மை டியர் குட்டிச்சாத்தான் என்ற 3D திரைப்படம் பார்த்திருப்போம். அதில் கண்ணாடியை போட்டுக்கொண்டு பார்த்தால் எல்லாம் நம் அருகில் நடப்பது போன்று இருக்கும். கண்ணாடியை கழட்டி விட்டும் நான் பார்ப்பேன். திரையில் எதுவுமே தெளிவாக தெரியாது. :)

இப்போது 4D திரைப்படங்கள் அவற்றையும் மிஞ்சி physical Effects உடன் திரைபடம் பார்க்கும் போது அந்த படத்தின் நிகழ்வுகளுடன் நாமும் இருப்பதை போன்ற ஒரு உணர்வை கொடுக்கின்றன. குறிப்பாக தண்ணீருக்குள் சென்றால் நாமும் உள்ளே செல்வது போல, காற்று அடித்தால் நம் காதருகே காற்றை உணர்வது, கத்தியால் குத்தினால் நம்மை குத்தி நம்மிடமிருந்து ரத்தம் தெறிப்பது போன்ற உணர்வுகளை கொடுக்கின்றன. நம் உடனே நடப்பதால் உற்சாகத்திற்கு அளவில்லை. வேகமாக தண்ணீரில் மீன் களுக்கு நடுவில் நாமும் நீந்துவது, பெரிய சுறா மீன் நம்மை விழுங்க வரும்போது அதனிடமிருந்து கடைசி நொடியில் தப்பித்து ஓடுவது அது பின்னால் துறுத்தவது எல்லாமே நாமே செய்வது போல் உள்ளது. தியேட்டரை விட்டு எழுந்தவுடன் எங்கிருந்து தண்ணீர் வந்தது, எங்கிருந்து காற்று வந்தது.. எப்படி நாம் அமர்ந்திருக்கும் நாற்காலி அசைந்தது.. என்று பார்த்து தெரிந்து கொண்டாலும் இந்த விடியோ மிக தெளிவாக எப்படி அந்த திரை அரங்குகளின் அமைப்பு இருக்கிறது என்று செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது..

4D திரை அரங்குகளின் நாற்காலிகளின் அமைப்பும், செய்முறையும்



4D திரை அரங்கு சென்னையில் ஸ்பென்ஸர்ஸ்'சில் இருக்கிறது. மும்பை சென்ற போது அங்கேயும் ஒரு திரைபடம் பார்த்தோம்.. நல்ல த்ரிலிங்.. :) குழந்தைகள் மட்டும் இல்லை நாமும் கண்டு களிக்கலாம்..

அணில் குட்டி அனிதா: ரொம்ப தெளிவா எழுதி இருக்காங்க... ஆனா.. அம்மணி கத்தின கத்துல.. கூட உக்காந்து இருக்கவங்க எல்லாம் சினிமாவை பார்க்காமல் அம்மணி சவுண்ட குறைக்க சொல்லி அவங்க சவுண்டு விட ஆரம்பிச்சிட்டாங்க.. அம்மணிய விட சவுண்டு விடறவங்க நிறைய பேரு இருக்காங்க....:))))))

பீட்டர் தாத்ஸ் :-“Animation offers a medium of story telling and visual entertainment which can bring pleasure and information to people of all ages everywhere in the world.”