இன்றைக்கு நம்ம கேப்பங்கஞ்சி ய குடிக்க வந்து இருப்பவர், வ.வா.சங்கத்தின் முக்கிய உறுப்பினர், சங்கத்தை தொடங்கிய முதல் சிங்கம் “தேவ்” அவர்கள்.
தேவின் படைப்புகள் கவிதை, கதை, கலாய்த்தல் என்று பல பரிமாணங்கள் இருந்தாலும், அவரின் கதைகள் முதல் இடத்தை பிடிக்கும், மிக யதார்த்தமாக அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை யார் மனதும் புண்படாதவாறு சொல்லுவதில் வல்லவர். இதோ தேவ் நம்முடன்..
வாயை புடுங்கற ரவுண்டு:-
கவிதா:- வாங்க தேவ், எப்படி இருக்கீங்க?. உங்களின் ப்ளாக் ஆர்வம் எப்படி வந்தது..?
நல்லா இருக்கேங்க. தலைவர் தாங்க காரணம்.. ரஜினி ரசிகர்கள் யாகூ குழுமம் மூலம் பதிவுலகத்தை எட்டிப்பார்த்து.. தட்டு தடுமாறி நுழைஞ்சு.. தமிங்கலத்துல்ல தள்ளிகிட்டு இருந்தவனை நம்ம நண்பரும் எழுத்தாளருமான ரஜினி ராம்கி தட்டிக் கொடுக்க தலைக்கேறி.. இப்போ தட்டு தட்டுன்னு பதிவுகளைத் தட்டிகிட்டு இருக்கேன்.. ஆங்.. ஆர்வம்ன்னு நீங்க சொல்லுறீங்க.. நான் இன்னும் ஆர்வக் கோளாறுன்னு தான் நினைச்சுகிட்டு இருக்கேன்.
கவிதா:- வ.வா.சங்கம் தொடங்கியவர் நீங்கள், சங்கம் பற்றி நிறைய கிசு, கிசு வருகிறதே..அதைப்பற்றி -
சங்கம் பக்கத்துல்ல சிரிக்க... சிரிக்க மட்டுமேன்னு ஒரு கேப்ஷன் போட்டிருப்பாங்க... ஒரு வேளை அதனாலத் தான் இவ்வளவு கிசுகிசு வருதோ...
கவிதா:- ஷில்பா செட்டி வெளிச்சத்தில் இருப்பதால் அவரின் இனவெறி தாக்குதல் பற்றி பெரிதாக பேசப்பட்டு, செய்தவரை வேலையை விட்டே அந்த நாடு தூக்கியது. ஆனால் அன்றாடம் அதை போன்று நம்மவர்கள் நிறைய தாக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. அதற்கு நம் அரசாங்கம், அல்லது அயல் நாட்டு அரசாங்கம் எந்த விதமான பாதுகாப்பு தர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
ரொம்ப சிம்பிள்ங்க.. நாமும் வெளிச்சத்துக்கு வரணும்.. அப்படி வந்துட்டோம்ன்னு வைங்க ஷில்பா ஷெட்டிக்கு சவுண்ட் விட்ட எல்லா அரசியல்வாதியும் நமக்கும் சவுண்ட் விடுவாய்ஙக்.. புஷ் பொங்குவார்.. மன்மோகன் மிரள்வாரு.. பிளேயர் பிளிறுவார்.. ஓ.கே வா
கவிதா:- ஐடி கம்பெனி களின் கலாசார மாற்றம் நல்ல விஷயமா? ஆரோக்கியமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
இது சும்மா ஒரு மாயைங்க... பாவம்ங்க பொட்டி தட்டுற எங்கப் பாடு.. காலையிலே உக்காந்தா ( ஆபிஸ்ல்லங்க) சாயங்காலம் வரைக்கும் தட்டி முழிக்காமா உத்துப் பாத்துகிட்டே ( மானிட்டரைங்க) இருக்க ஒரு உத்ய்யோகம்ங்க...காந்தி தாத்தா ஊருக்குப் போங்கடான்னு சொன்னா அம்புட்டு வெள்ளைக் கார பயல்வளோடு இன்னிக்கு வியாவாரம் பாக்க வேண்டிய நிலை.. இதுன்னால அவன் கிட்ட இருக்க ஒண்ணு ரெண்டு குணம் நமக்கு ஓட்டத் தானே செய்யும்.. அப்படி இருக்க ஒண்ணு ரெண்டு விசயத்தையும் பொட்டி தட்டுற பொழப்பை வெளியே இருந்து பாக்குறவங்க பெருசா ஊதி விட்டு கலாச்சார மாற்றம் அப்படின்னு இப்படின்னும் சொல்லி விடுறாங்க.. மத்தப் படி மாற்றம் எல்லாம் பெரிசா இல்லங்க... இதுவும் நாலு பேத்துக்கு சோறு போடுற ஒரு பொழப்பு அவ்வளவு தாங்க
கவிதா - பின்னூட்டங்கள் பெருவது ஒரு வியாபார நோக்கோடு இருக்கவேண்டும், யாருக்கு அவரின் பொருளை விற்க சாமர்த்தியம் இருக்கிறதோ அவர்கள் சாதிக்கிறார்கள் - இது சரியா ? உங்களின் தனிப்பட்ட கருத்தும் இதுவே என்றால் விளக்குங்கள்.
பின்னூட்டத்தில்லே நாட்டம் இல்லாதவங்க யாரும் பதிவு போட மாட்டாங்க.. பின்னூட்டம் போடுறதும் கலை.. அதை வாங்குறதும் கலை..கலையை ஆராதிக்க ரசிக்க ஒரு கூட்டம் இருக்கு.. நான் எல்லாம் அப்பப்போ ஆஜர் சொல்லிட்டு அடுத்த வேலையைப் பாக்கப் போற கூட்டம்ங்க..
அணில்:- வாங்க தேவ் அண்ணாச்சி , இன்னைக்கு கவிக்கிட்ட மாட்டினது நீங்களா?.. சரி.. இங்க தமிழ்மணத்துல இருக்கிற 90% பேரு ஐடி கம்பெனிக்காரங்களா இருக்கீங்க போல?.. உங்களுக்கு வேல வெட்டியே இல்லையா?.. சும்மா ப்ளாக் எழுத தான் சம்பளம் குடுக்கறாங்களா?
ஆமா அணிலு பிளாக் எழுத சம்பளம் ... பின்னூட்டம் போட போனஸ்... போனஸை விட்டுட்டீயே அணிலு..டிவியிலே கிரிக்கெட் மேட்ச் போட்டாலும் மெகா சிரியல் போட்டலும் சன் மியூசிக்க்ல்ல உன்னிய மாதிரி சின்னப்புள்ளக பாட்டுப் போட்டாலும் ஒவ்வொரு அஞ்சு நிமிசத்துக்கு ஒரு தரம் பிரேக்ன்னு சொல்லுவாய்ங்க கேட்டு இருக்கீயா.. அது மாதிரி நாங்களும் பொட்டி தட்டுற் கேப்ல்ல பிளாக்ன்னு சொல்லுறோம் அவ்வளவு தான்.. அதைப் போய் பெருசாக் கேட்டுகிட்டு
கவிதா:- இளைஞர்களின் வெளிநாட்டு கனவு பற்றி
உள்நாட்டுச்செலவுக்கு வழி காட்ட விழி தரும் தீர்வு வெளி நாட்டுக் கனவு...
அணில்:- எப்ப பார்த்தாலும் யாரையாவது கலாய்ச்சிக்கிட்டே இருக்கீங்களே?.. உங்களை யாரும் அது மாதிரி கலாய்ச்சி இருக்காங்களா?.. அது யாருன்னு எனக்கு மட்டும் சொல்லுங்க.
பதில் சொல்லலாம் லிஸ்ட் கொஞ்சம் நீளம்...இந்தா ஒரு சிக்கன் சூப் மட்டன் சூப்.. ஒரு ஹார்லிக்ஸ்.. ஒரு போர்ன்விட்டா.. ஒரு பாதாம் பால் .. இப்படி எல்லாம் கொடுக்காம கேப்பக் கஞ்சி ஊத்துறோம் வாங்கன்னு கூப்பிட்டு உக்கார வச்சுகிட்டு இன்னும் அந்தக் கேப்பக் கஞ்சிய என் கண்ல்ல காட்டமா இப்போ நிங்க என்னக் கலாய்க்கலியா... பொது வாழ்க்கையிலே இதெல்லாம் சாதரண்ம்ன்னு எங்க பன்னிக்குட்டி ராமசாமி எப்பவோச் சொல்லிட்டார்.
அணில்:- அண்ணாச்சி சங்கத்து சிங்கங்கள் பற்றி ஒரு 4 வார்த்தை சொல்லிட்டு அடுத்த ரவுண்டுக்கு நடைய கட்டுங்க..
இதயம் ஆளும் இனிய நண்பர்கள் - நாலு வார்த்தை தானே கரெக்ட்டாச் சொல்லிட்டேனா..
கவிதா:- தேன்கூட்டில், கதை தேர்வில், நீங்கள் ஏதாவது மாற்றம் வர வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
தேன் கூடுப் போட்டிகளை நான் கவனிக்கறதை விட்டு ரொம்ப நாள் ஆச்சே..
ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு :-
1. ப்ளாக்கரில் உங்களுக்கு பிடித்த கலாய்த்தல் மன்னன்'/ மன்னி' கள்
கோழிப் பண்ணை ஊர்காரர் இதுக்குன்னு தனியாப் பதிவே வச்சிருக்காரே...
ஜம்போன்னு சொன்னா இவங்க ஞாபகம் வரணும்... ஒருத்தரை கலாய்க்க தனி சங்கமே ஆரம்பிச்சு உதறுனவ்ங்க...இப்போ இவங்களைக் கலாய்க்க புதுசா சங்கம் ஆரம்பம் ஆயிருக்காம்.. ஆக மொத்தம் இந்த கலாய்த்தல் தங்கம்மாவை சங்கம் விடாது போலிருக்கு..
2. உங்களின் சிறந்த பதிவுகள் என்று நீங்கள் நினைப்பது
சிறந்த அப்படின்னு சொல்ல முடியாது.. எனக்குப் பிடிச்சப் பதிவுகள்ன்னு வேணும்ன்னா சொல்லிக்கலாம்
1 கவி 23:நான் நடந்து வந்த காதல் வீதி
2 நட்பு எனப் படுவது யாதெனின்..
3 கவி 15: ரகசியம்
3. உங்களின் சிறந்த கதைகள்
இனிமேத் தாங்க எழுதணும் அப்படின்னுச் சொல்லித் தப்பிச்சுக்கலாம்ன்னு பாக்குறேன்..
கதை 10:கதிரேசன் கதை - பகுதி 1
கதை 12:என்கவுண்டர்/ENCOUNTER
இது நான் எழுதி எனக்குப் பிடித்தக் கதைகள்
4. நீங்கள் ஒரு பெண் பெயரில் எழுதுவதாக கிசு கிசு உள்ளதே ? அது பற்றி
ஒரு பொண்ணு பெயரில் தானா? ச்சே அவ்வளவு தானா.. இன்னும் நல்லா விசாரிங்க... நிறைய கிச்சு கிச்சு கிடைக்கும்ங்க...
5. இப்படியே எவ்வளவு நாளைக்கு கதை' விட போறீங்க
கதைகளை விட முடியாத வரை கதையை விட்டுக் கொண்டு தான் இருப்பேன்..
6. சங்கத்து சிங்கங்கள் பதிவுகளில் உங்களை கவர்ந்தவை
சிவாஜி மகராஜா ரிஸ்க் எடுக்கமாட்டார்... - கைப்புள்ள
மீண்டும் அரியாசனத்தில்...! - சிபி
ராயலோ ராயல் - இளா
VAVASA - வரலாறு - பாகம்-3 - ஜொள்ளு பாண்டி
சங்கம் ஸ்போர்ட்ஸ் SANGAM SPORTS - வெட்டிபயல்
கன்னிப்பதிவு (புது வ.வா) - ராம்
செயற்குழு கூட்டம்! - நாகைசிவா
7. உங்களின் ஆங்கில ப்ளாக் பற்றி
ஆரம்பித்தேன்... யாருக்கும் சொல்லாமல் மூடி விட்டேன்..
8. உங்களின் பார்வையில் - பெண் பதிவர்கள்
எண்ணிக்கையில் குறைவு... இன்னும் நிறைய பேர் வரணும்.. அதிலும் நகைச்சுவையாய் எழுதுபவர்கள் இன்னும் பெருக வேண்டும்....
9. தலைவரின் தீவர ரசிகரான நீங்கள் - அவர் வழியில் மக்களுக்கு சொல்ல விரும்புவது
"உங்களுக்குன்னு ஒரு வழி வச்சுக்குங்க"... தலைவரும் அதை தான் சொல்லுறார்.
10. வவாச - மூலம் நீங்கள் சாதித்தது, சாதிக்க நினைப்பது
சங்கம் மூலம் எனக்கு கிடைத்தது அழகிய ஒரு நட்பு பூங்கா.. அதில் கிடைத்தது எண்ணிலடாங்க பூமணம் கமழும் நட்பின் இனிய நினைவுகள்..
சாதிக்க நினைச்சு ஆரம்பிக்கலியே சங்கம்.. சிரிக்க சிரிக்க மட்டுமே தோற்றுவிக்கப்பட்டது சங்கம்.. அது தொடர்ந்தாப் போதும்ங்க...
தேவ் சொன்ன தத்துவம் :- Believe in the god who believes in you
கேப்பங்கஞ்சி with கவிதா & அனிதாவுடன் - தேவ்
Posted by : கவிதா | Kavitha
on 16:31
Labels:
கேப்பங்கஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
9 - பார்வையிட்டவர்கள்:
கவிதா,
நல்லா வந்திருக்கு இந்த சந்திப்பு பதிவு :)
கேப்பக் கஞ்சி ஊத்துறோம் வாங்கன்னு கூப்பிட்டு உக்கார வச்சுகிட்டு இன்னும் அந்தக் கேப்பக் கஞ்சிய என் கண்ல்ல காட்டமா இப்போ நிங்க என்னக் கலாய்க்கலியா... //
அணில்,
கடைசிவரைக்கும் கேப்பகஞ்சியே குடுக்கமே நீயே குடிச்சிருவியா??
:)
கடைசி வரை கஞ்சி கொடுக்கப் பட்டதா இல்லையா?
தெரிந்தால் போராடத்திற்குத் தயாராக ஏற்பாடு செய்ய முடியும்!
//"உங்களுக்குன்னு ஒரு வழி வச்சுக்குங்க"... தலைவரும் அதை தான் சொல்லுறார்.//
போர்வாள் பின்னிப் பெடலெடுத்துருக்காப்புல. இண்டர்வியூ படிக்க ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு.
//போர்வாள் பின்னிப் பெடலெடுத்துருக்காப்புல. இண்டர்வியூ படிக்க ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு. //
நன்றி -கைப்பூ ஆனா என்ன இது.. பின்னிப்பெடலெடுத்துன்னு சொல்லியிருக்கீங்க.. ?!!
//விடுவாய்ஙக் - விடுவாங்க
பிளேயர் - பிளேர்
உத்ய்யோகம்ங்க - உத்யோகம்ங்க
சாதரண்ம்ன்னு - சாதாரணம்ன்னு //
வந்துட்டீங்களா..எழுத்துபிழை.. ! எப்படி இருக்கீங்க..எங்க ரொம்ப நாளா ஆளை காணோம்.. என்னோட பதிவுக்கு நீங்க ரொம்ப அவசியம்..அடிக்கடி வந்து பிழைய திருத்துங்க.. நன்றி..
ஆனா..தேவ் வேணும்னே அப்படி எழுதி இருக்கிறார்னு நினைக்கிறேன். .பிழையானு தெரியல.. என்ன தேவ்.. மேல இருக்கறது எல்லாம் பிழையா?
//கடைசி வரை கஞ்சி கொடுக்கப் பட்டதா இல்லையா?
தெரிந்தால் போராடத்திற்குத் தயாராக ஏற்பாடு செய்ய முடியும்! //
ஹையோ..ஹையோ!! சிபி அண்ணே..!! காமெடி பண்றீங்க போங்க..!! உங்க காமெடிக்கு ஒரு அளவிங்களாண்ணா..?!! போராட்டாம் கீர்'ஆட்டம்னு சொல்லிக்கிட்டு..
ymsgr ஒரு சிரிப்பான் கீழ விழுந்து உருண்டு உருண்டு சிரிக்குமே.. தெரியும் இல்ல உங்களுக்கு..!!! உங்க கமெண்ட் பார்த்து.. நானு.. அப்படிதாங்கண்ணே.. சிரிச்சேன்..!!
:))))))))
//நல்லா வந்திருக்கு இந்த சந்திப்பு பதிவு :)//
நன்றி , ராம் எல்லாம் தேவ்'வின் பதிலின் மகிமை. .அவருக்கு தான் போய் சேரனும்.
//கடைசிவரைக்கும் கேப்பகஞ்சியே குடுக்கமே நீயே குடிச்சிருவியா??//
அணில்குட்டி:- ராம் அண்ணே.. உங்களுக்கு ஒன்னு தெரியுமா.. சும்மா அப்படி காட்டுவோம் அவ்ளோதான்.. கவிதா வச்ச கஞ்சியாச்சே... பாக்கும்போதே.. வரவங்களூக்கு குடிச்ச மாதிரி ஆயிடும்.. சோ.. என் தலைஎழுத்து யாரும் குடிக்காததால.. நான் குடிக்கவேண்டி இருக்கும்.. :( இப்படித்தான் இந்த அம்மணி என்னைய கொடுமை பண்றாங்க..
:-) ரசித்தேன்.. பதில்கள் அருமை..
ஆமா .. தலைப்புல இருக்கர அனிதா தான் அனிலா?
//ஆங்.. ஆர்வம்ன்னு நீங்க சொல்லுறீங்க.. நான் இன்னும் ஆர்வக் கோளாறுன்னு தான் நினைச்சுகிட்டு இருக்கேன்.
//
:-)
//கவிதா:- இளைஞர்களின் வெளிநாட்டு கனவு பற்றி
உள்நாட்டுச்செலவுக்கு வழி காட்ட விழி தரும் தீர்வு வெளி நாட்டுக் கனவு...//
nice one..
கடைசி வரை கஞ்சி கொடுக்கப் பட்டதா இல்லையா?
இதுக்கு இன்னும் பதில் சொல்லவே இல்லையே???
இந்தப் பதிவிற்கு என்னை அழைத்த கவிதா அவர்களுக்கும், பாசமிகு அணில் குட்டிக்கும், மற்றும் பின்னூட்டமிட்டச் சிறப்பித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
Post a Comment