"அம்மாக்கள் தினம்" கொண்டாட்டம் !! முல்ஸ் அம்மாக்கள் வலைப்பூக்களில்  அம்மாக்கள் தினம் சிறப்பாக அம்மாக்களை பற்றி எழுத ச்சொல்லி இருந்தார். எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு எழுதி தள்ளுகிறார்கள்.  ஆனால்
கவிதா
ஒரு
அம்மாவாக
ஆயிரமாயிரம்
பக்கங்கள் எழுதமுடியும் !
குழந்தையாக
எதுவுமே
எழுத தோன்றவில்லை
எழுதுபவர்களை
பார்த்தால்
பொறாமை
ஏக்கம்..
'கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் கதாபாத்திரமான அமுதா என்ற குழந்தையை போன்று இன்னமும் அம்மாவை தேடும் ஒரு குழந்தையாகவே இருக்கிறேன். இந்த பதிவில் என்னுடைய ஏக்கத்தையும், அம்மா இருப்பவர்களையும் அவர்களுக்கு அம்மாவிடம் கிடைக்கும் பாசத்தையும் பார்க்க பொறுக்காத பொறாமையிலும் எழுதுகிறேன். பொறாமை என்பது கூடாது தெரியும்..ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு வந்துவிடும்.. கொஞ்சமாக எல்லாம் இல்லை ஏகத்துக்கு பொறாமை உண்டு. :)
கண்டிப்பாக சோகம், துக்கும், துயரம், அழுவாச்சி எதுவும் இல்லை. :)
எனக்கு அம்மாவாக இருந்து தோற்றுப்போனவர்கள்-
ஆயா
அப்பா
சின்ன அண்ணன்
என் கணவர்
என் மகன்
என் நண்பர்கள்
நண்பர்களின் அம்மாக்கள்
நண்பர்களின் குழந்தைகள்
இவர்கள் எல்லோருமே என் மேல் அதிகமாக அன்பு செலுத்தக்கூடியவர்கள். செலுத்திக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் நான் எதிர்ப்பார்க்கும் அன்பை என்  அம்மாவாக அவர்களால் கொடுக்க முடியவில்லை. கொடுப்பது எனக்கு என் அம்மாவின் இடத்தை மனதளவில் இன்னமும் நிறைவு செய்யவில்லை எனலாம்.
சொல்ல விரும்புவது, ஒரு குழந்தைக்கு அம்மா' வாக அந்த குழந்தையை பெற்ற தாயை தவிர்த்து யாராலும் முழுமையான அந்த குழந்தையின் மனதை நிறைவு செய்யும் அளவிற்கு அம்மா'வாக இருக்கவே முடியாது என்பது என் அனுபவத்தில் நான் கற்றது, பெற்றது. என்னுடைய ஆயாவை போன்று என்னை கவனித்தவர் இல்லை, என்னை வளர்த்தவர் இருக்குமுடியாது என்றாலுமே அவர் கூட என் அம்மா வாக முடியாது என்பது பல நேரங்களில் நான் உணர்ந்தது.  என் அண்ணன் மகனிற்கு நான் அம்மாவாக இருக்கும் வாய்ப்பை பெற்றபோதுக்கூட அவனுக்கும் என்னால் அவனின் அம்மாவை போன்று இருக்கமுடியவில்லை என்பது உண்மை. அத்தையாக இருப்பது எளிது, அம்மாவாக.... :(
அம்மா - ?????? அன்பை பெற்றதில்லை அதனால் எனக்கு தெரியவில்லை..  அறிந்தவரை- குழந்தைகள் அம்மாவின் மடியில் உட்காரும், தலைவாரிக் கொள்ளும், சாப்பாடு ஊட்டிக்கொள்ளும், பள்ளியில், கல்லூரியில், சினிமா தியேட்டர்களில், கடைகளில் பார்க்கும் இடமெல்லாம் குழந்தைகள் அம்மாவோடு வரும், இறுக்கமாக அம்மாவை கட்டிக்கொண்டும் வரும்.  பள்ளியில் பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங் வரும் போது எல்லாம் என் தோழிகளின்  அம்மாக்கள் வருவார்கள், அம்மாக்கள் எல்லாம் மீட்டிங் முடிந்தவுடன் டீச்சரிடம் சிரித்து சிரித்து பேசுவார்கள். :( எனக்கு பிடிக்காது. ஓரமாக நின்று கவனிப்பேன். பொறாமை வரும் இடங்களில் முக்கியமானது பள்ளி. பிரச்சனை என்று வந்தால் உடனே குழந்தைக்கு சப்போர்ட் செய்துக்கொண்டு அம்மாக்கள் வந்துவிடுவார்கள்.  எனக்கு எப்பவுமே நானே துணை. (அதனாலே வாதிட பழகிக்கொண்டேனோ என்று நினைப்பேன்.) ஆயாவின் வயதிற்கு அவர்களால் அழைத்ததற்கு எல்லாம் வர முடியாது. அதனால் அவரை தொந்தரவு செய்தது இல்லை.
அடுத்து திருமணத்திற்கு பிறகு என் குழந்தை பேறு..!! என் வாழ்நாளில் மறக்கமுடியாத அம்மா இல்லாத வலியை ஏற்படுத்தியது. யாரிடமும் சொன்னது இல்லை. விடுமுறைக்கு என் அக்கம் பக்கம் இருப்பவர்கள் குழந்தைகளுடன் அம்மா வீடு என்று சென்று விடுவார்கள். அல்லது குழந்தைகளையாவது அனுப்பிவிடுவார்கள். அப்படி ஒரு நாள் கூட என் வாழ்நாளில் எங்கும் சென்றது இல்லை. செல்ல இடமில்லை என்பது யதார்த்தம். சில சமயம் இது தான் வாழ்க்கை என்று தெரிந்தாலும் வருத்தப்படாமல் இருக்க முடிவதில்லை. . செல்ஃப் கவுன்சிலிங் கொடுக்கும் போது இதை எல்லாமும் யோசித்து என்னை நானே தேற்றிக்கொள்வேன். ஏக்கம் என்பது இப்பவும் இருக்கத்தான் செய்கிறது. இருந்துவிட்டு போகட்டும் என்று ரொம்பவும் கவுன்சிலிங் கொடுத்து என்னை தேற்றிக்கொள்ளவும் நினைப்பது இல்லை. அழவேண்டுமா அழுதுவிடு, சிரிக்கவேண்டுமா சிரித்துவிடு, யார் உயிரையாவது வாங்க வேண்டுமா வாங்கிவிடு என்பதை நடைமுறை படுத்திவிடுவதுண்டு :)
உலகத்தில் அம்மா இல்லாமல் நான் மட்டுமா இருக்கிறேன்.? இருப்பவர்களை பார்த்து பொறாமைப்படாமல்,  இல்லாதவர்களை பார்த்து சந்தோஷப்பட்டு க்கொள்ளலாமா? அது் தவறில்லையா? தவறாகத்தான் தோன்றி இருக்கிறது, அம்மா இல்லாத யாரைப்பார்த்தாலும் நான் படும் கஷ்டங்கள் கண் முன்னே வந்து என்னை போல் இவர்களும் கஷ்டப்படுகிறார்களே என்று தோன்றுமே தவிர்த்து, அவரை விடவும் நான் மேல் என்று என்றுமே நினைத்தது இல்லை.  அம்மா இல்லாமல் யாரையும் இந்த உலகத்தில் படைக்காதே என்று வேண்டிக்கொள்வேன், வேண்டிக்கொள்கிறேன்....
குழந்தைகள் பெற்றுவிட்டால் மட்டுமே ஒரு பெண் அம்மா'வாகிவிட முடியாது.! * பதிவை அம்மாக்களில் வலைப்பூக்களுக்கும் அனுப்புகிறேன்.
அணில் குட்டி அனிதா : இதோடா ! அம்மணி அட்டண்டண்ஸ் கொடுத்துட்டாங்க..!! ஏழு கழுத வயாசாச்சு... பெத்தப்புள்ளைக்கு நாலு கழுத வயசாச்சி.. இன்னமும் ம்ம்மா...!! யம்மா.. ! ஆத்தா... ன்னு பதிவு போட்டுக்கிட்டு.. தாங்கலடா இந்த கொசு த்தொல்லை. .யாராச்சும் ச்சப்புன்னு அடிச்சி கொசுவ கொல்லுங்க முதல்ல...!!
பீட்டர் தாத்ஸ் :- When you are a mother, you are never really alone in your thoughts.  A mother  always has to think twice, once for herself and once for her child.
கன்னத்தில் முத்தமிட்டால்....
       
          Posted by : கவிதா | Kavitha
      on 16:31
Labels:
சமூகம்
 
 
Subscribe to:
Post Comments (Atom)

21 - பார்வையிட்டவர்கள்:
//அம்மா இல்லாமல் யாரையும் இந்த உலகத்தில் படைக்காதே என்று வேண்டிக்கொள்வேன், வேண்டிக்கொள்கிறேன்....//
ம்... ரொம்ப ஃபீல் செய்ய விட்டுட்டீங்க.... என் தோழி ஒருத்தங்க ரெண்டாவது ஒரு குழந்தைய தத்து எடுத்து வளர்க்கிறாங்க.. அந்தகுழந்தைக்கு அம்மா வேணும்ன்னு .. ஹ்ம்..
//அம்மா - ?????? அன்பை பெற்றதில்லை அதனால் எனக்கு தெரியவில்லை.. //
அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது தான்..
எனினும் மற்ற நல்ல உறவுகளை நினைத்து சந்தோசமடையுங்கள்...
பீட்டர் தாத்ஸ் சூப்பரு ;)
ம்... ரொம்ப ஃபீல் செய்ய விட்டுட்டீங்க.... என் தோழி ஒருத்தங்க ரெண்டாவது ஒரு குழந்தைய தத்து எடுத்து வளர்க்கிறாங்க.. அந்தகுழந்தைக்கு அம்மா வேணும்ன்னு .. ஹ்ம்..//
வாங்க முத்து.. நோ பீலீங்ஸ் ஆஃப் டில்லி :))))) என்ன செய்வது அம்மா இல்லாமல் என்னால் சமாளிக்க முடியும் னு கடவுள் நினைத்து இருக்கிறார்.. கடவுளுக்கு மிகவும் பிடித்த குழந்தை நான் :)))
(இதை முன்னமே ஒரு பதிவில் சொன்னதாக நினைவு)
அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது தான்..
எனினும் மற்ற நல்ல உறவுகளை நினைத்து சந்தோசமடையுங்கள்...//
சாரதி, ம்ம்....ம்ம்....மற்ற நல்ல்ல்ல்ல்ல்ல உறவுகளை நினைக்கிறேன்.. சந்தோஷமும் அடைகிறேன்..
@ Choho, ஹம்... :)) நன்றி... ஆமா நல்லா இருக்கு !! நிறைய இருந்தது அம்மாவை பற்றி.. தாத்ஸ் க்கு இது தான் ரொம்ப பிடிச்சி போச்சி... :))))
அம்மா விற்கு சுயநலம் இருப்பதில்லை.. சுயநலமாக இருப்பவள் அம்மாவாக இருக்கமுடியாது ... :(
அருமை..
//அடுத்து திருமணத்திற்கு பிறகு என் குழந்தை பேறு..!! என் வாழ்நாளில் மறக்கமுடியாத அம்மா இல்லாத வலியை ஏற்படுத்தியது//
மிக அருமையான பதிவு.
இந்தக் கோணத்தில் இது மாதிரி ஒரு பதிவை நான் படித்ததில்லை.
இது மாதிரியான ஒரு முழு நீள அம்மா பதிவை இப்போதான் போடுறீங்களா? உங்களோட ஏதாவது ஒரு பதிவில அம்மா இல்லாத அந்த இடைவெளி அடி நாதமா இருக்கும் படிக்கும் போது.
அந்த இடைவெளிகள் சிறிதாகவே இருந்தாலும், கொடுக்கும் காலத்தில் கொடுப்பதினால் அதன் கனமும், பொருளும் வித்தியாசப் பட்டு இடைவெளி நிரப்பப் பட்டுக்கொண்டே வருகிறது.
பாருங்கள், ஆயா என்னதான் செய்தாலும் ஆயாவின் நிலையில்தான் தன்னுடைய இருப்பை வைத்துக் கொள்ள முடிந்தது (அதாவது, மனதால் எடுத்துக் கொள்ள முடிந்தது). ஆனா, அம்மா என்ற இடத்தில் ஒரு அம்மாவால் மட்டுமே அதனை கொடுக்க முடியுமென சக சூழ்நிலையைக் கொண்டு மனம் அதிலயே சிக்கிவிடுகிறது போல...
ம்ம்ம்.
@ முக்கோணம் - வாங்க, நன்றி.. :) என்னங்க முக்கோணம் னு பெயர் வைத்துக்கொண்டு பிரொஃபைல் போட்டோவில் லைண்ஸ் போட்டு வைத்து இருக்கிறீர்கள் ??? :))
//மிக அருமையான பதிவு.
இந்தக் கோணத்தில் இது மாதிரி ஒரு பதிவை நான் படித்ததில்லை.//
செந்தில்வளவன், நிஜமாகவா? ஒரு வேளை பதிவர்கள் யாருக்கும் இப்படி அனுபவம் இருந்திருக்காது.
//இது மாதிரியான ஒரு முழு நீள அம்மா பதிவை இப்போதான் போடுறீங்களா? //
தெகாஜி, ம்ம்ம்... அம்மா வை பத்தி ஏதாவது எழுத இருந்தால் தானே எழுத? அதான் எழுதினது இல்லை. ஆனால் எல்லாரும் எழுதறாங்களா சரி நாமும் எழுதுவோம்னு ஒரு வேகத்தில் பொறாமையில் எழுதினது.. :)))
//உங்களோட ஏதாவது ஒரு பதிவில அம்மா இல்லாத அந்த இடைவெளி அடி நாதமா இருக்கும் படிக்கும் போது.
//
ம்ம்ம்... வந்துவிடும்.. உள்ளே இருக்கு இல்ல.. :(
//அந்த இடைவெளிகள் சிறிதாகவே இருந்தாலும், கொடுக்கும் காலத்தில் கொடுப்பதினால் அதன் கனமும், பொருளும் வித்தியாசப் பட்டு இடைவெளி நிரப்பப் பட்டுக்கொண்டே வருகிறது.//
ம்ம்ம்..இது எனக்கு சரியா புரியல.. புரிஞ்ச மாதிரியும் இருக்கு.. இன்னொரு தரம் சொல்லுங்க.. !! :)
அம்மாவை பத்தி எழுதியதற்க்கு நீங்க
சரியானவர் தான்
பொதுவா இல்லாதவங்களுக்கு தான்
அருமை புரியும் அதனால சொன்னேன்
என்னையே எடுத்துக்குங்க நான் ஒரு ஊர் சுற்றி ஆனா இன்னைக்கு எனக்கு
ஒரு குழந்தை பிறந்தவுடன் வீட்ல இருக்க முடியலேயே ஏங்கிகிட்டு இருக்கேன்
இதுமாதிரியான சூழ்நிலைகள் வரும்போது தான் புரியுது.
அன்னையர் தின வாழ்த்துகள்
@ஜே - நன்றி
//அம்மாவை பத்தி எழுதியதற்க்கு நீங்க
சரியானவர் தான், பொதுவா இல்லாதவங்களுக்கு தான்
அருமை புரியும் அதனால சொன்னேன்
//
இதற்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. :))
//என்னையே எடுத்துக்குங்க நான் ஒரு ஊர் சுற்றி ஆனா இன்னைக்கு எனக்கு
ஒரு குழந்தை பிறந்தவுடன் வீட்ல இருக்க முடியலேயே ஏங்கிகிட்டு இருக்கேன்
இதுமாதிரியான சூழ்நிலைகள் வரும்போது தான் புரியுது.//
ம்ம்.மனிதர்கள் சூழ்நிலை கைதிகள் !!
கவிதா..
என் நெருங்கிய தோழி ஒருத்திக்கு.. நாங்கள் ஏழாவது படிக்கும் போது அம்மா தவறிட்டாங்க...அதுக்கு அப்புறம் அவங்க அப்பா தான் எல்லாம்...அவ சொல்லுவா.. அம்மா இல்லாத குறை இருந்தாலும்...அதற்கு ஈடாக அன்பு செலுத்தும்..அக்கறை காட்டும்..பொறுப்பை வெளிப்படுத்தும் அப்பா கிடைத்தில் நான் அதிர்ஷ்டசாலின்னு சொல்லுவா
அது மாதிரி ஆண்டவன் ஒவ்வொறுத்தருக்கும் ஏதாவது ஒரு ஆறுதல் வைத்திருப்பார்...
உங்கள் ஆதங்கம் புரியுது...பட் அது உங்களை பாதிக்க வேண்டாம்னு சொல்ல வந்தேன்...
மற்றபடி..தாயாக அன்பு செலுத்தும் நண்பர்களும் இருக்கிறார்கள்... எனக்கும் இருக்கிறார்கள்...
உங்களுக்கு அப்படி நாங்கள் இருப்போம்.. எதற்கும்.. எப்பொழுதும்...
அன்புடன்
மங்கை
சோகத்தையும் எழுத்தால் மறைத்து சட்டென தாண்டுகிறீர்கள்..!
ஒண்ணும் சொல்ல முடியலை..!
கோச்சுக்காதீங்க..!
//உங்கள் ஆதங்கம் புரியுது...பட் அது உங்களை பாதிக்க வேண்டாம்னு சொல்ல வந்தேன்...//
ம்ம் புரியுது..பாதிக்காமல் இருப்பதில்லை, அதன் தாக்கம் அதிகம் இல்லாமல் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்க பழகிக்கொண்டேன். :)
//மற்றபடி..தாயாக அன்பு செலுத்தும் நண்பர்களும் இருக்கிறார்கள்... எனக்கும் இருக்கிறார்கள்...
உங்களுக்கு அப்படி நாங்கள் இருப்போம்.. எதற்கும்.. எப்பொழுதும்...
//
மங்கைஜி, நன்றி... !! :)))) இதில் நீங்கள் உபயோகித்திருக்கும் "எப்பொழுதும்" என்ற வார்த்தை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.. நன்றி... :)
//சோகத்தையும் எழுத்தால் மறைத்து சட்டென தாண்டுகிறீர்கள்..!//
முருகா..என்ன முருகா?!! கவிதா'க்கள் அப்போது தான் வாழ்க்கையை கடக்கமுடியும் !! முருகனுக்கு இதை எல்லாம் நான் சொல்லவேண்டுமா?
//ஒண்ணும் சொல்ல முடியலை..!
கோச்சுக்காதீங்க..!//
ம்ஹும் முருகனிடம் கோபித்துக்கொண்டு நாங்களெல்லாம் குன்றின் மேல் அமர ஆரம்பித்தால் ஒரு குன்று கூட மிஞ்சாதே முருகா... அப்புறம் நீ எங்கே போவாய் ?!!
anbu sagotharikku.... amma illai endraal athu evvalavu vali kodukkum endru indru thaan therinthu kondaen...... sari vidunga unga kutties ku avvalavu anbaiyum kottikodunga avanga naalai ungalai gavanikkum pothu ungalukku ammavin anbum aravanaippum kidaikkum..... all the best
தாயாக அன்பு செலுத்தும் நண்பர்களும் இருக்கிறார்கள்... எனக்கும் இருக்கிறார்கள்...
உங்களுக்கு அப்படி நாங்கள் இருப்போம்.. எப்பொழுதும்...
அன்புடன் மங்கை...
ippadi oru anbaana koottathai vaithuk kondu neengal aen varuntha vaendum...... intha anbaana koottathil naanum inainthu kolvaen thaangal anumathi alithal.....
@ இவின்கோபி - என்ன ஒரே பீலிங்ஸ்...
நான் தான் பீலிங்ஸ் னா நீங்களும் பீலிங்ஸா? ஏன்ன் ?
ம்ம்ம்.. கூட்டத்தில் ஐக்கியமாயிடுங்க சூப்பரா இருக்கும்.. :))) நாங்க எல்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க பாஸ் !! :))
தெகாஜி -இடம் இருந்து மெயிலில் வந்த பதில்... நன்றி தெகாஜி.. :)
இதில் இருப்பதை பேச ஆரம்பித்தால் பதில் சொல்லுவீர்களா எனக்கு?
//சிறு குழந்தையாக இருக்கும் பொழுது நமக்கு எல்லாமே ஆச்சர்யமும்,அதிசயாமாகவும் தான் மனதில பதிகிறதில்லையா? பசு மரத்தில் ஆணி போல! இதில் நமது பள்ளி நண்பர்களும், அண்டடைய வீட்டுக் குழந்தைகளும் அந்த பெற்றோர்கள் பாசத்தை, இதத்தைப் பெறும் போது, நாம் தனித்து விடப் பட்டதாக உணர்கிறோம் அந்த இடத்தில் அந்த பிம்பம்(அம்மா/அப்பா) இல்லையே என்று ஏங்கும் நிலைக்கு. இப்படி காலம் தோறும் ஏக்கத்தை சேமிக்கும் பொழுது, ஒரு விதமான மன வெறுமையையும், வெருப்பும், பொறாமையும் நம்மிடையே வளர்வதில் ஒன்றும் புதிதல்ல.
இருந்தாலும், நான் சொல்ல வந்தது அந்த இடைவெளியைக் குறைக்க அவ்வப் பொழுது உங்களுக்கு அம்மா என்ற பிம்பத்தின் மூலமாக அந்த ஆசா பாசங்கள் கொடுக்கப் பட்டிருந்தால் இன்றைக்கு இது போன்றதொரு பதிவு இல்லாமல் வேறு மாதிரியான கோணத்தில் அம்மா பற்றி வந்திருக்கும். விடுங்க நீங்க தான் எப்படியெல்லாம் சிறந்த அம்மாவ இருக்க வேண்டுமோ அப்படி இருந்ததில் உங்களுக்கே திருப்தியாகிருக்குமே... இனிமேல் அந்த இடத்தை வெற்றிடமாக வைத்துக் கொள்வதில் அவசியமிருக்காது :-)//
Post a Comment