மெளனம்
உன்
பெயரே
தலைப்பானால்...
சிகிரெட்
என்
முகத்தை
எட்டு கோணலாக்கும்
எளிய
சாதனம் !!
உழைப்பு
வியர்வையும்
மணக்கும்..!!
அழுகை
அழுகையும்
சுகம்
உன் மார்பில்
முகம் புதைக்கும் போது ..........
பட்டம்
சுதந்திரமாக
பறக்கிறாய் தான் !!
எப்போதும்
உன்
சுதந்திரம்
யாரோ ஒருவரின் கையில்.........
கீ போர்டு
உனையன்றி
யாரறிவார்
எனை :)
காதல்
முட்டாள்களின் மூச்சு !
அறிவாளிகளின் யதார்த்தம் !
அனைவரும் கடந்து போகும் பாதை !
கானல் நீர் !
கிடைத்துவிட்டால் பைத்தியம் !
கவிதைகள் என்ற கிறுக்கல்கள் !
கல்யாணத்திற்கு பிறகு காணாமல் போகும் !!
திருமணம்
வாழ்க்கையை
போல
ஒருமுறை வருவது....
கடவுள்
நம்முள்
அன்பிருப்பதால்
நாமும் கடவுள் !!
நட்பு
என்
உயிரை குடிக்கும்
மருந்து!!
சொந்தம்
தனி மரம்
தோப்பாகாது ...!!
பழமொழிக்காக
தேவை...!!
சுதந்திரம்
தேவைக்கு
தேவை
எப்போதும்
தேவையில்லை
அழகு
உன்
நினைவுகளில்
எப்போதும்
நான்
அழகு !! :)
பூக்கள்
கவிதா'க்கள் !!
பூக்களை பறிக்காதீர்கள்!!
கனவு
துரத்த துரத்த
ஓடுவேன்
ஓடி ஓடி
கலைப்பேன்
உயரத்திலிருந்து
பாதாலத்திற்கு
குதிப்பேன்
தண்ணீரில்
மூழ்கி
மூச்சி முட்டி
தவிப்பேன்...
கனவு
பயம்..
இதுவும் காதலாம்......
நல்வாழ்த்துக்குள்
பல சொல்லி
நலம் வாழ
வாழ்த்த இயலாத
வயிற்றெரிச்சலை
வார்த்தைகளால் வாரி
இறைத்து ........
தன் நலம்
மட்டுமே
கண்ட/ கொண்ட
சுயநல பிதற்றல்களோடு....
புனித பிம்பங்களாக
காட்டிக்கொள்ளும்
சிலருக்கு
அது தான்-
"காதல்" என்ற "கருமாந்திரமோ?????
ஏதோ சொல்ல நினைக்கிறேன்...
Posted by : கவிதா | Kavitha
on 13:11
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
12 - பார்வையிட்டவர்கள்:
எல்லாம் நன்று!!!
//உன்
நினைவுகளில்
எப்போதும்
நான்
அழகு !! :)//
இதுவும் நல்லாருக்கு.
@ ஜீவன் - நன்றி :)
@ சின்ன அம்மிணி - நன்றி :)
arputham anaithum
//பூக்கள்
கவிதா'க்கள் !!
பூக்களை பறிக்காதீர்கள்!!//
ithu sixer
//உயரத்திலிருந்து
பாதாலத்திற்கு
குதிப்பேன்//
பாதா"ள"ம்
(அப்பாடா! நான் இன்னிக்கு நிம்மதியா தூங்குவேன்)
வரவனையான் - நன்றி :)
கவிதா!எப்படியிருக்கீங்க.கவிதை,கூடவே அணில்குட்டிய வேற காணோமுன்னு சரியான வீட்டுக்குத்தான் வந்திருக்கிறோமான்னு ஒரு சின்ன சந்தேகம்.முந்தைய இடுகைக்குப் போனா அணில்குட்டி சிரிச்சிகிட்டு இருக்குது.நன்றி அணில்குட்டி:)
@ ராஜ நடராஜன் -நல்லாயிருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க..
ச்சும்மா தான் சிலசமயம் அணிலை விட்டுட்டு வந்துடுவேன்.. :))
//(அப்பாடா! நான் இன்னிக்கு நிம்மதியா தூங்குவேன்)//
நான் இப்பத்தான் பாத்தேன்..
சரி செய்துட்டு நானும் தூங்கறேன்.. :))
பூங்கொத்து கவிதா!
அன்புடன் அருணா - ரொம்ப நன்றிங்க :)))))))) அன்புடன் கவிதா !! :)
ஊர்ல அரிசி மண்டிக்கு போனோம் என்றால் ஒவ்வொரு சாக்கு அரிசி மேலயும் இது பொன்னி அரிசி, சம்பா அரிசின்னு ஒரு போர்ட் குத்தி வெச்சு இருப்பாங்க, அதுமாதிரி இங்க ஒன்னு ஒன்னுக்கும் கவிதைன்னு லேபிள் குத்திவையுங்கோ:))))
//கல்யாணத்திற்கு பிறகு காணாமல் போகும் !!//
ஹி ஹி யாருங்க சொன்னா?
Post a Comment