என் கணவர் மும்பையில்..........

மும்பையில் வேலை விஷயமாக தங்கி உள்ளதால், பொழ்துவிடிந்து பொழுது போனால் டென்ஷன். முன்பு நடந்த வட இந்தியர்கள் தாக்குதல் போதும் மிகுந்த டென்ஷனில் இருந்தோம்.

ரூம் கிடைப்பதிலேயே தென்னிந்தியர் என்று நிறைய மாராட்டியர்கள் வீட்டில் விரட்டியடிக்கப்பட்டார். இதில் ஏகப்பட்ட அன் அஃபிசியலா ஷேரிங் பேசிஸில் வீடு தருகிறோம் என்று ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் அழைத்தார்கள். (இந்தியாவில் தான் இருக்கிறோமா?) அதில் இருந்து அவர் தப்பிப்பதே பெரும் பாடாக இருந்தது. இப்போது கூட போலிஸ் நேரடி ஆய்விற்கு பிறகு ஒரு இடத்தில் தங்கி இருக்கிறார். அங்கு வீடு எடுத்து தங்க போலிஸில் நேரடியாக சென்று அவர்களின் ஒப்புதல் கிடைத்த பிறகுதான் தங்கமுடியுமாம். இது கூட தீவரவாதிகள் ஊடுருவல் அதிகமாக இருப்பதால் அரசாங்கம் செய்து வைத்துள்ள முதல்நிலை சோதனை. தமிழ்நாட்டை விட்டு தாண்டினால் எத்தனை பிரச்சனைக்கு உள்ளாக வேண்டியுள்ளது. இங்கு நாம் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

சரி முமபை கதைக்கு வரலாம், மீடியா ஒரு பக்கம் இருக்கட்டும், வதந்திகளால் தான் என் கணவர் மிகுந்த டென்ஷாகவும், என்ன செய்வது எங்கே போவது என்று தெரியாமல் இருக்கிறார். சாப்பாட்டிற்கு சாதாரண ஹோட்டல்களுக்கு செல்ல கூட ரொம்பவம் கஷடமாக இருப்பதாக சொன்னார். தீடிரென்று ஒரு வதந்தி, ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் தீவரவாதிகள் புகுந்து விட்டார்கள், எல்லோரையும் தாக்குகிறார்கள் என்று, முன் திட்டத்துடன் அவர்கள் வந்து இருப்பதால் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவர்கள் நுழையக்கூடும்.

இந்த ரயில் நிலைய வதந்தியில் தான் மக்கள் ரொம்பவும் பயந்து போய் இருக்கின்றனர். மும்பை நகரை பொருத்த்வரை அதிக மக்கள் நெருக்கடி உள்ள இடங்களில் ரயில் நிலையமும் ஒன்று. ஒரு நாள் எல்லாம் இந்த வதந்தி இருந்து வந்தது. மாலை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு இந்த செய்தி ஒரு வதந்தி, உண்மையில்லை என்று தெரிந்து வீட்டில் இருப்பவர்களும் அலுவலகம் சென்றவர்களும் நிம்மதி அடைந்து உள்ளனர்.

செய்திகள் ஒரு பக்கம் இருக்கட்டும் நம் பதிவர்கள் எல்லோரும் மும்பை பற்றி எழுதும் செய்திகளையும் படித்து வருகிறேன். அவ்வபோது என்ன நடக்கிறது, சந்தேகம் வந்தால் உடனே ஃபோன் என்று நாட்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவிற்குள்ளே இப்படி என்றால்... ?? வெளிநாடுகளில் வேலை செய்யும் கணவரை (காதலரை, காதலியை) பிரிந்து இருக்கும் ஒவ்வொருவரும் என்ன டென்ஷனில் இருப்பார்கள் என்பதை இப்போது உணரமுடிகிறது.

எப்போது போனில் பேசினாலும் வந்து விடுங்கள் வேலை போனால் போகட்டும் சென்னையிலேயே இருக்கலாம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன். மும்பையில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருக்கும் அனைவருக்காகவும் கடவுளை பிராத்தனை செய்வதை தவிர வேறு எதுவும் செய்யமுடியாத நிலையில்...

அணில் குட்டி அனிதா: அம்மணி ரெம்ப டீசன்டா பதிவு போட்டுடாட்ங்க போல ஆனா வீட்டுக்குள்ள அமக்களம் தாங்கல.. "டேய் எடுறா அந்த Gun ஐ flight ஐ புடிடா... போய் அந்த தீவரவாதியில ஒருத்தனையாவது இந்திய சிட்டிசனா சுட்டுடு வரலாம்னு " இவிங்க தீவரவாதியா ஆகறதும் இல்லாம இவிங்க புள்ளையையும் ஆக்க பாக்கறாங்க..என்ன கொடுமைடா இது !!

புள்ள என்ன சொல்லிச்சி தெரியுமா? இல்லாத Gun அ எடுக்க சொல்லாத.. உன்னை மாதிரி எல்லாரும் கையில வெபன் எடுக்க முடியாது.. அதுக்கு தான் போலிஸ்ஸும், ஆர்மியும் இருக்காங்க... ரொம்ப ஓவரா சீன் போட்டு நாட்டை காப்பத்தறேன்னு கிளம்பின உன்னை முதல்ல தூக்கி உள்ள வைப்பானுங்க.. அடக்க ஒடுக்கமா அமைதியா இரு.. வூட்டுகாரு மேல அவ்லோ அக்கற இருந்தா கூட்டியாந்து இங்கேயே வச்சிக்கோ..தயவுசெய்து சவுண்டயும், பீட்டரையும் கொர, முடியல, கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு அம்மாவை கொடுத்த...??!! "..ஹா..ஹா.. கவிதாக்கு தகுந்த புள்ளைங்க. .இப்படி ஒரு புள்ள இல்லைனாலும் இவிங்கள அடக்க முடியாது.. !!

சூப்பர் ஐடியா ..பேசமா அம்மணிய மும்பை அனுப்பி பாட சொல்லலாம்.. தீவரவாதி அத்தனை பேரும் 2 பாட்டுக்கே சரண்டர் ஆயிடுவாங்க..கோவம் அந்து போட்டு தள்ளினாலும் லாபம் தான்.. ஹி ஹி..... !!


பீட்டர் தாத்ஸ் :- A terrorist is someone who has a bomb, but doesn't have an air force

எங்கள் தெருவில் படகு பயணம் - படங்கள்!!

வேளச்சேரியில் வீடுகள் அதிகமாக அதிகமாக மழைநீர் செல்ல வழியில்லாமல் போகிறது. பற்றாக்குறைக்கு ஏரியை உடைத்து விடுகிறார்கள். படங்கள் சில, பத்து வருடங்களில் முதன் முறையாக எங்கள் தெருவில் படகு வந்தது. ஒருவருவருக்கு ரூ.10/-,இன்னமும் ஆட்டோ நிறுத்தத்தில் படகுகள் நிற்கின்றன. உங்களுக்கும் படகு பயணம் போகனுமா வாங்க ஏ.ஜி.எஸ் காலணி, மேற்கு வேளச்சேரிக்கு -










கேப்பங்கஞ்சி with கவிதாவுடன் "இணையத்தின் ராசா" லக்கி லுக்

கிருஷ்ணாவை ஒரே ஒருமுறை சந்தித்து இருக்கிறேன்....அவரிடம் ஒரு வார்த்தைகூட பேச வாய்ப்பு இல்லை, ஏனோ தனியாகவே அவர் இருந்ததாக நினைவு. எப்போதோ பார்த்தது, இப்போது நடிகர் நகுல்'லை பார்க்கும் போது எல்லாம் கிருஷ்ணாவின் நினைவு வருகிறது. கிருஷ்ணா நீங்க தான் சொல்லணும் நீங்க நடிகர் நகுலை போல இருக்கீங்களா.. ?? புரிந்தாலும் புரியாவிட்டாலும் தொடர்ந்து அவருடைய பதிவுகளை படிப்பேன். இன்று ....இதோ கிருஷ்ணா நம்முடன்....

உட்காரவைத்து மரியாதையாக கேட்ட கேள்விகள்


கவிதா:- கிருஷ்ணா ... ஏன் லக்கியாக மாறினீர்கள்? ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கா நீங்க லக்கியா இருப்பதற்கு?

லக்கிலுக் எனக்கு மிகவும் பிடித்த காமிக்ஸ் கேரக்டர். இப்போதிருப்பதைப் போலவே சிறுவயதிலும் ஒல்லியாக, சுறுசுறுப்பாகவே இருந்தேன். அப்போது நண்பர்கள் கிண்டலுக்காக வைத்த பெயர் பிடித்துப்போனதால் அப்படியே தொடர்கிறேன்.

கவிதா:- பதிவர் சந்திப்பு என்றாலே கிருஷ்ணா' இல்லாமல் இல்லை.. ?? நீங்களாக கமிட் செய்துக்கறீங்களா?

அதிஷா, முரளிகண்ணன் இல்லாமலும் பதிவர் சந்திப்பு நடப்பதில்லை. பதிவர் சந்திப்பின் மொக்கைத்தன்மை பிடித்திருப்பதால் தவறவிடாமல் கலந்துகொள்கிறேன்.

கவிதா:- பதிவர்கள் பற்றிய விவரங்கள் (தனிப்பட்ட மற்றும் பொதுவான) நான் கவனித்து பார்த்தது வரை உங்களுக்கு எல்லோரை பற்றியும் தெரிகிறது. எப்படி? குறிப்பாக யாரவது வெளியிடத்திலிருந்து வந்தால், திருமணம், இறப்பு இப்படி....

பதிவர்கள் பலரோடும் இணையம் தாண்டியும் பழகி வருவதால் இருக்கலாம். ஸ்பெஷல் காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

கவிதா:- நீங்கள் ப்ளாக்'க்கு வந்த புதிதில் நிறைய அனானி பின்னூட்டகள் போடுபவராக இருந்தீர்கள். ஆனால் தீடீரென்று ஒரு மாற்றம், அவற்றை எல்லாம் விட்டுவிட்டு ரொம்ப நல்லவராக மாறிவிட்டீர்கள்? ஏன் இந்த மாற்றம்?

நான் எப்பவுமே கெட்டவன் தான். அனானி ஆட்டை அலுத்துவிட்டது என்பதைத் தவிர வேறெதுவுமில்லை. அதுவுமில்லாமல் பொட்டிக்கடை, வரவனை, செந்தழல் ரவி போன்ற செயல்வீரர்கள் பங்களிப்பின்றி அமுக வலுவிழந்துப் போனதும் இன்னொரு காரணம்.

கவிதா:- வேலை, வீடு , குடும்பம் இப்படி பலவற்றிற்கும் இடையே நீங்கள் தமிழ்மணத்தில் தினமும் குறைந்தபட்சம் ஒரு ஹிட் பதிவை எழுதிவிடுகிறீர்கள்? எப்படி சாத்தியமாகிறது.?

தினமும் இரவில் 9.30 டூ 10.30 எழுத்துப்பயிற்சி செய்வது வழக்கம். அதில் தேறும் எதையாவது மறுநாள் பதிவாக்கி விடுகிறேன். அது ஹிட் ஆவதும், ஃப்ளாப் ஆவதும்.. எல்லாம் அவன் செயல் :-)

கவிதா:- போலி விவகாரத்தில் எனக்கு அடுத்து போலியுடன் தொடர்புடைய ஒருவராக பார்க்கபட்டவர் நீங்கள். அதை பற்றிய உங்களின் கருத்து. (முடிந்துவிட்டாலுமே தெரிந்துகொள்ள ஆசை, எனக்கு தெரிந்து நீங்கள் நிதானமாக மிகவும் இருந்தாலும் மனதளவில் ரொம்பவும் வருத்தப்பட்டீர்கள் என்று அறிவேன்) உங்களின் நிலைப்பாடு எப்படி இருந்தது.

எனது நிலைப்பாடு நீங்கள் குறிப்பிட்டது போலவே வருத்தமாக இருந்தது. முகத்துக்கு நேரில் நட்பு பாராட்டி, பின்னால் போய் முதுகில் குத்தியவர்கள் சிலரை அறிந்துகொள்ள முடிந்தது. போலி பிரச்சினையின் சீரியஸ்னஸ் என்னுள் ஏதும் பெரிய இம்பேக்டை ஏற்படுத்திவிடவில்லை, நான் நேரிடையாக போலியால் பாதிக்கப்படாததால் இருக்கலாம், ஆனால் மறைமுகமாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். போலியால் பாதிக்கப்பட்டோம் என்று ஓலமிடுபவர்களில் சிலர் போலியை விட ஆபத்தானவர்கள் என்பது என்னுடைய கருத்து. போலி ஒழிந்ததில் மகிழ்ச்சியோ, வருத்தமோ எதுவுமில்லை. ஆனால் ஒழிக்கப்பட்டதால் என்னை 'நோண்டு'பவர்கள் தொல்லை குறைந்திருப்பதால் கொஞ்சம் நிம்மதி.

கவிதா:- அடுத்த போலி நீங்களாக வந்துவிடவேண்டுமேன்று சிலர் நினைக்கிறார்களா? இல்லை வரவைப்பதற்கான முயற்சி நடக்கிறதா? யாரோ ஒருவர் வந்தால் அது கிருஷ்ணா'வாக பார்க்கபடுமா? ஏன்? (யாருமே வரக்கூடிய சாத்தியகூறுகள் இல்லை காரணம் நம் சைபர் போலிஸ் என்றாலும் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்)

ஆபாசத்தை விடுங்கள். போலி எப்படி அந்த விவகாரத்துக்காக அவ்வளவு நேரம் ஒதுக்கி கடுமையாக உழைத்தார் என்பது என்னளவில் ஆச்சரியம். போலியளவுக்கு நான் உழைப்பாளியுமல்ல, இப்போது எனக்கு அவ்வளவு நேரமுமில்லை என்பதால் அடுத்த போலியாக நான் உருவாகுவதற்கான வாய்ப்பு குறைவு. அடுத்த போலியை உருவாக்கக் கூடிய வல்லமை காண்டு கஜேந்திரன் சாருக்கு மட்டுமே உண்டு. அவர் யாரை நோண்டி உருவாக்குவார் என்பதற்கு காலம் தான் விடையளிக்க வேண்டும்.

அணில்குட்டி:- அண்ணே உங்க பதிவுக்கு வந்தா ஒரு சைட்ல.. "வெட்கபடாதீங்க சார்" ன்னு போட்டு வச்சிருக்கீங்க..... எனக்கு நீங்க சொல்லிட்டாலுமே ரெம்ப வெக்க வெக்கமா இருக்கண்ணே.. அதை கண்டுக்காம படிக்கவேண்டியாத இருக்குன்னே.. தனியா வச்சி பாத்துக்க கூடாதாண்ணே..? நாங்க எல்லாம் எப்படிண்ணே உங்க பக்கம் வரது?

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மொள்ளமாறியும், முடிச்சவிக்கியும் இருப்பதால் 'வெட்கப்படாதீங்க சார்'ஐ வேலை மெனக்கெட்டு அப்டேட் செய்ய வேண்டியிருக்கிறது. சும்மா டைம்பாஸ் மச்சி வலைப்பூ ஒரு குமுதம். இங்கே இதுவும் கிடைக்கும். ரொம்ப வெட்கப்படுபவர்கள் ஃபீட் பிளிட்ஸிலோ, கூகிள் ரீடரிலோ சந்தாதாரராகி பதிவை மட்டும் படித்துக் கொள்ள வேண்டியது தான்.

கவிதா:- மத்திய அமைச்சர் ராசா / தயாநிதி மாறன் ஒப்பிடுக.

ராசாவை விட தயாநிதி சிறப்பாக செயல்பட்டார் என்று கருதுகிறேன்.

கவிதா:- சூடு சொரணை இல்லாத, வக்கில்லாத கருணாநிதி - (இன்னும் பல வசைகள்) இப்படி எல்லாம் மீடியாக்களிலும், மேடைகளிலும் கொஞ்சமும் சபை நாகரீகம் இல்லாமல் பேசும் அம்மையார் ஜெயலலிதா (இப்படித்தான் கலைஞர் இப்பவும் அவரை குறிப்பிடுகிறார்) பற்றி உங்களின் கருத்து.

நம்பியார் இல்லாமலிருந்தால் எம்.ஜி.ஆர் சினிமாவில் சாகாவரம் பெற்றிருக்க முடியாது. ஜெயலலிதா அரசியலில் இருப்பதும் கூட கலைஞருக்கு சிறப்பு தான். வரலாறு ஜெ.வை எப்படி அடையாளப்படுத்தும் என்று ஜெ.வுக்கே தெரிந்திருக்கும். நாமென்ன சொல்வது?

கவிதா:- எம்.ஜி.ஆர், வை.கோ, தயாநிதிமாறன் இவர்களை இழந்தது தி.மு.கா விற்கு நெருக்கடியை கொடுத்தது, இனிமேலும் கொடுக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. உங்களின் கருத்து?

எம்.ஜி.ஆர் தவிர்த்து மற்ற இருவரால் கட்சிக்கு அரசியல்ரீதியாக எந்த பாதிப்புமில்லை. திமுகவுக்கு எதிர்காலத்தில் பிரச்சினையாக இருக்கப்போவது கொள்கைகள் நீர்த்து வருவதே.

கவிதா:- தயாநிதிமாறனுகென்று ஒரு இடம் எதிர்காலத்தில் கண்டிப்பாக இருக்கிறது. சரியா/ தவறா?

குங்குமம் ஆபிஸில் அவருக்கு ஒரு சீட் கண்டிப்பாக இருக்கும்.

அணில்குட்டி :- டவுசரை பத்தி ரவி அண்ணனை கேட்டா நீங்கத்தான் அவருக்கு டவுசர கழட்ட சொல்லி கொடுத்தீங்கன்னு சொன்னாரு...ஏன் உங்களுக்கு இந்த வேலை??

ஸ்கூல் டைமில் கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு போகும்போது யார் டிக்கெட் எடுப்பது என்று நண்பர்களுக்குள் சண்டை போடுவோம். போனவாரம் நான் தானேடா செம்பருத்தி படத்துக்கு டவுசர் அவுத்தேன் என்று அடித்துக் கொள்வோம். அதாவது டவுசர் அவுப்பது என்பது செலவிடுதலை குறிக்கும். யதேச்சையாக ஏதோ ஒரு பதிவில் இவ்வார்த்தையை பயன்படுத்தினேன். இணையத்தில் இப்போது எது எதற்கோவெல்லாம் டவுசர் அவுக்கிறார்கள் :-(

ஓடவிட்டு அடித்து கேட்ட கேள்விகள் :-

1. நீங்கள் கட்டியிருக்கிற வீடு பற்றி

அரைகுறையாக தான் கட்டியிருக்கிறேன். இதற்கே ஈ.எம்.ஐ. கட்டி தாவூ தீருகிறது. லோன் டாப் அப் செய்து வீட்டை முழுமையாக்க வேண்டும்.

2. உங்களின் பொழுதுபோக்கு?

கண் திறந்த நொடியில் இருந்து பார்க்க இயலும், கேட்க இயலும் எல்லாமே பொழுதுபோக்கு தான்.

3. "டவுசர் கிழிய " என்ற வார்த்தை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் ?

அறவே பிடிக்காது.

4. உங்களின் பிடித்த உங்களின் பதிவுகள் சில

இன்னா
அப்பாவி அடிமைகளுக்கு

5. சாரு நிவேதிதா - விடம் பிடித்த சில குணங்கள்

ஆணவம், கர்வம், கோபம், வெள்ளந்தித் தன்மை

6. உங்களுக்கு பிடித்த பெண் பதிவர்?

பொன்ஸ்

7.நீங்கள் என்னை திட்டி ஒரு பதிவு எழுதி இருக்கிறீர்கள். அதை இப்போது ஒருமுறை படித்துவிட்டு சொல்லுங்கள் இப்போது என்ன உணர்கிறீர்கள்?

எனக்கு ஞாபகமறதி அதிகம். ஞாபகமறதி ஒரு வரம். அது இல்லாவிட்டால் பலபேர் தற்கொலை செய்துகொள்வோம்.

8. அரைகுறை ஆடையுடன் நீங்கள் இடம் படங்கள் பற்றி

நானும் ரசிக்கிறேன், நான் ரசிப்பதை மற்றவர்களும் ரசிக்கிறார்கள்.

9. பெண் எப்படி இருப்பது அவளுக்கு நல்லது?

பெண் பெண்ணாகவே இருக்கலாம்.

10. மடிப்பாக்கதில் உங்களுக்கு பிடித்த இடம். ஏன்?

ஐயப்பன் கோயில். தாவணி ஃபிகர்களை இங்கு மட்டும் தான் இப்போதும் தரிசிக்க முடிகிறது.

கிருஷ்ணா'வின் இன்றைய தத்துவம் :- அதிக பின்னூட்டம் ஆபத்துக்கு உதவாது...

உங்க காதுக்கு பிரச்சனையென்றால் நான் சத்தியமா பொறுப்பல்ல..

அணில் குட்டி அனிதா:- அம்மணி சுசிலா அம்மாவோட பாடல்களை பாடறேன்னு பாடி...என்னோட காதை அல்ரெடி டெமேஜ் செய்துட்டாங்க..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..வலி தாங்க முடியல.... நான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெறட்டும்னு ஒரு நல்ல எண்ணத்தோட.......

:)))) ஹ ஹா ஹா ஹா ஹா....... உலகத்தை நினைச்சேன்.. சிரிச்சேன்.. :))) அம்மணியோட அட்டூழியம் தாங்க முடியல....


Get this widget | Track details | eSnips Social DNA

பீட்டர் தாத்ஸ்: “Always keep a song in your heart - it's like karaoke for the voices in your head”

கவிதா: என்னுடைய எழுத்து, பாடல், கதை கவிதை எல்லாமே அப்பாவிற்காகத்தான். .அப்பாவிடமிருந்து தான் எனக்கு இவை எல்லாம் கிடைத்தன.. ஆனாலும் பாடல்கள் தனியாக அவருக்காகமட்டுமே.. :)) நான் முதன் முதலில் பள்ளியில் முதல் பரிசு பெற்ற போது பாடிய பாடல் அப்பா சொல்லிக்கொடுத்தது.. ஆசிரியர் இல்லாமலே ஏகலைவன் போல இசை, இசை கருவிகள் எல்லாவற்றையுமே பயின்றவர் அவர். அதனால் பாடும் பாடல்கள் அனைத்தும் அப்பாவிற்கே..... !!

(நல்ல வேலை அவர் உயிருடன் இல்லை இருந்தால் இப்படி பாடியதற்கு என்னை "முட்டாளு முட்டாளு இப்படியா பாடறது சுருதி சரியா இல்லையே" ஏன்னு சொல்லி சிரிச்சி சரியா பாட வைத்து இருப்பாங்க")

நிழலாக தொடரும் நிலவு - பாகம் 6

முந்தைய பாகம் - 5

அன்று ஞாயிற்றுகிழமை முகுர்த்ததினம், மீனாவின் அம்மாவும் அப்பாவும் ஒரு திருமணத்திற்காக செல்ல முன் தினமே திட்டமிட்டு இருந்தார்கள். ரமேஷ் சனிக்கிழமையே வந்து சென்றுவிட்டான். மீனா யோசித்துவைத்தபடி செயல் பட ஆரம்பித்தாள்.

அம்மாவும் அப்பாவும் கிளம்பிய அடுத்தவினாடி வேக வேகமாக இவளும் கிளம்பினாள். 7 மாதங்கள் நிறைந்துவிட்ட நிலையில், மீனாவின் மன வேகத்திற்கு உடம்பு ஒத்துழைக்கவில்லை. மூச்சு வாங்கியது.. அவளின் உடலை கஷடத்தை பொருட்படுத்தும் நிலைமையில் அவள் இல்லை.

கிளம்பிவந்தவள் ஒரு ஆட்டோவை பிடித்து நேராக அனுஷாவின் வீட்டிக்கு வந்தாள். எப்படியும் ரமேஷ் இன்று அங்கு இருப்பான் என்று நினைத்தவள், இன்று இரண்டில் ஒன்று பார்த்துவிடவேண்டும் என்று துடிப்புடன் விரைந்தாள்.

===============

அனுஷாவின் வீடு சாத்தியிருந்தது. காலிங்பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்தாள். கதவை திறந்த சந்துருவிற்கு.... ஆச்சிரியம்!!.. "வாங்க...மீனா." என்றான்.

மீனாவின் முகத்தில் கோபம் தாண்டவமாடியது......உள்ளே போகாமல் "அவர் இருக்காறா?"

சந்துரு..... "அவன் வரலையே.....உள்ள வாங்க... ஏன் வெளியில நிக்கறீங்க...?"

அதற்குள் பார்வதி அம்மாவும், அனுஷாவும் யாரென்று பார்க்க வெளியில் வந்தார்கள்.

பார்வதி அம்மா மீனாவை பார்த்ததும் புன்னகையுடன் :"வாம்மா..எப்படிம்மா இருக்க...?" என்றார்கள்

அனுஷாவும் "வாங்க மீனா" என்றாள்

இதை எதையுமே சட்டைசெய்யாத மீனா... நேராக அனுஷாவை பார்த்து.. "ஏண்டி ஒன் குடும்பத்துல யாருக்குமே வெக்கம் மானம் எதுவுமே இல்லையா? அடுத்தவ புருஷன வளச்சி போட்டு வச்சிக்கிட்டு இருக்க?.. நீ தான் அவரை வச்சிக்கிட்டு இருக்கேன்னா... அதுக்கு உங்க அண்ணன், உங்க அம்மா எல்லாரும் கூட்டா? என்ன குடும்பம்டீ உங்களது....? இப்படியெல்லாம் அடுத்தவ குடியை கெடுத்து நீங்க சந்தோஷமா வாழனுமா??"

சந்துரு, அனுஷா, பார்வதியம்மா செய்வதறியாது அதிர்ந்துபோனார்கள்..

சந்துரு அங்கு நிற்காமல் உள்ளே வந்து பின்புறம் இருந்த போர்டிக்கோவிற்கு சென்று படப்படக்கும் இதயத்தை நிதானத்துக்கு கொண்டுவர முயற்சி செய்தான்...

பார்வதியம்மா.. "மீனா... எதுவாக இருந்தாலும் உள்ள வந்து பேசுமா..,,அக்கம் பக்கம் இருக்கறவங்க தப்பா நினைப்பாங்க.."

மீனா."ஓ..உங்க பொண்ணு போடற ஆட்டம் இங்க யாருக்கும் தெரியாதா.. கேட்போமே... நாலு பேருக்கிட்ட நியாயம் கேட்போம்....வரட்டும்.." என்று சுற்றி யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டாள்.

பார்வதியம்மா., நிதானத்தை வரவைத்துக்கொண்டு.."மீனா.. இப்படி கண்டபடி பேசறது சரியில்லமா.. உனக்கு என்னவேணும்னாலும் உள்ள வந்து பேசு்மா.... நீ நினைக்கறபடி எதுவும் இல்லைம்மா....நீ தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கிற......"

மீனாவின் கோபம் தறிக்கெட்டு ஓடியது........."தப்பா புரிஞ்சிக்கிட்டேனா?.. நானா? நல்லாயிருக்கு... அம்மாக்காரியே பொண்ணை இப்படி வளர்த்து வச்சிக்கிறதை இப்பத்தான் பார்க்கிறேன். .என் புருஷன் என்னை வந்து பாக்கறதோட உங்க பொண்ணைப்பார்க்க இங்கத்தான் அடிக்கடி வராரு.....ஏன்.. ???? கட்டின பொண்டாட்டி நானு , வாயும் வயிறுமா இருக்கேன்.. ஆனா.. எந்த நேரமும் அவரு இங்கத்தானே இருக்காரு... ??? " உங்க பொண்ணு அப்படி சொக்குப்பொடி போட்டு என் புருஷனை மயக்கி வச்சிக்கிட்டு இருக்கா...."

அனுஷாவும் அதற்கு மேல் நின்று மீனாவின் பேச்சை கேட்கமுடியாமல் உள்ளே சென்று கட்டுப்படுத்தமுடியாமள் அழ ஆரம்பித்தாள்...

பார்வதியம்மாவும் நிதானம் இழக்க ஆரம்பித்தார்கள் "மீனா.. நாக்கை அடக்கி பேசும்மா... ? நீ யாருன்னு கேக்கக்கூட என் பொண்ணுக்கு எல்லா உரிமையும் இருக்கு.....நீ வாழற இந்த வாழ்க்கை அவ உனக்கு கொடுத்தது.. அவள பத்தி தப்பா பேசினா உனக்கு நல்லது இல்லைம்மா...."

"ஓ நான் யாருன்னு கேப்பாளா? எங்க கேக்க சொல்லுங்க! இன்னைக்கு ஒன்னுல இரண்டு எனக்கு தெரிஞ்சாகனும்.. அவருக்கு நான் பொண்டாட்டியா இல்ல உங்க பொண்ணு... பொண்டாட்டியான்னு ..தெரியாம இங்க இருந்து போகமாட்டேன்...."

"மீனா.... உள்ளவாம்மா .இப்படி எங்களை வெளியில இருந்து பேசி அசிங்கபடுத்தாத...." பார்வதியம்மா திரும்பவும் அவளை உள்ளே அழைத்தார்கள்.

"உங்க குடும்பத்தை பத்தி அக்கம் பக்கம் இருக்கறவங்க தெரிஞ்சிக்கட்டும்... அடுத்தவ புருஷன உங்க பொண்ணு வச்சிக்கிட்டு இருக்கான்னு எல்லாருக்கும் தெரியட்டும்.. அப்பத்தான் அந்த வீட்டு பொம்பளைங்க தன் வீட்டு ஆம்பளைய பத்திரமா வச்சிக்குவாங்க..."

பார்வதியம்மாவின் கண்கள் குளமாயின.........."என் பொண்ணு தினம் தினம் மனசால செத்துக்கிட்டு இருக்கா... அவள இப்படி பேசிறியே.. நீ வாழற வாழ்க்கை அவ கொடுத்தது............அவ இப்ப நினைச்சாக்கூட ரமேஷ்ஷை உன்கிட்ட இருந்து பிரிக்கமுடியும்.. ஆனா அவத்தான் உன்னை இன்னமும் அவனோட வாழவச்சிக்கிட்டு இருக்கா.. இதுக்கு மேல இங்க நின்னு பேசாத.... உன் புருஷனை இங்க வாராம நீ பாத்துக்கோ...என் பொண்ணு இப்படித்தான் இருப்பா என்ன செய்யனுமோ செய்துக்கோ " என்றார்கள்.

சந்துரு அம்மா தடுமாறுவதை கவனித்துவிட்டு வேகமாக வந்தான்... ..! "மீனா.. !! நீங்க உள்ள வந்து பேசினா பேசுங்க இல்லைன்னா கிளம்புங்க... இப்படி நடந்துகிறது சரியில்லைங்க..." என்று சொல்லிவிட்டு அம்மாவை பார்த்து... ."அம்மா நீங்க உள்ள வாங்க" என்றவன்.. அம்மாவை இழுத்துவந்து உள்ளே விட்டுவிட்டு... வெளியில் சென்று கதவை மூடிவிட்டு...

மீனாவிடம் கொஞ்சம் அதட்டலாக குரலை உயர்த்தி .. "வாங்க ......... நீங்க இப்படி நிதானம் இல்லாமல் பேசறது உங்க உடம்புக்கு தான் நல்லது இல்லை. ரமேஷ் இனிமே இங்க வரமாட்டான், வராம நான் பார்த்துக்கிறேன்.. முதல்ல கிளம்புங்க " என்றான்..

அவளை வெளியே வரும்படி செய்ய தானும் அங்கிருந்து வேகமாக நடந்து வெளியே வந்தான்... மீனா சந்துரு உயர்த்திய குரலுக்கு கொஞ்சம் பயந்துதான் போனாள். அவனை பின் தொடர்ந்து எதுவும் பேசாமல் அவனை தொடர்ந்து நடக்க ஆரம்பித்தாள். சந்துரு பக்கதிலிருந்த ஆட்டோ நிறுத்ததிற்கு வந்து அவளுக்கு ஒரு ஆட்டோவை பிடித்து சைகையால் ஏறசொன்னான்.

மீனா ஏறியவுடன் அவனும் ஆட்டோவில் ஏறினான். சந்துரு எதுவும் பேசாமல் பார்வதி அம்மாவை மொபைலில் அழைத்தான், "அம்மா, மீனாவை வீட்டுல விட்டுட்டு வந்துடறேன்.. "

".........................."

"சரிம்ம்மா....."


"................."

"ம்ம் சரிம்மா......"


மீனாவிற்கு அவன் எதற்கு சரியென்று சொல்லுகிறான் என்று புரியவில்லை... சத்தம் போட்டு பேசியதில் அவள் உடம்பும் மனதும் ரொம்பவும் தளர்ந்து போய் இருந்தது. ஆட்டோவில் அப்படியே சாய்ந்து உட்கார நினைத்தவள் அவளை அறியாமல் மயக்கமானாள். பக்கதிலிருந்த சந்துரு...என்ன செய்வது என்று அறியாமல் ஆட்டோக்காரரை ஏதாவது ஆஸ்பித்திரியில் நிற்க சொன்னான்.

ஞாயிற்று க்கிழமை என்பதால் பார்க்கும் ஆஸ்பித்திரிகள் எல்லாம் மூடி இருந்தன. எப்படியோ அங்கும் இங்கும் சுற்றி ஒரு 24 மணி ஆஸ்பித்திரியை அடைந்து மீனாவை நர்ஸ்'கள் உதவியுடன் உள்ளே அழைத்து சென்றான். அனுஷாவிற்கு போன் செய்து அவளை உடனே வர சொன்னான். ரமேஷ்க்கும் போன் செய்து ... எதையுமே சொல்லாமல். .அவன் மட்டும் அங்கு இருப்பது போல் சொல்லி வரவைத்தான்

அனுஷா முதலில் வந்து சேர்ந்தாள், சந்துருவும் அனுஷாவும் மீனாவின் பக்கத்திலேயே பதட்டத்துடன் நின்றிருந்தார்கள். மீனாவை பரிசோதித்த டாக்டர் "ஒன்றும் பயப்பட அவசியமில்லை. லோ பிபி, அதான் மயக்கம், தேவையான சிகச்சை கொடுத்துவிட்டோம். சரியாயிடுவாங்க கூட்டிட்டு போகலாம்" என்றார்கள்.

ரமேஷ் ஆஸ்பித்திரி வந்தவுடன், சந்துருவை போனில் அழைத்து எங்கிருக்கிறான் என்று தெரிந்துகொண்டு வந்தவனுக்கு, மீனாவை பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. மீனா எங்கிருந்து இங்கு வந்தாள்? ஒன்றும் புரியாமல் சந்துருவை பார்க்க...

."......இல்லடா.. நீ எங்க வீட்டுல இருக்கன்னு நினைச்சு வந்தாங்க... நீ இல்லைன்னு சொன்னவுடன் கிளம்பிட்டாங்க ,....ஆட்டோடல ஏத்திவிட்டேன்... நானும் தான் கூட வந்தேன்.. ஆட்டோல வந்துக்கிட்டு இருக்கும் போது மயக்கமாயிட்டாங்க. .அதான்........:

அனுஷாவை சாடையாக பார்த்துவிட்டு, மீனாவின் அருகில் சென்ற ரமேஷ்.. மெதுவாக "மீனா..........என்று அழைத்தான்....கட்டிலில் அமர்ந்து அவளின் உள்ளங்கையை தன் கையுடன் கோர்த்துக்கொண்டு.. ..திரும்பவும் "மீனா..என்று அழைத்தான்...

அதுவரை அங்கு நின்றுக்கொண்டிருந்த அனுஷா..... அதற்குமேல் அங்கு நிற்கமுடியாமல்..வெளியே வந்துவிட்டாள். அவளை தொடர்ந்து சந்துருவும் வெளியே வர...

அனுஷா சந்துருவிடம்..." சரி வீட்டூக்கு போறேன். .அதான் ரமேஷ் வந்தாச்சு இல்ல.. நீ இருந்து வீட்டுல விட்டுட்டு வா.... ரமேஷ்க்கு எதுவும் தெரியவேண்டாம்.. " என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் கிளம்பினாள்.

மீனா கண்விழித்து ரமேஷ்'ஷை பார்த்தாள், பக்கதிலிருந்த சந்துருவையும் பார்த்தாள். சந்துரு ரமேஷ்ஷின் பின்னால் இருந்து மீனாவிற்கு "எதுவும் ரமேஷ்க்கு தெரியவேண்டாம் என்று ...." கண்களால் சைகை செய்தான்... மீனாவும் புரிந்துக்கொண்டாள்..சந்துருவை நன்றியுடன் பார்த்தாள்.

ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு அங்கிருந்து மூவரும் ஒரு கால் டாக்ஸி பிடித்து மீனாவின் வீட்டிற்கு வந்தார்கள். அதுவரையில் மாமனார் மாமியார் வந்திருக்கவில்லை.

ரமேஷ்ஷை தனியே அழைத்த சந்துரு.. "மீனாவிடம் ஏன் எங்கவீட்டுக்கு வந்தான்னு கேட்டு வைக்காதே.. அப்படியே விடு.. அவங்களுக்கு உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு. .இப்ப தேவையில்லாம எதுவும் பேசி பிரச்சனை வேண்டாம்.." என்றான்..

ரமேஷ்.. அமைதியாக.. என்ன நடந்தது என்று எதையும் ஊகிக்கமுடியாமல் "ம்ம்ம்..சரி.." என்று சொல்லிவைத்தான்.

===================

மாமனார் மாமியார் வந்தவுடன், ரமேஷ்ஸும், சந்துருவும் கிளம்பினார்கள்....

ரமேஷ் ..சந்துருவின் வீட்டிற்கு இருவரும் செல்லலாம் என்று சொல்ல...... சந்துரு.. அவர்களின் இத்தனை வருட நட்பில் முதன் முறையாக...

ரமேஷ்.. "இனுமே நீ வீட்டுக்கு வரவேண்டாம்டா................."

"........................."

"வேண்டாம்டா.... எல்லாரும் சந்தோஷமா நிம்மதியா இருக்கனும்னா.. நீ வராம இருக்கறது நல்லதுடா....."

ரமேஷ், சந்துருவை ஆழமாக ஒருமுறை பார்த்துவிட்டு "சந்துரு நீ கிளம்பு நாம அப்புறம் பேசலாம்...."

இருவரும் வேறு வேறு திசையில் நடக்க ஆரம்பித்தார்கள்...............

நிழல் தொடரும்........................

மெத்தப்படித்த ஐடி மக்கள்........

பி.ஈ. சிவில், பி.ஈ.மெக்கானிகல், பி.ஈ.எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ், மற்றும் தனி பாடபிரிவுகள் வேதியியல், இயற்பியல், கணிதம் இன்னமும் சம்பந்தமே இல்லாத பிரிவுகளில் படித்துவிட்டு, இன்று ஐ.டி துறையில் வேலைப்பார்த்துவரும் மெத்த படித்த இளைஞர்கள்/இளைஞிகளுக்கு நிச்சயமாக தன் எதிர்காலத்தை பற்றியோ, நாட்டின் எதிர்காலத்தை பற்றியோ அக்கறை இருக்கிறதா என்று தெரியவில்லை.

படித்தது ஒன்று செய்வது ஒன்று, காரணம் என்னவாக இருக்குமென்று ஆராய்ந்த்து பார்த்தால் ஒன்று சம்பளம் இன்னொன்று அமெரிக்க கனவு அல்லது ஆன்சைட் என்ற பெயரில் ஏதாவது ஒரு நாடு. இதைதவிர வேறு என்ன பெரிதாக இவர்களுக்கு லட்சியங்கள் இருக்கமுடியும். வாரம் ஒருமுறை நட்சத்திர ஹோட்டலில் கூத்து, மாதம் ஒரு முறை மகாபலிபுரம், கிழக்கு கடற்கரை சாலை பீச் ரிசாட்டுகள், பாண்டிச்சேரி, பெங்களூர் (பெண்களூர்..????? )

எங்கே போய் கொண்டு இருக்கிறோம் என்றே தெரியாமல் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். சென்னையில் ஒரு ஷாப்பிங் காம்லக்ஸ், சினிமா தியேட்டர்கள் தவறாமல் பெண்களும் ஆண்களுமாக, இருவரும் சேர்ந்தும் நட்பு என்று சொல்லிக்கொண்டு போடும் ஆட்டங்கள் தாங்கமுடியவதில்லை. நட்பை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? கொச்சை படுத்தாதீர்கள் என்று அடிவயிற்றில் இருந்து சத்தம் போட்டு சொல்லுவார்கள். ஆனால் அதில் நட்பு மட்டுமே இருக்கிறதா என்று பழகும் ஆண்களை தனியே அழைத்து கேட்டுப்பார்த்தால் தெரியும் நிஜமான உண்மை. "டைம் பாஸ் மச்சி" என்று மிக எளிதாக சொல்லிவிட்டு செல்வார்கள்.

இதில் பெருமை வேறு, ஐ.டி யில் இருப்பவர்கள் ஸ்பென்ஸ்ர்ஸ், மாயாஜால், சிட்டி சென்டர், அபிராமி மெகாமால், ஈசிஆர் ரோடு, இரவு நேர நடன விடுதிகள், எல்லா 2, 3 நட்சத்திர ஹோட்டல்கள் இங்கே மட்டும் தான் நாங்கள் போவோம் சீப்பான இடத்திற்கு நாங்கள் போவதில்லை என்பார்கள். இவர்களை மற்றவர்கள் எந்த அளவு சீப்பாக பார்க்கிறார்கள் என்ற உணர்வு சிறிதும் இன்றி தன்னை மறந்த நிலையில் இருக்கிறார்கள்.

அலுவலக டிரைனிங் நிகழ்ச்சிக்காக ஒரு ஹோட்டல் ஹாலை புக் செய்ய பீச் ரிசாட் ஒன்றுக்கு சென்றிருந்தபோது, அந்த நிர்வாகி, நீங்கள் பார்க்கவந்த இடத்தில் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சி நடக்கிறது, பிரச்சனை ஒன்றும் இல்லை ஒருமுறை பார்த்துவிட்டு போய்விடுங்கள் என்றார். அவர் அழைத்து செல்ல அந்த ஹாலின் உள்ளே சென்ற எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மதியம் 2 மணி இருக்கும் வெளியே நல்ல வெயில் ஆனால் உள்ளே கும்மிருட்டு எல்லா கதவுகளும் மூடியிருந்தன, விளக்குகள் எல்லாவற்றையும் அனைத்துவிட்டு சின்ன மெழுகு வர்த்தி ஒளியில் நான்கு ஆண்கள் கோப்பையும், சிகிரெட்டுமாக எங்களை வரவேற்றார்கள். காதை கிழிக்கும் மியூஸிக்.உள்ளே சென்று அந்த இருட்டிற்கு கண் பழக இரண்டு மூன்று நிமிடங்கள் ஆயின, ரொம்பவும் சிரமப்பட்டு இருட்டிற்கு கண்களை பழக்கி பார்த்தால் இன்னும் இரண்டு ஆண்களுடன் 3 பெண்களும் அரைகுறை ஆடையில் இதே நிலையில் இருந்தார்கள்.

அடகடவுளே..... எல்லோரும் 22 - 30 வயதுக்குள் இருப்பவர்களே. மாதத்திற்கு 20 - 1 லட்சம் வரை சம்பாதிக்கும் இவர்களுக்கு அந்த பணத்தை எப்படி செலவழிப்பது என்பது தெரியாமல் இப்படியா? நிர்வாகியிடம் பேசிவிட்டு கிளம்பும் முன், அவர்கள் யார் என்ன என்பதை விசாரித்தபோது ஐடி கம்பெனியில் வேலை செய்பவர்கள், பிறந்தநாள் கொண்டாட வந்து இருக்கிறார்கள். இன்று பகல் முழுதும், இரவும் அந்த ஹாலையும் அடுத்து இருக்கும் 2 அறைகளையும் புக் செய்து உள்ளார்கள் என்றார்கள்.

எனக்கு இப்படி எல்லாம் நடக்கிறது என்பதையும் இப்படி அந்த பீச் ரிசார்ட்டுகளும் இதற்கெல்லாம் அனுமதி அளிக்கிறது என்பதையும் முதன் முறையாக புரிந்துகொண்டேன்.

எதற்காக படித்தோம், எதற்காக சம்பாதிக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் 20 வயதிலேயே குடிப்பழக்கம், புகைப்பழக்கம் ஏன் பெண்கள் பழக்கம் என்று இந்த பணம் அவர்களை சீரழக்கிறது. மட்டுமல்லாது இந்த தொடர் குடிப்பழக்கத்தால் உடம்பு பெருத்து, கண்களுக்கு அடியில் சதை, தொப்பை தொங்குகிறது. மட்டுமல்லாது சிகிரேட் பழக்கத்தால் என்ன என்ன விளைவுகள் முன்பே பதிவெழுதிவிட்டேன். இதையும் விட கட்டுபாடு இல்லாத உணவு பழக்கம். நேரம் கெட்ட வேளையில் உணவு உண்ணும் பழக்கம். இப்படி தன் வாழ்க்கையை தானே மண்ணை தோண்டி புதைத்துக்கொள்கிறார்கள்.

1995 ஆம் ஆண்டில் குறைந்தபட்ச சம்பளம் 2000 ரூபாய் அதிகபட்ச சம்பளம் 15-35 ஆயிரம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். இன்று????? இப்பவும் குறைந்த பட்ச சம்பளம் அதே 2000 ரூபாய் ஆனால் அதிக பட்ச சம்பளம்????? 1 லட்சம் அல்ல அதற்கு மேலும் மிக சர்வ சாதாரணமாக வாங்குகிறார்கள் நம் மெத்த படித்த ஐ.டி'யில் பணிபுரியும் நம்மவர்கள். இதனால் யாருக்கு லாபம் அவர்களுக்கு மட்டுமே... உடம்பில் நோய், தொடர் கெட்ட பழக்கங்களால் குழந்தையின்மை, ஆண்மை குறைவு, சின்ன வயதிலேயே சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், கொழுப்பு என்று சகல லாபத்தையும் சம்பாதித்து வைத்து இருக்கிறார்கள்.

15 வருடம் சேல்ஸ்' இல் இருந்த ஒருவர் இந்த சம்பள மோகத்தில் சாஃட்வேர் டெஸ்டிங்' க்கு 2 மாதங்கள் பல ஆயிரம் பணத்தை செலவழித்து படித்து இப்போது டெஸ்ட் என்ஜியராக இருக்கிறார். ஆனால் எத்தனை வருடம் இருக்க முடியும். கம்பெனிகள் எல்லாம் பின்க் ஸ்லிப் கொடுத்து வருகின்றன. சமீபத்தில் சென்னையில் மீடியம் லெவல் கம்பெனிகளில் மிக பிரபலமாக இருந்த ஒரு சாஃப்வேர் நிறுவனம் தன்னிடம் வேலை செய்த 350 ஆட்களை சென்னையில் மட்டுமே பின்க் சிலிப் கொடுத்தது. அந்த கம்பெனியில் முன்னர் நானும் வேலை செய்ததால் அதில் வேலை பார்த்துவந்த பலரை எனக்கு நேரடியாக தெரியும். நல்ல பொறுப்பான பதவிகளில் இருந்த அத்தனை பேரும் 15 நாள் கெடு கொடுத்து தூக்கப்பட்டனர். அதில் திருமணம் ஆகி குழந்தைகளுடன் இருப்பவர்கள் அதிகம். அங்கு வேலை இழந்த இருவருக்கு மட்டும் வேலை வாங்கி கொடுத்தது மிகுந்த மனநிறைவை கொடுத்தது. ஆனால் என்னால் முடிந்ததது இருவருக்கு மட்டுமே, மற்றவர்கள்???? அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் நினைத்து பார்த்தாலே மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

மேலே சொன்ன பிறந்த நாள் விழாவிற்கு வருவோம், நாளை கிடைக்கபோகும் பின்க் சில்ப் பற்றி இன்றே இவர்கள் யோசித்து பார்த்து கொஞ்சமாவது பொறுப்பாக நடந்துக்கொள்வார்களா?. தன் படிப்புக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் தன்னை பிரகாசமாக்கிக்கொள்ள வழியை தேடுவார்களா? ஐடி தவிர இந்தியாவில் பிரகாசிக்க வேறு துறைகளே இல்லையா?

அணில் குட்டி அனிதா:- நான் இதுல சொல்ல ஒன்னியும் இல்ல... எல்லாம் பொறாமையல வர பொக.. எப்ப பாத்தாலும் கவிதா இரண்டு காதுலையும் ஊது வத்தி ஏத்திவச்ச மாதிரி பொக வந்துக்கிட்டே இருக்குங்க.. மக்கா... நீங்க.. என் ஜாய் பண்ணுங்க.. இவிங்க கிடக்கிறாங்க.. .நானும் வரேன்.. ஒன்னு பத்தாது ஒரு 4, 5 பெக் குடுங்கப்பா.... அப்படியே ஒரே ஒரு தம்மூஊஊஊஊஊ...........ஓகேயா..?

பீட்டர் தாத்ஸ் :- Living in the lap of luxury isn't bad, except that you never know when luxury is going to stand up

நிழலாக தொடரும் நிலவு – பாகம் 5

முந்தைய பாகம்…4.

அனுஷா வெளியில் வருவதை பார்த்ததும் ரமேஷ்ஷிற்கு நெஞ்சு படப் படவென அடிக்க ஆரம்பித்தது……என்ன சொல்ல போறாளோ… பதட்டத்தை வெளியில் காட்டாமல் நின்று அவளையே பார்த்துக்கொண்டு நின்றான்….

தொலைவில் இருந்தே ரமேஷ்’ஷை பார்த்துவிட்ட அனுஷா…. சடன் பிரேக் போட்டது போன்று நின்றாள்.. முகம் இறுகியது… வேகமாய் மொபைலை எடுத்து சந்துருவை அழைக்க எண்களை அழுத்தினாள்….

================
சந்துரு அலுவலகத்தில்… ஸ்விட்ச் ஆப்ஃ செய்து வைத்து இருந்த மொபைலை பார்த்து அதையே அனுஷாவாக நினைத்து பேசிக்கொண்டு இருந்தான்…..……. “ம்ம்.. ட்ரை பண்ணு! ட்ரை பண்ணு….! எவ்வளவு பண்ணாலும் நான் லைன்ல வரமாட்டேனே….!!! ஆனா நீயும் விடமாட்டியே……. லேண்ட் லைன் வருவ………. அங்கேயும் சொல்ல்ல்லி வச்சிட்டோமில்ல……”

“சந்துரு….. “ ரிசப்ஷனிஸ்ட் இவன் கேபினை நோக்கி வந்துக்கொண்டு இருந்தாள். என்ன சந்துரு…நீ சொன்னமாதிரியே கரெக்ட்டா அக்கா ஃபோன் பன்றாங்க? “

“நான் சொன்ன மாதிரி ரிப்லை பண்ணியா? “ ….

“ம்ம்..பண்ணேன்.. ஆனா எப்ப மீட்டிங் விட்டு வருவான்? எவ்வளவு நேரம் ஆகும்…. நீங்க கூட பேசமுடியாதான்னு கேட்டாங்க?........”

“அவ கிடக்கிறா விடு…” என்று சிரித்தான்….

இங்கே அனுஷா, சந்துரு லைனில் கிடைக்காத எரிச்சல், ரமேஷ்ஷின் வரவு எல்லாம் சேர்த்து கோபத்தின் உச்சியில் இருந்தாள். ரமேஷ் சற்றும் எதிர்பார்க்காதவாறு விடுவிடுவென்று அவனை தாண்டி சென்று ஆட்டோவை கைக்காட்டி நிறுத்தி ஏறிவிட்டாள்.

ரமேஷ் உடனே சந்துருவிருக்கு ஃபோன் செய்தான்…..

“நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் எண் இப்போது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது….”

அடச்சே!!... சந்துரூஊஊ ஏன்டா இப்படி பண்ற….????…..வேகமாக லேண்ட் லைன் ட்ரை செய்தான்….……
===================

“டேய் வெண்ண… ஏண்டா மொபைல ஆஃப் பண்ணி வச்சி இருக்க….??

“அட இங்கபாருடா….! டேய் நீதானடா… அனு என்னை கூப்பிடக் கூடாதுன்னு ஆஃப் பண்ணி வைக்க சொன்ன…..??? இப்ப ஏண்டா வில்லன் மாதிரி கேள்வி கேக்கற? சரி மேட்டர சொல்லு ஏன் இவ்வளவு டென்ஷன் ?… திட்டினாளா?

“திட்டி இருந்தா பரவாயில்லையேடா….. கண்டுக்காம ஆட்டோல போய்ட்டாடா…??? “

“ஓஒ…… கண்டுக்களையா…? ஹா…ஹா…ஹா….இப்பத்தான் சந்தோஷமா இருக்கு…சரி அப்படியே திரும்பி உன் வீட்டுக்கு போய் வேலைய பாரு .!! போனை வச்சிடு ராசா…!!

“இல்ல இப்ப உன் வீட்டுக்கு போய் இரண்டுல ஒன்னு கேட்டுட்டு தான் இன்னைக்கு மறுவேலை…. ..!! “

“தெரியுமே...... நீ மட்டும் திருந்திட்டன்னு வையேன்….. எனக்கு எப்பவோ கல்யாணம் ஆகியிருக்கும் நீயும் திருந்தாம… அவளையும் திருந்த விடாம உங்க இரண்டு பேரால எனக்கு இந்த ஜென்மத்துல கொழந்த இல்ல…இல்ல இல்ல…இல்லவே இல்ல..…. !! ம்ஹிம்… நல்லாயிருடா.. நல்லாயிரு…..”

“ம்ம்…உனக்கு கல்யாணம் ஒரு கேடு…!! தங்கச்சிக்கு கல்யாணம் பண்ண வழியில்ல…..உன் கல்யாணத்த பத்தி பேச வெக்காம இல்ல உனக்கு !! இதுல கொழந்த வேற….இடியட்….வைடா ஃபோனை..!! “

லைனை துண்டித்துவிட்டு கடுப்பாக வண்டியை உதைத்து கிளப்பினான்…. அனுஷாவின் வீட்டை நோக்கி வண்டி பறந்தது.
==================

உள்ளே வேகவேகமாக நுழைந்த ரமேஷ்…..”ஆண்ட்டி எங்க அவ…??

“இன்னும் வரலையே…….. வாங்க எப்படி இருக்கீங்க… மீனா எப்படி இருக்காங்க? “

“இன்னும் வரலையா…எனக்கு முன்னே கிளம்பினாளே? …….”

“உங்களுக்கு முன்னையா? ….” எப்படி எங்கே என்று தெரியாமல் விழித்தார்கள் பார்வதியம்மா…

பெருமூச்சி விட்டவாறு சோபாவில் தொம் என்று உட்கார்ந்தான் ரமேஷ்..

பார்வதியம்மா அவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்கள். “என்னப்பா ஆச்சு… அவ ஆபிஸ்’க்கு போனீங்களா? “

“ம்ம்….போனேன்.. என்கூட வராம.. ஆட்டோல ஏறிட்டா….ஆன்ட்டி….”

“ஓ….வந்துடுவா.. டிராஃபிக் அதிகமா இருக்கு இல்ல……… “சொல்லிவிட்டு சமையல் அறையுள் சென்றுவிட்டார்கள்.

ரமேஷ்’ஷின் கண்கள் .டிவி’யை பார்த்தனவே தவிர.. மனசு அனுஷாவையே சுற்றி சுற்றி வந்தது……..

15 நிமிடங்கள் சென்றிருக்கும் அனுஷா வந்தாள்…. இவனை கண்டும் காணாமல் ரூமிற்குள் சென்றாள்.

ரமேஷ் வேகமாக எழுந்து “நில்லு அனுஷா… நான் ஒருத்தன் இருக்கறது உனக்கு கண்ணு தெரியல.. ஆபிஸ்’ ல நான் உனக்காத்தான் நிக்கிறேனு தெரிஞ்சும் ஆட்டோல வர.. ..என்னை பாத்தா கேனயன் மாதிரி தெரியுதா உனக்கு……….?.”

அனுஷா நிற்காமல் ரூமிற்குள் சென்றுகொண்டு இருந்தாள். இவனும் கத்தியவாறே பின்னால் சென்றான்.

“நில்லுடி….!! “

நின்று நிதானமாக திரும்பி, “எதுக்கு வந்தீங்க நீங்க? உங்களை வரக்கூடாதுன்னு சொன்னேன் இல்ல? “ உங்களுக்குன்னு ஒரு குடும்பம் வந்தாச்சு இல்ல ..இங்க என்ன வேலை உங்களுக்கு… கிளம்புங்க..” என்றாள்.

..............

இருந்த கோபம் இன்னும் தலைக்கு ஏறியது……..அவளை நேருக்கு நேர் பார்த்தவனாக மூச்சை நன்கு இழுத்துவிட்டு கோபத்தை அடக்க முயற்சி செய்தான்…..

“….அப்ப நான் இங்க வரக்கூடாது இல்ல?

“ஆமா வரக்கூடாது……”

“வருவேன்னு உனக்கு அன்னைக்கே சொல்லிட்டேனே….”

“நானும் வரவேண்டாம்னு அன்னைக்கே சொல்லிட்டேனே…….”

“அனு……. கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்லு….. நான் வரத நிறுத்திக்கிறேன்……

“கல்யாணம் ஒன்னுத்தான் முடிவுன்னு நீங்க நினைக்கறீங்க….அது தான் உங்களுக்கு சந்தோஷம்.. ..என்னால வேற ஒரு ஆளை கல்யாணம் செய்துக்க முடியாது…. ……கல்யாணம்னு பேசறதா இருந்தா இங்க வராதீங்க… என்னை பார்க்காதீங்க.. ……..

‘புரியமா பேசாத.. .கனவுலையும் கற்பனையிலும் காதல் வேணும்னா சுகமா இருக்கும்.. ஆனா வாழ்க்கை முழுசும் சுகமா இருக்காது.. .நரகமா ஆயிடும்…. எனக்கு தான் கல்யாணம் ஆயிடிச்சின்னு வராதன்னு சொல்ற இல்ல, கல்யாணம் ஆனா என்னை ஏன் இன்னும் நினைச்சிட்டு இருக்க ? ....அது உனக்கு தப்பா தெரியலையா?

ரமேஷ்’ஷின் இந்த எதிர்பாராத கேள்வி அனுஷாவை தட்டு தடுமாற வைத்தது…….. மனசு உடைய தொடங்கியது.............“உங்க கூட என்னோட வாழ்க்கைதான் இல்லைன்னு ஆயிடுத்து……உங்களை நினைக்கக்கூட எனக்கு உரிமை இல்லையா….” பரிதாப குரலில் அவனை நேராக பார்த்து கேட்டாள்…..

அவளின் பார்வையை சந்திக்க இயலாதவனாய்.. பேச்சற்று சோர்ந்து வெளியில் வந்தான்…..

பார்வதியம்மாவிற்கு கடந்த பல மாதங்களாய் இவர்களின் இந்த பேச்சும் சண்டையும் பழகிபோயிருந்தது. அவர்கள் சமையல் அறையை விட்டு வெளியே வரவேவில்லை.

ரமேஷ் சோபாவில் சோர்வாக செய்வது அறியாது உட்கார்ந்து இருந்தான். சற்று நேரத்தில் சந்துரு வந்து சேர்ந்தான். இவன் முகத்தை பார்த்தே ஏதோ நடந்திருக்கிறது என்று ஊகித்தவன் சத்தமில்லாமல் ரமேஷ்ஷை அழைத்துக்கொண்டு அவன் ரூமிற்குள் சென்றான்.

“நான் தான் உன்னை வீட்டுக்கு போன்னு சொன்னேன் இல்ல ஏண்ட கேக்க மாட்ற? .. அவளோட பிடிவாதத்தை பத்தி உனக்கு நல்லா தெரியும் இல்ல.. “

“சந்ரூ.. அதுக்காக என்னை மட்டும் பாத்துக்கிட்டு அவள அப்படியே விட்டுவிட முடியுமா?”

“நான் அவளோட அண்ணன்டா நானே சொல்றேன் இல்ல…. உனக்கு கல்யாணம் ஆயிடுத்து, உன்னோட லைஃபை பாரு… மீனாவை நல்லா பாத்துக்கோ……… நாம நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு… ஆனா அதுக்காக அதையே பேசிக்கிட்டு இருந்தா மேல ஒன்னுமே நம்மளால செய்ய முடியாதுடா.. .அனுவை விடு நான் பாத்துக்குறேன். . அவளுக்கு வாழ்க்கைய பத்தி தெரியல…புரியல. தனியா இருக்க முடியும்னு நம்பறா… கொஞ்சம் கொஞ்சமா நானும் அம்மாவும் மாத்தறோம். நீ இப்படி அவளுக்காக இன்னமும் உன்னை ஏண்டா கஷ்டபடுத்திகற…..? “

அவளோட வாழப்போறேன்னு சொல்லி அவளை நான் ஏமாத்திட்டேன்டா. ராத்திரி படுத்தா நிம்மதியா தூக்கம் வரல.. இந்த பொண்ணோட நினைப்புத்தான். எப்படிடா நிம்மதியா இருக்க முடியும்..?

ரமேஷ்..கூல்.. எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்… சரியாயிடும்.. அவள மாத்திடலாம்… நீ அவக்கிட்ட இனிமே கல்யாணத்தை பத்தி பேசாதே… விட்டுடு. .அவளுக்கு கொஞ்சம் டைம் கொடு… பாக்கலாம்….

=======================

நாட்கள் ஓடின …………மாதங்களாக மாறின….அனுஷாவின் பிடிவாதம் மாறவில்லை… ரமேஷ்’ அவர்கள் வீட்டுக்கு சென்று வருவதையும் நிறுத்தவில்லை. எப்படியாவது அவளை மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் தினம் தினம் அவளுடன் இதைப்பற்றி பேசி பேசி தோற்றுபோனான். நடுவே வாரம் ஒருமுறை மீனாவையும் சென்று பார்த்துவந்தான். இல்லையென்றால் மாமனார் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவாரே.

ஆனால் அங்கே மீனாவுக்கு, ரமேஷ் மீதிருந்த சந்தேகம் தீராமல் நாளுக்கு நாள் அதிகமானது……. தன்னை வந்து பார்ப்பதைவிட அனுஷாவை அவன் தினமும் அவன் சென்று பார்ப்பது அவளை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது. எல்லையற்ற கோபத்திற்கும் எடுத்து சென்றது. தன் கணவனை தனக்கு மட்டுமே சொந்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமானது. அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த மீனா யாருமே எதிர்பார்க்காமல் அத்தனை பேரும் அதிர்ச்சியாகும்படி ஒரு வேலையை செய்தாள்………..

நிழல் தொடரும்……..

நீ எதிர்பார்ப்பது மிருகங்களிடம் மட்டுமே கிடைக்கும்......

அப்படி என்ன நான் எதிர்ப்பார்க்கிறேன்? அதுவும் மிருகங்களிடம் மட்டும் கிடைக்க.. ? மனித குணத்திலிருந்து சற்றே மாறுபட்டாலும் நாம் அவர்களை மிருகம் என்கிறோம். அப்படி இருக்க..மனிதனிடம் இல்லாத ஒன்று அப்படி என்ன மிருகங்களிடம் இருக்கிறது? .

சரி விஷயத்திற்கு வருவோம்.. . ஏதோ ஒரு நிறைவற்ற தன்மை, எப்போது பார்த்தாலும் யாரை பார்த்தாலும் ஒரே புலம்பல். மனிதர்களிடம் உள்ள நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக்கொண்டே வருகிறது. யாரை பார்த்தாலும் பிடிப்பதில்லை. இவர் எப்போது நம்மை ஏமாற்றுவார் என்று தோன்றும். தனிமை மட்டுமே மிகவும் பிடித்திருக்கிறது. ஏன் இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள். சொந்தங்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? நண்பர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?. சுயநலவாதிகளாக, சந்தர்ப்பவாதிகளாக, பச்சோந்திகளாக நிறம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்?

என்னுடைய நண்பர் என் புலம்பல்களை கேட்டுவிட்டு, சொன்னார் "நீ நல்ல டாக்டராக சென்று பார்".

நான் சொன்னேன். "நான் இன்னும் பைத்தியம் ஆகவில்லை, அப்படி நான் பைத்தியம் என்று தெரிந்தால் நானே டாக்டரிடம் சென்று விடுவேன் நீ அதைப்பற்றி கவலை படாதே". நான் யாருக்கும் தொநதரவாக இருக்கமாட்டேன் "என்றேன்.

என்னை டாக்டரிடம் செல்ல சொன்ன அந்த நண்பரிடம் மேற்கொண்டு நான் பேச பேச என்னுடைய பேச்சில் இருந்து நீ எதிர்பார்ப்பது மிக மிக அதிகமானது. அது மனிதர்களிடம் கண்டிப்பாக கிடைக்காது. "நீ எதிர்ப்பார்ப்பது மிருகங்களிடம் மட்டுமே கிடைக்கும்....." என்றார். என்னிடம் கூட அதை எதிர்ப்பார்க்காதே... நானும் ஒரு மனிதன் தான் என்றார்....:)))

மனிதர்களிடம் கிடைக்காத ஒன்று அது என்ன மிருகங்களிடம் மட்டும் கிடைக்கிறது. உங்களுக்கு அது என்ன தெரிந்தால் பின்னூட்டத்தில் இடுங்கள். உங்களில் எத்தனை பேர் இதை உணர்ந்திருக்கிறீர்கள் என்று பார்க்கலாம்..... .

அணில்குட்டி அனிதா:- எந்த பைத்தியம் இதுவரைக்கும் நான் பைத்தியம் ன்னு சொல்லி இருக்கு.........?? அய்யய்யோ.. கவி முட்டைகண்ணால முறைக்காதீங்க....பயம்மா இருக்கு......நான் உங்களை சொல்லுவேனா.. சொல்லுங்க......ஹி..ஹி..ஹி...ஆனா கவி நான் இருக்கும் போது உங்களுக்கு என்னாத்துக்கு இன்னொரு மிருகம் ? உங்களையும் என்னையும் பிரிக்க யாரோ சதி செய்யறாங்க உஷாரா இருங்க.. இல்லன்ன என்கிட்ட சொல்லுங்க..அவங்களை நான் பாத்துக்குறேன்....!!

பீட்டர் தாத்ஸ் :- It's difficult to understand why people don't realize that pets are gifts to mankind

கார்த்தியின் அலுவலக குறிப்புகள்-2

அலுவலக குறிப்பு 2

பிரிண்ட் எடுத்தே பேப்பர்களும், பிரிண்டர் காட்ரிஜின் செலவும் எங்கேயோ சென்றுவிடும். இதை கொஞ்சம் சிக்கனம் செய்யலாமே... Fine Print மூலம்.

இந்த http://www.fineprint.com/ அட்ரஸ் க்கு சென்று, டவுன்லோடு செய்து, நூற்றுக்கணக்கில் verification purpose, Filing Purpose க்காக எடுக்கப்படும் document களை 'Default Printer' க்கு பதிலாக இந்த பிரண்டரை ஸ்லெக்ட் செய்து எடுக்கலாம்.

இதனால் 2 அல்லது 4 பக்கங்களில் நாம் எடுக்கும் பிரிண்ட்டை ஒரெ பக்கத்தில் சுருக்கி எடுக்கலாம். அதனால் பேப்பரின் அளவு குறையும். நேரம் குறையும். பேப்பர்களின் செலவு, பிரிண்டர் காட்ரிஜின் செலவு எதிர்பார்க்கும் அளவு குறையும்.

முயற்சி செய்யுங்களேன்....


அணில் குட்டி அனிதா:- ஏன் ஏன் ஏன்.... எழுத ஒன்னும் இல்லன்னு இப்படியா??????


பீட்டர் தாத்ஸ் :- “The brain is a wonderful organ. It starts working the moment you get up in the morning and does not stop until you get into the office

எங்க வீட்டு சமையல் : சேமியா புட்டு

சேமியா புட்டு மிக எளிதாக, மிகவும் வேகமாகவும் செய்து விடலாம். விருந்தினர் வரும்போது செய்து வைக்கலாம். ஆவியில் வைத்து எடுப்பதால் உடலுக்கும் நல்லது.

தேவையான பொருட்கள் :-

வறுத்த சேமியா - ஒரு பாக்கெட்
தேங்காய் துருவல் - ஒரு சின்ன கப்
சர்க்கரை - தேவைக்கேற்ப
ஒரு ஏலக்காய் இடித்த பொடி (பிடித்தவர்கள் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்)
நெய்- இதுவும் தேவை என்பவர்கள் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்)
உப்பு :- 1 டீஸ்பூன்

செய்முறை:-

இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துவிட்டு, ஒரு பேசினில் தண்ணீர் எடுத்து (சேமியா மூழ்கும் அளவு) அதில் உப்பு சேர்த்து கலக்கி ஓரளவு சின்ன சின்னதாக நொறுக்கிய வறுத்த சேமியாவை கொட்டி 1 நிமிடத்திற்கும் குறைவாக நனைத்து, தண்ணீரை வடித்து, இட்லி தட்டில் வைத்து மூடிவிடுங்கள். சேமியா நிறைய நேரம் தண்ணீரில் ஊறக்கூடாது. சேமியா முழுவதும் ஒரு முறை நன்றாக நனைந்தால் போதுமானது.

4-6 நிமிடத்திற்குள் வெந்துவிடும். எடுத்து பேசினில் கொட்டி, சூடு குறைந்தவுடன் உதிர்த்து, தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து கலக்கி பரிமாறவும். தேவையானவர்கள் மட்டும் ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து கலக்கிக்கொள்ளலாம்.

அணில்குட்டி அனிதா:- இன்னும் கிட்சன்ன விட்டு வெளியில வரைலியா நீங்க...??? இந்த கொடுமைய எப்ப நிறுத்துவீங்கன்னு என்னோட சேர்த்து நிறைய பேரு வெயிட்டிங்கு அம்மணி.. கொஞ்சம் அடுத்தவங்கள பத்தியும் யோசிங்கம்மா... ம்ம்.....எங்க....???????

பீட்டர் தாத்ஸ் :- “Good painting is like good cooking: it can be tasted, but not explained”

கார்த்தியின் அலுவலக குறிப்புகள்

கார்த்தி என்னுடைய சின்ன அண்ணன், நான் வேலைக்கு போகவேண்டும், நிறைய படிக்கவேண்டும், பெண் என்பவள் ஒரு வட்டத்திற்குள் இருக்கக்கூடாது என்று என்னை வெளியில் வரவைத்தது என் அண்ணன் தான். அண்ணனுடன் சேர்ந்து அவரின் நண்பர்களுடன் நான் கபடி விளையாட ஆரம்பித்தபோதிலிருந்தே இது தொடங்கிவிட்டது. என்னை என் தோழிகளுடன் என் அண்ணன் விளையாட அனுமதித்ததில்லை. எப்போதும் எங்கு சென்றாலும் என்னையும் கையை பிடித்து அழைத்து சென்றுவிடும். நானும் அண்ணனுடன் சேர்ந்து சரிக்கு சமமாக விளையாடுவேன்.

குறிப்பாக பெண் குழந்தையால் செய்யமுடியாத சில விஷயங்களும் அண்ணனின் உதவியால் அவரை போலவே செய்திருக்கிறேன். அதில் இன்னமும் நினைவில் மட்டும் அல்ல எப்படி செய்துஇருப்பேன் என்று நினைப்பவை .........

படி இல்லாத மாடிக்கு கொய்யாமரத்தில் (ரொம்ப வழுக்கும்) மீது ஏறி செல்வோம். அடிக்கடி இப்படி செல்லுவோம். முதலில் சிரமப்பட்டாலும் பிறகு அண்ணனை போலவே நானும் வேகமாக ஏறக்கற்றுக்கொண்டேன்.

இரண்டு டீம் கபடி ஆட்டத்தில் அண்ணனின் டீம் மெம்பரில் நான் ஒரே ஒரு பெண் மெம்பர். :). அவர்களுக்கு சமமாக என்னையும் ஆட்டத்தில் பழக்கிவிட்டார். அப்போது நான் 4ஆம் வகுப்பு, அண்ணன் 5ஆம் வகுப்பு.

இதே போன்று அண்ணன் ஏதோ ஒரு மரத்தில் உச்சிக்கு ஏறிவிட, அவரை போலவே நானும் ஏறி செல்லும் போது..பாதி மரத்தில் இருந்து (12 அடிக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்) தவறி அப்படியே விழுந்தேன். என் முதுகு மண்ணில் நேராக அடிக்கும் படிவிழுந்தேன். தலையை தூக்கிவிட்டதாக நினைவு. அழுதுக்கொண்டே எழுந்தேன்… எழுந்தால் முதுகை நிமிர்த்தமுடியவில்லை. மேலே இருந்து பார்த்த அண்ணனுக்கு சிரிப்பு தாங்கவில்லை. என்னால் அண்ணனை பார்க்கவும் முடியவில்லை. கூனியாகவே வேக வேகமாக நடந்து படுக்கை அறைக்கு சென்றேன். பெட்டில் மல்லாக்கபடுத்தேன்.. நன்றாக 10-15 முறை பிரண்டேன். சரியாகவிட்டது. இவ்வளவும் வலியால் துடித்துக்கொண்டே, அழுதுக்கொண்டே செய்துவிட்டு திரும்பவும் அதே மரத்திற்கு சென்று அண்ணனை போலவே உச்சிக்கு ஏறிவிட்டுத்தான் அழுகையை நிறுத்தினேன்.

8 அடி சுவரில் குரங்கைபோன்று எப்படியோ தாவி ஏறி (கால் வைக்க மிக துள்ளியமான பிடிப்புகளே இருக்கும்) அமர்ந்து, பட்டாம்பூச்சியை நீளமான நூலில் கட்டி பறக்கவிட்டது. :(

நாங்கள் திருச்சியில் இருந்தபோது, பொன்மலையில் உள்ள பள்ளிக்கு செல்ல பஸ்’க்கு கொடுக்கும் காசை சேர்த்து வைத்துக்கொள்வோம். Shunting ரயில்கள், (இந்த வார்த்தையைத்தான் அந்த ரயில்களுக்கு பயன்படுத்துவார்கள்) கூட்ஸ்வண்டிகள் வரும், அவற்றின் பின்னால் ஓடி, அது ஓடும் போதே ஏறி நின்றுக்கொண்டு (பொன்மலைவரை) செல்லுவோம். இப்போதும் இது மிகவும் சிரமமான, ரிஸ்க்கான விஷயமாகத்தான் தெரிகிறது. ரயில்வே ஆட்கள் யாராவது பார்த்தால் அவ்வளவுத்தான், திட்டி அனுப்புவார்கள், ஆனால் அவர்கள் கண்ணில் மண்ணை தூவ எங்களுக்கும் தெரிந்திருந்தது.

இப்படி எந்த ரிஸ்க்கான விஷயம் செய்யும் போதும் அண்ணன் முதலில் எனக்கு எப்படி செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுப்பார்கள் அதை அப்படியே பார்த்து செய்வேன். எனக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்பதில் அவரின் கவனம் அதிகமாக இருக்கும். அதனால், மிகவும் பொறுமையாக சொல்லிக்கொடுப்பார்கள். நானும் ஈ அடிச்சான் காப்பித்தான். பிளைண்டாக அண்ணன் சொல்லுவதை அப்படியே செய்வேன்.

அண்ணனை போலவே அவருடன் சேர்ந்து சாய்காலம் அந்த பெரிய்யயயய கிரவுண்டில் 3-4 ஓட்டங்கள் ஓடுவேன். சேகர் என்ற இன்ஸ்பெக்டர் அங்க்கிள் இருவருக்கும் வெகு தொலைவில் இருந்து மூங்கில் கழியுடன் ஓடிவந்து எப்படி தாவுவது என்று கற்றுக்கொடுத்தார்.. “L” போன்ற அமைப்புடைய மரத்தால் செய்யப்பட்ட தடுப்பான் மண்ணில் சொறுகி வைத்திருப்பார்கள். ஓடிவந்து அந்த தடுப்பானில் கழியை ஊன்றி எகுற வேண்டும். அண்ணனை பார்த்து நானும் தாவுவேன். சேகர் அங்க்கிள் திருடர்களை பிடிக்க அவர்கள் இதை பழக வேண்டும் என்று சொன்னார். நாங்களும் பழகிவிட்டோம்

அண்ணன் என் திருமணத்திற்கு பின்னும், என்னுடைய கணவரிடம் அனுமதி பெற்று நான் படிக்க பண உதவி செய்து என்னை படிக்க அனுப்பினார். ஒரு வருடம் கம்பியூட்டர் கோர்ஸ் போனேன். 4 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினார்.

கால் கியர் உள்ள வண்டிகளை ஓட்டக்கற்றுகொடுத்தார்.(இதுவும் என் திருமணத்திற்கு பின் தான்) அவரால் தான் இப்பவும் ஆண்கள் ஓட்டும் இரு சக்கர வண்டிகளையும் நான் ஓட்ட பழகியிருக்கிறேன். எனக்கென்று வண்டி வாங்க சென்றபோது, பெண்களுக்கான வண்டிகளை தேர்வு செய்யாமல், ஸ்கூட்டர் வாங்கிக்கொடுத்தார். ஆனால் அதை நானே அவரும் எதிர்பார்க்காதவாறு அரை நாளில் பழகிக்கொண்டேன். வேளச்சேரியில் (இப்போது வண்டியை மாற்றிவிட்டேன்), “ஸ்கூட்டரில் எப்போதும் ஒரு பையனுடன் (என் பையன்) செல்லுவார்களே அவர்களா? “என்று என்னை குறிப்பிடும் படி ஸ்கூட்டர் ஓட்டும் பெண் ஆனேன். :)))

இன்னும் இப்படி என் அண்ணன் எனக்கு செய்தவை நிறைய இருக்கு. பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை விட பெண் இப்படியும் இருக்கலாம் என்று பழக்கிவிட்டவர் என் அண்ணன் அதனால் இந்த பகுதியை அவரின் பெயரில் எழுத ஆசைப்படுகிறேன்.

அலுவலகத்தில் நிறைய விஷயங்கள் அடுத்தவர்களை பார்த்து நாம் கற்றுக்கொள்ளலாம். அவை நமக்கு பலவகையில் பயன்படும். சின்ன சின்ன விஷயமாகக்கூட இருக்கும் ஆனால் அதன் பலன் அதிகமாக இருக்கும் நம்முடைய வேலை சுலபமாக முடியும். நான் நிறைய கற்றுக்கொண்டது என்னுடைய மேலதிகாரிகளிடம் இருந்து மட்டுமல்ல, ஆபீஸ் பாய் என்று அழைக்கப்படும் கடைநிலை ஊழியரிடமிருந்தும் கற்றுக்கொண்டு இருக்கிறேன். அவற்றில் சில….

குறிப்பு 1.

எல்லோரும் கம்பியூட்டர் உதவியுடன் தான் வேலைப்பார்க்கிறோம். சம்பந்தப்பட்ட file களை folder create செய்து சேவ் செய்து வைக்கிறோம். சமீபத்தில் என் அலுவலகத்தில் ஒருவர் இந்த folder களை நம்பர் போட்டு சேவ் செய்து இருந்தார். அதாவது அவருக்கு எது முதலில் வேண்டுமோ அதற்கு எண்.1 , 2, 3.. என்று பெயர் கொடுத்து இருந்தார். உதாரணம்.

Folder names :- (இவை எப்போது கிரியேட் செய்தாலும் alphabetic order இல் தான் போய் உட்கார்ந்து கொள்ளும்) Examples :-

Accounts
Admin
HR
Payroll
Policies
Purchase
Quotations
Recruitments.

மேலுள்ள இதையே அவர் தனக்கு தேவை எப்படியோ அப்படி நம்பர்களை கொடுத்து வைத்திருந்தார். இப்படி நம்பர்கள் கொடுப்பதால், இதனுள் நாம் சேவ் செய்து வைத்திருக்கும் பைல்களை தேடும் நேரம் குறைகிறது. இதில் என்னவோ 8 Folder தான் நான் குறிப்பிட்டு உள்ளேன்.. நாம் நூற்றுக்கணக்கில் Folder கள் வைத்து இருப்போம். இப்படி வரிசைப்படுத்திவிட்டால் எளிதாக, தேடலில் நேரத்தை வீணாக்காமல் இருக்கலாமே..

1. Recruitments
2. Accounts
3. Admin
4. HR
5. Quotations
6. Purchase
7. Payroll
8. Policies

அணில் குட்டி அனிதா: ஓஓஓஓஒ…இன்னைக்கு அண்ணன் புராணமா?.. நடக்கட்டும் நடக்கட்டும்…. அதே அண்ணன்கிட்ட நீங்க ரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கின கதை எல்லாம் எப்ப சொல்லப் போறீங்க….????

பீட்டர் தாத்ஸ்: I sought my soul, but my soul I could not see. I sought my God, but my God eluded me. I sought my brother and I found all three

Never make a companion equal to a brother. ~Hesiod

நிழலாக தொடரும் நிலவு - பாகம் 4

முந்தைய பாகம் ......

இரண்டு நாட்கள் மீனாவுடன் மெளனமும், முறைப்புமாக கடந்தது. மாமானார் எப்போது ஃபோன் செய்வார் என்று ஒருவித தவிப்போடும் அவரசத்தோடும் இருந்தான் ரமேஷ்.......

அழைப்பும் வந்தது...... அலுவலகத்தில் இருந்தான்... மாமனார் சாப்பாட்டு நேரம் தெரிந்து சரியாக அழைத்திருந்தார். வேக வேகமாக அலுவலகத்தை விட்டு வெளியில் வந்து பேசினான்.

"சொல்லுங்க மாமா"

"நாளைக்கு வரோம் மாப்பிள்ளை....."

"மீனாவை கூட்டிட்டு போகத்தானே........." சந்தேகத்தோடு இழுத்தான்...

"..ஆமாம்மாப்பிள்ள... சுகுணாக்கிட்ட பேசிட்டேன்.. மீனாவ நம்மக்கூடவே பிரசவம் வரைக்கும் வச்சி இருந்தா நல்லதுன்னு ஜோசியர் சொன்னாருன்னு சொன்னேன்... அவங்களும் ஒருவழியா சம்மதம் சொல்லிட்டாங்க.. அதனால நாளைக்கு வரோம்....."

"மாமா.. நான் ஆபிஸ்ல இருக்கும் போதே வந்துடுங்க......எனக்கு வீட்டுல இருந்து ஃபோன் பண்ணி சொல்லிடுங்க..."

"அது நல்லா இருக்காது.. நாங்க காலையிலேயே வரோம்..ஆனா நீங்க வந்த பிறகு சொல்லிட்டு கிளம்பினா தான் சுகுணாக்கு மனசு திருப்தியா இருக்கும்....... நீங்க வீட்டுல இல்லாதப்ப கூட்டிட்டு வந்தா நல்லா இருக்காதுங்க......"

".............ம்,,ம்..சரிங்க மாமா...மீனா நிம்மதியா இருக்கனும் அவ்வளவுதான்....."

"நாளைக்கு பாக்கலாம் மாப்பிள்ள, நான் வச்சிடட்டுமா......? "...

"ம்ம்..."

ஃபோனை கட் செய்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டான்...இரண்டு நாளாக இருந்த டென்ஷன் ஒரு வழியாக குறைந்தது.......அடுத்த மணித்துளி அனுஷா'வின் நினைவு வந்தது........குறைந்த டென்ஷன் திரும்பவும்............

==========

அடுத்த நாள் அலுவலகத்தில் இருக்கும் போதே மீனாவுக்காக வேண்டி, மாமனார் ஒருமுறை இவன் செல்'லில் அழைத்து தாங்கள் வீட்டுக்கு வந்திருப்பதாகவும் மீனாவை அழைத்து செல்ல போவதாகவும் அனுமதி கேட்டார். இவனும் புரிந்து கொண்டு அவருக்கு தகுந்தார் போன்று பேசி விஷயத்தை முடித்திருந்தான்.

அலுவலகம் விட்டு வீட்டுக்குள் நுழையும் போதே மாமியாரின் குரல் கேட்டது..... "மீனா...எதையும் மறக்காம எடுத்து வச்சிக்கிட்டையா... வீட்டுக்கு வந்த பிறகு அதை விட்டுட்டு வந்துட்டேன் இதை விட்டுட்டு வந்துட்டேன்ன்னு.. சொல்லாத ..."

மாமனார் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்தார். ரமேஷ்'ஐ பார்த்ததும் எழுந்து "வாங்க மாப்பிள்ள....." என்று புன்முறுவல் செய்தார்.. "ம்மா...சுகுணா..மாப்பிள்ள வந்துட்டார் பாரு........என்று உள்ளே பார்த்து குரல் கொடுத்தார்.

மாமியார், பின்னால் மீனா தொடர வெளியில் வந்தார்கள். "வாங்க மாப்பிள்ள...எப்படி இருக்கீங்க...??? செளக்கியமா?.. "

"வாங்க....நல்லாயிருக்கேன்ங்க....." என்று புன்முறுவலுடன் சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்றுவிட்டான்.

"மீனா அவருக்கு குடிக்க ஏதாது கொடு.. ....என்ற அம்மாவிடம் "போம்மா..நீயே போய் கொடு..." என்றாள்..மீனா.

"என்ன பொண்ணும்மா நீயி...".என்று முனகியவாரே அவரே சென்று ரமேஷ்'க்கு காபி கலந்து வந்தார்கள். அதற்குள் உடை மாற்றி வந்த ரமேஷ் , ஹாலில் மாமனாருடன் பேச அமர்ந்தான்.....

மாமனார் தொடங்கினார் "மாப்பிள்ள நாங்க ரெடியா இருக்கோம்..நீங்க வரட்டுமேன்னு வெயிட் பண்ணோம்... நாங்க கிளம்பரோமே.. .நேரம் ஆச்சி ரொம்ப டிராஃபிக் அதிகமா இருக்கு ..போய் சேர ரொம்ப நேரம் ஆயிடும்.. மாசமா இருக்க பொண்ண ரொம்ப ராத்திரியல கூட்டிட்டு போறது நல்லது இல்ல......"

"சாப்பிட்டிட்டு போலாமே......? என்றான் ரமேஷ்..

"இல்லைங்க ரொம்ப நேரம் ஆயிடும்...." என்றார் மாமியார்...

"சரி..கிளம்புங்க.. நான் வரணுமா..?....டிரைவர் புதுசா இருக்காறே... ??"

"பழைய டிரைவர் இன்னைக்கு வர முடியலைன்னு சொல்லிட்டாரு.. இவரு அவர் அனுப்பி வைச்ச டிரைவர் தான் ஒன்னும் பயமில்ல..."

"அப்ப சரி... " என்ற ரமேஷ் மீனாவை பார்த்தான்... அவளின் முகத்தில் சந்தோஷமோ சோகமோ எதுவும் இல்லை.. விரக்தியாக இருப்பதை போன்று இவனுக்கு தோன்றியது.

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

"மீனா இங்க வா.. என்று அழைத்த ரமேஷ்... அவளின் கையை பிடித்து லேசாக இழுத்தவாறு ரூமிற்குள் சென்றான். ..நேரத்திற்கு ஒழுங்கா சாப்பிடு நான் வாரம் வாரம் வரேன்... எதையும் போட்டு குழப்பிகாத ...எல்லாம் சரியா ஆயிடும்... சந்தோஷமா இரு..அப்பத்தான் நம்ம குழந்தை நல்லா பிறக்கும்.. சரியா..?..." என்றான்..

"மீனா.. அவனின் கையை விடுவித்து......"நான் சந்தோஷமா இருக்கேனோ இல்லையோ.. நீங்க இருப்பீங்க.. ஏன் என்னன்னு கேட்க இனிமே யார் இருக்கா இங்க... " அவள் கண்கள் குளம் ஆனாது....

"கிளம்பும் போது அழாத.... உங்க அப்பா அம்மா தப்பா நினைக்க போறாங்க... நீ நினைக்கற மாதிரி எதுவும் நடக்காது.. ... உடம்பை பாத்துக்கோ... " என்று அவளின் கண்களை துடைத்துவிட்டு வெளியே அழைத்து வந்தான்.

மீனாவின் மனமும் முகமும் கொஞ்சம் மலர தொடங்கியது........ அதோடு அவர்களை வழி அனுப்பிவிட்டு..... அனுஷாவை பற்றி யோசிக்கலானான்.

==========

ஒரு வருடமா இரண்டு வருடமா...? 6 வருடம்.. அனுஷாவை தவிர யாரையுமே நினைத்துக்கூட அவன் பார்த்தது இல்லை.... அவளும் அப்படித்தான்.. இன்னமும் அப்படித்தான் இருக்கிறாள்.. அவனின் தேவதையாக தான் இருந்தாள்... நினைவிலும் நிஜத்திலும் எப்போதும் அவனுடனே இருந்தாள்... ஆனால் இப்போது ....எப்படி நாம் நினைத்தது திட்டம் போட்டு இப்படித்தான் இவளுடன் தான் தன் வாழ்க்கை என்பது நடக்காமல் அப்படியே வேறு விதமாக நடந்துவிட்டது..? இதை "இது தான் விதி" என்று நினைத்துக்கொள்ளலாமா. .இல்லை இவளுடன் தான் என்னுடைய வாழ்க்கை என்று யாரோ எப்பவோ திட்டமிட்டுவிட்டார்களா? அப்படி நம் வாழ்க்கையை நிர்ணயிக்க அவர்கள் யார்?...

தன்னையே நம்பி மனைவியாகிவிட்ட மீனா.. ?? அவளும் பாவம் தானே.... வேண்டாம் வேண்டாம் என்று சொன்ன பிறகும் உன்னை போன்ற உண்மையானவன் எனக்கு கிடைக்க மாட்டான் என்று விடாப்பிடியாக நின்று திருமணம் செய்து கொண்டு இப்போது நிம்மதி இல்லாமல் இருக்கிறாள்...எப்படி அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்வது.?

எல்லாவற்றிக்கும் மேல் வாழ்க்கையின் ஒரே ஆசை, தான் காதலித்த பெண்ணை வாழ்க்கை முழுதும் பக்கத்தில் வைத்து கொள்ளவேண்டும் என்று நினைத்தவன் இப்போது இல்லாமலேயே போன் இந்த் வாழ்க்கை.. "நிம்மதியே நீ எங்கே?" என்று கேட்கும் படி ஆகிபோய் விட்டது.


ரமேஷ்'ஷின்... நினைவுகள் மீனாவையும் அனுஷாவையும் மாறி மாறி அசைப்போட்டுக்கொண்டே இருந்தது. நினைவுகளுடனே சாப்பிடக்கூட மறந்து உறங்கிபோனான்....

========

காலையில் சீக்கிரம் எழுந்தான்...சந்துருவை அழைத்தான்.... .."மச்சி அனு எப்படி இருக்காடா... வீட்டுக்கு தான் கிளம்பரேன்..."

" நீ ஒன்னும் வரவேணாம் ஆபிஸ்க்கு போற வழிய பாரு.. .இத்தனநாளா எப்படி கூட்டிட்டு போனேனோ அதே மாதிரி நானே அவளை ஆபிஸ்ல டராப் பண்றேன்... ஈவினிங் வேணும்னா போய் பிக்கப் பண்ணு.. ஆனா தெய்வம் என்ன சொல்லுமோ நீயே அதையெல்லாம் மேனேஜ் பண்ணிக்க்கோ..நீயாச்சி தெய்வமாச்சு ..." ...

"ம்ம்..சரி.. நான் பாத்துக்குறேன்.. நான் வருவேன்னு அவகிட்ட நீ சொல்லாத.."

"ரொமப தேவடா எனக்கு..போட போ... உஙக ரெண்டுபேரு சகவாசமே எனக்கு வேணாண்டா.....அது ஒரு தெய்வம்.. .நீ ஒரு வேலவெட்டி இல்லாத ஜென்மம்..... ஏதோ தங்கச்சியாச்சே அண்ணன் கடமைய செய்யணுமேன்னு கூட்டிட்டு போய் விடறேன்... அதோட என் வேல முடிஞ்சிது......."

"டேய் ஓவரா பேசற...நிறுத்திக்கோ........"

"டேய் வென்று.. !! நீ முதல்ல நிறுத்துடா ......நாங்க அப்புறம் ஆட்டோமேட்டிக்கா நிறுத்திக்குவோம்..... " ஹாஆ.. இங்க தெய்வம் நோட்டம் விடுதுடி.. மாட்டினா... அட்வைச் பண்ணியே காலங்ககாத்தால என்னை சாகடிப்பா.... கட் பண்ணிக்கோடா என் கண்ணு....!! ! "....

=========

அன்று மாலை, ரமேஷ் சரியான நேரத்திற்கு, அனுவின் ஆபிஸ் வாசலில் நின்றான்...... அனு எப்படி ரியாக்ட் பண்ணுவா? என்று யோசித்தவாறே நின்று அவள் வரும் வழியையே பார்த்துக்கொண்டு இருந்தான்...

அனுஷாவும்...வந்தாள்.........

நிழல் தொடரும்......

தலைவா..ஆஆ..!! உய் உய் உய் உய் உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!

தயவு செய்து யாரும் பயந்துடாதீங்க... எல்லாம் திரு.ரஜினிகாந்த அவர்களின் பேட்டியை சற்று முன் சன் டீவியில் பார்த்ததின் பலன்.

திரு. ரஜினி காந்த் அவரின் ரசிகர்களின் கேள்விகளுக்கு சொன்ன பதில்... என்னத்த சொல்ல... திருப்பி ஒரு உய்ய்ய்ய்ய்ய்ய்!! ..ஒன்றும் இல்லைங்க.. விசில் தான்.. விசில் அடித்தாலும் அதிகமாக சத்தம் வராது. .ஆனாலும் இன்னமும் முயற்சியை கைவிடாமல் கற்றுக்கொண்டுத்தான் இருக்கிறேன்..

சரிங்க விஷயத்துக்கு வருவோம். திரு. ரஜினிகாந்த் அவர்களின் பேச்சு எந்திரன் திரைப்பட படப்பிடிப்பு முடிந்தவுடன் அரசியலுக்குள் நுழைவதற்கான முழு சாத்திய கூறுகள் இருப்பதாக தோன்றுகிறது.

இங்கு அவரின் பதிலை பதிவாக வெளியிட்டால்.. அவரின்

ஸ்டைல்...
ஹா ஹா.. சிரிப்பின் ஸ்டைல்...
இருக்கிற கொஞ்சம் முடியை கோதிவிடும் ஸ்டைல்.....
நடக்கிற ஸ்டைல்...
பேசற ஸ்டைல்...
யோசிக்கிற ஸ்டைல்...
வியற்வையை துடைக்கிற ஸ்டைல்...

எல்லாவற்றையும் விட...

மேடையின் பின்னால் எழுதி வைத்திருக்கின்ற வாசகத்தை படிக்க... வாவ்..!! அவர் சக்கர நாற்காலி சுழட்டி பார்த்த ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டைல்ல்ல்ல்..!!

சிவாஜி படத்தின் "ஒரு கூடை சன் லைட்... ஒரு கூடை மூன் லைட் " பாடல் நினைவுக்கு வருகிறது.....

காத்திருப்போம் திரு.ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கும் வரும் நாளை நோக்கி...ஆனால்... வருவாரா...???? வந்தால்..சுயநலம் இல்லாத அவர் பிழைப்பாரா?.. அப்படி பிழைக்கத்தான் மற்றவர்கள் விட்டுவிடுவார்களா... கண்டிப்பாக யோசிக்கவைக்கிறது...

அணில் குட்டி அனிதா:- அம்மணியோட ஆர்ப்பாட்டம் தாங்கமுடியலைங்க.. வராத விசிலை.. 8 மணியிலிருந்து இழுத்து இழுத்து அடிக்கறாங்க..எங்க..காத்துத்தேன் வருது... திருந்தமாட்டாங்க.. விட்டுத்தொலைக்கனும்..!! ஹ்ம்..கேப்பாரு இல்ல........!!!

பீட்டர் தாத்ஸ்:- 1. Kedaikkaradhu kedaikkaama irukkaadhu. Kedaikkaama irukkaradhu kedaikkaadhu
2. Naan solradha dhaan seiven, seiyaradha dhaan solluven
3. Kadamaiyayi sai palanai ethir paar.
4. Panam Janam erandaiyum one'aa vaika koodathu.. vachomnu sonna.. anga arasiyal nuzhanjidum..!!

உலக ஆண்கள் தினம் - வாழ்த்துக்கள் !!

எத்தனை பேருக்கு தெரியும் இன்று உலக ஆண்கள் தினம். இந்த வருடம் தான் எனக்கும் தெரிந்தது. மகளிர் தினம், குழந்தைகள் தினம், ஆசிரியர் தினம் என்று இன்னும் எத்தனையோ தினங்கள் நாம் கொண்டாடி வருகிறோம்.. ஆனால் ஆண்கள் தினம்???

ஆணதிக்கம் அதிகமாக உள்ள இந்தியாவில் அவசியம் கொண்டாட வேண்டிய தினம் அல்லவா?. உள்குத்து இருக்கிறதோ என்று யாரும் தயவுசெய்து நினைக்கவேண்டும்.

ஆண்கள் தினம் ஒவ்வொருவருடம் முதல் சனிக்கிழமை அன்று நவம்பர் மாதத்தில் கொண்டாட படுகிறது. இதனை சோவியத் யூனியனின் பிரசிடண்ட் Mr.Mikhail Gorbachev ஆவால் பரிந்துரைக்கப்பட்டு United Nations ஆல் ஆதரிக்கப்பட்டது. உலகத்தில் ஆண்கள் சமுதாயத்தில், அரசியலில், பொருளாதாரத்தில் செய்துவரும் சாதனைகளைக்காக பரிந்துரைக்கப்பட்டது.

நாமும் (பெண்கள், குழந்தைகள்) அனைவரும் நம்மை சுற்றியுள்ள நமக்கு எப்போதும் எதிலும் துணையாக இருக்கின்ற அப்பா, அண்ணன், தம்பி, கணவன், மகன், மற்றும் நண்பர்களுக்கு நம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளலாமே...

உலக ஆண்கள் தினத்தில் எல்லா ஆண்களையும் அன்புடன் நானும் அணில் குட்டியும் வாழ்த்துகிறோம்..!!

அணில் குட்டி அனிதா:- என்னாச்சி கவிதாக்கு.. கூடவே தான் இருக்கேன்.. ஆனாலும் பிரியல.. சரி..இன்னொரு நாள் பாத்துக்கலாம்.. அண்ணாச்சிங்க, தம்பிச்சிங்க.. அப்பாச்சிங்க..புள்ளங்கச்சிங்க..எல்லாத்துக்கும் என்னோட Hearty "Men's Day Wishes" ங்கோ!! Enjoy'ங்கோ...!! லேட்'டானாலும் நானும் கவியும் லேட்டஸ்ட் ங்கோஓஒ..!!

பீட்டர் தாத்ஸ் :- Trust men and they will be true to you; treat them greatly and they will show themselves great.