அழவைக்கும் சாலை ஓர மரங்கள்.....
முக்கிய பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் இருக்கும் மரங்களை இப்போது மிக வேகமாக அகற்றி வருகிறார்கள். அதுவும் மரங்கள் என்றால் இவை எல்லாம் வானுயர்ந்த மரங்கள். மழை, வெயில் இரண்டு காலங்களிலும் நமக்கு உதவுபவை.
ராஜ்பவன் அருகில், சர்தார் வல்லபாய் சாலையில் உள்ள மரங்கள் மிக வேகமாக அகற்றப்பட்டு விட்டன. நேற்று பார்த்த மரங்களை இன்று பார்க்க முடியாது..அவை இருந்த இடங்கள் வெறும் சிமெண்ட் பூசப்பட்ட சாலைகளாக மாறிவிடுகின்றன.
வெயில் காலங்களில் அந்த சாலையில் செல்லும் போது மிகவும் குளுமையாக இருக்கும். ஏன் சிறுது நேரம் வெயிலின் தாக்கத்திற்கு நின்று கூட போகலாம், மழை காலத்திலும் சரி இந்த மரங்களுக்கு கீழ் நின்று விட்டு செல்பவர்கள் பலர்.
ஹால்டா சிக்னலில் இருந்து, மத்யகைலாஷ் வரை உள்ள மரங்கள் அத்தனையும் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டுக்கொண்டே வருகின்றன. அதில் ஹால்டா’ அருகில் இருந்த எந்த ஒரு மரமும், சாலைக்கும், போக்குவரத்துக்கும் இடைஞ்சல் இல்லாமல் ஓரமாகத்தான் இருந்தன. அவற்றை ஏன் அகற்றினார்கள் என்ற கேள்விக்கு விடை இன்னமும் தெரியவில்லை. அதே போல், கோட்டூர் புரம் சாலையில் உள்ள மரங்களும் அகற்றப்பட்டு விட்டன. அந்த மரங்களால் போக்குவரத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் இருந்தது.
இந்த மரங்கள் அத்தனையும் அத்தனை உயரமாகவும், பருமனாகவும் வளர எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்குமோ தெரியவில்லை..ஆண்டுகள் 100 களை தாண்டி க்கூட இருக்கலாம். இப்படி வளர்ந்த மரங்களை வெகு எளிதாக போக்குவரத்துக்கு தொந்தரவு இல்லாத இடங்களில் கூட ஏன் அகற்றுகிறார்கள் என்பது புரியவில்லை.
2000 ஆம் ஆண்டு வேளச்சேரியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி, அங்கு சாலையில் சில வேப்பமர கன்றுகளை நட்டு, இந்த வருடம், 2007 ல் அந்த மரங்கள் தெருவிளக்கை தொடும் அளவிற்கு உயரமாகி இருப்பினும், இன்னமும் அதன் பருமன் நான் ஒரு கையால் பிடிக்கும் அளவிற்கு தான் வளர்ந்திருக்கிறது. அதை பாதுகாத்து வளர்ப்பதற்க்குள் படாத பாடு பட்டுவிட்டேன் எனலாம். அது வளர்ந்து வேர் வீட்டு உள்ளே புகுந்து அடுக்குமாடி கட்டிடம் இடிந்து அவர்கள் தலையில் விழுந்து விடும் என்று அதை பிடுங்கி போட்ட அக்கம் பக்கத்தினரும் உண்டு. இன்று அவர்கள் வீட்டு இரு சக்கர வாகனம் இந்த மரங்களுக்கு அடியில் தான் நிறுத்திவிட்டு வருகிறார்கள்.
எங்கள் வீட்டு முன் இருக்கும் மரங்களின் வளர்ச்சியை பார்க்கும் போது, இப்போது வெட்டப்படும் மரங்களின் உயரத்தையும், பருமனையும் பார்த்து எனக்கு பிரம்மிப்பாக இருக்கிறது.. எத்தனை ஆண்டுகளாய் இந்த மரங்கள் பூத்து குலுங்கிக்கொண்டு இருந்தன இப்படி ஒரே நாளில் செத்து போகவா?..
இப்படி மரங்களை பார்த்து எல்லாம் அழுது கொண்டு இருக்கும் என்னை வீட்டில் மட்டும் இல்லை நண்பர்கள் கூட ஒரு மாதிரியாக தான் பார்க்கிறார்கள். நாட்டில் என்ன என்னவோ பெரிய விஷயங்கள் இருக்க ஒரு சாதாரண மரத்திற்காக இவள் அழுகிறாளே, புலம்புகிறாளே என்று நினைக்கிறார்கள்.
ஜி.என்.செட்டி சாலையில் மரங்களை அகற்றும் போது அங்கு இருந்த குழந்தைகள் அந்த மரங்களை கட்டியணைத்து வெட்ட விடாமல் செய்தார்களாம். அந்த குழந்தைகளை போன்று தான் எனக்கும் தோன்றும்..ஆனால் இப்படி தொலைவில் இருந்து அழும் போதே என்னை ஒரு மாதிரி பார்க்கும் ஆட்கள், மரத்தை கட்டிக்கொண்டு, அழுது வெட்டவிடாமல் செய்தால்..நிச்சயம் ஆஸ்பித்திரியில் கொண்டு சேர்த்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்..
அணில் குட்டி அனிதா:- வாவ்..!! கவி..சூப்பர் ஐடியாவா இருக்கு.!! சொல்லவே இல்ல?!! .ஆமா நீங்க எப்ப எந்த மரத்தை கட்டிக்க போறீங்கன்னு சொல்லுங்க..ரெடியா நான் ஆம்புலன்ஸ்’ ஓட காத்துக்கிட்டு இருக்கேன்..சரியா..
ம்ம்.. நீங்க எப்பவோ ஆஸ்பித்திரியில இருக்க வேண்டியவங்க.... நாட்டுல நடமாடிக்கிட்டு இருக்கீங்க என்ன செய்யறது.. எனக்கு தெரிஞ்ச.. இந்த விஷயம் ஊரு உலகத்துக்கு தெரியனும்னா.. நீங்க கண்டிப்பா ஏதாவது மரத்தை போய் கட்டிக்கோங்க..ப்ளீஸ்..............
பீட்டர் தாத்ஸ் :-Winners can tell you, where they are going, what they plan to do along the way and who will be sharing the adventure with them.
Labels:
சமூகம்


14 - பார்வையிட்டவர்கள்:
சற்று முன்னர்தான் தகிக்கும் சென்னை வெயிலில் சென்று ஒரு சுக்கு காபி குடித்து வருகிறேன். எல்லா பக்கமும் மழை வருகிறதே. இங்கு வரக்கூடாதா என்று புலம்பிய போது நண்பர் சொன்னது. மேகம் எல்லா சென்னையில் சேராமல் இல்லை. சேரும் மேகங்களை மழையாக மாற்ற மரங்கள் இலலை. காய்ந்து போன நம்ம இராமநாதபுரம், புதுக்கோட்டையிலேயே மழை பெய்கையில் கடலோரம் உள்ள சென்னையில் அடித்த ஊற்ற வேண்டாமோ. ஏன் இலலை.. மரங்கள் இல்லை. நம் தலையில் நாமே மண்ணை வாரிப்போட்டுக்கொண்டிருக்கிறோம்.
வாங்க பாரதி.. இந்த வெயில்ல சுக்கு காபியா..
ம்ம் மரத்தை பற்றி ஏன் பேசறீங்க..தினமும் இந்த சாலைகளை கடந்து வரும் போது வயிறு எரிகிறது என்றே சொல்லுவேன்.. அத்தனை மரங்கள் வெட்டப்பட்டு விட்டன.. :(
ம்ம்ம்ம் நாட்டில எத்தனை பேரு இப்படி நினைக்கிறாங்க சொல்லுங்க?
மரங்கள் நாட்டோட சொத்துனு நினைக்கிற வரைக்கும் இந்த அவலங்கள் தொடர்ந்துட்டே தான் இருக்கும்... இன்னிக்கு நிலைமையில மரம் என்பது சும்மானு நினச்சுட்டு இப்படி பண்ணிட்டு இருக்காங்க... ஆனா இப்போ பண்ற தவறுகளுக்கு கண்டிப்பா ஒருநாள் வருத்தப்பட போறோம்.
இந்தியா மாதிரியான ஒரு வெப்ப மண்டலத்தில் மரங்கள் கண்டிப்பா தேவை...இல்லைனா நாம பொசுக்கிப்போவோம்...
எங்க வீட்டில இருந்த முருங்க மரத்தையும் வேப்ப மரத்தையும் நான் அங்க இருந்த வரைக்கும் வெட்ட விடல... கடைசில ஆழ்குழாய் கிணறு போடுறதுக்காக முருங்கை மரத்தை வெட்டிட்டாங்க.பக்கத்து வீட்டுக்காரங்க வீடு கட்றாங்கன்னு வேப்ப மரத்தையும் வெட்டியாச்சு... இப்போ இருக்குறது ஆசை ஆசையா வச்ச நெல்லி மரம்தான்... ஒவ்வொருதடவையும் கொத்து கொத்தா நெல்லி காய்க்கும் போது ஆச ஆசயா இருக்கும்...ம்ம் என்னிக்கு திருந்தப்போறோமோ....
//இந்தியா மாதிரியான ஒரு வெப்ப மண்டலத்தில் மரங்கள் கண்டிப்பா தேவை...இல்லைனா நாம பொசுக்கிப்போவோம்...//
வாங்க மனசு, இப்பவே பொசுங்கித்தான் போகிறோம்.. சென்னைவாசிகள் எல்லோருக்கும் இது தெரிந்தது தான்..
//...ம்ம் என்னிக்கு திருந்தப்போறோமோ.... //
திருந்த போறோமா..??? அப்படி ஒன்றும் எனக்கு தெரியவில்லை...
Can't we do anything about this?
\\மத்யகைலாஷ் வரை உள்ள மரங்கள் அத்தனையும் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டுக்கொண்டே வருகின்றன\\
அவ்வ்வ்வ்...மூணு வருஷம் குப்பை கொட்டிய இடம் ;-(
படிக்கிற காலத்துல மரங்களின் கீழ் உட்கார்ந்நு கதை கதையா பேசிக்கிட்டு இருப்போம்....இப்போ? ;-((
அழவைக்கும் சாலை ஓர மரங்கள் மட்டுமா...???
உங்க பிளாகில் உள்ள மரங்களும் தான்
நீங்க மட்டும் வெட்டி பிளாக்குல வைக்கலாமா...:)
(இன்னைக்கு யாரு கிடைக்கல கும்மி அடிக்க)
//Can't we do anything about this? //
வாங்க வித்தியாசாகரன் ! செய்யமுடியும்.. அமைதியாக எதிர்த்து போராடலாம், எழுத்து மூலம் அனைவரும் அதை சார்ந்த அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து, தொடர்ந்து இப்படி நிகழாமல் செய்யலாம் என்று நினைக்கிறேன். ஆனாலும் அவர்கள் தரப்பில் சில காரணங்களை வைத்து இருப்பார்கள் இல்லையா?..
அதற்கு நாம் என்ன பதில், அல்லது மாற்று யோசனை கூற முடியும் என்பதையும் பார்க்கவேண்டும்..
//அவ்வ்வ்வ்...மூணு வருஷம் குப்பை கொட்டிய இடம் ;-(//
வாங்க கோபி, இப்பவெல்லாம் குப்பை கொட்டுகிற மாதிரியே அந்த இடம் இல்லை...புதியா ஐடி சாலையாக மாறி.. சென்னையில் உள்ள அழகிய சில சாலைகளில் அதுவும் ஒன்றாகி இருக்கிறது.. நான் சொல்லுவது டைடல் பார்க் சாலையும், மத்திய கைலாஷ் வரை இணைக்கும் சாலையை.
//படிக்கிற காலத்துல மரங்களின் கீழ் உட்கார்ந்நு கதை கதையா பேசிக்கிட்டு இருப்போம்....இப்போ? ;-(( //
ம்ம்..இப்பவும் சில மரங்கள் மிச்சமிருக்கிறது..ஆனால் எப்ப முழுசா தூக்குவாங்கன்னு தெரியல..
//உங்க பிளாகில் உள்ள மரங்களும் தான்
நீங்க மட்டும் வெட்டி பிளாக்குல வைக்கலாமா...:)//
எப்படீங்க இப்படி எல்லாம்??!! முடியல போங்க..!!
ரூம் போட்டு யோசிச்சி பதில் போடுவீங்களோ..
பொதுவாக என்னுடைய பதிவை கொண்டே மரங்கள் எனக்கு பிடிக்கும் என்று புரிந்து கொண்டு இருப்பீர்கள்.. அதே போல் அவற்றிலிருந்து செய்யப்படும் பொருட்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. !!
ஆனா.. என்னுடைய ப்ளாக்' ல் உள்ள மரங்கள் இந்திய மரங்கள் இல்லை.. ஓசியில் வெளிநாட்டில் இருந்து வாங்கியவை..
//(இன்னைக்கு யாரு கிடைக்கல கும்மி அடிக்க) //
அதான் வந்து துவக்கி வச்சிட்டீங்க இல்ல.. நிம்மதியா இருங்க..! :)))))))
எனக்கு தெரிந்த விசயம்
கோட்டூர்புரத்திலிருந்து மத்ய கைலாஷ் வரை மரம் வெட்டுவதை யாரும் கண்டு கொள்ளவில்லை. அடையாரில் மரம் வெட்ட ஆரம்பித்தவுடன் அடையார் வாழ் மக்களும் மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் போராட்டத்தில் குதித்தன. நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு தீர்ப்பும் தற்போது வெளியாகியுள்ளது. தீர்ப்பில் 10 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட வேண்டும், மரம் வெட்டுவதற்கு முன் இந்த குழு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது
நன்றி
ஸ்ரீசரண், தகவலுக்கு மிக்க நன்றி, நாங்கள் குடியிருக்கும் பகுதியில் கூட, மின்சாரவாரியத்தை சேர்ந்தவர்கள், மின்சாரகம்பிகளுக்கு மரங்கள் இடையூராக இருக்கின்றன என்று தீடிரென்று முன் அறிவுப்பு இன்றி வெட்டினார்கள். குடியிருப்புகளில் உள்ள சிலர் சென்று அவர்களை கேட்டுக்கொண்டதின் பேரில், அவர்கள் வெட்டுவதை கொஞ்சம் குறைத்து க்கொண்டார்கள்.
நான் சொல்லிய இந்த சாலையில், நெடுகவே மரங்கள் வெட்டப்படுகின்றன.. என்ன செய்வது.. ?!!
கஷ்டமாதாஙக இருக்கு! நானும் இதப்பத்தி விசாரிசேன். அந்த மரங்கள பாதியளவு வெட்டிவிட்டு வேரோட பிடுங்கி வேற இடத்துல நட்டுவிடுவார்களாம். கொஞ்சம் சந்தோசமா தான் இருந்தது ஆனா என் மனசு உடனே கேள்வி கேட்க ஆரம்பிசிடிச்சி
1. அப்படி பிடுங்கி நட்டா அந்த மரங்கள் பிழைக்கக்கூடிய வாய்ப்பு எவ்வளவு?
2. அப்படி நட்ட பிறகு யார் அதை பாதுகாப்பது & பராமரிப்பது?
3. அவ்வறு பராமரிக்கப்படுகிறது என கண்காணிக்கப்படுகிறதா?
4. இதற்கெல்லாம் பதிலை யாரிடம் கேட்பது?
கடவுள் தான் காப்பாத்தனும்.
//நானும் இதப்பத்தி விசாரிசேன். அந்த மரங்கள பாதியளவு வெட்டிவிட்டு வேரோட பிடுங்கி வேற இடத்துல நட்டுவிடுவார்களாம். கொஞ்சம் சந்தோசமா தான் இருந்தது//
தகவலுக்கு நன்றி அமர், ஆனா உங்களை போலவே எனக்கும் கேள்வி எழுகிறது.
1. அப்படி பிடுங்கி நட்டா அந்த மரங்கள் பிழைக்கக்கூடிய வாய்ப்பு எவ்வளவு?
வாய்ப்பு குறைவு, ஏனென்றால் வெட்ட படும் மரங்கள் எல்லாம் பல ஆண்டு வயதான மரங்கள், அதனால் எப்படி திரும்ப துளிர்த்து வளரும் அதுவும் வேறொரு இடத்தில்?
2. அப்படி நட்ட பிறகு யார் அதை பாதுகாப்பது & பராமரிப்பது?
நடுபவர்கள் தான் தொடர்வார்கள்.
3. அவ்வறு பராமரிக்கப்படுகிறது என கண்காணிக்கப்படுகிறதா?
நிச்சயம்.. கண்காணிக்கப்படும்
4. இதற்கெல்லாம் பதிலை யாரிடம் கேட்பது?
எனக்கும் தெரியல..ஆனா தெரிஞ்ச வரையில் பதில் சொல்லியிருக்கிறேன்.
Post a Comment