மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம்
- பாரதியார்
தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?
- பாரதியார்
மனதில் உறுதி வேண்டும்
Posted by : கவிதா | Kavitha
on 11:45
Labels:
அப்பாவிற்காக,
பழம்-நீ
Subscribe to:
Post Comments (Atom)
9 - பார்வையிட்டவர்கள்:
என்ன திடிரென்னு?
வாழ்த்துக்கள்.... குழந்தைகள் பராமரிப்பு முயற்சிக்கு. வெற்றி உமதாகட்டும்.
Choco, இந்த பாட்டை ரொம்ப நாளா போடனும்னு இருந்தேன், வீடியோ கிடைக்கல.. இப்பவும் தான் ..சரி பாட்டு வரிகள் மட்டும் இருக்கட்டுமே ன்னு போட்டேன் :)
கருணாகரசு.. - ரொம்ப நன்றிங்க.. :)
Great, i love these lines...try posting "Thedi nitha soru thindru"...
அப்பாவிற்காக?????
//வீடியோ கிடைக்கல.. இப்பவும் தான் ..சரி பாட்டு வரிகள் மட்டும் இருக்கட்டுமே ன்னு போட்டேன் :)//
சிந்து பைரவி படத்துல வருமே?
// An attempt to mold things !! said...
Great, i love these lines...try posting "Thedi nitha soru thindru"...//
உங்க ப்ரொபைல் வார்த்தைகள் நல்லா இருக்குங்க.. :)
நீங்க சொன்ன பாடல் வரிகள் விரைவில் போடுகிறேன்.. :) நன்றி
**********
//அப்பாவிற்காக?????//
ம்ம்... தொடர்ந்து என்னோட பதிவுகள் படிச்சிட்டு வந்தா இந்த கேள்வி எழுமா? பாடல்கள், இசை அறிவியில் சம்பந்தம் பட்டவை எல்லாம் அப்பாவிற்காக என்ற லேபில் கீழ் வரிசைப்படுத்தி வருகிறேன்
//வீடியோ கிடைக்கல.. இப்பவும் தான் ..சரி பாட்டு வரிகள் மட்டும் இருக்கட்டுமே ன்னு போட்டேன் :)//
சிந்து பைரவி படத்துல வருமே?//
ம்ம்.. அதே அதே... :)
//
try posting "Thedi nitha soru thindru"...//
போட்டாச்சுங்க.. :)
கொடும் கூற்றுக்கு என்றால் அர்த்தம் என்ன
@ Sindu, Sorry for the delay.
When you live your life by doing wrong cruel deeds, you might lost all your determination to oppose it in your old age, you would accept your failure / defeat and die with those.
Post a Comment