோசிக்காமல், மேலும் தேடுதலைத் தொடருங்கள்.//
சரிங்க நீங்க சொல்லிட்டீங்க.. இனிமே அதாங்க வேலையே தேடல் தேடல் தேடல் தான்.
//அதைவிடுத்து பாலாபிஷேகம் அனாவசியம், அதை தானமாக குடு என்று உளறுவதில்லை சீர்திருத்தம்.//
உளரிட்டேனா..?!! இது வரைக்கும் எனக்கு தெரியலைங்க. இப்பத்தான் நீங்க என் அறிவு கண்ணை திறந்து வைத்து இருக்கீங்க. ரொம்ப நன்றிங்க. நான் உங்களை போல் அவ்வளவு அறிவும், உலக ஞானமும் பெற்றவள் இல்லைங்க..
//அதே ஏழைகளிடம் அதே பாலினைக் கொடுத்து, நீங்கள் குடியுங்கள் என்று குடுத்துப் பாருங்கள். எத்தனை பேர் அதை இறைவனுக்கு படைப்பதே மேல் என நினைப்பார்கள் என்பது புரியும். நம் சமுதாயத்தில் சமயம் வெறும் வயிற்றுப் பாடல்ல. எப்படிப் பட்ட தியாகங்கள் புரிவதற்கும் நம்மை செம்மைப் படுத்தியுள்ளது நம் சமய நம்பிக்கைகள்.//
ஐயா நீங்கள் கொடுப்பதை பற்றி எல்லாம் எனக்கு உரை நிகழ்த்த வேண்டாம். எப்படி கொடுக்க வேண்டும், யாருக்கு கொடுக்க வேண்டும் எதை கொடுத்தால் அவர்கள் மகழ்ச்சி அடைவார்கள் என்பது தெரியும். உங்களை போன்றவர்களுக்கு தான் கடவுள் என்ற பெயரில் நீங்கள் செய்த பாவங்களை குறைக்க அபிஷேகம் செய்து மன சாந்தி அடைவீர்கள்.
//இதென்ன குவாட்டருக்கும், பிரியாணிக்கும் சேரும் குஞ்சுக் கும்பல் என நினைத்தீர்களா? அங்கு போய் உங்கள் சீர்திருத்த கருத்துக்களை ஓதுங்கள். சமய விஷயங்களில் வேண்டாம்.//
சொல்லிட்டா போச்சி, என்னவோ தத்தவும் சொல்லிட்டீங்க போல இருக்கு..!! ஆனாலும் தத்தவும் ஒரு கிக்’ தான் இருக்குங்க..
உங்களின் ஆழ்ந்த அறிவுபூர்வமான அறிவுரைக்கு மிக்க நன்றிங்க..
அன்பே சிவம் !! :)))))))))
//KAVITHA PLEASE REFER Wise man like SAI BABA, SANKARACHARY, ASHOK SINGHAL, PAUL THAKARAY, ATHVANI,UMA BHRATHY, etc...//
நன்றி தரண்...:)) அதான் செய்யலாம்னு இருக்கேன்..
ஏன்னா பெரியாரையே வைரவன் 'not wise' லிஸ்ட் ல சேர்த்துட்டாரு..
கவிதா,
அருமையான கருத்துக்கள் விதண்டாவாதங்களுக்கு உங்கள் பதில் சூப்பர்.
பாராட்டுக்கள் !
கவிதா,
அருமையான கருத்துக்கள் விதண்டாவாதங்களுக்கு உங்கள் பதில் சூப்பர்.பாராட்டுக்கள் ! //
நன்றி கோவி. என்ன செய்யறது நாமும் விதண்டாவாதம் செய்ய கூடாதுன்னு தான் பார்க்கிறோம்.. ஆனா எங்க விடறாங்க..
http://manamay.blogspot.com/2007/05/blog-post.html
Post a Comment