மனித வளத்தில் நூற்று க்கனக்கானவர்களுக்கு வேலை கொடுக்கும் போது உள்ள சந்தோஷமும் பெறும் வாழ்த்துக்களும், ஒரே ஒருவரை வேலை விட்டு எடுக்கும் போது எதிராக மாறிப்போகும்.
சிலர் நேருக்கு நேராக சாபம் கொடுப்பார்கள், சிலர் பின்னே சென்று சாபம் கொடுப்பார்கள், சிலர் குடும்ப பிரச்சனைகளை சொல்லி அழுவார்கள், கெஞ்சுவார்கள். சிலர் மிரட்டுவார்கள். இவர்களின் எல்லா வித மனநிலையையும் பொறுத்து போகவும் அதற்கு தகுந்தார் போன்றோ(அ)அதற்கு ஆட்கொள்ள படாமலோ முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். பொதுவாக அதிக அளவு சென்டிமென்ட்' எல்லாம் பார்க்க கூடிய சூழ்நிலைகள் வருவதில்லை. பெண்ணாக இருப்பதால், எதிராளி இதை அதிகம் எதிர்ப்பார்ப்பதும் உண்டு. அப்படி இல்லாத பட்சத்தில் அவர்களின் கோபமும், ஏமாற்றமும் அதிகமாவதை நான் உணர்ந்திருக்கிறேன். அலுவல் ரீதியாக உதவி செய்யமுடியாவிட்டாலும், தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு என்னால் முடிந்ததை அலுவலகத்துக்கு வெளியில் செய்ய முயற்சிப்பது உண்டு.
என்னுடைய அனுபவத்தில் எந்த வித உச்சக்கட்ட மனநிலைக்கும் தள்ளப்படாமல் வேலையை விட்டு சிலரை தூக்கியே ஆகவேண்டும் என்ற நிலைமை வந்து, அவர்களை வேலையை விட்டு தூக்கி இருக்கிறோம். என்னுடைய சிபாரிசின் காராணமாக வேலை இழந்தவர்களும் உண்டு. இதை நினைக்கவும் செய்யவும் எனக்கே மிகவும் கடினமாக /வேதனையாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் எந்த காழ்புணர்ச்சியும் இல்லாமல் கம்பெனி நலம் கருதி இப்படிப்பட்ட தீர்க்கமான முடிவுகள் எடுக்கவேண்டியுள்ளது. மிகவும் கண்டிப்புடன், இரக்கம் என்பதே இல்லாமல் பேசும்படியாக இருக்கும். ஆனால் அவர்களிடம் அப்படி பேசக்கூடிய சூழ்நிலையை அவர்கள் தான் ஏற்படுத்துகிறார்கள் என்பதை அவர்கள் எப்போதுமே உணர்ந்ததில்லை.
சில முக்கிய காரணங்களாக எடுத்துக்கொள்வது :-
1. Discipline
2. Violation of safety rules or office rules
3. Performance - General inefficiency (quality, quantity,
accuracy)
4. Carelessness / Negligence
5. Discourtesy towards fellow colleagues
6. Discourtesy towards client/guests
7. Frequent late attendance
8. Irresponsible
9. Insubordination / Disobedience
10. Irregular attendance
11. Quarrelsome
12. Smoking in restricted area
13. Clocking another staff attendance/
altering the attendance Register
இதில் எல்லா காரணங்களுக்குமே முதலில் மெமோ கொடுத்தோ, கவுன்சிலிங் செய்தோ அவர்களுக்கு திருந்திக்கொள்ளா ஒன்று அல்ல 3, 4 முறை வாய்ப்பு கொடுக்கத்தான் செய்கிறோம். ஆனால் தொடர்ந்து உதாசினப்படுத்தி வந்தால் அவர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டியுள்ளது. பெறும்பாலும் முதல் விஷயமாக Discipline காரணம் ஆகிறது. இதில் ஒன்றிலேயே 4- 13 ஆம் பாயிண்டு வரை அடங்கிவிடும். மிக மோசமாக நடந்து கொள்ளும் சிலரை பார்த்து இருக்கிறேன்.
சொந்த வேலைக்காக இணையத்தையும், கணினியையும் உபயோகிப்பது, அலுவலகத்தின் முக்கிய கோப்புகளை எடுத்து செல்வது, பணக்கையாடல், அலுவலக முக்கிய ரகசியங்களை வெளியில் சொல்லி காசாக்குவது அல்லது தன் சொந்த வேலைக்கு பயன்படுத்துவது என்று தவறுகளை சுட்டிக்காட்டி கொண்டே போகலாம்.
ஒரு பெண்ணாக இருப்பதால் மனிதவளத்தில் நிறைய ஆதாயம் இருக்கிறது, ஊழியர்கள் சட்டென்று கோபம் கொண்டு பேசமாட்டார்கள், கம்பெனியின் மீது கோபம் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அதை எங்களிடம் காட்ட மாட்டார்கள், பிரச்சனை தரவேண்டும் என்று நினைத்தாலும், எங்களுக்காக போனால் போகட்டும் என்று விட்டுவிடுவார்கள். பிரச்சனை கொடுக்க ஆரம்பித்தால் அதன் ஆரம்பம் மனிதவளமாகவும் அதில் இருக்கும் ஊழியரையும் தான் முதலில் பிரச்சனைக்கு உள்ளாக்கும், அதனால் வேண்டாம் என்று நினைப்பார்கள். இவை எல்லாவற்றிக்குமே "பெண்" என்ற ஒரே ஒரு காரணம் தான். அதே சமயம் சில டிஸ்அட்வான்டேஜ்' களும் உண்டு. பெண்தானே.. என்று மிரட்டி பார்க்கும் ஊழியர்களும் உண்டு. :). அவர்களையும் எப்படி சமாளிக்க வேண்டும் என்ற திறமையையும்,அறிவையும் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவம் மூலமே தெரிந்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. இவை எல்லாம் கண்டிப்பாக ஏட்டு பாடம் இல்லை அனுபவப்பாடம் மட்டுமே கற்றுத்தரும்.
மனிதவளத்தில் முடிவுசெய்து வேலையை விட்டு எடுக்கும் ஆட்கள் மிக குறைவே, மற்ற பிரிவுகளில் இருந்தும், உயர் அதிகாரிகளிடம் இருந்து வரும் உத்தரவுகளின் பேரிலும் தான் மனிதவளத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடைசியாக எழுத்தின் மூலம் உத்தரவு மனிதவளத்தின் வழியாக எங்களின் கையெழுத்தை எடுத்து செல்வதால், ஊழியர்களின் கோபத்திற்கும், ஆதங்கத்திற்கும் இறுதியில் நாங்களே பொறுப்பாளிகளாக இருக்க வேண்டியுள்ளது.
இந்த பதிவு 1000 கணக்கில் ஊழியர்களை வேலையை விட்டு தூக்கும் கம்பெனிகள் சொல்லும் காரணங்களுக்காக எழுதியது இல்லை. பொதுவாக ஊழியர்கள் செய்யும் தவறுகளால் எப்படி அவர்கள் வேலையை இழக்கிறார்கள் என்பதை சொல்ல எழுதியது.
அணில் குட்டி அனிதா: சரி...ரைட்டு!! (டாக்ஸு சாக்லேட்டு அண்ணன் கோபி'க்கு) எனக்கு தூக்கம் வருது !! நான் கெளம்பறேன்.... நீங்களும் தூங்குங்க.. கீழ அம்மணி ரெடியா சோபா போட்டு வச்சி இருக்காங்க பாருங்க..போங்க.. நிம்மதியா தூங்கிட்டு கிளம்புங்க..
பீட்டர் தாத்ஸ் :- The human mind is our fundamental resource.
வேலையை விட்டு தூக்க முக்கிய காரணங்கள்
Posted by : கவிதா | Kavitha
on 17:12
Labels:
கார்த்தி ஆபிஸ்
Subscribe to:
Post Comments (Atom)
15 - பார்வையிட்டவர்கள்:
//சொந்த வேலைக்காக இணையத்தையும், கணினியையும் உபயோகிப்பது, அலுவலகத்தின் முக்கிய கோப்புகளை எடுத்து செல்வது, பணக்கையாடல், அலுவலக முக்கிய ரகசியங்களை வெளியில் சொல்லி காசாக்குவது அல்லது தன் சொந்த வேலைக்கு பயன்படுத்துவது//
சரியாத்தான் சொல்லுறீங்க..
இது நெறைய எடத்துல நடக்குது..
பாத்து திருந்திக்கிட்டா நல்லது..
இல்லாட்டி கஸ்டம் தான்..
நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..
நல்ல பதிவு. எனக்குக் கீழ் வேலை புதிதாக வருகின்றவர்களுக்கு சொல்வது இது தான்... ‘இந்த நிறுவனத்தில் வேலை தெரியவில்லை, புரியவில்லை என்று கவலைப்படாதீர்கள். அனைத்து கொலிக் களுடனும் சேர்ந்து ஆர்வத்துடன் வேலை செய்யத் தொடங்குங்கள்.. வேலையில் தானாக எக்ஸ்பர்ட் ஆகி விடலாம்’.. ஆனால் கடைசியில் நமக்கே ஆப்படிக்க டிரை பண்ணும் போது தான்... நாம சுயத்தைக் காட்டுவது.
//ஆனால் கடைசியில் நமக்கே ஆப்படிக்க டிரை பண்ணும் போது தான்... நாம சுயத்தைக் காட்டுவது.//
அதே!
@ ரங்கன் வாழ்த்துக்கு நன்றி
--------------------------
@ தமிழ் பிரியன் -
//ஆனால் கடைசியில் நமக்கே ஆப்படிக்க டிரை பண்ணும் போது தான்... நாம சுயத்தைக் காட்டுவது.//
அதையும் எப்படியும் ஹேண்டல் பண்ண பாருங்க.. :)
நீங்கள் எத்தனை தான் காரணங்கள் ,சமாதானங்கள் சொன்னாலும் உங்களின் மனதுக்கு மட்டுமே தெரியும்
வேலையை விட்டு நீக்கப்படும் ஜீவன்களின் இல்லத்தில் ஒரு குடும்பம் காத்துகிடக்கிடக்கிறது , அவனின் ஆதரவுக்கும் பொருளாதார தேவைக்கும்
தோழமையுடன்
ஜீவா
ஜீவா, வாங்க..!! :)
ஒருவரை எந்த வித காரணங்கள் இன்றி வேலையை விட்டு தூக்குவது இல்லை, குறிப்பாக நான் செய்வது இல்லை.
அலுவலகம் - என்று வரும் போது அதற்கென்று இப்படித்தான் இருக்கவேண்டும் ஒரு ரூல்ஸ் இருக்கிறது, இல்லை நான் இப்படித்தான் இருப்பேன் என்று நம் இஷ்டத்திற்கு அங்கே இருக்க முடியாது. நமக்கு சம்பளம் கொடுப்பவர் சொல்லுவதை கேட்டுத்தான் ஆகவேண்டும், இல்லையென்றால் நமக்கு பிடித்தமான அல்லது நமக்கு தகுந்த இடத்தில் நாம் வேலை செய்யவேண்டும்.
மலைசார்ந்த இடத்தில் இருந்து ஒருவரை என் தோழியின் சிபாரிசின் பேரில் கடை நிலை ஊழியர் வேலைக்கு அமர்த்தி, அவருக்கு அ முதல் ஆரம்பித்து எல்லா அலுவலக வேலையை கற்றுக்கொடுத்து இருந்தேன். ஒன்றுமே அறியாத கிராமத்திலிருந்து வந்த இளைஞர் அவர். அவர் வீட்டின் முதல் பிள்ளை, குடும்ப பொறுப்பு இருக்கிறது, கஷ்டப்படும் குடும்ப சூழ்நிலை. எல்லாமே அந்த பிள்ளைக்கு தெரியும்.
ஆனால் சேர்ந்து ஒரு மாதத்தில் தான் தெரிந்தது எல்லோரும் மாலை வீட்டுக்கு சென்றவுடன் அலுவலகத்தில் தடைசெய்யப்பட்ட பல இணைய படங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்பது, முதல் முறை என்பதாலும், வேலைக்கு புதிது என்பதாலும் அவருக்கு அறிவுரை சொல்லப்பட்டது. இதில் குறிப்பிட வேண்டியது, அவருடைய வேலைக்கு அவர் கணினிகளை உபயோகப்படுத்தவே கூடாது. அதுவே முதல் தவறு.
இதற்கு பிறகும் ஒன்று அல்ல, மூன்று வேறு வேறு கணினிகளை இதற்காக மட்டுமே உபயோகப்படுத்தியது தெரிந்தது. இதில் ஒரு பெண் ஊழியர் உபயோகிக்கும் கணினியும் ஒன்று.
அவர் குடும்ப சூழ்நிலை கருதி.. இதற்கு பிறகும் கூட நான் அவருக்கு அறிவுரை செய்து, ஒழுங்காக இருக்க சொல்லி சொன்னேன். இருக்கிறார் என்றும் நம்பினோம்.
அவசியம் இல்லாமல் எல்லா கணினிகளின் பாஸ்வேர்ட் இவருக்காக மட்டுமே மாற்றப்பட்டது..
அதற்கு பிறகும், போனமாதம் ஒரு நல்ல நாளில் அவர் இதற்கு பிறகு சர்வரில் உட்கார்ந்து இந்த படங்களை பார்த்தது தெரியவந்தது.
:( இதற்கு பிறகு என்ன செய்ய முடியும் என்பதை நீங்கள் சொல்லுங்கள். யாருடைய அனுமதியையும் நான் பெறவில்லை.. ஸ்பாட் டெர்மிநேஷன் செய்யவேண்டிய சூழலுக்கு அவர் என்னை கொண்டுவந்தது கண்டிப்பாக என் தவறல்ல..
இப்படி பல கதைகள் இருக்கிறது.. :)
//சொந்த வேலைக்காக இணையத்தையும், கணினியையும் உபயோகிப்பது, அலுவலகத்தின் முக்கிய கோப்புகளை எடுத்து செல்வது, பணக்கையாடல், அலுவலக முக்கிய ரகசியங்களை வெளியில் சொல்லி காசாக்குவது அல்லது தன் சொந்த வேலைக்கு பயன்படுத்துவது//
எங்களது நிறுவனத்தில் வேலைக்கு சேரும் நாளில் ஒரு படிவத்தில் மேற்கண்ட நடவடிக்கைகளில் ஈடுபடுபட மாட்டேன் என்று கையொப்பம் வாங்கிவிடுவார்கள். மீறிச் செய்பவர்களுக்கு முதல் முறை எச்சரிக்கை, இரண்டாவது முறையும் தொடர்ந்தால் விடைகொடுத்துவிடுவார்கள்.
தமிழ் வலைப்பதிவுகளில் துறைச் சார்ந்த பதிவுகளின் வருகை குறைவாக இருக்கும் வேளையில் உங்களது இந்தப் பதிவு உற்சாகத்தை அளிக்கிறது. மொக்கைப் பதிவுகளுக்கு 60 பின்னூட்டங்களும் (உங்கள் கதையைச் சொல்லவில்லை) துறைச் சார்ந்த பதிவுக்கு 6 பின்னூட்டமும் வருவதால் துறைச் சார்ந்த பதிவுகள் எழுதுவதை நிறுத்திவிட வேண்டாம். அவ்வப்பொழுது தொடர்ந்து எழுதுங்கள். கணினித்துறையைப் பற்றி எழுத பலர் இருக்கிறார்கள், ஆனால் மனிதவளத்துறைப் பற்றி எழுத பதிவர்கள் குறைவே. அதனால் தொடர்ந்து எழுதுங்கள்.
ராஜா நன்றி :)
//தமிழ் வலைப்பதிவுகளில் துறைச் சார்ந்த பதிவுகளின் வருகை குறைவாக இருக்கும் வேளையில் உங்களது இந்தப் பதிவு உற்சாகத்தை அளிக்கிறது. மொக்கைப் பதிவுகளுக்கு 60 பின்னூட்டங்களும் (உங்கள் கதையைச் சொல்லவில்லை) துறைச் சார்ந்த பதிவுக்கு 6 பின்னூட்டமும் வருவதால் துறைச் சார்ந்த பதிவுகள் எழுதுவதை நிறுத்திவிட வேண்டாம். அவ்வப்பொழுது தொடர்ந்து எழுதுங்கள். கணினித்துறையைப் பற்றி எழுத பலர் இருக்கிறார்கள், ஆனால் மனிதவளத்துறைப் பற்றி எழுத பதிவர்கள் குறைவே. அதனால் தொடர்ந்து எழுதுங்கள்.//
ஏன் இந்த புலம்பல்...:) பின்னூட்டத்திற்காக எழுதுவது இல்லை. போலி பிரச்சனைக்கு பிறகு பின்னூட்ட ஆப்ஷன் எடுத்துவிட்டு எழுதிவந்தேன். நல்ல விஷயங்களை எழுதவோ செய்யவோ என்னை பொறுத்தவரை தூண்டுதல், தடுப்பு் எதையும் என்னை பாதிப்பதில்லை.
அதனால் பின்னூட்டுங்களின் கணக்கு ஒரு பிரச்சனை இல்லை அது என்னை பாதிக்காது. 400 பேர் நேற்று இரவு வரை இந்த பதிவை படித்து இருக்கிறார்கள். படித்தது போதுமே.. :)
//ஏன் இந்த புலம்பல்...:) பின்னூட்டத்திற்காக எழுதுவது இல்லை.//
கவிதா, நீங்கள் அப்படி இருக்கலாம். ஆனால் பல நண்பர்கள் அப்படி உற்சாகப்படுத்த ஆள் இல்லாமல் எழுதுவதை நிறுத்தி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக நீங்களும் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே சொன்னேன் :-).
//துறைச் சார்ந்த பதிவுக்கு 6 பின்னூட்டமும் வருவதால் துறைச் சார்ந்த பதிவுகள் எழுதுவதை நிறுத்திவிட வேண்டாம். //
கண்டிப்பாக நிறுத்தமாட்டேன். எழுதுவது எனக்கும் சேர்த்து, என்னுடைய திருப்திக்காக, என்னுடைய பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடுகள் இவை... அதை பல விஷயங்களில் என் எழுத்து எனக்கே பயன்படுகிறது.. :)
நான் சோர்ந்து இருக்கும் போது என் அணில் குட்டியின் பதிவுகள் படித்து சிரித்து மகிழ்வேன்.. சில சோகமான பதிவுகளை படித்து..அட கடவுளே ஏன் இம்புட்டு அழுது தீர்த்து இருக்கிறோம் என்று நினைப்பேன்..
கேப்பஞ்கஞ்சி படித்து நண்பர்களின் பதில்களில் லயித்து போவேன்.. குறிப்பாக லிவிங்ஸ்மைல். எவ்வளவு நல்லா கருப்புவாகவே பதில் சொல்லி இருக்காருன்னு நாமும் எப்படி ஏமாந்து போயிருக்கிறோம் என்று கருப்புவின் பதிவை படிக்கும் போது நினைப்பேன்..
அடுத்து ஆண்கள் என்ற மிருங்கங்கள் என்ற வரலாற்றில் ஒரு சிலரால் (அ) பலரால் மறக்க முடியாத பதிவை படித்து ஆஹா.. எத்தனை ஆண்களின் கோபத்தை ஒரு சேர இன்று வரை பெற்று தந்த பதிவென்று நினைப்பேன்..
சோ.. எனக்கு என் எழுத்து முதலில் முக்கியமாக இருக்கிறது.. :)
//கவிதா, நீங்கள் அப்படி இருக்கலாம். ஆனால் பல நண்பர்கள் அப்படி உற்சாகப்படுத்த ஆள் இல்லாமல் எழுதுவதை நிறுத்தி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக நீங்களும் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே சொன்னேன் :-).//
ஆகமாட்டேன்.. :) நன்றி
//கண்டிப்பாக நிறுத்தமாட்டேன். எழுதுவது எனக்கும் சேர்த்து, என்னுடைய திருப்திக்காக, என்னுடைய பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடுகள் இவை... அதை பல விஷயங்களில் என் எழுத்து எனக்கே பயன்படுகிறது.. :)//
நன்றி. உங்களது எழுத்து மற்றவர்களுக்கும் பயன்படவே துறைச் சார்ந்த பதிவுகளை அவ்வப்பொழுது எழுதச் சொல்கிறேன்.
நல்ல பதிவு.
மனிதவள துறையின் பார்வையில் இருந்து "layoff" பற்றி கூறி இருக்கின்றீர்கள்.
ரொம்ப சென்சிட்டிவான ஏரியா தான் கவி!! i have also involved in 5 top executives terminations along with HR, மனதிர்க்கே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. பீட்டர் தாத்தா ஸ்டைலில் சொல்லப்போனா மவனே 'Every dog will have its day'
நன்றி ஷஃபி... !! :)
Post a Comment