வளர்ந்த நாடுகளின் பொருளாதர வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, மக்கள் தேவையில்லாமல் பேசுவது இல்லை, செயலில் கவனம் செலுத்துகிறார்கள். வாரத்தில் 5 நாட்கள் உழைத்துவிட்டு 2 நாட்கள் வாழ்க்கையை சந்தோஷமாக கழிக்கிறார்கள். மக்கள் பழக்கவழக்கங்கள் நாட்டுக்கு நாடு நிறைய வேறுபாடு, நம்மிடம் இருக்கும் மிக பெரிய குறை பேச்சு, மற்றொன்று ஒழுங்கின்மை, அதற்கடுத்து அனுகுமுறை. பண்நாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டு அமெரிக்கர்கள் அவ்வபோது நம்மை பற்றி சொல்லும் கருத்தை கேட்பதால் இந்த பதிப்பை எழுதுகிறேன். அவர்கள் இந்தியர்களை பற்றிய கருத்தை சொல்லும் போது ஏதோ ஒருவரை தானே சொல்கிறார்கள் என விட்டு விட முடிவதில்லை. சில நேரங்களில் கோபமும், பல நேரங்களில் அவமானமாகவும் இருக்கும். வெளி நாட்டிலிருந்து அலுவலக வேலையாக வரும் வெளிநாட்டு வாழ் தமிழர் அடிக்கடி.. “Hey! you guys are wasting your business hours by talking unnecessary things yaar, this is what India is not developed economically ...you guys should change your attitude” என்பார்.
அவர் அப்படி கூறுவதற்கு பல காரணங்கள் உண்டு, தேவையில்லாமல் அடுத்தவர்களை பற்றிய கதை பேசுதல்,(gossip) திட்டமிடாது வேலைகளை செய்தல், தனக்கென ஒதுக்கப்பட்ட வேலையை கவனிக்காமல் அடுத்தவர்களின் வேலையில் மூக்கை நுழைத்தல், ஆடை & காலணிகளில் போதிய கவனம் செலுத்தாமை, தெரியாத விஷயத்தை தெரியும் என சொல்லிவிட்டு, பிறகு விழிப்பது, நேரத்தை சரியான முறையில் கடைபிடிக்காமை, ஒழுங்கின்மை போன்றவைகளை சொல்லலாம். இவை அலுவலக வேலையை சரி வர முடிக்க முடியாமல் இடையூராக இருக்கின்றன. சிறு சிறு தவறுகள் கூட கவனிக்கப்பட்டு திருப்பி அனுப்பபடுகின்றன.. நான் இதுவரை இந்திய அலுவலகங்களில் பார்த்திராத வேலை நேர்த்தியையும், ஒழுங்கையும் இங்கே கற்றுக்கொள்கிறேன் என்று சொல்ல தயக்கம் இல்லை.
ஏன் இந்தியாவை தேர்தெடுத்து, கம்பெனியை ஆரம்பித்து, நம்மையும் வேலை வாங்கிக் கொண்டு நம்மை குறை கூறவேண்டும் என எனக்கு தோன்றும். இங்கேயே இப்படியென்றால், அமெரிக்காவில் சென்று வேளை பார்க்கும், நம் நாட்டவரை எண்ணிப்பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. சில பண்நாட்டு நிறுவனங்கள் இங்கேயே அவர்களுக்கு, அமெரிக்கர்களிடம் பழகும், பேசும், சாப்பிடும் (கரண்டி, முள் கரண்டியில் உதவியுடன் உணவருந்துதல்) முறையை கற்று கொடுக்கின்றன.. சிலர் இதையெல்லாம் சரிவர செய்ய தெரியாமல் அந்நிய நாட்டில் எத்தனை அவமானப்படுகிறார்கள்?.
விமானத்தில் பயணம் செய்யும் போதும், மது வகைகள், உணவு வகைகள் கிடைக்கிறது என்பதற்காக அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவது மட்டுமின்றி பைக்குள் சேமித்து வைத்து கொள்வது போன்ற அநாகரிக அனுகுமுறைகள் அங்கிருக்கும் பணி பெண்களை வெகுவாக எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. ஒரு சிலர் செய்யும் இது போன்ற செயலால் ஒட்டு மொத்த இந்தியாவின் பெயரே அல்லவா கெடுகிறது. அடுத்து, விமானம் நின்ற பிறகு அடித்து , பிடித்து தலை மேல் வைத்திருக்கும் பொருட்களை எடுத்து அடுத்தவர்களுக்கு தொந்தரவு தருவது, எல்லா நாட்டு குழந்தைகளும் அமைதியாக வரும் போது, நம் குழந்தைகள் மாத்திரம் விமானத்தினுள் ஒடி பிடித்து விளையாடுவது போன்றவை பிற நாட்டவர்கள் நம்மையும், நாம் குழந்தை வளர்க்கும் முறையையும் விமர்சனம் செய்யும் படியாக உள்ளது. இது போன்ற செயல்களை நம்மால் கட்டு படுத்த இயலாதா?.
சில நல்ல விஷயங்கள் நான் கற்று கொண்டவை என் வேலையை நானே செய்வது, இந்திய நிறுவனங்களில் எல்லாவற்றிலும் office asst/boy or clerk இருப்பார். நம் அத்தனை வேலைகளையும் நாமே செய்து பழகினால் இந்த வேலைக்கென்று ஒரு ஆள் தேவையில்லாமல் போய்விடும்.
சிறு சிறு விஷயங்களில் நம்மை சரி செய்து கொண்டால் நம்மை குறைவாக யாராவது பேசமுடியுமா?..அதுவும் அந்நிய நாட்டவர். ஏதோ என் வேலையை சரி வர கற்றுக்கொண்டு சரியாக செய்வதால் அந்த அமெரிக்கர் “Hey, you Indians...” என என்னிடம் கதை அளப்பதை நிறுத்தி விட்டாலும், மற்றவர்களிடம் அவர் இன்னமும் “Hey, you Indians...” என பேசுவது காதில் விழத்தான் செய்கிறது..
அணில் குட்டி அனிதா: ஆஹா.....கதை அளக்கறதுல நம்ம அம்மனியை யாரும் மிஞ்ச முடியாதுங்கோ..! அம்மனி கிட்ட மீனம்பாக்கம் எங்க இருக்குன்னு கேளுங்க..முழிப்பாங்க.. இவுக.. என்னவோ மாசத்துக்கு 2 தரம் அமெரிக்கா, லண்டன் போயிட்டு வர ரேஞ்சுக்கு விமானத்தை பத்தி எல்லாம் எழுதறாங்க.. இதுக்கெல்லாம் காரணம்..வேற யாரும் இல்லைங்க..நீங்க தான்............! உடனே comment எழுத போயிட்டீங்களா?. இருங்கப்பா.....அப்படியே screen ல நான் இதை ஒரு 4 தரம் (நீங்க தான்..நீங்க..தான்) திருப்பி சொல்லற மாதிரி கற்பன பண்னுங்க...பண்ணிடீங்களா........ம்ம் போதும் போதும்..இப்போ போய் comment எழுதுங்க...!
இந்தியர்கள் இப்படியா?..Hey you Indians..!
Posted by : கவிதா | Kavitha
on 17:03
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
36 - பார்வையிட்டவர்கள்:
//விமானத்தில் பயணம் செய்யும் போதும், மது வகைகள், உணவு வகைகள் கிடைக்கிறது என்பதற்காக அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவது மட்டுமின்றி பைக்குள் சேமித்து வைத்து கொள்வது போன்ற அநாகரிக அனுகுமுறைகள் அங்கிருக்கும் பணி பெண்களை வெகுவாக எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. ஒரு சிலர் செய்யும் இது போன்ற செயலால் ஒட்டு மொத்த இந்தியாவின் பெயரே அல்லவா கெடுகிறது.//
இந்தியர்கள் என்று இல்லை.. நாம் பெருமையாக நினைக்கும் ஜப்பானியர்கள் சிலர் கூட ஒரு முறை இந்த மாதிரி செய்ததை பார்த்திருக்கிறேன். இவ்வளவு ஏன்? அமெரிக்க தம்பதியினர் ஒரு முறை ஓடும் விமானத்தினுள் ரத்தக் களறியாக அடித்து சண்டை போட்டதும் பார்த்திருக்கிறேன்.
இப்படி இந்தியர்கள் மட்டும் தான் இவ்வாறு என்று சொல்வது ஒருவித தாழ்வு மனப்பான்மை தான். வேறென்ன சொல்ல?
ஒத்துக்கொள்ள முடியவில்லை கவிதா.. பொருளாதார முன்னேற்றம் மட்டும் ஒரு நாட்டுக்குப் போதுமா? அடுத்தவருடன் முகம் பார்த்துப் பேசும் மனிதாபிமானம் இப்போதே கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.. அவரவர் வேலையை மட்டும் செய்து விட்டுப் போவேன், ஒரு வார்த்தை கூட வேற விஷயங்கள் பேச மாட்டேன் என்றால் இந்தியாவிலும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் அதிகமாகி விடும்..
குழந்தைகள் குழந்தைத்தனமாக இருப்பது ஒரு தவறா!! தெய்வமே!!!
அட நீங்க வேற சமீபத்திய நாளிதஷ்களை படிச்சு பாருங்க "வெளிநாடு போற அமெரிக்கர்கள் ஒழுங்கா பழகத்தெரியாம நாட்டை கேவலப்படுத்தறாங்க, வெளி நாட்டுக்கு அனுப்பறதுக்கு முன்னாடி கம்பெனிகள் பயிற்சி குடுங்க"ன்னு சொல்லி சில Guidelines ம் சொல்லியிருக்கு அமெரிக்க அரசு (நம்ம ஊரைப்பத்தியே பெருமை பேசக்கூடாது என்பது மாதிரியாக நீள்கிறது).எதையுமே ப்ளஸ்ஸாகவும் மைனஸ்ஸாகவும் மாற்றி சொல்லும் உலகம் (கிரிக்கெட்டில் சரியா ஆடாட்டாலும் ஒரு வீரரை ரொம்ப நாள் அணியில் வெச்சிருக்கிறத மைனஸ்ஸா சொன்ன கொஞ்ச நாள்ல அதையே ப்ளஸ்ஸாவும் சொன்னாங்க அது மாதிரி ) கவலைப்படாதீங்க
மாயவரத்தான் மற்றும் பொன்ஸ் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன்.
//அமெரிக்கர்களிடம் பழகும், பேசும், சாப்பிடும் (கரண்டி, முள் கரண்டியில் உதவியுடன் உணவருந்துதல்) முறையை கற்று கொடுக்கின்றன.. சிலர் இதையெல்லாம் சரிவர செய்ய தெரியாமல் அந்நிய நாட்டில் எத்தனை அவமானப்படுகிறார்கள்?. // இந்தியா வரும் அமெரிக்கர்கள் இந்திய முறைப்படி சாப்பிடத்தெரியாததை அவமானமாக நினைக்கிறார்களா என்ன?!
நான் பார்த்த வரையில் நமது பெரிய பலவீனம், வாக்குச் சுத்தமின்மை. ஆங்கில/அமெரிக்கர் ஒருவரிடம் ஒரு பணியைச் சொல்லி, அவர் நான் இதைச் செய்து விடுகிறேன் என்று கூறி விட்டால், அதன் பிறகு கேள்வியே இல்லை. வேலை முடிந்திருக்கும். நாம் எதற்கெடுத்தாலும் தலையை ஆட்டி விட்டு, பின்னர் சாக்குப் போக்குச் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறோம்.
தன் மீதே சுய மதிப்பு இருந்தால் தான் சொன்னதைச் செய்யும் உறுதி இருக்கும். சட்டங்களைப் பின்பற்றும் ஒழுங்கு இருக்கும். நமக்கு அந்த சுய மதிப்பு குறைவு என்று நினைக்கிறேன்.
இப்போது, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாழ்ந்த்து பணி புரிந்து திரும்பியுள்ளவர்களின் வாக்கு/ பணிச் சுத்தம் மிக உயர்வாக இருப்பதைப் பார்க்கலாம்.
உங்களுடைய பதிவுகளைப் படித்து நல்லா எழுதுறாங்களே என்று ரசித்திருக்கிறேன் ஆனால் இந்தப் பதிவு எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
உங்களுடைய மொத்த பதிவும் மேல் நாட்டவர்கள் எதோ மிக நாகரீகம் தெரிந்தவர்கள் என்பது போலவும் நாம் நாகரீகம் அறியாதவர்கள் என்பது போலவும் எழுதப்பட்டுள்ளது கண்டு வேதனையாக இருக்கிறது.
போர்க் வைத்து சாப்பிட தெரியவில்லை என்றால் நாம் என்ன அவர்களைவிட குறைந்து போய் விடுவோமா? நம் கலாச்சாரத்தில் போர்க் வைத்து சாப்பிடுவது இல்லை, அதனை புரிந்து கொள்ளாவிட்டால் அது அவர்கள் பிரச்சனை.
குழந்தைகள் விளையாடுவதை தவறு என்கிறீர்களா?
வீண் பேச்சு பேசி நேரத்தை வீணடிகிறோமா அல்லது அடுத்த வீட்டில் உயிரே போகிறது என்றாலும் கவலை கொள்ளாமல் இருக்கிறோமா?
மேல் நாட்டு மோகத்தில் எழுதப்பட்ட பிதற்றல்களாகவே இந்த கருத்துக்கள் எனக்கு தெரிகின்றன இப்படி பேசினால் முன்னேறவே முடியாது என்று நீங்கள் நினைத்தால் சுதந்திரம் அடைந்து 59 ஆண்டுகள் கழித்து அமெரிக்கா எப்படி இருந்தது என்பதை பார்த்த பின் சொல்லுங்கள்.
நான் கூறியுள்ள கருத்துக்கள் உங்கள் கருத்துகளைக்கு பற்றிய என்னுடைய எண்ணம். சிறிது கடுமையாக இருந்தால் அது உங்கள் கருத்துக்களுக்கு எதிரானவையே உங்களை தாக்கும் எண்ணம் இல்லை
அமெரிக்கர்கள் மற்றவரை பற்றி பேசுவதில்லை என்று சொன்னீர்கள். பிறகு ஏதோ எல்லா இந்தியர்களை பார்த்தும் Hey u indian.... என்று சொல்வதாக சொல்கிறீர்கள். இந்தியர்களுக்கு hey u **** என்று வேற்று நாட்டாரை இழிவாக கூறும் வழக்கம் இல்லை என்று சொல்லலாம். நீங்கள் என்ன தான் செய்தாலும் அமெரிக்கன் மற்ற நாட்டினரை துரும்பு போல் தான் பாற்க்கிறான்.
y u peoples think like if a americam did something its right. we are wrong(Like eating habit). Every country has their own culture. i dont think japaneese or chineese etc are think like this. U guys dont have confidence and blindly follow the west. If a american look at u or not, u look at the surrownding and feel "hey if i do this what he will think about me and about my country" We are not machines OK. live life yar.
Let the children to play(even fly). dont try to install a software in their brain
கவிதாவுக்கு தேவை இந்தியா / இந்தியர் மீது நம்பிக்கை....
இந்தியா நிச்சயம் சாதிக்கும் கவிதா..எழுதி வச்சிக்கோங்க...
அதான் நானே எழுதிட்டனே ஹா ஹா..
தோழி கவிதா, என்ன இப்படியெல்லாம் எழுதுகிட்டு. நான் பொன்ஸ்வுடன் ஒத்துப் போகிறேன்.
முதலில் நமக்கு என்னவேண்டுமென்பதில் நாம் தெளிவா இருக்கணும். நமக்குன்னு ஒரு தனித்தன்மை இருக்கிறது என்பதனை மறந்திடக்கூடாது.
பணம் படைத்தவர் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வரையறுத்து விட்டால், நாம அதனை அப்படியே உல்டா அடிக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. மக்களே அவர் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப, தனது வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு மாற்றங்களை விரும்பி அவரவர் தேவைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்வார்கள்.
நாம யாருங்க அடுத்தவன் பழக்க வழக்கங்களில் தேவையில்லாமல், சென்று கற்றுக் கொடுப்பதற்கு. ஈராக் சென்று கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறொம், என்ன நடக்கிறது?
குழந்தைகளை திருமணம் போன்ற வைபவகங்களுக்கு அனுமதி இல்லை, ஒரே கசமுசவென்று இருக்கிறது என்று பத்திரிகையிலும் அடித்து குழந்தைகளை கூட்டிவரவேண்டாம் என்று கூறிவிடுகிறார்கள், அப்படியே அழைத்துச் சென்றாலும், பேபி சிட்டரிடம் ஒப்படைத்து விட வேண்டும். இதெல்லாம் டூ மச் இல்லை. என்னங்க வாழ்க்கை, ஒரு 'டைவர்சிடி' இல்லாத வாழ்க்கை.
மண்டைகாஞ்சு போயிடும் அஞ்சு விரலும் ஒரே நீளமா இருந்தா. இங்கே போயி படிங்களேன். ப்ளீஸ்.
http://orani-sittingby.blogspot.com/2006/04/why-we-should-be-different.html
பொதுவாக இந்தியர்களை மேல் நாட்டவரிடமிருந்து வேறுபடுத்துவது சில காரணங்கள்தான் . நமக்கு எப்போதுமே நல்ல எண்ணங்கள் அதிகம். நம்மைவிட அடுத்தவர்களை பற்றியே சிந்திக்கும் போக்கினால் மேற்கண்ட சில சங்கடங்கள்.அதுவும் வேலை நேரத்தில் விதமான சிந்தனைகள். பக்கத்து சீட்டு பெண்ணுக்கும் பஸ்ல பார்த்த அந்த ஆசாமிக்கும் என்ன உறவு.இந்த மேட்சில பாகிஸ்தான இந்தியா விண் பண்ணிடுமா இந்த அர்த்தமுள்ள கச்சேரியெல்லாம் இங்க நடக்கும் போது அவசியபட்ட வேலை அங்க இங்க தொங்கி நிக்கதான் செய்யும். வளரும் சமுதாயம் நாமாவது மாற்றுவோமா இந்த தலையெழுத்தை!
கவிதா,
நல்ல கட்டுரை..நல்ல கருத்து..வாழ்த்துக்கள்
பொன்ஸ் நன்றி, நான் சொல்ல வந்தது, நம்முடைய சிறு சிறு தவறுகளை சரி செய்து கொண்டு, அடுத்த நாட்டவர் நம்மையும், நம் வேலை திறமையையும் குறைவாக எடை போடாது இருக்க வேண்டும் என்பதுதான்.
குழந்தைகள் நம் வீட்டில், நம்மை சுற்றியுள்ளவர்கள் இடத்தில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் பொது இடம் என்ற பட்சத்தில் நிச்சயமாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாமும், குழந்தைகளும் நிச்சயம் பழக வேண்டும். அடுத்தவர்களுக்கு தொந்தரவு தரக்கூடிய விஷயங்களை நாம் செய்யாமல் இருப்பது தான் சிறந்தது.
நன்றி கோகுல் குமார், நல்ல பழக்கவழக்கங்கள் யாரிடம் இருந்தாலும் அதை கற்றுக்கொள்வதில் தவறொன்றும் இல்லையே?!!. (அவர்களிடம் உள்ளதை நாமும், நம்மிடம் உள்ள நல்லதை அவர்களும்)
நன்றி அருள், சாப்பிடும் பழக்கத்திற்காக நான் அவமானபடுகிறேன் என்று சொல்லவில்லையே..இவையெல்லாம் நாம் கற்று கொள்ளவதினால் தவறொன்றும் இல்லை என்கிறேன்.
//தேவையில்லாமல் அடுத்தவர்களை பற்றிய கதை பேசுதல்,(gossip) திட்டமிடாது வேலைகளை செய்தல், தனக்கென ஒதுக்கப்பட்ட வேலையை கவனிக்காமல் அடுத்தவர்களின் வேலையில் மூக்கை நுழைத்தல், ஆடை & காலணிகளில் போதிய கவனம் செலுத்தாமை, தெரியாத விஷயத்தை தெரியும் என சொல்லிவிட்டு, பிறகு விழிப்பது, நேரத்தை சரியான முறையில் கடைபிடிக்காமை, ஒழுங்கின்மை போன்றவைகளை சொல்லலாம்.// நம்மிடம் இருக்கும் இந்த குறைகளை தான் சொல்கிறேன், மற்றும் சிவகுமார்ஜி சொன்னதை போன்றி நம்மிடம், வாக்கு பணிசுத்தம் இல்லை..அதை சரிசெய்து கொள்ளலாமே..?!
நன்றி சிவகுமார்ஜி, உங்கள் கருத்தை தான் அவர்களின் பேச்சில் அதிகம் உணர்கிறேன்.
//உங்களுடைய பதிவுகளைப் படித்து நல்லா எழுதுறாங்களே என்று ரசித்திருக்கிறேன் ஆனால் இந்தப் பதிவு எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது.//
நன்றி குமரன், நீங்கள் என்னுடைய மற்ற பதிப்புகளயிம் படித்திருக்கிறீர்கள் என்பது சந்தோஷத்தை தருகிறது..அதேபோல் எழுத முயற்சிக்கிறேன். ஏமாற்றம் அடைய வேண்டாம்.
//உங்களுடைய மொத்த பதிவும் மேல் நாட்டவர்கள் எதோ மிக நாகரீகம் தெரிந்தவர்கள் என்பது போலவும் நாம் நாகரீகம் அறியாதவர்கள் என்பது போலவும் எழுதப்பட்டுள்ளது கண்டு வேதனையாக இருக்கிறது.//
நிச்சயம் இல்லை, நாகரீகத்தை பற்றிய எண்ணமே துளியும் இல்லாமல் எழுதியது. சொல்ல வந்த அத்தனையுமே நம்மால் எதுவும் செய்ய முடியும், கரண்டியில் சாப்பிடுவதால் நாம் நம் கலாசாரத்தை விட்டுவிடுகிறோம் என்று பொருள் இல்லை. அப்படி பார்த்தால் நம் நாட்டை விட்டே நாம் செல்ல கூடாது அல்லவா?!. நாம் நம்மை எந்த விதத்திலும் விட்டு கொடுக்கக்கூடாது. அதற்காக அவர்களை போன்று நாம் மாறிவிடவும் முடியாது, நாம் நாமாக நம்மாலூ முடியும் என புரியவைக்கவேண்டும். என்பதே என் கருத்து
//குழந்தைகள் விளையாடுவதை தவறு என்கிறீர்களா?//
பொன்ஸ்’ சின் மறுமொழியை பாருங்கள் please..
//வீண் பேச்சு பேசி நேரத்தை வீணடிகிறோமா அல்லது அடுத்த வீட்டில் உயிரே போகிறது என்றாலும் கவலை கொள்ளாமல் இருக்கிறோமா?//
நாம் நிச்சயம் அடுத்தவர்கள் மேல் அக்கறை உடையவர்கள் என்றால், எத்தனை வீடுகளில் முழு வீட்டையே காலி செய்து கொண்டு போனால் பரவாயில்லை என்று இருக்கும் மக்கள் எப்படி இருக்கிறார்கள். Positive, negative எல்லா இடங்களிலும் உல்ளது.
//மேல் நாட்டு மோகத்தில் எழுதப்பட்ட பிதற்றல்களாகவே இந்த கருத்துக்கள் எனக்கு தெரிகின்றன//
நான் இதனை வன்மையாக கண்டிக்கிறேன் குமரன், என்னுடைய மற்ற பதிப்புகளை படித்துப்பாருங்கள், நம் கலாசாரத்தையும், நம் பழக்கவழக்கங்களையும் மிகவும் நம்பும், நடைமுறையில் அப்படியுமே இருக்கவேண்டும் என்ற கருத்தை கொண்டவள். அந்நிய நாட்டவரிடம் நம்மை விட்டுகொடுக்க முடியாத என் பதிப்பு பிதற்றலாகிவிட்டதோ?.. பிதற்றலாகவே இருக்கட்டுமே..தவறில்லை.
//இப்படி பேசினால் முன்னேறவே முடியாது என்று நீங்கள் நினைத்தால் சுதந்திரம் அடைந்து 59 ஆண்டுகள் கழித்து அமெரிக்கா எப்படி இருந்தது என்பதை பார்த்த பின் சொல்லுங்கள்.//
என்னுடைய பதிப்பில் எங்கேயுமே
நாம் முன்னேற முடியாது என்று நான் எழுதவில்லை. எனக்கே புதிதான இந்த மேல்நாட்டு கலாசாரத்தை கொண்டு இயங்கும் ஒரு அலுவலகத்தில் முன்னேற முடியாது என்று நான் நினைக்கவில்லை, அவர்களை விட என்னால் நன்றாக வேலை செய்யமுடியும் என நம்பவைத்துள்ளேன். என்னை போன்றே மற்றவர்களும் அவர்களை விடவும் நாம் புத்திசாலிகள் என நிரூபிக்கவேண்டும் என எண்னுகிறேன்.
//அமெரிக்கர்கள் மற்றவரை பற்றி பேசுவதில்லை என்று சொன்னீர்கள். பிறகு ஏதோ எல்லா இந்தியர்களை பார்த்தும் Hey u indian.... என்று சொல்வதாக சொல்கிறீர்கள்.//
நன்றி vambariyaan , Hey u Indian என்று பேசுவது, அவர்களின் வழக்கம்
//நீங்கள் என்ன தான் செய்தாலும் அமெரிக்கன் மற்ற நாட்டினரை துரும்பு போல் தான் பாற்க்கிறான்.//
நான் ஆமோதிக்கிறேன். சரியே..
//y u peoples think like if a americam did something its right. we are wrong(Like eating habit). Every country has their own culture. i dont think japaneese or chineese etc are think like this. U guys dont have confidence and blindly follow the west. If a american look at u or not, u look at the surrownding and feel "hey if i do this what he will think about me and about my country" We are not machines OK. live life yar.//
We could adopt some of the good habits of other country people, it doesn’t wrong. When you suppose to work under them, here or outside of India, they are paying, Adopting good habits will not cause any probs to us. If we really don’t want to follow anything, we should not work under them right !!
Let the children to play(even fly). dont try to install a software in their brain
Please check Poons comment, I replied there...thanks..
//கவிதாவுக்கு தேவை இந்தியா / இந்தியர் மீது நம்பிக்கை....//
நிச்சயம் இருக்கிறது. நன்றி, செந்தழல் ரவி.
நன்றி, தெகாஜி, நீங்கள் சொல்லிய url பார்க்கிறேன். தயவுசெய்து பொன்ஸ் மற்றும் மற்றவர்களுக்கு எழுதிய பதில்களை படியுங்கள்.
//அவசியபட்ட வேலை அங்க இங்க தொங்கி நிக்கதான் செய்யும். வளரும் சமுதாயம் நாமாவது மாற்றுவோமா இந்த தலையெழுத்தை//
நன்றி செயகுமார், தொங்கி நிற்காத நம் புத்தி, நிச்சயம் நன்றாக வேலை செய்யும் என்பதே என் ஆழமான நம்பிக்கை
நன்றி முத்து.
கவிதா, அமெரிக்காவில் செட்டிலாயிகிட்டீங்களா என்ன?
நீங்கள் குறிப்பிடும் விசயங்கள் மற்ற மாநிலவத்தாருக்கு பொருந்துமோ.. இல்லியோ.. என் அளவில் தமிழனுக்குப் பொருந்தலாம்.
ஒரு முறை நண்பர் ஒருவரின் கூட அவரது தாயகமான கேரளம் சென்று இருந்தேன், அப்போது அங்கிருந்த பெருசுகள் என் வாயைப் பார்த்து சொன்னது, "பாண்டிமார்களின்(தமிழர்கள்) வாயை அடக்கவே முடியாது. நாய் வாயில் குச்சியை விட்டது போல பேசிக்கொண்டே இருப்பார்கள்" என்றார்.
அதே போல எழுதும் ஆர்வமிருந்தும் அதை சரியாகச்செய்யாமல்.... அவை பற்றி பேசி தீர்த்து விடுவது என் கோளாறில் ஒன்று.
ஒரு முறை திரைப்பட விழாவொன்றில் ஞாநி-யுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னார். அவருக்கு பெரியவர்.அசோகமித்திரன் சொன்னதாம், "பேசுவதைக் குறைத்துக்கொண்டால்.. நிறைய எழுத முடியும். எது குறித்தும் எழுதுவதற்கு மனதில் ஒரு கணம் வேண்டும். அதை வாய் வழியாக வெளியேற்றி விட்டால் மனதின் பாரம் குறைந்து விடும்.அதனால் எழுத முடியாம்ல் போக வாய்ப்பு நிறைய உள்ளது" அதனால் பேச்சைக் குறை! என்றார்.
என்னால் தான் முடியவில்லை.
இப்போதெல்லாம் தூக்கத்தில் கூட பேசுவதாகச் சொல்கிறான் அறை நண்பன்.
:(
நாகு நன்றி, என்ன கிண்டலா?!!
பாலா நன்றி, சரிதான் நீங்க கொஞ்சம், இல்லை இல்லை நிறையவே பேசுகிறீர்கள், ஆனால், உங்கள் வேலையும் (marketing) அப்படியுள்ளதால் பேசுங்கள்..! ஆனால் அதை உங்கள் வேலைக்கு மட்டுமே பயன்படுமாறு பார்த்து கொண்டால் நாங்கல் எல்லாம் பிழைப்போம்.
Kavita,
I got this post mailed by a friend of mine. I work in UK for more than 10 years now and both me and my husband are in a good position(!) in an IT company.
Do you mean to say that westerners do not gossip? They do equally (if not more) like us. And dress / footwear? They are no better (Are we worse by the way?) than us. Everyone get dressed up formally for meetings in client places, if not, the dress code is casual. And about the children behaving in the flight? Do you expect the children sit like dolls for 10 hours? Ofcourse, you can let them sit for long if they are so hooked into GameBoys/Watching Tele, reading books. Please treat the children as children.
You didn’t mention your name, anyway thanks for your time Miss.Anony. We are talking much than others, we should agree this. Even the person who comments about us here used to talk more. If he doesn’t talk more I may not post this comment right. When he started talking about us only I came to know the things. Instead arguing with him that we Indians are not like this, I changed some of my attitudes, work style which stopped him talking against Indians. It doesn’t mean that I changed like them. I changed some of my qualities it is not harm to me, I learned things better than before that’s all.
I don’t understand why you guys keep on telling that others also talking, fighting, dressing, playing etc . Do you really mean to say that we are also developed like them? Earning like them, enjoying life like them? Of course earning alone is not life, but it is essential. Otherwise you may not be in UK for 10 years when you are very comfortable in India. Day today here people are starving for food and struggling for life. But still we are not changing, we don’t have basic disciplines, don’t have work ethics, not fulfilling the commitments, don’t have social awareness, etc.,
I gave some simple examples which you all took and replied, but I really worried why no one is not read this // திட்டமிடாது வேலைகளை செய்தல், தனக்கென ஒதுக்கப்பட்ட வேலையை கவனிக்காமல் அடுத்தவர்களின் வேலையில் மூக்கை நுழைத்தல், தெரியாத விஷயத்தை தெரியும் என சொல்லிவிட்டு, பிறகு விழிப்பது, நேரத்தை சரியான முறையில் கடைபிடிக்காமை, ஒழுங்கின்மை போன்றவைகளை சொல்லலாம்.//
Already in my reply to others I conveyed that no one is perfect and everyone has negative and positive qualities. Better if we adopt and talk about only positives which will take us to better position.
Anna/Akka/Amma/Ayya/Thami/Thankatchi,
Ayya sami....
Nan America-vile irukken. Indians shople parthale alergy. Nerukku ner parthal udane... Hey how are you...when do you came here... I like to talk' Then if you give ur phone, that’s it. They will somehow try to pull into AMWAY (aka internet business/internet Marketing). I am here about 10 years. Somehow my face looks like '???' so always they catch me. So I am showing my face like I hate Indians unless if someone introduce me to their friends. By the way I have lot and lot friends but I do not want to smile to any Indians (Specially MS athma's) in the shops.
//இந்தியா வரும் அமெரிக்கர்கள் இந்திய முறைப்படி சாப்பிடத்தெரியாததை அவமானமாக நினைக்கிறார்களா என்ன?!//
சபாஷ் அருள் குமார்! சரியான கேள்வி!
இன்னும் எத்தனையோ வெளிநாட்டுப் பெண்கள்/ஆண்கள் இந்தியக் கலாச்சாரத்தை விரும்பி, இந்தியக் கலாச்சாரப்படி திருமணமெல்லாம் செய்து கொண்ட செய்திகள் அம்மணியின் பார்வையில் பட்டதே இல்லையா என்ன?
/////சிவகுமார்:
நான் பார்த்த வரையில் நமது பெரிய பலவீனம், வாக்குச் சுத்தமின்மை. ஆங்கில/அமெரிக்கர் ஒருவரிடம் ஒரு பணியைச் சொல்லி, அவர் நான் இதைச் செய்து விடுகிறேன் என்று கூறி விட்டால், அதன் பிறகு கேள்வியே இல்லை. வேலை முடிந்திருக்கும். நாம் எதற்கெடுத்தாலும் தலையை ஆட்டி விட்டு, பின்னர் சாக்குப் போக்குச் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறோம்///////
வாக்குச் சுத்தமின்மை, வாக்குச் சுத்தமின்மை, வாக்குச் சுத்தமின்மை வாக்குச் சுத்தமின்மை, வாக்குச் சுத்தமின்மை...........
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான இந்தியர்கள் இதனை உணர்தே இல்லை..
நான் இந்தியா வந்திருந்ததபோது இதனால் பட்ட பாடு அப்பப்பா..
நான் அதனைப் பின்பற்றினால் எனக்கு கிடைத்த பட்டம் " பந்தா பார்ட்டி"
//நான் அதனைப் பின்பற்றினால் எனக்கு கிடைத்த பட்டம் " பந்தா பார்ட்டி"//
பின்பற்றியதால் அந்த பட்டம் கிடைத்திருக்காது! அமெரிக்கர்களைப் போலவே அளந்தும் இருப்பீர்கள். அதனால்தான் அந்தப் பட்டம் கிடைத்திருக்கும்.
(ச்சும்மா.. லுலுன்காட்டி.. கோச்சுகாதீங்க)
:-)
கவிதா,
நல்ல பதிவு. உலகத்தில் நூறு சதவீதம் சரியானது என்று எதுவுமே இல்லை. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுவதே வாழ்க்கை என எண்ணுகிறேன். நாம் கற்கவேண்டியதும் நம்மிடமிருந்து கற்க வேண்டியதும் அவசியமே.
திரும்பத்திரும்ப பார்க்க கூடிய சில விஷயங்களை வைத்து சில சமயம் generalize செய்து விட எத்தனிக்கிறோம். நானும் சில சமயங்களில் தனிமனிதனின் நடவடிக்கையைக் கூட தவறாக அவ்வாறு generalize செய்ததுண்டு.
பொதுவாக பிறந்த இடம், கலாச்சாரம், மொழி, நிறம் இன்னபிற விஷயங்களைப் பொறுத்து குணங்களைக் கணிப்பது அவ்வளவு துல்லியமாக இருக்கும் என்று தோன்றவில்லை.
உங்கள் ஆதங்கம் கற்றல் நோக்கில் மிக ஆக்கபூர்வமானதே. தொடருங்கள்.
வாழ்த்துக்கள்
சுகா
//உங்கள் ஆதங்கம் கற்றல் நோக்கில் மிக ஆக்கபூர்வமானதே. தொடருங்கள்.//
நன்றி சுகா..
//நான் இந்தியா வந்திருந்ததபோது இதனால் பட்ட பாடு அப்பப்பா..
நான் அதனைப் பின்பற்றினால் எனக்கு கிடைத்த பட்டம் " பந்தா பார்ட்டி" //
//இந்தியக் கலாச்சாரப்படி திருமணமெல்லாம் செய்து கொண்ட செய்திகள் அம்மணியின் பார்வையில் பட்டதே இல்லையா என்ன?//
நன்றி சிபி, நம் கலாச்சாரத்தை அவர்கள் பழகக்கூடாது என்று எங்காவது நான் சொல்லியிருக்கிறேனா?
தரன், நன்றி, சொன்னால் சொல்லிவிட்டு போகட்டும், சிபியை போன்று சும்மா விளையாட்டுக்கு சொல்கிறார்கள் என எடுத்துக்கொள்ளுங்கள்.
//சபாஷ் அருள் குமார்! சரியான கேள்வி! //
சிபி, அருள் கேள்வியை மட்டுமே படித்தீர்களா?.. என்னுடைய பதிலையும் படித்தால் நானும் உங்களை போல் சந்தோஷப்படுவேன்..
//I hate Indians unless if someone introduce me to their friends//
Dear Anony, please dont tell like this, try to change them or ignore them instead telling like this.ok.. thanks for your comments.
///நாமக்கல் சிபி said...
//நான் அதனைப் பின்பற்றினால் எனக்கு கிடைத்த பட்டம் " பந்தா பார்ட்டி"//
பின்பற்றியதால் அந்த பட்டம் கிடைத்திருக்காது! அமெரிக்கர்களைப் போலவே அளந்தும் இருப்பீர்கள். அதனால்தான் அந்தப் பட்டம் கிடைத்திருக்கும்.
(ச்சும்மா.. லுலுன்காட்டி.. கோச்சுகாதீங்க)///
அட நீங்க வேற..correct a பேசுங்கப்பான்னுதாங்க சொன்னேன் அதுக்கு அவங்க, தம்பி ரொம்ப build up கொடுக்காதே..இது india என்கிறார்கள் என்னத்த சொல்ல...
என் வீட்டில் 15 வயதுக்கு உட்பட்டவர்களை இந்திய கலாச்சாரத்தில் இருந்து கூடுமானவரை மீட்டெடுதுவிட்டேன், அந்த அளவில் எனக்கு மகிழ்ச்சிய்யே..
நான் கோச்சுக்கல்லாம் மாட்டேன்...என் பதிவுகள்ள இல்லாத நக்கலா...so dont worry sibi
//என் வீட்டில் 15 வயதுக்கு உட்பட்டவர்களை இந்திய கலாச்சாரத்தில் இருந்து கூடுமானவரை மீட்டெடுதுவிட்டேன், அந்த அளவில் எனக்கு மகிழ்ச்சிய்யே//
இந்திய கலாச்சாரம் என்றுமே தவறில்லை தரண், அதை சரியாக நாம் பயன்படுத்துவதும், புரிந்து கொள்வதும் இல்லை..
என்ன கவிதா,
கலக்கறீங்க, சும்மா சும்மா நம்ம நாட்டுக்காரங்களை மட்டம் தட்டி எழுதாட்டி நமக்கு தூக்கமே வராதே.
யாருங்க சொன்னாங்க அவங்க வேலை மட்டும் தான் செய்றாங்க அப்படின்னு. இங்க வந்து கேளுங்க வேலை செய்வதில் யாரு அதிக வேகம் , விவேகம் அப்படின்னு.என்ன அவங்க கிட்ட இருக்கிற நல்ல விஷயம் அப்படின்னா விடுமுறைகளை சரியாக உபயோகப்படுத்துறாங்க நாம அப்ப கூட வேலை செய்கிறோம். வெளிநாட்டு வாழ் தமிழர்களை வச்சி எடை போடாதிங்க சும்மாவே அவங்களுக்கு இந்தியர்களை மட்டம் தட்டி பேசுவது ஒரு fashion மாதிரி. அவங்களை இங்க மனுசனாக்கூட மதிக்க மாட்டானுங்க ஏதோ பெரிய புஷ் ரேஞ்சிக்கு அங்க வரும் பொழுது சீன் போடுவாங்க.
Gossipingல இவங்களை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. அதும் இங்க இருக்கிற பிரபலங்களை பற்றியது என்றால் சொல்லவே வேண்டாம் இதில் கிடைக்கும் புகழ் மற்றும் பணத்துக்காக நிறைய நடிகைகள்/நடிகர்கள் தங்களின் விவாகரத்தை பத்திரிக்கைகளுக்கு அனுப்புவாங்களாம். இப்படி போகுது கதை.
ஆடையில் என்னங்க இருக்கு பேத்தலான காரணம் இது. முள் கரண்டியில் சாப்பிடாவிட்டால் என்னங்க இருக்கு அவமானம். நான் பார்த்த வரையில் நிறைய அமெரிக்கர்கள் கைகளில் சாப்பிடுகிறார்கள் இது எல்லாம் நம்ம நினைப்புத்தான். எனக்குத்தெரிந்த வரையில் வேலையில் ஒழுங்காக இருந்தால் இதைப்பற்றி எல்லாம் அமெரிக்கர்கள் கவலைப்படுவதாக தெரியவில்லை.
அதும் இல்லாம இங்க யாரும் "Hey Indian" அப்படின்னு யாரும் கூப்பிடுவது எல்லாம் இல்லை. நீங்க கூறும் specifications எல்லாம் வைத்து பார்க்கும் பொழுது யாரோ ஒரு அரை குறை NRI இடம் நீங்க பேசி இருப்பதாக தெரிகிறது. இங்க நிறைய அமெரிக்கர்களிடம் நம்ம நாடைப்பற்றி நல்ல opinion இருக்கு ஆனால் இந்த அரை குறை ஆட்கள் தான் சும்மா எங்க போனாலும் நம்ம நாட்டைப்பற்றி எள்ளி நகையாடுவது தாழ்த்திப்பேசுவது அது எல்லாம் நடக்கும்.
//சும்மா சும்மா நம்ம நாட்டுக்காரங்களை மட்டம் தட்டி எழுதாட்டி நமக்கு தூக்கமேவராதே. யாருங்க சொன்னாங்க அவங்க வேலை மட்டும் தான் செய்றாங்க அப்படின்னு. இங்க வந்து கேளுங்க வேலை செய்வதில் யாரு அதிக வேகம் , விவேகம் அப்படின்னு//
வாங்க சந்தோஷ், அரைதூக்கதுல ஒன்னும் பாதியுமா படிச்சிட்டு நீங்க எழுதியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்...நம்மிடம் வேகமும், விவேகமும் நிறைய இருக்கு அதை சரியாக நேர்மையான முறையில் பயன்படுத்திகனூம்னு சொல்றேன்..
//வெளிநாட்டு வாழ் தமிழர்களை வச்சி எடை போடாதிங்க சும்மாவே அவங்களுக்கு இந்தியர்களை மட்டம் தட்டி பேசுவது ஒரு fashion மாதிரி. அவங்களை இங்க மனுசனாக்கூட மதிக்க மாட்டானுங்க ஏதோ பெரிய புஷ் ரேஞ்சிக்கு அங்க வரும் பொழுது சீன் போடுவாங்க//
தயவுசெய்து, தரண், மற்றும் அநானி கூறியுள்ள கருத்துக்களை பாருங்க.. நாம யாரையும் குறைவா நினைக்க வேண்டாமே சந்தோஷ்.. ஏன் இந்தியாவுல யாருமே சீன் போடறது இல்லையா?..
.
//Gossipingல இவங்களை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. அதும் இங்க இருக்கிற பிரபலங்களை பற்றியது என்றால் சொல்லவே வேண்டாம் இதில் கிடைக்கும் புகழ் மற்றும் பணத்துக்காக நிறைய நடிகைகள்/நடிகர்கள் தங்களின் விவாகரத்தை பத்திரிக்கைகளுக்கு அனுப்புவாங்களாம். இப்படி போகுது கதை.//
மற்றவர்களுக்கு நான் எழுதிய பதிலை படிக்காமலேயே நீங்கள் கருத்து தெரிவித்துள்ளது வருத்தமாக உள்ளது...இதுவும் கூட நம்முடைய மைனஸ் பாயின்ட் தான்..சரியாக எதையும் கவனிக்காது, யோசிக்காது, திட்டமிடாது செய்வது..
//ஆடையில் என்னங்க இருக்கு பேத்தலான காரணம் இது//
அலுவலகங்களில் Dress code இருந்தால் நாம் அப்படி தான் போக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம், அது இல்லாத பட்சத்தில் சரியான முறையில் தான் செல்ல வேண்டும், கந்தையானாலும் கசக்கி கட்டு, ஆள் பாதி ஆடை பாதி போன்றவை நம் நாட்டு பழமொழிகள் தானே?. ஆடைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று எழுதியதில் என்ன தவறு என்று எனக்கு புரியவில்லை. நம்மவங்க கிட்ட இல்லாமல் இல்லை, இருக்கும் ஆனால் அதை சரியாக செய்ய மாட்டார்கள்.
//முள் கரண்டியில் சாப்பிடாவிட்டால் என்னங்க இருக்கு அவமானம். நான் பார்த்த வரையில் நிறைய அமெரிக்கர்கள் கைகளில் சாப்பிடுகிறார்கள் //
ஐயா, சந்தோஷ், அருளுக்கு சொல்லிய பதிலே தான் உங்களுக்கும்..நீங்கள் தயவு செய்து, மற்றவர்களுக்கு எழுதிய பதிலை படித்து பாருங்கள்..
//அதும் இல்லாம இங்க யாரும் "Hey Indian" அப்படின்னு யாரும் கூப்பிடுவது எல்லாம் இல்லை.//
நீங்க சரியாக புரிந்து கொள்ளவில்லை.. அவர்கள் “Hey” என்ற வார்த்தையை கொண்டே பேசுவதை சொல்கிறேன்.. “Hai , Hey, ‘போன்ற வார்த்தைகள் அவர்கள் வழக்கத்தில் உள்ளது..
//நீங்க கூறும் specifications எல்லாம் வைத்து பார்க்கும் பொழுது யாரோ ஒரு அரை குறை NRI இடம் நீங்க பேசி இருப்பதாக தெரிகிறது. இந்த அரை குறை ஆட்கள் தான் சும்மா எங்க போனாலும் நம்ம நாட்டைப்பற்றி எள்ளி நகையாடுவது தாழ்த்திப்பேசுவது அது எல்லாம் நடக்கும்.//
சந்தோஷ், யாரையுமே நாம் குறைத்து எடை போட வேண்டாமே.. அவரவருடைய பார்வையில், அவரவரின் கருத்துக்கள் சரியே.. நம்மிடம் (இந்தியர்களிடம்) இருக்கும் குறையைதான் அவர் சுட்டி காட்டுகிறார். அதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதில் நீங்கள் கவனிக்க வேண்டியது , சிவகுமார்ஜி சொன்னதை போன்று, வாக்கு சுத்தம், பணி சுத்தம் நம்மிடம் இல்லை. உடனே யார் சொன்னது,, அப்படி ஒன்றும் இல்லைனு வந்துடக்கூடாது. நம்மிடம் நிச்சயம் இது இரண்டும் இல்லைதான். நாம் என்று சொல்வது எல்லாம் பொதுவானவை..அப்படி நடந்து கொள்பவர்களுக்கு மட்டுமே அது பொருந்தும். இந்தியர்கள் எனும் போது யாரோ சிலர் செய்யும் இப்படி பட்ட தவறுகள் நமக்கு அவமானத்தை தேடித்தான் தருகின்றன. New delhi யில், call centre ல் பணிபுரியும் இந்தியர், வேற்று நாட்டுவரின் முகவரி, மற்றும் அவர்களின் personal details அத்தனையும் விற்றுவிட்டார் என்ற செய்தியை படித்திருப்பீர்கள்..இது போன்ற நிகழ்வுகள் தான் மற்ற நாட்டவர் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை குறைக்கிறது. நம்மிடம் எது சரியில்லையோ அதை சரிசெய்து கொள்வதில் எந்த தவரும் இல்லை.
Post a Comment