மும்பையில் வேலை விஷயமாக தங்கி உள்ளதால், பொழ்துவிடிந்து பொழுது போனால் டென்ஷன். முன்பு நடந்த வட இந்தியர்கள் தாக்குதல் போதும் மிகுந்த டென்ஷனில் இருந்தோம்.
ரூம் கிடைப்பதிலேயே தென்னிந்தியர் என்று நிறைய மாராட்டியர்கள் வீட்டில் விரட்டியடிக்கப்பட்டார். இதில் ஏகப்பட்ட அன் அஃபிசியலா ஷேரிங் பேசிஸில் வீடு தருகிறோம் என்று ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் அழைத்தார்கள். (இந்தியாவில் தான் இருக்கிறோமா?) அதில் இருந்து அவர் தப்பிப்பதே பெரும் பாடாக இருந்தது. இப்போது கூட போலிஸ் நேரடி ஆய்விற்கு பிறகு ஒரு இடத்தில் தங்கி இருக்கிறார். அங்கு வீடு எடுத்து தங்க போலிஸில் நேரடியாக சென்று அவர்களின் ஒப்புதல் கிடைத்த பிறகுதான் தங்கமுடியுமாம். இது கூட தீவரவாதிகள் ஊடுருவல் அதிகமாக இருப்பதால் அரசாங்கம் செய்து வைத்துள்ள முதல்நிலை சோதனை. தமிழ்நாட்டை விட்டு தாண்டினால் எத்தனை பிரச்சனைக்கு உள்ளாக வேண்டியுள்ளது. இங்கு நாம் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
சரி முமபை கதைக்கு வரலாம், மீடியா ஒரு பக்கம் இருக்கட்டும், வதந்திகளால் தான் என் கணவர் மிகுந்த டென்ஷாகவும், என்ன செய்வது எங்கே போவது என்று தெரியாமல் இருக்கிறார். சாப்பாட்டிற்கு சாதாரண ஹோட்டல்களுக்கு செல்ல கூட ரொம்பவம் கஷடமாக இருப்பதாக சொன்னார். தீடிரென்று ஒரு வதந்தி, ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் தீவரவாதிகள் புகுந்து விட்டார்கள், எல்லோரையும் தாக்குகிறார்கள் என்று, முன் திட்டத்துடன் அவர்கள் வந்து இருப்பதால் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவர்கள் நுழையக்கூடும்.
இந்த ரயில் நிலைய வதந்தியில் தான் மக்கள் ரொம்பவும் பயந்து போய் இருக்கின்றனர். மும்பை நகரை பொருத்த்வரை அதிக மக்கள் நெருக்கடி உள்ள இடங்களில் ரயில் நிலையமும் ஒன்று. ஒரு நாள் எல்லாம் இந்த வதந்தி இருந்து வந்தது. மாலை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு இந்த செய்தி ஒரு வதந்தி, உண்மையில்லை என்று தெரிந்து வீட்டில் இருப்பவர்களும் அலுவலகம் சென்றவர்களும் நிம்மதி அடைந்து உள்ளனர்.
செய்திகள் ஒரு பக்கம் இருக்கட்டும் நம் பதிவர்கள் எல்லோரும் மும்பை பற்றி எழுதும் செய்திகளையும் படித்து வருகிறேன். அவ்வபோது என்ன நடக்கிறது, சந்தேகம் வந்தால் உடனே ஃபோன் என்று நாட்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவிற்குள்ளே இப்படி என்றால்... ?? வெளிநாடுகளில் வேலை செய்யும் கணவரை (காதலரை, காதலியை) பிரிந்து இருக்கும் ஒவ்வொருவரும் என்ன டென்ஷனில் இருப்பார்கள் என்பதை இப்போது உணரமுடிகிறது.
எப்போது போனில் பேசினாலும் வந்து விடுங்கள் வேலை போனால் போகட்டும் சென்னையிலேயே இருக்கலாம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன். மும்பையில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருக்கும் அனைவருக்காகவும் கடவுளை பிராத்தனை செய்வதை தவிர வேறு எதுவும் செய்யமுடியாத நிலையில்...
அணில் குட்டி அனிதா: அம்மணி ரெம்ப டீசன்டா பதிவு போட்டுடாட்ங்க போல ஆனா வீட்டுக்குள்ள அமக்களம் தாங்கல.. "டேய் எடுறா அந்த Gun ஐ flight ஐ புடிடா... போய் அந்த தீவரவாதியில ஒருத்தனையாவது இந்திய சிட்டிசனா சுட்டுடு வரலாம்னு " இவிங்க தீவரவாதியா ஆகறதும் இல்லாம இவிங்க புள்ளையையும் ஆக்க பாக்கறாங்க..என்ன கொடுமைடா இது !!
புள்ள என்ன சொல்லிச்சி தெரியுமா? இல்லாத Gun அ எடுக்க சொல்லாத.. உன்னை மாதிரி எல்லாரும் கையில வெபன் எடுக்க முடியாது.. அதுக்கு தான் போலிஸ்ஸும், ஆர்மியும் இருக்காங்க... ரொம்ப ஓவரா சீன் போட்டு நாட்டை காப்பத்தறேன்னு கிளம்பின உன்னை முதல்ல தூக்கி உள்ள வைப்பானுங்க.. அடக்க ஒடுக்கமா அமைதியா இரு.. வூட்டுகாரு மேல அவ்லோ அக்கற இருந்தா கூட்டியாந்து இங்கேயே வச்சிக்கோ..தயவுசெய்து சவுண்டயும், பீட்டரையும் கொர, முடியல, கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு அம்மாவை கொடுத்த...??!! "..ஹா..ஹா.. கவிதாக்கு தகுந்த புள்ளைங்க. .இப்படி ஒரு புள்ள இல்லைனாலும் இவிங்கள அடக்க முடியாது.. !!
சூப்பர் ஐடியா ..பேசமா அம்மணிய மும்பை அனுப்பி பாட சொல்லலாம்.. தீவரவாதி அத்தனை பேரும் 2 பாட்டுக்கே சரண்டர் ஆயிடுவாங்க..கோவம் அந்து போட்டு தள்ளினாலும் லாபம் தான்.. ஹி ஹி..... !!
பீட்டர் தாத்ஸ் :- A terrorist is someone who has a bomb, but doesn't have an air force
என் கணவர் மும்பையில்..........
Posted by : கவிதா | Kavitha
on 07:27
Labels:
பழம்-நீ
Subscribe to:
Post Comments (Atom)
21 - பார்வையிட்டவர்கள்:
//சூப்பர் ஐடியா ..பேசமா அம்மணிய மும்பை அனுப்பி பாட சொல்லலாம்.. //
தீவிரவாதியாக இருந்தாலும் இப்படி ஒரு தண்டனை கொடுக்க கூடாதுங்க!:)
//சூப்பர் ஐடியா ..பேசமா அம்மணிய மும்பை அனுப்பி பாட சொல்லலாம்.. //
தீவிரவாதியாக இருந்தாலும் இப்படி ஒரு தண்டனை கொடுக்க கூடாதுங்க!:)//
:( இது எல்லாம் ரொம்ப அதிகம்.. பொறாமை படறதுக்குன்னு ஒரு அள்வு இல்லாமல் போச்சி. சரி குசும்பன் நீங்க எங்க இருக்கீங்க...?? !! (எதுக்குன்னு கேட்காதிங்க வந்து பாட்டு பாடி என் திறமையை வெளிப்படுத்ததான் ....)
என்னங்க கவிதா,
எல்லாக் கஷ்டமும் உங்களையே சுத்தி நடக்குது.
மழை, படகு, குண்டு, தீ........
கவனமா இருங்க.
//தீவிரவாதியாக இருந்தாலும் இப்படி ஒரு தண்டனை கொடுக்க கூடாதுங்க!:)//
ஹா...ஹா...ஹா...
//என்னங்க கவிதா,
எல்லாக் கஷ்டமும் உங்களையே சுத்தி நடக்குது.
மழை, படகு, குண்டு, தீ........
கவனமா இருங்க.//
வாங்க துளசிஜி, இதையெல்லாம் கூட கண்டிப்பாக என்னால் சமாளிக்க முடியும், ஆனால் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு என்னை ஏமாற்றுபவர்களையும், பக்கத்தில் இருந்துக்கொண்டு குழியை நோண்டிவிட்டு காத்திருப்பவர்களையும் எப்படி சமாளிப்பது என்று தவிக்கிறேன். நண்பர்கள் போர்வையில் என்னை ஏமாற்றியவர்களை, ஏமாற்றுபவர்களை சந்திக்க கடவுள் எனக்கு நல்ல மனதிடத்தை கொடுக்கவே எப்போதும் நான் வேண்டுகிறேன்.
//தீவிரவாதியாக இருந்தாலும் இப்படி ஒரு தண்டனை கொடுக்க கூடாதுங்க!:)//
ஹா...ஹா...ஹா...//
வாங்க ஆதவன்..வாங்க.. சிரிச்சாச்சா...?? சந்தோஷமா..??
தீவரவாதிகள் இருக்கும் இடத்தில் பயப்படாமல் நின்று பாடக்கூட ஒரு தைரியம் வேண்டும் சரிங்களா?.
இருந்தாலும் இந்த குசும்பனுக்கு குசும்பு அதிகம்.. பார்த்துக்கறேன்.!:)
கவிதா, ஒரு வாரக்கடைசிலயாவது வந்துட்டுப் போகச் சொல்லுங்க. அவருக்கும் உங்களுக்கும் நல்லது.
பம்பாயாஇ மும்பாயா மாத்தினாக் கூட அது பாம் ,பாய் ஆகத்தான் தெரிகிறது:(
//கவிதா, ஒரு வாரக்கடைசிலயாவது வந்துட்டுப் போகச் சொல்லுங்க. அவருக்கும் உங்களுக்கும் நல்லது.
பம்பாயாஇ மும்பாயா மாத்தினாக் கூட அது பாம் ,பாய் ஆகத்தான் தெரிகிறது:(//
தினமுமே சொல்லிகிட்டுத்தான் இருக்கேன்.. எங்க நாம் நினைக்கற மாதிரியா லீவு கிடைக்கிறது.. பேசாமல் நானும் அங்கேயே போயிடலாம்னு பார்க்கிறேன்.. இந்த டென்ஷன்'க்கு அங்கேயே இருந்தால் கொஞ்சம் நிம்மதியாகவாது இருக்கும். எந்த முடிவும் எடுக்கமுடியாமல் குழப்பமான மனநிலை. :)
அம்மிணி ஓவர் ஜவுண்டு ஒடம்புக்கு ஆவாதாம்
:))))
/
தீவிரவாதியாக இருந்தாலும் இப்படி ஒரு தண்டனை கொடுக்க கூடாதுங்க!:)
/
ரிப்பீட்டு
அம்மிணி ஓவர் ஜவுண்டு ஒடம்புக்கு ஆவாதாம்
:))))/
சிவா.. பாட்டு பாடினா சவுண்டு இல்லாமல் எப்படி பாடுவது சொல்லுங்க..??? :)))
/தீவிரவாதியாக இருந்தாலும் இப்படி ஒரு தண்டனை கொடுக்க கூடாதுங்க!:)
/
ரிப்பீட்டு//
இப்படி பல பேரு பொறாமையில ரீப்பீட்டு' க்கிட்டே தான் இருப்பாங்க.. அதையெல்லாம் ஒரு மேட்டராக எடுத்துக்கொண்டால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க முடியாது..!!
:( இது எல்லாம் ரொம்ப அதிகம்.. பொறாமை படறதுக்குன்னு ஒரு அள்வு இல்லாமல் போச்சி. சரி குசும்பன் நீங்க எங்க இருக்கீங்க...?? !! (எதுக்குன்னு கேட்காதிங்க வந்து பாட்டு பாடி என் திறமையை வெளிப்படுத்ததான் ....)//
ஹி ஹி நான் இருப்பது துபாயில் என்கிற தைரியத்தில் தானே இப்படி ஒரு கமெண்ட் போட்டேன்:) அண்ணாச்சி மும்பையில் இருப்பதுக்கும் உங்கள் பாட்டு பாடும் திறமைக்கு ஒன்னும் சம்மந்தம் இல்லையே!:)))
இருந்தாலும் லீவ் போட்டுவிட்டு ஒருவாரம் நீங்களோ, அல்லது அண்ணாச்சியையோ வந்துட்டு போக சொல்லுங்க!
//ஹி ஹி நான் இருப்பது துபாயில் என்கிற தைரியத்தில் தானே இப்படி ஒரு கமெண்ட் போட்டேன்:) //
ஓ.. எப்போ இந்தியா வருவீங்க..?? ஏன் இப்பக்கூட என்ன ஒரு சிடி'யில பதிவு செய்து அனுப்பறேன்.. :)
//அண்ணாச்சி மும்பையில் இருப்பதுக்கும் உங்கள் பாட்டு பாடும் திறமைக்கு ஒன்னும் சம்மந்தம் இல்லையே!:)))//
நிறைய இருக்கு..அவரு நிம்மதியாக இருக்காரு என் பாட்டை கேட்காமல்.. :)
//இருந்தாலும் லீவ் போட்டுவிட்டு ஒருவாரம் நீங்களோ, அல்லது அண்ணாச்சியையோ வந்துட்டு போக சொல்லுங்க!//
ம்ம் அப்படித்தான் முடிவு செய்து உள்ளோம்..
//அங்கு வீடு எடுத்து தங்க போலிஸில் நேரடியாக சென்று அவர்களின் ஒப்புதல் கிடைத்த பிறகுதான் தங்கமுடியுமாம்//
நேரடித் தொடர்பிலேயே வீடு கிடைப்பது குதிரைக் கொம்பு.இதில் போலிஸ் ஒப்புதல் எனும் போது சொல்லவே வேண்டாம்.
இந்த ஒப்புதலுக்குப் பிறகும் கூட பயங்கரவாதம் வளருகின்றதென்றால் இந்த தீவிரவாத மனவியாதிகள் எங்கு உலாவுகின்றன?
கவிதா, உங்கள் கனவர் மும்பையில் எங்கே என்ன வேலை பார்க்கிறார் ? நான் பத்து நாட்களாக மும்பையில்தான் இருக்கிறேன். நீங்கள் சொல்லுவது போல எந்த பதட்டமும் இல்லை. நான் சாதாரணமாக தெருக்களிலும் ரயிலிலும் போய் வந்துகொண்டுதான் இருக்கிறேன். ஓட்டலுக்குப் போவது, சாப்பிடுவது எதிலும் எந்த பிரச்சினையும் இல்லை. இங்கே என் மகனுக்கு வீடு கிடைப்பதில் தமிழர் என்று எந்த பிரச்சினையும் வந்ததில்லை. நீங்கள் சொல்லுவதெல்லாம் சற்று ஓவராக தொனிக்கிறது. தயவுசெய்து விவரமாக எழுதுங்கள். அன்புடன் ஞாநி
//கவிதா, உங்கள் கனவர் மும்பையில் எங்கே என்ன வேலை பார்க்கிறார் ? //
வணக்கம் ஞானி சார், எப்படியிருக்கீங்க? எதற்காக கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் என் கணவரின் அனுமதி பெற்று தருகிறேன். அதுவும் தனிமடல் மூலம் அனுப்புகிறேன்.
//நான் பத்து நாட்களாக மும்பையில்தான் இருக்கிறேன். நீங்கள் சொல்லுவது போல எந்த பதட்டமும் இல்லை. நான் சாதாரணமாக தெருக்களிலும் ரயிலிலும் போய் வந்துகொண்டுதான் இருக்கிறேன்.//
கண்டிப்பாக இருக்கலாம். ஏன் தாஜ் ஹோட்டல் பக்கத்தில் குண்டுவெடிப்பால் தாக்கப்பட்ட ஹோட்டல் கூட இன்று திறந்துவிட்டதாக செய்தியில் பார்த்தேன்.
//ஓட்டலுக்குப் போவது, சாப்பிடுவது எதிலும் எந்த பிரச்சினையும் இல்லை.//
இல்லை தான், ஆனால் வரும் வதந்திகள் மனதை பதட்டப்படுத்துகின்றன அல்லவா..?
//இங்கே என் மகனுக்கு வீடு கிடைப்பதில் தமிழர் என்று எந்த பிரச்சினையும் வந்ததில்லை. நீங்கள் சொல்லுவதெல்லாம் சற்று ஓவராக தொனிக்கிறது. தயவுசெய்து விவரமாக எழுதுங்கள். அன்புடன் ஞாநி//
ஞாநி சார், இதுல ஓவரா நான் சொல்ல அவசியம் என்ன இருக்கு சொல்லுங்க..??
என் கணவர் ஆகஸ்டு மாதம் அங்கே வேலைக்கிடைத்து சென்றார். அவருக்கு வீடு கிடைத்தது அக்டோபர் மாதம் தான். மிக மோசமான அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டன.
அந்த 2 மாதங்களும் அலுவலக கெஸ்ட் ஹவுஸில் தான் தங்கி இருந்தார்.
1. வீடு கிடைக்காததால் நெட்டில் விளம்பரம் கொடுத்து இருந்தோம், அதனை பார்த்து ஆண், பெண் இருபாலாரும் ஷேரிங் பேஸிசில் வீடு கொடுப்பதாக தொலைபேசினர். பேச்சிலிருந்தே அவர்களின் நோக்கம் தெரிந்தது. வரும் தொலைபேசிகள் அனைத்துமே இரவு 12 மணிக்கு மேல் 2 மணிக்குள் தான் வரும். ஒருமுறை இங்கே அவர் வந்திருந்த போது ஒரு ஆண் நடு இரவில் அழைத்து வீடு இருப்பதாக சொல்லி பேசினார். இவரும் நாசுக்காக பேசி கழட்டி விட்டார். யார் என்று கேட்டதற்கு ஆண்களுடன் தகாத உறவு வைத்துக்கொள்ள ஆட்களை தேடும் ஒரு ஆண் என்று தெரிந்தது. அதற்கு பிறகு தான் சொன்னார் இப்படி பட்ட கால்கள் தனக்கு நிறைய வருவதாக சொன்னார். இரவு 12 மணிக்கு மேல் 2000 ரூ கொடுத்தால் போதும் என்னுடன் தங்குங்கள் என்று ஒரு பெண் அழைத்ததாக கூறினார். இவர் பகலில் அழைக்குமாறு சொல்லி வைத்திருக்கிறார், ஆனால் அந்த பெண் மறுபடி அழைக்கவில்லை. :)
2. வீடு பார்க்க போகும் இடங்களில் முதல் கேள்வியே எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பதே. மாராட்டியர் அல்லாதவர்களுக்கு வீடுகள் கொடுப்பதில்லை என்று நேரடியாகவே சொன்னவர்களும் உண்டு. நிறைய இடங்கள் பிரோகர் மூலம் பார்த்து நொந்து போய், அலுவலக நண்பர்கள் மூலம் தேட ஆரம்பித்தார்.
3. பிடித்த வீடுகளில் கூட அட்வான்ஸ் என்பது பலமடங்காக இருந்தது. சரி டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து விட்டு வந்து, பிறகு செல்லலாம் என்று, அன்று மாலைக்குள்ளே 2 இடத்தை விட்டார். டோக்கன் அட்வான்ஸ் திருப்பி கொடுக்கப்பட்டது.
4. கடைசியாக இப்போது கிடைத்துள்ள வீட்டிற்க்கும்,போலிஸ் ஓப்புதல் பெற்று, அலுவலகத்திலிருந்து அவ்ர் அங்குதான் வேலை செய்கிறார் போன்ற சான்றிதழகள் கொடுத்து, கண்டிப்பாக தனியாக இருக்க மாட்டேன் குடுமபத்துடன் இருப்பேன் போன்ற வாக்குறுதிகளை கொடுத்துதான் இப்போது இருக்கும் வீட்டை பிடித்துள்ளார்.
5. இதை எல்லாவற்றையும் விட காமெடி, இதுவரை அவர் குஜராத், கேரளா போன்ற மாநிலங்களில் இருந்த போது சமையலுக்கு என்று எதையுமே கொண்டு சென்றது இல்லை. வீடு முழுக்க புத்தகமும், அலுவலக கோப்புகளும், செய்தி தாள்களுமே இருக்கும். ஆனால் முதன் முறையாக போலிஸ், மற்றும் வீட்டுக்காரர் செக்கிங் வரும்போது சமாளிக்க, குடும்பம் இருப்பதாக காட்டிக்கொள்ள கேஸ் ஸ்டவ், பாத்திரங்கள் எல்லாம் கொண்டு போய் வைத்துள்ளார். :))))
//அண்ணாச்சி மும்பையில் இருப்பதுக்கும் உங்கள் பாட்டு பாடும் திறமைக்கு ஒன்னும் சம்மந்தம் இல்லையே//
குசும்பன் என்ன சொல்ல வந்தாருன்னா, நீங்க பாடறதால தான் அவரு மும்பாய்க்குப் போனாரான்னு!
உங்க ஊட்டுக்காரர நீங்க இருக்கற ஊருக்கு வரச்சொல்லிடுங்க.
ஃப்ரண்ட்ஸ்ங்களை சமாளிக்கறதப் பத்தி ஏதாவது அறிவார்ந்த ஆலோசனை(அ.சொ. பொருள் : நான் என்ன சொல்றேனோ அது) வேணும்னா எனக்கு மெயில் அனுப்புங்க, நிறெய அனுபவம் இருக்கு.
//நேரடித் தொடர்பிலேயே வீடு கிடைப்பது குதிரைக் கொம்பு.இதில் போலிஸ் ஒப்புதல் எனும் போது சொல்லவே வேண்டாம்.
இந்த ஒப்புதலுக்குப் பிறகும் கூட பயங்கரவாதம் வளருகின்றதென்றால் இந்த தீவிரவாத மனவியாதிகள் எங்கு உலாவுகின்றன?//
ராஜநடராஜன்!! கண்டிப்பாக !! போலிஸ் ஒப்புதல் பெற்று அந்த வீட்டிற்கு சென்றேன் அவர் சொன்னபோது நானும் ஆச்சரியமாகத்தான் பார்த்தேன். ஏன் இவ்வளவு கெடுபிடி என்று நினைத்தேன்.
//குசும்பன் என்ன சொல்ல வந்தாருன்னா, நீங்க பாடறதால தான் அவரு மும்பாய்க்குப் போனாரான்னு!//
ஏன் கபீஷ்?? இந்த கொலவெறி ? :)) விளக்கம் வேற தரணுமா? :))
//உங்க ஊட்டுக்காரர நீங்க இருக்கற ஊருக்கு வரச்சொல்லிடுங்க.//
சொல்லிட்டோம்.. வந்தாதானே?
//ஃப்ரண்ட்ஸ்ங்களை சமாளிக்கறதப் பத்தி ஏதாவது அறிவார்ந்த ஆலோசனை(அ.சொ. பொருள் : நான் என்ன சொல்றேனோ அது) வேணும்னா எனக்கு மெயில் அனுப்புங்க, நிறெய அனுபவம் இருக்கு.//
ம்ஹீம் நீங்க என்னவேணும்னாலும் சொல்லலாம்..ஆனா நான் அதை கேட்கனுமே.??!! ஏன் என் நண்பர்களே இப்படி இருக்காதே இம்சை செய்யாதே, அவர்களிடமே எப்படி பேசணும்னு சொல்லி தருவாங்களே ஆனா நான் கேட்டாதானே ??!! நான் தான் ரொம்ப நல்லவளாச்சே !! :))
வாங்க துளசிஜி, இதையெல்லாம் கூட கண்டிப்பாக என்னால் சமாளிக்க முடியும், ஆனால் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு என்னை ஏமாற்றுபவர்களையும், பக்கத்தில் இருந்துக்கொண்டு குழியை நோண்டிவிட்டு காத்திருப்பவர்களையும் எப்படி சமாளிப்பது என்று தவிக்கிறேன். நண்பர்கள் போர்வையில் என்னை ஏமாற்றியவர்களை, ஏமாற்றுபவர்களை சந்திக்க கடவுள் எனக்கு நல்ல மனதிடத்தை கொடுக்கவே எப்போதும் நான் வேண்டுகிறேன்.“
உங்களுக்குகூடமா? எல்லா இடத்திலியும் இந்த கூத்துதானா?.
\\துளசி கோபால் said...
என்னங்க கவிதா,
எல்லாக் கஷ்டமும் உங்களையே சுத்தி நடக்குது.
மழை, படகு, குண்டு, தீ........
கவனமா இருங்க.\\
ரீப்பிட்டேய்....
\துளசி கோபால் said...
என்னங்க கவிதா,
எல்லாக் கஷ்டமும் உங்களையே சுத்தி நடக்குது.
மழை, படகு, குண்டு, தீ........
கவனமா இருங்க.\\
ரீப்பிட்டேய்....//
சமாளிக்க தைரியம் கொடுக்கமா இது என்ன ரீப்பிட்டேய்..??! :(
//:(((//
சென்ஷி'க்கும் அதே..!!
Post a Comment