திருமணம் ஆன 15 நாட்களுக்குள் என் மாமியாரிடம் திட்டு வாங்கினேன். என்னவோ அவங்களுக்கு நல்ல நேரம் தப்பிச்சிட்டாங்க'ன்னு நினைச்சுக்கலாமா? அப்படித்தான் நினைத்து போனா போகுது நானும் விட்டுட்டேன்.
நான் திருமணம் முடித்து என் கணவருடைய வீட்டுக்கு சென்ற பிறகு ஒரு நாள் என் மாமியார் மீன் குழம்பு வைத்திருந்தார். எனக்கு எப்பவும் ஆயா மீன் ஆய்ந்து கொடுத்து சாப்பிட்டு தான் பழக்கம், அதனால் இப்பவும் எனக்கு ஆய்ந்து சாப்பிட சோம்பேறி த்தனமும் சரியாக ஆயவும் தெரியாதது என்பது ஒரு கேவலமான விஷயம் தான். என்ன செய்வது மீனுக்கும் எனக்கும் அவ்வளவு ராசி, எப்படி ஆய்ந்து சாப்பிட்டாலும் தொண்டையில் எப்படியும் ஒரு முள் குத்தி, என்னை அழவைக்காமல் விடுவதில்லை. அதனால், மீன் மட்டும் யாராவது ஆய்ந்து கொடுத்தால் மட்டுமே சாப்பிடுவது என்ற கொள்கையை வளர்த்துக்கொண்டேன். ஆய்ந்து கொடுக்க யாரும் இல்லாத பட்சத்தில் " நீ யாரோ நான் யாரோ" ன்னு மீனை பார்த்து சொல்லிவிட்டு மீன் குழம்பு மட்டும் போட்டு சாப்பிடுவேன்.
அன்று என் மாமியார், என் கணவருக்கும் எனக்கும் பரிமாறிவிட்டு உட்கார்ந்து நாங்கள் சாப்பிடுவதை ரசித்துக்கொண்டு இருந்தார், நான் மீன் ஆயத்தெரியாமல் ஆய்வதை பார்த்து "என்ன பொண்ணு மீன்'ஐ ஆய சொன்னா பூச்சி பிடிக்குது?" என்று கிண்டல் அடித்துவிட்டு, நான் ஆய்வதை பார்த்து சிரித்தவாறே இருந்தார்கள். (but no help from anyone!! )
புது மனிதர்கள், யாரிடம் போய் மீன் ஆய்ந்து கொடுன்னு கேட்பது, சரி நாமே முயற்சி செய்வோம் னு ரொம்ப தீவரமாக நான் மீன் ஆய்வதில் கவனமாக இருந்ததில் என் கணவர் சாப்பிடுவதை கவனிக்கவில்லை. என் மாமியார் திருப்பி இரண்டு முன்று முறை அவருக்கு பரிமாறியவுடன், என்னடா இது ஒரு மீனை நாம இன்னும் ஆய்ந்தே முடிக்கல அதுக்குள்ள அவர் 2,3 ரவுண்டு சாப்பிட்டுடாறா? என்று அவர் சாப்பிடுவதை அதற்கு பிறகு தான் தலையை உயர்த்தி பார்க்க ஆரம்பித்தேன்.....ஆனா திரும்பி என் இலைக்கு நான் வரவே இல்லை.
அத்தனை அழகாக மீனை இது வரை யாரும் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை :) ஒரு மீனை வாலை பிடித்து எடுக்கிறார், வாய்க்குள் அப்படியே போட்டு ஒரே இழூ....... வெளியில் வருவது வெறும் முள் தான்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ..எப்படி இப்படி..??? உள்ளே மீனா போகுது வெளியில வரும் போது வெறும் முள்ளு மட்டும் தான் வருது?? இது ஒரு கலை போலவே. ? முதல் மரியாதை சினிமாவில் நடிகர் திலகம் சூப்பரா சாப்பிடுவாரு.. அந்த அம்மா ராதாவும் சாப்பிடுவாங்க. .இப்படி சினிமாவில் பார்த்தது ...இப்ப நேரா பார்ர்க்கும் போது வாயில் எச்சில் ஊறாமல் இருக்குமா சொல்லுங்க?
எச்சில் ஊற ஊற அவர் சாப்பிடுவதை நான் கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். என் சாப்பாட்டில் என் கவனம் செல்லவே இல்லை. .. எப்படி முள் வாய்குள்ள குத்தாமல் வெளில வருது ன்னு ஒரே ஆச்சரியம். ! புது பெண்ணாச்சே, புது வீடு , புது மனுஷங்களாச்சேன்னு வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்து இருக்கலாம். நமக்கு தான் அந்த பழக்கம் எந்த காலத்திலியும் இருந்தது இல்லையே..! ரொம்ப ஆர்வத்தில்.....
:))) அய்ய்ய்..!! எப்படிங்க நீங்க மட்டும் இப்படி சாப்படறீங்க? " எங்க வீட்டுல எல்லாம் இப்படி நாங்க சாப்பிட மாட்டோம் னு.." ன்னு சொல்ல ொல்ல...
என் மாமியாருக்கு வந்ததே பாருங்க கோவம்...... "இந்தா..! உனக்கு வேணும்னா இன்னும் நாலு எடுத்து வச்சி சாப்பிடு..! ஏன் அவனை இப்படி வாய் வெறிக்க பார்க்கற...உன்னைமாதிரி என்ன பூச்சி பிடிக்க சொல்றியா?. யாரும் சாப்பிடாததைய என் புள்ள சாப்பிட்டுடான். ஒரு மீன் ஆய' க்கூட தெரியாம பொண்ணை வளத்து வச்சி இருக்காங்க பாரு.. அவன் சாப்பிடறதை எப்படி பாக்குது பாரு.. ? " ன்னு திட்ட ஆரம்பிச்சிட்டாங்க...
அவ்வ்வ்வ்வ்வ்.......கல்யாணம் ஆகி ஒரு 15 நாள் கூடவும் ஆகி இருக்காது. ... எனக்கு நிஜமா ஏன் அவங்க என்னை அப்படி திட்டினாங்கன்னு தெரியல. .எனக்கு கோவமும் வரலை, பயமும் வரலை... என் நினைவு எல்லாம் என் வீட்டுக்காரர் வாயில் முழுசாக சென்ற மீனும், வெளியில் வந்த முள்ளும்.... தான்...
ஆனால் திருப்பி அவரை பார்க்கவில்லை தான். என் மாமியார் என்னை அப்படி திட்டியதற்கு என் வீட்டிக்காராரிடம் இருந்தும் எந்த ரியாக்ஷனும் இல்லை. நான் வெறிப்பதை மட்டும் ஒரு தரம் திரும்பி பார்த்துவிட்டு, அவர் பாட்டில் அவருடைய வேலையில் மும்மரமாக இருந்தார். அதாங்க மீன் சாப்பிடுவதில். :)
"சரி நோ சப்போர்ட்டு....சோ.. ஐ அம் த ஹெல்ப்லெஸ்ஸு" ன்னு நினைச்சுக்கிட்டு என் மீனை ஆய திரும்ப சென்றுவிட்டேன்.
**************
ஆனா எங்க வீட்டுக்கு வந்து, ஆயாவிடம்.."ஆயா ஏன் நம்ம வீட்டில் மீனை அப்படி யாரும் சாப்பிடல..நீ ஏன் எனக்கு சொல்லித்தரல.."ன்னு கேட்டுவிட்டு மாமியார் திட்டியதையும் சொன்னேன். ஆயாவும் சிரித்துவிட்டு "இனிமே பாக்காத....அவங்க புள்ளைக்கு கண்ணு படும்னு நினைச்சு இருப்பாங்க.." ன்னு சொல்லிட்டு "எல்லா மீனையும் அப்படி சாப்பிட முடியாது பாப்பா . நாம அந்த மீன் எல்லாம் நம்ம வீட்டுல வாங்கறது இல்ல .". என்றார். "அது அயில மீனா இருக்கும்.. நாம் எப்பவுமே அது வாங்கறது இல்லையே? "என்றார்.
என்னவோ.. என் கணவர் , இப்பவும் அவங்க வீட்டுக்கு (இப்பவும் இங்கே நாங்கள் அயில மீன் வாங்குவதில்லை) அப்படித்தான் சாப்பிடுகிறார். நானும் இன்னும் அப்படித்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். :) திட்டத்தான் யாரும் இல்லை.... :))))))))).
அணில் குட்டி அனிதா : திட்ட யாரும் இல்லையா ?வூட்டுக்காரு திட்டறது எல்லாம் கணக்கே இல்லையா? இன்னும் மீன் சாப்பிட தெரியலன்னு மீன் குழம்பு வைக்கும் போது எல்லாம் அம்மணி க்கு பெரைடு நடக்கும் ..அம்மணி யும் ஹி ஹி.. ன்னு சிரிச்சிட்டு வெறும் குழம்போட கதைய முடிச்சிடுவாங்க...
பீட்டர்தாத்ஸ் : Give me a fish and I eat for a day. Teach me to fish and I eat for a lifetime
மாமியாரிடம் யாராவது இப்படி திட்டு வாங்கி இருக்கீங்களா?
Posted by : கவிதா | Kavitha
on 11:03
Labels:
பழம்-நீ
Subscribe to:
Post Comments (Atom)
52 - பார்வையிட்டவர்கள்:
செருப்பு போட்டுகிட்டு மீன் சாப்பிடுங்க!
அப்பவும் முடியலைன்னா ஷூ வாங்கிக்குங்க!
வந்துட்டீங்களா...மா நக்கல் நயன்நாயகரே..!! வாங்க வாங்க..
ஊர் சுத்தல் எல்லாம் முடிஞ்சாச்சா? நீங்க போயிட்டு வந்த ஏரியாவில் எல்லாரும் மக்கள் எல்லாம் நலமா?
//செருப்பு போட்டுகிட்டு மீன் சாப்பிடுங்க!//
அடடா இத்தனை வருஷமா யாரும் இதை எனக்கு சொல்லவே இல்லையே... எப்படி சிபி நீங்க மட்டும் இப்படி..இவ்வளவு புத்திசாலியா இருக்கீங்க ?!! ப்ளீஸ் தயவு செய்து சொல்லுங்களேன். :)
//எப்படி சிபி நீங்க மட்டும் இப்படி..இவ்வளவு புத்திசாலியா இருக்கீங்க ?!! ப்ளீஸ் தயவு செய்து சொல்லுங்களேன். :)
//
நிறைய மீன் சாப்பிட்டவும்! அறிவு* வளரும்!
* இருப்பவர்களுக்கு மட்டுமே!
//நிறைய மீன் சாப்பிட்டவும்! அறிவு* வளரும்!//
:((((((( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!
//* இருப்பவர்களுக்கு மட்டுமே!//
ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்?!! ஏன் இப்படி???? நமக்கு இல்லாததை பத்தி நாம் எப்பவும் பேசப்பிடாது சரியா.. :))
//Teach me to fish and I eat for a lifetime//
அதாவது ஒரே மீனையே ஆயுசு பூரா திம்பாங்க கவிதா! அப்படித்தானே தாத்ஸ்?
//ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்?!! ஏன் இப்படி???? நமக்கு இல்லாததை பத்தி நாம் எப்பவும் பேசப்பிடாது சரியா.. :))
//
நமக்கு அல்ல! உங்களுக்கு!
//Teach me to fish and I eat for a lifetime//
அது மீனோட லைஃப் டைமா? கவிதாவோட லைஃப் டைமா?
////Teach me to fish and I eat for a lifetime//
அதாவது ஒரே மீனையே ஆயுசு பூரா திம்பாங்க கவிதா! அப்படித்தானே தாத்ஸ்?//
அய்யோ அய்யோ...!! பீட்டரு நீ இனிமே எழுதறதை நிறுத்திடு.. !!
இப்ப தெரிஞ்சி போச்சி...
////* இருப்பவர்களுக்கு மட்டுமே!///
இதற்கு அர்த்தம்... :)))
//அது மீனோட லைஃப் டைமா? கவிதாவோட லைஃப் டைமா?//
சிபி நிஜமா நீங்க நல்லா இருக்கீங்களா.. தலைய மொட்டை அடிக்கும் போது ஏதும் விபரீதம் ஏற்பட்டு போச்சாஆஆ?
//நமக்கு அல்ல! உங்களுக்கு!//
நானும் 'உங்களுக்கு' ன்னு தான் சொன்னேன்....
என்னோட சின்ன வயசுல எங்கப்பா முள் எல்லாத்தையும் எடுத்துப் போட்டுட்டு மிச்சத்தை என் கைல கொடுப்பார். அதைத்தான் சாப்பிடுவேன்.
ஒரு நிமிஷம் என் அப்பாவை நினைக்க வைச்சுட்டீங்க..!
நன்றி..!
//என்னோட சின்ன வயசுல எங்கப்பா முள் எல்லாத்தையும் எடுத்துப் போட்டுட்டு மிச்சத்தை என் கைல கொடுப்பார். அதைத்தான் சாப்பிடுவேன்.
ஒரு நிமிஷம் என் அப்பாவை நினைக்க வைச்சுட்டீங்க..!
நன்றி..!//
:) ம்ம் வாங்க முருகா. .எல்லார் வீட்டிலியும் சின்ன வயசுல நடக்கற விஷயம் தான் எனக்கு மட்டும் இன்னும் தொடருது......
மீன் குழம்ப ஞாபகப்படுத்திட்டீங்க...எனக்கு இப்பவே நாக்கு ஊர ஆரம்பிச்சிடுச்சு...அதுவும் அந்த படத்த வேற போட்டுட்டீங்களே....
நல்லாருக்கு உங்க அனுபவம்...
//இன்னும் அப்படித்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். :) திட்டத்தான் யாரும் இல்லை.... :))))))))).///
பழகிப்போச்சுன்னு நினைக்கிறேன்...(மனசுல திட்றது வெளியில கேட்காதுல்ல)
பதிவு நல்லா இருக்கு. அடுத்த பதிவு," மாமியாரிடம் யாராவது அடி வாங்கியிருக்கீங்களா" தான.
//பழகிப்போச்சுன்னு நினைக்கிறேன்..//
வாங்க பாலாஜி.. :) நன்றி..:)
ஆமா எல்லாமே ஒரு காலக்கட்டத்தில் நமக்கு பழகித்தான் போயிடும்.. இல்லையா? :)
//(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….//
சரிங்க .. ஆனா இருக்கற இரண்டு தளங்களிலிலேயே நான் எனக்கு சரியா ஓட்டு போட்டுக்கறது இல்லையே...?!!
என்ன செய்யலாம்..??
//பதிவு நல்லா இருக்கு. அடுத்த பதிவு," மாமியாரிடம் யாராவது அடி வாங்கியிருக்கீங்களா" தான//
வாங்க ஜெரி ஈசானந்தா.. பேரை பார்த்தவுடன் பித்தாசரமத்திலிருந்து வந்தீங்களோன்னு நினைச்சேன்..
ம்ம்.உங்க ப்ரொபைல் பாத்தவுடன் தெரியுது ஏன் நீங்க அடிவாங்கறது பத்தி சொல்லி இருக்கீங்கன்னு....
மாமியார் கிட்ட அடி எதுவும் வாங்களைங்க.. இது தான் முதலும் கடைசியுமா வாங்கின திட்டு.. பிள்ளை பாசம்.. அப்படி எல்லாம் ஆ' ன்னு பாத்தா யாரா இருந்தாலும் திட்டத்தான் செய்வாங்க...
நானும் மாமியார் ஆனால்.. ன்னு வேணும்னா ஒரு பதிவு போடலாம்.. :)
பதிவை ரசிச்சு படிச்சுட்டு வந்தா பின்னூட்டங்கள் அதைவிட சூப்பரா இருக்கு போங்க
நான் நண்டு சாப்பிடும் அழகை ஊரே வேடிக்கை பார்க்குமாக்கும்!
அயிரை மீன்ல முள் தேடுனிங்களா? நாங்கல்லாம் முள்வாளை மீன்லேயே முள் தேட மாட்டோம். மீனு நண்டு எதுவா இருந்தாலும் நமக்கு அடுத்தவங்க ஹெல்ப்ல்லாம் தேவையே இல்லை. பிரிச்சு மேய்ஞ்சுடுவோம்ல ;-)
@ புதுகைத்தென்றல் - (கவனிக்க- பெயரை சரியா சொல்லி இருக்கேன்)
வாங்க. .எப்படி இருக்கீங்க.?!!
ஆமா நாம திட்டு வாங்கி அதை எழுதினா சுவரசியமாத்தானே இருக்கும்.. அப்பப்ப நல்லவேளை வீட்டுல இருந்தவங்க எல்லாம் சேந்து என்னை கும்மாம விட்டாங்களே சந்தோஷப்பட்டுக்குவேன் :))))))
நன்றிப்பா.. !!
@ வால்'லு... - என்னைக்கூட எல்லாரும் வேடிக்கை தான் பாப்பாங்க ஏன்னா அவ்வளவு கேவலமா சாப்பிடுவேன்.. நீங்க எப்படி? :)
நானும் அப்படித்தான்!
இரண்டு கையில் சாப்பிடுவேன்!
@ராஜ்.. ம்ம்.. நக்கலு..!! :(
இந்த மீனால நான் பட்ட கேவலத்துக்கு அளவே இல்ல.. எங்கையாவது போனால் நானா அவங்களை மீன் குழம்பு வேணும்னு கேட்டேன்.. அவங்களா செய்து வச்சிட்டு.. அதையும் எனக்கு பரிமாறிட்டு சாப்பிட தெரியலன்னு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம திட்டறாங்கப்பா..
என் பிரண்டு ஜனா வீட்டுல க்கூட இப்படி திட்டு வாங்கி இருக்கேன். .அவங்க சாப்பிடறதை வேடிக்கை பார்த்து இல்ல... எனக்கு சாப்பிட தெரியலன்னு.. அவ்வ்வ்...
சோ, ஒரு முடிவுக்கு வந்து யாராச்சும் மீன் வைத்தால்.. வேண்டாம்..னு சொல்லியும் வைக்காதீங்க வச்சிட்டு என்னை யாரும் திட்டபிடாது நான் எப்படி சாப்பிட்டாலும் கண்டுக்கப்பிடாது.. னு கண்டிஷன் போட்டுட்டு தான் தட்டுல கைய வைக்கறது.. :))))
எதிலும் ஒரு நியாயம் தர்மம் இருக்கனும் இல்லையா? :)
@ ராஜ் - ஜனா அம்மா எப்படி திட்டினாங்க தெரியுமா?
புள்ள கூட (நான் பெத்தது தான்) அழகா மீனை ஆய்ந்து சாப்பிடுது.. அம்மாக்காரி க்கு சாப்பிட தெரியல. .இந்த கொடுமை எல்லாம் எங்க நடக்கும்.. ?!! :(( ன்னு சொல்லி திட்டினாங்க..
நல்லவேளை அடிக்கல.. ஆன்ட்டி செமத்தியா கடுப்பாயிட்டாங்கன்னு மட்டும் தெரிஞ்சிக்கிட்டேன்.. :))))
சரி விடுங்க ரொம்ப ஃபீல் பண்ணாதிங்க. இதுக்கே இவ்ளோ ஃபீலிங்ன்னா நாங்க முள் வாளை மீன் பீஸை அப்டியே உள்ளே போட்டு வெறும் முள்ளை மட்டும் ஃபில்டர் பண்ணி வெளில எடுக்கிறதையெல்லாம் சொன்னா அழ ஆரம்பிச்சுடுவிங்க.
மனுஷன் பசில இருக்கிறப்போ தான் மீன், நண்டுன்னு பேசி எல்லோரும் பசிய இன்னும் அதிகம் ஆக்குறாங்கப்பா.
கவிதா என் வூட்டுக்காரிதான் அப்படீன்னா நீங்களும் அப்படிதானா? என்னமோ போங்க...
என் வூட்டுக்காரிக்கு சிக்கனையும் நாந்தான் ஆய்ஞ்சிக்கொடுக்கணும். ஹோட்டலுக்கு போனாலும் கூட இந்த பழக்கத்தெ வுடமாட்டேங்கறா.... அதனாலே போன்லெஸ்ஸாகவே வாங்கிடறது எப்பவும்.
சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள். வாழ்த்துகள்.
பின்குறிப்பு: சிபி கவிதாவை நக்கல் அடிக்கிறீரே.... உம்ம வீட்டில் எப்படி??
கணவாய் மீன் சாப்பிட்டு இருக்கீங்களா? முள்ளே இருக்காது ஆனா ஒன்னுப் பாருங்க பார்க்குறத்துத்தான் கொஞ்சம் நொச நொசன்னு உவ்வேவ்வா தோணும். ஆனா பொறிச்சுச் சாப்பிட்டீங்கன்னு வைங்க மவனே அதுக்கப்புறம் வேற மீனே சாப்பிட மாட்டீங்க.
ஆனா வெல தான் கொஞ்சம் காஸ்லியா தோணும்.
சரி நம்ம மேட்டருக்கு வருமோம்.... மீன் மண்டைய சாப்பிட்டுக்கேளா ரொம்ப டேஸ்டா இருக்கும்.
அடடா! நன்றாக சாப்பிடக்கூடத் தெரியாம இருப்பதற்கும் திட்டு கிடைக்கும் என சொல்லிய அழகிய பதிவு. நன்றாக சாப்பிடவே தெரியாமல் வாழ்ந்தும் விடலாம் என சொல்லிய பதிவு.
ஆயத் தெரியாது போனாலும், மீனை விடமாட்டீங்க போலிருக்கு. தொடரட்டும். மிக்க நன்றி.
//பின்குறிப்பு: சிபி கவிதாவை நக்கல் அடிக்கிறீரே.... உம்ம வீட்டில் எப்படி??//
எனக்கு எங்க வீட்டில ஆஞ்சி கொடுப்பாங்க!
எங்க தங்க்ஸ்க்க்கும் ஒரு தபா மீன் முள் குத்திடுச்சு! டாக்டர்கிட்டே போனா அவரும் கலாய்ச்சாரு!
//சோ, ஒரு முடிவுக்கு வந்து யாராச்சும் மீன் வைத்தால்//
இதுக்கு ஏன் சோ ஒரு முடிவுக்கு வரணும்? இது என்ன அரசியல் பிரச்சினையா?
இது உங்க சொந்த விஷயம் அல்லவா!
//ஆமா நாம திட்டு வாங்கி அதை எழுதினா சுவரசியமாத்தானே இருக்கும்.. அப்பப்ப நல்லவேளை வீட்டுல இருந்தவங்க எல்லாம் சேந்து என்னை கும்மாம விட்டாங்களே சந்தோஷப்பட்டுக்குவேன் :))))))
//
கும்முறதுக்குதான் நாங்க இருக்கமே! கவலையே படாதீங்க!
//கவிதா என் வூட்டுக்காரிதான் அப்படீன்னா நீங்களும் அப்படிதானா? என்னமோ போங்க...
//
:)) ஹி ஹி... ஆமா.. நானும் அப்படித்தான் ..
//என் வூட்டுக்காரிக்கு சிக்கனையும் நாந்தான் ஆய்ஞ்சிக்கொடுக்கணும். //
ஆனா இவ்வளவு மோசம் இல்ல.. சிக்கன் நானே நானா சாப்பிடுவேன்... :))
//ஹோட்டலுக்கு போனாலும் கூட இந்த பழக்கத்தெ வுடமாட்டேங்கறா.... அதனாலே போன்லெஸ்ஸாகவே வாங்கிடறது எப்பவும்.
//
ம்ம்.. நிம்மதி!! ஹோட்டலில் எல்லாம் ஆய்ந்து வைத்தால்.. வேடிக்கை பார்ப்பவர்கள் அதிகமா ஆயிடுமே ?!! :)))
//சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள். வாழ்த்துகள்.//
நன்றி ராசா.. :)
//பின்குறிப்பு: சிபி கவிதாவை நக்கல் அடிக்கிறீரே.... உம்ம வீட்டில் எப்படி??//
:)))))) அதை சிபி கிட்ட போயா கேட்கறீங்க... நான் அவங்க வூட்டுக்காரம்மாவை டேரக்ட்டா கேட்டு ஒரு பதிவா போடறேன்.. அப்பத்தான் உண்மை உண்மையா வெளிய வரும் :)
//ஆமா நாம திட்டு வாங்கி அதை எழுதினா சுவரசியமாத்தானே இருக்கும்//
ஆமாமா! நீங்க திட்டு வாங்கினா கண்டிப்பா எங்களுக்கு சுவாரசியம்தான்!
//எங்க தங்க்ஸ்க்க்கும் ஒரு தபா மீன் முள் குத்திடுச்சு! டாக்டர்கிட்டே போனா அவரும் கலாய்ச்சாரு!//
அட டாக்டர் கிட்ட எல்லாம் போவீங்களா இதுக்கு..?!! இது தெரியாம போச்சே... அப்பன்னா இனிமே தைரியமா மீன் சாப்பிடலாம்.. :)
//புதுகைத் தென்றல் said...
பதிவை ரசிச்சு படிச்சுட்டு வந்தா பின்னூட்டங்கள் அதைவிட சூப்பரா இருக்கு போங்க
//
ஐயய்யே! இந்த அக்கா பதிவையெல்லாம் படிச்சி பின்னூட்டம் போடுறாங்க போல!
கவிதா பிளாக்ல வந்து பதிவையெல்லாம் ஏங்க படிக்கிறாங்க!
வந்தமா! ஸ்டார்ட் மீசிக்னு கும்முனமா? ஜாலியா போனமான்னு இருக்காம!
//அட டாக்டர் கிட்ட எல்லாம் போவீங்களா இதுக்கு..?!! இது தெரியாம போச்சே... அப்பன்னா இனிமே தைரியமா மீன் சாப்பிடலாம்.. :)//
நீங்க தைரியமா சாப்பிடலாம் இனி!
அதான் 108 சர்வீஸ், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் எல்லாம் இருக்கே!
//இதுக்கு ஏன் சோ ஒரு முடிவுக்கு வரணும்? இது என்ன அரசியல் பிரச்சினையா?//
:))))) சிபி.... ஆரம்பிச்சிட்டீங்களா ?
//இது உங்க சொந்த விஷயம் அல்லவா!//
ஆமா சொந்த விஷயம் தான் சொந்த விஷயம் தான் தெரியாம சோ என்ற வார்த்தையை போட்டுவிட்டேன்... :(
//:)))))) அதை சிபி கிட்ட போயா கேட்கறீங்க... நான் அவங்க வூட்டுக்காரம்மாவை டேரக்ட்டா கேட்டு ஒரு பதிவா போடறேன்.. அப்பத்தான் உண்மை உண்மையா வெளிய வரும் //
நீங்களே பதிவு போட்டா எப்படி உண்மை வரும்?னு மன்சூர் அண்ணா கேக்கச் சொன்னாரு!
//கும்முறதுக்குதான் நாங்க இருக்கமே! கவலையே படாதீங்க!//
ம்ம்ம்ம்..அதான் கவலையே.. !!
//அதான் 108 சர்வீஸ், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் எல்லாம் இருக்கே!//
ஹல்லோ.. 108 சர்வீஸ் எதுக்குன்னு தெரியுமா..? ரோட் ஆக்ஸிடெண்ட்டுக்கு ..
தேவையில்லாம அவங்களை கூப்பிட்டு அப்புறம் என்னால அந்த நல்ல திட்டமே நிறுத்தர மாதிரி ஆகப்போகுது..
நோ நோ நோஓ..மிஸ் கைடு.. :)
//நீங்களே பதிவு போட்டா எப்படி உண்மை வரும்?னு மன்சூர் அண்ணா கேக்கச் சொன்னாரு!//
பதிவுலக மக்கள் அனைவருக்கும் நல்லாவே தெரியும்.. யாரு உண்மை பேசுவாங்கன்னு..
சோ (திருப்பியுமா??) இது இந்த so, அவரு கேட்க மாட்டாரு.. :)
//ஐயய்யே! இந்த அக்கா பதிவையெல்லாம் படிச்சி பின்னூட்டம் போடுறாங்க போல!
கவிதா பிளாக்ல வந்து பதிவையெல்லாம் ஏங்க படிக்கிறாங்க!//
ஏன்ன்ன் சிபி இப்படி.. நீங்க தான் படிக்க மாட்டேன்ங்கறீங்க..ஏதோ. .ஒருத்தர் இரண்டு பேர் படிக்கறாங்க.. அதையும் கெடுக்கனுமா..? ஏன் இம்புட்டு நல்லவரா இருக்கீங்க..?
@ நாகு
வாங்க எப்படி இருக்கீங்க..ரொம்ப வருஷம் ஆச்சி உங்களை என் பதிவுகளில் பார்த்து :)
//கணவாய் மீன் சாப்பிட்டு இருக்கீங்களா? முள்ளே இருக்காது ஆனா ஒன்னுப் பாருங்க பார்க்குறத்துத்தான் கொஞ்சம் நொச நொசன்னு உவ்வேவ்வா தோணும். ஆனா பொறிச்சுச் சாப்பிட்டீங்கன்னு வைங்க மவனே அதுக்கப்புறம் வேற மீனே சாப்பிட மாட்டீங்க.//
ம்ம்..கேட்டு பார்க்கிறேன்..இதுவரை சாப்பிட்டது இல்ல... :) பொதுவாக எங்கள் வீட்டில் சங்கரா, கிழங்கான், வஞ்சனம், பட்டையா குட்டையா ஒன்னு இருக்குமே அது.. பட்டையா நீட்ட்ட்டாஆஆஆ ஒன்னு இருக்குமே பாம்பு மாதிரி அது, இன்னும் இப்படி அடையாளம் சொல்ல் தெரிஞ்ச 2, 3 வகை சாப்பிடுவோம்.. ஆனா அது பேரு எல்லாம் தெரியல எனக்கு.. அவ்வளவு தான்...
//சரி நம்ம மேட்டருக்கு வருமோம்.... மீன் மண்டைய சாப்பிட்டுக்கேளா ரொம்ப டேஸ்டா இருக்கும்.//
ம்கூம்... சரிதான்.. உடம்பையே ஒழங்கா சாப்பிட தெரியாம இருக்கேன்.. இதுல தலை வேறையா..?
//அடடா! நன்றாக சாப்பிடக்கூடத் தெரியாம இருப்பதற்கும் திட்டு கிடைக்கும் என சொல்லிய அழகிய பதிவு. நன்றாக சாப்பிடவே தெரியாமல் வாழ்ந்தும் விடலாம் என சொல்லிய பதிவு.//
அடடா...எப்படி எழுதினாலும் பாராட்டக்கூடிய ஒருவர் நீங்கள் !! :)
//ஆயத் தெரியாது போனாலும், மீனை விடமாட்டீங்க போலிருக்கு. தொடரட்டும். மிக்க நன்றி.//
நான் எங்கவீட்டில் செய்தாலும் யாரும் ஆய்ந்து கொடுக்க மாட்டார்கள் , அதனால் நானே சமைத்தாலும் சாப்பிடுவதில்லை தான். வெளியில் செல்லும் போது வேண்டாம் என்றாலும் சாப்பிடும்மா ன்னு வைத்துவிட்டு சாப்பிட தெரியாமல் நான் திண்டாடுவதை பார்த்தபிறகு திட்டவும் செய்வார்கள் :)
//பதிவுலக மக்கள் அனைவருக்கும் நல்லாவே தெரியும்.. யாரு உண்மை பேசுவாங்கன்னு..//
ஆமா! ஆனா உங்ககிட்டே உண்மை வராதுன்னு 105% பதிவுலக மக்கள் நன்கு அறிவார்கள்
திட்டுக்கெல்லாம் பதிவு போட்டு அசத்துறீங்க...
நானும் மீன் நல்லா சாப்பிடுவேன், என் மனைவிக்கும் நான் தான் ஆய்ந்து கொடுப்பது.. :(
அணில்குட்டிக்கு மீன் சாப்பிட தெரியுமா?
நீங்க மாமியார் ஆகினால், மருமகளை எப்டி திட்டுவீங்க?
இல்ல... நான் அந்த மாதிரி இல்லைன்னு சொன்னீங்கன்னா, மருமகளிடம் திட்டு வாங்க ரெடியா இருக்கீங்களா?'
:))
;))))
@ பீர் | Peer
//திட்டுக்கெல்லாம் பதிவு போட்டு அசத்துறீங்க...
//
:) நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க..:))))
//நானும் மீன் நல்லா சாப்பிடுவேன், என் மனைவிக்கும் நான் தான் ஆய்ந்து கொடுப்பது.. :(//
எங்க வீட்டில அப்படி எல்லாம் இல்லைங்க.. நானே தான் சாப்பிடனும்.. உடம்பு சரியில்லைன்னா மட்டும்.. உதவி செய்வாங்க..
//அணில்குட்டிக்கு மீன் சாப்பிட தெரியுமா?
//
ஏங்க உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் கேள்வி கேட்க தோணுது..?!!!
//நீங்க மாமியார் ஆகினால், மருமகளை எப்டி திட்டுவீங்க?
//
எனக்கு எப்பவும் திட்டு வாங்கி தான் பழக்கம். .சோ.. மரியாதையோட இருக்கனும்னு நினைத்தால் (அப்படி பொதுவாக நான் நினைக்கறது இல்ல), தனியா இருப்பது சால சிறந்தது.
//இல்ல... நான் அந்த மாதிரி இல்லைன்னு சொன்னீங்கன்னா, மருமகளிடம் திட்டு வாங்க ரெடியா இருக்கீங்களா?'
:))//
ரொம்ப கோவம் வரும் போது கண்டிப்பா நான் திட்டுவேன் தான் - இங்க கவனிக்க வேண்டியது, இதுவரையில் எவ்வளவு கோவம் வந்தும்
அண்ணி
நாத்தனார்
மாமியார்
மூத்தார்கள் (கணவரின் அண்ணன்கள்)
யாரிடமும் என் கோவத்தை காட்டியது இல்லை... அவங்க என்ன செய்தாலும் எப்படி இருந்தாலும் அமைதியாக இருந்து இருக்கிறேன் என்பது என் வாழ்க்கை வரலாற்று ஏட்டில் பதிக்கவேண்டிய விஷயம். எல்லோரும் என்னை ரொம்ப "நல்லவ" ன்னு தான் சொல்லுவாங்க.. :))))
மருமகளிடமும் அப்படி இருப்பேனே? என்பது எனக்கு சந்தேகம் தான்.... . எதிலுமே நான் சராசரி என்று பெயர் வாங்கியது இல்லை... ம்ம் பாக்கலாம்.. :)
//கோபிநாத் said...
;))))//
:))))
(உங்களை மாதிரியே பதில் சொல்லிட்டேனா?)
//ஆமா! ஆனா உங்ககிட்டே உண்மை வராதுன்னு 105% பதிவுலக மக்கள் நன்கு அறிவார்கள்//
ம்ம்... 5 பேர் அதிகமாக உங்க பக்கம் இருக்காங்க. .யாரு அவங்க..யாரு அவங்க...... யாரு அவங்க???
மன்சூர் அல்ல மஞ்சூர்.....
மாத்தி தொலைக்காதெயும்....
எப்படியும் ஒரு நாள் வூட்டுக்கு வரத்தான் போறேன். அப்ப கவனிச்சிக்கறேன்.
Post a Comment