பேசாத
பல மொழிகள்
பேசுகிறது...
கிடைக்காத
பல சுகம்
கிடைக்கிறது..
பார்க்காத
பொழுதுகளும்
பார்த்தவை
ஆகிறது...
புரியாத
பல
வார்த்தைகள்
புரிகிறது...
பேசுகின்ற
மொழி
மட்டுமே
மொழியாகுமா ?!!
உன்
பேசாத
மொழியும்
என்
இதயம்
***************************************
அணில் குட்டி அனிதா : அம்மணி கவிதை எழுதிய ச்சிசூவேச்சன்.. னை எல்லாரும் கேளுங்க...... டிவி ல லைவ் ஷோ... டான்ஸ் கூத்து ஒரு பக்கம், ஆன்லைன் ல வெப்சைட் கிரியேட் செய்து கொடுத்த மகராசன் க்கிட்ட வெப்சைட் பத்தி டிஷ்ஷூம்ஸ் அண்ட் டிசைன், ஃபான்ட் கலர் மாத்த சொல்லி சண்டை ...., ஆதவன் சினிமா புள்ள டவுன்லோடு செய்து வச்சி இருக்கு, அத பாக்கனும்னு அடம் பிடிச்சி ஒரு பக்கம் வாட்சிங்.. இதுக்கு நடுவில்.... "இதயத்தின் மொழி".... .. எகொச..!! இது !!
பின்குறிப்பு : வெப்சைட் செய்து கொடுத்த மகராசன் கவிதை எழுதும் போது விட்ட சாபம் " உன் கவிதை நாசமாபோக.. அது கேவலமாத்தான் வரும்.. !! "
பீட்டர் தாத்ஸ் : It is a mistake to look too far ahead. Only one link in the chain of destiny can be handled at a time.”
.
12 - பார்வையிட்டவர்கள்:
:)சூப்பரா புரியுதே. மீ த ஃபர்ஸ்ட்டா...
//:)சூப்பரா புரியுதே. மீ த ஃபர்ஸ்ட்டா...//
ஓ..புரிஞ்சி போச்சா.... அப்ப அடுத்தவாட்டி ஸ்டைல மாத்தறேன்
என்னதாம்ப்பா பிரச்சினை....???:))
//என்னதாம்ப்பா பிரச்சினை....???:))//
Conclusion – shd concentrate one at a time, if you do multiple, result is chaos
இது தான் காதல் என்பதா?
//இது தான் காதல் என்பதா?//
எச் சூ. சூ சூ...!! :))))
காதல் கவிதைன்னாலே அது கேவலமா தானே வரும். அப்படி இருக்குறப்போ எதுக்கு சாபமெல்லாம் கொடுத்து டைம் வேஸ்ட் பண்ணணும்!!!
//காதல் கவிதைன்னாலே அது கேவலமா தானே வரும். //
அட அத சொல்ற ஆளை பாருப்பா... ஏன் ஏன் ஏன்.. கோம்ஸ் கிட்ட பேசனுமோ?!!
//அப்படி இருக்குறப்போ எதுக்கு சாபமெல்லாம் கொடுத்து டைம் வேஸ்ட் பண்ணணும்!!!//
சாபம் விடறதுக்கு தனியா டைம் ஆகும்மா என்ன? ?!! ஏதோ அவருக்கு ஒழுங்கா இருக்கிற வேலையை பாக்காம காதல் கவிதை எழுதறேன்னு கடுப்பு போல... :))))
//அட அத சொல்ற ஆளை பாருப்பா... ஏன் ஏன் ஏன்.. கோம்ஸ் கிட்ட பேசனுமோ?!!
//
கோம்ஸ் கிட்டே நான் தெனமும் தானே பேசிக்கிட்டு இருக்கேன்!!!
//கோம்ஸ் கிட்டே நான் தெனமும் தானே பேசிக்கிட்டு இருக்கேன்!!!//
ம்ம்..முடியல.. நான் பேசனும் னு சொன்னேன் நீங்க இல்ல.. !!
அப்புறம் எப்ப உங்க திருமுகத்தை ப்ரொஃபைல் ல மாத்திட்டீங்க போலவே?!! இப்பத்தான் கவனித்தேன்..
ஏதேதோ பேசுகிறீர்கள் ??? :-) ?
//ஏதேதோ பேசுகிறீர்கள் ??? :-) ?//
வாங்க தங்கமணி சார், ஆமாங்க. .இதுக்கு அடுத்த போஸ்ட் பாருங்க. .ஏதேதேதேதேதேதோஓஓ அணிலு சொல்லி இருக்கு... :)
Post a Comment