முழுக்க மொட்டை அடிக்க முடியாது
முற்றிலும் உன்னை துறந்திடவும் முடியாது
அழுக்கு ஆயிரம் இருப்பினும், அடுத்தவர் அறியாது
அழகாய் சீவி அடுக்குமல்லி சூடிடுவாள் !

அங்கும் இங்கும் ஆடி ஆர்ப்பாட்டம் செய்யும்
தாங்காத பாரமாய் தலைவலிக்கும்
ஆனாலும் அன்பாய் ஆசையாய் அரவணைத்து
இழுத்து இறுக்கி முடித்திடுவாள் !

நெற்றியை வறுடி, கன்னத்தில் தவழ்ந்து
கழுத்தில் பரவி, இடுப்பையும் எட்டிப்பார்த்து
அடிக்கடி சூடாகி அடம்பிடிக்கும் குறும்பை
சலிப்பும், பொருமையுமாய் தாங்கிடுவாள் !

சிக்கல் சேர்ந்து சினம் காட்டும்
முகம் கோணி முரண்டு பிடிக்கும்
மிருதுவாய்த் தலைகோதி சிக்கல் தீர்த்து
சிலிர்ப்பை அடக்கி சிரிக்கவைப்பாள் இல்லாள் !

அணில் குட்டி அனிதா: அம்மனி என்ன?!..அங்க இங்கன்னு கடைசியில வூட்டுகாரர் மேலேயே கைய வைச்சிட்டீங்க..?!! அதுவும் அவரை தலை முடியோட உவமை படுத்திட்டீங்க..?!! இது உங்களுக்கே கொஞ்சம் over ஆ தெரியல..பாவம் அந்த மனுஷன்......ரொம்ப கஷ்டம்தான்...! .

பின்குறிப்பு:- ஓவியம் நம்ம கவிதாவோடது தாங்க..ஏதோ கொஞ்சம் இந்த மாதிரி கிறுக்கறது..அவங்களுக்கு பழக்கமா போச்சு..இந்த படம் அவங்க friend காக வரைந்தது..கூந்தலுக்கு matching matching ஆ இருக்குன்னு..நான் தான் attach பண்ணிட்டேன்.. எப்படி நம்ம idea?!!