2005 இல் வலைப்பதிவு தொடங்கியுள்ள பிரபா என்ற தெகா'வின் முதல் பதிவிலே கண்டெடுத்த வார்த்தைகள் "தெக்கிக்காட்டானுக்கு முகமூடி கிடையாது, பெயரிலே தெரிந்திருக்கலாம்." முகமூடிகளோடு எழுதும் பலரின் மத்தியில், முகமூடி என்று ஒன்று இல்லாமல், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல், ஓரளவிற்கு தன்னை தானாக இருக்க வைத்துக்கொண்டு, எல்லாவிதமான பரிமாணங்களிலும், எல்லா பொருள்களிலும் எழுதக்கூடிய நண்பர் தெக்கிக்காட்டான் இன்று எங்களுடன்.
லிவிங்ஸ்மைல் வித்யா'விற்கு பிறகு கேள்விகள் கேட்க மிகவும் யோசித்த ஒரு நண்பர் இவராகத்தான் இருப்பார். இது வரை மிக எளிதாகவே எல்லோரிடமும் கேள்விகள் கேட்டு இருக்கிறேன். ஆனால் தெகாஜி ஐய் கேள்விக்கேட்க 2005-08 வரை அவருடைய எல்லா பதிவுகளையும் ஒன்று விடாமல் படித்து கேட்க வேண்டியதாக இருந்தது. காரணம் எதுவுமே கான்ரோவா, அவரை துருவி கேட்கும்படியாக இல்லை. இப்பவும் இவரை என்ன கேட்பது என்ற தெளிவில்லாமலேயே.....
இதோ தெகா... அடக் கொடுமையே! 2005-'08வரைக்கும் ஒரே மூச்சில படிச்சீங்களா? ஏன் டாக்டர் ஏதும் அறிவுருத்தினாரா எப்படித் தூக்கம் வராதவங்களுக்கும் தூக்கம் இது போன்ற போரிங்கான பதிவுகளை படிப்பதின் மூலமாக தூங்க வைக்க முடியுங்கிறமாதிரி. எப்படியோ பொழச்சுப் கெடந்து வந்து கேள்வியும் கேட்டுறீக்கலே அதுவும் இன்னமும் அந்தத் தூங்கத்திலருந்து "தெளியாமலயே..." :)). அதுக்காகவாவது இந்தப் பதில்களை தாரேன், திரும்பவும் தூங்கவாது பயன்படுத்திக்கோங்க.
நகைச்சுவை ஒரு பக்கம். பை த வே, கவிதா உங்கள் அனைத்துக் கேள்விகளும் ரொம்பவே ஆழமாக உணர்ந்து இங்கு கொணரப்-பட்டதாகவும் என்னய நானே உட்முகமாக மேலும் பார்த்துக் கொள்ள வேண்டி கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகவும் எண்ணச் செய்தது, உங்களின் உழைப்பும் அது சார்ந்த இந்த கேப்பங்கஞ்சியும். வாழ்த்துக்கள்! நன்றி!!
இப்பக் உங்க கேப்பங்கஞ்சி குடிச்சிக்கிட்டே... பேசுவோமா...
உட்காரவைத்து மரியாதையாக கேட்ட கேள்விகள்:
கவிதா: வாங்க தெகாஜி..எப்படி இருக்கீங்க. .வீட்டில் அனைவரும் சுகமா..? அமெரிக்காவில் இருக்கீங்க.அங்கேயிருந்து ஆரம்பிக்கலாமே. பொழுது விடிந்து பொழுது போன.. அமெரிக்காவை நம்பியே உலகம் இருப்பது போன்ற பிரம்மை அதிகமாகிக்கிட்டே போகுது...அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியால் நாம் கண்டிப்பாக அடிப்படுகிறோம், அடிப்படுவோம் என்று தெரிகிறது. 1 லட்சம் அமெரிக்கர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று சமீபத்திய சர்வே சொல்லுகிறது. அங்கே இருக்கும் நம் இந்தியர்களுக்கு வருங்காலத்தில் பாதுகாப்பு இருக்குமா? உங்களால் நிலைமையை ஏதாவது கணிக்க முடியுமா .?
தெகா:- சுகத்துக்கு என்னங்க குறைச்சல், மனசு நம்ம கையாண்ட இருக்கிறதுனாலே எதைதை எப்படி பண்ணிக்கோணுமோ அப்படிப்படிப் பண்ணிப் போட்டு சந்தோஷமா வைச்சிக்க வேண்டியதுதான். எனக்கு இந்த சந்தோஷம் கடையில எடை போட்டு காசு கொடுத்து வாங்கிட முடியுங்கிறதில நம்பிக்கையில்லைங்-கோவ்(அதாவது புறப் பொருட்களின் மூலமாக). இது போலவே வீட்டில இருக்கிறவங்களையும் மனச வைச்சிக்க சொல்லி கேட்டுக்கிறதுனாலே எல்லாரும் நல்லாத்தான் இருக்கணுங்கிற மாதிரி நான் நம்பிக்கிறேன்.
[வாசகர்கள்: கேட்ட கேள்வி ஒரு வரி, இதுக்கு இப்படி எழுதினா எவன் உட்கார்ந்து படிக்கிறதாம் :))]
அமெரிக்காவா, அதை ஏன் கேக்குறீங்க நான் இங்கன வந்த நேரம் அமெரிக்காவை இந்தியாவிற்கு மாத்திட்டாங்களாம். அதுனாலே இங்கிருக்கிற பொருளாதார, கலாச்சார, மற்ற ஏனைய அதிர்வுகளை-யெல்லாம் என்னால் அங்கிருக்கும் செய்தித்தாள்களின் மூலமாகவும், ஏனைய மீடியாக்களின் மூலமாகவும்தான் உணர்ந்து கொள்ள முடிகிறதுன்னா பார்த்துக் கொள்ளுங்களேன் எந்தளவிற்கு உலகம் இறுக்கி கட்டப்பட்டிருக்கிறதா எல்லாரும் உணர்ராங்கன்னு. இந்தியர்களின் நிலையும், பாதுகாப்பும்: பார்க்கலாம் அது வரப் போகின்ற அமெரிக்கா அதிபர் தேர்தலை ஒட்டியே சந்திக்கவிருக்கும் நிகழ்வுகளவை. குடியரசுக் கட்சி ஆட்சியமைத்தால் நிலமை கொஞ்சம் மேலும் சிக்கலாகக் கூடிய வாய்ப்புகள் அதிகமிருப்பதாக எண்ணத் தோணுகிறது. நம்மூர்ல ஐம்பது பேர் மட்டுமே ஏறிப் போர பேருந்தில 110பேரு பேரோம் எனக்கும் ஒரு ஒத்தைக் கால வைச்சிக்க நீங்க தள்ளி நின்னு இடங் கொடுக்காமயா போயிடுவீங்க, அப்படியே என் உசிருக்கு இங்க கேடு வரும் பொழுது அங்கே வாரேன்னா... சொல்லுங்க. எதுக்கும் இரட்டைக் குடியுரிமை வாங்கி வைச்சிட்டோம்ல.
கவிதா: மனித அட்டைகள்? உங்களுடன் முற்றிலுமாக முரண்படுகிறேன். கூட்டுகுடும்ப நிலை மாறுவதால், நிறைய பிரச்சனைகள் நம்மிடையே வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பிரச்சனைகள் நம் இந்திய கலாசாரத்திற்கு எதிராக நம்மை அழைத்து செல்கின்றன. இருவரே இருக்கும் ஒரு வீட்டில், அவர்கள் தவறுகள் செய்யும் போது சொல்லிக்காட்டி திருத்தவோ, சண்டையிடும் போது நடுவில் சென்று சமாதானம் செய்யவோ ஆள் இல்லையென்றால் எல்லோருமே திருமணம் ஆன 2 வருடங்களுக்குள் விவாகரத்து பெறவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விடுவார்கள். மட்டுமல்லாது குழந்தைகள் பெரியவர்களின் ஆசிர்வாதத்திலும், அறிவுரை, அன்பிலும் வளருவதே சிறந்தது.. மட்டுமல்லாது முதியோர் இல்லங்கள் உருவாகாது. முதிய வயதில் கண்டிப்பாக நம்மின் அன்பும் அனுசரணையும் அவர்களுக்கு தேவையல்லவா?
தெகா:- இந்த கூட்டுக் குடும்பத்தினால கிடைக்கிற நன்மை தீமைகளை நன்றாகவே அலசித்தான் அந்தப் பதிவில் பேசியிருப்பேன். அதாவது ஒரு காலத்தில இது போன்ற கூட்டமைவு தன்னலமற்ற நிலை சற்றே மேலோங்கி, பொதுநலம் சற்று தூக்கலாக அதாவது தேவைகள் மட்டுக்குள் இருக்கப்பெற்று ஒரு குடும்பத்திற்குள் இருக்கப் பெற்ற அணைவரும் ஏதோ ஒரு வழியில் தனது பங்களிப்பை முன் வைத்து மன முறிவுகளை தவிர்த்து வாழ்ந்திருந்த பட்சத்தில் நீங்கள் கூறியபடி பல விதத்தில் உபயோகமாக இருந்திருக்கலாம் (ஆனா, குடும்பமே அழகிழந்து நிம்மதியில்லாமல் பல ஓட்டைகளுடனுடம், அரசியல் பூசல்களுடனும் வாழ நேரும் பொழுது அங்கே என்ன குழந்தைகளுக்கு சென்றுகிடைக்க வழிவகை இருக்க முடியும்?). இன்றைய நிலையோ வேறாக இருக்கிறது. தேவைகள் பெருகிவிட்டது, உழைக்காமல் உண்ண வேண்டுமென்றோ அல்லது சட்டை கசங்காமல் பொருளீட்டுவது [இது போன்ற ஒட்டுண்ணி வாழ்வும் இதில வருதாங்க ஒயிட் காலராம்:)] போன்ற எண்ணம் தலைத்தோங்கி பொத்தாம் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் மன நிலையும் வந்த நிலையில் இது போன்ற கூட்டமைவு தேவையற்ற மன உளைச்சல்களயே கொடுக்கிறது குடும்ப உறுப்பினரிடத்தே, அதுவும் குறிப்பாக வயதான பொற்றோர்களுக்கு. திருமணமான தம்பதிகளில் பிற மக்களின் பங்களீப்பு என்பது அத் திருமணம் உடைந்துவிடாமல் பாதுக்காக்கப்படவே என்று சொல்லும் நிலையே, இரு வயதுக்கு வராத சிறு பிள்ளைகளுக்கு எதற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் ஊர்? என்றுதான் மாற்றுக் கேள்வி கேக்க வைக்கிறது. அவர்களே இன்னமும் குழந்தைகளாக தங்களின் அன்றாட வாழ்வியல் முரண்களை உற்று நோக்கி, பேசித் தெளிவு ஏற்படுத்திக் கொள்ளும் மன நிலையில் கூட தங்களை வைத்துக்கொள்ளத் தெரியாத மன பக்குவத்தில் இருக்கும் பொழுது, பிறகு சம்பிரதாயத்திற்காக பிறர் கொடுக்கும் தீர்வுகளை அவர்களது என்று எண்ணி ஏமாற்றிக் கொண்டு வாழும், வாழ்வும் இனிக்கவா செய்யும்? இதிலிருந்து எனக்குத் தெரிய வருவதே, தம்பதிகளின் இடைவெளி எவ்வளவாக மனத்திலும், மணப் பொருத்தத்திலும் இருக்க முடியுமென தெரிகிறது.
இப்பொழுது மேலை நாடுகளில் அவ்வாறு "தன் பொறுப்புணர்த்தி" வாழ வழிவகை செய்யும் குழந்தைகள் அனைத்துமே பெற்றோர்களை உதாசீனப் படுத்துகிறதென்றோ, யாருமே திருமணத்தில் முழுமையாக வாழாமல் இருக்கிறார்களொன்றோ பொருள் கொள்ள முடியுமா? நான் அருகமையிலிருந்து கவனித்த வரையிலும், பொற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமிருக்கிற உறவு நல்ல நண்பர்கள் நிலையிலிருப்பதால், தூறத்தே பிரிந்து இருந்தாலும், தேவையானதை நன்றாகவே பார்த்து பார்த்து செய்து கொடுப்பதனைப் போல் உள்ளது பொற்றோர்களுக்கு, அவர்களும் தங்களின் நிலையுணர்ந்து எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்வதால் தேவையற்ற மனச் சங்கடங்கள் தவிர்க்கப்படுகிறது.இந்தப் பதிவிலும்... முதுமை ஒரு சாபக்கேடாஅந்தப் பதிவிலும நடை பெருவதினைப் போல நான் இங்கு கண்ணுற்றது கிடையாது.
ஆனால், இங்கு போன்று பொருளாதார, சமூக கட்டமைப்பு நம்மூரில் இன்னமும் அரசாங்கமோ அல்லது மங்களோ அமைத்துக் கொள்ளாத காரணத்தினால் இது போன்ற உதாசீனங்கள், முதுமையில் அப்யூஸ் எல்லாம் பார்க்க வேண்டிய நிலையில் அவர்களை பிடித்து தள்ளிவிடுகிறது.
கவிதா: கருக்கலைப்பு சட்டம் தேவையான்னு ஒரு பதிவு போட்டு இருக்கீங்க. .கண்டிப்பா தேவையில்லை. நான் கருவுகிறேன் என்றால் அது என் உடம்பும் மனசும் சம்பந்தப்பட்ட என்னுடைய சொந்த விஷயம், குழந்தை சரியாக வளரவில்லை என்பது மட்டுமல்ல எந்த ஒரு என் சொந்த காரணங்களுக்காக நான் கருவை கலைக்கலாம் என்பதே சரி என்று நினைக்கிறேன். ஒரு பெண் தனக்கு தேவை தேவையில்லை என்று தானே முடிவெடுக்க உரிமை கண்டிப்பாக கொடுக்கப்படவேண்டும் இல்லையா?
தெகா:- கருக்கலைப்புச் சட்டம் தேவையா என்ற பதிவில் என்னுடைய நிலையை தெளிவாக கூறிவிட்டேன். அதாவது கருவுற்றிருக்கும் பொழுது ஆரம்ப கால கட்டத்தில் நன்கு தேர்வுற்ற மருத்துவர்களால் கண்டறியப்பட்ட - குழந்தையின் இன்றியமையா உறுப்புகள் பாதிப்புற்று பிறப்பிற்குப் பிறகு தொன்று தொட்டு மருத்துவ தேவைகளையும், பிற மக்களின் அருகமையும், பொற்றோர்களின் ஈடுபாடு அவர்களின் பொருளாதார சூழ்நிலை இவைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கே அந்த கருவை வளர்த்து ஈன்றெடுப்பதா வேண்டாமா என்ற இறுதிக் கட்ட முடிவை அவர்களின் பொருட்டே கொடுப்பதே சிறப்பு என்று கூறியிருக்கிறேன் தெளிவாக அந்தப் பதிவின் மூலமாக.
கருத்தடை சாதனம் கொண்டு குழந்தை கட்டுப்பாட்டை தவிர்த்து விடுவதிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. தன்னால் வைத்து பார்க்க முடியாத நிலையிலும் குழந்தை "கடவுள் கொடுத்தது" அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற காலாவதியான கருத்தோட்டத்தில் எந்தவிதமான பொருளும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றிகும் மேலாக குழந்தையின் பாலினத்தைப் கண்டறியும் பொருட்டு லக்சுரியில் வைத்துக் கொள்வதும், கலைத்துக் கொள்வதெல்லாம் ரொம்பவே ட்டூ மச். எ பிக் நோ, நோ.
கவிதா:- தீவிரவாதம், வன்முறை போன்ற செயல்களில் ஈடுபடும் குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ப்பு முறை, குடும்ப சூழல் காரணம் என்பது தவறான கருத்தாக இருக்கிறது. எனக்கு தெரிந்து நல்ல முறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் தீயநட்பு, சமுதாய தாக்கம் போன்றவற்றால் வாழ்க்கையில் தடம் மாறி போனதை பார்த்து இருக்கிறேன். உங்களின் கருத்து.?!
தெகா:- குழந்தைகள் எது போன்ற சூழலில் வாழ்ந்து வருகிறது என்பதும், எது போன்ற பொற்றோர்களை ஒரு முன் மாதிரியாகக் கொண்டு இந்த சமூதாயத்தை முதலில் பருவத்தை எட்டுவதற்கு முன்னமே வீட்டின் வளர்ப்புச் சூழலைக் கொண்டே பார்த்து, கேட்டுத் தெரிந்து கொள்கிறது. அது போன்றே குழந்தைகளின் தனித்துவத்தன்மை பேணல் என்ற கட்டுரையின் மூலமாக எப்படி குழந்தைகள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள் என்பதனை விளக்கியிருப்பேன். என்னை பொருத்த மட்டில் பெரியவர்களின் வழிகாட்டுதல்கள் என்று கூறிக்கொண்டு எல்லாவற்றையுமே வலிய குழந்தைகளின் தலையில் வைத்து திணிப்பதனையே ஒரு வன்முறையாகத்தான் பார்க்க முடிகிறது.
மற்றபடி நீங்கள் கூறியபடியே பிரிதொரு சமயத்தில் தானும் ஒரு அடல்டாக எட்டும் நிலையில் கூடா நட்பு, தீய பழக்கம், சமூகத் தாக்கம் இன்ன பிற வன்முறையை நோக்கி அடியெடுத்துச் செல்ல வழிகோணலாமென்றாலும், அது நடைபெறும் காலமும் சூழலும் வேறு. ஆனால், முதல் அடி வளர்ப்புத் தளத்திலயே கோளாறுக்கி விடுவதுதான் மிக்க வருத்தத்துக்குரியது. உதாரணம்: பிடிக்காத ஒரு கல்வியில் கட்டாயப்படுத்தி புகுத்தி விடுவதோ, அல்லது தவறானா முறையில் பிற சமயங்களைப் பற்றியோ, அல்லது பிரிதொரு பாலினத்தின் மீது காழ்புணர்ச்சி வரும் வகையில் தனது புரியாத கருத்துக்களை தனது குழந்தைகளிடத்தே ஊட்டி வளர்த்து விடுவது, இப்படி. வித்தியாசம் புரிகிறதா??
கவிதா:- உங்களின் குட்டி கவிதைகள் படித்தேன்..:))-ஓடி ஒளியும் நாளைய பிணங்கள்!!! எப்படி இப்படி எல்லாம் சிந்திக்க தோன்றுகிறது..? உயிருடம் இருக்கும் நம்மை பிணங்கள் என்று சொல்லலாமா? உணர்வுகள் அற்றவர்களை, மனிதநேயம் இல்லாதவர்களை வேண்டுமானால் சொல்லலாம்.. ஆனால் எல்லோரையுமா? ஓடி ஒளியும் நாளைய பிணங்கள்!!!
தெகா: கவுஜா என்றால் வாழ்வின் முரண்பாடுகளின் மூட்டைகளை தோலுரித்து காட்டுவதற்கெனவே அமைந்தவை இல்லையா? அந்த ரீதியில் வைத்துப் பார்க்கும் பொழுது என்றோ ஒரு நாள் நாம் எல்லாம் மரணிக்கப் போகிறவர்கள்தான் இருந்தாலும், இன்று இறந்தவர் என்னமோ தேவையற்றுப் போனதாகவும், நமக்கு அவரை(பிணத்தை) பார்க்கக் கூட நேரமில்லா தொனியில் பரபரவென்று இருப்பதனைப் போலவும் கண்ணுற நேர்ந்ததால், அப்படி மரணத்தின் மடியில் நான் அமர்ந்து கொண்டு எள்ளி நகையாடுவதனைப் போல அமைத்திருக்கிறேன். பாதி பேரு இங்கே "இறந்த நிலையில்" தானேங்க இன்னமும் வாழ்ந்திட்டு இருக்கோம். எதுக்காகவாவது ஒன்றுக்கு தினமும் பயந்தவாரே.
கவிதா: நீங்கள் இயற்கை நேசி என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.. இது இயற்கை குணமா அல்லது நீங்கள் வளர்த்துகொண்டதா?
தெகா:- நம் எல்லோருக்குள்ளுமே அந்த வேட்டையாடும், இயற்கையுடன் ஒட்டி உறவாடி மகிழும் பொழுது கிடைக்கும் ஆத்ம சுகம் என்றைக்குமே அழியாது இருக்கும், இது குழந்தை பருவத்தையொட்டி பீரிட்டு வெளிப்படுவதனை காண முடியும், ஆனால் மீண்டும் தான் வளரும் சூழலும், வாழ்க்கைத் தேவைகளும் கொஞ்ச கொஞ்சமாக வாழ்வின் எதார்த்தம் மறந்து செயற்கைத் தனத்தில் ஒட்டிக் கொள்ள வழிவாகை செய்துவிடுகிறது. எனக்கு என்னமோ, அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி வானத்தை அன்னாந்து பார்த்து பேட்டரியை (எண்ண) ரீ-சார்ஜ் செய்து கொள்வது பழக்கமாகிப் போன ஒன்று, அதுவும் இரவு வானமென்றால் அலாதி பிரியம். அப்படியே அதற்கு கீழே இருக்கக் கூடிய மரம், மட்டை, பூச்சி அத்துனை ஜந்துக்களையும் பார்க்கும் பொழுது பூமிப் பந்தின் பரிணாமச் சுழற்சியில் நம்முடனே ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் தாம், அவைகளன்றி இங்கே நமக்கென்ன பூலோக சொர்க்கம் கிடைக்க வழி, என்றாகிப் பார்க்கத் தோன்றுகிறது.
அது அப்படியாக இருக்க ஏதோ குருட்டாம் போக்கில் நல்ல வேளையாக எனது பொற்றோர்கள் மெத்தப் படித்தவர்களாக இல்லாமல் போக, எனக்கு மூளைச் சலவை பண்ணப்படக் கூடிய வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்ததும் ஒரு லக்கியான நிகழ்வுதான், ஏனெனில் அப்படியாக அமைந்திருந்தால் இன்னேரம் எங்கோ ஒரு கூண்டுக்குள் அமர்ந்து ஆணிப் புடுங்கியிருப்பேன், கண்ணீல் ரத்தம் சொட்டச் சொட்ட. என் கல்லூரி வாழ்க்கை முழுதுமாக பச்சைப் பசேல் மேற்கு மலைக் காடுகளில் அமைந்து போனதும் நேசியாகிப் போனதற்கு மற்றொரு காரணம்.
கவிதா:- எப்படி அடுத்தவர்களை புண்படுத்தாமல் பதிவெழுத நம் மனதை கட்டுப்படுத்த வேண்டும், எப்படி முகமூடிகளாக உலாவராமல் உணமையான பெயரில் பதிவுகளும் , மறுமொழிகளும் இட நம்மை கட்டுப்படுத்தவேண்டும் என்று பதிவுலக நண்பர்களுக்கு சொல்லுகளேன்.
தெகா: பொதுத் தளத்தில் எது போன்ற புரட்சிக் கருத்துக்களையும், மாற்றுச் சிந்தனைகளையும் யாவரும் பகிர்ந்துகொள்ளல் எண்ணி(பொறுப்போடு) வைப்பதில் நமக்கு உள்ளார்ந்த திருப்தி கிடைக்கிறது என்றாலும், ஏனையோரின் பிரதி விவாதங்களும் அவர்களின் மாற்றுக் கருத்துக்களும் ஒருமித்த சிந்தனையுடனும், இசைபுடனும் இருக்க வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பை சற்றே நம் கட்டுக்குள் வைத்துக் கொண்டாலே, பாதி இரத்த அழுத்தத்தை பங்களீப்பவர் தவிர்த்துக் கொள்ள முடியும். ஏனெனில், அது போன்ற மாற்றுச் சிந்தனைகளை முன் வைப்பவர் என்னுடைய வளர்ச்சி நிலையின் எல்லைக்குள் பிரவேசிக்காமலோ அல்லது அவருக்கு அவர் எடுத்திருக்கும் சார்பு நிலை சரியொன்றோ எண்ணிக் கொண்டிருக்கும் பட்சத்தில், எவரவர் சார்பு நிலையோ அல்லது கருத்துக்களோ தினப்படி பல மாறுதல்களை அவர்கள் எண்ணும் எண்ணமாகவே விட்டு பயணித்து செல்லும் பட்சத்தில் தானாகவே மனத்தினுள் மாற்றங்களை உணர்வர்.
இருந்தாலும், பங்களீப்பவர் அதனை முன்னமே உணர்ந்தவர் என்ற முறையில் நம்முடைய பார்வையை முன் வைக்காலமே தவிர "அடித்து பழுக்க வைத்துவிட முடியும்" என்ற அணுகு முறை ஒரு போதும் பலனளித்ததாக பொருள் கிடையாது என்று கருதி விலகி இருப்பது நலம் பயக்கலாம். பங்களீத்தவர் மனவோட்டம் எப்படியாக இருக்க வேண்டுமெனில் மாற்றுச் சிந்தனையை மனத்தினுள் விதைத்தாகிவிட்டது, காலப் போக்கில் அலசி, ஆராய்ந்து நன்மை தீமைகளை ஏற்றுக் கொள்வது வாசிப்பாளரின் கைவசமென்றெண்ணி அவர்களிடத்தேயே விட்டுவிடுவதாக இருக்க வேண்டும்.
இல்லையெனில், கோபத்தில் சொல்ல வந்த விசயத்தின் மையக் கருத்து சிதைபட்டு, எதிர்பார்க்கப்பட்ட தாக்கத்தை வாசிப்பாளனிள் விட்டுவிடாமல் இருக்க வாய்ப்புண்டு. இரண்டாவதும், சினமுறும் பொழுது அங்கே எண்ணவோட்டம் சீராக இருப்பதும் கிடையாது. ஒரு நல்ல விசயத்தை முன்னுறுத்தி எழுதப் படும் கருத்து குறைந்த பட்சம் மனத்தினுள் பல மணி நேரங்கள் தக்க வைக்கப்படும் பொருட்டு அங்கே தெளிவான சிந்தனை பிறக்க ஏதுவாகிறது, அப்படியாக முன் வைக்கப்படும் கருத்துக்களும் கண்டிப்பாக "திறந்த நிலை" (தன் முனைப்பில் தன்னை வளர்த்துக் கொள்ள விரும்புபவனை) வாசிப்பாளனை தொட்டுச் செல்லாமல் விட்டுப் போவதுமில்லை என்பது என் கருத்து.
கவிதா:- நீங்கள் நிறைய படிக்கிறீர்கள் என்று தெரிகிறது..எனது தூசி தட்டப்பட்ட நூலகம்.... இதை தவிர உங்களின் பொழுதுபோக்கு...
தெகா: நிறைய மேய்ஞ்சேன்னு ஒத்துக்க மாட்டேன், ஆனா அதன் பாதையில் செல்வதற்கு இன்னமும் என்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்னு வேணா சொல்லலாம், அந்தப் பாதையில் இருப்பதுனாலோ என்னவோ குறைவாகவே இங்க எழுத முடியுது :). மற்றபடி ஏனைய பொழுது போக்குன்னா, பிடிச்சவங்களோட நீண்ட நேரம் கடலை வறுத்து புகையை கக்க வைப்பது - அப்பாம்மா கூட, துணைவிகிட்ட நான் ஆர்வமூட்டக் கூடியது என்று நினைக்கிற விதத்தில் அமைந்த சில பதிவுகளையும் என்னோட சொந்த கிறுக்கல்களையும் பிடிச்சிவைச்சி கேக்க வைச்சி அவரு கஷ்டப்படுவதை நான் பார்த்து ரசிப்பதும், பிடியளவே உள்ள நண்பர்கள் கூட அப்பப்ப அரட்டைக் கச்சேரி நடத்துவது, பிறகு என் குழந்தைகள், அதிலும் குறிப்பா இப்பொழுது என்னய ஹை டிமாண்டில் வைத்திருக்கும் 1 வயது பெண் புதுசு, புதுசா நானே வடிவமைத்து வாய் தாலத்தில் மெட்டிசைச்சு போடும் குத்தாட்டாம் அவளிடத்தே ஹிட்டாகி சூடு பிடித்திருப்பதால் # 6ல் கூறியபடியே ரீ-சார்ஜ் போட்டுக் கொள்வதில் இதுவும் கொஞ்சம் கூடவே எனக்கு உதவுகிறது. ட்டி.வியில் பொழுது போக்குன்னா டாகுமெண்டரிகள் பார்ப்பது.
கவிதா:- உங்கள் சொந்த ஊர், அதன் சிறப்பு, வெறுப்பு ஏதாவது.
தெகா: என்னோட சொந்த ஊர் கரம்பக்குடிங்க, புதுக்கோட்டையிலருந்து பேருந்தில் புழுதி பறக்க ஒரு 40 கிலோமீட்டர் பயணம் செய்தால் பட்டுக்கோட்டைக்கு போகிற வழியில் உள்ள ஊர். அந்த ஊருக்கே இன்னமும் தன்னை எந்தப் பக்கம் சேர்த்துகிறதுன்னு தெரியாம முழிக்கிற ஒரு கிராமமுமல்லாத சிறு டவுனுமல்லாத ஊர் 12,500 மக்களோட. என் சொந்த ஊரைப் பற்றி சொல்லிக்கணுமின்னா என்னோட டீனேஜியத்துப் பருவம்தான் நான் அங்கே வயசுக்கு வந்தது ;), நண்பர்களோட பள்ளிக்கு டிமிக்கி கொடுத்துட்டு மீன் பிடிச்சு விளையாண்டது.
நாவற்பழம் பறிக்க ஐந்து கிலோமீட்டர் மிதிவண்டி அழுத்திமரத்திலயே குரங்குக் கணக்கா நாள் முழுக்க தொங்கிறது இப்படி எத்தனையோ மனசில பசுமையா இருக்கிற ஞாபகங்கள், இப்போ எனக்கு அங்கே ஒண்ணுமே இல்ல என்னோட அப்பாம்மாவை தவிர்த்துசொல்லிக்கிற மாதிரின்னு இருந்தாலும், இன்னமும் ஊர் மேல ஒரு இனம் புரியா காதலுண்டு
வெறுப்புன்னா - மக்கள் ஆசையை மட்டுமே நிறைய சுமந்துட்டு ஆனா உழைக்காம சாப்பிட நிறைய பேர் ரெடியா இருக்கிறதுனாலே நிறைய பொறாமையை மட்டுமே ஊர் சுவாசிக்க காற்றாக உற்பத்திதிட்டு இருக்கிற மாதிரியான ஒரு உணர்வு, மேலும் இயற்கையின் பொருட்டு கடந்த கால பசுமை மறைந்து எங்கும் ஒரே கள்ளிக்காடா மாறிட்டு இருக்கிறது, அதனைப் பற்றி கவலைப் படாமல் மென் மேலும் எல்லா நிலங்களிலும் யூகாலிப்டஸ் மரக் கன்றுகள் நடுவதும், வீடுகள் பெருகி நியுயார்க் மான்ஹட்டன் ரேஞ்சிக்கு நிலத்தின் விலை எகிறிவருவதும் எரிச்சல்.
கவிதா : பதிவர் சந்தோஷ் எப்போது உங்கள் பெயரை எழுதினாலும் "தோசை தெகா" என்று எழுதிகிறார். அதனால் நீங்கள் சமையல் செய்வீர்கள் என்று அறிவேன். சமையல் என்பது இந்தியாவை பொறுத்தவரை பெண் என்று தான் இன்றளவும் இருக்கிறது. பற்றாக்குறைக்கு நம் மீடியாக்கள் சமையல் என்பது பெண்ணுக்கு மட்டுமே சொந்தம் போல் குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்து மனதில் பதியவைத்து விடுகின்றன. இதைப்பற்றி உங்களின் கருத்து.
தெகா: "தோசை தெகா" அட இது வரைக்கும் எனக்கு இப்படி ஒரு பெயர் இருக்கிறதை சொல்லவே இல்லை. சந்தோஷ், கொஞ்சம் எட்டாம தூரத்திலதான் இருந்து போனாரு இல்லன்னா பாவம் அந்தாளை வைச்சே என்னோட எக்ஸ்பெரிமெண்ட் சாப்பாட்டு வகைகளை அவர் மேல வைச்சு ஒரு ஆராய்ச்சியே நடத்தி முடிச்சிருக்கலாம். அவருக்கு ஒரு சட்னி பண்ணினேன் பாருங்க, அப்படி ஒரு சட்டினியை எங்குமே சாப்பிட்டுருக்க வாய்ப்பே இல்லை. சமையலறையில் இருந்த அந்தனை முந்திரிப் பருப்பிலுருந்து, நிலக் கடலை, பொட்டுக்கடலை வரைக்கும் போட்டு ஒரு பஞ்ச் பண்ணி சட்டினியென படைத்தேன், தோசை கடைசியில எனக்கே கிடைக்கலங்க :)).
இந்த சமையல் விசயமாங்க, அது எல்லாம் தானாகவே செய்ய வந்துடும் ஏன்னா பசின்னு ஒண்ணு இருக்கில்ல, அப்படி அதுபாட்டுக்கு வரும் பொழுது யாரும் செஞ்சுப்போடன்னு ஆள் பக்கத்தில இல்லைன்னா தானாகவே தடபிபார்க்கிற மனசு வந்துடும். ஆனா, நம்மூர் சூழ்நிலையில் அதுக்கான அவசியங்களை பெரும்பாலானவர்கள் உருவாக்கிக் கொள்வதில்லை, அதற்கான அவசியமும் ஒரு நாள் வருமென்பதனை உணர்த்துவதுமில்லை நம் சமூகத்தில்.ஆனால், சமையல் என்பது என்னயப் பொறுத்த மட்டில் ஒரு அல்டிமேட் அன்பைக் காட்டும் ஒரு போர் கொல்லை, அங்கே வைத்து எல்லாவற்றையும் சரிசெய்துவிடலாம் என்பதே. எனக்கு இந்த சமையல் விசயம் ஒரு என்னோட சர்வைவல் விசயமாத்தான் என்னிடம் ஒட்டிக்கிச்சு, என்னோட மேற்கு மலைக்காடுகளின் தங்கலின் போது. அங்கிருந்து கற்றுக் கொண்டது ரொம்பவே கை கொடுத்தது இங்கு வந்து என் சமையல் கைவரிசையை பல இனமக்களிடம் காமிச்சு ஆஹா, ஒஹோ பட்டம் வாங்க. இருந்தாலும், நம்ம ஆட்கள் இந்த அனுபவத்தையும் ரொம்பவே மிஸ் பண்றாங்க, கமல் மட்டும் படங்களில் அப்பப்போ செஞ்சு காமிப்பார், வாஞ்சையோட...
ஆனா, இப்போ என்னயும் உட்கார வைச்சி சமைச்சுப் போட ஒரு ஆள் வந்தாச்சு, ரொம்ப சுகமாத்தான் இருக்கு. அப்படியே பழகிட்டா நானும் அதே குட்டைதான் :).இன்னொன்ன நல்ல கவனிச்சுப் பார்த்திங்கன்னா, சமையற் கலை வகுப்பிற்கும் சரி, எந்த மாதிரி உணவு விடுதிகளா இருந்தாலும் சரி பெருமளவில் சமையலில் ஈடுபட்டுருப்பது ஆண்கள்தானே? அது என்னாமாதிரியான முரணுங்க, அது.
கவிதா: பெண்' மாதவிடாய் இருக்கும் போது வீட்டில் தனியாக உட்கார வைப்பது, கோயிலுக்கு அனுமதிக்கப்படாததற்கு மருத்துவரீதியான காரணங்கள் இருக்கின்றன். அதற்கு நீங்கள் உடன்படுகீறீர்களா?
தெகா: அது என்னங்க "பெரிய மருத்துவ சம்பந்தமான" காரணங்கள் எனக்குத் தெரியலையே. எனக்கு தெரியறது இதுதாங்க அந்த நாட்களில் - உடம்பும் மனசும் சோர்வா இருக்கிறது அம்புட்டுத்தேன். மற்றபடி அந்தப் பதிவில பின்னூட்டங்களில் அடிச்சு விளையாண்டு இருப்பாங்க பாருங்க, மத்த விசயங்களை.
கவிதா: "ஒரு பெண்ணை உடம்பபை தாண்டி அவளின் மனதை தொட்டு அன்பை செலுத்த வேண்டும் - " - உங்களின் ஊரணிப்பார்வையில்..
தெகா: உண்மைதானே அது. அந்த மனசில மட்டுமே தானே நினைவுகளை நாம் தூக்கிச் சுமக்கிறோம் பின்னால் வரும் காலங்களிலும், சூழ்நிலை எப்படியாக மாறினாலும். இல்ல, உடம்பை வளர்த்து காமித்தோ, நல்ல ட்ரெஸ் பண்ணி, தலைக் கேசத்தை கோவிக் காமித்தோ மனதை வெல்ல முடியுமா? அப்படியே வென்றாலும் அது அப்படியே நிற்குமா இவையெல்லாமே உதிரும் காலம்தோரும்?
கவிதா:- குழந்தைகள் பெற்ற தம்பதிகளின் விவாகரத்து அவர்களின் குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது (எந்த வயது குழந்தையாக இருந்தாலும.)
தெகா: மறுப்பதற்கில்லை. கண்டிப்பாக பாதிப்புறும், ஆனால் அவ்வாறு பாதிப்புறும் விகிதாச்சாரத்தை கூட்டுவதும், குறைப்பதும் அடல்டாகிய நமது கைகளிலேயே உள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களினால் பிரிய நேரிட்டால் அப் பிரச்சினையை இரு அடல்டுகளுக்கிடையேனா பிரச்சினை என்ற விகிதத்தில் மட்டுமே அணுகி குழந்தைக்கு கிடைக்க வேண்டிய அத்துனை விசயங்களையும் கவனித்துகொள்வது, இன்றியமையாததது. அவ்வாறு அக் குழந்தைகள் பெற்றோர்களில் ஒருவரை பிரிந்து வளரும் சந்தர்ப்பத்தில் மற்றொரு பெற்றோரின் பொறுப்பில் வளரும் பொழுது, தனக்கு எதிரியான முன்னால் கணவனையோ/மனைவியைப் பற்றியோ இல்லாத அவதூருகளை பிஞ்சுகளின் மனதில் விதைப்பதை, தாம் அந்த குழந்தைகளின் வாழ்வையும், மனதையும் பாதிக்கிறோமென்றும், பின்னாளில் அதுவே பேக் ஃபயர் ஆகக் கூடிய வாய்ப்பாக இருக்குமென்பதனையும் அறிந்து நடந்து கொள்வது ரொம்ப நலம் பயக்கும், அக் குழந்தைகளுக்கு பிற்காலத்தில்.
கவிதா: இந்திய குடும்ப வாழ்க்கை முறைக்கும் அமெரிக்க வாழ்க்கை முறைக்கும் இருக்கும் அதிகபட்ச நன்மை தீமைகள்? அமெரிக்கவாழ் இந்தியர்கள் படும் கஷ்டங்கள்
தெகா: இங்க குழந்தைகளுக்கு தீர்வு எடுக்கும் முடிவை ஒரு குறிப்பிட்ட வயதிற்குமேல் அவங்க கையிலயே கொடுத்திடுறாங்க, அது ரொம்பவே நல்ல விளைவுகளை ஏற்படுத்துறதா தெரியுதுங்க. அது ஆண்/பெண் என்றாலும் தான் முயன்று பார்க்கும் முயற்சி தோல்வியுற்றாலும் அதன் மூலமாக கிடைத்த அனுபவங்கள் அந்த தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை வழங்குகிறது, அதுவே ஒரு பொறுப்புள்ள அடல்டாக வாழ்வதற்கும், நிறைய விசயங்களை சாதிப்பதற்கும் உறுதுணையாக இருக்க உதவுகிறது. இதில சில தீமைகளும் உண்டுதான் மறுப்பதற்கில்லை, ஆனால் தவறுகள் நிகழ்ந்து விடுமோன்னு பயந்திட்டே இருந்தா எப்படி அடுத்தடுத்து வரப் போகின்ற அனுபவங்களை தீர்க்கமாக அணுகி அதனில் வெற்றி பெறவும் முடியும். இப்படி தன்னிச்சையாக முடிவு எடுக்கவிடும் சமூகத்தால், சும்மா நடித்துக் கொண்டே தன்னோட முழு வாழ்க்கையையும் யாருக்காகவும் வாழ்ந்து தீர்த்துவிட முடிவதில்லை, கொஞ்சமே உண்மையாக வாழ்கிறார்களோன்னு தோணச் செய்கிறது. ஆனா, இதனையே அப்யூஸ் பண்ணுவதனையும் மறுப்பதற்கில்லை.
நம்மூர்ல இதுக்கு அப்படியே எதிர்மறையாக நடை பெறுகிறது. இதுனாலேதான், குடும்பமென்ற ஒன்று அமைத்துக் கொள்ளக் கூட பணம் கொடுத்து மணம் செய்து வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது, யாரோ பார்த்து வைத்த பெண்ணை மண முடித்துக் கொள்ள முடிகிறது, அதனில் ஏதாவது பிரச்சினையென்றாலும், யாரையாவது விரல் சுட்டி காட்டி விட்டு எனக்கென்ன என்று இருந்து விட முடிகிறது... கடைசி வரைக்கும் திருமணமான தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளமலேயே சமூகத்திற்காக வாழ்ந்து முடித்திடும் நிலையும் அதிகமாக நடைபெறுகிறது. இப்படி எத்தனையோ, தவறே தான் செய்பவன் கிடையாது என்ற மன நிலையிலையே லயித்து உயித்து வாழ்ந்து அடுத்தவர்களின் உயிரை வாங்கிவிட்டும் சென்று விடுகிறோம்.
அமெரிக்காவில் இந்தியர்கள் படும் கஷ்டமின்னா, சில பேர் இங்க ஒரு கால் அங்கே ஒரு கால்னு வைச்சிட்டு முழுமையா இரண்டு பக்கமுமே வாழமே, குழப்பத்திலயே குழந்தைகளிலிருந்து தன்னோட சுற்றி வாழும் அணைவரையும் படுத்தி எடுத்துவிடுகிறார்கள். அப்படி ஒரு மன நிலை இல்லாத பட்சத்தில், ஏதோ அங்கே கிடைக்காத ஒரு வாழ்க்கைத் தேடித்தானே இங்கு வந்திருக்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது கண்டிப்பாக மகிழ்ச்சியாத்தான் இருந்தாகணும், அப்படியில்லென்னா வேஸ்ட் எல்லாமே :)).
கவிதா: காதல் - எந்த வயது காதல் முதிர்ச்சி அடைந்ததாக இருக்கும், வெற்றி பெரும். ? மொழி,இனம், நாடு இவை கடந்த காதல் கல்யாணம் வெற்றி பெருமா?
தெகா: என்னோட "ஏன் நடிக்கணும்" பதிவு படிச்சீங்களா, அதில ரொம்பத் தெளிவா நம்மூர்க் காதல் திருமணங்கள் வெற்றிப் பெறணுமின்னா என்னன்ன அதுக்கு அடிப்படைத் தேவைகள்னு பேசியிருப்பேன். காதலுக்கு முதன்மைத் தேவை... எதனையும் திறந்த மனதுடன் அணுகும் பண்பு, மன முதிர்ச்சி, பொருளாதார தன்னிரைவு, ஒருவரின் மீது ஒருவர் வைக்கும் அசைக்க முடியா நம்பிக்கை இது போல பல பண்புகளை வளர்த்துக்ககணும் அந்தக் காதலை, மணத்தை கடைசி வரை கொண்டு போய் சேர்க்க வேண்டுமாயின்.
மனப் பொறுத்தம் அமைந்துவிட்டால் அது எல்லா தடைகளையும் தாண்டி வந்துவிடும் மேற்கூறிய ஏனைய "தேவைகளுடன்." இது இனம், மொழி, நாடு கடந்து நடை முறை படுத்தக் கூடியதுதான் என்றாலும் அசாத்திய மனத் துணிவும், வாழ்க்கை சார்ந்த தெளிவுமில்லையானால் அதுவே பின்னாளில் பெரும் இடைஞ்சலாக இருக்கக் கூடும், வரும் வாழ்க்கைச் சவால்களை எதிர் கொள்ளும் பொருட்டு.
கவிதா: உங்களிடமிருந்து அடுத்தவர்கள் (குறிப்பாக நான்) கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம்/குணம்/பண்பு ?
தெகா: வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே வாழ்ந்து பார்க்கணுமின்னு எல்லாச் சூழ்நிலையிலும் நினைக்கிற மனசு. எத்தனை முறை வீழ்ந்தாலும் வாழ்க்கையை ஒரு கடமையா வாழ நினைக்காம, திரும்பவும் ஆசை ஆசையாக வாழ நினைத்து எழுந்து நிற்கிற குணம். மற்றவங்களுக்கு எடுத்துக்காட்டா இருக்கணுமின்னுட்டு வாழ்க்கை பூராத்தையும் முகமூடி போட்டு வாழ்ந்திட்டு, எனக்கின்னு வரும்பொழுது உள்ளே வெறுமையா உணர்ரதில எனக்கு உடன்பாடு கிடையாதுங்க. அதுனாலே, எனக்கு எது சரின்னு படுதோ, அதனை எடுத்து நடத்துறேன், அதனையே என்னை சுற்றி இருப்பவர்கள் சரின்னு பார்க்கும்படியும் பக்குவப்படுத்துறது, அதுவே தவறாக என்னய பார்க்கும் பொருட்டு அது அவர்களின் பார்வைன்னு ஏற்றுக்கிற பக்குவத்தை எனக்கு ஏற்படுத்திக்கொள்ளும் பாதையிலன்னு சில கோடுகளில் பயணித்திட்டு இருக்கேன். இது போன்ற வரையறை செய்யப்பட்ட பாதையிலிருந்து விலகி, முடிவற்ற கோடுகளில் பயனிப்பதால் காலத்திற்கேற்ப வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மன நிலையோட இருக்க முடியுது. இது போன்ற மன நிலையை வளர்த்துக் கொள்ள எல்லோரும் தங்களை தயார்படுத்திகொண்டால் எத்தனை பிரச்சினைகள் காணமலே போய்விடுமென்று நினைக்கும் பொழுது சற்றே அயர்சியாக இருந்ததுண்டு.
ஓடவிட்டு அடித்து கேட்ட கேள்விகள் :
1. உங்களுக்கு பிடித்த சிறந்த 3 புத்தங்கங்கள்
1) த அல்கெமிஸ்ட் 2) கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சிக் காவியமும் 3) ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் த தேர்ட் சிம்பன்சி.
2. ஜார்ஜ் புஷ் ஷிடம்- பிடித்த ஒரு குணம்
அவரின் அசட்டுத் துணிச்சல், அதனை சொல்லிட்டு ஹக் பிக்னு சிரிச்சு வைக்கிறது.
3. உங்களின் மனைவியின் சமையலில் உங்களுக்கு பிடித்தது.
கலவைச் சாதங்களில் சிலதுகள்(மாங்காய், தேங்காய் இப்படி...).
4. இயற்கை நேசிக்கு பிடித்த கலர், பிடித்த இடம் (இந்தியாவில்), பிடித்த உடை
இப்படியெல்லாம் யோச்சித்ததே இல்லை - ட்ராபிகல் கலர்ஸ்னு. பிடித்த இடம் நிறைய இருக்கே , மலையும் மலையும் சார்ந்த இடங்களும். அமைதியா யாருமே இல்லாத இடங்கள். பிடித்த உடையன்னா "லூஸ் குலோத்திங்" கவ்வி பிடிக்காத எல்லா உடைகளும்.
5. உங்கள் குழந்தைகளுக்கு இந்திய கலாசாரத்தை சொல்லிகொடுத்து வளர்க்கறீர்களா?
குறிப்பாக இப்படித்தான்னு இருக்கிற மாதிரி எந்தவொரு அடையாளமும் காமிச்சு வாழ்றதில்லை, அப்படியே எப்படியாக நானிருக்கேனோ அதனையே பார்த்து வேணுங்கிறதை எடுத்துட்டு வேணாததை விட்டுட்டுப் போனாலும் அப்படியே எடுத்துக்கிற மனசோட நான் இருக்கேன். திணிப்பது இல்லை.
6. எல்லா பொருளிலும் ஏதோ ஒரு பதிவு நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். இன்னும் எழுத வேண்டும் என்று நினைக்கும் ஏதாவது?
நிகழ்வுகள் நடைபெற நடைபெற நமது எண்ணத்தையும் அதனைச் சார்ந்து பதிந்து வைத்து விடுவோம், அவ்வளவுதான். அதுவும், இது என்னோட வளர் நிலையில் நான் எங்கிருந்துருக்கிறேன் என்பதனை பிரிதொரு நாளில் திரும்ப புரட்டிப் பார்க்க உதவும் என்ற எண்ணத்தில்தான்.
7. அமெரிக்காவை விட்டு துரத்திவிட்டால் என்ன செய்வீர்கள்?
அடச் ச்சே ஏண்டா இவ்வளவு கால தாமதம், அப்படின்னு நினைச்சிக்கிட்டு சந்தோஷமா மூட்டை, முடிச்ச கட்டிக்கிட்டு அடுத்த டெண்ட் அடிக்க கிளம்பிட வேண்டியதுதான்.
8. உங்களுடைய வலைபதிவில் தருமி' என்ற பெயரை நிறைய பார்த்தேன்.ஏன் ன்னு சொல்ல முடியுமா?
அத அவர்கிட்ட இல்லே கேக்கணும் :). இருந்தாலும், அவரு தன்னோட எண்ணத்தை என் பதிவில் விட்டுச் செல்ல காரணமா நான் நினைக்கிறது என்னன்னா "பயகிட்ட சொன்னா எடுத்துக்கொள்ளும் மன நிலையில் இருக்கிறான்"னு நினைச்சு அப்பப்போ வந்து அவரோட தடத்தை விட்டுட்டு போறார் போல. இன்னொன்னு, அடுத்த கேப்பங்கஞ்சி நீங்க கொடுக்கப் போறது அவருக்காகத்தான் இருக்கணும், ஆனா, நிறைய தோண்டணும் அங்கே, செய்வீங்களா??
தெகாவின் இன்றைய தத்துவம் :- காகா, காகாவா இருந்தாத்தான் அதுக்கு அழகே... அதுவே தான் மயிலுக்கும்!
கேப்பங்கஞ்சி with கவிதாவுடன் - தெக்கிக்காட்டான்
Labels: கேப்பங்கஞ்சி 26 Comments
நிழலாக தொடரும் நிலவு - பாகம் 3
கதையை தொடருகிறேன்.. முந்தைய பாகங்கள் -
1. நிழலாக தொடரும் நிலவு
2.நிழலாக தொடரும் நிலவு - பாகம் 2
ரமேஷ் வெகு நேரம் அன்று இரவு தூங்கவில்லை... மொட்டைமாடி நிலவும் அவனுக்கு துணையாய் இருந்தது...
ஹாலில் சோபாவிலேயே படுத்து தூங்கி இருந்தான். காலையில் எழுந்த போது தெளிவாக இருந்தான்.. கடிகாரத்தை பார்த்தான்..6.50 ஐ காட்டியது. மீனா என்ன செய்கிறாள் என்று படுத்தவாறே நோட்டம் விட்டான். சத்தம் எதுவும் இல்லை.. தூங்கிக்கொண்டு இருப்பாள் என்று வெடுக்கென்று எழுந்தான். பெட் ரூமை மெதுவாக திறந்து பார்த்தான்.. மீனா நன்றாக தூங்கிகொண்டு இருந்தாள். திறந்ததை போலவே மெதுவாக சத்தம் இல்லாமல் கதைவை சாத்திவிட்டு, வேக வேகமாக மாடிக்கு சென்றான்.
மொபைல் போனை எடுத்து, மாமனாரை (மீனாவின் அப்பாவை) அழைத்தான்.
"......வணக்கம் மாப்பிள்ள சொல்லுங்க என்ன இவ்வளவு காலையில.. மீனாக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா?" குரலில் பதட்டம் தெரிந்தது.
"இல்ல்லல்ல.. பயப்படாதீங்க. .உங்கக்கிட்ட கொஞ்சம் பேசனும், உங்கள இன்னைக்கு பாக்க முடியுமா? வீட்டுல வந்து பேசற விஷயம் இல்ல.."
"........... சரிங்க மாப்பிள்ள...நான் உங்க ஆபிஸ்க்கு வந்து பாக்கிறேன்..எத்தனை மணிக்கு வரட்டும்?"
"11 மணி..?? உங்களுக்கு முடியும்ன்னா வாங்க இல்ல நீங்க சொல்லற இடத்திற்கு நான் வரேன்.."
"இல்ல மாப்பிள்ள.. எனக்கு வெளியில கொஞ்சம் வேல இருக்கு அப்படியே உங்களையும் வந்து பார்க்கிறேன்....ம்ம்..மீனா எப்படி இருக்கா?
"ம்ம்.... நல்லா இருக்கா மாமா.." குரலில் கொஞ்சம் தோய்வு வரத்தான் செய்தது...
மொபைலை அனைத்துவிட்டு வேகமாக கீழே இறங்கி வந்தான்.. வெளியில் கிடந்த பால் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு கிச்சனுக்கு போனான்.. பாலை காய்த்து, மீனாவிற்கு பூஸ்ட் போட்டு பிலாஸ்கில் ஊற்றி வைத்தான்.. தனக்கும் டீ போட்டு எடுத்து வந்து.. அன்றைய நீயூஸ் பேப்பரை எடுத்துவைத்து கொண்டு உட்கார்ந்தான்...
மீனா எழுந்துவர 7.30 மணிக்கு மேல் ஆகியிருந்தது... ரமேஷ்'ன் மீது இருந்த கோபம் இன்னும் போனமாதிரி தெரியவில்லை.. முகம் வாடி இருந்தது..ரமேஷ் அவளை பார்த்தான், எதுவும் பேசவில்லை,மீண்டும் பேப்பரில் மூழ்கினான்.. அவளும் எதுவும் பேசவில்லை.. . கிச்சன்னுக்குள் சென்றாள். போட்டு வைத்து இருந்த பூஸ்டை டம்ளரில் ஊற்றி வந்து சோபாவில் உட்கார்ந்து டிவி'ஐ ஆன் செய்தாள்..
மணி 8.. மீனா டிவியை விட்டு எழவில்லை.... ரமேஷ் ஆபிஸ் செல்ல ரெடியாகி வந்துவிட்டான்... கிச்சனில் பார்த்தான்..மீனா எதுவும் செய்ததாக தெரியவில்லை..
"...நைட் பிரட் வாங்கி வச்சி இருக்கேன்.. சாப்பிடாம இருக்காத... நான் ஆபிஸ் கிளம்பறேன்.."
"..ம்ம்..ஆமா....ரொம்ப அக்கறை.. .." முனுகினாள் மீனா...
காதில் வாங்காதவாறு வெளியில் நடந்தான்...ரமேஷ்
=========
மாமனாரிடன் என்னவெல்லாம் பேசவேண்டும் என்று இரவே திட்டமிட்டு வைத்து இருந்தான். அலுவலக வேலையில் அதை திரும்பவும் அசைபோடும் நிலைமை இல்லாமல் போனது....
மணி 10.40 இருக்கும்...மாமனாரிடம் இருந்து மிஸ் கால் வந்தது...
ரமேஷ் பக்கத்து சீட்டில் இருந்த கண்ணனிடம், "டேய்!, கொஞ்சம் பாத்துக்கோ... ஒரு டூ ஹவர்ல வந்துடறேன்.. ஒகே...பர்சனல்.... என்று சொல்லிவிட்டு வேகமாக வந்தான்..
வெளியில் கொஞ்சம் பதட்டமான நிலையில் தான் மாமனார் இருப்பதாக தெரிந்தது...
இவனை பார்த்ததும்.... "மாப்பள்ள..ஏதாது......பிரச்சனையா?....மீனா எப்படி இருக்கா..."
"...இல்ல..அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல... வாங்க...ஏதாது ஹோட்டல்ல போய் பேசலாம்.."...
பக்கத்திலிருந்த ஷாப்பிங் காம்லக்ஸ் அழைத்து சென்று ஒரு காபிபாரில் இரண்டு காபிக்கு ஆர்டர் செய்துவிட்டு, கூட்டமில்லாத இடத்திற்கு அவரை அழைத்து சென்று அமர்ந்தான்.
"மாமா... மீனா விஷயமாத்தான் பேசனும்.. அவ இப்ப என்கூட இருக்கறத விட உங்கவீட்டுல இருக்கறது நல்லது.. அவளுக்கு சொன்னா புரியாது.. நீங்களும் அத்தையும் சொல்லி அவளை டெலிவரி வரைக்கும் அங்கேயே வச்சிக்கோங்களேன்..."
".....ஏன்...என்ன ஆச்சி....இப்பவே.........."
"உங்களுக்கு அனு விஷயம் நல்லாவே தெரியும்.... டெயிலி அதனால பிரச்சனையா இருக்கு.. அனுவுக்கு நான் ஏதாவது செட்டில் பண்ற வரைக்கும் அவங்க வீட்டுக்கு நான் போய் வந்துக்கிட்டு தான் இருக்கனும், ஆனா மீனா'க்கு புரியல.. சண்டை போட்ட பரவாயில்ல.. சாப்பிட மாட்டறா.. சரியா தூங்க மாட்டறா.....என்னால ஆபீஸ், மீனா.. அனு பிராப்லனு எல்லாத்தையும் பாக்கமுடியல.. ரொம்ப டென்ஷன் ஆகுது...நிம்மதியே போச்சி.... மீனா இப்படி இருந்தா குழந்தைக்கு நல்லது இல்ல... சோ.. அவ அங்க இருக்கட்டும்.. அத்தைக்கு நீங்க ஏதாவது சொல்லி மீனாவ கூட்டிட்டு போங்க.. டெலிவரிக்குள்ள நானும் அனுவோட ப்ராப்ளத்தை சால்வ் பண்ணிடுவேன்..."
"மாப்பள்ள....நீங்க என்ன மனசுல வச்சிக்கிட்டு பேசறீங்கன்னு எனக்கு புரியல... மீனா அங்க இல்லன்னா... நீங்க எப்படி இருப்பீங்கன்னு எனக்கு தெரியல... அனுஷா விஷயத்த அவங்க வீட்டுல இருக்கறவங்க பாத்துக்க மாட்டாங்களா? நீங்க எதுக்கு இன்னும் அதுல தலையிடனும்.. உங்களுக்குன்னு மீனா, குழந்தை எல்லாம் வந்தாச்சு ..........இன்னனும் அனுஷாவையே நெனச்சிக்கிட்டு இருக்கறது நல்லா இருக்கா....?"
".............மாமா.. நீங்க ஒருத்தர் தான் எனக்கு சப்போர்ட் செய்வீங்க என்னை புரிஞ்சிப்பீங்கன்னு உங்ககிட்ட வந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்.. நீங்க நெனக்கிற மாதிரி ஒன்னும் நடக்காது.. மீனாவும் குழந்தையும் எனக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு அனுவோட லைஃ முக்கியம். நான் இல்லன்னு தனியாவே வாழ்க்கையல இருக்க போறேன்னு அந்த பொண்ணு தன்னையே கஷ்டபடுத்திக்குது. .நான் தான் அதுக்கு காரணம் இல்லையா..? நான் தான் அத சரி பண்ணனும்.. என்னால மட்டும் தான் முடியும்..... அவங்க அம்மாவோ அண்ணனோ ஒன்னும் செய்யமுடியாது.. அதுக்கு எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.. ஆனா மீனாக்கு அந்த பொறுமை இல்ல... அவ டென்ஷன் ஆகறா.. அவளுக்கு ஒடம்பு வீனா போய்டும்.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க.. தினம் வீட்டுக்குள்ள போனாவே சண்டைத்தான்.. நிம்மதி இல்லாம போச்சி.."
"...........மாப்பள்ள... நல்லா யோசிச்சுத்தான் சொல்றீங்களா?...."
" நேத்து ராத்திரி பூரா தூக்கமில்ல.... இதவிட்டா வேற வழியே இல்ல.. நானும் மீனாவும் நல்லா இருக்கனும்னு நீங்க..நெனச்சீங்கன்னா..இத செய்துத்தான் ஆகனும்....அத்தைக்கிட்ட மீனா உடம்பு ரொம்ப வீக்கா இருக்குன்னு டாக்டர் சொன்னாங்கன்னு சொல்லி கூட்டிட்டு போங்க.. டாக்டர்கிட்ட வேணும்னாலும் நான் பேசறேன்....டாக்டர் சொன்னா மீனா கேப்பா.."
"..ம்ஹூம்....உங்கள கேட்டோ குத்தம் சொல்லியோ என்ன லாபம்? என்னையும் சேர்த்து எல்லாம் தெரிஞ்சி பண்ண தப்பு..இது.... ஆனா உங்க மேல நான் வச்சி இருக்கற நம்பிக்கைய பாழாக்கிடாதீங்க... மீனா எங்களுக்கு ஒரே பொண்ணுன்னு உங்களுக்கு தெரியும்......"
முகம் முழுக்க வருத்ததோடு சிரித்தான்...... "எனக்கு இப்ப யாரு முக்கியம்னு தெரியும் மாமா அதே சமயம் அனுவை அப்படியே விட்டா நானும் என் குடும்பமும் நிம்மதியா இருக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை இல்ல.... அதனாலதான் அதுக்கு இப்பவே ஒரு முடிவு கட்டனும்னு பாக்கறேன்....... மீனாவும்...குழந்தையும் தான் என்னோட லைஃ மாமா.. நம்புங்க.."....
"....சரி..நான் சுகுணாக்கிட்ட பேசிட்டு உங்களுக்கு ஃபோன் பண்றேன்..."
இருவரும் கிளம்பினார்கள்.... மனதில் இருந்த சுமையை இறக்கி வைத்தத்தில் ரமேஷ் சற்று நிம்மதி அடைந்தான்.. இனி அனுஷாவை சரி செய்து கல்யாணத்திற்கு எப்படியாவது சம்மதிக்க செய்ய வேண்டும்..அவளை எப்படி சம்மதிக்க வைக்கறது...யோசித்தவாறே ஆபிஸ் சென்றான்...
நிழல் தொடரும்...........
Labels: கதை 4 Comments
குறைந்தபட்ச நியாய தர்மமாக நடந்துகொள்ள முயற்சி செய்யலாமே...
வேளச்சேரிக்கு வந்த புதிதில், வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். எல்லா காலி இடங்களும் தண்ணீரால் வருடம் முழுதும் மூழ்கி இருக்கும். மழை வரும் போது, எப்படியும் ஒரு வாரத்திலிருந்து 10 நாட்கள் இடுப்பளவு அல்லது முழங்கால் அளவு தெருவில் தண்ணீர் நிற்கும், அதில் தான் நடந்து செல்ல வேண்டி வரும். அதில் எல்லா ஜீவராசிகளும் நம்முடன் ஒன்றாக கலந்துவிடும்.
பகல் இரவு பாரபட்சமின்றி தவளையின் சத்தம், மிக எளிதாக கண்ணில் படும் எல்லாவித பாம்புகளும் தெருவின் இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கம் நீந்திசெல்லும், நத்தை, ஆமை, அட்டை, பாம்பை பிடிக்க கீரி, மீன் என்று நம்முடனே அவையும் இருக்கும். நல்ல பாம்பு கூட பார்த்து இருக்கிறேன். இது பழகிபோன ஒன்று, என்னவோ போன வருடம் தீடிரென்று தண்ணீர் தேங்காமல் இருக்க புதுதிட்டம் என்று சொல்லி, வாய்க்கால் வெட்டி ஏரிக்கு எடுத்துசெல்கிறோம், இனி வேளச்சேரியில் தண்ணீர் தேங்கவே தேங்காது என்றனர்.
வாய்க்கால் வடிவவைக்கும் போதே (எங்கள் வீட்டின் அருகில்), அதன் கான்ராக்ட்ரர், கண்காணிக்க வரும் பொறியாளர் என்று எல்லோரையும் எப்படி இது சாத்தியப்படும், நாங்கள் இருப்பதே ஏரியில் அதுவும் எதையுமே சரிப்பார்க்காமல் ஏனோ, தானோ என்று கட்டுகிறீர்களே..இதனால் எங்கள் தெருவின் அகலம் தான் குறைகிறதே தவிர ஒரு பலனும் வர வாய்பில்லையே என்று அவரிடம் கேட்டேன். ஆனால் அந்த பொறியாளர் மிக விரிவாக, தெளிவாக அந்த திட்டத்தை விளக்கினார். நானும் சரி எப்படியோ தண்ணீர் இனிமேல் நிற்காமல் இருந்தால் நல்லது,மழை வரும்போது பார்க்கலாம் என்று காத்திருந்தேன்.
இப்போது.. இந்த கொடுமையை யாரிடம் சொல்லுவது, தண்ணீர் முன்பை போலவே எந்த வித மாற்றமோ நிவாரணமோ இந்த வாய்க்கால்களால் ஏற்படவில்லை. எதற்கு இதை கட்டினார்கள் என்றே புரியவில்லை. முந்தைய பதிவில் சொன்னது போன்று கொசுக்கள் தான் அதிகம் அனுபவிக்கின்றன அவற்றால் நாங்களும் அனுபவிக்கிறோம்.
திட்டமிட்டு இது போன்ற பிராஜக்ட்டுகள் ஆரம்பிக்கும்போதே அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயமாட்டார்களா? தண்ணீர் வடியவேண்டும் என்று கட்டப்பட்ட இந்த கால்வாய்கள் குறைந்தபட்ச சிரத்தையுடன்,திட்டமிட்டு வடிவமைத்து இருந்தால் எத்தனை உபயோகமாக இருந்து இருக்கும். தனியார் காண்ட்ராக்டர்கள் இப்படி பொது மக்கள் சம்பந்தமான வேலைகளை எடுத்த் செய்யும் போது ஒரு 10% சதவிகிதமாவது மக்களுக்கு திட்டம் போய் சேரும்படியாகவும், உபயோகமாகவும் செய்தால் நன்றாக இருக்கும்..
செய்வார்களா?
அணில்குட்டி அனிதா:- செய்யமாட்டாங்க.. என்னா பண்ண போறீங்க..? நானும் போனா போகுது போனா போகுதுன்னு பாத்தா..ரொம்பத்தான்..!! என்ன செய்ய போறீங்க..சாக்கடைய இடிக்க போறீங்களா இடிச்சிக்கோங்க.. எங்கயாவது போய் சவுண்டுவிட போறீங்களா விட்டுக்கோங்க... ? உண்ணாவிரதம் இருக்க போறீங்களா? இருந்துக்கோங்க.. கவி நீங்க எழுதறது எனக்கே போர் அடிக்குது..... வந்தோம்மா.. ஆத்தாடி, அம்மாடி, செத்தாண்டி, பொழச்சாண்டி ன்னு எழுதினோம்மான்னு இல்லாம... நீங்களும் உங்க ப்ளாகும் விடுங்க! இனிமே நான் எழுதறேன்.. எனக்கு தான் உங்களவிட ரீடர்ஸ் ஜாஸ்தி. .நானாவது லைஃப என்ஜாய் பண்றேன்.. போங்க அந்தாண்ட..... என்னா மக்கா ஓகே தானே..?!!
பீட்டர் தாத்ஸ் :- “The best way to find yourself is to lose yourself in the service of others.” - Mahatma Gandhi
Labels: சமூகம் 15 Comments
கேப்பங்கஞ்சி with கவிதாவுடன் – “செந்தழல்” ரவி
பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் கேப்பங்கஞ்சி ..இன்று நம்முடன் இருப்பவர் டவுசர் பாண்டி "செந்தழல் ரவி" எப்போதும் யாரையாவது ஒருவரை பற்றி எழுதி பேரும் புகழும் திட்டும் வாங்கிக்கொண்டே இருக்கிறார். எங்களிடம் இன்று மாட்டி சின்னா பின்னமாக போகிறார் என்பது மட்டும் நிச்சயம்..... இதோ ..ரவியின்.. தழல்கள்...
உட்காரவைத்து மரியாதையாக கேட்ட கேள்விகள் : -
கவிதா :- வாங்க ரவி எப்படி இருக்கீங்க.. ?. உங்களுக்கு பிளாக்' தவிர வேறு பொழுது போக்கே இல்லையா? அல்லது உங்களுக்கு பிளாக் தவிர வேறு என்ன தெரியும்?
அட நீங்க வேற கவி. அலுவலகத்தில் வேலை டவுசர் கிழியுது. உபுண்டு கூட இன்ஸ்டால் பண்ணத்தெரியாத நீ எப்படி மென்பொருளாளர் என்று ஒருவர் கேட்டுட்டார். (அவர்தாங்க என்னோட டேமேஜர்). அதனால் மதிய உணவை உண்டு, அந்த உபுண்டுவை எப்படி நிறுவுவது என்று தாவு தீர்ந்து யோசித்து வருகிறேன்...தங்கமணி வீட்டில் அனுமதிப்பது 30 நிமிடம் மட்டுமே...(அது அவர் கோலங்கள் பார்க்கும் நேரம்). தொல்காப்பியன் மற்றும் தோழரின் உருப்புடி இல்லாத வசனங்களுக்கு நடுவே கொஞ்சம் பதிவைவும் பார்த்து / எழுதி வருகிறேன்...
அணில்:- ரவி அண்ணே மொதல்ல நீங்களும் கவி’யும் எப்படி ராசியானிங்கன்னு சொல்லுங்க. .எனக்கு காதுல ஒரே பொக.......
அன்பு சகோதரிம்போம்...அப்புறம் அராஜக ஆட்சிம்போம்...மறுபடி இணைஞ்சு மிரட்டுவோம்...அரசியல்ல இதெல்லாம் சகஜம் அணிலு...
கவிதா:- எப்போதுமே அடுத்தவர்களையே கவனித்து அவர்களை பற்றி எழுதி நேரத்தை வீணாக்கவேண்டுமா? பதிவர்களை பற்றி சில சமயங்களில் நீங்கள் எழுதும் பதிவுகள் அவர்களை புண்படுத்துவதாக இருக்கிறது. இது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ( இது என்னை குறிப்பிட்டு கேட்கவில்லை)
கண்ணில் படும் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறேன்... டெஸ்ட் எஞ்சினீயருங்க நானு... அதனால இயற்கையாவே இப்படி ஆகிருச்சு...நான் இதுவரை சுட்டிக்காட்டிய ஸ்பெல்லிங் மிஸ்டேக் மட்டும் நூத்துக்கணக்குல இருக்கும்...சிலசமயம் புண்படுத்தினாலும், பலசமயம் பண்படுத்தியிருக்கிறது...(என்று நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்)
அணில்: எப்ப பாத்தாலும் நீங்க யாரோட டவுசரயாவது கழட்டறீங்களே....... உங்களுக்கு யாருக்குமே டவுசர் போட்டு வுட தெரியாதா?
கை வலிக்கிற அளவுக்கு டவுசர் போட்டுவுட்டுக்கினு கீறேன் அணிலு.. வெளம்பரம் எதுக்குன்னு வெளிய சொல்றதில்ல...
கவிதா: சமீபத்தில் பார்ப்பனீயம் For Dummies !!!! - இப்படிப்பட்ட தரமான பதிவுகள் கூட உங்களுக்கு எழுத தெரியுமா என யோசிக்க வைத்தது.! ஏன் நீங்கள் தொடர்ந்து இது போன்ற தரமான பதிவுகளை எழுதக்கூடாது.? (குறிப்பிட்டு தனிமனிதரை சாடாமல்)
அவ்வப்போது தோன்றுவதை எழுதி வருகிறேன்...500 பதிவுக்கு மேல எழுதியாச்சு...அவற்றில் 95% மொக்கையாக இருக்கக்கூடும்...உருப்படியாக எழுத தொடர்ந்து முயற்சி செய்துவருகிறேன்...ஆனால் என்னுடைய வலைப்பதிவை படிக்கும் பலர் ஏதாவது லைட்டாகவே எதிர் பார்க்கிறார்கள்.... சகோதரி ராப் me the first என்ற கமெண்டு போட்டால் அது நல்ல நகைச்சுவை பதிவு என்று பெஞ்ச் மார்க் செட் ஆகி உள்ளது. ஆகவே ராப் இடம் me the first வாங்க தொடர்ந்து முயற்சி செய்வேன்....
அணில்: அண்ணா...!! ஏங்கண்ணா உங்க பேருக்கு முன்னாடி... செந்தழல் ன்னு இருக்கு..அப்படீன்னா என்னங்கண்ணா?
ரெட் பயர்.. தீப்பொறி திருமுகம் மாதிரி ஒரு டெரர் பீலிங் வர நானே வெச்சுக்கிட்டேன் ஹி ஹி...நீ கண்டுக்கிடாத...
கவிதா: நான் உங்கள் பதிவுகளையும், உங்களை புரிந்துகொண்ட விதத்திலும் , உங்களுக்கு நல்ல சிந்தனைகள், சமுதாயத்தின் மேல் உங்களுக்கு உள்ள அக்கறை எல்லாமே குறிப்பிட்டு சொல்லகூடியது .அதை இன்னும் நாகரீகமாக செம்மையாக செய்ய முடியும் என்று நீங்கள் நினைத்ததுண்டா? :))))
பொதுவெளியில் விளம்பரம் இல்லாமல் தொடர்ந்து செய்தே வருகிறேன்... பதிவுகளில் பெரும்பாலானவைகளை வெளிப்படுத்துவதில்லை...இனிமேலும் தொடர்ந்து இந்த சமுதாயத்துக்கு பயன் அளிக்கும் வகையில் - என்னுடைய இறுதி காலம் வரை - வாழ்வேன் என்று நினைக்கிறேன்... என்னுடைய தந்தையாரும் அப்படி இருந்தார்...அவர் தான் எனக்கு ரோல் மாடல்... இளம் வயதிலேயே நல்ல எண்ணங்களையும், தமிழ் காமிக்ஸ் புத்தகங்களையும், ருஷ்ய தமிழாக்க நாவல்களையும், சர்க்கரை வியாதியையும் எனக்கு தந்த புண்ணியவான் !!!!
கவிதா: உங்கள் அனைத்து பதிவுகளையும் நான் படிப்பதில்லை, காரணம் மிக மோசமான பின்னூட்டங்கள். இதை தடுக்க ஏதாவது நீங்கள் செய்ததுண்டா..? தயவுசெய்து என்னால் போட்ட பின்னூட்டங்களை எடுக்க முடியவில்லை என்று technical issues relate செய்து பதில் சொல்லாதீர்கள். அது நம்ப கூடியதாக இருக்காது.
கடந்த நாலைந்து பதிவுகளாக தான் இப்படி...தேவையற்ற பல பின்னூட்டங்களை டெலீட் செய்து வருகிறேன், சில என்னுடைய கண்ணில் படாமல் தவறிப்போகலாம்...அதையும் யாராவது சுட்டிக்காட்டினால் எடுத்துவிடுகிறேன்...என்னுடைய பதிவில் ஒரு சிலர் தமிழ்ச்சி மீது தங்களது தனிப்பட்ட கோபங்களை காட்டி வருகிறார்கள்...அவர்களிடம் கேட்பது ஒன்றுதான்...உங்களுடைய கொலைவெறிக்கு என்னுடைய பதிவை கலீஜ் ஆக்கிவிடாதீர்கள்...
கவிதா: உங்கள் குடும்பத்தினர் உங்கள் பதிவுகளை படிப்பதுண்டா? ஏதாவது விமர்சனம் உண்டா?
தங்கமணி பொதுவாக அறுசுவை டாட் காம் மட்டுமே படிக்கிறார்... என்னுடைய பதிவை படிப்பதில்லை... அறுசுவை டாட் காம் என்னுடைய குடும்பத்தை பொறுத்த வரை பெரிய அளவில் இதுவரை உதவி செய்யவில்லை - என்னத்தை சொல்லி புலம்ப ஹி ஹி:)
கவிதா: உங்கள் வாழ்க்கையின் லட்சியம் ?
தகவல் தொழில்நுட்பத்தை ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கொண்டு சென்று சேர்ப்பது...அதை பற்றி அடிக்கடி சிந்தித்தும், அதற்கான தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள என்னை தயார்படுத்தியும் வருகிறேன்...
கவிதா: என்னுடைய ப்ளாக்'ல் என்னுடைய புகைப்படத்தை போடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் குறிப்பாக உங்கள் பதிவில் நீங்கள் மற்றவர்களின் புகைப்படங்களை உபயோகப்படுத்தி இருப்பதை பார்த்து அப்படி ஒரு தவறை செய்யக்கூடாது என்று முடிவுசெய்தேன். இப்படி என்னை போன்றவர்களுக்கு பிளாக் பற்றிய Negative Impact வரும்படி செய்கிறீர்களே அது சரியா?
அனுமதியுடனே படங்களை வெளியிடுகிறேன்.....!!!! என்னுடைய வலைப்பதிவை படித்து ப்லாக் பற்றிய நெகட்டிவ் இம்பேக்ட் வருகிறது என்பதை ஏற்றுக்கொள்ள கஷ்டமாக இருக்கிறது...(நான் அப்படி என்ன எழுதிட்டேன் ஹி ஹி)
கவிதா:- மிக எளிதாக நீங்கள் ஒரு மனநிலையில் இருந்து மற்றொரு மனநிலைக்கு மாறுகிறீர்கள். நீங்கள் உணர்ச்சி வசப்படுவதை பற்றி சொல்கிறேன் நேற்று உங்களுக்கு பிடிக்காத ஒருவர் இன்று பிடிக்கிறார். இன்று பிடித்த ஒருவர் நாளை பிடிக்காமல் போகிறார். ஏன் இந்த தடுமாற்றம்.?
எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லையே ? தவறு செய்தவர்கள் / அல்லது என்னை பற்றி தெரியாதவர்கள், நான் யார் என்று தெரிந்து, உணர்ந்து என்னிடம் திரும்ப வரும்போது அதனை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு ? எளிதாக உணர்ச்சியின் பால் விழுவது என்று என்னைப்பற்றி சொல்வது கொஞ்சம் சரிதான்...ஆனால் நான் தன்னிலை எப்போதும் மறந்ததில்லை என்றே நினைக்கிறேன்...
கவிதா: (மேல் கேள்விக்கு தொடர்புள்ள கேள்வி) உங்களை பற்றி நீங்கள் Self analyse செய்து பார்த்து இருக்கிறீர்களா?
கொரியாவில் உடல் நலம் சரியில்லாம் இருபது நாட்களுக்கு மேல் அசைய முடியாமல் படுத்திருந்தபோது நிறைய நேரம் கிடைத்தது...அப்போது நான் சிந்தித்துக்கொண்டிருந்தது எல்லாம் தங்கமணியை பற்றித்தான்...அதனால் என்னைப்பற்றி அனலைஸ் செய்ய மறந்துவிட்டேன்...அடுத்த முறை நேரம் கிடைத்தால் செய்கிறேன்...
கவிதா : ஒரு பெண்ணுக்கு நிரந்தர உறவுகள் - திருமணத்திற்கு முன்னா ? பின்னா?
இப்படி யோசிப்பதே தவறு...திருமணத்துக்கு அப்புறம் கணவன் தான் எல்லாம் என்ற பழைய சிந்தையில் இருந்து பெண்கள் வெளிவரவேண்டும்...புகுந்த வீடு, பிறந்த வீடு, அலுவலகம் என்ற மூன்றையும் சிறப்பாக எதிர்கொள்ளவேண்டும்...
கவிதா: "டவுசரை கழட்டடுதல்" இதற்கு என்ன அர்த்தம்? அந்த குறிப்பிட்ட பதிவரின் மானத்தை பலர் எதிரில் வாங்கிவிட்டதாக அர்த்தமா? அப்படி என்றால் பெண் பதிவர்களுக்கு? :((((((((( (அப்படி ஏதும் தனியாக வார்த்தைகள் நீங்கள் வைத்திருந்தால் சொல்லவே வேண்டாம் ) ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மானத்தை மறைக்கத்தானே உடைகள். மிக எளிதாக நீங்கள் பொதுவில் உபயோகிக்கும் இப்படிப்பட்ட வார்த்தைகள் சரியா?
இது லக்கியிடம் இருந்து தொற்றிக்கொண்டது...இவை மிகவும் லைட்டான, ஜாலியான வார்த்தைகள்...இவற்றால் யாரும் பாதிக்கப்படுவதாக நினைவில்லை...அப்படி யாராவது பாதிக்கப்பட்டால் அவர்கள் உடனே மனநல மருத்துவரை தான் சந்திக்கவேண்டும்....
கவிதா:- ஹாஸ்டல் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி.
ஒருமுறை என்னுடைய தட்டில் வந்து விழுந்த உணவில் புழு. பாதிரியாரிடம் சென்று காட்டினேன்..பாதர், பொங்கல்ல புழு இருக்கு...என்றேன்..."அதுக்கு ?" என்பது போல் பார்த்து, "எடுத்து போட்டுட்டு சாப்பிடவேண்டியது தானே" என்றார்... எடுத்து போட்டுவிட்டு சாப்பிட்டேன்...இது நடந்தது என்னுடைய பதினாலு வயதில்...என்னுடைய சகிப்பு தன்மையை பல மடங்கு உயர்த்தியது இந்த நிகழ்ச்சி...
அப்புறம் இன்னோரு நிகழ்ச்சி...
பெட்டி சாவியை தொலைத்துவிட்டேன்... "பாதர்..என்னுடைய சாவியை தொலைத்துவிட்டேன்" என்றேன்...எங்கே தொலைத்தாய் என்றார்...அதிரடியாக நான் கேட்டேன்.."பாதர்..அறிவு இருக்கா ? எங்கே தொலைத்தேன் என்று தெரிந்திருதால் ஏன் உங்களிடம் வந்து சொல்கிறேன்... நானே எடுத்துக்கொண்டிருக்க மாட்டேனா" என்று..என்னை நாலு சாத்து சாத்திவிட்டு....அவர் யோசனையில் ஆழ்ந்துவிட்டார்...சில வாரங்கள் யாரிடமும் எதையும் பேசாமல் இருந்தார்...ஏன் என்று தெரியவில்லை...
ஓடவிட்டு அடித்து கேட்ட கேள்விகள் :
1. பிடித்த விளையாட்டு , பிடித்த ஊர், பிடித்த நடிகர்?
பேஸ்கட் பால், கோவை, சிங்கமுத்து..
2. பிடித்த பெண் (அம்மா, மனைவி, சகோதரி தவிர)?
அன்னை தெரசா
3. உங்களின் ரோல் மாடல் யாராவது?
அப்பா
4. உங்களின் நீண்ட நாள் கனவொன்று ?
ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தில் சிறு நகரம் - ஆரோவில் மாதிரி - உருவாக்கனும்..
5. பதிவர்களில் இன்னமும் சந்திக்க வேண்டும் என்று நினைக்கும் 3 பேர்?
வீ.எஸ்.கே, நரசிம், வவ்வால்
6. என்னுடைய பிளாக் Introducer யாருன்னு கண்டுபிடிச்சி தரீங்களா?
குமரன்
7. பெண் சுதந்திரம் என்பது?
தனக்கு தேவையானதை தானே முடிவெடுத்து பெற்றுக்கொள்ளும் சுகந்திரம்...
8. மற்றவர்களின், உங்களை பற்றிய எழுத்துக்களை நீங்கள் ஏன் எளிமையாக எடுத்துக்கொள்வதில்லை?
நான் வளர்ந்த முறை அப்படி...
9. சிகிரெட் பிடிப்பதை ஏன் விட்டீர்கள்? சிகிரெட் பிடிப்பதைவிட்ட பிறகு ஏற்பட்ட மாற்றம் குறிப்பாக உடல் எடை கூடுகிறதா?
மனைவிக்காக...அதிகம் பசிக்கிறது...சர்க்கரை வியாதி கட்டுக்குள்...
10. நீங்கள் செய்வதில் உங்களுக்கு பிடித்த சமையல்.
சாம்பார்...
11. ஒரு குட்டி கவிதை சொல்லுங்கள்...
அவள்...
பழமையையும் புதுமையையும் ஒருங்கே அமைந்த பதுமை...
மெட்டியுடன் புகைக்கிறாள்....
12. உங்களுக்கு பிடித்த உங்களுடைய எழுத்து.....ஏதாவது 3 பதிவுகள்.
1. கோழித்திருடன்
2. வீராசாமி
3. டாஸ்மாக்கில் பின்னவீனத்துவ எதிர் அழகியல் கவிஞர்கள்
13. நீங்கள் உங்கள் குழந்தைக்கு எந்தவிதத்தில் உதாரணமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
என்னுடைய டாடி என்னை எப்படி பாதித்தாரோ, அதே போல...
ரவி'யின் இன்றைய தத்துவம் : தத்துவம் என்று பழையன எதையும் பாலோ செய்யவேண்டாம், நீயே உன்னுடைய தத்துவத்தை உருவாக்கு !!!!
Labels: கேப்பங்கஞ்சி 14 Comments
பெங்களூர் பயணம் -சில நினைவுகளும் .....என் தோழனும்..... ........
அலுவலக வேலையாக பெங்களூர் செல்ல வேண்டி இருந்தது. என் நெருங்கிய நண்பர் அங்கு தான் இருக்கிறார். இருவரும் சந்தித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டுன. போகும் முன் எங்கு இறங்க வேண்டும், எங்கு என்ன சாப்பிடவேண்டும், ஆட்டோவிற்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொன்றையும் அவரிடம் கேட்டு தெரிந்துகொண்டேன். லேப்பியை பத்திரிமாக எடுத்துவாங்க, ரயிலில் திருடி விடுவார்கள் என்றார், இது மட்டுமே அன்றைய பயணத்தின் போது இரவு முழுவதும் தூக்கம் வராமல் போனது, கழிவறை செல்ல கூட பயந்து எப்படியோ போய் சேர்ந்தேன்.
இதில் ரயில் ஏறியவுடன் எனக்கு ஒரு மிஸ் கால் கொடுங்க, இறங்கியவுடன் எனக்கு ஒரு மிஸ் கால் கொடுங்க.. நடுராத்தியில் போன் செய்து ரயில் எங்கு வந்துகொண்டு இருக்கிறது? பத்திரமாக இருக்கீங்களா? தூங்கறீங்களா?.. அய்யோ ஜனா.. ??? வந்து விடுகிறேன்..உங்களிடம் நான் பெங்களூர் வருகிறேன் என்று சொன்னது தப்பாகிவிட்டதா..? இது தான் என் தோழன்..:))) அன்பை பொழிந்து போதும் ..!! போதும் என்று சொல்லும் அளவுக்கு ஆக்கிவிடுவார்.
காலையில் அங்கு சேர்ந்துவிட்ட என்னை விமானத்தில் வந்து சேர்ந்த என் முதலாளி காருடன் வந்து அழைத்து சென்றார். நேராக அவரின் சொந்தகாரர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கே எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. 85 வயதான அவரின் ஆன்ட்டி ஒருவர் தனியாக ஒரு வீட்டில் (big bazaar பக்கத்தில் மிக அற்புதமான மிக அழகாக வடிவமைக்கப்பட்ட, உள் அலங்காரம் செய்யப்பட்ட வீடு) அமைதியான இடத்தில் அமைந்த வீடு. என் முதலாளியை பார்த்தவுடன் அவரை கட்டி அணைத்து முத்தமிட்டார். பின்னால் சென்ற என்னை அறிமுகம் செய்தவுடன் என்னையும் அணைத்துக்கொள்ள கையை நீட்டினார். அவரை போலவே நானும் அவரை அணைத்தேன், எனக்கும் முத்தமிட்டார். என் முதலாளி "Kavitha, u just talk to her I ll be back" என்று கூறுவிட்டு மாடிப்படி ஏறி எங்கோ சென்று விட்டார். புதுவீடு, தெரியாத மனிதர்கள் என்று எந்த பிரச்சனையும் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. ஆச்சரியத்தை விட்டுவிட்டேனே.. அந்த 85 வயது மூதாட்டி கலக்ட்ராக இருந்து ஓய்வு பெற்றவர், ஆங்கிலம் நுனி நாக்கில் தாண்டவம் ஆடுகிறது, நல்ல நிறம், கேரளாவை சேர்ந்த அவர் வேலையாளிடம் சொல்லி தேநீர் கொடுக்க சொல்லிவிட்டு என்னிடம் பேசியவாரே ஒரு 5 நிமிடம் சமையல் அறை உள்ளே சென்றார் வந்துவிட்டார். திருமணம் செய்து கொள்ளவில்லை தனியாக இருக்கிறார், நானும் அவரை ஏன் என்று கேட்டேன். அவர் சொன்ன பதில் " அந்த காலத்திலேயே அதிகம் படித்துவிட்டேன், மிகவும் அழகாக இருந்தேன்.. அதற்கு தகுந்தார் அல்லது என்னை விட எல்லாவற்றிலும் சிறந்த ஒரு ஆணை எதிர்பார்த்தேன், மணக்க நினைத்தேன் ஆனால் கிடைக்கவில்லை" சொல்லிவிட்டு வெடி சிரிப்பு சிரித்தார். வாழ்க்கை தனியாக உங்களுக்கு போர் அடிக்கவில்லையா என்றேன். இல்லை மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.. இப்படி பேசிமுடிப்பதற்குள் அவல்'லில் செய்த புட்டை எங்களுக்கு பரிமாறினார். இதைதான் ஆச்சரியம் என்றேன். எப்படி இவ்வளவு எளிதாக வேகமாக 5 நிமிடத்தில் அவரால் இந்த வயதில் உணவை தயாரிக்க முடிந்தது?. சாப்பிட்டவுடன் இருவரும் கிளம்பினோம்.
திரும்பவும் முதலாளி அவரை கட்டியணைத்தார். நான் புன்னகையுடன் தள்ளி நின்றேன் விடவில்லை என்னையும் கைநீட்டி அழைத்தார், நானும் கட்டியணைத்தேன். என்னை கட்டி அணைக்கும் போது "என்னை மேடம் என்று அழைக்காதே" என்றார். சரி ஆன்ட்டி என்றேன்..!! சந்தோஷப்பட்டு திரும்பவும் நடக்க ஆரம்பித்த என்னை கூப்பிட்டு இறுக அணைத்துக்கொண்டார். உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, அடிக்கடி வா என்றார். even if your boss doesnt visit, you please visit, I love you..I wait for you, next time you stay with me ok.." என்றார். பிரியாவிடை! கொஞ்சம் நடந்து திரும்பி பார்த்தேன். திரும்பவும் என்னை பார்த்து கையை நீட்டினார், நானும் சிரித்துக்கொண்டே சென்று அணைத்துக்கொண்டேன்... "I too miss you aunty, next time sure, I ll stay with you , I cook for you ..I ll give you company, we ll chat lot ok...." என்றேன். சின்ன குழந்தையை போன்று கைக்காட்டி வழியனுப்பி வைத்தார். சந்தோஷமாக இருக்கிறேன் என்று அவர் சொன்னது வார்த்தையில் மட்டுமே என்று புரிந்தது.
சிலரின் அன்பு ஏன் என்றே புரியவில்லை இப்படி எனக்கு நிறைய அனுபவங்கள் இருந்தாலும் இது கொஞ்சம் புதிது. இப்படி உறவினர்கள் இடையே கட்டியணைப்பது எல்லாம் நம்முடைய கலாசாரத்தில் இல்லை. கொஞ்சம் புதுமையான அனுபவம்.
காலையில் இந்த அவல் மட்டுமே உணவு.. ஒரு மணி நேரம் தாங்கவில்லை பசிக்க ஆரம்பித்தது. முதலாளிக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் மதியம் சாப்பிட எங்கேயும் அழைத்து செல்லவில்லை. கிளையன்ட் அலுவலகத்தில் உட்கார்ந்து அவர்கள் வர நேரம் எடுக்க காரில் எனக்கு பெங்களூரை சுற்றி காட்டினார். நடுவே ஒரு ஹோட்டலில் டீ வாங்கிக்கொடுத்தார். வாழ்க்கையை பற்றி நிறைய தத்துவங்கள் அவரின் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார். பொறுமையாக அவரின் பேச்சை கவனித்துக்கொண்டு இருந்தேன். புத்தி என்னவோ கிளையன்ட்டை எப்படி எதிர்கொள்வது என்றே வேலைசெய்து கொண்டு இருந்தது. பசி வேறு கேட்கவும் முடியவில்லை அவரை பார்த்தாலும் பாவமாக இருந்தது. ஒரு வழியாக கிளையன்ட்ஐ பார்க்க முடிந்தது.
3.5 மணி நேரம் இடைவெளி இல்லாத பேச்சு. நான் பேச கிளையன்ட் பேச என்னுடைய முதலாளி ஒரு 10 நிமிடங்கள் எனக்கு துணையாக பேசிவிட்டு நாற்காலியை பின்னால் நகர்த்தி கைக்கட்டி சாய்ந்து உட்கார்ந்தவர் தான் என்ன ஏதுவென்று கேட்கவில்லை. சில சமயம் மிகவும் எரிச்சல் அடைந்து "Kavitha go with his rates, dont argue more let us fix this rate, he is also correct in his views.. !!" , " Yes Sir!, I do agree but..we dont get margin, no use of fixing this rate with this low margin, "It is ok, you better stop argue with him and go with his rate". முதலாளிகள் சொல்லுவதை நாம் கேட்டுத்தானே ஆக வேண்டும். அவ்வபோது லேப்பியில் நம்பர்களை அவருக்கு சைகை மூலம் காட்டி ஒப்புதல் பெற்று கிளைன்ட்; இடம் பிராஜக்ட் 'ஐ கையெழுத்திட ஏற்பாடு செய்தாகிவிட்டது. வந்த வேலை என்னவோ நல்ல படியாக முடிந்தது பசி தான் தாங்கமுடியவில்லை. மணி மாலை 6.15, முதலாளிக்கு விமானத்திற்கு நேரம் ஆக வண்டி பறந்தது. அவரை விமானநிலையத்தில் இறக்கிவிட்டு, ஸ்ஸ்..ப்பா... போன் முதலில்.ஜனாவிற்கு தான். "ஜனா ரொம்ப பசிக்குது எங்க சாப்பிடட்டும் சொல்லுங்க.. ஊர் உலகத்தை எல்லாம் தாண்டி எங்கையோ இருக்கேன்." ஜனாவிற்கு நான் பேசுவது கேட்கிறது எனக்கு கேட்கவில்லை. நான் பசியில் இருப்பதை புரிந்து கொண்ட டிரைவர் மேடம் அர்ச்சனா ஹோட்டல் இருக்கு சாப்பாடு நல்லா இருக்கும் போய் சாப்பிட்டுவாங்க என்று நிறுத்தினார். எப்படி போய் தனியாக சாப்பிடுவது. சரி பார்சல் வாங்கி வந்துவிடலாம் என்று போனேன். பசியில் மயக்கமே வந்துவிடும் போல இருந்தது. கூட்டம் இல்லை 2 தோசை ஆர்டர் ஒன்று பார்சல் வாங்கிக்கொண்டு, ஒன்று சாப்பிட்டேன்.
ரயில் நிலையத்திற்கு வந்து உட்கார்ந்து நேரம் பார்த்தால் 8.30 , எனக்கு ரயில் இரவு 11.45. ஜனா என்னை பார்க்க ரயில் நிலையம் வருவதாக சொன்னதால் வெளியிலேயே காத்திருந்தேன். 9.00 இருக்கும் வந்தார்கள், வந்தும் வராமல் "வாங்க பசிக்குதுன்னு சொன்னீங்க இல்ல ஹோட்டல் போலாம்". மிக கேவலமாக பார்த்து சிரித்தேன்.. "அப்போ பசிக்குது சொன்னா இப்ப வந்து நிக்கறீங்க.? .சரி வேலையைவிட்டு நேராக வரூவீங்கன்னு உங்களுக்கு நான் தோசை வாங்கி வந்து இருக்கேன். சாப்பிடுங்க." என்றேன். அதற்குள் எஸ்.எம்.எஸ்;ல் என் தோழி, ஜனாவை வீட்டுக்கு போய் சாப்பிட சொல்லு, நீயே அந்த தோசையையும் சாப்பிடு ஒரு தோசை உனக்கு பத்தாது என்று அனுப்பி இருந்தாள். அதை ஜனாவிடம் காட்ட... "யார் அவ, புது பிரண்டா...எவ்வளவு நாளா பிரண்டு.. என்ன பண்றா எங்க இருக்கா..??? " ஜனா "வாயை மூடிட்டு சாப்பிடுங்க.. " என்றேன். சாப்பிட்டு முடித்தவுடன் மீதம் இருந்த..சாம்பார், சட்னியை கட்டி அந்த ரெஸ்ட் ரூம் டேபிள் மேல் வைத்தார். ஜனா மணி 9.30 ஆக போகுது இதற்கு மேல் இதை யாரும் சாப்பிட மாட்டார்கள் குப்பை தொட்டியில் போடுங்கள் என்றேன். இல்லை சாப்பிடுவாங்க வேஸ்ட் பண்ண வேண்டாம்..என்றார்.
ஜனா..சொல்லிக்கிட்டே இருக்கேன்.. அது கெட்டு போய் நாற்றம் அடிக்கும், ஏன் இப்படி இருக்கீங்க.. ? குப்பை தொட்டியில் போடுங்க..ன்னு சொல்றேன் இல்ல...
நான் உங்க ஃபிரண்டு கவிதா.. உங்களின் மிரர்... உங்கள மாதிரித்தான் இருப்பேன்... ... வீணா போவது யாராவது பசிக்கறவங்க சாப்பிடுவாங்க இல்லையா...? எவ்வளவு பேரு இது இல்லாம கஷ்டப்படறாங்க.. என்னை திட்டினா உங்களை திட்டறமாதிரி அதனால திட்டாதீங்க.. சரியா.. :)))
இருவரும் ஒன்றாக சிரித்தோம்...
நேரம் ஆகிவிட்டது wife காத்திருப்பாங்க.. பத்திரமாக போங்க என்று சொல்லிவிட்டு சென்ற அந்த தோழன் என் தோழன் என்று சொல்லிக்கொள்வதில் எத்தனை பெறுமை எனக்கு......
அணில் குட்டி அனிதா: ம்ஹிம்... கவிதா மாதிரி கதை அளக்க யாராலும் முடியாதுடி.. சரி நீங்க இரண்டு பேரும் கர்ணனும், துரியோதனனும் மாதிரி சொல்லுங்க.. ஆனா நீங்க லேடி யாச்சே... வேற எப்படி சொல்லலாம்... வேற 2 பேரு இருக்காங்க சொல்லவா...? சொன்னா கோச்சீபீங்க வேணாம் உடுங்க...
பீட்டர் தாத்ஸ்: Who finds a faithful friend, finds a treasure. -- Jewish Saying
Labels: கதம்பம் 2 Comments
அழகே அழகு தேவதை..............................
அழகு !! அழகு என்றாலே பெண்ணுக்கு தான் முதல் முக்கியத்துவம். பெண்களில் இரண்டு வகை. ஒன்று அழகாக இருப்பவர்கள், இரண்டாவது அழகாக இருக்கிறோம் என்று தன்னை நினைத்துக்கொள்பவர்கள்.
அதில் முதல் வகை- இவர்களுக்கு அழகாக இருக்கிறோம் என்ற கர்வம், எல்லோரும் தன்னை கவனிக்கிறார்கள் என்ற கர்வம் இருக்கும், அதுவும் எல்லா அழகான பெண்களுக்கும் இருக்குமா என்றால், இல்லை என்றே சொல்லுவேன். பலர் அழகை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்வார்கள். பொதுவாக அது அவர்களுக்கு பழகிவிடும்.
இதில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள் தான் பிரச்சனையே... தான் அழகு என்று நினைத்து இவர்கள் அணியும் ஆடையும், செய்துக்கொள்ளும் அலங்காரமும் அல்லது இவை எதுவுமே இல்லாமல் ஏதோ ஒரு விதத்தில் அடுத்தவர்களை பயமுறுத்துவதுமே வாடிக்கை. நிறைய பெண்கள் தங்களுக்கு பொருந்தாத நிறத்தில் உதட்டு சாயம், முகத்தில் மேக்கப், பொருத்தமில்லா நகைகள், பொருத்தமில்லா நிற உடைகள் என்று தன்னை அழுகு செய்துக்கொள்ள வேண்டும், அவர்களை அடுத்தவர்கள் பார்த்து பேசவேண்டும் பழகவேண்டும் என்ற தீவிர எண்ணத்தில் அடுத்தவர்கள் அவர்கள் பக்கமே வர பயப்படும்படி செய்து விடுவார்கள். அவர்களை பார்க்க பாவமாகத்தான் இருக்கும்.
இதில் இன்னொரு வகையும் உண்டு. தன்னை ஆடை மற்றும் நகைகளால் அலங்காரம் செய்து கொண்டு தன் குடும்ப கெளரவத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று தீவிரமாக இருப்பார்கள். ஒரு முறை எங்கள் வீட்டுக்கு ஒரு பெண்ணை அழைத்து இருந்தேன். அந்த பெண் அவள் அணியும் நகை மற்றும் ஆடைகள் தான் வெளி இடங்களுக்கு/விஷேஷங்களுக்கு செல்லும் போது தன் கெளவரவத்தை நிலைநிறுத்துவதாக கூறினாள். நான் அவளுக்கு புதியவள். அவள் பேச பேச அவளின் அடிப்படை குணம் என்ன என்று தெரிந்தது. தான் எப்போதுமே சரவணா, சென்னைசில்க்ஸ், போத்தீஸ் போன்ற கூட்டம் நிறைந்த சாதாரண கடைகளில் சென்று உடைகள் எடுப்பதில்லை என்றும், ஆர்.ம்.கேவி, கோலபஸ், நாயுடுஹால் போன்ற கூட்டமில்லாத உயர்தர, தரமான கடைகளில் சென்று எடுப்பேன் என்றாள். நானாக எதுவுமே கேட்காமலேயே தான் அணிந்துள்ள ஆடையின் விலை ரூ 2000 என்று சொன்னவுடன் தான் நானும் அந்த பெண் அணிந்திருந்த ஆடையை மேலும் கீழுமாக கவனித்தேன். :)))) (பேச்சுக்கே இடம் இல்லை விடுங்கள்). அதில் குறிப்பிட்டு சொல்ல என்ன இருக்கிறது என்றால் அவளின் அழகு. ???? !! :))) இரண்டாம் ரகத்து பெண் என்று புரிந்தது. இப்படி பெண்கள் பேசுவதும் கூட அழகை அடிப்படையாக கொண்டே. 2000 என்ன 10000 ரூபாய்க்கு ஆடை அணிந்தாலுமே அது அவர்களுக்கு எடுப்பாக இருக்கிறதா? தனக்கும் தன் நிறத்திற்கு, தோற்றதிற்கும் பொருத்தமாக இருக்கிறதா? என்று தெரியாமல் இருக்கிறார்களே என்று தோன்றும்.
எல்லோருக்குமே நாம் அழகாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கம். அழகு என்ற எண்ணமும் கூட இருக்கும் ஆனால் தன்னை தானே கண்டிப்பாக ஒரு மதிப்பீடு இருப்பது எப்போதும் நமக்கு நல்லது. கருப்பாக இருக்கும் ஒருவரை பார்த்தால் அடையாள்ம் சொல்ல அவருடைய கலரை தான் எல்லோரும் முதலில் உபயோகப்படுத்துவார்கள் இல்லையா?. கருப்பாகவும், சாதாரண தோற்ற பொலிவு கூட இல்லாத ஒருவரை அவர் மனது கஷ்டப்படும் என்று வெளியில் சொல்லாவிட்டாலும் மனதில் கண்டிப்பாக நாம் எல்லோருமே அவரின் தோற்றத்தைப்பற்றி நினைத்துக்கொள்ளாமல் இருப்பதில்லை. யாரையுமே முதலில் கவருவது அவரின் தோற்றமே. அதன் பின் அவரின் உடல் மொழி, சிரிப்பு, பணிவு போன்ற சில அடிப்படையில் அமைந்த மனிதர்களை எளிதில் பிடித்துவிடும். இதுவும் அவர்களின் அழகு என்றே சொல்லலாம். கடைசியாக அவரிடம் பழக பழகத்தான் நமக்கு அவரின் குணம் தெரிய ஆரம்பிக்கும். சிலரை பார்க்கும் போதே பிடிக்காமல் போகும் அதற்கு காரணங்கள் கூட நமக்கு தெரிவதில்லை.
இதில் என்னை பொறுத்தவரை "அழகு" என்பது அவரவரின் பார்வையிலும், மன முதிர்ச்சியையும் பொறுத்துதான் இருக்கும். முதிர்ச்சி அடைந்த யாருக்கும் அழகு ஒரு பெரிய விஷயம் இல்லை. அறிவும், மனதும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை எந்த அசந்து போக வைக்கும் அழகியோ, அழகனோ நம்மை கவரமுடியாது, அதே போல் எவ்வளவு மோசமான தோற்றத்தில் இருந்தாலும் நம்மால் அவர்களை வெறுக்க முடியாது. சில சமயங்களில் முதிர்ச்சி அடைந்தவர்கள் ரசனை அற்றுபோகிறார்களா என்று கூட நான் நினைப்பதுண்டு. என் நண்பர் ஒரு உதாரணம் , அவர் காதலித்த பெண் தோற்றத்தில் மிக மிக சுமார் ஆனால் அவருக்கு பிடித்து இருந்தது... எனக்கு இன்னமும் அவரின் ரசனை மேல் சந்தேகம் இருக்கிறது. உடல் அழகக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று என் அறிவுக்கு எட்டினாலும், இன்னமும் அந்த கேள்வி இருந்துக்கொண்டே இருக்கிறது. அவரிடம் ஒருமுறை உங்களுக்கு பெண்களை ரசிக்க தெரியுமா? என்று கூட கேட்டுவிட்டேன்... அவரிடம் இருந்து பதில் இல்லை என்றாலும் என்னுடைய அதிகபிரசங்கி தனமான கேள்விக்கு அவரின் ரசனையை நாம் தவறாக நினைத்துவிட்டோமோ என்று அவரிடமே மன்னிப்பும் கேட்டேன்.
என்னுடைய சிந்தனையை ஒத்த, எதிர்பார்ப்புகள்,விருப்பங்கள், சாப்பிடும் உணவுகள், விருப்பமான கலர் என்று எல்லாவற்றலும் என்னை ஒத்த ஒருத்தர், அவருக்கு பிடித்த (தோற்றத்தில்) ஒரு பெண்ணை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. (தோற்றத்தில் தான்). ஏன் அவருக்கு பிடித்தது, எனக்கு ஏன் பிடிக்கவில்லை என்ற கேள்விக்கு இன்னமும் எனக்கு விடை தெரியவில்லை. அவர் மனம் வேதனைப்பட்டு விடுமோ என்று அவரிடம் இன்னமும் கேட்கவில்லை.
அழகு ....கூகுலில் தேடி பிடித்த அழகு பற்றிய சில குறிப்புகள்..
1. எதை அழகு என்கிறோம்.? தனிப்பட்ட கருத்தாக பார்க்காமல் பொதுவாக பார்த்தால், பெண்ணின் அழகை மிக தெளிவாக இங்கே குறிப்பிட்டு உள்ளார்கள்.
2. நாம் எல்லோருமே வெளிதோற்றத்தை தான் சட்டென்று கவனித்து ஒருவர் அழகாக இருக்கிறார்கள் என்கிறோம். ஆனால் வெளிதோற்றம் + உள் தோற்றம் (குணம்) இரண்டும் சேர்ந்ததுதான் அழகு. இதில் முதலில் பிறரை கவர்வது வெளிதோற்றம், சிரிப்பு, பேச்சு. மிக அற்புதமாக அழகு இங்கே விளக்கப்பட்டுள்ளது.
அணில்குட்டிஅனிதா:- கவி கேக்கறனேன்னு தப்பா நெனக்கப்பிடாது... இந்த அழகு பதிவுக்கும் உங்களுக்கும் என்னா சம்பந்தம்... தரண் அண்ணாச்சி.. அம்மணிய கொஞ்சம் கவனிங்க.. ... இது எல்லாம் நானும் நீங்களும் மட்டுமே பேசக்கூடிய ஒரு சேப்டரு...இல்லையா??
பீட்டர் தாத்ஸ் :- Beauty comes as much from the mind as from the eye. ~Grey Livingston
Labels: சமூகம் 6 Comments
I I T - Coaching புத்தகங்கள் வாங்கமுடியாத மாணவர்கள் கவனத்திற்கு...
பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, ஐ.ஐ.டி கோச்சிங் புத்தங்கங்கள் தேவைப்படலாம். இந்த புத்தகங்களை வாங்க வசதியில்லாத மாணவ, மாணவிகள் யாராவது இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும். இணைய நண்பர்களும் உங்களுக்கு தெரிந்த, புத்தகங்கள் வாங்க வசதி இல்லாத மாணவர்களுக்காக இந்த உதவியை செய்யவும். இரண்டு வருட "டைம்'ஸ்" இன் ஐ.ஐ.டி கோச்சிங் புத்தகங்கள் உள்ளன.
கண்டிப்பாக புத்தகங்கள் வாங்க வசதி இல்லாத மாணவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும்.
என்னுடைய ஈமெயில் :gkavith@gmail.com
அணில் குட்டி அனிதா:- ம்ஹீம்... எனக்கு அமெரிக்க இங்லீஸ் படிக்கணும்..யாராச்சும்..ஓசியல டியூஷன் எடுப்பீங்களா.. ...? ஒரு டீச்சர் எனக்கு பாடம் எடுத்தாங்க.. சடன்னா.. ஹே..அணிலு... நீ நான் வர வரைக்கும் 1, 2, 3 கவுண்ட் பண்ணுன்னு சொல்லிட்டு போனாங்க ஆளயே காணோங்க.. நானும்.. ஹே 1 னு.., ஹே 2 வூ..ஹே 3 ஈஈ..ன்னு எண்ணிக்கிட்டே இருக்கேன்.... !! :(((
பீட்டர் தாத்ஸ்.: Education is a progressive discovery of our own ignorance.- Will Durant
Labels: சமூகம் 0 Comments
Double Game எப்படி விளையாடுவது????
அணில் குட்டி அனிதா:- கவிதா வை ரொம்ப நல்லவங்க.. வல்லவங்க.. நியாமானவங்க.. அப்படின்னு ஊரு உலகத்துல பேசிக்கறாங்கன்னா... அதான் இல்லீங்கோ... சமீபத்தில் தெரிஞ்சவங்க ஒருத்தங்க அவிங்க எப்படி எல்லாம் டபுள் கேம் விளையாடாறாங்கன்னு அவங்களுக்கு புரிய வச்சாங்க பாருங்க.. அசந்து போன கவிதா, கண்டுபிடிச்சவங்க அறிவையும், புத்திசாலித்தனத்தையும் கண்டுக்குனு இன்னமும் டைலி ஒரே பாராட்டு மழத்தான் போங்க.. சரி எனக்கு தெரிஞ்சி இவிங்க ஆடின டபுள் கேம் ஐ இப்ப பாக்கலாம்..
HEL(L)met ஆல் வரும் பிரச்சனைகள்' னு நடுவுல ஒரு பதிவப்போட்டு எல்லார் உயிரையும் எடுத்தாங்க இல்ல.. அதுக்கு அப்புறமும் HEL(L)met போடாமத்தான் வண்டி ஓட்டனும்னு முடிவு பண்ணி அப்ப்டியே போய்கிட்டு இருந்தாங்க.. ஒரு நாளு ஹால்டா சிக்னல் கிட்ட நம்ம போலிஸ் மாமாங்க.. கவிதாவை வளச்சி புடிச்சாங்க... கவிதாக்கு ஒன்னும் பிரியல.. ஓ..லேடீஸ்'ஐ கூட இப்ப எல்லாம் விடறது இல்லையா.ன்னு மனசுல நெனச்சிக்கிட்டு....
கவி :- என்ன சார்...
போலிஸ் மாமா:- ஹெல்மெட் எங்கம்மா?
கவி :- வீட்டுல இருக்கு சார் (புத்திசாலித்தனமா பதில சொல்றாங்களாமா...)
போலிஸ் மாமா:- ஓ வீட்டுல வச்சிட்டு நீ ஏம்மா வந்த?? ரூல்ஸ் தெரியாதாம்மா..? சிரியல் பாப்பியே நீயூஸ் பாக்கறது இல்லையோ..? அங்க கொஞ்சம் திரும்பி பாரும்மா உன் ஃபிரண்டு ஒன்னமாதிரியே வந்து பணம் கட்டது..
(என்னா இவரு டூ மச்சா பேசறாரு?? (கவி'க்கு அவங்க மட்டும்தானே பேசனும்,அடுத்தவங்க பேசினா எப்பவும் டூ மச்..!! ) .யாரது என் ஃபிரண்டு..?? ஒன்னியும் பிரியாமல் கவி வேகமா திரும்பி பாத்தாங்க, அங்க ஒரு பொண்ணு இன்னொரு போலிஸ் மாமாவிடம் மொய் எழுதிக்கிட்டு இருந்துச்சி... அதை பாத்தவுடனே..ஆஹா பணம் பாக்காம விடமாட்டங்க போல... சரி அவரு ஒரு முடிவுல இருந்தா நாமலும் ஒரு முடிவுல இருக்கலாம்னு.. டயலாக் டெலிவரி பண்ண ஆரம்பிச்சாங்க..)
கவி : :((((.... ...சார்...சார்... HEL(L)met போட்டா எனக்கு காது கேக்கல சார்ர்ர்ர்.......(மொகத்த ரெம்ப பாவமா வச்சிக்கிட்டு இருந்தாங்க.., நீங்க யாராச்சும் அந்த மூஞ்சிய பாத்திங்க. அய்யோ கவிதா ன்னு அழ ஆரம்பிச்சி இருப்பீங்கன்னா பாருங்களேன்...)...
போலிஸ் மாமா: எ..எ.....என்னது..? (அவருக்கு இப்ப காது கேக்காம போச்சி..)..காது கேக்கலையா.. இது என்னா புது மேட்டரா இருக்கு...??? எந்த காதுமா.?
கவி:- (ஓ இவரு டூ இன் ஒன் போல.. டாக்டர் +போலிஸ் ஸோ..?? ) இரண்டு காதுமே கேக்கல சார்ர்ர்...(நோட் அதே பாவமான மூஞ்சி) HEL(L)met போட்டா பின்னாடி வர வண்டி ஹாரன் அடிச்சா கேக்கல.. முன்னாடி போற வண்டி நிக்கும் போது பிரேக் போட்டா சத்தம் கேக்கல.. போய் போய் இடிச்சி அடிக்கடி ஆக்ஸிடன்ட் ஆகுது சார்.. .அதுக்கு பயந்துதான் HEL(L)met போடறதில்ல சார்ர்ர்....
போலிஸ் மாமா:- தலையை வேகமாக சொறிந்தார்.... (பொடுகு நிறைய இருக்கும் போல) என்னப்பா இது புது கேஸ்'ஸா இருக்கு..ன்னு தூரத்துல இருந்த இன்னொரு மாமாவை கூப்பிட்டாரு.... இங்கப்பாருப்பா.. இவங்களுக்கு HEL(L)met போட்டா காது கேக்கலையாம்.. போட்டும் ட்ரை பண்ணாங்களாம்.. ஆக்சிடன்ட் ஆச்சாம்.. என்ன பண்ணலாம் சொல்லு..
கவி :- முகத்தை இன்னும் கொஞ்சம் பாவமா வச்சிக்கிட்டு... ஆமா சார் நெஜம்தான் சார்.. நெஜமாவே காது கேக்கல சார்...
போலிஸ் மாமா 2 :- ஏம்மா HEL(L)met போடாட்டி கேக்குதா?
கவி:- (ஆஹா கொக்கி போடாறாங்கப்பா..).. ஏதோ கேக்கும் சார்.. ரோடுல வண்டி ஓட்டற அளவுக்கு கேக்கும் சார்..ஆனா..HEL(L)met போட்ட சுத்தமா கேக்கல சார்...
(ரெண்டு பேரும் கொஞ்சம் தள்ளிப்போய் ஏதோ பேசினார்கள்... கவி'யும் காதை நல்லா தூக்கி என்ன பேசறாங்கன்னு கவனிக்க ஆரம்பிச்சாங்க... மாமா 1 :- யோவ் பாவம்யா காதுகேக்காத பொண்ணுபோல விட்டுடலாம்.. ..மாமா 2 :- சரி சரி வுடு.. இதுக்கிட்ட டைம் வேஸ்ட் பண்ணாம அடுத்த ஆள கவனி...)
போலிஸ் மாமா 1 :- சரிம்மா.. நீ கிளம்பு நல்ல டாக்டரா பாரும்மா..HEL(L)met அ போட்டு எங்கையும் ஆக்சிடன்ட் பண்ணிடாதம்மா...
கவி :- சரிங்க சார்ர்ர்ர்...ரொம்ப தாங்ஸ் சார்... (சேம் ஃபேஸ் மெயிண்டனிங்கு....!! ) தூரத்தில் இருந்த போலிஸ் மாமா-2 வை திரும்பி பாத்து சிரிச்சி...(தேவையா???) ரொம்ப தாங்ஸ் சார்...
அடுத்த வினாடி அங்க வண்டி நிக்கல.. கிளம்பினவங்க தான்..வீட்டுல வந்து நின்னு..ஸ் ஸ் ஸ்யப்பா.... ஒரு வழியா காசு கொடுக்காம தப்பிச்சோம்..ன்னு பெருமூச்சி விட்டாங்க..
வீட்டில் :- தன்னுடைய சாமார்த்தியத்தை புள்ளக்கிட்ட சொல்ல.. புள்ள என்ன சொன்னான்னு கேட்டுட்டு நீங்களும் கவி'ய அதே கேள்விய கேட்டுட்டு போங்க..ஓகே..
புள்ள :- அம்மா.. இனிமே..நீ...... இவன் ரூல்ஸ் ஃபோலோ பண்ணல..அவன் ரோட்ல குப்பைக்கொட்டறான்.. இவன் லஞ்சம் வாங்கறான்.. அவன் சாக்கடைய ஒழுங்கா கட்டல.. இவன் மரத்தை வெட்டிட்டான்னு , அவன் ஒழுங்கா சினிமா எடுக்கல..ன்னு வந்து நியாயம் பேசனைன்னு வை...... .. இல்ல இனிமே நீ பேசித்தான்..பாறேன்..!!!
கவி :- டேய்..!! நிஜமாவே எனக்கு காது கேக்கலடா...
புள்ள :- ஹும்...என்கிட்டயேவா... சரி வா டாக்டர் கிட்ட போய் கேக்காத அந்த நொல்ல காதை நோண்டி எடுத்துடலாம்... உனக்கு அது இருந்தா என்ன இல்லன்னா என்ன...??
கவி : (தி எஸ்கேப்பு...........!)
பீட்டர் தாத்ஸ் :- For every beauty there is an eye somewhere to see it. For every truth there is an ear somewhere to hear it. For every love there is a heart somewhere to receive it.”
Labels: அணில் குட்டி 10 Comments
மயலாப்பூரில் மாட்டிக்கிட்டேன்....
நேற்று அலுவல் வேலையாக மயலாப்பூர் செல்ல நேரிட்டது.. ஏன் போனோம் என்றாகிவிட்டது. டிரைவரோ' மேடம் 2 நாட்களாக இந்த பகுதியில் கோயிலை சுற்றியுள்ள சாலைகள் அடைக்கப்பட்டு விட்டன. உள்ளே செல்ல முடியாது, வண்டியை இங்கேயே நிறுத்திவிடுகிறேன், நீங்கள் வேலையை முடித்துவிட்டு ஃபோன் செய்யுங்கள் வருகிறேன் என்றார்.
என்ன கொடுமைப்பா இது, சென்னையில் இருந்தாலும் எல்லா இடங்களும் பழக்கப்படாத நிலையில் அதுவும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போலிஸ், போலிஸ், போலிஸ்.. மக்கள் வண்டிகளுடன் வேறு வேறு பாதைகளுக்கு சென்று முயன்றாலும் போலிசாரால் தடுக்கப்பட்டு திருப்பி விடப்பட்டவாறே இருந்தனர். இப்படி ஒரு கூட்ட நெரிசலான இடத்தில் என்னத்தான் நடக்கிறது இங்கே..என்றுப்பார்த்தால்.. கட்சிக்கூட்டம்.. :))
மக்கள் நடமாட்டம் குறைந்த இடத்தில் அரசு கட்சிக்கூட்டங்களை வைக்கக்கூடாதா? ஒரு வழி, ஒரு வழி என்று வளைந்து வளைந்து வீடு வருவதற்குள்.... நடுராத்திரி ஆகிப்போனது.. இதில் போக்குவரத்து நெரிசலில் பொறுமை இழந்து ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு கொண்டதும் பார்க்கமுடிந்தது.
இன்றைய நாட்களில் தினமும் வேலைக்கு சென்று திரும்புவதே சிரமமாக இருக்கும் போது, இப்படி மக்கள் அதிகமாக புழங்கும் இடத்தில் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு.. மயிலாப்பூர் மக்கள் எப்படி சமாளிக்கிறார்களோ தெரியவில்லை.
நிஜமாகவே மயலாப்பூர் ஏரியா எனக்கு புதிது என்பதால் வழித்தெரியாமல் திக்குமுக்காடி போனேன். கோயிலை தவிர எங்குமே சென்றதில்லை. தோழிக்காக ஒருமுறை முண்டக்கண்ணி அம்மன் கோயில் சென்றேன்.. கேட்டு கேட்டு கண்டுப்பிடித்து போனேனே தவிர இன்னொரு முறை போகச்சொன்னால் திரும்பவும் கேட்டு கேட்டுத்தான் செல்லவேண்டும், அப்படி நெருக்கமான தெருக்கள்..மக்கள் கூட்டம். வாகனங்களில் சாதாரணமான நாட்களில் செல்வதே கடினம். ஒரு நோக்கத்தோடு சென்றதால் அப்போது என்னவோ சிரமம் தெரியவில்லைதான், ஆனால் நேற்று வேண்டாம்ப்பா மயிலாப்பூர்....!!!
அணில் குட்டி அனிதா:- ஆமாண்டா.. அடுத்த "அம்மா" இவிங்கத்தான் இவிங்க எங்க போறாங்கன்னு பாத்து ஊறடங்கு உத்தரவு போட்டு பட்டு விரிப்பு வரவேற்ப்பு வைங்கப்பா... நாட்டுல அவன் அவன் நடக்க இடம் கிடைச்சுதே அதுவே போதும்னு நெனச்சி சந்தோஷப்படறான்.. இவிங்க என்னான்னா...
பீட்டர் தாத்ஸ் :- Before the beginning of great brilliance, there must be chaos. Before a brilliant person begins something great, they must look foolish in the crowd
Labels: சமூகம் 2 Comments
பொன்ஸ் : தோழியா, உடன் பிறந்தவளா..யாரடி நீ பெண்ணே..???
பொன்ஸ் எல்லோரும் அறிந்த ஒரு பதிவர், இவரை கண்டாலே எனக்கு எப்போதும் பிடிக்காது... :))) அல்லது என்னை கண்டாலே அவருக்கு பிடிக்காது.. :)) இதில் எதில் உண்மை என்று எங்களுக்கே தெரியவில்லை. அவருக்கு பரிந்து என்னை திட்டி எழுதிய சில பதிவுகளை நான் படித்திருக்கிறேன். இருவருமே பெண்களுக்காக அதிகமாக பேசும் பதிவர்கள் என்றாலுமே எனக்கும் அவருக்கும் எண்ணங்களில், கருத்துக்களில் நிறைய வேறுபாடுகள் உண்டு. நிறைய நிறைய உண்டு.
பொன்ஸ்' சில மலரும் நினைவுகள். முதல் முதலில் நான் இந்த ப்ளாக் உலகத்திற்கு வந்தபோது பதிவர் பாலா (பாரதி) அவர்கள் பொன்ஸ்' ஐ எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். பொன்ஸ் என்னிடம் முதலில் கேட்ட கேள்வி நான் உங்களுக்கு எப்படி உதவமுடியும் என்று நினைக்கிறீர்கள்?. பெயரை பார்த்து அவர் ஒரு ஆண் என்றே நினைத்தேன். :)) அப்போது எல்லாம் ப்ளாகில் அவர் பெயர் இல்லாத இடமே இருக்காது. எல்லோரும் "பொன்ஸ் அக்கா" என்றுதான் அழைப்பார்கள். எனக்கோ பொறாமையாக இருக்கும் என்ன ஒருவரும் நமக்கு மரியாதை கொடுக்க மாட்டேன் என்கிறார்களே. .எல்லாவற்றிக்கும் இந்த அணிலு தான் காரணம் என்று நினைப்பேன். அதையும் பாலாவிடம் சொல்லி அவர் அக்காவென்று அழைக்க ஆரம்பித்தார்.
பொன்ஸ்' ஸுடன் ஜி-டாக்கில் அதிகமாக பேசியிருக்கிறேன். என்னின் தனிப்பட்ட எண்ணங்களை புரிந்துகொண்டு இருக்கிறார், தனிமனித நேயம் அவரிடம் அதிகம் பார்த்திருக்கிறேன், என் ஆதாங்கங்களை புரிந்து பதில் சொல்லுவார். ஒரு பெண்ணாக என்னால் உங்களை புரிந்து கொள்ள முடிகிறது கவிதா என்பார். ஒரு பிரச்சனை வநத போது "கவிதா நீங்கள் எல்லோரையும் எளிதாக நம்பி விடுகிறீர்கள்", எளிதாக உங்களை ஏமாற்றலாம் !! , அதனால் ஜாக்கரதையாக இருங்கள் என்றார். இது எந்த அளவு உண்மை என்பதை அடிக்கடி இப்போதும் உணருவேன். ஏமாற்றுபவர்கள் இன்னும் இருந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், நானும் ஏமாந்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
பொன்ஸ்'க்கு பிரச்சனை என்ற போது நான் என்ன செய்தேன்..என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன். பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. அமெரிக்காவிலிருந்து என்னுடன் பேசினார், மிக தைரியமாக இருந்தார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் அந்த சூழ்நிலையில் என்ன செய்து இருப்பேன் என்று தெரியாது ஓவர் ரீயாக்ட் செய்து எல்லோரையும் பயமுறித்து ஒருவழி ஆக்கியிருப்பேன்.
அவரிடம் பிடித்ததை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன்.. எனக்கு பிடிக்காத விஷயங்கள் உண்டு அவையும் கருத்துக்களுடன், எண்ணங்களுடன் மட்டுமே நிற்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் பிரச்சனை என்று பலர் நினைத்து வருகிறார்கள் அதனை விளக்கவே இந்த பதிவும். ஒரு பதிவர் சொல்லுவார், "உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உங்கள் உடன் பிறவா சகோதரி ஓடோடி வருகிறார்களே? எவ்வளவு பாசம் அவர்களுக்கு? எங்களை கண்டுக்கொள்ள ஆள் இல்லை" என்பார்.
பலருக்கு பல விஷயங்கள் எளிதில் புரிந்துவிடுவதில்லை.. இப்படி சொல்லி புரியவைத்தால் மட்டுமே உண்டு... on the paper..!! in Black & white....:)))))))))
அவர் இப்போது எங்கு எப்படி இருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை... ஆனால் அவரைப்பற்றி பல சமயங்களில் நான் நினைவுகூறுகிறேன் என்பது மட்டும் நிஜம்...இன்னும் பொன்ஸ்' ஐ போன்று என் நெஞ்சத்தில் சில நண்பர்கள் வந்து போய் கொண்டுத்தான் இருக்கிறார்கள்..... :))
அணில் குட்டி அனிதா:- சரி இப்ப என்னா மேட்டர்...எதுக்கு இப்ப பொன்ஸு அக்காக்கு இத்தன ஐஸ் பொட்டி...???? எனக்கு பிரியல ..மக்கா உங்களுக்கு பிரியுதா? .. பொன்ஸ் யக்கா உனக்காது பிரியுதா பாருக்கா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ப்பா..முடியல இந்த அம்மணியோட ...!!
பீட்டர் தாத்ஸ் :- "The most I can do for my friend is simply to be his friend." -- Henry David Thoreau
Labels: கதம்பம் 20 Comments
எங்க வீட்டு சமையல் : கேழ்வரகு உணவுகள்
கேழ்வரகு என்றாலே தமிழர்களின் உணவு, என்னுடைய ஆயா கேழ்வரகு மாவில் கஞ்சி, கூழ், களி, அடை, புட்டு செய்வார்கள், திருமணம் ஆனப்பிறகு
தோசையும், இட்லியும் செய்ய நானேக்கற்றுக்கொண்டேன். very very delicious healthy food!!
கேழ்வரகு மாவு தயாரிக்கும் முறை : கேழ்வரகு வாங்கி தண்ணீரில் ஊறவைத்து, 10-15 முறையாவது கழுவவேண்டும், பின்பு சில காசுகளை (1 ரூ, 50 பைசா நாணயங்கள்) போட்டு அதில் கலந்துள்ள கல்நீக்க அரிக்கவேண்டும். இந்த காசுகள் கேழ்வரகில் கலந்து இருக்கும் கற்கலை தனியாக எளிதில் பிரிக்க உதவும். நன்கு தண்ணீரை வடிக்கட்டி வெயிலில் காயவைத்து மிஷினில் கொடுத்து நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்
கேழ்வரகு அடை:-
தேவையான பொருட்கள் :-
கேழ்வரகு மாவு : 2 கப்
வெங்காயம் : பெரியது 1
பச்சைமிளகாய்: 2
முருங்கைகீரை : 1 கப் (ஆய்ந்து வைத்துக்கொள்ளவும்)
உப்பு: தேவைக்கேற்ப
எண்ணெய்:- தேவைக்கேற்ப
செய்முறை:- வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும், நடுவே பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்க்கவும் கடைசியாக கீரையை போட்டு கரண்டியை திருப்பி பிடித்து கரண்டிக்காம்பால் கீரையை வதக்கவும். இதனால் கீரை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் எளிதாக வதக்கவரும்.
வதங்கியவுடன் இதை அப்படியே கேழ்வரகு மாவில் கொட்டி, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். தோசை கல் வைத்து, ஒரு தட்டின் மீது ஈரத்துணியை நன்கு பிழிந்து போட்டு இந்த மாவை உருண்டைகளாக நடுவில் வைத்து அடைகளாக தட்டவும். தட்டிய அடைகளை அப்படியே தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் இறக்கவும். சூடான சூப்பர் கேப்பம் அடை ரெடி..!!
கேழ்வரகு தோசை & இட்லி :
தேவையானப்பொருட்கள் :
கேழ்வரகு மாவு 2 கப்
உளுந்து : 1/2 கப்
வெந்தயம் : 1/4 ஸ்பூன்
உப்பு : தேவைக்கேற்ப
செய்முறை : உளுந்தை வெந்தயம் சேர்த்து 2-3 மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுப்போல கிரைண்டரில் அரைத்து, அத்துடன் அடைமாவு பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டிமுட்டி இல்லாமல் கேழ்வரகை கரைத்து ஊற்றி உப்புப்போட்டு கரைத்து வைத்துவிடவும். அடுத்தநாள் காலையில் சாதாரண தோசை, இட்லி செய்முறையில் செய்யலாம். தோசைக்கு தண்ணீர் கொஞ்சம் கூடுதலாக ஊற்றி கரைத்து ஊற்றலாம்.
இதற்கு தொட்டுக்குள்ள பொட்டுக்கடலை சட்னி, தக்காளி சட்னி நன்றாக இருக்கும்.
கேழ்வரகு புட்டு:-
தேவையான பொருட்கள் :-
கேழ்வரகு மாவு:-
உப்பு: 3 சிட்டிகை
சர்க்கரை :- தேவையான அளவு
தேங்காய் துருவல் :- தேவையான அளவு
செய்முறை:- இது கொஞ்சம் சிரமம் நேரம் பிடிக்கும். கேழ்வரகு மாவில் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும். இட்லி தட்டில் துணிப்போட்டு, பின் சல்லடையை அதன்மேல் பிடித்து இந்த மாவை அதில் வைத்து தேய்க்கவேண்டும். மாவு கட்டி கட்டியாக ஆகாமல் மெல்லியதாக விழும். அதை அப்படியே இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்து தட்டில் கொட்டி, தேங்காய் துறுவல், சர்க்கரை போட்டு கலக்கி பரிமாறவும்.
இதில் சலிப்பது கொஞ்சம் நேரம் பிடிக்கும், அப்படி செய்யாமல் நேராக தண்ணீர் விட்டு பிசைந்து வேகவைத்தல் கட்டி கட்டியாக புட்டு நன்றாக வராது.
அணில் குட்டி அனிதா:- ம்ம்க்கும்!!.. யாரும் இவிங்க வீட்டை காண்டாக்ட் பண்ண மாட்டீங்கன்னு, தைரியம்.. ஒரே ஒரு தரம் வூட்டுக்கு ஃபோன போட்டு அம்மணி புள்ளக்கிட்ட இந்த கேப்ப அடையை பத்திகேட்டுப் பாருங்க.. அவரு நீங்க இதப்பத்தி கேட்டதுக்கே உங்களுக்கு ஊதுவாரு சங்கு...!! .கவி பாவம்..ஒரு வாட்டிக்கூட புள்ள சாப்பிடாத அடைய முக்கி முக்கி முடியாம இவிங்களே சாப்பிடுவாங்க... !!
பீட்டர் தாத்ஸ் :- Make [food] simple and let things taste of what they are.
Labels: பத்மா'ஸ் கிட்ச்சன் 10 Comments
அனுராதா அம்மாவின் பிடிவாதமும், மறைவும்....
அவர்கள் மறைவுக்கு பிறகு அவர் உயிருடன் இருக்கும் போதே என் கோபத்தை காட்டி இருக்கலாமே என்று தோன்றியது. கோபம் அவர் மேல் இருந்ததை விட அவர் உறவினர்கள் மேல் தான் அதிகமாக இருந்தது.
காரணம், சென்னையில் உள்ள கான்சர் மருத்துவமனைக்கு பல வருடங்களுக்கு முன் செல்ல நேரிட்டது, அங்கு நான் பார்த்த பலர் எல்லாவற்றையுமே அந்த நோயால் இழந்து இருந்ததது அவர்கள் முகத்திலும் உடல் நிலையிலும் தெரியவந்தது. கடவுளே இப்படிப்பட்ட கொடுமையான நோயை எனக்கு கொடுத்துவிடாதே என்று அங்கிருந்த ஒவ்வொரு நொடியும் வேண்டிக்கொண்டேன். நோயாளிகளுக்கு லேசர் முறையில் தரப்பட்ட சிகிச்சையால் அவர்கள் முகங்களில் கருப்பு அல்லது கரு நீல கலர்களில் கோடுகள். குறிப்பாக வெற்றிலை பாக்கு போடுவதால் வரும் கான்சர் அதிகமானதாக இருந்தது, அதுவும் நான் அங்கு பார்த்தவரையில் ஆந்திராவினை சேர்ந்த அல்லது தெலுங்கு பேசும் மக்கள் அதிகமாக இருந்தார்கள். தலையில் முடி எல்லாம் கொட்டிபோய் மொட்டைத்தலையாகவும், உடல் மெலிந்து ஒற்றை நாடி உருவமாகவும் நிறைய பெண்களை பார்க்க நேரிட்டது.
இப்படி 2-3 நாள் தொடர்ந்து நான் அங்கு சென்றதற்கே அந்த நோயின் பாதிப்பும் அதனால் அவர்கள் படும் அவஸ்த்தையையும் தெரிந்துக்கொண்டேன். ஆனால் அனுராதா அம்மாவின் உடன் இருந்த குடும்பத்தினர் எப்படி அவர் படும் அவஸ்த்தையைப் பார்த்துக்கொண்டு அவரின் பிடிவாததிற்கு துணை போனார்கள்? கடைசி வரை அவர் பிடிவாதத்துடன் இருந்தாரா என தெரியவில்லை. ஆனால் அவரின் பிடிவாதத்தை அவர் உறவினர்கள் நினைத்திருந்தால் பாசத்தால் கண்டிப்பாக கரைத்திருக்கலாம்.
இதற்கு முன்னர் கூட மார்பகங்கள் இல்லா பெண்ணின் மன உளைச்சல் என்ற பதிவில் பெண்கள் மார்பகங்களை இழந்தால் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று எழுதியிருந்தேன். ஆனால் அனுராதா அம்மா ஒன்றும் திருமணம் ஆகாத அல்லது திருமணம் ஆகி வாழ்க்கையை அனுபவிக்காதவர்கள் இல்லை. தன் வாழ்க்க்கையில் எல்லா கடமைகளையும் முடித்தவர்கள். அவரின் கணவர் மட்டுமே போதும் அவரின் மனதை மாற்றி அறுவை சிகிச்சைக்கு அவரை சம்மதிக்க வைத்திருக்கலாம்.
12- 15 வயது நிரம்பிய, 2 குழந்தைகளை பெற்ற தாய் தன் கற்பப்பையை கூட பிரச்சனை என்றால் எடுத்துவிடலாம் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். மார்பகங்கள் என்பது மிக சாதாரணமான பெண்மையின் அடையாளம் என்றே நான் சொல்லுவேன். குழந்தைக்கு பாலூட்டமட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் பெண்ணிற்க்கு தேவையில்லாத ஒரு உறுப்பு, ஆணுக்கு மட்டும் ஆசையை தீர்க்கும் உறுப்பு. மேலும் என்னுடைய பழைய பதிவில் சொன்னது போன்று செயற்க்கை முறையில் மார்பகங்கள் இருப்பதாக பெண்கள் காட்டிக்கொள்ளலாம். அதற்கான நிறைய உள்ளாடைகள் இப்போது வந்துவிட்டன. ஏன் சினிமா நடிகைகளும், டிவி காம்பயர்களும் சாதாரணமாக அவற்றை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டனர்.
அழகுக்கும் பெண்மைக்கும் சம்மந்தம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அசிங்கமான உடம்பில் எந்த அழுகுமே இல்லாத ஒரு பெண் குழந்தைகள் பெற்றவளாகவும், சிறந்த மனைவியாகவும், சிறந்த தாயாகவும் இருக்கமுடியும், இருக்கிறார்கள். எத்தனை அழகான பெண்கள் (இந்தகாலக்கட்டதில்) தான் பெற்ற குழந்தைக்கு உயிர்பால் கொடுக்கிறார்கள்?.. எனக்கு தெரிந்து இப்போது பெண்களுக்கு அதற்குக்கூட மருந்து மாத்திரை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். மருந்து மாத்திரைகளை சாப்பிட்டுமே தாய்பாலா? வரவில்லையே! என்று சொல்லுபவர்கள் சதவிகிதம் அதிகமே. அவர்களே கொடுக்க ஆசைப்பட்டாலும் தாய்ப்பால் கிடைக்காமல் பிறந்த 1, 2 நாள் ஆன குழந்தைகள் புட்டி பால் குடிக்கும் மோசமான/கொடுமையான நிலைமைத்தான் இருக்கிறது. இதனுடைய காரணங்களைக்கூட தனிபதிவிடலாம்.
இப்படி இருக்க, அனுராதா அம்மாவோ எல்லா கடமைகளையும் முடித்த வயது முதிர்ந்த ஒரு பெண், அவர்களை கட்டாயப்படுத்தியாவது முதலிலேயே அறுவைசிகிச்சை செய்து இருக்கலாம். எப்படியும் இறப்பு ஆனால் எதற்கு இப்படி கஷ்டப்பட்டு வருத்திக்கொண்டு இறக்கவேண்டும்?. எல்லாம் விதி என்று நினைத்து விட்டுவிடமுடியாமல்... அனுராதா அம்மாவிற்காக இந்த பதிவு...
அணில் குட்டி அனிதா:- கவி நீங்க ஏன் கேன்சர் ஆஸ்பித்திரி போனீங்கன்னு சொல்லவே இல்ல........எதுக்கு யாருக்காவது அட்வைஸ் பண்ண போய் இருப்பீங்க. .சரி சரி எனக்கு தெரியாதா? நீங்க கொடுத்த அட்வைஸ் ல அவங்க கேன்சர் எவ்ளோ பெட்டர்னு நெனச்சி இருப்பாங்க... :(((
பீட்டர் தாத்ஸ் :-Cancer is a word, not a sentence. ~John Diamond
Labels: சமூகம் 18 Comments