அழகு !! அழகு என்றாலே பெண்ணுக்கு தான் முதல் முக்கியத்துவம். பெண்களில் இரண்டு வகை. ஒன்று அழகாக இருப்பவர்கள், இரண்டாவது அழகாக இருக்கிறோம் என்று தன்னை நினைத்துக்கொள்பவர்கள்.
அதில் முதல் வகை- இவர்களுக்கு அழகாக இருக்கிறோம் என்ற கர்வம், எல்லோரும் தன்னை கவனிக்கிறார்கள் என்ற கர்வம் இருக்கும், அதுவும் எல்லா அழகான பெண்களுக்கும் இருக்குமா என்றால், இல்லை என்றே சொல்லுவேன். பலர் அழகை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்வார்கள். பொதுவாக அது அவர்களுக்கு பழகிவிடும்.
இதில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள் தான் பிரச்சனையே... தான் அழகு என்று நினைத்து இவர்கள் அணியும் ஆடையும், செய்துக்கொள்ளும் அலங்காரமும் அல்லது இவை எதுவுமே இல்லாமல் ஏதோ ஒரு விதத்தில் அடுத்தவர்களை பயமுறுத்துவதுமே வாடிக்கை. நிறைய பெண்கள் தங்களுக்கு பொருந்தாத நிறத்தில் உதட்டு சாயம், முகத்தில் மேக்கப், பொருத்தமில்லா நகைகள், பொருத்தமில்லா நிற உடைகள் என்று தன்னை அழுகு செய்துக்கொள்ள வேண்டும், அவர்களை அடுத்தவர்கள் பார்த்து பேசவேண்டும் பழகவேண்டும் என்ற தீவிர எண்ணத்தில் அடுத்தவர்கள் அவர்கள் பக்கமே வர பயப்படும்படி செய்து விடுவார்கள். அவர்களை பார்க்க பாவமாகத்தான் இருக்கும்.
இதில் இன்னொரு வகையும் உண்டு. தன்னை ஆடை மற்றும் நகைகளால் அலங்காரம் செய்து கொண்டு தன் குடும்ப கெளரவத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று தீவிரமாக இருப்பார்கள். ஒரு முறை எங்கள் வீட்டுக்கு ஒரு பெண்ணை அழைத்து இருந்தேன். அந்த பெண் அவள் அணியும் நகை மற்றும் ஆடைகள் தான் வெளி இடங்களுக்கு/விஷேஷங்களுக்கு செல்லும் போது தன் கெளவரவத்தை நிலைநிறுத்துவதாக கூறினாள். நான் அவளுக்கு புதியவள். அவள் பேச பேச அவளின் அடிப்படை குணம் என்ன என்று தெரிந்தது. தான் எப்போதுமே சரவணா, சென்னைசில்க்ஸ், போத்தீஸ் போன்ற கூட்டம் நிறைந்த சாதாரண கடைகளில் சென்று உடைகள் எடுப்பதில்லை என்றும், ஆர்.ம்.கேவி, கோலபஸ், நாயுடுஹால் போன்ற கூட்டமில்லாத உயர்தர, தரமான கடைகளில் சென்று எடுப்பேன் என்றாள். நானாக எதுவுமே கேட்காமலேயே தான் அணிந்துள்ள ஆடையின் விலை ரூ 2000 என்று சொன்னவுடன் தான் நானும் அந்த பெண் அணிந்திருந்த ஆடையை மேலும் கீழுமாக கவனித்தேன். :)))) (பேச்சுக்கே இடம் இல்லை விடுங்கள்). அதில் குறிப்பிட்டு சொல்ல என்ன இருக்கிறது என்றால் அவளின் அழகு. ???? !! :))) இரண்டாம் ரகத்து பெண் என்று புரிந்தது. இப்படி பெண்கள் பேசுவதும் கூட அழகை அடிப்படையாக கொண்டே. 2000 என்ன 10000 ரூபாய்க்கு ஆடை அணிந்தாலுமே அது அவர்களுக்கு எடுப்பாக இருக்கிறதா? தனக்கும் தன் நிறத்திற்கு, தோற்றதிற்கும் பொருத்தமாக இருக்கிறதா? என்று தெரியாமல் இருக்கிறார்களே என்று தோன்றும்.
எல்லோருக்குமே நாம் அழகாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கம். அழகு என்ற எண்ணமும் கூட இருக்கும் ஆனால் தன்னை தானே கண்டிப்பாக ஒரு மதிப்பீடு இருப்பது எப்போதும் நமக்கு நல்லது. கருப்பாக இருக்கும் ஒருவரை பார்த்தால் அடையாள்ம் சொல்ல அவருடைய கலரை தான் எல்லோரும் முதலில் உபயோகப்படுத்துவார்கள் இல்லையா?. கருப்பாகவும், சாதாரண தோற்ற பொலிவு கூட இல்லாத ஒருவரை அவர் மனது கஷ்டப்படும் என்று வெளியில் சொல்லாவிட்டாலும் மனதில் கண்டிப்பாக நாம் எல்லோருமே அவரின் தோற்றத்தைப்பற்றி நினைத்துக்கொள்ளாமல் இருப்பதில்லை. யாரையுமே முதலில் கவருவது அவரின் தோற்றமே. அதன் பின் அவரின் உடல் மொழி, சிரிப்பு, பணிவு போன்ற சில அடிப்படையில் அமைந்த மனிதர்களை எளிதில் பிடித்துவிடும். இதுவும் அவர்களின் அழகு என்றே சொல்லலாம். கடைசியாக அவரிடம் பழக பழகத்தான் நமக்கு அவரின் குணம் தெரிய ஆரம்பிக்கும். சிலரை பார்க்கும் போதே பிடிக்காமல் போகும் அதற்கு காரணங்கள் கூட நமக்கு தெரிவதில்லை.
இதில் என்னை பொறுத்தவரை "அழகு" என்பது அவரவரின் பார்வையிலும், மன முதிர்ச்சியையும் பொறுத்துதான் இருக்கும். முதிர்ச்சி அடைந்த யாருக்கும் அழகு ஒரு பெரிய விஷயம் இல்லை. அறிவும், மனதும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை எந்த அசந்து போக வைக்கும் அழகியோ, அழகனோ நம்மை கவரமுடியாது, அதே போல் எவ்வளவு மோசமான தோற்றத்தில் இருந்தாலும் நம்மால் அவர்களை வெறுக்க முடியாது. சில சமயங்களில் முதிர்ச்சி அடைந்தவர்கள் ரசனை அற்றுபோகிறார்களா என்று கூட நான் நினைப்பதுண்டு. என் நண்பர் ஒரு உதாரணம் , அவர் காதலித்த பெண் தோற்றத்தில் மிக மிக சுமார் ஆனால் அவருக்கு பிடித்து இருந்தது... எனக்கு இன்னமும் அவரின் ரசனை மேல் சந்தேகம் இருக்கிறது. உடல் அழகக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று என் அறிவுக்கு எட்டினாலும், இன்னமும் அந்த கேள்வி இருந்துக்கொண்டே இருக்கிறது. அவரிடம் ஒருமுறை உங்களுக்கு பெண்களை ரசிக்க தெரியுமா? என்று கூட கேட்டுவிட்டேன்... அவரிடம் இருந்து பதில் இல்லை என்றாலும் என்னுடைய அதிகபிரசங்கி தனமான கேள்விக்கு அவரின் ரசனையை நாம் தவறாக நினைத்துவிட்டோமோ என்று அவரிடமே மன்னிப்பும் கேட்டேன்.
என்னுடைய சிந்தனையை ஒத்த, எதிர்பார்ப்புகள்,விருப்பங்கள், சாப்பிடும் உணவுகள், விருப்பமான கலர் என்று எல்லாவற்றலும் என்னை ஒத்த ஒருத்தர், அவருக்கு பிடித்த (தோற்றத்தில்) ஒரு பெண்ணை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. (தோற்றத்தில் தான்). ஏன் அவருக்கு பிடித்தது, எனக்கு ஏன் பிடிக்கவில்லை என்ற கேள்விக்கு இன்னமும் எனக்கு விடை தெரியவில்லை. அவர் மனம் வேதனைப்பட்டு விடுமோ என்று அவரிடம் இன்னமும் கேட்கவில்லை.
அழகு ....கூகுலில் தேடி பிடித்த அழகு பற்றிய சில குறிப்புகள்..
1. எதை அழகு என்கிறோம்.? தனிப்பட்ட கருத்தாக பார்க்காமல் பொதுவாக பார்த்தால், பெண்ணின் அழகை மிக தெளிவாக இங்கே குறிப்பிட்டு உள்ளார்கள்.
2. நாம் எல்லோருமே வெளிதோற்றத்தை தான் சட்டென்று கவனித்து ஒருவர் அழகாக இருக்கிறார்கள் என்கிறோம். ஆனால் வெளிதோற்றம் + உள் தோற்றம் (குணம்) இரண்டும் சேர்ந்ததுதான் அழகு. இதில் முதலில் பிறரை கவர்வது வெளிதோற்றம், சிரிப்பு, பேச்சு. மிக அற்புதமாக அழகு இங்கே விளக்கப்பட்டுள்ளது.
அணில்குட்டிஅனிதா:- கவி கேக்கறனேன்னு தப்பா நெனக்கப்பிடாது... இந்த அழகு பதிவுக்கும் உங்களுக்கும் என்னா சம்பந்தம்... தரண் அண்ணாச்சி.. அம்மணிய கொஞ்சம் கவனிங்க.. ... இது எல்லாம் நானும் நீங்களும் மட்டுமே பேசக்கூடிய ஒரு சேப்டரு...இல்லையா??
பீட்டர் தாத்ஸ் :- Beauty comes as much from the mind as from the eye. ~Grey Livingston
அழகே அழகு தேவதை..............................
Posted by : கவிதா | Kavitha
on 21:44
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
6 - பார்வையிட்டவர்கள்:
மிக நல்லகட்டுரை வாழ்த்துக்கள்
http://sivasinnapodi1955.blogspot.com/
:))
நல்ல பதிவு!
\\இதில் என்னை பொறுத்தவரை "அழகு" என்பது அவரவரின் பார்வையிலும், மன முதிர்ச்சியையும் பொறுத்துதான் இருக்கும். \\
வழிமொழிகிறேன் ;))
பதிவு சூப்பர் ;)
\\Page Not Found
Sorry, we could not find that page! \\
அப்புறம் ரெண்டாவது சுட்டி வேலை செய்யல. கொஞ்சம் பாருங்கள்
\\Page Not Found
Sorry, we could not find that page! \\
அப்புறம் ரெண்டாவது சுட்டி வேலை செய்யல. கொஞ்சம் பாருங்கள்//
கோபி, Thanks, பார்த்து கொஞ்சம் சரி செய்து இருக்கேன்..ஆனா 1, 2 மாறி மாறி சுட்டி கொடுத்துட்டேன்னு நினைக்கிறேன்.. அப்புறமா சரி செய்யறேன்.. இப்பத்திக்கு பிளீஸ் சகிச்சிக்கிட்டு படிச்சிடுங்க.. ரொம்ப வேலைப்பா...
:) உங்க நண்பரை பொறுத்தவரையில் அவர் அந்த பெண்ணின் குணத்தால் முதலில் கவரப்பட்டிருக்கலாம் தானே..
ஆனாலும் ரொம்ப யோசிச்சிருக்கீங்க..
//மிக நல்லகட்டுரை வாழ்த்துக்கள் //
சிவா நன்றி :)
//:))
நல்ல பதிவு!//
சென்ஷி, நன்றி... ஏதாவது சொல்லுவீங்கன்னு பார்த்தேன்... :))
\\இதில் என்னை பொறுத்தவரை "அழகு" என்பது அவரவரின் பார்வையிலும், மன முதிர்ச்சியையும் பொறுத்துதான் இருக்கும். \\
வழிமொழிகிறேன் ;))
பதிவு சூப்பர் ;)//
நன்றி கோபி...
//:) உங்க நண்பரை பொறுத்தவரையில் அவர் அந்த பெண்ணின் குணத்தால் முதலில் கவரப்பட்டிருக்கலாம் தானே..
ஆனாலும் ரொம்ப யோசிச்சிருக்கீங்க.. //
முத்து, குணம் இருந்தால் பரவாயில்லையே அதுவும் இல்லையே..அதனால் தான் இவ்வளவு யோசனையே.. ஓவரா யோசிச்சி..நானும் குழம்பி அடுத்தவங்களையும் முடிந்தவரை குழப்பவதே என் வேலையா போச்சி.. :)))
Post a Comment