வளர்ந்த நாடுகளின் பொருளாதர வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, மக்கள் தேவையில்லாமல் பேசுவது இல்லை, செயலில் கவனம் செலுத்துகிறார்கள். வாரத்தில் 5 நாட்கள் உழைத்துவிட்டு 2 நாட்கள் வாழ்க்கையை சந்தோஷமாக கழிக்கிறார்கள். மக்கள் பழக்கவழக்கங்கள் நாட்டுக்கு நாடு நிறைய வேறுபாடு, நம்மிடம் இருக்கும் மிக பெரிய குறை பேச்சு, மற்றொன்று ஒழுங்கின்மை, அதற்கடுத்து அனுகுமுறை. பண்நாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டு அமெரிக்கர்கள் அவ்வபோது நம்மை பற்றி சொல்லும் கருத்தை கேட்பதால் இந்த பதிப்பை எழுதுகிறேன். அவர்கள் இந்தியர்களை பற்றிய கருத்தை சொல்லும் போது ஏதோ ஒருவரை தானே சொல்கிறார்கள் என விட்டு விட முடிவதில்லை. சில நேரங்களில் கோபமும், பல நேரங்களில் அவமானமாகவும் இருக்கும். வெளி நாட்டிலிருந்து அலுவலக வேலையாக வரும் வெளிநாட்டு வாழ் தமிழர் அடிக்கடி.. “Hey! you guys are wasting your business hours by talking unnecessary things yaar, this is what India is not developed economically ...you guys should change your attitude” என்பார்.

அவர் அப்படி கூறுவதற்கு பல காரணங்கள் உண்டு, தேவையில்லாமல் அடுத்தவர்களை பற்றிய கதை பேசுதல்,(gossip) திட்டமிடாது வேலைகளை செய்தல், தனக்கென ஒதுக்கப்பட்ட வேலையை கவனிக்காமல் அடுத்தவர்களின் வேலையில் மூக்கை நுழைத்தல், ஆடை & காலணிகளில் போதிய கவனம் செலுத்தாமை, தெரியாத விஷயத்தை தெரியும் என சொல்லிவிட்டு, பிறகு விழிப்பது, நேரத்தை சரியான முறையில் கடைபிடிக்காமை, ஒழுங்கின்மை போன்றவைகளை சொல்லலாம். இவை அலுவலக வேலையை சரி வர முடிக்க முடியாமல் இடையூராக இருக்கின்றன. சிறு சிறு தவறுகள் கூட கவனிக்கப்பட்டு திருப்பி அனுப்பபடுகின்றன.. நான் இதுவரை இந்திய அலுவலகங்களில் பார்த்திராத வேலை நேர்த்தியையும், ஒழுங்கையும் இங்கே கற்றுக்கொள்கிறேன் என்று சொல்ல தயக்கம் இல்லை.

ஏன் இந்தியாவை தேர்தெடுத்து, கம்பெனியை ஆரம்பித்து, நம்மையும் வேலை வாங்கிக் கொண்டு நம்மை குறை கூறவேண்டும் என எனக்கு தோன்றும். இங்கேயே இப்படியென்றால், அமெரிக்காவில் சென்று வேளை பார்க்கும், நம் நாட்டவரை எண்ணிப்பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. சில பண்நாட்டு நிறுவனங்கள் இங்கேயே அவர்களுக்கு, அமெரிக்கர்களிடம் பழகும், பேசும், சாப்பிடும் (கரண்டி, முள் கரண்டியில் உதவியுடன் உணவருந்துதல்) முறையை கற்று கொடுக்கின்றன.. சிலர் இதையெல்லாம் சரிவர செய்ய தெரியாமல் அந்நிய நாட்டில் எத்தனை அவமானப்படுகிறார்கள்?.

விமானத்தில் பயணம் செய்யும் போதும், மது வகைகள், உணவு வகைகள் கிடைக்கிறது என்பதற்காக அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவது மட்டுமின்றி பைக்குள் சேமித்து வைத்து கொள்வது போன்ற அநாகரிக அனுகுமுறைகள் அங்கிருக்கும் பணி பெண்களை வெகுவாக எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. ஒரு சிலர் செய்யும் இது போன்ற செயலால் ஒட்டு மொத்த இந்தியாவின் பெயரே அல்லவா கெடுகிறது. அடுத்து, விமானம் நின்ற பிறகு அடித்து , பிடித்து தலை மேல் வைத்திருக்கும் பொருட்களை எடுத்து அடுத்தவர்களுக்கு தொந்தரவு தருவது, எல்லா நாட்டு குழந்தைகளும் அமைதியாக வரும் போது, நம் குழந்தைகள் மாத்திரம் விமானத்தினுள் ஒடி பிடித்து விளையாடுவது போன்றவை பிற நாட்டவர்கள் நம்மையும், நாம் குழந்தை வளர்க்கும் முறையையும் விமர்சனம் செய்யும் படியாக உள்ளது. இது போன்ற செயல்களை நம்மால் கட்டு படுத்த இயலாதா?.

சில நல்ல விஷயங்கள் நான் கற்று கொண்டவை என் வேலையை நானே செய்வது, இந்திய நிறுவனங்களில் எல்லாவற்றிலும் office asst/boy or clerk இருப்பார். நம் அத்தனை வேலைகளையும் நாமே செய்து பழகினால் இந்த வேலைக்கென்று ஒரு ஆள் தேவையில்லாமல் போய்விடும்.

சிறு சிறு விஷயங்களில் நம்மை சரி செய்து கொண்டால் நம்மை குறைவாக யாராவது பேசமுடியுமா?..அதுவும் அந்நிய நாட்டவர். ஏதோ என் வேலையை சரி வர கற்றுக்கொண்டு சரியாக செய்வதால் அந்த அமெரிக்கர் “Hey, you Indians...” என என்னிடம் கதை அளப்பதை நிறுத்தி விட்டாலும், மற்றவர்களிடம் அவர் இன்னமும் “Hey, you Indians...” என பேசுவது காதில் விழத்தான் செய்கிறது..


அணில் குட்டி அனிதா: ஆஹா.....கதை அளக்கறதுல நம்ம அம்மனியை யாரும் மிஞ்ச முடியாதுங்கோ..! அம்மனி கிட்ட மீனம்பாக்கம் எங்க இருக்குன்னு கேளுங்க..முழிப்பாங்க.. இவுக.. என்னவோ மாசத்துக்கு 2 தரம் அமெரிக்கா, லண்டன் போயிட்டு வர ரேஞ்சுக்கு விமானத்தை பத்தி எல்லாம் எழுதறாங்க.. இதுக்கெல்லாம் காரணம்..வேற யாரும் இல்லைங்க..நீங்க தான்............! உடனே comment எழுத போயிட்டீங்களா?. இருங்கப்பா.....அப்படியே screen ல நான் இதை ஒரு 4 தரம் (நீங்க தான்..நீங்க..தான்) திருப்பி சொல்லற மாதிரி கற்பன பண்னுங்க...பண்ணிடீங்களா........ம்ம் போதும் போதும்..இப்போ போய் comment எழுதுங்க...!