பெண்ணிற்கு மார்பகங்கள், குழந்தைக்கு உயிர்பாலூட்ட இறைவன் கொடுத்த அற்புதம் என்பதை தவிற அழகு, கவர்ச்சி என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தானே?. மார்பக புற்று நோய் மற்றும் கட்டி காரணங்களுக்காக பெண்கள் சிலர் மார்பகங்களை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். திருமணத்திற்கு பிறகு இது நிகழ்ந்தால் அவசியம் என புரிந்து கொள்ளும் ஆண்கள், திருமணமாகத பெண்களை புரிந்து கொள்வது இல்லை, இப்பெண்கள் ஆண்களால் ஒதுக்கபடுவது வேதனையாக இருக்கிறது.
மற்றவர்களை போன்று நாம் இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மை ஒருபுறமும் , ஆண்களால் ஒதுக்கபடுவது மற்றொரு புறமும் எத்தனை மன அழுத்தத்தையும், பாரத்தையும் கொடுக்கிறது. செயற்கையாக இதற்காக தயாரிக்கப்படும் உள்ளாடைகள் அவர்களின் அழகை வேண்டுமானால் வெளிபார்வைக்கு சரிசெய்யலாம். ஆனால் உள்ளுணர்வுகளையும், வேதனையையும் சரிசெய்ய முடியுமா..?.
அப்படியே இந்த பெண்கள் திருமண மார்க்கெட்டில் விலைபோக வேண்டும் என்றால், ஏதோ ஒரு விதத்தில் குறையுடைய ஒருவர், மனைவி இழந்த ஆண்கள், தீராத வியாதிக்காரர், அல்லது வயதான ஒரு கிழவருக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கை படவேண்டுயுள்ளது. நல்ல படிப்பு, வேலை, நல்ல உடல் நலத்துடன் இருக்கும் எந்த ஆடவரும் இந்த பெண்களை திருமணம் செய்து கொள்ள முன் வருவது இல்லை. இப்படி ஆண்களினால் நிராகரிக்கபடும் பெண்ணின் மன நிலை எப்படி இருக்கும்?. எத்தனை வேதனைப்படும்? தாழ்வுமனப்பான்மை அவர்களை தினம் தினம் கொல்லாதா?.. திருமணமே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ள படுகிறார்கள்.
சமீபத்தில் ஒரு பெண்கள் பத்திரிக்கையில், இந்த பிரச்சனையை மைய கருவாக கொண்ட திரைப்படத்தின் (கோவா திரைப்பட விழாவில் வெளியிட்டது) கதையை படித்தபோது மிகவும் உருக்கமாக இருந்தது. அந்த பெண் ஒரு ஆடவனால் எத்தனை அவமானத்திற்க்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகிறாள் என்பதை மிக அழுத்தமாக, யதார்த்தமான உணர்வுகளின் மூலம் சொல்லப்பட்டிருந்தது.
உணவு விடுதியில் வேலை செய்து கொண்டு,ஆடவர்களிடமிருந்து அரவே ஒதுங்கி இருக்கும் அந்த பெண், நடன அறையில் ஒரு ஆடவனால் வலிய நடனமாட இழுத்து செல்லப்படிகிறாள். விலகி போக நினைத்தாலும், விடாது அவளை அனைத்துக்கொண்டு நடனமாடுகிறான் அவன். முதன் முதலாக ஒரு ஆடவனின் நெருக்கம், அவனின் முத்தம் எல்லாம் இந்த பெண்ணின் பெண்மையை தூண்டிவிட, அவளது அறைக்கு அவனை அழைத்து செல்கிறாள், அவனின் அவசரத்தை தடுத்து தன் குறையை சொல்ல நினைக்கிறாள். ஆனால் அவனோ ஆவேசத்துடன், அவளை படுக்கையில் தள்ளி அனைக்கிறான், அவள் அதற்கு மேல் அவனை விடாது, தனக்கு புற்று நோய் காரணாமாக மார்பகங்கள் அகற்றுபட்டுவிட்டது என்று சொல்கிறாள்..இதை கேட்ட அடுத்த நொடி, அவளிடம் சாரி என்று, அருவருப்போடு சொல்லிவிட்டு, வேகமாக விலகும் அவன், ஏன் இதனை நான் உன்னை முத்தமிடுவதற்கு முன்பே சொல்லி தொலைக்காமல் விட்டாய், என்று திட்டிவிட்டு செல்கிறான்...இவளோ அவனிடம் நானாக உன்னிடம் வரவில்லை நீதானே என்னை அழைத்தாய், என்னை தவிக்க விட்டு விட்டு செல்லாதே என கெஞ்சுகிறாள், அழுகிறாள், பின்னால் துரத்தி செல்கிறாள். ஏதோ பிரச்சனை என்று நினைக்கும் அவளின் தோழிகள் அவனை வளைத்து பிடித்து பாய்லர் அறையில் அடைக்கிறார்கள். அவன் அதன் பிறகு எத்தனை கெஞ்சியும் விடாமல் உள்ளேயே அடைத்து வைக்கபடுகிறான். சிறைக்கொடுமை, பசி, தண்ணீர் கூட கிடைக்காத நிலையில் 2 நாட்களுக்கு மேல் அவனால் தாங்க முடியாத அவன், அவளுடன் சேர்ந்து தன் வாழ்நாளை கழிப்பதாக சத்தியம் செய்கிறான், ஆனால் அவனால் அவமானபட்ட அந்த பெண் அவனின் அந்த வார்த்தைக்கு அடிபனியாமல் இன்னமும் 2 நாள் இருக்கட்டும் அப்போது தான் புத்திவரும் என விட்டு விடுகிறாள். ஆனால் அவனோ தொடர்ந்து அன்பே ஆருயிரே என்று அன்பொழக கதர, அவள் இலகி, இப்படி ஒரு அன்பான வாழ்க்கை தனக்கு கிடைக்க போவதை நினைத்து சந்தோஷமும் கொள்கிறாள், அழகாக ஆடை, அலங்காரம் செய்து கொண்டு 6 வது நாள் அவனை திறந்துவிட செல்கிறாள். ஆனால் அவனை சரியான நேரத்திற்கு திறந்து விடாததால் பசியாலும், பாய்லர் சூடு தாங்காமலும் இறந்து போய் கிடக்கிறான். இறுதியில் இறந்த அவனின் உடலை மடியில் கிடத்திக்கொண்டு எனக்கு வாழ்வளிக்கிறேன் என்றாயே, வா போகலாம்..என்று அழுது புலம்புகிறாள்..
திரைபடம்: ஹெட் ஜூயிதே நாடு: நெதர்லாந்து இயக்குனர்:- மார்டின் கூல்ஹோவன்
இந்த பெண்களின் உணர்வுகளையும், அவர்களின் மன போராட்டாங்களையும், தாழ்வு மனப்பான்மையும் ஆண்களால் புரிந்து கொள்ள முடியுமா?..இப்படியுள்ள பெண்களை காமக்கண் கொண்டு பார்க்காமல், காதலுடன் பார்க்க முடியுமா?. உடம்பை தாண்டி அவர்களுக்கும் ஒரு மனம், உணர்வுகள் இருக்கிறது என்பதை உணரமுடியுமா?..
அணில் குட்டி அனிதா:- என்னங்க..? கவிதா நிறைய கேள்வி கேட்டு இருக்காங்க.. எப்பவும் போல நீங்களும் பதில் சொல்றேன் பேர்விழின்னு திட்டி தீருங்க.. என்னவோ பொம்பளைங்களுக்கு தான் மனசு இருக்காமாம், ஆம்பளைங்களுக்கு இல்லையாமாம்..
நாம எல்லாம் சிம்ரன் ரேஞ்சுக்கு பொண்ணு பார்ப்போம்.. நாம தொட்டா ஒட்டிக்கற கலர்ல இருப்போம்...ஆனா..நமக்கு கண் கூசர அளவுக்கு கலரா பொண்ணு பார்ப்போம்... கருப்பா, குண்டா, குட்டையா, பல் சரியா இல்லைனா, எல்லாத்தையும் விட தலை முடி நீட்டா இல்லைனா (தலமுடிகூட த்தானே நாம வாழ போறோம்) பெண்ணை பிடிக்கலைன்னு சொல்லிடுவோம்........அழகு மட்டுமா..நல்லா படிச்சிருக்கனும், வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்கனும்..........hold hold..நான் என்ன கவிதாவுக்கு support பண்ற மாதிரி இருக்கு?!!
தப்பாச்சே...நான் எப்பவும் ஆம்பளைங்களுக்கு தாங்க support... இந்த மாதிரி breast இல்லாத பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்படிங்க..எப்படிங்க..நினைச்சுக்கூட பார்க்க முடியல..உவ்வே...! ஏதாவது நடக்கற விஷயமா கவிதாவ பேச சொல்லுங்க....அம்மனிய நம்மால direct ஆ திட்ட முடியல... வேற யாராவது திட்டினா.. நமக்கு சந்தோஷம் தாங்காதுங்கோ....! ம்ம். ம்ம்..proceed........
மார்பகங்கள் இல்லா பெண்ணின் மன உளைச்சல்...
Posted by : கவிதா | Kavitha
on 11:53
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
81 - பார்வையிட்டவர்கள்:
கவிதா, பதிவு நல்லா இருக்கு.. அந்தப் புத்தகத்தை நானும் படித்தேன்.. விதவை மறுமணம், விவாகரத்தானவர் மறுமணம் எல்லாம் வந்த மாதிரி இதுவும் நம்ம ஊருக்கு வருவதற்கு அதிக நாள் ஆகாதுன்னு நினைக்கிறேன்..
திருமணம் ஆவதற்கு முன்பே மார்பகப் புற்று நோயால் தாக்கப் பட்டவங்க நம்ம ஊர்லயும் இருக்காங்களா?
எதுக்கு கேக்கறேன்னா, இந்தியர்களின் உணவுப் பழக்கம், தட்பவெப்ப நிலை, மாதிரி சில காரணங்களால அந்த மாதிரி பிரச்சினைகள் அத்தனை சீக்கிரம் வருவதில்லை என்பது என் எண்ணம்...
அப்புறம் நீங்க நம்ம சங்கக் கூட்டத்துக்கு வந்து தான் ஆகணும்னு நினைக்கிறேன்.. அது "உழைச்சல்" இல்லை.. உளைச்சல் :)
பொன்ஸ், நன்றி, நம்ம நாட்டுல நிறையபேர் இருக்காங்க..வெளியல தெரியறது இல்ல... எனக்கு தெரிந்து இருக்கிறார்கள், என்னால் விளக்கமாக சொல்லமுடியாத நிலை.
அடுத்து உங்க சங்கத்துல உறிப்பினரா ஆகறத பற்றி இல்லை..முழுநேர சேவை செய்ய முடியுமான்னு தான்னு தெரியல....
நீங்கள் சொல்வது எல்லாம் மனமொத்த இருவர் மற்றவர் உடற்குறைகளை காணமாட்டார்/ காணக் கூடாது என்ற வகையில் சரி. கதையில் வருவது போல் காமத்திற்காக இணைவோர் கவர்ச்சிக்குத் தானே முக்கியத்துவம் கொடுப்பர் ?
அனிதா:பெற்றோர் ஏற்பாடு செய்யும் மணங்களில், பெண்களும் தமக்கு வருபவரை கட்டை, குட்டை கருப்பு என்று நிராகரிப்பதும் நடக்கிறது.
யக்கா பொன்ஸு...என்ன புச்சா ஏதோ படம்லா போட்டுகிறீங்க..தங்கம் கொட்டோ கொட்டோன்னு கொட்டுது.. அப்படியே அந்த பொன்' எல்லாம் கொட்டறத்துக்கு..கவிதா வூட்டு பக்கம் தலக்காட்டறது.... வர வர நம்மல கண்டுகறதே இல்லே..வரதென்ன..போறதேன்ன..கழகம் ஆரம்பிச்சதிலேந்தே நீங்க ஒன்னும் சரியில்ல...
ச்சும்மா இந்த கதையெல்லாம் இங்க விடாதீங்க கவிதா...
//அப்படியே இந்த பெண்கள் திருமண மார்க்கெட்டில் விலைபோக வேண்டும் என்றால், ஏதோ ஒரு விதத்தில் குறையுடைய ஒருவர், மனைவி இழந்த ஆண்கள், தீராத வியாதிக்காரர், அல்லது வயதான ஒரு கிழவருக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கை படவேண்டுயுள்ளது. நல்ல படிப்பு, வேலை, நல்ல உடல் நலத்துடன் இருக்கும் எந்த ஆடவரும் இந்த பெண்களை திருமணம் செய்து கொள்ள முன் வருவது இல்லை. // ஏன் முன்வரவேண்டும். இதே பிரச்சனையை ஆண்களும் தான் எதிர்கொள்கிறோம்.
ஒரு கையோ கலோ இல்லாத ஆணை, எந்த பிரச்சனையும் இல்லாத ஒரு பெண் ஏற்றுக்கொள்வாளா? ஏன் அவ்வளவு போகிறீர்கள். business செய்கிற ஒரு பையனை மணக்க எவ்வளவு யோசிக்கிறார்கள் தெரியுமா? கேட்டால் job தான் safe-ஆம்! அவ்வளவு தெளிவானவர்கள் நம்ம பெண்கள்.
திருமணத்திற்கு பிறகு என்பது வேறு. அவள் என் மனைவியான பின் அவளின் எல்லா பிரச்சனைகளிளும் எனக்கு பங்கு உண்டு. ஆனால் திருமணத்திற்கு முன் அப்படியொரு பெண்ணை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை. அது அவரவர் மனநிலையை பொருத்தது. ஏற்றுக்கொள்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என் எதிர்பார்ப்பது தவறு.
நீங்கள் சொல்வது போன்று ஒரு பெண்ணை நான் மணந்துகொள்ள இன்னொரு பெண்ணான எனது தாயோ அல்லது சகோதரியோ கூட விரும்பமாட்டார்கள். இதுதான் உண்மை.
//இப்படி ஆண்களினால் நிராகரிக்கபடும் பெண்ணின் மன நிலை எப்படி இருக்கும்?. எத்தனை வேதனைப்படும்? தாழ்வுமனப்பான்மை அவர்களை தினம் தினம் கொல்லாதா?.. திருமணமே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ள படுகிறார்கள். // இதேபோல் சின்ன சின்ன விஷயங்களுக்காக பெண்களால் நிராகரிக்கப்படும் ஆண்களும் இருக்கிறார்கள்.
பொதுவாகவே ஏதாவது ஒரு குறை இருக்கிற ஆணோ அல்லது பெண்ணோ நிராகரிக்கப்படுவது இயல்பு. அது நிராகரிப்பவர்களின் குற்றமல்ல. வேதனைப்படுகிறார்களே என்கிற ஒரே காரணத்துக்காகவெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் நீங்கள் சொன்ன கதையில் அந்த பெண் அவனை வர்புறுத்துவதிலெல்லாம் எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது.
//நீங்கள் சொல்வது எல்லாம் மனமொத்த இருவர் மற்றவர் உடற்குறைகளை காணமாட்டார்/ காணக் கூடாது என்ற வகையில் சரி. கதையில் வருவது போல் காமத்திற்காக இணைவோர் கவர்ச்சிக்குத் தானே முக்கியத்துவம் கொடுப்பர் ?//
நன்றி, மணியன், கதை சொல்லப்பட்டது, ஒரு பெண்ணின் உணர்வுகளை ஆண்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக..காமம் என்ற உணர்வுக்கூட பெண்களுக்கும் பொருந்தும் இல்லையா?.. ஆண்கள் குறிப்பாக அந்த கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாமே என்பது தான் என் கருத்து.
//அனிதா:பெற்றோர் ஏற்பாடு செய்யும் மணங்களில், பெண்களும் தமக்கு வருபவரை கட்டை, குட்டை கருப்பு என்று நிராகரிப்பதும் நடக்கிறது. //
மணி அண்ணாச்சி, பெண்கள் அப்படி நிராகரிப்பது மிக மிக குறைவு..ஆணிடம் பெண்கள் எதிர்பார்ப்பது நிரந்திர வேலை (வாழ்க்கையை பிரச்சனை இன்றி செல்ல) மட்டுமே..
Lali, thanks, please you can write in English..let me try to understand..it ..
Lali, thanks, please leave your comments in English no problem..
//ஆணிடம் பெண்கள் எதிர்பார்ப்பது நிரந்திர வேலை (வாழ்க்கையை பிரச்சனை இன்றி செல்ல) மட்டுமே.. //
உங்கள் தேவைக்கு நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். ஆண்களின் தேவைக்கு அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதைத்தான் எதிர்பார்க்கவேண்டும் என நீங்கள் சொல்வது சரியல்ல.
உங்கள் பையனுக்கு நீங்கள் திருமணம் செய்து வைக்கும்பொழுது பார்க்கலாம். நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று.
கவிதா எப்படி சொல்றதுன்னு தெரியலை...பதிவை படிச்சதும் மனசு ரொம்ப சங்கடமா போ ச்சுங்க, சொன்னது திரைப்படமாக இருந்தாலும் கூட, நிகழும் வாய்ப்புகள் அதிகமிருப்பதால்!
அருள்குமார், பொண்ணுபார்க்கும்போது ரொம்ப நொ ந்துபோயிருப்பாரு போல இருக்கு?
// நீங்கள் சொல்வது போன்று ஒரு பெண்ணை நான் மணந்துகொள்ள இன்னொரு பெண்ணான எனது தாயோ அல்லது சகோதரியோ கூட விரும்பமாட்டார்கள். இதுதான் உண்மை.
//
உண்மைதான், யாராவது மறுக்கமுடியுமா? அப்படியே பையன் அந்தப்பெண்ணைத்தான் கல்யாணம் செய்துக்கொள்வேன் என்று பிடிவாதம் செய்தால் உற்றார் உறவினர் என்ன சொல்வார்கள், கிறுக்குபய அப்படின்னு தானே?
காதல் என்பது இவை எல்லாவற்றுக்கும் ஒரு த ଡ଼'அ3ர்வாக அமையும் என்பது என் எண்ணம்.
//அடுத்து உங்க சங்கத்துல உறிப்பினரா ஆகறத பற்றி இல்லை..முழுநேர சேவை செய்ய முடியுமான்னு தான்னு தெரியல.... //
கவிதா, அதுக்கு அப்படி அர்த்தமில்லை.. தமிழ்ப் பாடம் நடத்தும் போது வந்துட்டு போங்கன்னு சொல்ல வந்தேன்.. உழைத்தல் - உளைதல்= இதுக்காக சொன்னது அது..
அணிலு, உன்னைக் கவனிக்காமலா. கவிதா அக்கா ரொம்ப சூடா இருக்காங்க போலிருக்கு.. நீ ரெண்டு கவிஜ பாடினா "பார்வைகள்"ஆவது கொஞ்சம் கூலாகும் இல்ல?!!
//பொதுவாகவே ஏதாவது ஒரு குறை இருக்கிற ஆணோ அல்லது பெண்ணோ நிராகரிக்கப்படுவது இயல்பு. அது நிராகரிப்பவர்களின் குற்றமல்ல. //
then????
கவிதா எப்படி சொல்றதுன்னு தெரியலை...பதிவை படிச்சதும் மனசு ரொம்ப சங்கடமா போ ச்சுங்க, சொன்னது திரைப்படமாக இருந்தாலும் கூட, நிகழும் வாய்ப்புகள் அதிகமிருப்பதால்!
அருள்குமார், பொண்ணுபார்க்கும்போது ரொம்ப நொ ந்துபோயிருப்பாரு போல இருக்கு?
// நீங்கள் சொல்வது போன்று ஒரு பெண்ணை நான் மணந்துகொள்ள இன்னொரு பெண்ணான எனது தாயோ அல்லது சகோதரியோ கூட விரும்பமாட்டார்கள். இதுதான் உண்மை.
//
உண்மைதான், யாராவது மறுக்கமுடியுமா? அப்படியே பையன் அந்தப்பெண்ணைத்தான் கல்யாணம் செய்துக்கொள்வேன் என்று பிடிவாதம் செய்தால் உற்றார் உறவினர் என்ன சொல்வார்கள், கிறுக்குபய அப்படின்னு தானே?
காதல் என்பது இவை எல்லாவற்றுக்கும் ஒரு த ଡ଼'அ3ர்வாக அமையும் என்பது என் எண்ணம்.
அருள், நன்றி, உங்கள மாதிரி 4 பேரு, இல்ல நீங்க ஒருத்தரே போதும், யாராவது நல்ல மனசோட கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லறவங்கள கூட உங்க கருத்துக்கள் மாற்றிடும். உடம்பு ஒன்றே வாழ்க்கை இல்லைங்கறத நீங்க புரிஞ்சிக்கனும்.. அதுவும் ஒரு அங்கம் அவ்வளவுதான்..
//நீங்கள் சொல்வது போன்று ஒரு பெண்ணை நான் மணந்துகொள்ள இன்னொரு பெண்ணான எனது தாயோ அல்லது சகோதரியோ கூட விரும்பமாட்டார்கள். இதுதான்//
உண்மை, உங்களின் வாழ்க்கையை உங்களின் அம்மா, சகோதரிதான் தீர்மானிக்கிறார்கள் என்ற பட்சத்தில், முற்றிலும் உண்மை. உங்களை புரிந்து, உங்களின் மேல் அன்பு கொண்ட அவர்கள், நிச்சயம் தடுப்பார்கள் என எனக்கு தோன்றவில்லை
//உங்கள் தேவைக்கு நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். ஆண்களின் தேவைக்கு அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதைத்தான் எதிர்பார்க்கவேண்டும் என நீங்கள் சொல்வது சரியல்ல//
நல்ல வேலை என்பது, பெண்ணிற்கு மட்டும் அல்ல, ஒரு ஆணின் வாழ்க்கைக்கும் அது பொருந்தும். உத்தியோகம், புருஷ லட்சணம்.
//உங்கள் பையனுக்கு நீங்கள் திருமணம் செய்து வைக்கும்பொழுது பார்க்கலாம். நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று. //
அதற்கு இன்னும் அதிக வருடங்கள் ஆகும், என் மகன் விருப்பப்படும் எந்த பெண்ணையும் திருமணம் செய்து வைக்க என் மனதை இப்போதே பக்குவ படுத்திக்கொண்டேன். என் விருப்பத்தை விடவும், அவன் விருப்பம் எனக்கு பெரிது, ஆனால், நான் கட்டாயபடுத்தி அவனுக்கு யாரையும் திருமணம் செய்து வைக்கக்கூடாது என்பதிலும் முடிவாக உள்ளேன்
நன்றி நாகு, அருள் மிகவும் பாதிக்கபட்டதாக தான் எனக்கும் தோணுது.. தனியா ஒரு பதிப்பு போட்டுட வேண்டியது தான்.
நீங்கள் சொல்லியது போன்று காதலால் மட்டுமே..தீர்வுகாண முடியும்.
//பொதுவாகவே ஏதாவது ஒரு குறை இருக்கிற ஆணோ அல்லது பெண்ணோ நிராகரிக்கப்படுவது இயல்பு. அது நிராகரிப்பவர்களின் குற்றமல்ல. //
//then???? //
நன்றி, மணிகண்டன். இயல்புன்னு விட்டுட சொல்றிங்களா?.. எப்படி?.. குறை இருக்கறவங்களும் எல்லா உணர்வுகளும் உள்ள மனிதர்கள் தானே..
///kavitha:
அதற்கு இன்னும் அதிக வருடங்கள் ஆகும், என் மகன் விருப்பப்படும் எந்த பெண்ணையும் திருமணம் செய்து வைக்க என் மனதை இப்போதே பக்குவ படுத்திக்கொண்டேன். என் விருப்பத்தை விடவும், அவன் விருப்பம் எனக்கு பெரிது, ஆனால், நான் கட்டாயபடுத்தி அவனுக்கு யாரையும் திருமணம் செய்து வைக்கக்கூடாது என்பதிலும் முடிவாக உள்ளேன்///
பாதிப்பின் விளைவோ(குடும்பத்துல குழப்பம் பண்ண வந்துட்டாண்டான்னு நீங்க திட்றது காதில் விழுது)..
காதல் திருமணம் தீர்வாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஆனால் இதெல்லாம் ஒரு குறையா? Silicon இருக்குல்ல.
உடனே என்னை இப்படி கேட்காதீர்கள்
நீ திருமணம் செய்து கொள்வாயா என்று?
நான் Engaged..
நன்றி தரண், நான் எழுதும் எல்லாமே என்னால் முடியுமா (என்னை சார்தவர்களாலும்) என்று யோசித்து, முடியும் என்றால் மட்டுமே எழுதுகிறேன். என் குடும்பம் பற்றி பேசுவதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை... உங்கள் திருமணத்திற்கு எங்களின் வாழ்த்துக்கள்
///திருமணம் ஆவதற்கு முன்பே மார்பகப் புற்று நோயால் தாக்கப் பட்டவங்க நம்ம ஊர்லயும் இருக்காங்களா?
எதுக்கு கேக்கறேன்னா, இந்தியர்களின் உணவுப் பழக்கம், தட்பவெப்ப நிலை, மாதிரி சில காரணங்களால அந்த மாதிரி பிரச்சினைகள் அத்தனை சீக்கிரம் வருவதில்லை என்பது என் எண்ணம்... ///
Pons, from awareness perepective Cancer does not have any affinity to any particular race/sex/lifestyle.
நமக்கு எல்லாம் கேன்சர் வராது என்பதான எண்ணம் நம் நாட்டில் பரவலாக உண்டு.
People generally see it as the disease for the rich people.
We (Indians) might have a lesser exposure to carcinogens in terms of processed food and some chemicals but the number of cases are rising alarmingly and early detection happen in very few cases.
we need to have more awarness especially among women,where there is a high possibility of them ignoring or hiding the symptoms.
கவிதா,
இன்னும் எனக்கு பெண்பார்க்க ஆரம்பிக்கவில்லை என்பதையும், எந்தவிதத்திலும் நான் பதிக்கப்படவும் இல்லை என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நல்ல வேலை உள்ள இரு பையனும், சுமாரான வேலை உள்ள ஒரு பையனும், ரொம்ப நல்ல வேலை உள்ள இரு பையனும் கிடைத்தால் ஒரு பெண் இவர்களில் யாரை திருமணம் செய்துகொள்வாள்? சுமாரான வெலையில் இருப்பவன் மனதளவில் மிக நொந்துபோய் இருப்பான் என்று அவனை திருமணம் செய்து கொண்டு அவன் வறுமானத்திற்குள் குடும்பம் நடத்துவாளா? அப்படித்தான், ஆண்களின் தேர்வும் இருக்கும்.
//உங்களின் வாழ்க்கையை உங்களின் அம்மா, சகோதரிதான் தீர்மானிக்கிறார்கள் என்ற பட்சத்தில்,// என் வாழ்க்கையை நாந்தான் தீர்மானிக்கிறேன். எனினும், நான் அந்த குறையுள்ள பெண்ணை காதலித்திறாத பட்சத்தில், அம்மாவுக்கும், தங்கைக்கும் (எனக்கும் கூட) பிடிக்காத பெண்ணை திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என முடிவெடுப்பதில் என்ன தவறு?
//நல்ல வேலை என்பது, பெண்ணிற்கு மட்டும் அல்ல, ஒரு ஆணின் வாழ்க்கைக்கும் அது பொருந்தும். உத்தியோகம், புருஷ லட்சணம்.// அப்போ வேலை கிடைக்காதவன் என்ன பாவம் பண்ணினான். அவன் திருமணமாகமல் எவ்வளவு மன உளைச்சல் கொள்வான். அவனைத்தேற்ற அவனை மணந்துகொண்டு அவனுடன் கஷ்டப்பட வேண்டியதுதானே?! உங்களுக்கு உங்கள் தேவை பூர்த்தியானால் போதும். ஆண்கள் மட்டும் அவர்கள் எதிர்பார்ப்புகளை விட்டுக்கொடுத்து தையாகம் செய்யவேண்டும்!
//என் மகன் விருப்பப்படும் எந்த பெண்ணையும் // -- ம்ம்... அதைச்சொல்லுங்கள். "உங்கள் மகன் விரும்பும் எந்த பெண்ணையும்..". ஏன் நீங்கள் சொல்லும் குறைபாடுள்ள பெண்களின் வேதனை பற்றி சொல்லி அப்படி ஒரு பெண்ணை அவனுக்கு துர்மணம் செய்து வைக்கலாமே?!
எனது மறுமொழியில் கீழ்காணும் பகுதி உங்கள் கண்களில் படவில்லையா கவிதா..
//ஒரு கையோ கலோ இல்லாத ஆணை, எந்த பிரச்சனையும் இல்லாத ஒரு பெண் ஏற்றுக்கொள்வாளா? ஏன் அவ்வளவு போகிறீர்கள். business செய்கிற ஒரு பையனை மணக்க எவ்வளவு யோசிக்கிறார்கள் தெரியுமா? கேட்டால் job தான் safe-ஆம்! அவ்வளவு தெளிவானவர்கள் நம்ம பெண்கள்.//
மறுபடியும் சொல்கிறேன்...
//பொதுவாகவே ஏதாவது ஒரு குறை இருக்கிற ஆணோ அல்லது பெண்ணோ நிராகரிக்கப்படுவது இயல்பு. அது நிராகரிப்பவர்களின் குற்றமல்ல. //
//then...?//
அப்படி குறையுள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ வேறு ஏதேனும் குறையுள்ளவர்கள் கிடைக்கலாம் அல்லது....
குறை என்பது ஒவ்வொருவர் கண்ணோட்டத்திலும் மாறுபடலாம். அந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ இருக்கும் குறிப்பிட்ட குறையை குறையென்றே நினைக்காதவர்கள் கிடைக்கலாம்...
அல்லது அந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணமே நடக்காமலே இருக்கலாம்...
(வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாமே கிடைத்துவிடுகிறதா என்ன?)
இன்னும் எனக்கு தெரியாத எத்தனையோ வாய்ப்புகள் இருக்கலாம்.
இது வெறும் பெண்ணியம் சார்ந்த பிரச்சனை அல்ல.
இயல்பு நிலை என்பது பெரும்பாலானர்வர்களுக்கு இருப்பது போல இருப்பது. இதிலிருந்து எந்த விலக்கு இருந்தாலும் அது குறையாகத்தான் பார்க்கப்படும். ஊனம், பழக்க வழக்கம், பாலியல் சார்பு, உணவுப் பழக்கம், உடையலங்கராம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவர்களைப் பொதுவானவர்கள் ஏற்றுக் கொள்வது என்பது பெரும்பாலும் நடவாது.
கட்டுரையில் கூட மார்பிழந்த பெண்களுக்கு குறையுள்ள ஆண்தான் கிடைக்கிறான் என்று சொல்லியிருந்தீர்கள் அல்லவா. குறையுள்ளவர்களை குறையுள்ளவர்களே ஏற்றுக் கொள்வதில்லை என்பதுதான் உண்மையான நிலை.
//கட்டுரையில் கூட மார்பிழந்த பெண்களுக்கு குறையுள்ள ஆண்தான் கிடைக்கிறான் என்று சொல்லியிருந்தீர்கள் அல்லவா. குறையுள்ளவர்களை குறையுள்ளவர்களே ஏற்றுக் கொள்வதில்லை என்பதுதான் உண்மையான நிலை.// - சரியாகச்சொன்னீர்கள் ராகவன்.
//என் மகன் விருப்பப்படும் எந்த பெண்ணையும் // -- ம்ம்... அதைச்சொல்லுங்கள். //"உங்கள் மகன் விரும்பும் எந்த பெண்ணையும்..". ஏன் நீங்கள் சொல்லும் குறைபாடுள்ள பெண்களின் வேதனை பற்றி சொல்லி அப்படி ஒரு பெண்ணை அவனுக்கு துர்மணம் செய்து வைக்கலாமே?!//
அருள், நான் சொன்ன "எந்த பெண்ணையும்" என்ற வார்த்தையில், நான் சொல்லிய பெண்ணும் அடங்குவாள். மேலும், எனக்கு அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் போது, என் மகனுக்கு நிச்சயம் அந்த பெண்ணை பற்றி புரிய வைக்க முயற்சி செய்வேன்..அவன் புரிந்து கொள்வான் என நம்புகிறேன், அவனுக்கு மனித நேயம் இருக்கிறது என நம்புகிறேன்..அது அவனுடைய வாழ்க்கை என்ற பட்சத்தில் என்னால் கட்டாயப்படுத்த நிச்சயம் முடியாது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த பதிப்பில் நான் யாரையும் கட்டாயபடுத்தவில்லை என்று நினைக்கிறேன்.
நன்றி ராகவன்.ஜி. உண்மையான நிலை என்பது சரியே..அருள் போன்றவர்களின் கருத்துக்கள் அதை உறுதி செய்கின்றன.
என்ன அருளு..ஓவரா சாமி ஆடறீங்க.. கற்பூரம் காட்டறேன்..கொஞ்சம் அமைதியாவுமா கண்ணு... நான் தலையிடகூடாது பார்த்தா..பாவம் கவிதாவ இந்த பாடு படுத்தறீங்க...அவங்க என்ன பொண்ண பாத்து கல்யாணமா பண்ணிக்க சொன்னாங்க... ஒவரா டென்ஷன் ஆரீங்க.. நான் உங்க கட்சிப்பா..சூப்பர் figure ஆ பார்க்கலாம்ப்பா.. கவிதா இதெல்லாம் உங்களுக்கு சொல்லல... சில இளிச்ச வாயிங்களுக்காக சொன்னது..சரியா... அதுல அவங்க பையனும் இருக்கான் நீங்க...கூல்..ஆகுங்க..எப்பா... ஏரியாவே ஹாட் ஆயிடுச்சி பாருங்க..வாங்க..போய் ஒரு கூல் டிரிங்க் குடிச்சிட்டு வரலாம்...வாங்க.....
///At 2:50 PM, கவிதா 123...
நன்றி தரண், நான் எழுதும் எல்லாமே என்னால் முடியுமா (என்னை சார்தவர்களாலும்) என்று யோசித்து, முடியும் என்றால் மட்டுமே எழுதுகிறேன். என் குடும்பம் பற்றி பேசுவதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை... உங்கள் திருமணத்திற்கு எங்களின் வாழ்த்துக்கள்///
//என் குடும்பம் பற்றி பேசுவதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை...//
ஏங்க நான் தமாஷா சொன்னேன்..சீரியஸாயிட்டிங்களா???
//உங்கள் திருமணத்திற்கு எங்களின் வாழ்த்துக்கள்//
சரியாபோச்சு போங்க..நான் engaged சொன்னது நிச்சயதார்த்தத இல்லீங்கோ..
ஒரு பெண்ணின் மன சிறையை சொன்னேன்..(அறியா வயசுல தெரியாம பண்ண காதல் 8 வருஷமா துரத்துது..ஹி..ஹி..ஹி..ஹி)
//இந்த பதிப்பில் நான் யாரையும் கட்டாயபடுத்தவில்லை// நிச்சயமாக நீங்கள் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் ஆண்கள் அவர்களின் வேதனையை புரிந்துகொள்வதில்லை என்று சொல்வது தவறு. எனக்கே அந்த வேதனை புரியாமலில்லை. அதற்காக அப்படியொரு பெண்ணை நான் திருமணம் செய்துகொள்ள இயலாது என்பதைத்தான் சொல்கிறேன். அது மனித நேயமற்ற செயல் என நீங்கள் சொன்னால் அதை ஏற்க இயலாது.
அப்படியெனில் நீங்களே ஏதேனும் குறையுள்ள ஒருவரை ஏன் மனித நேயத்துடன் மணக்க வில்லை?
//நான் அந்த குறையுள்ள பெண்ணை காதலித்திறாத பட்சத்தில், அம்மாவுக்கும், தங்கைக்கும் (எனக்கும் கூட) பிடிக்காத பெண்ணை திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என முடிவெடுப்பதில் என்ன தவறு?//
தவறில்லை
//அப்போ வேலை கிடைக்காதவன் என்ன பாவம் பண்ணினான். அவன் திருமணமாகமல் எவ்வளவு மன உளைச்சல் கொள்வான். அவனைத்தேற்ற அவனை மணந்துகொண்டு அவனுடன் கஷ்டப்பட வேண்டியதுதானே?! உங்களுக்கு உங்கள் தேவை பூர்த்தியானால் போதும். ஆண்கள் மட்டும் அவர்கள் எதிர்பார்ப்புகளை விட்டுக்கொடுத்து தையாகம் செய்யவேண்டும்!//
நிச்சயம் பெண்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். நானே அதற்கு உதாரணம், எனக்கு திருமணம் ஆகும் போது என் கணவருக்கு வேலை இல்லை...என்னைவிட அவரின் மேல் இருந்த நம்பிக்கையில் திருமணம் செய்து கொண்டேன்.
//இன்னும் எனக்கு தெரியாத எத்தனையோ வாய்ப்புகள் இருக்கலாம்//
நீங்கள் சொல்லிய அத்தனை வாய்ப்புகளுமே சாத்தியமே..! நான் சொல்லியவையும் சாத்தியமே என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் அருள்
அட இன்னாப்பா....எல்லாரும் ஒவரா..டென்சனாகுறீங்க...
எல்லாருக்கும் ஒரு ISHWARYARAY cloning order பண்ணிடுங்க கவிதா..
நன்றி கார்த்திக்வேலு, awareness இப்போது நிறைய உள்ளது..
//நான் சொல்லியவையும் சாத்தியமே என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் அருள்//
நிச்சயமாக புரிந்துகொண்டிருக்கிறேன்.
ஆனால் உங்கள் பதிவு, 'ச்சே.. இந்த ஆண்களே இப்படித்தான்...' என்கிற ரீதியில் இருப்பது சரியில்லை.
//நானே அதற்கு உதாரணம்// உங்களைப்போல் ஒருசிலர் இருக்கலாம். Exceptionals are not examples. நாம் இங்கு பெரும்பாண்மையானவர்கலைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.
அருள், மனிதநேயம் என்பது என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? சொல்வதற்கு மன்னி க்கவும். உங்களுக்கு திருமணம் நிகழ்ந்து, குறைபாடுள்ள மகனோ/மகளோ பிறந்தால், தங்களால் இதே கருத்துக்களைக் கூறமுடியுமா?
நாம் உதவவேண்டும் அல்லது மற்றவர் உதவ நாம் ஊக்கமளிக்கவேண்டும். இந்த இரண்டு சிந்தனைகளும் இல்லாதவரை, அத்தகைய சிந்தனை வரவிடாமல் செய்யக்கூடாது.
என் மனத்திற்கு பட்டதைச் சொல்லிவிட்டேன். மனம்புண்பட்டால் மன்னிக்கவும்.
//ஆனால் உங்கள் பதிவு, 'ச்சே.. இந்த ஆண்களே இப்படித்தான்...' என்கிற ரீதியில் இருப்பது சரியில்லை.//
இல்லை..இப்படியும் இருக்கிறார்கள் என்கிறேன்.
//நாம் இங்கு பெரும்பாண்மையானவர்கலைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். //
பெரும்பான்மையானவர்களை பற்றி பேசுவதாக சொல்லும் நீங்களே ஏன் உங்களை தனிப்பட்ட முறையில் சொல்லவதாக எடுத்துக்கொண்டு கருத்து சொல்லி கொண்டு வருகிறீர்கள்..
//அப்படியெனில் நீங்களே ஏதேனும் குறையுள்ள ஒருவரை ஏன் மனித நேயத்துடன் மணக்க வில்லை? //
அருள், எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என சொல்லலாம்..தேடி சென்று திருமணம் செய்யலாமே என்பீர்கள்..அதுவும் செய்ய இயலாத வயதில் எனக்கு திருமணம் நடந்தது..
//அட இன்னாப்பா....எல்லாரும் ஒவரா..டென்சனாகுறீங்க...
எல்லாருக்கும் ஒரு ISHWARYARAY cloning order பண்ணிடுங்க கவிதா..//
ம்ம்ம்!..தரண், அதை செய்து தான் எல்லோரையும் கூல் பண்ணனும்னு நினைக்கிறேன்.
//பெரும்பான்மையானவர்களை பற்றி பேசுவதாக சொல்லும் நீங்களே ஏன் உங்களை தனிப்பட்ட முறையில் சொல்லவதாக எடுத்துக்கொண்டு கருத்து சொல்லி கொண்டு வருகிறீர்கள்..
// என்னை ஒரு சராசரி ஆணின் உதாரணமாகத்தான் சொல்லிக்கொண்டு வர்கிறேன்.
//எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என சொல்லலாம்..தேடி சென்று திருமணம் செய்யலாமே என்பீர்கள்..அதுவும் செய்ய இயலாத வயதில் எனக்கு திருமணம் நடந்தது..// - இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை!
//என் மனத்திற்கு பட்டதைச் சொல்லிவிட்டேன். மனம்புண்பட்டால் மன்னிக்கவும். //
நன்றி நாகு, அருள் புரிந்து கொள்வார், மனித நேயன் நிறைய உடையவர் தான், இதற்கெல்லாம் எதற்கு மன்னிப்பு கேட்கிறீர்கள்.?!
//என் மனத்திற்கு பட்டதைச் சொல்லிவிட்டேன். மனம்புண்பட்டால் மன்னிக்கவும்.// இதில் மன்னிப்புக்கெல்லாம் ஒன்றுமில்லை நாகு.
//உங்களுக்கு திருமணம் நிகழ்ந்து, குறைபாடுள்ள மகனோ/மகளோ பிறந்தால், தங்களால் இதே கருத்துக்களைக் கூறமுடியுமா? // நிச்சயமாக நாகு. அப்படி யாரும் என் மகனையோ மகளையோ திருமணம் செய்ய முன்வரவில்லை எனில் அவர்களின் மீது நான் கோபப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது சொல்லுங்கள்.
நான் சொல்வதை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். என்னைப்பொறுத்தவரை திருமணம் உதவி இல்லை. உதவி செய்கிறேன் என்றெல்லம் திருமணம் செய்யக்கூடாது என்பது என் கருத்து.
மேலும் உதவி செய்பவர்களை செய்யாதே என்று நான் சொல்லவில்லை. செய்ய இயலாதது தவறு இல்லை என்கிறேன். அவ்வளவுதான்.
இப்போதெல்லாம் பெண்கள் ரொம்ப தெளிவா இருக்காங்க...அவங்களோட வாழ்க்கை துணையை ( Mr.இளிச்சவாயர்) ரொம்ப நிதானமா தேர்ந்தெடுக்கிறார்கள்...
காதலிக்க பேசிக் கண்டிஷன் மென்பொருள் நிறுவனத்தில வேல செய்யனும் அப்படிங்கறாங்க....
நீங்க பாத்த ஆங்கில படத்தினை நானும் பார்த்தேன்...
தமிழ்நாட்டில இது போன்ற குறை இருக்கவங்களினை விரல் விட்டு எண்ணி விடலாம்...
நீங்க வருத்தப்படுற அளவு கொஞ்சம் தூக்கலா தான் இருக்கு...
இருந்தாலும் ஒரே ஒரு தீர்வு உண்மையான காதல்..
எந்த பின்னூட்டத்தினையும் படிக்க நேரம் இல்லை..
வேற யாராவது இதனையே சொல்லி இருந்தால் மன்னிக்கவும்..
ரவி
கவிதா அவர்களே, ஒரு பெண்ணைப் பார்க்கும்போது ஓர் ஆணின் பார்வை எங்கே போகும் என்பது தெரிந்ததுதானே. என்ன, சிலர் நாசூக்காக அதை செய்வார்கள், பலர் விழுங்கி விடுவது போல பார்ப்பார்கள். உங்கள் பதிவின்படி அது முடியாது என்றால் அப்படிப்பட்டப் பெண்ணை யார் விரும்புவார்கள் என நினைக்கிறீர்கள்? ஓர் ஆணுக்கு ஆண்மையில்லையென்றால் மட்டும் ஒரு பெண் அவனை ஏற்றுக் கொண்டு விடுவாரா?
இதில் ஆணென்றும் பென்ணென்றும் பார்க்க இயலாது.
எல்லோரும் ரொம்ப டென்ஷன் ஆயிட்டீங்க போலிருக்கு. ஒரு சிறு டைவர்ஷன் ரிலேக்ஸ் செய்ய.
சுஜாதா அவர்களால் எழுதப் பெற்று சமீபத்தில் 1991-ல் குங்குமத்தில் ஒரு தொடர்கதை வந்தது. கவித்துவமானத் தலைப்பு: "திசை கண்டேன், வான் கண்டேன்". அதில் நோவா கிரகத்திலிருந்து ஒருவன் (பெயர் பாரி என்று ஞாபகம்) பூமிக்கு ஏதோ வேலையாக வருகிறான். அவன் வந்த வாகனமும் அவனும் எப்போது வேண்டுமானாலும் மார்ஃபிங் மூலம் உருமாற முடியும். வாகனமும் அவனுடன் எப்போதும் பேசும். சற்று வசந்தின் குணம் அதற்கு.
அதில் ஒரு சந்தர்பத்தில் வாகனத்துக்கு ஒரு மனிதப் பெண் மேல் காதல் வந்து விடுகிறது. அப்பெண்ணுக்கு நடக்கவிருக்கும் திருமணத்தில் அது பெண்ணின் உருவெடுத்து மணமேடையில் அமர்ந்து தாலியும் வாங்கிக் கொள்கிறது. முதலிரவில் மாப்பிள்ளை அதன் மார்பகங்களை ரொம்பப் புகழ்ந்து பேசுகையில் "இது பிடிச்சிருக்கா, வெச்சுக்கோ" என்று அவற்றை திருகி எடுத்து கையில் கொடுத்து விடுகிறது. வீல் என்று கத்திக் கொண்டு மாப்பிள்ளை மயக்கமாகிறான்.
இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல பதிவு !!
கவிதா,
நல்ல பதிவு. எம் மக்களிடையே உள்ள இப்படியான சமூகப் பிரச்சனைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்.
நான் கடந்த ஆண்டு ஈழத்திற்குச் சென்றிருந்த போது , ஈழத்தில் சிங்கள இராணுவத்தின் தாக்குதல்களினால் கை கால்களையும், உடலின் பல உறுப்புக்கள் பலவற்றையும் இழந்த பல பெண்களைச் சந்தித்து உரையாடக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. நீங்கள் குறிப்பிட்டது போல், அவர்களின் ஏக்கங்களை என்னால் உணர முடிந்தது.
///நாம எல்லாம் சிம்ரன் ரேஞ்சுக்கு பொண்ணு பார்ப்போம்.. நாம தொட்டா ஒட்டிக்கற கலர்ல இருப்போம்...ஆனா..நமக்கு கண் கூசர அளவுக்கு கலரா பொண்ணு பார்ப்போம்...///
No comments :-D ;D
வணக்கம் கவிதா! மார்பகம் பற்றிய உங்கள் விசாலமான பார்வைக்கு வணக்கங்கள். நீங்கள் சொல்லும் மன மாற்றங்கள் ஒரு வேளை காதல் திருமணத்தில் சாத்தியமாகலாம். மற்றபடி நிகழ்கால சமுதாயத்தில் சாத்தியமில்லை. இது பொதுகூட்ட மேடையல்ல உள்ளொன்று வைத்து உயர்வாக பேசியாகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு. உள்ளத்து எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கலாம் என்பது என் எண்ணம். சாதாரணமாக கோவிலுக்கு அர்ச்சனை செல்ல வாழை பழம் வாங்கும் போது ஏழெட்டு தாரை ஏற இறங்க பார்த்துவிட்டு. நல்ல பழங்கள் எங்கே என்று பார்த்து வாங்குகின்றோம். ஒரு அழுகிய பழம் இருந்தாலும் உடனே அடுத்த சீப்பை கேட்கின்றோம் கடைகாரன் அந்த பழத்தை நீக்கி விற்பனைக்கு வைக்காத வரையில்.இத்தனைக்கும் அந்த கடவுள் இதனை கண் வைத்து கூட பார்க்கப்போவதில்லை. ஓர் நாள் ஓர் பொழுது சமாச்சாரம். கேட்டால் காசு கொடுத்து வாங்கும் போது நல்ல பழமாக பார்த்து வாங்குவதில் தவறில்லையே என்பது அவர்கள் வாதம்.
நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் குடும்பத்தையும் உறவு வகையையும் சார்ந்தே மணங்கள் மலர்கின்றன. எனக்கு வரதட்சனை வேண்டா என்று சொன்னால் இவனுக்கு கிறுக்கு பிடித்திருக்கிறதா என்ற கேலி பேச்சுக்கள், ஊனமுள்ள பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை .என்று சொன்னால் உடனே மலர்கின்ற கேள்வி இவனிடம் என்ன குறையென்று !
இதையும் தாண்டி கல்யாண மேடை ஏறப்போகும் பெண்கள் யாராவது என் தகப்பனிடமிருந்து எந்த நகையும் வேண்டாமென மணமேடைக்கு வந்த கதையுண்டா? ( ஏன் நீங்கள் உள்பட)எனக்கு தெரிந்து இல்லை. ஆசை யாரை விட்டது. ஒரு வாழ்க்கை திருவாழ்க்கையாக தீர்மானம் செய்ய முயல்வது மனித இயல்புதானே.என்னோடு நடந்து வருகையில் இவள் என் மனைவி என பெருமிதம் கொள்வதில்தான் உள்ளம் மகிழ்கின்றான். எங்கோ ஆயிரத்தில் ஒருவன் வேண்டுமானால் இறக்கம் கொள்ளலாம். எல்லாருமே "மெர்க்குரி பூக்கள்" கருணாஸாக இருந்து விட்டால் இந்த பதிவே அவசியபடாதே. உடல் உருப்புக்கள் இழந்த ஒருவனை ஏன் எல்லா பெண்களும்ம் தன் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுப்பதில்லை?
தனக்கென்று ஒரு பாதுகாப்பு வளையமும் தன் ஆசைகளை பூர்த்தி செய்யவும் அவர்கள் திடகாத்திரமான ஆணை நினைக்கும் போது
அங்கத்தில் அழகான வடிவமைப்பை ஆண் எதிர்பார்ப்பதில் தவறில்லையே!
வேதனையாக இருக்கிறது.
உங்கள் கேள்வியையே கொஞ்சம் திருத்தி பார்த்து பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்?
"மற்றவர்களை போன்று நாம் இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மை ஒருபுறமும் , பெண்களால் ஒதுக்கபடுவது மற்றொரு புறமும் எத்தனை மன அழுத்தத்தையும், பாரத்தையும் கொடுக்கிறது. செயற்கையாக இதற்காக தயாரிக்கப்படும் வெளியாடைகள் அவர்களின் அழகை வேண்டுமானால் வெளிபார்வைக்கு சரிசெய்யலாம். ஆனால் உள்ளுணர்வுகளையும், வேதனையையும் சரிசெய்ய முடியுமா..?."
பல் தூக்கலாக இருப்பது, கருப்பாக இருப்பது போன்ற complex
தான் இதுவும்.
பெண்களெல்லாம் ஆண்களை திருப்திபடுத்தவே பிறந்தது போல
ஒரு self esteem போதாக்குறை சிந்தனை இது.
இது எப்படி பெண்ணீயமாகும்? திருமணத்தை விட்டால்
வாழ்க்கையே இல்லாதது போல எவ்வளவு நாள் பேசிக்கொண்டிருக்கப்போகிறோம்?
மிக அவசியமான பிரச்சினையைத்தான் முன்வைத்துள்ளீர்கள் கவிதா.
தன்னுடைய குறைகளையே நினைத்து அதை மற்றவர்கள் அங்கீகரிக்க/ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது ஒருவரின் சுயகௌரவத்தை விட்டுக்கொடுப்பது போலாகிவிடும் இல்லையா? உண்மையில் குறைகள் அனைவருக்கும் உண்டு; சிலருக்கு உடம்பில் இருக்கிறது. மற்றவர்களோடு சகஜமாகப் பழகமுடியாத அளவிற்கும் சிலருக்கு குறைகள் இருக்கலாம்;
யாருக்கும் குறைகளை ஏற்றுக்கொள்ளப் பிடிக்காது.
ஆனால் அவர்களிடம் கண்டிப்பாக மற்றவர்களிடமிருந்து வித்யாசப்படுத்தும் நல்ல விஷயங்களும் இருக்கலாம். அவை இயல்பாய் வெளிப்படும் தருணங்களில் அவற்றை பிடிப்பவர்களுக்கு உண்மையில் இவர்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் குறைகள் ஏதும் பெரிதாகவே தெரியாது.
என்னைப் பொருத்தவரை குறைகளை உடையவர்கள் யாரும் பரிதாபத்தை, அதனால் ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கை விரும்புவதாகத் தோன்றவில்லை. சிலசமயம் 'ஏற்றுக்' கொள்பவரின் பெருந்தன்மை எரிச்சலை ஏற்படுத்தவும் தவறுவதில்லை.
நிறைகளைப் பார்த்து அமையும் வாழ்க்கையே சிறப்பாக அமையும் என்பது என் கருத்து.
வாழ்த்துக்கள்,
சுகா
நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதை பாதித்த பதிவு கவிதா..
அந்தப்பெண்ணை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கண்டிப்பாய் சாதாரண மனிதர்களுக்கு வராது. அது மனித இயல்பு கவிதா..பாவம் அவர்களும் ஆசாபாசம் நிறைந்தவர்கள்தானே..? நாம் யாரையும் குறை சொல்ல முடியாது..
ஆனால் அந்தப்பெண்ணின் பார்க்கும்பொழுது மனம் சங்கடப்படுகின்றது.. இதற்கு தீர்வு என்ன என்று தெரியவில்லை தோழி
கவிதா,
நீங்கள் நாணயத்தின் ஒரு பக்கத்தில் இருந்து பார்க்கிறீர்கள். மறுபக்கத்தில் இருப்பவனாக என்னாலும் பல உதாரணங்களை சொல்ல முடியும்..
உ.தா (உங்களின் கேள்விகள் தான் வேறு கோணத்தில்)
1)பெண்களால் ஒதுக்கபடுவது மற்றொரு புறமும் எத்தனை மன அழுத்தத்தையும், பாரத்தையும் கொடுக்கிறது
2)ஆண்களின் உணர்வுகளையும், அவர்களின் மன போராட்டாங்களையும், தாழ்வு மனப்பான்மையும் பெண்களால் புரிந்து கொள்ள முடியுமா?..
3)நாம எல்லாம் ஆசை அஜித் ரேஞ்சுக்கு பையன் இருந்தாத்தான் பார்ப்போம்.. நாம பார்த்தாலே ஒட்டிக்கற கலர்ல இருப்போம்..
எனவே என்னை பொறுத்த வரையில் ஒரு பால் (gender) சார்ந்த பிரச்சனை அல்ல.. குறையுள்ளவர்களே குறை உள்ளவர்களை ஏற்றுகொள்வத்திலை என்பதே நான் கண்ட உண்மை நிலை. இதற்க்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது.. அது அவரவர்களின் தனிப்பட்ட முடிவு, அந்த குறை என்பது அவர்களால் ஏற்பட்டது இல்லை என்ற பட்சத்தில்..
//அப்படியே இந்த பெண்கள் திருமண மார்க்கெட்டில் விலைபோக வேண்டும் என்றால், ஏதோ ஒரு விதத்தில் குறையுடைய ஒருவர், மனைவி இழந்த ஆண்கள், தீராத வியாதிக்காரர்,...
இந்த கட்டத்தில் இது திருமணம் இல்லை.. ஒரு சமுதாய நிர்பந்ததினாலும், வாழ்க்கையை எதோ ஒரு விதத்தில் வாழ வேண்டும் என்ற கட்டாயத்தினாலும்.. சமுதாயத்திற்காகவும்தான்..
// நல்ல படிப்பு, வேலை, நல்ல உடல் நலத்துடன் இருக்கும் எந்த ஆடவரும் இந்த பெண்களை திருமணம் செய்து கொள்ள முன் வருவது இல்லை..
இப்படி செய்தால் அவர்கள் பெரிய உதவி செய்பவர்கள்.. தியாகிகள்..மற்றபடி திருமணம் என்பது வெறும் உதவி செய்வது மட்டும் அல்லவே.. வாழ்வது ஒரு முறை அதை வீணடிக்ககூடாது என்பது மேலை நாட்டில் உள்ள தத்துவம்.. இது அறுதிபெரும்பாண்மையினருக்கு பொறுந்தும்.. அவர்கள் ஏற்றுகொண்ட கருத்தும் இதுதான்
என்னுடைய தனிப்பட்ட கருத்து.. திருமணம் என்பது சமுதாயத்தில் (குறிப்பாக இந்திய சமுதாயத்தில்) அனைவரும் செய்யவேண்டிய கடமையாக பார்க்கபடுகிறது.. திருமணத்தை ஒரு சடங்காகவே நான் பார்க்கிறேன். வாழ்க்கை என்பது அதையும் தாண்டிய நெடிய பயணம்,அதில் தனிமை என்பது வரம்
romba kastama irukku...nandu appadinnu sivasangari ezuthiya puththagam padichcheengalaa... romba aRputhama ezuthi iruppaar
//இப்போதெல்லாம் பெண்கள் ரொம்ப தெளிவா இருக்காங்க...அவங்களோட வாழ்க்கை துணையை ( Mr.இளிச்சவாயர்) ரொம்ப நிதானமா தேர்ந்தெடுக்கிறார்கள்...காதலிக்க பேசிக் கண்டிஷன் மென்பொருள் நிறுவனத்தில வேல செய்யனும் அப்படிங்கறாங்க..//
நன்றி செந்தழல் ரவி, ஏன் அப்படின்னா வேற வேலை செய்யறவங்க காதலிக்கறதே இல்லையா, இல்லை கல்யாணம் செய்துகறது இலலையா?. மென்பொருள் வேலை செய்யும் ஆண்கள் அதிகமாகிவிட்டதாலே அப்படி தோன்றுகின்றது...
//.நீங்க பாத்த ஆங்கில படத்தினை நானும் பார்த்தேன்...தமிழ்நாட்டில இது போன்ற குறை இருக்கவங்களினை விரல் விட்டு எண்ணி விடலாம்...நீங்க வருத்தப்படுற அளவு கொஞ்சம் தூக்கலா தான் இருக்கு...//
இல்லை, வெளியில் தெரிவதில்லை, நம் பெண்கள் அப்படி..
//இருந்தாலும் ஒரே ஒரு தீர்வு உண்மையான காதல்.//
உண்மை..ஆதலினால் காதல் செய்வீர் (அனைவருக்கும்)
//கவிதா அவர்களே, ஒரு பெண்ணைப் பார்க்கும்போது ஓர் ஆணின் பார்வை எங்கே போகும் என்பது தெரிந்ததுதானே. என்ன, சிலர் நாசூக்காக அதை செய்வார்கள், பலர் விழுங்கி விடுவது போல பார்ப்பார்கள். உங்கள் பதிவின்படி அது முடியாது என்றால் அப்படிப்பட்டப் பெண்ணை யார் விரும்புவார்கள் என நினைக்கிறீர்கள்?//
நன்றி ராகவன் சார், இப்படி பார்ப்பது க்கூட 80% கல்யாணம் ஆனவர்களும், 40 -50 வயதுக்கு மேற்ப்பட்ட ஆண்களுமே... திருமணம் ஆகாத இளைஞர்கள் இப்படி பார்ப்பது குறைவே....
//ஓர் ஆணுக்கு ஆண்மையில்லையென்றால் மட்டும் ஒரு பெண் அவனை ஏற்றுக் கொண்டு விடுவாரா? இதில் ஆணென்றும் பென்ணென்றும் பார்க்க இயலாது.//
ஆண்மையில்லை என்பதில் 2 வகை, 1-குழந்தை பாக்கியம் இல்லாமல் போவது, 2- இயலாமை. இரண்டுமே திருமணத்திற்கு பிறகே தெரியும், அப்படி இருப்பவர்கள் யாரும் சொல்லிவிட்டு திருமணம் செய்து கொள்வதில்லை. முதல் வகையை பெண்கள் ஏற்றுக்கொள்வதாகத் தான் தெரிகிறது.. 2வது வகையில் நிச்சயம் பெண்கள் பிரிந்து (இப்போது எல்லாம் சகஜமாகிவிட்டது) வந்துவிடுகிறார்கள். இந்த மலட்டு தன்மை பெண்களுக்கு பொருந்தினாலும் விழுக்காடு அதிகம் ஆண்களுக்கே...
//பெண்கள் எப்பொழுதுமே இப்படி சுயநலமாகத்தான்(பெண் நலமாக) சிந்திப்பார்கள் //
நன்றி வஞ்சிநாடன், இத்தனை பதில் அருளுக்கு சொல்லிக்கூட நீங்கள், பெண்களை இப்படி சொல்லலமா?
// ஈழத்தில் சிங்கள இராணுவத்தின் தாக்குதல்களினால் கை கால்களையும், உடலின் பல உறுப்புக்கள் பலவற்றையும் இழந்த பல பெண்களைச் சந்தித்து உரையாடக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. நீங்கள் குறிப்பிட்டது போல், அவர்களின் ஏக்கங்களை என்னால் உணர முடிந்தது.//
நன்றி வெற்றி, நீங்கள் உணர்ந்தைப்போன்று மற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைத்து உணர்ந்தால் மகிழ்வேன்
நன்றி முத்து, கருத்து சொல்லாமல் விட்டதற்கு...
//திருமணத்தை விட்டால் வாழ்க்கையே இல்லாதது போல எவ்வளவு நாள் பேசிக்கொண்டிருக்கப்போகிறோம்? //
நன்றி, ஆதிரை, இருக்கிறது, ஆனால் , திருமணவாழ்க்கை என்பது தனிமையை போக்கி துணையை வாழும் காலம் வரைக்கொடுக்கிறது. அதாவது மனைவி, கணவன் என்ற உறவுகளின் மூலம், பிள்ளைகள், உறவினர்கள் என்று என்றுமே ஒரு துணையுடன் இருக்கதான்..இல்லாமல் இருக்கலாம் அதில் உள்ள சிரமங்கள், வயதானல் மட்டுமே தெரியும்.
//நிறைகளைப் பார்த்து அமையும் வாழ்க்கையே சிறப்பாக அமையும் என்பது என் கருத்து//
நன்றி சுகா, நீங்கள் எதை நிறைகள் என குறிப்பிடுகிறீர்கள், அழகு, அந்தஸ்து, வேலை, இவற்றையா?.. இதுமட்டுமே நல்ல வாழ்க்கை கொடுத்துவிடும் என நினைக்கிறீர்களா?..
செயகுமார் நன்றி, உங்களுக்கும் , அருளுக்கும், இது போன்ற ஒருமித்த கருத்துடைய மற்றவர்களுக்கும் என் விளக்கம்...
பெண்ணோ, ஆணோ, வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது, முதலில் அழகுக்கும், வேலை , அந்தஸ்து எல்லாம் பார்த்து தான் தேர்ந்திடுக்கிறார்கள். அப்படித்தான் நாம் பழகியும் இருக்கிறோம். பொதுவாக அழகோ, பணமோ நம் வாழ்க்கையின் நிம்மதியை நிர்ணயிப்பது இல்லை. நல்ல குணமுடைய ஒரு ஆண்/பெண் ஆல், எந்த பிரச்சனையும் சரிசெய்து கொண்டு சுமுகமான, சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியும். பொருட்கள் வாங்குவதிலோ, வேறு வித தேவைகளில் ஏற்படும் குறைகளையும் நிறைகளையும் எப்படி வேண்டுமானாலும் சரி செய்து கொள்ளலாம். ஒரு அழகான தேவதை போன்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டபிறகு, அவள் குணம் கெட்டவளாக இருந்துவிட்டால், அன்றாட வாழ்க்கை நரகமாகி போகாதா?. எத்தனை ஆண்கள் இரவில் தூங்காமல், இப்படிப்பட்ட பெண்களால் மனவேதனைக்கு ஆளாகிறார்கள் என்று கவனித்து பாருங்கள். ஏன் அழகில்லாத ஒரு ஆண்/பெண் ஐ சர்ஜரி செய்து கூட சரிசெய்து விடலாம். ஆனால் மனிதனின் குணத்தை..?.. பிறந்ததிலிருந்து, இறக்கும் வரை மாறாத ஒன்று இது. என்னுடைய தாழ்மையான கருத்து சதையும், இரத்தமும் மேலும் சிலவும் மூடி இருக்கும் உடலுக்கும், அழகுக்கும் முக்கியதுவம் கொடுக்காமல், குணத்திற்கும், பண்பிற்கும் முதலிடம் கொடுத்து துணையை தேர்ந்தெடுங்கள். அது ஒன்று தான் நிம்மதியான, வளமான வாழ்க்கையை தரும்.. உடல் குறை நிச்சயம் ஒரு பொருட்டு அல்ல, எப்படியும் சரிசெய்ய முடியும்...என்பதே திரும்ப திரும்ப நான் சொல்லும் கருத்து. இது ஆண்/பெண் இரு பாலாருக்கும் பொருந்தும்
ஆஆ...........அருளு.....எங்கடா இருக்க ????.. ஆத்தா வந்திருக்கேன்..டா....!! ஓடியாட.....கும்புட்டுக்கோ...! அருளுக்கு அருள் சொல்ல ஆத்தா வந்திருகேண்டா.....இன்னொரு வாட்டி கும்புடுடா.....ok ok...போதும் ..என்னடா பிரச்சனை..உனக்கு..?. நீ உனக்குப் பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும்...அவ்வளவுதானேடா.....நான் ஏற்பாடு பண்றேன் டா.... அந்த “மலே..மலே..மும்தாஜ்” ரேன்ஞ்சு இருந்தா..ok வாடா... ? ரேன்ஞ்சு என்ன அவளையே பார்த்துட்டா போச்சு... இதுக்கு போய் ஏண்டா ..நான் ஆடற ஆட்டத்தெல்லாம் நீ..ஆடறே...! இதோட நிறுத்திக்கோடா...நல்லாவே இல்ல....
காஸ்டியூம் கடைக்காரர் : அணிலு, போதும் ஆட்டம் அடங்கு...ஒன் அவர்ல டிரஸ்ஸ குடுக்கறன்னு எடுத்துக்கினு வந்த..என்ன..இங்க ஓவரா சவுண்டு வுட்டுக்கினுகீற.. டிரஸ்ஸ குடுமே...சீக்கிரம்..அடுத்த பார்ட்டி வைய்டிங்..துட்டு எவன்..உங்கப்பனா.. தருவான்?..துட்ட வெட்டுமே..சீக்கிரம்...! .
அணில்குட்டி:-..இந்த அல்ப பய, சாவு கிராக்கி கடையல “ஆத்தா” காஸ்டியூம் ஆர்டர் பண்ணது தப்பா போச்சே..அய்யோ எல்லாரும் படிச்சிட்டாங்களே..அவமானமா போச்சே...blog ல எனக்குன்னு ஒரு status maintain பண்ணிக்கிட்டு இருந்தேனே... அருளு ..உங்களுக்கு அருள் சொல்ல போய் ஏன் நிலைமைய பார்த்தீங்களா...
கவிதா,
கடைசிவரை நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்வதாகவே அறிகிறேன். நீங்கள் சொல்வதப்பார்த்தால் தேவதை போல மிக அழகான பெண்ணைத்தான் நாங்கள் திருமணம் செய்ய விரும்புகிறோன் என்பதாகவே இருக்கிறது. உங்கள் மறுமொழியில் ஏற்க்க முடியாத இன்னொரு விஷயம்: அழகான பெண்கள் குணம் கெட்டவளாகவும் குறையுள்ள பெண் குணவதியாகவும் இருப்பாள் என்பதுபோல் சொல்கிறீர்கள். குறையுடைய ஆணோ பொண்ணோ குணம் கெட்டவர்களாகவும் இருக்க நிரைய வாய்ப்பிருக்கிறது என்பதை மறவாதீர்கள். மேலும் மார்பகம் என்பது வெறும் அழகு சம்பந்தப்பட்ட விஷயம் என நான் நினைக்கவில்லை.
normal-லான ஒரு துணையை அடைய விரும்புவதில் தவறும் இல்லை, அப்படி செய்பவர்கள் குறையுடையவர்களின் வேதனைகளை புரிந்துகொள்ளாமளும் இல்லை. இதைத்தான் ஆரம்பத்திலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
திரு ராகவன் அவர்கள் சொன்னதுபோல், உங்கள் பதிவிலேயே ஒரு முரண்பாடான விஷயம் இருக்கிறது.
//அப்படியே இந்த பெண்கள் திருமண மார்க்கெட்டில் விலைபோக வேண்டும் என்றால், ஏதோ ஒரு விதத்தில் குறையுடைய ஒருவர், மனைவி இழந்த ஆண்கள், தீராத வியாதிக்காரர், அல்லது வயதான ஒரு கிழவருக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கை படவேண்டுயுள்ளது. // -இதன்படி உங்களுக்கு குறை இருந்தாலும் உங்களுக்கு வரும் துணை குறையற்றவராக இருக்க வேண்டும் என்றுதானே எண்ணுகிறீர்கள். நீங்கள் சொன்ன list-ல்(கடைசியை கூட விட்டுவிடுங்கள்) உள்ளவர்களின் குறைகளை புரிந்துகொண்டு அவர்களின் மன வேதனை கொண்டு அவர்களுக்கு வாழ்வளிக்கலாமே! குறையுள்ளவர்களே நிறையுள்ளவர்களை எதிர்பார்க்கும்போது...
நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என உணர்ந்துதான் நான் எழுதியிருக்கிறேன். பொறுமையாக எனது மறுமொழிகளை திரும்பவும் படித்துப்பாருங்கள். இதற்கு மேல் இந்த விஷயம் பற்றி பேச நான் விரும்பவில்லை. நன்றி.
நிலவு நண்பன், அநானி, சிவபாலன் - மிக்க நன்றி
/*
திருமணத்திற்கு பிறகு இது நிகழ்ந்தால் அவசியம் என புரிந்து கொள்ளும் ஆண்கள், திருமணமாகத பெண்களை புரிந்து கொள்வது இல்லை, இப்பெண்கள் ஆண்களால் ஒதுக்கபடுவது வேதனையாக இருக்கிறது.
*/
சுடுகின்ற உண்மை...
அருமையான பதிவு
//என்னுடைய தனிப்பட்ட கருத்து.. திருமணம் என்பது சமுதாயத்தில் (குறிப்பாக இந்திய சமுதாயத்தில்) அனைவரும் செய்யவேண்டிய கடமையாக பார்க்கபடுகிறது.. திருமணத்தை ஒரு சடங்காகவே நான் பார்க்கிறேன். வாழ்க்கை என்பது அதையும் தாண்டிய நெடிய பயணம்,அதில் தனிமை என்பது வரம் //
நன்றி கார்த்திக், உங்களின் கருத்துக்கள் அத்தனையும் சரியே நான் மறுக்கவில்லை..நான் அருள், செயகுமார், மற்றும் பிறருக்கு கொடுத்திருக்கும் பதிலை படித்து பாருங்கள்..ப்ளீஸ்..
11:29 AM
ப்ரியன் - நன்றி
அருள் உங்களின் கருத்து எத்தனை சரியென்று நீங்கள் நினைக்கிறீர்களே நானும் அப்படியே என் கருத்தை நினைக்கிறேன்..நான் புரிந்து கொள்ளவில்லை என அர்த்தம் கொள்ள வேண்டாம், இருந்தாலும் சில விஷயங்களை இப்படி சொல்லதான் வேண்டி இருக்கிறது..நான் சொல்லிவிட்டேன்..யாரையும் இங்கு கட்டாய படுத்தவில்லை. என் பார்வையின் , எண்ணத்தின் வெளிப்பாடு.. அதில் என் நிலைப்பாடும் உறுதி.
மன்னிக்கவும், எனது கடைசி மறுமொழியில் ஒரு பிழை:
//கடைசிவரை நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்வதாகவே அறிகிறேன்.//
கடைசிவரை நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்வதாகவே இல்லை என அறிகிறேன். - என்று இருக்கவேண்டும்.
நன்றி.
கவிதா,
தூங்குபவர்களை எழுப்பி விடலாம்,
தூங்குதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது!!
(பின்னூட்டமிட்டவங்களே, நான் வெறும் உவகதைய தான் சொன்னேனுங்க...)
அன்புடன் கவிதா பதிவின் கருப்பொருளுக்கும் அதன் மீதான விவாதங்களுக்கும் நீங்கள் கொடுத்திருக்கும் பதில் முரணானது. இங்கே பண்பையோ குணத்தையோ எடுத்து கொண்டு பேசவில்லை.உங்கள் பதில் அதுவாகத்தான் இருக்கிறது.பெண்ணை பார்க்கின்றோம் அல்லது ஆணை பார்க்கின்றோம். அவர்களின் பின்புற வக்கிரங்களை எவ்வளவு தூரம் அலசி ஆராய முடியும்.சொந்தங்களில் எடுக்கும் சம்பந்தங்களே சில நேரம் முரண்பாட இருக்கையில் அன்னியத்தில் உள்ள அசௌகரியங்களை நாம் அருதியிட்டு சொல்ல முடியாது . விலகுதல் அல்லது விலக்குதல் ஒன்றே இதற்கு தீர்வு . இதை பற்றி நாம் இப்போது பேச வரவில்லை. அங்ககீனத்தை பற்றிதான் பேசுகின்றோம்.இதற்கு மேல் ஏதேனும் வாதம் செய்தால் அது உன் பார்வை இது என் பார்வை என ஏற்கனவே சொல்லி விட்டீர்கள். இந்த ஒற்றை வரி கருத்துக்கு இவ்வளவு விவாதங்கள் தேவை இல்லையே. இது என் கருத்தும் பார்வையும்.
"நன்றி ராகவன் சார், இப்படி பார்ப்பது க்கூட 80% கல்யாணம் ஆனவர்களும், 40 -50 வயதுக்கு மேற்ப்பட்ட ஆண்களுமே... திருமணம் ஆகாத இளைஞர்கள் இப்படி பார்ப்பது குறைவே...."
சரிதான், நீங்களாக அப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டால் என்ன செய்வது? இதில் சதவிகிதத்தில் வேறு பேச்சு! திருமணம் ஆகாத இளைஞனாக நான் இருந்தவன் என்ற சொந்த அனுபவத்தை வைத்துக் கூறுகிறான். ஒரு ஆணின் வயதுக்கும் அவனது இது சம்பந்தமான பார்வைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பாய்ஸ் படம் பார்க்கவில்லையா? எவ்வளவு பி.ஹெச்.டி. எல்லாம் செய்கிறார்கள் இளைஞர்கள் என்பது தெரியுமா உங்களுக்கு?
மாணவிகளுக்கு மார்க் போடும் மாணவர்கள் எதை அடிப்படையாக வைத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
Stefan Zweig என்ற ஜெர்மன் எழுத்தாளர் எழுதிய புத்தகம் Beware of pity என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அதை படிக்கவும். திருமணம் என்பதை அனுதாபத்துக்கு செய்வது என்பதி விபரீதங்களை நீங்கள் பார்க்கலாம்.
இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
கவிதா,
நீங்கள் சொல்வது போல் உடல் குறைபாடு உள்ள பெண்கள்/ஆண்களின் திருமணம் அவ்வளவு எளிது அல்ல. என்னுடைய தம்பிக்கே சிறிது ஆண்டுகளாக பெண் பார்த்து வருகிறார்கள் அவன் சொந்தமாக தொழில் செய்து வருகிறான் என்கிர காரணத்தினால் அவனுக்கு யாரும் இது வரை பெண் தர முன்வரவில்லை. இதை என்னான்னு சொல்வது.. என்னைப்பொருத்த வரையில் குறைபாடு உள்ளவர்களூகு திருமணம் என்பது ஆண்/பெண் என்ற பேதம் ஏதும் இல்லை அனைவருக்கும் உள்ளது.
கவிதா,
உங்க அணில் குட்டிக்கு வாய் ரொம்ப நீள்கிறது. தனி மனித தாக்குதல் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளபடாது அருள் அவரூடைய கருத்தத சொல்லி இருக்கிறார் நீங்க உங்க கருத்தை சொல்லுங்க இதில் அருள் அவர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகள் கொண்டு திட்டியது நல்லா இல்லிங்க.
அருள்,
நீங்கள் கூறி உள்ள பல கருத்துக்களில் நியாயமே ஆனால் நீங்க கவிதாவின் குடும்பத்தினரை வம்பிற்கு இழுத்தது கண்டிக்கத்தக்கது. அது அவர்களின் சொந்த விஷயம் அதிலும் அவர்களின் மகனுடைய சொந்த விஷயம் அதில் நாம் தலை இடுவது நாகரீகமாக இராது நம்க்கு உரிமையும் இல்லை.
//
நன்றி சுகா, நீங்கள் எதை நிறைகள் என குறிப்பிடுகிறீர்கள், அழகு, அந்தஸ்து, வேலை, இவற்றையா?.. இதுமட்டுமே நல்ல வாழ்க்கை கொடுத்துவிடும் என நினைக்கிறீர்களா?..
//
I did not mean these. I meant something related to unique quality/nature of the person. (Sorry for typing in English)
suka (http://sukas.blogspot.com)
சந்தோஷ் மன்னிக்கனும், இனிமேல் அணில்குட்டி என்னை தவிர யாரிடமும் வாய்திறக்காது என உறுதியளிக்கிறேன், அருள், அணில்குட்டிக்காக உங்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
அருள், செயகுமார், சந்தோஷ், கார்த்திக், சுகா மற்றும், இவர்களை போன்று ஒத்த கருத்துடைய அனைவருக்கும்,
என்னுடைய நோக்கம், இந்த பதிப்பை படித்த பின், மனிதாபமான அடிப்படையிலோ, உதவுகிறேன் என்றோ, காதலித்தோ இப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்யலாம் என ஒருத்தர் (அ) இரண்டு பேர் முடிவெடுக்கலாம். அந்த முடிவு உங்களின் கருத்துக்கள், விவாதங்களினால் மறுபரிசீலனை செய்யப்படலாம்.. அப்படி ஆகக்கூடாது என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே. உங்களின் அனைத்து கருத்துக்களுக்கும் நான் பதில் அளித்து வருகிறேன். உங்களின் கருத்துக்கள் எனக்கு புரியாமல் இல்லை.. ஆனால் குறையுடைய ஒருவர் (ஆண்/பெண்) இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாமே ஏன் ஒரு முடிவுக்கு வரவேண்டும், அது நடைமுறையில் இருந்தாலும் கூட..அதை சிறிதேனும் மாற்றி அமைக்க யாராவது ஒருவர் இருவர் முன் வரக்கூடாதா?.. அப்படி வருவதற்காக நான் இப்படி முரண்பாடான கருத்துக்களை எழுதக்கூடாதா?..உங்களிடம் விவாதம் செய்ய கூடாதா?..
//சரிதான், நீங்களாக அப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டால் என்ன செய்வது? இதில் சதவிகிதத்தில் வேறு பேச்சு! திருமணம் ஆகாத இளைஞனாக நான் இருந்தவன் என்ற சொந்த அனுபவத்தை வைத்துக் கூறுகிறான். ஒரு ஆணின் வயதுக்கும் அவனது இது சம்பந்தமான பார்வைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பாய்ஸ் படம் பார்க்கவில்லையா? எவ்வளவு பி.ஹெச்.டி. எல்லாம் செய்கிறார்கள் இளைஞர்கள் என்பது தெரியுமா உங்களுக்கு? மாணவிகளுக்கு மார்க் போடும் மாணவர்கள் எதை அடிப்படையாக வைத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?//
நன்றி ராகவன் சார், திருமணமாகதவர்கள் செய்யும்/பேசும் பேச்சில், செய்கையில், குறும்பும், கிண்டலும் அதிகம் இருக்குமே தவிர வக்கிரம் இருக்காது. ஆனால் அண்ணன், அப்பா, தாத்தா என்று முறை சொல்லிக்கொண்டு திருமணமான ஆண்களின் அத்து மீறல்கள் அதிகமே..இதை நானும் என் சொந்த அனுபவத்தின் மூலமே சொல்கிறேன். அடுத்து, இந்த குறிப்பிட்ட விவாதம் இந்த பதிப்பதிப்பிற்கு சம்மந்தமில்லாததாலும், இது பதிப்பின் மைய கருத்தை விட்டு வேறு எங்கோ எடுத்து சென்றுவிடும் என்பதற்காகவும், இத்துடன் இதை நிறுத்தி க்கொள்ள நினைக்கிறேன். நீங்களும் புரிந்து கொண்டதற்கு நன்றி.
//Stefan Zweig என்ற ஜெர்மன் எழுத்தாளர் எழுதிய புத்தகம் Beware of pity என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அதை படிக்கவும். திருமணம் என்பதை அனுதாபத்துக்கு செய்வது என்பதி விபரீதங்களை நீங்கள் பார்க்கலாம்.//
படித்துவிட்டு தான் இதற்கு நான் பதிலளிக்க முடியும்...
கவிதா
நல்ல பதிவு.
மனசைத் தொட்டது.
திருமணத்தின் பின்னும் மார்பகங்களை எடுக்கும் நிலை மனைவிக்கு வந்த போது விட்டுப் போன கணவர்கள் இருக்கிறார்கள்.
சந்தோஷ்,
//நீங்கள் கூறி உள்ள பல கருத்துக்களில் நியாயமே ஆனால் நீங்க கவிதாவின் குடும்பத்தினரை வம்பிற்கு இழுத்தது கண்டிக்கத்தக்கது. // ஏற்றுக்கொள்கிறேன் சந்தோஷ். ஒரு புரிதலுக்காகத்தான் அப்படிச்சொன்னேன். நாகு அவர்கள் //சொல்வதற்கு மன்னி க்கவும். உங்களுக்கு திருமணம் நிகழ்ந்து, குறைபாடுள்ள மகனோ/மகளோ பிறந்தால், தங்களால் இதே கருத்துக்களைக் கூறமுடியுமா?
// என்று என்னை கேட்டபோதும் அப்படித்தான் எடுத்துக்கொண்டேன். இருப்பினும் கவிதா இதற்கு மன்னிப்பாராக.
//இதில் அருள் அவர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகள் கொண்டு திட்டியது நல்லா இல்லிங்க.//
விடுங்க சந்தோஷ், அணில்குட்டி எப்போதும் விளையாட்டாகவே பேசுவதால் இதை நான் serious-ஆக எடுத்துக்கொள்ளவில்லை.
உங்கள் கருத்துக்கு நன்றி சந்தோஷ்.
கவிதா,
//இனிமேல் அணில்குட்டி என்னை தவிர யாரிடமும் வாய்திறக்காது என உறுதியளிக்கிறேன், // என்ன இது.
நீங்கள் ஏன் இவ்வளவு serious ஆகிவிட்டீர்கள். அணில் குட்டி எப்போதும் போல் அதன் இயல்போடிருக்கட்டும்.
நன்றி, சந்தரவதனா.
சந்தோஷ், அருள் என் சொந்த விஷயத்தை எழுதியதை நான் தவறாக நினைக்கவில்லை. அது ஒரு விதத்தில் நல்லதும் கூட. நாம் எதை வேண்டுமாலும் எழுதலாம், ஆனால் நடைமுறை சாத்தியம் என்று உள்ளது. எழுதிய நானே அதை செயற்படுத்த முடியாது பின்வாங்க கூடாது இல்லையா.. அதனால் என் மகனை அவர் உதாரணமாக எடுத்து எழுதிய போது பதில் அளிக்க முதலில் சிறிது சங்கடமாக இருந்தாலும், நிச்சயமாக தவறாக நினைக்கவில்லை..நீங்கள் கூட உதாரணத்திற்கு உங்கள் தம்பியை சொன்னதை கவனிக்க..
ஆத்தா... சதம் போடாம வுட மாட்டீங்க போல இருக்கே...
முதல் சதத்துக்கு முதல் வாழ்த்துக்கள்...
//ஆத்தா... சதம் போடாம வுட மாட்டீங்க போல இருக்கே...
முதல் சதத்துக்கு முதல் வாழ்த்துக்கள்... //
நன்றி பாலா, சதம் எல்லாம் போட மாட்டேன்..விவாதம் அப்படி..அவ்வளவு தான்.... முடிந்துவிடும் என நினைக்கிறேன்.. அருள் , செயகுமார், சந்தோஷ் திரும்பவும் தொடராதவரை...
செயகுமார், அருள் இவர்கள் இருவருமே, என்னுடைய எல்லா பதில்களும் முரண்பாடாக இருக்கிறது என சொல்லி இருக்கிறார்கள்.. அவர்களால் என்னுடய பதில்களை ஏற்று கொள்ளவும் முடியவில்லை... ஏன் நான் அவர்களின் கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ளாமல் விவாதத்தை முடித்துவிட்டதாக ஈமெயில் மூலம் தெரிய படுத்தி உள்ளனர்.
இருவருக்காக என்னுடைய விவாதத்தை (அ) பதில்களை திரும்பவும் தொடங்குகிறேன்.
முதலில், எடுத்து கொண்ட மைய கருத்து
1. //மார்பங்கள் இல்லா பெண்ணின் மன உளைச்சல்” இதில் முரண்பாடாக நண்பர்கள் நினைப்பது நான் ஆண்களை அதிகமாக சாடியிருப்பதாக//.
இல்லை..என்பதே சரி, ஒரு விஷயத்தை பேசும் போது அது தொடர்புடைய மற்ற கருத்துக்களை சேர்த்து கொள்வதில் தவறில்லை. அதாவது ஆண்களால், இதை தவிர பிற காரணங்களுக்காகவும் பெண்கள் நிராகரிக்கபடுவது நம்மிடையே உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
2. //அனைவருமே ஆண்களும் தான் இப்படி நிராகரிக்க படுகிறார்கள் என் சொல்லியிருப்பது...//
என்னுடைய ‘ஆண்களின் நிழலில்“, பதிப்பில் ஒட்டு மொத்தமாக ஆண்களுக்கு மட்டுமே பரிந்து எழுதியிருக்கிறேன். அதில் 2 நண்பர்களை தவிர, யாருமே, பெண்களுக்கு பரிந்து விவாதம் செய்யவே இல்லை என்பது குறிப்பிட தக்கது. “அழகு நிலையங்களில்..” பதிப்பில் பெண்களை சாடியே எழுதியிருக்கிறேன். அதிலும் ஒருவரை தவிர பெண்களுக்கு பரிந்து யாரும் எழுதவில்லை.
இந்த பதிப்பின் மைய கருத்தை அழுத்தமாக கூற தேவையான உதாரணங்களை கொடுக்க வேண்டியுள்ளது. அதை ஆண்களை நான் நேரடியாக/மறைமுகமாக சாடுகிறேன் என்றோ, ஆண்களும் பெண்களால் நிராகரிக்கப்டுகிறார்கள் என்பதை நான் மறுக்கிறேன் என்றோ பொருளல்ல. அதற்கான பதிப்பு வரும்போது நிச்சயம் அதைபற்றி விரிவாக எழுதமுடியும், விவாதம் செய்யமுடியும். ஒரு குறிப்பிட்ட பிரச்சனை பேசும் போது, அது சம்பந்தமான உதாரணங்களை எடுத்து சொன்னால் அது எளிதாக புரியும்.
3. //பிரச்சனை எங்கும் இருக்கிறது, யாருக்கும் இருக்கிறது.. அதை அவர்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்ற கருத்தும் வைக்கப்பட்டுள்ளது...//
ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை பேசும் போது, ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை, அதில் இதுவும் ஒன்று, இதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும் என சொல்லவது வருந்ததக்கது.. அப்படி பார்த்தால், யாருமே எந்த பிரச்சனையும் முன் வைக்க முடியாமல் போகாதா?..
பொதுவாக ஒரு பிரச்சனையை முன் வைக்க முக்கிய காரணம் என்ன?..
1. அப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்று தெரியபடுத்தவதற்கு
2. அதற்கு ஒரு தீர்வு காண்பதற்கு
3. அந்த பிரச்சனை பற்றிய அறியாமையை தீர்ப்பதற்கு
4. அந்த பிரச்சனை பற்றிய அறிவை கொடுப்பதற்கு..
மேற்கூரிய 4 லில், எல்லாருமே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அவரவருக்கு தேவையானதை மட்டுமே தெரிந்து கொண்டோ, செயற்படுத்துக் கொண்டோ போகலாம். எதுவுமே வேண்டாம் என்றாலும் நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை.
4. //திருமணம் என்பது அந்த தனிப்பட்ட பிரச்சனை, அதை அந்த பெண்ணோ அல்லது ஆணோ தான் முடிவெடுக்க வேண்டும்//.
உண்மை, அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் நிர்ணயிக்க வேண்டும். ஆனால் அப்படியா நம் சமூகத்தில் நடைபெறுகிறது.. எல்லோருடைய சம்மதத்துடன் மட்டுமே நடைபெறுகிறது.
1. சில விவாதங்களில், எங்களின் தனிப்பட்ட விருப்பம் எனக்கூறும்
நீங்கள்,
2. சில விவாதங்களில், நாங்கள் அப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள எங்கள் சொந்தம் அனுமதிக்க வேண்டுமே என சொல்லி இருப்பது முரண்பாடான கருத்துக்கள் அல்லவா.
இதில் உங்களுக்கு என்ற நிலைப்பாடு இல்லை, நான் இப்படி சொன்னால் அப்படியும், அப்படி சொன்னால் இப்படியும் விவாதம் செய்தால் பிரச்சனைக்கு முடிவு வராது என்பதைவிட என்னை தனிப்பட்ட முறையில் எதிர்ப்பதாகவே உள்ளது.
5. //அனுதாபத்தினால், உதவி என்றோ திருமணம் நடக்க கூடாது.....//
உறவுக்குள் ஏற்படும் திருமணங்களை எடுத்து கொள்ளுங்கள், பேசி வைப்பதால் அது ஒருவரை ஒருவர் தனக்கு இவர் தான் என்ற முடிவாக்கி விடுவதால் மனது அப்படியே அதை ஏற்று கொள்கிறது. இதை ஆழ்ந்து பார்த்தால் அந்த இருவரையும் உறவு என்ற முறையில் கட்டாயபடுத்திவிட்டோமோ என்று தோன்றும்.
ஒருவரை ஏன் நமக்கு பிடிக்கிறது..?!! அவரின் குணம், பழகும் முறை, அழகு போன்ற விஷயத்திலே தான் பிடிக்க ஆரம்பிக்கிறது. இப்படி பட்ட பெண்ணின் மேல் கொள்கின்ற அனுதாபம் கூட நாளாக நாளாக அன்பாக மாறி திருமணத்தில் முடியாதா?. அனுதாபமும், உதவவேண்டும் என்ற எண்ணமும் எப்போது வருகிறது..(குறை உள்ள பெண்ணிடம்) அவர்களின் மேல் நாம் கவனம் செலுத்தும் போது.. அந்த கவனம் தான் அனுதாபம் , அந்த அனுதாபம் அன்பாகிறது. இது நேர் எதிராகவும் மாறாலாம் திருமணதிற்கு பிறகு, அப்படி ஆவது எல்லா திருமண வாழ்க்கைக்குமே பொருந்தும். அனுதாபத்தினால் ஏற்பட்ட திருமணங்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல.
நல்ல முறையில் நன்றாக இருக்கும் இருவரது திருமண வாழ்க்கையிலும் பிரச்சனை வரத்தான் செய்கிறது. பிரச்சனை வரும் என்பதற்காக நாம் திருமணம் செய்து கொள்வதில்லையா என்ன?..அது குறையுள்ளவர்களுக்கும் பொருந்தும்.
6. குறை உள்ளவர்களின் திருமணம் சிரமம் தான், குறை உடையவர்கள் குறையுடையவர்களை ஏற்பதில்லை, குறையுடையவர்கள் ஏன் நன்றாக இருப்பவர்களை திருமணம் செய்ய எண்ண வேண்டும், அல்லது நான் அப்படி சொல்ல வேண்டும்...
ஒரு பிரச்சனை பேசும் போது, நம் நடை முறையில் இப்படி தான் உள்ளது, ஏன் இப்படி இருக்கக்கூடாது என நாம் யோசிக்க கூடாதா..?. இது இருபாலாருக்கும் பொருந்தும். எதுவுமே நாம் யோசிப்பதில் தான் உள்ளது.
நடை முறையில் இருக்கும் ஒன்றை பேசுவதற்கு, இப்படி ஒரு பதிப்பு அவசியம் இல்லையே?..
7. இந்த பதிவின் மைய கருத்து,
1. பெண்களுக்கு என்று இப்படியும் ஒரு பிரச்சனை திருமணத்தின் போது உள்ளது என்பதை ஆண்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே. (ஆண்கள் பிரச்சனை திரும்பவும் கொண்டு வராதீர்கள், அதற்கு முன்பே எழுதிவிட்டேன்)
2. புரிந்து கொண்டவர்கள் யாரையும் அவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்ளதான் வேண்டும் என கட்டாய படுத்தவில்லை
3. ஒரு சிலர் (சில ஆண்கள் விதவை மறுமணம், விவாகரத்து பெற்ற பெண் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என் முடிவு எடுத்து இருப்பார்கள்) இப்படியுள்ள பெண்களையும் திருமணம் செய்யலாம் என முடிவெடுக்கலாம்.
பெண்ணின் பிரச்சனை முன் வைக்கப்பட்டுள்ளது..அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம், ஏன் இப்படி அமைந்தால் என்ன என்று கேட்டு பாருங்கள். உங்கள் இருவரையுமே தனிப்பட்ட முறையில் நீங்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என சொல்லவில்லை சொல்லிய கருத்து அத்தனையும் பொதுவானவை. பொதுவாக மட்டுமே ஒரு விஷயத்தை பார்க்கும் பட்சத்தில் அது இப்படி ஒரு விவாதத்தை ஏற்படுத்தாது.
சாத்துய கூறுகள் நிறைய இருந்தாலும், நம் நடைமுறை இப்படிதான் என்றாலும், இப்படி நடந்தால் என்ன? தவறில்லையே.... ஏற்றுகொள்ள கூடாத ஒன்றா என்ன?
விட்டுத்தள்ளுங்கள் கவிதா,
உலகத்தில் ஒருவரேனும் தாங்கள் கூறியுள்ளதைக் கண்டு மணம்புரிவார்கள் என்று நம்புவோம்.
ஆனால் ஒன்று, டோண்டு பற்றிய என்னுடைய எண்ணங்களை, இந்தப் பதிவில் அவருடைய மறுமொழிகள், மறுமதிப்பீடு செய்யவைத்துவிட்டது.
நன்றி நாகு, செய்குமார் கூட இதுபோன்ற ஒரு கருத்தை ஈமெயில் மூலம் சொல்லி உள்ளார். மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் வலிய சில கருத்துக்களை ராகவன் சாருக்கு பதிலாக கொடுத்தேன்..ஆனால் அது புரிந்து கொள்ள மட்டுமே..அவரை பற்றி விவாதிக்க இல்லை..
பெண் ஆணை விவரித்து/விளித்துப் பாடுவது போன்ற பாடல்க/இலக்கியங்கள் எல்லாம் பெரும்பாலும் ஆண்களால் தான் படைக்கப்பட்டன, படைக்கப் பட்டும் வருகின்றன. பெண்ணின் மன நிலையை, உணர்வுகளை ஒரு பெண் ஒருத்தி படைப்பின் மூலமாக வெளிப்படுத்தும் போது, ஆம்.. அதன் originality அங்கே ஓங்கி நிற்கிறது.
'கட்டிப் புடி கட்டிப் புடிடா' என ஒரு ஆண் பெண் பாடுவதாக எழுதுவதற்கும், 'வசீகரா' & 'பெண்களை நிமிர்ந்து பார்த்திரா உன் இனிய கண்ணியம் பிடிக்குதே!' என்றெல்லாம் பெண்ணே பெண் பாடுவதாக எழுதுவதற்கும் எண்ணற்ற வேறுபாடுகள் உண்டு.
அவைத் தமிழில் 'மார்பகம்' என அழைக்கப்படும் 'முலை' இல்லாத ஒரு பெண்ணின் நிஜமான மன நிலையை எழுத மட்டுமல்லாது, அதைப் புரிந்து கொள்ளவே பெண்ணுக்குரிய மனது தேவை. துணிச்சலான அதே சமயத்தில் தேவையான செயல் நீங்கள் செய்தது.
'அச்சச்சோ பாவம்' என் இவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதாக நான் சொன்னால் அது நடிப்பாகத் தான் இருக்க முடியும். உண்மையாகவே பரிதாபப்பட்டாலும் அது தற்காலிகம் தான்.
உண்மையில் பதிவின் தலைப்பில் உள்ள வசீகரம் கண்டே இதைப் படித்தேன். பிறரும் அப்படித்தான் இருக்க வேண்டும்.சேதுசமுத்திரத் திட்டம் குறித்து நீங்கள் எழுதியிருந்தால் 77க்கும் மேற்பட்ட மறுமொழி இடப்பட்டு இருக்குமா என்பது சந்தேகமே.
Nancy Friday மாதிரி எழுதக் கூடிய எழுத்தாளர்களும் தமிழில் தேவை. இல்லாதது நல்லதல்ல என்றே படுகிறது.
-குப்புசாமி செல்லமுத்து
"இனிமேல் அணில்குட்டி என்னை தவிர யாரிடமும் வாய்திறக்காது என உறுதியளிக்கிறேன்"
இவ்வளவு பெரிய விவாதத்தில் கலந்து கொண்டு கவிதாவும் (அணில் குட்டியும்) களைத்து விட்டார்களா என்ன? அணில் குட்டியின் கருத்துச் சுதந்திரத்துக்கு வேட்டு வைக்க வேண்டாம் என்று கவிதாவைக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி, குப்புசாமி சார், இந்த கருத்து, எனக்காக கொடுக்கப்பட்டிருக்கு நான் நினைக்கல, பெண்களுக்கு கொடுக்கப்பட்டதாக நினைத்து சந்தோஷம் அடைகிறேன்..நீங்கள் சொல்லியது போன்றி தலைப்பை பார்த்து ஈர்த்து படித்தவர்கள் அதிகமே.. என்னுடை "உங்களுடைய ஒரு ரூபாய்" என்ற பதிப்பிற்கு இத்தனை கருத்துக்கள் கிடைக்கவில்லையே என நான் மனம் வருந்தியிருக்கிறேன்.
நன்றி சிவகுமார்ஜி, ஒருவர் தவறாக நினைக்கும் பட்சத்தில், அது தவறு என்றும் உணர்ந்ததால், இப்படி அனில்லை வாய் திறக்க கூடாது என சொல்ல வேண்டியதாகி விட்டது.. கவிதாவிடம், அணில் பேசுவதையே நீங்கள் இனி ரசிக்கும்படி இருக்கும்..
//மொச்சைக்கொட்டையும், அவரையும் தொடர்ந்து தின்று வர மார்பக புற்றுநோய் வராமலும்,இருந்தால் குறையவும் வாய்ப்பு இருப்பதாக எங்கோ படித்த நினைவு...//
உங்கள் கருத்துக்கு நன்றி தமியன்
அடுத்த பதிவு எப்போ கவிதா??
-குப்புசாமி செல்லமுத்து
Post a Comment