கதையை தொடருகிறேன்.. முந்தைய பாகங்கள் -

1. நிழலாக தொடரும் நிலவு

2.நிழலாக தொடரும் நிலவு - பாகம் 2

ரமேஷ் வெகு நேரம் அன்று இரவு தூங்கவில்லை... மொட்டைமாடி நிலவும் அவனுக்கு துணையாய் இருந்தது...

ஹாலில் சோபாவிலேயே படுத்து தூங்கி இருந்தான். காலையில் எழுந்த போது தெளிவாக இருந்தான்.. கடிகாரத்தை பார்த்தான்..6.50 ஐ காட்டியது. மீனா என்ன செய்கிறாள் என்று படுத்தவாறே நோட்டம் விட்டான். சத்தம் எதுவும் இல்லை.. தூங்கிக்கொண்டு இருப்பாள் என்று வெடுக்கென்று எழுந்தான். பெட் ரூமை மெதுவாக திறந்து பார்த்தான்.. மீனா நன்றாக தூங்கிகொண்டு இருந்தாள். திறந்ததை போலவே மெதுவாக சத்தம் இல்லாமல் கதைவை சாத்திவிட்டு, வேக வேகமாக மாடிக்கு சென்றான்.

மொபைல் போனை எடுத்து, மாமனாரை (மீனாவின் அப்பாவை) அழைத்தான்.

"......வணக்கம் மாப்பிள்ள சொல்லுங்க என்ன இவ்வளவு காலையில.. மீனாக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா?" குரலில் பதட்டம் தெரிந்தது.

"இல்ல்லல்ல.. பயப்படாதீங்க. .உங்கக்கிட்ட கொஞ்சம் பேசனும், உங்கள இன்னைக்கு பாக்க முடியுமா? வீட்டுல வந்து பேசற விஷயம் இல்ல.."

"........... சரிங்க மாப்பிள்ள...நான் உங்க ஆபிஸ்க்கு வந்து பாக்கிறேன்..எத்தனை மணிக்கு வரட்டும்?"

"11 மணி..?? உங்களுக்கு முடியும்ன்னா வாங்க இல்ல நீங்க சொல்லற இடத்திற்கு நான் வரேன்.."

"இல்ல மாப்பிள்ள.. எனக்கு வெளியில கொஞ்சம் வேல இருக்கு அப்படியே உங்களையும் வந்து பார்க்கிறேன்....ம்ம்..மீனா எப்படி இருக்கா?

"ம்ம்.... நல்லா இருக்கா மாமா.." குரலில் கொஞ்சம் தோய்வு வரத்தான் செய்தது...

மொபைலை அனைத்துவிட்டு வேகமாக கீழே இறங்கி வந்தான்.. வெளியில் கிடந்த பால் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு கிச்சனுக்கு போனான்.. பாலை காய்த்து, மீனாவிற்கு பூஸ்ட் போட்டு பிலாஸ்கில் ஊற்றி வைத்தான்.. தனக்கும் டீ போட்டு எடுத்து வந்து.. அன்றைய நீயூஸ் பேப்பரை எடுத்துவைத்து கொண்டு உட்கார்ந்தான்...

மீனா எழுந்துவர 7.30 மணிக்கு மேல் ஆகியிருந்தது... ரமேஷ்'ன் மீது இருந்த கோபம் இன்னும் போனமாதிரி தெரியவில்லை.. முகம் வாடி இருந்தது..ரமேஷ் அவளை பார்த்தான், எதுவும் பேசவில்லை,மீண்டும் பேப்பரில் மூழ்கினான்.. அவளும் எதுவும் பேசவில்லை.. . கிச்சன்னுக்குள் சென்றாள். போட்டு வைத்து இருந்த பூஸ்டை டம்ளரில் ஊற்றி வந்து சோபாவில் உட்கார்ந்து டிவி'ஐ ஆன் செய்தாள்..

மணி 8.. மீனா டிவியை விட்டு எழவில்லை.... ரமேஷ் ஆபிஸ் செல்ல ரெடியாகி வந்துவிட்டான்... கிச்சனில் பார்த்தான்..மீனா எதுவும் செய்ததாக தெரியவில்லை..

"...நைட் பிரட் வாங்கி வச்சி இருக்கேன்.. சாப்பிடாம இருக்காத... நான் ஆபிஸ் கிளம்பறேன்.."

"..ம்ம்..ஆமா....ரொம்ப அக்கறை.. .." முனுகினாள் மீனா...

காதில் வாங்காதவாறு வெளியில் நடந்தான்...ரமேஷ்

=========

மாமனாரிடன் என்னவெல்லாம் பேசவேண்டும் என்று இரவே திட்டமிட்டு வைத்து இருந்தான். அலுவலக வேலையில் அதை திரும்பவும் அசைபோடும் நிலைமை இல்லாமல் போனது....

மணி 10.40 இருக்கும்...மாமனாரிடம் இருந்து மிஸ் கால் வந்தது...

ரமேஷ் பக்கத்து சீட்டில் இருந்த கண்ணனிடம், "டேய்!, கொஞ்சம் பாத்துக்கோ... ஒரு டூ ஹவர்ல வந்துடறேன்.. ஒகே...பர்சனல்.... என்று சொல்லிவிட்டு வேகமாக வந்தான்..

வெளியில் கொஞ்சம் பதட்டமான நிலையில் தான் மாமனார் இருப்பதாக தெரிந்தது...

இவனை பார்த்ததும்.... "மாப்பள்ள..ஏதாது......பிரச்சனையா?....மீனா எப்படி இருக்கா..."

"...இல்ல..அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல... வாங்க...ஏதாது ஹோட்டல்ல போய் பேசலாம்.."...

பக்கத்திலிருந்த ஷாப்பிங் காம்லக்ஸ் அழைத்து சென்று ஒரு காபிபாரில் இரண்டு காபிக்கு ஆர்டர் செய்துவிட்டு, கூட்டமில்லாத இடத்திற்கு அவரை அழைத்து சென்று அமர்ந்தான்.

"மாமா... மீனா விஷயமாத்தான் பேசனும்.. அவ இப்ப என்கூட இருக்கறத விட உங்கவீட்டுல இருக்கறது நல்லது.. அவளுக்கு சொன்னா புரியாது.. நீங்களும் அத்தையும் சொல்லி அவளை டெலிவரி வரைக்கும் அங்கேயே வச்சிக்கோங்களேன்..."

".....ஏன்...என்ன ஆச்சி....இப்பவே.........."

"உங்களுக்கு அனு விஷயம் நல்லாவே தெரியும்.... டெயிலி அதனால பிரச்சனையா இருக்கு.. அனுவுக்கு நான் ஏதாவது செட்டில் பண்ற வரைக்கும் அவங்க வீட்டுக்கு நான் போய் வந்துக்கிட்டு தான் இருக்கனும், ஆனா மீனா'க்கு புரியல.. சண்டை போட்ட பரவாயில்ல.. சாப்பிட மாட்டறா.. சரியா தூங்க மாட்டறா.....என்னால ஆபீஸ், மீனா.. அனு பிராப்லனு எல்லாத்தையும் பாக்கமுடியல.. ரொம்ப டென்ஷன் ஆகுது...நிம்மதியே போச்சி.... மீனா இப்படி இருந்தா குழந்தைக்கு நல்லது இல்ல... சோ.. அவ அங்க இருக்கட்டும்.. அத்தைக்கு நீங்க ஏதாவது சொல்லி மீனாவ கூட்டிட்டு போங்க.. டெலிவரிக்குள்ள நானும் அனுவோட ப்ராப்ளத்தை சால்வ் பண்ணிடுவேன்..."

"மாப்பள்ள....நீங்க என்ன மனசுல வச்சிக்கிட்டு பேசறீங்கன்னு எனக்கு புரியல... மீனா அங்க இல்லன்னா... நீங்க எப்படி இருப்பீங்கன்னு எனக்கு தெரியல... அனுஷா விஷயத்த அவங்க வீட்டுல இருக்கறவங்க பாத்துக்க மாட்டாங்களா? நீங்க எதுக்கு இன்னும் அதுல தலையிடனும்.. உங்களுக்குன்னு மீனா, குழந்தை எல்லாம் வந்தாச்சு ..........இன்னனும் அனுஷாவையே நெனச்சிக்கிட்டு இருக்கறது நல்லா இருக்கா....?"

".............மாமா.. நீங்க ஒருத்தர் தான் எனக்கு சப்போர்ட் செய்வீங்க என்னை புரிஞ்சிப்பீங்கன்னு உங்ககிட்ட வந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்.. நீங்க நெனக்கிற மாதிரி ஒன்னும் நடக்காது.. மீனாவும் குழந்தையும் எனக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு அனுவோட லைஃ முக்கியம். நான் இல்லன்னு தனியாவே வாழ்க்கையல இருக்க போறேன்னு அந்த பொண்ணு தன்னையே கஷ்டபடுத்திக்குது. .நான் தான் அதுக்கு காரணம் இல்லையா..? நான் தான் அத சரி பண்ணனும்.. என்னால மட்டும் தான் முடியும்..... அவங்க அம்மாவோ அண்ணனோ ஒன்னும் செய்யமுடியாது.. அதுக்கு எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.. ஆனா மீனாக்கு அந்த பொறுமை இல்ல... அவ டென்ஷன் ஆகறா.. அவளுக்கு ஒடம்பு வீனா போய்டும்.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க.. தினம் வீட்டுக்குள்ள போனாவே சண்டைத்தான்.. நிம்மதி இல்லாம போச்சி.."

"...........மாப்பள்ள... நல்லா யோசிச்சுத்தான் சொல்றீங்களா?...."

" நேத்து ராத்திரி பூரா தூக்கமில்ல.... இதவிட்டா வேற வழியே இல்ல.. நானும் மீனாவும் நல்லா இருக்கனும்னு நீங்க..நெனச்சீங்கன்னா..இத செய்துத்தான் ஆகனும்....அத்தைக்கிட்ட மீனா உடம்பு ரொம்ப வீக்கா இருக்குன்னு டாக்டர் சொன்னாங்கன்னு சொல்லி கூட்டிட்டு போங்க.. டாக்டர்கிட்ட வேணும்னாலும் நான் பேசறேன்....டாக்டர் சொன்னா மீனா கேப்பா.."

"..ம்ஹூம்....உங்கள கேட்டோ குத்தம் சொல்லியோ என்ன லாபம்? என்னையும் சேர்த்து எல்லாம் தெரிஞ்சி பண்ண தப்பு..இது.... ஆனா உங்க மேல நான் வச்சி இருக்கற நம்பிக்கைய பாழாக்கிடாதீங்க... மீனா எங்களுக்கு ஒரே பொண்ணுன்னு உங்களுக்கு தெரியும்......"

முகம் முழுக்க வருத்ததோடு சிரித்தான்...... "எனக்கு இப்ப யாரு முக்கியம்னு தெரியும் மாமா அதே சமயம் அனுவை அப்படியே விட்டா நானும் என் குடும்பமும் நிம்மதியா இருக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை இல்ல.... அதனாலதான் அதுக்கு இப்பவே ஒரு முடிவு கட்டனும்னு பாக்கறேன்....... மீனாவும்...குழந்தையும் தான் என்னோட லைஃ மாமா.. நம்புங்க.."....

"....சரி..நான் சுகுணாக்கிட்ட பேசிட்டு உங்களுக்கு ஃபோன் பண்றேன்..."

இருவரும் கிளம்பினார்கள்.... மனதில் இருந்த சுமையை இறக்கி வைத்தத்தில் ரமேஷ் சற்று நிம்மதி அடைந்தான்.. இனி அனுஷாவை சரி செய்து கல்யாணத்திற்கு எப்படியாவது சம்மதிக்க செய்ய வேண்டும்..அவளை எப்படி சம்மதிக்க வைக்கறது...யோசித்தவாறே ஆபிஸ் சென்றான்...

நிழல் தொடரும்...........