வாழ்க்கை'யின் அர்த்தங்களை முழுமையாக தினந்தோரும் உணர்பவர் இந்த வெட்டியான் தான். எப்படிப்பட்டவருக்கும் கடைசியில் மிஞ்சுவது மண்தான். சில வாரங்களுக்கு முன் நடிகை அனுராதா (கவர்ச்சி நடிகை) யின் பேட்டியை காண நேர்ந்தது. 1980 களில் பல ஆண்களின் கண்களுக்கு விருந்தாக இருந்த கவர்ச்சி கன்னி. அப்போது எல்லாம் கவர்ச்சிக்காக தனியாக நடிகைகள் இருந்தார்கள். இப்போது.. :)))
மற்றொரு நடிகை, கண்களால் கவர்ச்சி சுனாமியை ஏற்படுத்தி ஆயிரக்கனக்கான ஆண்களை தன் வசப்படுத்திய சில்க் ஸ்மிதா பற்றிய ஒரு சில நினைவுகள். பொன்மேனி உருகுதே" பாட்டை ரசித்து பார்க்கும் அளவிற்கு எனக்கு அப்போது வயது இல்லை என்றாலுமே நான் ரசித்து பார்த்த ஒரு பாடல், இப்போது அந்த பாடலை திருப்பி பார்த்தால் அதில் கவர்ச்சி என்று எதுவுமே இல்லை.. கலை மட்டுமே இருப்பதாக தோன்றுகிறது. அப்படி ஒரு தெளிவான பார்வை இப்போது இருக்க காரணம் இப்போதைய நடிகைகளால் திணிக்கப்படும் தேவையற்ற கவர்ச்சி.
சரி விஷயத்திற்கு வருவோம், நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனார். நடிகை அனுராதா இவரை பற்றி கூறும் போது எத்தனை ஆயிரம் பேர் அவளின் உடலை பார்த்து ரசித்தார்கள், ஆனால் அந்த உடல் ஆஸ்பித்திரியில் ஆதரவற்று தனிசடலமாக ஈ'க்கள் மொய்க்க கிடந்தது. பார்க்கவே வேதனையாக இருந்தது, சகிக்காமல் விசிறி எடுத்து விசிறியவாறு இருந்தேன். என்றார்.
இது தான் வாழ்க்கை, ஏனோ ஒரு சில தினங்கள் சில்க் ஸ்மிதாவின் நினைவிலேயே நான் இருந்தேன்.. மரணம் என்பது பலருக்கு பேசக்கூடாத சங்கடமான, அபசகுனமான ஒரு விஷயம் தான் என்றாலும் எல்லோருக்கும் நடக்கவிருக்கும் உண்மை தானே.
மரணத்தை பற்றி பேசுவதில் தவறொன்றுமில்லை. நமக்கு தெரிந்து நடக்கலாம்.. தெரியாமலும் நடக்கலாம். ஆனால் நடந்தே தீரும் என்பது எழுதப்பட்டது. வேறு எந்த விஷயத்தையையும் நம்மால் நடந்தே தீரும் என்று சொல்லிவிட முடியாது. மரணத்தை தவிரத்து.
சரி இப்போது என்ன அதற்கு என்று யோசிக்க ஆரம்பித்தவர்களுக்காக சொல்ல வருவது , உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை நாம் பெற வேண்டும். மண்ணுக்குள், தீயிக்குள் போகும் இந்த உடலின் உறுப்புகளை தயவு செய்து தானம் செய்யுங்கள், கண் தானம் பற்றி முன்னரே பதிவிட்டு இருக்கிறேன்.
கண்தானம் பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருந்தாலும், உடல் உறுப்பு தானமும் அதை போலவே மிகவும் முக்கியமான ஒன்று. அதற்கு எடுத்துக்காட்டாக சமீபகாலமாக விபத்துகளில் உயிர் இழந்தவர்களின் உடல் உறுப்புகள் உடனனுக்குடன் மாற்றப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஒரு சிலரின் உயிர்கள் காப்பற்றப்பட்டன. எத்தனை உன்னதமான ஒரு செயல் என்பது அந்த உயிர் பெற்றவர்களை பார்க்கும் போதெல்லாம் தோன்றுகிறது.
உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு பெறுவோம், மண்ணுக்கு போகும் உடலின் மேல் ஆசை எதையும் வைக்காமல் உடல் உறுப்பு தானம் செய்வோம்.
நம்ம தாரணிபிரியா உடல் உறுப்பு தானம் எப்படி செய்யலாம் என்ற தகவலை இந்த பதிவில் எழுதியிருக்காங்க.. நாங்கள் செய்துவிட்டோம்.. அப்ப நீங்க?? !!
நன்றி தாரணிபிரியா. :)))
அணில் குட்டி அனிதா:- ஓ செய்துடலாமே. .கவி'கிட்ட இருந்து ஆரம்பிக்கலாம். .சரியா.. கவிக்கிட்ட என்னவெல்லாம் எடுக்க முடியும்னு பாக்கலாம்...
Eyes - பகல்ல பசுமாடு தெரியாது இருந்தாலும் ஒகே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்..ஒன்னும் தெரியாததற்கு இதை வச்சி சமாளிக்கலாம்
Lungs -ஒகே
Liver - டபுல் ஒகே
Kidneys - ட்ரிபிள் ஒகே
Heart - :)) ஹா ஹா ஹா.. அது தேறாது.. அதை மட்டும் எடுத்தா கவி மாதிரி ஆயிடுவீங்க சோ வேண்டாம்.. எஸ்கியூசுடு....
இது தவிர...
Brain - ஹி ஹி..அது இருக்கவங்க கிட்ட தானே எடுக்கமுடியும்.. :)))
Hands & Legs : -இந்த ரெண்டு ஐடம் மட்டும் உயிரோடு இருக்கும் போதே அடிச்சி ஒடச்சி எடுக்கவேண்டியது... சோ.. நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க.. எப்பன்னு சொல்லிட்டீங்கன்னா.. விடியோ கேம் மோட நான் ரெடி... :))))))
பீட்டர் தாத்ஸ் :-
1. We cannot live only for ourselves. A thousand fibers connect us with our fellow men.
2. Don't think of organ donations as giving up part of yourself to keep a total stranger alive. It's really a total stranger giving up almost all of themselves to keep part of you alive.
3. Don't take your organs to heaven with you. Heaven knows we need them here.
4. Be a blood and organ donor. All it costs is a little love.
வெட்டியான்
Posted by : கவிதா | Kavitha
on 13:16
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
22 - பார்வையிட்டவர்கள்:
//வேறு எந்த விஷயத்தையையும் நம்மால் நடந்தே தீரும் என்று சொல்லிவிட முடியாது. மரணத்தை தவிரத்து. //
110 % உண்மைங்க..
எமன் எப்பவும் நமக்காக வெயிட்டிங்..
நமக்காக உண்மையா காத்திருக்கும் ஒரே ஜீவன் எமன் தான்.
அதனால எமனை ரொம்ப வெயிட் பண்ண வெக்காம சீக்கிரம் எல்லாம் கிளம்புங்கப்பா..கிளம்புங்க.
இப்படிக்கு எமதூதன்.
ரங்கன்
110 % உண்மைங்க..
//
ரங்கு, சதவிகிதம் என்பது 100 தான் அதற்கு மேல் அதற்கு மதிப்பீடு இல்லை. 100% என்பது தான் சரி.:)
//இப்படிக்கு எமதூதன்.
ரங்கன்//
இனி என்னோட பதிவில் ஃபுட்டர் நோட் போடின்னா நான் தான் உனக்கு எமன்..!! சொல்லிட்டேன்!!
நல்ல பதிவு!
//இனி என்னோட பதிவில் ஃபுட்டர் நோட் போடின்னா நான் தான் உனக்கு எமன்..!! சொல்லிட்டேன்!!//
:))
//
Hands & Legs : -இந்த ரெண்டு ஐடம் மட்டும் உயிரோடு இருக்கும் போதே அடிச்சி ஒடச்சி எடுக்கவேண்டியது...
//
அக்காக்கு ஆதரவா வெப்பன்ஸ நா ஷ்பான்சர் பண்ணுறேன்..
அருமையான பதிவு. அதுவும் பீட்டர் தாத்ஸ்-ல்
//Don't think of organ donations as giving up part of yourself to keep a total stranger alive. It's really a total stranger giving up almost all of themselves to keep part of you alive.//
மிகவும் கவர்ந்தது.ஒரு வித்தியாசமான, நியாயமான அனுகுமுறையை மேலே சுட்டிக்காட்டிய வாக்கியங்கள் அளித்தது.
//மணிநரேன் said...
மிகவும் கவர்ந்தது.ஒரு வித்தியாசமான, நியாயமான அனுகுமுறையை மேலே சுட்டிக்காட்டிய வாக்கியங்கள் அளித்தது//
இவ்வாக்கியங்களைப் பற்றி இதையேதான் சொல்ல நினைத்தேன்.. நன்றி!!
உடல் உறுப்பு தானம் செய்ய எனக்கும் ஆசை உண்டு.வீணா மண்ணுக்கு போவது, உதவியாய் மனிதனுக்கு போகட்டுமே என்பது என் கொள்கை. ஆனா என்ன, வீட்டில் சொன்னதற்கு, முடியாது என்றுவிட்டார்கள். என்ன செய்வது?:(
@சிவா, மணிநரேன், கையேடு நன்றி :)
@சுரேஷ்குமார்... இதுக்கு பேரு ஆதரவா? சரிதான்.. :)
//வீட்டில் சொன்னதற்கு, முடியாது என்றுவிட்டார்கள். என்ன செய்வது?:(//
தமிழ்மாங்கனி, எதுவும் செய்ய வேண்டாம் விட்டுடுங்க.. :) அவங்களே ஒரு நல்ல நாளில் தெரிந்து கொள்வார்கள் :)
நல்ல பதிவு ;)
ஒரு டவுட்டு எதுக்கு இந்த பதிவுக்கு வெட்டியான்னு தலைப்பு!?
@choco, நான் நிஜமாக நினைத்தது என்னவோ "நேத்து ராத்தீரி யம்மா" என்ற தலைப்பு தான் அதற்கு காரணம் சில்க் ஸ்மிதா.. சரி மக்கள் இந்த தலைப்புக்கு படிக்க வருவார்கள் என்றும் நினைத்தேன். நம்ம மக்களோட ரசனை அப்படிஆச்சே. சரி அப்படி தலைப்பு வைத்து தான் இவர்களை படிக்க வர வைக்க வேண்டுமா என்று விட்டுவிட்டேன்.
வெட்டியான் - இறந்த உடல்களுக்கும் இவருக்கும் நிறைய தொடர்பு அதனால் இவரை டைட்டில் ஆக்கினேன். :))
உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸில் இடம் பெற்றுள்ளது.
வாழ்த்துக்கள்...
தகவலுக்கு நன்றி அறிவிலி, சென்று பார்த்தேன் :)
மரணம்,முந்தைய கவர்ச்சி நடிகைகள் பற்றி பட்டினத்தார் மாதிரி தொட்டு (ஆமா!அனுராதா சாமியாரிணி ஆகிவிட்டதாக கேள்விப் பட்டேன்!) தானத்தில் கொண்டு வந்து முடிச்சிட்டீங்க.நல்ல பதிவு.
@ ராஜ நடராஜன், நடிகை அனுராதாவின் பேட்டி கண்டு மிகவும் வருத்தப்பட்டேன். திரை'க்கு பின் அவர்களின் வாழ்க்கை கொடுமை.கணவர் விபத்தில் சிக்கி, கோமா ஸ்டேஜ் சென்று திரும்பவும் உயிருடன் இருக்கும் வரை ஒரு குழந்தை போல 11 வருடங்கள் வீல் சேரில் இருந்து இருக்கிறார். போராட்ட வாழ்க்கை. :(
ஆனாலும் அந்தம்மா எப்படியோ சமாளித்து வாழ்ந்துவிட்டார்கள்.
சொன்ன சில உன்னதமான உண்மையான வார்த்தைகள்.
லவ்.. காதல் - இது மட்டும் போதும் ஒருவர் தன் வாழ்க்கையை நடத்த, அதற்கு பின் தான் பணம், பதவி, புகழ், உடல்சுகம் எல்லாமே...
தனியாக ஒரு பதிவிட வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் இப்படி எத்தனையோ அனுராதாக்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள் யாருக்கென்று எழுத ???
மிஞ்சியது கேள்விக்குறிகளே... :)
எனது சில பதிவுகள் மற்றும் மறுமொழிகள் பதிவில் உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது.ஓடி வாங்க சீக்கிரம்:)
நல்ல விழிப்புணர்வுப் பதிவு! அணிலு இதுல பார்ட் பார்ட்டா டேமேஜ் பண்ணிடுச்சு போல! :-)
//அணிலு இதுல பார்ட் பார்ட்டா டேமேஜ் பண்ணிடுச்சு போல! :-)
//
ம்ம் அது எப்பவும் நடக்கறது தானே ?! :)
நல்ல பதிவு.. யூத் புல் விகடன் ல வந்ததற்கு வாழ்த்துகள்!!
//ஆனா என்ன, வீட்டில் சொன்னதற்கு, முடியாது என்றுவிட்டார்கள். என்ன செய்வது?:(//
நாம் நம் உடலை தானம் செய்கிறோம் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கும்..
அதே நம் பெற்றோர்கள், குழந்தைகள் போன்ற உறவுகளின் உடலை தானம் என்று நினைத்தாலே மனதுக்குள் பூகம்பம் வரும்.. இது இயல்பு..
ஆனால் இந்த செண்டிமென்டை விட்டுவிட்டு, மனதை கல்லாக்கி கொண்டு தானம் செய்வோர் எண்ணிக்கை இப்போது அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது !!
@பவனேஷ், நன்றி :)
:) Good post...
Post a Comment