சென்னை மாநகரத்து போக்குவரத்து நெரிசலில் இரு சக்கர வாகனம் ஓட்டுவது என்பது இப்போது எல்லாம் மிக சிரமமான, tension ஆன விஷயமா போச்சு. அதில் இந்த ரோமியொக்கள் கொடுக்கும் தொல்லைகளை என்னவென்று சொல்வது. அவர்கள் செய்யும் சில இடையூர்கள் விபத்தை உண்டாக்கி விடுமோ என்று பயமாக இருக்கிறது.
இரு சக்கர வாகனம் வாங்கலாம் என்று முடிவு செய்தவுடன் சில வாகனங்களை (Model) நான் வேண்டாம் என்று சொல்ல, என் கணவரும், என் அண்ணனும் சென்று scooter book செய்துவிட்டு வந்து, அதற்கான காரணக்காரியங்களை சொல்லி என்னை ஓட்ட பழக சொன்னார்கள். இதில் என் அண்ணனின் பங்கு அதிகம். சென்னை, அண்ணாசாலையில் என் பின் அமர்ந்து எனக்கு பயிற்சி கொடுத்தார். அதற்கு பிறகு நான் தனியே பழகி வேகமாக ஒட்டவும் பயின்றேன்.
Scooter என்பது ஆண்களுக்கான வண்டி, காலால் உதைத்து start செய்ய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும்.பெண்களுக்கு நடைமுறையில் கொஞ்சம் சிரமம் தான். நிறைய முறை உதைக்கும் போது கால் கொலுசு சிக்கி இழுத்து காலில் இரத்தம் வந்திருக்கிறது. வீட்டில் ஒருமுறை உதைத்து start செய்து விட்டால், அதன் பிறகு மாலையில் அலுவலகத்தில் ஒருமுறை. அவ்வளவுதான். கொஞ்ச நாட்களில், நன்றாக பழகிக்கொண்டேன்.
பழகிய பிறகு கூட, சிக்னலில் வண்டி நின்று போனால், ஆண்களை போன்று அப்படியே start செய்ய தெரியாது. வண்டியை ஒரம் கட்டி, stand போட்டு தான் start செய்வேன். அலுவலகத்தில் நண்பர்கள் இதற்காக என்னை கிண்டல் செய்வது உண்டு. சிக்னலில் இதனால் சிலமுறை பலரிடம் திட்டும் வாங்கி இருக்கிறேன். பஸ் ஓட்டுனர்கள் அதில் முதலிடம். “சாவு கிராக்கி, நீயெல்லாம் Scooter ஓட்டவில்லை என்று சென்னையில் யாராவது அழுதார்காளா?..வில் தொடங்கி..எனக்கு அர்த்தம் புரியாத கெட்ட வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்கள். அந்த வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியவில்லையே என்று கவலை பட்டதுண்டு..
125cc, நல்ல வேகம் தரும் இருந்தாலும், என் மேல் அக்கரை கொண்ட அனைவரும் வேகம் வேண்டாம் என்று எப்போதும் உபதேசம். நானும் சரி சரி என்று சொல்லுவேனே தவிர வேகம் செல்வதில் எனக்கு அப்படி ஒரு ஆர்வம். என் நண்பர் ஒருவர், ஆண்கள் நடுரோட்டில் விழுந்தால் பரவாயில்லை, ஆனால் ஒரு பெண் (புடவை அணிந்து) நடுரோட்டில் விழுந்தால், விபத்து என்றாலும் பார்க்க சகிக்காது என்று சொல்லுவார். Scooter ஓட்டுதல் என்ற சிறிய விஷயத்தை ஆண்களை போல் செளகரியமாக செய்ய முடியவில்லையே என்று நினைத்தது உண்டு. இது போன்ற நிறைய விஷயத்தில் ஆண்களை போல் அல்லாது, பெண்களுக்கு Practical difficulty இருப்பதை அனுபவம் மூலம் உணர்ந்து இருக்கிறேன்.
சரி, விஷயத்திற்கு வருவோம். நான் வேகமாக செல்வதானாலோ என்னவோ எனக்கு நிறைய ஆண்கள் இடையூர்கள் கொடுத்திருக்கிறார்கள். ஒரு பெண் தன்னை முந்துவதா என்று நினைப்பார்களோ என்னவோ..பின்னால் வேகமாக துரத்தி வந்து..ஒரு கட் கொடுப்பார்கள், நான் தடுமாறுவேன், அதில் அவர்களுக்கு ஆத்ம திருப்தி. சிலர், என்னை கடந்து சென்று, (என்னை தோற்கடித்து விட்டாராம்) ஏளனமாக (நக்கல்) பார்த்து விட்டு செல்வார்கள். சிலர் ஹெல்மெட்டின் முன் கண்ணாடியை தூக்கி, திருமுகத்தை காட்டி கட் கொடுத்து செல்வார்கள். துரத்தி வருகிறார்கள் என்பதை கூட அவர்கள் பலமுறை என் முன்னும் பின்னும் சென்றும், கட் கொடுத்தாலுமே உணர்வேன். சில சமயம், பேருந்தில் செல்லும் ஆண்களும், வண்டி ஓட்டும் எங்களின் கவனம் சிதறும் வகையில், பாட்டு பாடுவது, கூச்சல் செய்து கிண்டல் செய்வதும் உண்டு.
என் அலுவலகத்திலெ கூட ஒருவர் இருக்கிறார், இருவரும் ஒரே நேரத்தில் வண்டி எடுத்தாலும், நான் கொஞ்சம் வேகம் எடுத்து முன்னே சென்று விட்டால் பொறுக்க மாட்டார்..பின்னாலேயெ துரத்தி முன் செல்ல முனைவார், உபதேசம் வேறு செய்வார்(ஓடும் போதே)..அலுவலகத்திலும் உபதேசம் தொடரும். அதனால், அவர் போய் தொலைக்கட்டும் என்று நான் பின்னால் செல்வதும் உண்டு. எல்லோரும் அப்படி இல்லை என்பதும் உண்மை. நான் Scooter ஒட்டுவதை பெண்களை விட ஆண்களே அதிகம் உற்சாகப்படுத்தி உள்ளார்கள் என்பதை மறுபதற்கு இல்லை.
பெண்களை கிண்டல் செய்யவும், அவர்கள் தங்களை மிஞ்சிவிட கூடாது என்பதை உணர்த்துவதற்கும் சாலைகளா சிறந்த இடம்?. மெதுவாக செல்வதினால் ஆண்களின் கவனம் என் மேல் திரும்பாது என்றாலும், மெதுவாக செல்லும் போது கூட சில சமயம் தடுமாறும் அளவிற்கு சிலர் திடீரென குறுக்கே செல்வதும், U கட் போடுவதும் சரியா?. இது எனக்கு மட்டும் இல்லை, நான் கவனித்த வரையில் இப்படித்தான் பொதுவாக நடக்கிறது.
கிண்டல் செய்யவும், சேட்டைகள் செய்யவும் சாலைகள் சிறந்த இடம் இல்லை என்பதை யோசிப்பீர்களா தோழர்களே?
அணில் குட்டி அனிதா:- ம்ம்..முடிச்சிட்டீங்களா கவிதா?. இவ்வளவு எழுதினாங்களே..ஒரு நல்ல விஷயத்த உங்க கிட்ட இருந்து எல்லாம் மறச்சிட்டாங்க.. அதாங்க.. ஆட்டொவோட நேருக்கு நேரா மோதி சில்லற பொறுக்கனதத்தான்.. சில்லறனா சும்மா இல்லை..அம்மனி ஒரு மாசம் வீட்டுல உட்கார்ந்து எண்ணி பார்க்கற அளவுக்கு பொறுக்கினாங்க.... பாவம் அவங்க hubby தான் நோட்டு நோட்டா டாக்டருக்கு செலவு செய்தாரு. இவங்க ஒரு கால்ல மாவுக்கட்டு பொட்டுக் கிட்டு குதிச்சி குதிச்சி நடந்தாங்களே..அப்பப்பா..! கண் கொள்ளா காட்சிங்க.. இதுல நலம் விசாரிக்க வந்த யாருமே..நாலு வார்த்தை நல்லாத சொல்லல...ஒரே புகழாரம் தான்..போங்க...”வேகமா போகாதேன்னு சொன்னோம் கேட்டியா..ன்னு” தான்..வரவங்க எல்லாம் இதையே சொல்லி சொல்லி....பாவம் இவங்க நொந்து நூலானது..நமக்கு இல்லை தெரியும்..!
ரோட் ரேஸ் ரோமியோக்கள்........
Posted by : கவிதா | Kavitha
on 14:51
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
12 - பார்வையிட்டவர்கள்:
பெண்களுக்கு மட்டுமில்லை கவிதா மெதுவாக சிக்னல் பார்த்துப் போகும் ஆண்களுக்கும் இந்த தொல்லைகள் உண்டு ஏதோ செய்யக் கூடாத தவறை நாங்கள் செய்வதைப் போல...
ஆனால் இரு அட்வைஸ் உங்களுக்கு போக்குவரத்து நிறைந்த சாலைகளில் 50 கி.மீ வேகம் உட்சமாக இருக்கட்டும் 40 கி.மீ சரியான வேகம் உங்கள் கண்ட்ரோல் உங்களிடம் இருக்கும்
அம்மணி... பசங்க மேலேய குத்தம் சொல்லுறதுல அர்த்தம் இல்லே... சென்னையில் வண்டு ஓட்டும் அம்மணிகள் திரிஷா ரேஞ்சுக்கும், ஐஸ்வர்யா ராய் ரேஞ்சுக்கும் உடை அணிந்து வந்தால்?
எப்படியாப்பட்ட விசுவாமித்திரர்களுக்கும் தவம் கலையத்தானே செய்யும்....
(குறிப்பு : சென்னையில் ஒழுங்காக சாலை விதிகளை மதித்து 40 கி.மீ வேகத்தில் மட்டுமே வண்டு ஓட்டும் விசுவாமித்திரன் நான்)
பிரியன் நன்றி.. ஆனால்..இங்கேயுமா..அட்வைஸ்!..முயற்சிக்கிறேன்.Thanks again for your care.
விசுவாமித்திரரே!..நன்றி..உங்கள் தவத்தை நீங்கள் கலைக்கலாம்..வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால்..தயவு செய்து.சாலையில்..வேண்டாமே!..
கவிதா எப்பிடியோ பைக் ஓட்டுர மகாராணியாயிட்டீங்க.அப்பிடியே டைம் இருந்தா நமக்கும் வண்டி ஓட்ட கத்து தருவேளா! அப்புறம் டெய்லி ஒங்க கூடவே வருவேனா யார்கூட தொந்தரவும் இருக்காது பாருங்க!
மன்னிக்கனும் செயகுமார், நான் யாரையும் எனக்கு தொந்தரவாக அழைத்து செல்வது இல்லை. (குறிப்பாக ஆண்களை)
நீங்கள் சொல்வதில் நிறைய நிஜம் இருகிறது. மரபியல் ரீதியாக, பெண்ணிடம் தோற்றுப்போவது (பைக்கில் ஒருவரை முந்திச் செல்ல விடுவது தோல்வி அல்ல.. பட்) பல ஆண்களுக்குப் பொறுக்க முடியாத அனுபவம் என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். அதனால் சலிப்படையத் தேவையில்லை. பல ஆயிரம் ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட எண்ணங்கள் மாற வேண்டுமானால் சில ஆண்டுகளாவது பொற்த்துத் தான் ஆக வேண்டும்.
அண்ணாசாலையத் தவிர்க்க சில ஆண்களும் விரும்பத்தான் செய்கிறார்கள்.
-குப்புசாமி செல்லமுத்து
//பல ஆயிரம் ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட எண்ணங்கள் மாற வேண்டுமானால் சில ஆண்டுகளாவது பொற்த்துத் தான் ஆக வேண்டும்//
கண்டிப்பாக பொறுத்துதான் போகிறோம்..வேறு என்னதான் செய்ய முடிகிறது..அதுவும் சாலையில்..!..
என்னாது 125cc யா?
யம்மாடியோவ்??????????
scooter name என்ன?(ஒரு ஆவல்தான் சில்லறையோட அளவு தெரியுமில்ல)..
தைவான்ல ஆண்களும் பெண்களும் நம்ப ஊர் Kinetic honda மாதிரியான வண்டியைத்தான் உபயோகிக்கிறார்கள்.
இங்கு Bike அவ்வளவாக யாரும் விரும்புவதில்லை...
பெண்கள் பறப்பார்கள்..நான் வழிவிட்டுவிடுவேன்(ரொம்ப அழகா இருப்பாங்க..அழக கஷ்டப்படுத்த மனசு வரதுல்ல அதான்..ஹி..ஹி..ஹி..ஹி)
நன்றி தரண், LML Sensation தான்,
//பெண்கள் பறப்பார்கள்..நான் வழிவிட்டுவிடுவேன்(ரொம்ப அழகா இருப்பாங்க..அழக கஷ்டப்படுத்த மனசு வரதுல்ல அதான்..ஹி..ஹி..ஹி..ஹி)// ரொம்ப வழியுது தொடச்சிக்கோங்க....
/*
பெண்கள் பறப்பார்கள்..நான் வழிவிட்டுவிடுவேன்(ரொம்ப அழகா இருப்பாங்க..அழக கஷ்டப்படுத்த மனசு வரதுல்ல அதான்..ஹி..ஹி..ஹி..ஹி)
*/
தரண் இந்தமாதிரியான உண்மையைச் சொல்ல நிறைய தைரியம் வேணும் :) உமக்கு இருக்கு (தைரியமும்,வீட்டில் உதையும்)...
நல்ல பதிவு!!
இது ஆண்களின் வக்கிர புத்தியை காட்டுகிறது. "Teasing girls is a natural phenomenon of men but there is a limit".மனதில் ஆண் பெண் என்று பேதம் பார்ர்த்தால், இப்படி தான். வெளி நாட்டில் இது போன்ற வக்கிர எண்ண்ங்கள் குறிப்பாக ரோட்டில் இல்லை. குரங்கின் எண்ணத்தை எப்படி மாற்றுவது, கடுமையான சட்டத்தால் தான் ஒடுக்க வேண்டும். நான் முதல் அமைச்சனாக இருந்தால், முதலில் எல்லோருக்கும் கோவில் பிரசாதம் மாதிரி Driving Licence கொடுப்பதை தவிர்ப்பேன்.
Post a Comment