வேளச்சேரியில் வீடுகள் அதிகமாக அதிகமாக மழைநீர் செல்ல வழியில்லாமல் போகிறது. பற்றாக்குறைக்கு ஏரியை உடைத்து விடுகிறார்கள். படங்கள் சில, பத்து வருடங்களில் முதன் முறையாக எங்கள் தெருவில் படகு வந்தது. ஒருவருவருக்கு ரூ.10/-,இன்னமும் ஆட்டோ நிறுத்தத்தில் படகுகள் நிற்கின்றன. உங்களுக்கும் படகு பயணம் போகனுமா வாங்க ஏ.ஜி.எஸ் காலணி, மேற்கு வேளச்சேரிக்கு -
எங்கள் தெருவில் படகு பயணம் - படங்கள்!!
Posted by : கவிதா | Kavitha
on 13:00
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
26 - பார்வையிட்டவர்கள்:
கெல்மெட் போட தேவை இல்லையின்னு நெனைக்கிறேன்:-)
ஐயோ....கவிதா....என்னா இது??? சென்னைதானா????
அன்புடன் அருணா
//கெல்மெட் போட தேவை இல்லையின்னு நெனைக்கிறேன்:-)//
சிங்கு, hellmet எதுக்கு...??? ட்ராஃபிக் கம்மி தான். ஒரே ஒரு போட் தான் ஒரு சமயத்தில ஒரு தெருவில் வரமுடியும்.
//ஐயோ....கவிதா....என்னா இது??? சென்னைதானா????
அன்புடன் அருணா //
வாங்க "அன்புடன்" அருணா, சென்னை'தான். :) அதுவும் எங்க தெரு...
அந்த படத்தை பெரிதாக்க முடிந்தால் பெரிதாக்கி பாருங்கள், அந்த வீட்டிற்க்குள் தண்ணீர் விடியற்காலை 3 மணியிலிருந்து தண்ணீர் உள்ளே புக ஆரம்பித்தது. அங்கிருந்த வயதான இருவர் நடக்கமுடியாத நோயாளிகள் அவர்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லவே இந்த போட் வந்தது. மேலும், மின்சாரம் இல்லை, உபயோகிக்க தண்ணீர் இல்லை. ஃபோன் வேலை செய்யவில்லை, செல்ஃபோன் சார்ஜ் இல்லாமல் நின்று போனது. யாருமே நாங்கள் இருக்கிறோமா இல்லையா என்று விசாரிக்க முடியவில்லை. பாத்ரூம்லிருந்து ட்ரைனேஜ் தண்ணீர் எல்லாம் நாள் முழுக்க வீட்டுக்கள் வந்தபடி இருந்தது. :(( இந்த கொடுமை எல்லாம் நிறைய குடும்பங்கள் அனுபவித்து இருக்கிறது.
கொடுமையா இருக்கு! இப்போ நிலமை சரி ஆயிடுச்சா?
//கொடுமையா இருக்கு! இப்போ நிலமை சரி ஆயிடுச்சா?//
ம்ஹீம் ஆச்சி..:) மழை நின்றதால் தண்ணீர் வடிய ஆரம்பித்துள்ளது. இப்ப என்ன பிரச்சனை தெரியுமா.. பாம்பு :( நம்மக்கூட அதுவும் பேசிக்கிட்டே நடக்குது.. பயமில்லாதமாதிரி நடிச்சாலும் ரொம்ப பயமா இருக்கு..!! :(( மீனுக்கு தூண்டில் போட்ட பாம்பு மாட்டுதே..!!
படகு பயணம் நீங்களும் போனீங்களா?
அற்புதமான பதிவு
யக்கா...என்னாதிது??? அல்லாரும் சேப்பிடியாகீறீங்களா??
//படகு பயணம் நீங்களும் போனீங்களா?//
வாங்க ஜி..!! :) இல்லை படகு பயணம் நான் கண்டிப்பா போவேன் சும்மா இருக்க மாட்டேன்னு தெரிஞ்சு என்னை வீட்டுக்குள் சிறை வச்சிட்டாங்க... அவங்கள ஏமாத்திட்டு போகமுடியல.. :(
//யக்கா...என்னாதிது??? அல்லாரும் சேப்பிடியாகீறீங்களா??//
சேப்பிட்டியா ஆனா பிறகுத்தானே உங்களுக்கு படங்களை போட முடிஞ்சிது..!! ..
//அற்புதமான பதிவு//
ஜாக்கிசேகர், நன்றி :) !!
நேத்து நான் அந்தப் பக்கம் வந்தேன் - எங்க தெருவில் தண்ணியெல்லாம் வடிஞ்சதுக்கப்புறம்(சும்மா ஊர்சுற்ற).
அங்கே ஒரு குட்டி ஆறு ஓடிக்கிட்டிருந்தது...
வழிய மாத்தி St.தாமஸ் ரயில் நிலையம் பக்கமா போயிட்டேன்!
//நேத்து நான் அந்தப் பக்கம் வந்தேன் - எங்க தெருவில் தண்ணியெல்லாம் வடிஞ்சதுக்கப்புறம்(சும்மா ஊர்சுற்ற).
அங்கே ஒரு குட்டி ஆறு ஓடிக்கிட்டிருந்தது...
வழிய மாத்தி St.தாமஸ் ரயில் நிலையம் பக்கமா போயிட்டேன்!//
ம்ம்..எங்களை பார்த்து நீங்களும் தைரியமாக ஆற்றில் இறங்கி இருக்கலாம் இல்ல?? மிஸ் பண்ணீட்டீங்க.. !!
வேளச்சேரியா இது! அச்சச்சோ.....
கவிதா, நாமெல்லாம் காஷ்மீர் போனது இல்லை. அதான் இப்படிக் கடவுளச் சந்தர்ப்பம் கொடுக்குறாரு:(
சாரிம்மா. சீக்கிரம் சரியாகட்டும்.
//வேளச்சேரியா இது! அச்சச்சோ.....//
துளசிஜி, ஆமா வேளச்சேரியே தான்..!!
//கவிதா, நாமெல்லாம் காஷ்மீர் போனது இல்லை. அதான் இப்படிக் கடவுளச் சந்தர்ப்பம் கொடுக்குறாரு:(
சாரிம்மா. சீக்கிரம் சரியாகட்டும்.//
வாங்க வல்லிஜி, உங்களுக்கு காஷ்மீர் நினைவா? எனக்கு கேரளா நினைவு வந்தது. சென்னையிலிருந்து மங்களூர் ரயிலில் செல்லும் போது கேரளா வந்தவுடன் பாருங்கள் நிறைய படகுகள், நிறைய படகு பயணங்கள் இப்படி பார்க்கமுடியும். கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியாக...:)
நேற்றைக்கே ஆற்றை நடந்து கடக்கும் அளவுக்கு சரியாயிடுச்சு :)
மங்களூர் வந்திருந்தீங்களா? எப்போ??
இப்போ சென்னை மழை நிலைமை எப்படி இருக்கு??? டேக் கேர்.
//மங்களூர் வந்திருந்தீங்களா? எப்போ??//
வாங்க சிவா, இன்னொரு முறை வரும் போது சொல்றேங்க..:) இப்போ மும்பையில இருக்கிறமாதிரி முன்னர் கோழிகோட்டில் என் கணவர் வேலை செய்தார். அப்போது அடிக்கடி மங்களூர் மெயில் பிடித்து வருவோம். மங்களூர் வரை சென்றதில்லை... :(
//இப்போ சென்னை மழை நிலைமை எப்படி இருக்கு??? டேக் கேர்.//
இப்போது மழை இல்லை, தண்ணீர் குறைய ஆரம்பித்துவிட்டது.
நன்றி சிவா :))
அமரர் சுஜாதாவின் ஒரு சிறுகதைதான் நினைவிற்கு வருகிறது. அதில் கதையின் நாயகன் தண்னீருக்குள் மூழ்கியிருக்கும் சென்னையைக் காண படகில் வருவான்.
எனக்கென்னமோ, அந்த நாள் தொலைவில் இல்லையென்றுதான் தோன்றுகிறது. கழகங்கள் வீட்டிற்கு ஒரு இலவச படகு தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. :-))
angae thanneer thengum endru therindhum thaangal en angu kudi sendreerhal
//எனக்கென்னமோ, அந்த நாள் தொலைவில் இல்லையென்றுதான் தோன்றுகிறது. கழகங்கள் வீட்டிற்கு ஒரு இலவச படகு தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. :-))//
வாங்க வீரசுந்தர், அரசு இலவசமாக தான் அனுப்புகிறது, ஆனால் இப்பவே அவர்கள் ஒருவருக்கு ரூ.10 வசூலித்தார்கள். நமக்கு ஆட்டோகாரர்களுக்கு 50 ம் 100 மாக அழுது 10 ரூ ஒரு பொருட்டாக தெரியவில்லை.. :)
//angae thanneer thengum endru therindhum thaangal en angu kudi sendreerhal//
வாங்க அனுராதா,நல்ல கேள்வி, இந்த பதிவில் முதலிலேயே சொல்லி இருப்பேன்..10 வருடங்களில் முதன் முறையாக படகு பார்க்கிறேன்.. அதாவது நாங்கள் இருக்கும் இடம் ஒரு குட்டி ஏரிக்கு ஒரு 3 கிமி தள்ளி உள்ளது. இந்த ஏரியில் நிரம்பும் தண்ணீர் அதிகமானல் கால்வாய் வழியாக வேறு ஒரு ஏரிக்கு (பெயர் தெரியவில்லை) செல்லும். ஆனால் அந்த தண்ணீர் போய் சேருகின்ற ஏரிகள் எல்லாவற்றையும் இப்போது கட்டிடங்களால் நிரப்பிவிட்டார்கள். ஏன் நிறைய ஐ.டி கம்பெணிகள் கூட அந்த ஏரிகளில் தான் கட்டப்பட்டுள்ளது. அதனால் தண்ணீர் போக வழி இல்லாமல் இப்படி ஊருக்குள்ளேயே நின்று விடுகிறது. மேலும் அந்த குட்டி ஏரியை சுற்றி அமைந்துள்ள வீடுகள் அதிகம் பாதிக்கபடுவதால் ஏரியை உடைத்தும் விடுகிறார்கள். அதனால் தண்ணீர் கால்வாய் வழியாக மட்டும் போகாமல் இப்படி தெரு தெருவாக சுற்றிவருகிறது.. !!
ok we cant forecast that coming years the rainfall will be more or less than this year. so govt should take necessary steps during summer. due to politicians greediness our people are losing their precious lives either in flood or in fire [t.nagar saravana stores and kumbakonam school accident]
ஹையா... சென்னையில் ஒரு வெனிஷ் நகரம்!!
இப்ப வந்த தோனி அப்பவே வந்துருந்தா நாலுபேரைக் கரை சேர்த்திருக்கலாம்:-)
Post a Comment