அடர்ந்த இருட்டில்
அடிமனதில் ஓலமிட்டு
ஓவென்று
கத்தும் அந்த சத்தம்
மெளனம்..!!

கண்களை திறந்து
நல்ல வெளிச்சத்தில்
சத்தத்தை நிறுத்த முயன்று
அது சுனாமியாக
பெருக்கெடுக்க
இன்னமும்
மெளனம்..!!

இறைவா
இதுதான்
மெளனமா?!!

அமைதியாக ஆழ்ந்து
அற்பமனிதர்களின் சிந்தனை
அறவே அழித்து
ஆற்றல் அத்தனையும்
ஒருங்கினணத்து
ஒற்றையாக உணர்ந்த

அந்த வினாடி துளிகள் -

வெண்மை படர்ந்த
வானத்திற்கு அடியில்
வெண்ணிற ஆடையிலே
எடையே இல்லாத
உடலுடன்
மலையின் உச்சியில்
அமர்ந்திருக்க...
முகத்தை வருடி
மேகம் கூட்டம் செல்ல
மேகத்தை தழுவிய காற்று
சில்லென்று என்னையும் தழுவ...

ஆராவாராம் இல்லாத
மெல்லிய தென்றல்
பூக்கள் வாசம் அத்தனையையும்
என் மூச்சருகே
கொண்டுவந்து சேர்க்க..

அவ்வாசத்தில் மயங்கி
நானும்
நித்திரை செல்ல
கொஞ்சம் கொஞ்சமாக
தழுவுகிறது

மெளனம்.....!!

நிச்சயமாக
இது தான்
இறைவா
மெளனம்...!!