பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் கேப்பங்கஞ்சி ..இன்று நம்முடன் இருப்பவர் டவுசர் பாண்டி "செந்தழல் ரவி" எப்போதும் யாரையாவது ஒருவரை பற்றி எழுதி பேரும் புகழும் திட்டும் வாங்கிக்கொண்டே இருக்கிறார். எங்களிடம் இன்று மாட்டி சின்னா பின்னமாக போகிறார் என்பது மட்டும் நிச்சயம்..... இதோ ..ரவியின்.. தழல்கள்...
உட்காரவைத்து மரியாதையாக கேட்ட கேள்விகள் : -
கவிதா :- வாங்க ரவி எப்படி இருக்கீங்க.. ?. உங்களுக்கு பிளாக்' தவிர வேறு பொழுது போக்கே இல்லையா? அல்லது உங்களுக்கு பிளாக் தவிர வேறு என்ன தெரியும்?
அட நீங்க வேற கவி. அலுவலகத்தில் வேலை டவுசர் கிழியுது. உபுண்டு கூட இன்ஸ்டால் பண்ணத்தெரியாத நீ எப்படி மென்பொருளாளர் என்று ஒருவர் கேட்டுட்டார். (அவர்தாங்க என்னோட டேமேஜர்). அதனால் மதிய உணவை உண்டு, அந்த உபுண்டுவை எப்படி நிறுவுவது என்று தாவு தீர்ந்து யோசித்து வருகிறேன்...தங்கமணி வீட்டில் அனுமதிப்பது 30 நிமிடம் மட்டுமே...(அது அவர் கோலங்கள் பார்க்கும் நேரம்). தொல்காப்பியன் மற்றும் தோழரின் உருப்புடி இல்லாத வசனங்களுக்கு நடுவே கொஞ்சம் பதிவைவும் பார்த்து / எழுதி வருகிறேன்...
அணில்:- ரவி அண்ணே மொதல்ல நீங்களும் கவி’யும் எப்படி ராசியானிங்கன்னு சொல்லுங்க. .எனக்கு காதுல ஒரே பொக.......
அன்பு சகோதரிம்போம்...அப்புறம் அராஜக ஆட்சிம்போம்...மறுபடி இணைஞ்சு மிரட்டுவோம்...அரசியல்ல இதெல்லாம் சகஜம் அணிலு...
கவிதா:- எப்போதுமே அடுத்தவர்களையே கவனித்து அவர்களை பற்றி எழுதி நேரத்தை வீணாக்கவேண்டுமா? பதிவர்களை பற்றி சில சமயங்களில் நீங்கள் எழுதும் பதிவுகள் அவர்களை புண்படுத்துவதாக இருக்கிறது. இது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ( இது என்னை குறிப்பிட்டு கேட்கவில்லை)
கண்ணில் படும் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறேன்... டெஸ்ட் எஞ்சினீயருங்க நானு... அதனால இயற்கையாவே இப்படி ஆகிருச்சு...நான் இதுவரை சுட்டிக்காட்டிய ஸ்பெல்லிங் மிஸ்டேக் மட்டும் நூத்துக்கணக்குல இருக்கும்...சிலசமயம் புண்படுத்தினாலும், பலசமயம் பண்படுத்தியிருக்கிறது...(என்று நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்)
அணில்: எப்ப பாத்தாலும் நீங்க யாரோட டவுசரயாவது கழட்டறீங்களே....... உங்களுக்கு யாருக்குமே டவுசர் போட்டு வுட தெரியாதா?
கை வலிக்கிற அளவுக்கு டவுசர் போட்டுவுட்டுக்கினு கீறேன் அணிலு.. வெளம்பரம் எதுக்குன்னு வெளிய சொல்றதில்ல...
கவிதா: சமீபத்தில் பார்ப்பனீயம் For Dummies !!!! - இப்படிப்பட்ட தரமான பதிவுகள் கூட உங்களுக்கு எழுத தெரியுமா என யோசிக்க வைத்தது.! ஏன் நீங்கள் தொடர்ந்து இது போன்ற தரமான பதிவுகளை எழுதக்கூடாது.? (குறிப்பிட்டு தனிமனிதரை சாடாமல்)
அவ்வப்போது தோன்றுவதை எழுதி வருகிறேன்...500 பதிவுக்கு மேல எழுதியாச்சு...அவற்றில் 95% மொக்கையாக இருக்கக்கூடும்...உருப்படியாக எழுத தொடர்ந்து முயற்சி செய்துவருகிறேன்...ஆனால் என்னுடைய வலைப்பதிவை படிக்கும் பலர் ஏதாவது லைட்டாகவே எதிர் பார்க்கிறார்கள்.... சகோதரி ராப் me the first என்ற கமெண்டு போட்டால் அது நல்ல நகைச்சுவை பதிவு என்று பெஞ்ச் மார்க் செட் ஆகி உள்ளது. ஆகவே ராப் இடம் me the first வாங்க தொடர்ந்து முயற்சி செய்வேன்....
அணில்: அண்ணா...!! ஏங்கண்ணா உங்க பேருக்கு முன்னாடி... செந்தழல் ன்னு இருக்கு..அப்படீன்னா என்னங்கண்ணா?
ரெட் பயர்.. தீப்பொறி திருமுகம் மாதிரி ஒரு டெரர் பீலிங் வர நானே வெச்சுக்கிட்டேன் ஹி ஹி...நீ கண்டுக்கிடாத...
கவிதா: நான் உங்கள் பதிவுகளையும், உங்களை புரிந்துகொண்ட விதத்திலும் , உங்களுக்கு நல்ல சிந்தனைகள், சமுதாயத்தின் மேல் உங்களுக்கு உள்ள அக்கறை எல்லாமே குறிப்பிட்டு சொல்லகூடியது .அதை இன்னும் நாகரீகமாக செம்மையாக செய்ய முடியும் என்று நீங்கள் நினைத்ததுண்டா? :))))
பொதுவெளியில் விளம்பரம் இல்லாமல் தொடர்ந்து செய்தே வருகிறேன்... பதிவுகளில் பெரும்பாலானவைகளை வெளிப்படுத்துவதில்லை...இனிமேலும் தொடர்ந்து இந்த சமுதாயத்துக்கு பயன் அளிக்கும் வகையில் - என்னுடைய இறுதி காலம் வரை - வாழ்வேன் என்று நினைக்கிறேன்... என்னுடைய தந்தையாரும் அப்படி இருந்தார்...அவர் தான் எனக்கு ரோல் மாடல்... இளம் வயதிலேயே நல்ல எண்ணங்களையும், தமிழ் காமிக்ஸ் புத்தகங்களையும், ருஷ்ய தமிழாக்க நாவல்களையும், சர்க்கரை வியாதியையும் எனக்கு தந்த புண்ணியவான் !!!!
கவிதா: உங்கள் அனைத்து பதிவுகளையும் நான் படிப்பதில்லை, காரணம் மிக மோசமான பின்னூட்டங்கள். இதை தடுக்க ஏதாவது நீங்கள் செய்ததுண்டா..? தயவுசெய்து என்னால் போட்ட பின்னூட்டங்களை எடுக்க முடியவில்லை என்று technical issues relate செய்து பதில் சொல்லாதீர்கள். அது நம்ப கூடியதாக இருக்காது.
கடந்த நாலைந்து பதிவுகளாக தான் இப்படி...தேவையற்ற பல பின்னூட்டங்களை டெலீட் செய்து வருகிறேன், சில என்னுடைய கண்ணில் படாமல் தவறிப்போகலாம்...அதையும் யாராவது சுட்டிக்காட்டினால் எடுத்துவிடுகிறேன்...என்னுடைய பதிவில் ஒரு சிலர் தமிழ்ச்சி மீது தங்களது தனிப்பட்ட கோபங்களை காட்டி வருகிறார்கள்...அவர்களிடம் கேட்பது ஒன்றுதான்...உங்களுடைய கொலைவெறிக்கு என்னுடைய பதிவை கலீஜ் ஆக்கிவிடாதீர்கள்...
கவிதா: உங்கள் குடும்பத்தினர் உங்கள் பதிவுகளை படிப்பதுண்டா? ஏதாவது விமர்சனம் உண்டா?
தங்கமணி பொதுவாக அறுசுவை டாட் காம் மட்டுமே படிக்கிறார்... என்னுடைய பதிவை படிப்பதில்லை... அறுசுவை டாட் காம் என்னுடைய குடும்பத்தை பொறுத்த வரை பெரிய அளவில் இதுவரை உதவி செய்யவில்லை - என்னத்தை சொல்லி புலம்ப ஹி ஹி:)
கவிதா: உங்கள் வாழ்க்கையின் லட்சியம் ?
தகவல் தொழில்நுட்பத்தை ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கொண்டு சென்று சேர்ப்பது...அதை பற்றி அடிக்கடி சிந்தித்தும், அதற்கான தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள என்னை தயார்படுத்தியும் வருகிறேன்...
கவிதா: என்னுடைய ப்ளாக்'ல் என்னுடைய புகைப்படத்தை போடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் குறிப்பாக உங்கள் பதிவில் நீங்கள் மற்றவர்களின் புகைப்படங்களை உபயோகப்படுத்தி இருப்பதை பார்த்து அப்படி ஒரு தவறை செய்யக்கூடாது என்று முடிவுசெய்தேன். இப்படி என்னை போன்றவர்களுக்கு பிளாக் பற்றிய Negative Impact வரும்படி செய்கிறீர்களே அது சரியா?
அனுமதியுடனே படங்களை வெளியிடுகிறேன்.....!!!! என்னுடைய வலைப்பதிவை படித்து ப்லாக் பற்றிய நெகட்டிவ் இம்பேக்ட் வருகிறது என்பதை ஏற்றுக்கொள்ள கஷ்டமாக இருக்கிறது...(நான் அப்படி என்ன எழுதிட்டேன் ஹி ஹி)
கவிதா:- மிக எளிதாக நீங்கள் ஒரு மனநிலையில் இருந்து மற்றொரு மனநிலைக்கு மாறுகிறீர்கள். நீங்கள் உணர்ச்சி வசப்படுவதை பற்றி சொல்கிறேன் நேற்று உங்களுக்கு பிடிக்காத ஒருவர் இன்று பிடிக்கிறார். இன்று பிடித்த ஒருவர் நாளை பிடிக்காமல் போகிறார். ஏன் இந்த தடுமாற்றம்.?
எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லையே ? தவறு செய்தவர்கள் / அல்லது என்னை பற்றி தெரியாதவர்கள், நான் யார் என்று தெரிந்து, உணர்ந்து என்னிடம் திரும்ப வரும்போது அதனை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு ? எளிதாக உணர்ச்சியின் பால் விழுவது என்று என்னைப்பற்றி சொல்வது கொஞ்சம் சரிதான்...ஆனால் நான் தன்னிலை எப்போதும் மறந்ததில்லை என்றே நினைக்கிறேன்...
கவிதா: (மேல் கேள்விக்கு தொடர்புள்ள கேள்வி) உங்களை பற்றி நீங்கள் Self analyse செய்து பார்த்து இருக்கிறீர்களா?
கொரியாவில் உடல் நலம் சரியில்லாம் இருபது நாட்களுக்கு மேல் அசைய முடியாமல் படுத்திருந்தபோது நிறைய நேரம் கிடைத்தது...அப்போது நான் சிந்தித்துக்கொண்டிருந்தது எல்லாம் தங்கமணியை பற்றித்தான்...அதனால் என்னைப்பற்றி அனலைஸ் செய்ய மறந்துவிட்டேன்...அடுத்த முறை நேரம் கிடைத்தால் செய்கிறேன்...
கவிதா : ஒரு பெண்ணுக்கு நிரந்தர உறவுகள் - திருமணத்திற்கு முன்னா ? பின்னா?
இப்படி யோசிப்பதே தவறு...திருமணத்துக்கு அப்புறம் கணவன் தான் எல்லாம் என்ற பழைய சிந்தையில் இருந்து பெண்கள் வெளிவரவேண்டும்...புகுந்த வீடு, பிறந்த வீடு, அலுவலகம் என்ற மூன்றையும் சிறப்பாக எதிர்கொள்ளவேண்டும்...
கவிதா: "டவுசரை கழட்டடுதல்" இதற்கு என்ன அர்த்தம்? அந்த குறிப்பிட்ட பதிவரின் மானத்தை பலர் எதிரில் வாங்கிவிட்டதாக அர்த்தமா? அப்படி என்றால் பெண் பதிவர்களுக்கு? :((((((((( (அப்படி ஏதும் தனியாக வார்த்தைகள் நீங்கள் வைத்திருந்தால் சொல்லவே வேண்டாம் ) ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மானத்தை மறைக்கத்தானே உடைகள். மிக எளிதாக நீங்கள் பொதுவில் உபயோகிக்கும் இப்படிப்பட்ட வார்த்தைகள் சரியா?
இது லக்கியிடம் இருந்து தொற்றிக்கொண்டது...இவை மிகவும் லைட்டான, ஜாலியான வார்த்தைகள்...இவற்றால் யாரும் பாதிக்கப்படுவதாக நினைவில்லை...அப்படி யாராவது பாதிக்கப்பட்டால் அவர்கள் உடனே மனநல மருத்துவரை தான் சந்திக்கவேண்டும்....
கவிதா:- ஹாஸ்டல் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி.
ஒருமுறை என்னுடைய தட்டில் வந்து விழுந்த உணவில் புழு. பாதிரியாரிடம் சென்று காட்டினேன்..பாதர், பொங்கல்ல புழு இருக்கு...என்றேன்..."அதுக்கு ?" என்பது போல் பார்த்து, "எடுத்து போட்டுட்டு சாப்பிடவேண்டியது தானே" என்றார்... எடுத்து போட்டுவிட்டு சாப்பிட்டேன்...இது நடந்தது என்னுடைய பதினாலு வயதில்...என்னுடைய சகிப்பு தன்மையை பல மடங்கு உயர்த்தியது இந்த நிகழ்ச்சி...
அப்புறம் இன்னோரு நிகழ்ச்சி...
பெட்டி சாவியை தொலைத்துவிட்டேன்... "பாதர்..என்னுடைய சாவியை தொலைத்துவிட்டேன்" என்றேன்...எங்கே தொலைத்தாய் என்றார்...அதிரடியாக நான் கேட்டேன்.."பாதர்..அறிவு இருக்கா ? எங்கே தொலைத்தேன் என்று தெரிந்திருதால் ஏன் உங்களிடம் வந்து சொல்கிறேன்... நானே எடுத்துக்கொண்டிருக்க மாட்டேனா" என்று..என்னை நாலு சாத்து சாத்திவிட்டு....அவர் யோசனையில் ஆழ்ந்துவிட்டார்...சில வாரங்கள் யாரிடமும் எதையும் பேசாமல் இருந்தார்...ஏன் என்று தெரியவில்லை...
ஓடவிட்டு அடித்து கேட்ட கேள்விகள் :
1. பிடித்த விளையாட்டு , பிடித்த ஊர், பிடித்த நடிகர்?
பேஸ்கட் பால், கோவை, சிங்கமுத்து..
2. பிடித்த பெண் (அம்மா, மனைவி, சகோதரி தவிர)?
அன்னை தெரசா
3. உங்களின் ரோல் மாடல் யாராவது?
அப்பா
4. உங்களின் நீண்ட நாள் கனவொன்று ?
ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தில் சிறு நகரம் - ஆரோவில் மாதிரி - உருவாக்கனும்..
5. பதிவர்களில் இன்னமும் சந்திக்க வேண்டும் என்று நினைக்கும் 3 பேர்?
வீ.எஸ்.கே, நரசிம், வவ்வால்
6. என்னுடைய பிளாக் Introducer யாருன்னு கண்டுபிடிச்சி தரீங்களா?
குமரன்
7. பெண் சுதந்திரம் என்பது?
தனக்கு தேவையானதை தானே முடிவெடுத்து பெற்றுக்கொள்ளும் சுகந்திரம்...
8. மற்றவர்களின், உங்களை பற்றிய எழுத்துக்களை நீங்கள் ஏன் எளிமையாக எடுத்துக்கொள்வதில்லை?
நான் வளர்ந்த முறை அப்படி...
9. சிகிரெட் பிடிப்பதை ஏன் விட்டீர்கள்? சிகிரெட் பிடிப்பதைவிட்ட பிறகு ஏற்பட்ட மாற்றம் குறிப்பாக உடல் எடை கூடுகிறதா?
மனைவிக்காக...அதிகம் பசிக்கிறது...சர்க்கரை வியாதி கட்டுக்குள்...
10. நீங்கள் செய்வதில் உங்களுக்கு பிடித்த சமையல்.
சாம்பார்...
11. ஒரு குட்டி கவிதை சொல்லுங்கள்...
அவள்...
பழமையையும் புதுமையையும் ஒருங்கே அமைந்த பதுமை...
மெட்டியுடன் புகைக்கிறாள்....
12. உங்களுக்கு பிடித்த உங்களுடைய எழுத்து.....ஏதாவது 3 பதிவுகள்.
1. கோழித்திருடன்
2. வீராசாமி
3. டாஸ்மாக்கில் பின்னவீனத்துவ எதிர் அழகியல் கவிஞர்கள்
13. நீங்கள் உங்கள் குழந்தைக்கு எந்தவிதத்தில் உதாரணமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
என்னுடைய டாடி என்னை எப்படி பாதித்தாரோ, அதே போல...
ரவி'யின் இன்றைய தத்துவம் : தத்துவம் என்று பழையன எதையும் பாலோ செய்யவேண்டாம், நீயே உன்னுடைய தத்துவத்தை உருவாக்கு !!!!
கேப்பங்கஞ்சி with கவிதாவுடன் – “செந்தழல்” ரவி
Posted by : கவிதா | Kavitha
on 15:18
Labels:
கேப்பங்கஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
14 - பார்வையிட்டவர்கள்:
ரவி ரொம்ப நல்லா வந்து இருக்கு !! :))
//அன்பு சகோதரிம்போம்...அப்புறம் அராஜக ஆட்சிம்போம்...மறுபடி இணைஞ்சு மிரட்டுவோம்...அரசியல்ல இதெல்லாம் சகஜம் அணிலு...//
அணில் வாயை அடைத்ததற்கு நன்றி... தாங்கமுடியல அதோட தொல்லை.
//நான் இதுவரை சுட்டிக்காட்டிய ஸ்பெல்லிங் மிஸ்டேக் மட்டும் நூத்துக்கணக்குல இருக்கும்..//
?? ரவி..நிஜமாவா? நீங்க தான் அந்த பிழைதிருத்தியா..? நான் இந்த ற, ர , ரு, று வையும் போட்டு கொல்றேனே.. எனக்கு பிழைத்திருத்தவே இல்லையே நீங்க..?
//ராப் me the first என்ற கமெண்டு போட்டால் அது நல்ல நகைச்சுவை பதிவு என்று பெஞ்ச் மார்க் செட் ஆகி உள்ளது.//
இங்க மீ த ஃபஸ்ட்டு... இந்த பதிவை நகைசுவையா யாரும் எடுத்துக்கூடாது இல்லையா.. :)))
//அப்போது நான் சிந்தித்துக்கொண்டிருந்தது எல்லாம் தங்கமணியை பற்றித்தான்...//
அது காதல் மயக்கம்..ப்பா...
//இது லக்கியிடம் இருந்து தொற்றிக்கொண்டது...//
ம்ம்..அவரையும் கேட்டுட்டா போகுது..
//சர்க்கரை வியாதி கட்டுக்குள்... //
நான் உடல் எடை கூடுகிறதா என்று கேட்டேன்.. சர்க்கரை வியாதி இருப்பதால் உடல் எடை கூடாதா?
//ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தில் சிறு நகரம் - ஆரோவில் மாதிரி - உருவாக்கனும்....//
இப்படி கூட கனவுகள் ஒரு மனிதனுக்கு இருக்குமா என்று என்னை சிந்திக்க வைத்தது.. :)))
//6. என்னுடைய பிளாக் Introducer யாருன்னு கண்டுபிடிச்சி தரீங்களா?
குமரன் //
ஏன் ரவி இப்படி..!! இந்த பதிலை படித்து நான் சிரித்ததற்கு அளவே இல்லை... !! நீங்கள் ஒரு துப்புஅறியும் சாம்பு சரியான ஆளை கண்டுபிடிப்பீர்கள் என்று பார்த்தால் குமரன் என்று சிரிக்கவைத்து விட்டீர்கள்.
எனக்கு தெரிந்து ஒரே ஒரு குமரன் தான்.. அவருக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை.. ஒரு முறை கூட அவரிடம் நான் ஆன்லைனிலோ, ஈமெயிலிலோ பேசியதில்லை... !!
சரி குமரன் என்ற சொல்ல என்ன காரணம் ...? அதை சொல்லுங்கள்..
என்னவோ.. இப்பவும் என் இண்ட்ரடியூஸர் சேஃப் ஆக இருக்கிறார் என்பதில் எனக்கு சந்தோஷமே..! எப்பவும் எப்போது தெரிந்து யாரிடம் கல்லடி கிடைக்குமோ என்று அவருக்கு உள்ளூக்குள் ஒரே பயம் தான்.
ஏன்'ன்னு கேட்கறீங்களா.. என் வாயும் அணில் வாயும் சும்மா இருந்தால் தானே.. :))))))
//இது நடந்தது என்னுடைய பதினாலு வயதில்...என்னுடைய சகிப்பு தன்மையை பல மடங்கு உயர்த்தியது இந்த நிகழ்ச்சி...//
:((((( சாப்பிட்டது உங்களின் சகிப்பு தன்மையை காட்டுகிறது.. சாப்பிடாமல் இருந்திருக்கலாம் என்று நீங்கள் நினைத்துண்டா... ? புழுவில்லாத உணவை அவர்கள் நமக்கு அளிக்க வேண்டும் என்ற ஏதாவது செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தோன்றியதா? ..
ஓ... ராசியாயிட்டீங்களா... சந்தோஷம்..
நல்லா இருங்க.. நல்லா எழுதுங்க.. எல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சுக்குங்க..
//நல்லா இருங்க.. நல்லா எழுதுங்க..//
நன்றி !!
//எல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சுக்குங்க..//
உண்மைத்தமிழன்..ஆனா இது எதுக்குன்னு புரியல.. !!
//தங்கமணி பொதுவாக அறுசுவை டாட் காம் மட்டுமே படிக்கிறார்... என்னுடைய பதிவை படிப்பதில்லை... அறுசுவை டாட் காம் என்னுடைய குடும்பத்தை பொறுத்த வரை பெரிய அளவில் இதுவரை உதவி செய்யவில்லை - என்னத்தை சொல்லி புலம்ப ஹி ஹி:) //
ஹா ஹா உங்களுக்காக உபயோகமான ஒரு பதிவு போட்டு இருக்கேன் பாருங்க ரவி
http://kusumbuonly.blogspot.com/2008/10/blog-post_19.html
//தங்கமணி வீட்டில் அனுமதிப்பது 30 நிமிடம் மட்டுமே...(அது அவர் கோலங்கள் பார்க்கும் நேரம்). //
கோலங்கள் நேரத்தை இன்னு சுறுக்கி 5 நிமிடமாக்க கேட்டுக்கிறேன்:)))
//எங்கே தொலைத்தாய் என்றார்...அதிரடியாக நான் கேட்டேன்.."பாதர்..அறிவு இருக்கா ? எங்கே தொலைத்தேன் என்று தெரிந்திருதால் ஏன் உங்களிடம் வந்து சொல்கிறேன்... நானே எடுத்துக்கொண்டிருக்க மாட்டேனா" என்று..என்னை நாலு சாத்து சாத்திவிட்டு//
ஹா ஹா அடி கொஞ்சம் பலமோ!! இம்புட்டு நாள் இதை நினைவு வெச்சு இருக்கீங்க:)
//9. சிகிரெட் பிடிப்பதை ஏன் விட்டீர்கள்? சிகிரெட் பிடிப்பதைவிட்ட பிறகு ஏற்பட்ட மாற்றம் குறிப்பாக உடல் எடை கூடுகிறதா?
மனைவிக்காக...அதிகம் பசிக்கிறது...சர்க்கரை வியாதி கட்டுக்குள்... //
அடங்கொக்க மக்கா.. இவரு எப்போ சாமி சிகரெட் பிடிக்கிறத விட்டார்? ஊட்டம்மா முன்னாடி மட்டும் புடிக்கிறதில்லை.. வெளிய வந்தா நிமிஷத்துக்கு 4 சிகரெட் ஊதி தள்ளறாருங்கோ.. :))
பதிவுலக ஹீரோவின் பேட்டிரொம்ப நல்லாவே வந்துள்ளது....
பொடியா அடங்கமாட்டீரா நீர் ?? என்னோட பேரை டேமேஜ் பண்றதுக்குன்னே இருக்காங்க மக்கா !!!
குசும்பா, அறிவுரைக்கு நன்னி !
கலாய்ச்சல் கேள்விகள்.. கலக்கல் பதில்கள்.. :))
//கலாய்ச்சல் கேள்விகள்.. கலக்கல் பதில்கள்.. :))//
நன்றி சென்ஷி...
//பதிவுலக ஹீரோவின் பேட்டிரொம்ப நல்லாவே வந்துள்ளது....//
நன்றி நவநீதன்
Post a Comment