நீ இங்கு இல்லாமல்...
உனக்கு முன் தூங்கி
உனக்கு பின் விழித்து
திறக்கமுடியாத கண்களுடன்
நீ இருக்கும் இடம் தேடி
வநது-
உன் மேல் சாய்ந்து
நீ படிக்கும் செய்திதாளின் பக்கங்களாய்
சில மணிதுளிகள்
உன் காதுக்குக்கும்
கழுத்துக்கும் இடையே
முகம் புதைத்து தேய்த்து....
"போதுண்டீ போடி.."
பிடித்த தள்ள நீ இங்கு இல்லை...
உன் மடியில் உட்கார
இடம் தேடி
உன் செய்திதாளை கசக்கிப்போட்டு
நீ படிக்கும் செய்திதாளாய்
மீண்டும் உன் மடியில்
சில மணிதுளிகள்...
"போதுண்டீ போடி.."
பிடித்த தள்ள நீ இங்கு இல்லை...
உன் சட்டை விளக்கி
உன் மார்பில் முகம் புதைத்து
மூக்கழுத்தி தேய்த்து
முத்தமிட்ட
நொடிகளில்...
"போதுண்டி போடி"
பிடித்த தள்ள நீ இங்கு இல்லை...
அணில் குட்டி அனிதா: அட அட அட ஃபீலிங்ஸ் ஆப் வூட்டுக்காரா?! ஓவர்த்தான் கவிஜ எழுதறாங்க.. எழுதனுதுல என்னைய மறந்துட்டாங்க..சரி சரி போட்டும்..ஆனா.. ஒன்னு நீங்க கவனீச்சீங்களா... இவிங்க வூட்டுக்காரு புடிச்சி தள்ளிவுட்டுக்கிட்டே இருக்காரு ஏன்னு உங்க எல்லாத்துக்கும் டவுட் வரவே இல்லயா????..வரணுமே..... அதுக்கு தானே நான் இங்க இருக்கேன்.. முழு பூசிணிக்காய சோத்துல மறச்சிட்டாங்க நம்ம உஷார் அம்மணி... இப்ப நான் எழுதறேன் பாருங்க அதே கவுஜைய..நிஜமான சிசுவேசனுக்கு-
ஃபஸ்டு - "போதுண்டீ போடி.." - ஏண்டி பல்லைக்கூட விளக்காம டைலி என் மேல வந்து விழற தாங்க முடியல போய் தொல..
செகண்டு: "போதுண்டீ போடி.." வெயிட்தாங்க முடியல ஏன்ச்சி தொல....."
தெர்டு் - "போதுண்டீ போடி.." ஆபிஸிக்கு டைம் ஆச்சி போ போ போயி சமையல கவனி.... உன் முத்தம் எல்லாம் கோவத்துல பாத்திர சத்தமா ஆகுன்னு எனக்கு தெரியும்...கிளம்பு காத்து வரட்டும்...!
பீட்டரு நீ இல்லாம கவி ப்ளாக்ல இல்ல மேட்டரு.. அவுத்துவுடு...
பீட்டர் தாத்ஸ் :
Nothing makes the earth seem so spacious as to have you at a distance; they make the latitudes and longitudes.
Within you I lose myself...
Without you I find myself
Wanting to be lost again.
Your absence has gone through me
Like thread through a needle
Everything I do is stitched with its color.
I dropped a tear in the ocean. The day you find it is the day I will stop missing you.
நீ இங்கு இல்லை........
Posted by : கவிதா | Kavitha
on 20:24
Labels: கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
18 - பார்வையிட்டவர்கள்:
எப்போ ஊருக்கு கிளம்புறீங்க, விசிட் அடிக்க :-) .
//எப்போ ஊருக்கு கிளம்புறீங்க, விசிட் அடிக்க :-) .//
ம்ம்...போகனும் தெகாஜி....:(
//நீ இங்கு இல்லை
//
என்னைப் போலவே கொடுமையான நாட்களை எண்ணிகிட்டு இருக்கீங்க போல?
கவிதை நல்லா இருக்குங்க
கவிதை நல்லா இருக்கு!
ஊருக்கு போயி என்ஜாய் பண்ணிட்டு வாங்க!
(கொஞ்ச நாள் நாங்க நிம்மதியா இருக்கோம்)
/நீ இங்கு இல்லை
//
என்னைப் போலவே கொடுமையான நாட்களை எண்ணிகிட்டு இருக்கீங்க போல?//
ம்ம்..!! :(
//கவிதை நல்லா இருக்குங்க//
நன்றி பூரணி
//கவிதை நல்லா இருக்கு!//
நன்றி சிபி...
//ஊருக்கு போயி என்ஜாய் பண்ணிட்டு வாங்க!
(கொஞ்ச நாள் நாங்க நிம்மதியா இருக்கோம்)//
ஹா ஹா...:)))) இன்னும் கோபம் போலயா?
நிஜங்கள் முதலில் நிழலாக, நிழல்கள் பின்னே நிஜமாக, உண்மையான உணர்வுகளும் யதார்த்தங்களும் நகைச்சுவையோடு சொன்னாலும் உங்கள் ஏக்கம் இங்கே புரிகிறது!! வாழ்த்துக்கள் உங்கள் "வழிமேல் விழி வைத்து காத்திருத்தல்" நன்றாக நிறைவேற
//நிஜங்கள் முதலில் நிழலாக,
நிழல்கள் பின்னே நிஜமாக, உண்மையான உணர்வுகளும் யதார்த்தங்களும்
நகைச்சுவையோடு சொன்னாலும் உங்கள் ஏக்கம் இங்கே புரிகிறது!! வாழ்த்துக்கள் உங்கள் "வழிமேல் விழி வைத்து காத்திருத்தல்" நன்றாக நிறைவேற//
வாங்க Maddy, நன்றி :)
சூ... சூ....
கவுஜூஊஊஊஊ
//சூ... சூ....
கவுஜூஊஊஊஊ//
என்ன என்னோட பதிவுல ஈ ஏதாச்சும் பறக்குதா.. சூ சூ..ங்கறீங்க..?!! :)))
கவிதாக்கா நீங்க எழுதின கவிதைய விட அணில்குட்டியோட கவிதை சூப்பரா இருக்குது :-)
கவிதை நல்லா இருக்குங்க
,,,,,,,,,,,,,,,
கவிதா கவிதை அழகு :-)
//கவிதாக்கா நீங்க எழுதின கவிதைய விட அணில்குட்டியோட கவிதை சூப்பரா இருக்குது :-)//
:((( எனக்கு ஒரு காலம் வராமலா போயிட போகுது..?!!
//சிங். செயகுமார். said...
கவிதை நல்லா இருக்குங்க
,,,,,,,,,,,,,,,//
:) நன்றி சிங்கு
//இனியவள் புனிதா said...
கவிதா கவிதை அழகு :-)//
புனிதா..என்னங்க..இது.. பாடினாலும் அழகு'ங்கறீங்க..
எழுதினாலும் அழகு'ங்கறீங்க..
ரொம்ப நன்றிங்க..!!
ம்ம்ம்ம்ம்ம்ம்
நல்லாயிருக்கு
நல்லாயிருங்க...;)))
Post a Comment