அணில்குட்டி அனிதா:- வாங்க வாங்க.. சூப்பர் மேட்டர்..!! பொங்கல் வந்தப்ப அம்மணி இந்த கதைய என்கிட்ட சொன்னாங்க.. கேக்கும் போதே இப்படி எல்லாம் கவியை பழித்தீர்த்துக்க முடியாமான்னு.. எனக்கு உச்சி குளிர்ந்து ரொம்ப சந்தோஷமா இருந்தது.. வாழ்க கவி மாமியார்!! உங்களுக்காக அம்மணிக்கு தெரியாம மேட்டரை லீக் அவுட் பண்றேன்.. நீங்களும் படிச்சி என்ஜாய் பண்ணுங்க..!!
அம்மணிக்கு கல்யாணம் முடிஞ்சு முதல் தலை பொங்கல், அவங்க மாமியார் வூட்டல புது நெல் குத்தி அரசி எடுத்து தான் பொங்க வைப்பாங்கலாம்.. அம்மணி வூட்டல அப்படி இல்ல.. புது அரசி பொங்கல் தான்.. என்ன பண்றது மாமியார் வூட்டுக்கு போயாச்சி இனி அவங்க சொல்றது தானே செய்யனும்... புது நெல் மட்டும் இல்ல, பொங்கல் வைக்க புது பானை, மற்ற காய்கள் செய்ய புது சட்டிகள் என்று எல்லாமே புதுசு தான்..
பொங்கலுக்கு மொதநாள், அம்மணியோட மாமியார் நெல்லை கொண்டாந்து அம்மணிக்கிட்ட குடுத்து “இந்தாம்மா..இத குத்தி அரிசி எடு..” ன்னு போய்ட்டாங்க.. உதவிக்கு வந்த ஓரகத்தியை.. “புதுபொண்ணு தான் செய்யனும் நீ இங்குட்டு வான்னு” கூட்டிக்கிட்டு போய்ட்டாங்க.. புதுசு சரி..அது என்ன நெல்லு குத்த கூட புது பொண்ணா.?. புள்ளைக்கு கல்யாணம் பண்ணாம இருந்தா எந்த புது பொண்ணை கூட்டி வந்து நெல்லு குத்தவைப்பாங்க.?! ஓவாராத்தான் இருக்கு புதுசு இங்க..ன்னு..கவி மனசுல நெனச்சிக்கிட்டு... உலக்கைய எடுத்துக்கிட்டு வந்து.. ட்ரை பண்ண ஆரம்பிச்சாங்க..
இங்க ஒரு ப்ளாஷ் பேக்.. அம்மணிக்கு ஒரு 13-14 வயசு இருக்கும்போது சம்பா கோதுமை தோல் எடுக்க அவங்க ஆயா உலக்கை கொடுத்து குத்த சொன்னாங்க.. அம்மணி குத்தன குத்துல.. உரல் உடையற நிலைமைக்கு போய்டுத்து.. அங்க வந்தாரு ஹீரோ அவங்க அத்தை பையன், அம்மணி நெல் குத்தறத பாக்க சகிக்காம.. அவங்க ஆயா உள்ள போன சமயம்..”.குடு நான் குத்தறேன்” ன்னு கேட்டதுதான்.. இது தான் சான்ஸ்னு “ரொம்ப தாக்ஸ் மாமா “ன்னு ஒரு வழிச்சல் சிரிப்போட.. கிழவி வந்தா கேவலமா திட்டுவாங்களேன்னு ஏரியாவை விட்டே காலி செய்துட்டாங்க..
வெளியில வந்த அவங்க ஆயா.. “வயசு ஆம்பல புள்ள! காலேஜ் படிக்கற புள்ளய கோதுமை குத்த விட்டுட்டு எங்க போய் தொலைஞ்சா இந்த வாயாடின்னு?!”.. கேக்க.. நம்ம ஹீரோ.. “ஆயா..விடுங்க..அந்த பொண்ணுக்கு உலக்கை புடிச்சி குத்த தெரியல கொஞ்சம் தானே நான் செய்து தரேன்னு.”.சொல்ல..கிழவி ஒருவழியா வாய மூடிச்சி..
நம்ம அம்மணிக்கு உலக்கை புடிச்சி குத்தவே தெரியாது, ஏமாத்தியே வளர்ந்துட்டாங்க.. இங்க மாமியார் என்னடான்னா.. இவ்வோளோ நெல்லை கொடுத்து அரசி எடுன்னா..எங்க..?!! அம்மணி மெதுவா.. கொஞ்சம் நெல்லை போட்டு பொறுமையா உரல் மேல படாம, நெல்லை குறிவைத்து குத்த ஆரம்பித்தார்கள். அப்பத்தான் எங்க இருந்து சேர்ந்தது ஒரு கூட்டம்னு தெரியல.. புது பொண்ணு நெல்லு குத்துற அழகை பார்க்க ஒரு கூட்டம் கூடியது.. கூட்டத்திலிருந்து ஒரு குரல், “அம்மாடி பார்த்து.. கைக்கு வலிச்சா கூட பரவாயில்ல.. உரலுக்கு வலிக்க போதுன்னு சொல்ல..” கவிக்கு.. காதுல பொக வந்தது.. இருந்தாலும் கூட்டத்தை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சி வச்சாங்க.
ஆஹா..நாம எஸ்கேப் ஆக வழி இல்லாம இப்படி ரவுண்டு கட்டி கிண்டல் பண்றாங்களே............நம்ம கழுத்துல தாலி கட்டின மவராசன் வந்து காப்பாத்த மாட்டாருன்னு..ஒரு லுக் விட.. எங்க.. அவரும் கூட்டத்தோட கூட்டமா நின்னு, “அவ எல்லாத்தையும் சீக்கிரம் கத்துக்குவா..ரொம்ப ஸ்பீட்.....ஸ்டார்டிங் டிரபுல் தான்..(கவியை புகழ்ந்து தள்ளராறாம்.!!) சரியாயிடும் “ என்று சொல்லி எஸ்கேப் ஆக.. கைப்பூ மாதிரி - ஆஹா இன்னைக்கு எல்லாரும் ஒரு முடிவுலத்தான் இருக்காங்களான்னு.. முடிந்தவரை கவனமா..நெல்லை குத்த ஆரம்பிச்சாங்க..
அப்ப ஆஜாரானாங்க அவங்க மாமியாரு, ஏண்டி செண்பகம், மாத்து உலக்க போடக்கூடாது ..என்று சொல்லவும்.. கவிக்கு ஒரு பெருமூச்சு.. நம்ம மாமியார் எவ்வளவு நல்லவங்க.. எனக்கு முடியலைன்னு யாரையோ வர சொல்லறாங்கன்னு சந்தோஷத்தோட குத்தறத நிறுத்த..
கூட்டத்தில இருந்து இன்னொரு ஒரு கிழம் (செண்பகம்) வந்து ஹீரோயின் ரேஞ்சுக்கு பீல்டுல குதிச்சிது. "வாடியம்மா..!! மாத்து உலக்க போடலாம்..?!! " கவிக்கு ஒன்னும் புரியல.. மாத்து உலக்க போடலாமா? "மாத்து உலக்கைன்னா?.. " ஆத்தா உன் மருமகளுக்கு மாத்து உலக்கைன்னா என்னான்னு தெரியாதாமா?.. சொல்லிவிட்டு சிரிக்க..கூட்டமும் கூட சேர்ந்து சிரித்தது..
கவிக்கு அசிங்கமா போச்சி..கவி மூஞ்சிய பாக்க சகிக்கல.. என்ன இந்த கிழம் இப்படி நம்மல நக்கல் பண்ணுது ஒரு வழி பண்ணனும்னு முடிவு பண்ணி.. “சரி சொல்லி தாங்க நான் போடறேன்” ன்னு சொல்லி கேக்க.. கிழவியும் அது ஒரு குத்து குத்திவிட்டு, இப்ப நீ குத்து.. இப்படி மாத்தி மாத்தி குத்தறதுதான் மாத்து உலக்கன்னு சொல்லி ...”ரெடி ஸ்டார்ட் “சொல்ல.. அம்மணிக்கு இங்க அள்ளு உட்டு போச்சி.. ஆஹா..நாம பொறுமையா குத்தினாவே சரியா வராது.. இதுல கிழவி ஜெட் ஸ்பீட்’க்கு குத்துது.. இதுல எங்க..நாம..என்று திரு திருவென்று விழிக்க.. மாமியாரு நடுவுல..புகுந்து.. ஆகட்டுமா..சீக்கிரம்..நிறைய நெல்லு இருக்கு பாரு.. இப்படியே நின்னா எப்ப வேல நடக்கறது..
ம்ம்.ஹம்..ஆஹா........ஆயா இப்படி ஒரு நெல் குத்தற வூட்டுல என்னைய கல்யாணம் பண்ணி குடுத்திட்டியே..ன்னு..மனசுக்குள் புலம்பிக்கொண்டே.. மனசை தளரவிடாமல்..கிழவியின் வேகதிற்கு தகுந்தாற்போன்று வேக வேகமாய் மாத்து உலக்கை போட்டு... அசத்த ஆரம்பிச்சாங்க கவிதா. பொங்கலுக்கு என்னவோ சூப்பர் அரசி ரெடி.. ஆனா அம்மணி நிலைமை தான் மோசமா போச்சி. அடுத்த 2 நாளு கைய தூக்க முடியாம..டாக்டர் கிட்ட போய் பெட் ரெஸ்ட் எடுக்கனும் ன்னு சொல்ற ரேன்ஞ்க்கு போய்ட்டாங்க.. அவங்க ஆயா ஒரு பக்கம். ."எப்படி வளத்த புள்ளைய இப்படி மாத்து உலக்க போட வச்சியிருக்கா பாரு அவ மாமியாரு.. காலம் பூரா நெல் குத்திறவங்களுக்கு கூட மாத்து உலக்க போடறது அவ்வளவு கஷ்டம்.. சின்ன புள்ள இந்த புள்ளைய இப்படி நெல் குத்த வச்சி படுத்த படுக்கை ஆக்கிட்டாங்களே’ன்னு புலம்புத்தள்ளிடாங்க..
ம்ம்..அம்மணிய எப்படி சூப்பரா அவங்க மாமியார் கவனிச்சி இருக்காங்க பாருங்க..அம்மணிக்கு வாய் எல்லாம் நம்ம கிட்ட தான்.. மாமியாரு..வூட்டுகாரர்ன்னு சொன்னா போதும்.. நடுங்கிடுவாங்க நடுங்கி.. J
பீட்டர் தாத்ஸ் :- The person who is not hungry says that the coconut has a hard shell.
மருமகளை பழிவாங்கிய மாமியார்
Posted by : கவிதா | Kavitha
on 12:25
Labels:
பழம்-நீ
Subscribe to:
Post Comments (Atom)
13 - பார்வையிட்டவர்கள்:
//."எப்படி வளத்த புள்ளைய இப்படி மாத்து உலக்க போட வச்சியிருக்கா பாரு அவ மாமியாரு.. காலம் பூரா நெல் குத்திறவங்களுக்கு கூட மாத்து உலக்க போடறது அவ்வளவு கஷ்டம்.. சின்ன புள்ள இந்த புள்ளைய இப்படி நெல் குத்த வச்சி படுத்த படுக்கை ஆக்கிட்டாங்களே’ன்னு புலம்புத்தள்ளிடாங்க..//
அனிதா,
படிக்கிற எனக்கே ஒரே காமெடி காமெடியா இருக்கே? கிட்ட உக்காந்து இந்த கதை எல்லாம் கேட்ட உனக்கு எப்படி இருந்துருக்கும்? மாத்து உலக்க போடும் போது அம்மணி என்ன பாட்டு பாடனாங்கன்னு நீ கேக்கலியா? நீ சொல்றதைக் கேக்கும் போது...ஒரே டமாசு போ.
:)
//அனிதா,
படிக்கிற எனக்கே ஒரே காமெடி காமெடியா இருக்கே? கிட்ட உக்காந்து இந்த கதை எல்லாம் கேட்ட உனக்கு எப்படி இருந்துருக்கும்? மாத்து உலக்க போடும் போது அம்மணி என்ன பாட்டு பாடனாங்கன்னு நீ கேக்கலியா? நீ சொல்றதைக் கேக்கும் போது...ஒரே டமாசு போ.
:) //
வாங்க தல, காமெடிய ரசிக்க கூட யாரும் இல்லையேன்னு சோகமா இருந்தேன்.. ம்ம்..பாட்டுத்தானெ.. கேட்டேனே..இவங்க நெல்லு குத்த குத்த.. கோரஸ்ஸா மத்தவங்க பாடினாங்களாம்..
"நெல்லு குத்தும் அக்கா மகளே..
நீ கைவலிக்காம நெல்லு குத்தி
மாத்து உலக்கத்தான் போடும் போது..
மனசுதான் வலிக்கவில்லை -
உன் மாமனுக்கு..
மனசு வலிக்கவில்லையா?!!"
:)))))))) பாட்டை மாத்திட்டேன் நானு.. அவிங்க பாடினது.. மண்வாசனை படத்தல வர.. "அரிசி குத்தும் அக்கா மகளே.." பாட்டு
//The person who is not hungry says that the coconut has a hard shell.
//
Superb தத்துவம்!
பீட்டர் தாத்ஸ் வாழ்க!
அணில்குட்டி...
இந்த கதைய கேக்கும் போது நல்லா இருக்கு... "வாழ்க கவி மாமியார்!!!" ன்னு நீ சந்தோசப்படுவது புரியுது... ஆன கவிதாக்கா நிலமைய நினைக்கும் போது சின்னதாக வருத்தம் வருது.
எனக்கு ஒரு சந்தேகம் அணில்குட்டி... நீ பதில் சொல்லு; உன்க்கு தெரியாதுன, கவிதாக்காகிட்ட கேட்டு சொல்லு.
இந்த 2 பதிவுகளுக்கும் எதாவது சம்பந்தம் இருக்குதானு எனக்கு தெரியனும்...
1. மருமகளை பழிவாங்கிய மாமியார்
(http://kavithavinpaarvaiyil.blogspot.com/2007/02/blog-post_13.html)
2. மாமியாருக்கு மொட்டையடித்த மருமகள்
(http://kavithavinpaarvaiyil.blogspot.com/2006/07/blog-post_31.html)
அப்படி இருந்த... எது முதல்ல நடந்ததுனு (கேட்டு) சொல்லுவியா?
==================
என்றும் நட்புடன்,
விசு
உங்க டெம்ப்ளேட் சூப்பர்.... எங்க இருந்து கெடச்சது....
இதுக்கு முன்னாடி ஒரு பின்னூட்டம் போட்டேன். வந்திச்சா???
ஜி
www.finalsense.com போய் பாருங்க!
டெம்பிளேட் நல்லா இருக்கு!
நாங்களும் உங்க டெம்பிளேட்டுக் கீழே இருந்த முகவரியப் பார்த்துட்டு அங்கே போயி எங்க டெம்பிளேட்டையும் மாத்திட்டோம்!
அணில்குட்டிக்கு ஒரு நன்றி!
//1. மருமகளை பழிவாங்கிய மாமியார்
(http://kavithavinpaarvaiyil.blogspot.com/2007/02/blog-post_13.html)
2. மாமியாருக்கு மொட்டையடித்த மருமகள்
(http://kavithavinpaarvaiyil.blogspot.com/2006/07/blog-post_31.html)
//
சபாஷ்!
விசு வழக்கம்போல தன் பணியை ஆரம்பிச்சிட்டார் போல!
:))
//Superb தத்துவம்!
பீட்டர் தாத்ஸ் வாழ்க! //
சிபி அண்ணே நியாமா? என் கூட சேர்ந்து கவிதாவை ஓட்டுவீங்க ன்னு பார்த்தா.. தாத்ஸ் க்கு வாழ்க போட்டுட்டு எஸ்கேப் ஆயிட்டீங்களே.. நல்ல சான்ஸ் எல்லாம் நீங்க மிஸ் பண்றீங்க..
//அப்படி இருந்த... எது முதல்ல நடந்ததுனு (கேட்டு) சொல்லுவியா? //
வாங்க விசு அண்ணே.. நீங்க சொன்ன வரிசை தான் சரி... மாமியார் முதல்ல.. மருமகள் 2வது.. :)
கவி எழுதறத விடாம படிக்கறீங்க போல.. என்ன ஆக போறீங்களோ நீங்க.. போங்க..
ஜி..வாங்க.. முன்னாடி என்ன போட்டிங்கன்னு தெரியல.. வேற போஸ்டுக்கு ஒன்னு வந்தது..
டெம்ளேட் லின்க் மெயில் ல அனுப்பறேன் ன்னு கவி சொன்னாங்க..
//சிபி அண்ணே நியாமா? என் கூட சேர்ந்து கவிதாவை ஓட்டுவீங்க ன்னு பார்த்தா.. தாத்ஸ் க்கு வாழ்க போட்டுட்டு எஸ்கேப் ஆயிட்டீங்களே.. நல்ல சான்ஸ் எல்லாம் நீங்க மிஸ் பண்றீங்க..
//
கலாய்க்குறதை சிலபேர் காமெடியா எடுத்துப்பாங்க! சிலபேர் சீரியஸா எடுத்துப்பாங்க!
நமக்கேன் வம்பு!
:(
என்னங்க கவிதா நீங்களும் தினத்தந்தி ரேஞ்சுக்கு தலைப்புகளை அள்ளிவிட ஆரம்பிச்சிடிங்க.
//கலாய்க்குறதை சிலபேர் காமெடியா எடுத்துப்பாங்க! சிலபேர் சீரியஸா எடுத்துப்பாங்க!
நமக்கேன் வம்பு!
:( //
ஏன் சிபி அண்ணே இவ்வளவு சோகம்.. சில பேரை விடுங்க.. நம்ம கவிதா வை நீங்க எப்படி வேணுமானாலும் கலாய்க்கலாம். அம்மணி கொஞ்சம் டென்சன் ஆவாங்க. .அதை எல்லாம் நாம் கண்டுக்கப்படாது. .என்னை பாருங்க. .அவங்கள டென்சன் பண்ணிக்கிட்டே இரூப்பேன்.. அப்பத்தான்..எனக்கு ஜாலியா இருக்கும்.. நான் இருக்க வரைக்கும் உங்களுக்கு என்னோட சப்போர்ட் எப்பவும் உண்டு..சரியா.. கவிதா டென்சன் எல்லாம் கணக்குல எடுத்துக்காதீங்க.. வூட்டல ஓரமா ஏதோ ஒன்னு கத்துதுன்னு..வுடுங்க....
ஆவிங்களா.. வந்துட்டீங்களா.. இனிமே நான் கொஞ்சம் ஜாக்கறதையாத்தான் இருக்கனும்..:(
//என்னங்க கவிதா நீங்களும் தினத்தந்தி ரேஞ்சுக்கு தலைப்புகளை அள்ளிவிட ஆரம்பிச்சிடிங்க. //
ஹலோஓஓ...!! என்னங்க தல இது.. பதிவ சரியா படிக்க மாட்டீங்களா நீங்க?
அம்மணி எழுதலைங்கோ...... எழுதினது அனி..சரியா..
அம்மணி தலைப்பு போட்டு வாங்கி கட்டிக்கறாங்களே பத்தாதா..?.. இது சும்மா.. சொன்னா மாதிரி பேப்பர் பாத்து காப்பி..
Super Comedy :) ennala sirichi maala nalla anupavam :) :) :)
Post a Comment