உன்னை போல் ஒருவன்... Excellent !! படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன் நினைத்தது "இந்த கலைஞனின் வயது எப்படியாவது இன்னும் சில வருடங்கள் பின்னோக்கி சென்று விடக்கூடாதா? இன்னமும் எத்தனை தரமான படங்கள் கிடைக்கும்"
இந்த கடிதம் படத்தினை பற்றிய விமர்சனம் இல்லை, நிறையவே குறைகள் உள்ளன, சில விஷயங்கள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டு இருக்கின்றன. அதையெல்லாம் உணராதவராக நீங்கள் இருக்க முடியாது என்பதில் ஏனோ எனக்கு நம்பிக்கை, அதனால் விமர்சனமாக இதை எழுதவில்லை, விமர்சனம் எழுதும் அளவிற்கு நான் புத்திசாலியும் இல்லை.
உங்களின் படங்கள் சில பார்த்துவிட்டு திரை அரங்கை விட்டு வெளியில் வரும் போது படத்தில் சொல்லப்பட்ட கருத்து, படம் எடுக்கப்பட்ட விதம், உங்களின் ஆழ்ந்த நடிப்பு, சின்ன சின்ன விஷயங்களில் உங்களின் கவனம்,ஈடுபாடு, சிந்திக்க வைக்கும் வசனங்கள், கதாநாயகிகளுக்கு நீங்கள் கொடுக்கும் முத்தம், அவர்களை பின்புறமாக வளைத்து எப்படி எளிதாக தூக்குகிறீர்கள், ரொம்பவும் நுட்பமாக கவனித்து செய்திருக்கும் உங்களின் உடல் மொழியும், முக பாவனைகள் என்று எல்லாவற்றையும் அசைப்போட்டு வருவதால் தலை பாரமாக ஆகுவதை தடுக்க முடியாது,... அப்படி அதிகமாக பாதித்த படம் மகாநதி, அன்பே சிவம், ஹே ராம், இப்போது உன்னை போல் ஒருவன்.
ஒரு(இரண்டு) கேள்வி உங்களிடம்....
மகாநதி - அடிப்பவனை திருப்பி அடி
ஹே ராம் - இன்னுமொரு "அன்பே சிவம்" என்று வைத்துக்கொள்ளலாமா?
அன்பே சிவம்... - அன்பே சிவம் :)
உன்னை போல் ஒருவன் - தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் மட்டுமே ஒழிக்க முடியும்.
புரியவில்லை.... நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்
அன்பே சிவமா?
தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் மட்டுமே ஒழிக்க முடியுமா?
உங்களின் intelligence, patriotic thought, society consciousness & responsiveness ஆகியவற்றை கவனத்துடனும், ஆர்வத்துடனும் பார்க்கும் ஒரு ரசிகை. இந்த படத்தை உங்களின் மற்ற சில படங்களோடு ஏனோ ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை.
இன்னமும் சிறந்த படங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும்
A Common Woman & ஒரு (தீவிரமில்லாத) ரசிகை :)
திரு, கமல்ஹாசன் அவர்களுக்கு,
Posted by : கவிதா | Kavitha
on 16:14
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
17 - பார்வையிட்டவர்கள்:
பரிசோதனையெல்லாம் அடுத்தவன் காசுலதான் ரிஸ்க் எடுக்கறார்
அவரு ஒரு யாவாரி....அம்புட்டுதேன்.
புரியவில்லை.... நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்//////////////
உங்களை என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்கிறேன் . படத்தை பார்த்தமா குடுத்த காசுக்கு பயன் உண்டா என்பதை விட்டு விட்டு கமல் படத்தின் வாயிலாக ஏதோ சொல்ல வருகிறார் என நினைத்த உங்களை என்ன சொல்ல .
கமலின் நடிப்பை ரசியுங்கள் அவரின் திறமைகளை ரசியுங்கள் ஆனால் கமல் ஒரு லட்சியத்தோடு தான் நடிக்கிறார் என நீங்க நினைப்பது தவறு . கமல் ஒரு நல்ல கலைஞன் தானே தவிர கொள்கை வாதி ஒன்றும் இல்லை
கமலுக்கு எழுதிய கடிதம் படிக்க பகிர்ந்தமைக்கு நன்றி ;)
படத்தை படமா மட்டும் பாருங்க..
அம்மா அப்பா அறிவுரை சொன்னா கேக்க மாட்டோம்...இதுல சினிமாவுல சொல்றதையெல்ல்லாமா கேக்கபோறோம்..
avar enkiume entha kolgaiyaiyum support panren nu sonnatthu illa...
avaroda ennamellam tharamaana padangal kodukanum apdingrathu than..
athai avar sirappaave senju irukkar... neenga kuripitta padangal ellathalayum...
nadiganavum, kalaignanavum avaroda paniya sirapaave seiyurar..
avar enkiume entha kolgaiyaiyum support panren nu sonnatthu illa...
avaroda ennamellam tharamaana padangal kodukanum apdingrathu than..
athai avar sirappaave senju irukkar... neenga kuripitta padangal ellathalayum...
nadiganavum, kalaignanavum avaroda paniya sirapaave seiyurar..
ஆச்சர்ய படுத்துவதில் கமலுக்கு நிகர் கமல் தான்
ஆனால்
இந்த படத்தை பற்றிய விமர்சணங்கள் படித்து ‘கமலா’ என்று ஆச்சர்யத்தோடு ...
@ டவுசர் பாண்டி, நன்றி... அவரை வியாபாரி என்றும் சொல்லிவிட முடியாது.. :)
@ சுரேஷ் குமார் : எல்லா படங்களும் நம்மை பாதிப்பது இல்லை, பொழுது போக்குக்காக பார்த்துவிட்டு சிரித்துவிட்டு வந்துவிடுவோம் தான். கமல்ஜி யிடம் எதிர்பார்ப்பும் அதிகம் ஒன்றும் இல்லைதான் என்றாலும், அவரின் பல படங்கள் மற்றவர்களின் படங்களிலிருந்து வித்தியாசப்பட்டுள்ளது
அவரை கொள்கைவாதி இல்லை என்றும் சொல்லிவிட முடியாததால் தான் இந்த கேள்வி. இது தான் என் கொள்கை என்று வெளிபடையாக வேண்டுமானால் அவர் சொல்லாமல் இருக்கலாம். :) அது தனி மனிதனின் விருப்பம், ஆனால் திரைபடம் என்று வரும் போது அழுத்தம் திருத்தமாக "இது தான்" "இப்படித்தான்" என்று சொல்லியிருப்பது தான் சற்றே ஆயாசமாக இருக்கிறது...
@ Choco, இது இரண்டாவது கடிதம், முன்னமே அவரின் தசாவதாரம் பார்த்துவிட்டு ஒரு கடிதம் எழுதியுள்ளேன்.
http://kavithavinpaarvaiyil.blogspot.com/2008/09/blog-post_28.html
அட, நீங்களும் அதில் கமெண்டியிருக்கிறீர்கள் :)
@ பிரியமுடன் வசந்த் : :))) அறிவுரை கேட்டு அதன் படி நடக்கபோவது நான் இல்லீங்கோ... Common Man என்று அவர் சொல்லும் அவரின் சராசரி ரசிகபெருமக்களுங்கோ....
தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் மனதில் ஊட்டப்படும் இந்த கருத்துக்கள், தேவையா தேவையில்லையா என்று கூட அவர்கள் சிந்திக்கும் நிலையில் இருக்கமாட்டார்கள்.
@ கனகு - வாங்க எப்படி இருக்கீங்க?
ம்ம்..ஆமாம் இதுவும் தரமான படம் தான் அதில் துளி அளவும் சந்தேகம் இல்லை தான்...
@ ஜம்ஸ் ; இன்னும் நீங்கள் படம் பார்க்கவில்லை என்றால், விமர்சனங்களை எடுத்துக்கொள்ளாமல் படத்தை பாருங்கள்.
படத்தில் அழுத்தம் திருத்தமாக சொல்லப்பட்ட ஒரு லைன் மெஸேஜ் "தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் மட்டுமே அழிக்கமுடியும்" இதை தவிர்த்து வேறொன்றுமில்லை.
தமிழில் மிகவும் தரமான படம். சொல்ல காரணங்கள் - அரைகுறை ஆடையுடன் எந்த பெண்ணும் உடம்பை காட்டி குத்துப்பாட்டு ஆடவில்லை, காதல் இல்லை, பாடல்கள் இல்லை, அரிவாளை எடுத்து வெட்டி குத்தி யாரும் யாரையும் சாகடிக்கவில்லை.. இப்படி தமிழ்ப்படங்களுக்கே உரிய நிறைய விஷயங்கள் இந்த படத்தில் இல்லை என்பது.. குறிப்பிடத்தக்கது.
நீங்களும் ஏறிட்டீங்களா? நிறைய பேரு ஜீப்புல ஏறிட்டாங்க. நான் கூட கொஞ்சம் தொத்திகிட்டு வரேன். இடமே இல்லைங்க :)
//அறிவுரை கேட்டு அதன் படி நடக்கபோவது நான் இல்லீங்கோ... Common Man என்று அவர் சொல்லும் அவரின் சராசரி ரசிகபெருமக்களுங்கோ....
/
நீங்க சொல்றத நான் ஒத்துக்குறேன்
படத்தை பார்த்து கெட்டவன் இருக்கான்
ஆனான் திருந்துனவன் இல்லை....
ஆனா ஏன் கமல் மட்டும் உங்க டார்கெட்???
(பி.கு:நான் கமல் ரசிகன் இல்லை. )
ஊழின் பெருவலி யாஉள மற்றுஒன்று
சூழினும் தான்முந் துறும்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
இந்த இரண்டையும் சொன்னவர் ஒருவர்தான்... அவர் என்ன சொல்ல வருகிறார் என புரிகிறதா?
இதிலென்ன குழப்பம்?
பாத்திரங்கள், கதைக்கேற்ப நியாயங்கள் வேறு படுகின்றன..
ஒரே கொள்கை என்று அதையே தொடர்ந்து படங்களில் பிரசாரப் படுத்த கமல் என்ன அரசியல்வாதியா?
@ நான் ஆதவன் - இல்லைன்னா என்னை ப்ளாகர் கூட்டத்துல சேர்த்துக்க மாட்டீங்களே..அதான். நானும் கூட்டத்தோட கூட்டமா கலந்துட்டேன்.. :)
@ ஜெட்லி, நந்தவனத்தான், லோஷன் - நன்றி.. மூவரும் ஒரே கருத்தை வேறு வேறு மாதிரி சொல்லியிருக்கிறீர்கள்.
@ ஜெட்லி
//நீங்க சொல்றத நான் ஒத்துக்குறேன்
படத்தை பார்த்து கெட்டவன் இருக்கான்
ஆனான் திருந்துனவன் இல்லை.... //
ம்ம்.. ம்ம்.. உண்மை.. சில தவறான நம்பிக்கைகளும் வளர்ந்துவிட கூடாது..:)
ஏன் கமல்.? = கமலின் தனிப்பட்ட முயற்சியால பல புதுமைகள் தமிழில் படமாக்கப்பட்டுள்ளன. அது காரணமாக இருக்கலாம். அது அந்த கலைஞனின் நமுக்குள்ள எதிர்பார்ப்பை மற்றவர்களை விட அதிகமாக்கியிருக்கிறது என கொள்ளலாம்.
@நந்தவனத்தான்
ம்ம்..புரியுதுங்க... இடத்திற்கும் நேரத்திற்கும் தகுந்தார் போன்று நடந்துக்கொள்ள வேண்டும். அப்படித்தாம் நம் மக்கள் நடந்தும் கொள்கிறார்கள், தவறொன்றுமில்லை. ஆனால் இந்த படத்தின் கான்செஃப்ட் அப்படி எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.. அவர் எளிதான வசனங்களை கொண்டு அவற்றை ஞாயப்படுத்தவில்லை என்பது முக்கியமானது. :)
@ லோஷன் - கமல் அரசியல்வாதியா இல்லையா என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.. ஒரே மாதிரி முடிவுகளை உடைய படங்களை அவர் இதுவரையில் தரவில்லை என்றாலுமே.. என்னவோ இப்படி கேட்காமல் இருக்க முடியவில்லை.. எனக்கு தனிப்பட்ட முறையில் அதில் உடன்பாடு இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். :)
Post a Comment