படிக்கும் போது வகுப்பில் முதல் அல்லது இரண்டாம் இடத்தை மட்டுமே பிடிக்கும் நான், அதிகம் ஆசைப்பட்டது நிறைய படிக்கவேண்டும் என்பதே. ஏதோ ஒரு தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்து ரேன்க் கீழே போய்விட்டால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து வீட்டில் உள்ள அத்தனை பேரையும் காரணம் அவர்கள் தான் குறை சொல்லி அமர்களம் செய்துவிடுவது வாடிக்கை.
படிப்பிற்கு பொறாமை வேண்டும் என்பார்கள் எனக்கு கொஞ்சம் அதிகமே. அதிகமாக மதிப்பெண் யாராவது எடுத்துவிட்டால் அவர்கள் எனக்கு விரோதிதான்.. சிறுபிள்ளை தனமான இந்த எண்ணம் இன்னமும் என்னை விட்டு போகவில்லை என்பது நினைத்தால் எனக்கே சில சமயம் அசிங்கமாக இருக்கும். ஆனால் அவர்களால் முடிகிறது என்னால் ஏன் முடியவில்லை என்று முட்டி மோதி படித்து முந்திவிடுவது என்று முடிவுடன் இருப்பேன்.
என்னுடைய அப்பா இறக்கும் போது எனக்கு 14-15 வயது, என்னை டாக்டர்க்கு படிக்க வைக்க வேண்டும் என்று இன்ஸ்ட்டுருமென்ட் பாக்ஸ் எல்லாம் வாங்கி வைத்து இருந்தார். ஆனால் அவரின் இறப்பு என் படிப்பை பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லல.
என் அப்பாவின் அம்மாவும் அப்பாவுமே என்னை தொடர்ந்து வளர்க்கும் பொறுப்பை ஏற்றார்கள். 10ஆவது முடித்தவுடன் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். நானும் ஆயாவிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்து நல்ல மாப்பிள்ளை வரும் வரை என்னை படிக்க வையுங்கள் என்று கேட்டேன். அவர்களுக்கு நான் பாரமாக இருக்கிறேன் என்று மட்டும் எனக்கு தெரிந்தது. என் அண்ணகளை அவர்கள் பாரமாக நினைக்கவில்லை. ஆண் குழந்தைகள் எப்படியும் பிழைத்து கொள்வார்கள் என்பார்களே அன்றி என்னை பற்றிய கவலை அவர்களின் வயதான காலக்கட்டதில் வாட்டி எடுத்ததை நான் உணர்ந்தேன். ஆனாலும் திருமணத்தில் எனக்கு இஷ்டம் இல்லல.
மிகவும் அடம் பிடித்ததால், சித்தப்பா வீட்டிற்க்கு அனுப்பி படிக்க வைத்தார்கள். ஆனால் படிப்பு தொடரும் இடைவேளையில், என்னை வேலைக்கு போய் சம்பாதிக்க சொல்லி உறவினர்கள் கட்டாயப்படுத்தியதில், நான் பத்தாவது முடித்தவுடன், ஒரு துணி தைக்கும் கம்பெனியில் தையல் வேலைக்கு சேர்ந்தேன்.
என் வயது உடைய என்னை கட்டாயப்படுத்திய அந்த உறவினர்களின் குழந்தைகள், மகள், தங்கைகள் என்று எல்லோருமே படித்து கொண்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிடிக்காமல், கட்டாயத்திற்காக நான் அங்கு வேலைக்கு சென்றாலும் என் மனம் முழுக்க படிக்க வேண்டும் படிக்க வேண்டும் என்றே 24 மணி நேரம் முழங்கியது. ஒரு வாரம் சென்றேன். என்னால் அதற்கு மேல் அங்கு வேலை செய்ய முடியவில்லை, காரணம் படிக்க வேண்டும் என்ற என் விருப்பம் மண்ணோடு புதைந்து போய்விடுமோ என்ற பயம் தான்.
அந்த ஒரு வாரத்திக்கு நான் வாங்கிய என் முதல் சம்பளம் ரூ.11.60. அப்போது மாத சம்பளம் எனக்கு என்னவாக இருந்து இருக்கும் என்று பாருங்கள். இப்போது ஐந்து இலக்க எண்ணில் சம்பளம் வாங்கினாலும், இந்த முதல் சம்பளத்தை மறக்கமுடிவதில்லை..மறக்கவும் விரும்பவில்லை.
அணில் குட்டி அனிதா:- கவிதா என்ன சொல்லவறீங்க.. சின்ன வயசுலேயே தையல் நல்லா தைக்க வரும் ன்னு சொல்றீங்களா?.. உங்களை விட மோசமா, படிக்க வழி இல்லாதவங்கள யோசிச்சி, வாய கப்புன்னு மூடுங்க.. ஓவரா சவுண்டு விட்டுக்கிட்டு!! அவனவன் சாப்பட்டிற்கு வழியில்லாமல் கஷ்ட படறான்.. நீங்க என்னடான்னா.....சின்ன விஷயத்தை ஓவரா பில்டப் குடுக்கறீங்க.. எப்படியோ.. யாரோ படிக்க வச்சாங்க இல்ல.. அப்புறம் என்ன?.. தாத்ஸ்..நீங்க வாங்க.....தத்துவத்த சொல்லுங்க..
பீட்டர் தாத்ஸ் :- It takes courage to push yourself to places that you have never been before.... To test your limits... To break through barriers.
என் முதல் சம்பளம் ரூ.11.60
Posted by : கவிதா | Kavitha
on 15:51
Labels:
பழம்-நீ
Subscribe to:
Post Comments (Atom)
11 - பார்வையிட்டவர்கள்:
அனுபவம் + பாடம் = அனுபவப்பாடம்
//ஏதோ ஒரு தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்து ரேன்க் கீழே போய்விட்டால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து வீட்டில் உள்ள அத்தனை பேரையும் காரணம் அவர்கள் தான் குறை சொல்லி அமர்களம் செய்துவிடுவது வாடிக்கை//
:))
ம்ஹூம். எல்லாருமே அப்படித்தான்!
வாங்க ரவி, ம்ம்..என்னுடைய அனுபவம் மட்டுமே எனக்கு நிறைய பாடம் சொல்லி கொடுத்தது இல்லாமல் என்னை சுற்றி உள்ளவர்களை பற்றி சிறு வயதிலேயே நிறைய தெரிந்து கொண்டேன்.. :)
வாங்க சிபி..
//:)) ம்ஹூம். எல்லாருமே அப்படித்தான்! //
அப்படியா? ஓ..நான் தான் அப்படி ன்னு நினைத்தேன்... உங்க profile படம் சூப்பர்.. !! :))
//:)) //
அட! ஸ்மைலியெல்லாம் போட்டிருக்கிறீர்கள்.
அணில்! என்ன ஆச்சு கவிதாக்காவுக்கு!
ஸ்மைலியெல்லாம் பயன்படுத்துகிறார்கள்!
:))
//அட! ஸ்மைலியெல்லாம் போட்டிருக்கிறீர்கள்.
அணில்! என்ன ஆச்சு கவிதாக்காவுக்கு!
ஸ்மைலியெல்லாம் பயன்படுத்துகிறார்கள்!//
சிபி, இது எல்லாம் கொஞ்சம் ஓவர், நான் என்ன சிரிக்க தெரியாத மனுஷியா?.. உங்களுக்கு மட்டும் சொல்றேன் கேளுங்க..
சிரிப்பு என்றால் = கவிதா.. (தெரிஞ்சவங்க தெரியதவங்க யாரை பார்த்தாலும் சிரிச்சி வைப்பேன்ங்க..)
ம்ம் என்னை பார்த்து இப்படி சொல்லிட்டீங்களே.. நான் என்ன செய்வேன்.. :))))))
இளம் வயதிலேயே உழைப்பின் ருசி தெரிந்து வளர்ந்திருக்கிறீர்கள்.. சூழ்நிலைகளுக்கு அடிமையாகாமல் நினைத்தபடி படித்து முடித்து எடுத்த காரியத்தில் வென்று காட்டியதற்கு என் வாழ்த்துக்கள் கவிதா..
பதிவைப் படித்தபோது கொஞ்சம் வருத்தமாக இருந்தது, இப்படியும் மனிதர்களா என்று.. ! :((
//பதிவைப் படித்தபோது கொஞ்சம் வருத்தமாக இருந்தது, இப்படியும் மனிதர்களா என்று.. ! :(( //
எனக்கு வருத்தம் அதிகம் இருப்பதில்லை பொன்ஸ், வெறுப்பு அதிகமாக இருக்கிறது.. உங்க பிரண்டு அணில் குட்டி சொன்னதை கொஞ்சம் பாருங்க.. :) :)
அதில் நான் சொல்லிய அத்தனை உறவினர்களும் என் அப்பாவின் பணத்தில், உழைப்பில் தங்கள் வாழ்க்கையை நலமாக ஆக்கிக்கொண்டவர்கள் என்பது குறிப்பிட தக்கது. நான் படித்தது அத்தனையும் scholarship ல், தங்க இடமும், சாப்பாடும் தான் அவர்கள் செலவு, என்னுடைய தனிப்பட்ட செலவிற்கு கூட நான் அவர்களிடம் பணம் கேட்டதில்லை. :):)
உடனே நம்மவர்கள் வந்துவிடுவார்கள், நாட்டில் நல்லவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று - நல்லவர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு என்று வரும் போது தெரியும் அவர்களின் மற்றொரு முகம்.
ரொம்ப கஷடப்பட்டு படிச்சிருக்கீங்க....
படிப்பின் சுவை...
நீர் அருந்தி இனிக்கும்
நெல்லிக்கனிப் போன்றது...
அப்புறம் உங்க பீட்டா டெம்ப்ளேட் என்ன ஆச்சு?
//படிப்பின் சுவை...
நீர் அருந்தி இனிக்கும்
நெல்லிக்கனிப் போன்றது...//
வாங்க ஜி, நன்றி. ம்ம்..இப்பவும் படிச்சிக்கிட்டு இருக்கேன்..இன்னமும் படிப்பேன்.. :))
//அப்புறம் உங்க பீட்டா டெம்ப்ளேட் என்ன ஆச்சு? //
Try பண்ணிக்கிட்டே இருக்கேன் ஜி, பார்க்கலாம் எப்ப சரியாகி வருதுன்னு.. :)
சொந்தமாக வாழ்கையில் முன்னேறுவது அற்புதமான அனுபவம் கவி. நான் பார்த்தவரைக்கும் சுயமாய் கல்வி கற்கும் ஆர்வம் கொண்டு போராடி படித்தவர்களுக்கு மிகவும் தெளிவான புரியும் தன்மை இருக்குது, வாழ்கையில் வெகு விரைவாக முன்னேறுகிறார்கள், புதிது புதிதாக கற்றுக் கொண்டே இருக்கிறார்கள்; எளிதாக வாழ்கை அமைந்த மற்றவர்கள் ஒரு நிலைக்கு மேல் தேங்கி விடுகிறார்கள்.
இப்ப தெரியுது நீங்க எப்படி ப்ளாக்ல நின்னு அடிச்சு விளையாடுற திறமைய வளர்த்துக்கிட்டீங்கன்னு. :)
//சொந்தமாக வாழ்கையில் முன்னேறுவது அற்புதமான அனுபவம் கவி.//
நன்றி மது :)
//இப்ப தெரியுது நீங்க எப்படி ப்ளாக்ல நின்னு அடிச்சு விளையாடுற திறமைய வளர்த்துக்கிட்டீங்கன்னு. :) //
அடடா.. உங்களை எல்லாம் விடவா..?? :)
எந்த விஷயத்தையும் எளிதில் விடாத திறமையை வளர்த்து விட்டவர்கள் என்னுடைய ஆயா. அவர்கள் வளர்த்ததால், அவர்களின் தாக்குதல் எனக்கு அதிகம், 82 வயதில், தனி ஆளாக ஒரு வீட்டை கட்டினார்கள். அந்த வயதில் அவர்களால் அதிகமாக நடக்க க்கூட முடியவில்லை. கண் பார்வை மங்கி விட்டது, அடிக்கடி நெஞ்சுவலி வரும். இருந்தாலும் அவர்களின் மன தைரியம் வார்த்தைகளால் சொல்ல இயலாதவை.
எனக்கு எப்பவும் ரோல் மாடல் Super Lady என்னுடைய ஆயா தான். :):)
Post a Comment