இந்த பாடல் கேட்டவுடன் பிடித்து போனது.. காரணம் பின்னனி இசையின் கிட்டார்.. அப்பா நன்றாக கிட்டார் வாசிப்பார். ஒரு சிகப்பு கலர் எலக்ட்ரிக் கிட்டார் வைத்து இருந்தார்,என்னவோ இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் அப்பாவே வாசிப்பதாக கற்பனை செய்து க்கொள்வேன் :)
என் குரலுக்கு சம்பந்தமில்லாத ஒரு பேஸ். ரொம்பவும் பிடித்ததால் பாடியிருக்கிறேன்.
Malai neram.mp3 |
மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே மிதக்கிறேன்
ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே
இது தான் வாழ்க்கையா
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே
ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..
உன் கரம் கோர்க்கையில்
நினைவு ஓர் ஆயிரம்
பின் இரு கரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம்
மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது
ஒரு காலையில் நீ இல்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்னை இழந்தேன் என
ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..
ஒரு முறை
வாசலில்
நீயாய் வந்தால் என்ன?
நான் கேட்கவே துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன?
இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொறுத்து கொண்டால் என்ன?
இரு திசை பறவைகள் இணைந்து
விண்ணில் சென்றால் என்ன?
என் தேடல்கள் நீ இல்லை
உன் கனவுகள் நான் இல்லை
இரு விழி பார்வையில்
நாம் உருகி நின்றால் என்ன?
(மாலை நேரம் மழைத்தூறும் )
(ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது)
.
7 - பார்வையிட்டவர்கள்:
நல்லாயிருக்கு அக்கா :-)
@ புனித் - நன்றி
அய்யய்யய்ய்ய.. :(. உலா & மிக்ஸ் உங்க இரண்டு பேரு இம்சையும் தாங்க முடியலப்பா.. உங்க இரண்டு பேருக்கும் என்ன பிரச்சனை?
ஒருத்தங்க புது பொலிவு இன்னொருத்தங்க புத்தம் புதுசு... சரி.. அதுக்குன்னு இப்படியா? ஒரு போஸ்ட் விடாம வந்துடறீங்க..
வந்து சேர்ந்துக்கறோம்.. தயவுசெய்து நிறுத்திக்கோங்க.. முடியல.. :(
;)
பாட்டு நன்றாக இருக்கு.
குரல் இனிமையாக இருந்தது.
a very good try...U have a nice voice..try singing some songs with karoke...:)
@ ஜீவன் - என் பின்னூட்டத்திற்கு உங்கள் பின்னூட்டமா? :)
@ கோமதி அரசு - ரொம்ப நன்றிங்க :)
@ Kamal - Thanks :) I did even try for this song, I couldnt get it.. oops.. !!
Post a Comment