மெது மெதுவாய்
செதுக்கி
சிற்பமாக்கினாய்
நெளிவு சுளிவுகளுடன்
அற்புதமாய்
உன் கைகளில்
அழகாய்
இருக்கிறேன்..
ஆனால்
நீயாக இருக்கிறேனே
நான் எங்கே....????
****
இடித்தாய்
குழைத்தாய்
குத்தினாய்
மிதித்தாய்
இழைத்தாய்
உருட்டினாய்
மிரட்டினாய்
சுத்தினாய்
வெட்டினாய்
உலர்த்தினாய்
ஏதேதோ
செய்கிறாயே
அத்தனையும் புதிது
எத்தனை அழகு...
அட....
இதிலும்
நீயாகவே இருக்கிறேனே......
நான் எங்கே..?
என்னை இழந்து
உன்னை பெறுகிறேனா..??
இல்லை
என்னுள் உன்னை
நீ தேடுகிறாயா?
அணில் குட்டி அனிதா : அம்மணி.. ஏன் எப்பவும் உங்களை நீங்க தேடிக்கிட்டே இருக்கீங்க? பேசாம போலிஸ் ல கம்ப்ளைட்டு கொடுங்க. .அவங்களுக்கு எப்படி உண்மைய உங்கக்கிட்ட இருந்து வரவெக்கனும்னு தெரியும்.....
பீட்டர் தாத்ஸ் : “If a householder moulds himself according to the circumstances just like nature moulds Herself according to seasons and performs his Karma then only shall he acquire happiness. One who does this successfully gains in all walks of life.”
நீயாக தெரிகிறேனே நானெங்கே..?!
Posted by : கவிதா | Kavitha
on 11:28
Subscribe to:
Post Comments (Atom)
10 - பார்வையிட்டவர்கள்:
இந்த விசயத்துல நான் அணிலுக்கு முழு சப்போர்ட். அணில் அடுத்த தடவை இன்னும் கொஞ்சம் கலாய்ச்சு கமெண்ட் போடனும் சரியா? உனக்கு சாக்லேட் வாங்கி தரேன். டீல் ஓக்கே? :)
thayee full formla irukka pola.....
@ ஆதவன்.. - அணில் க்கு சப்போர்ட்டா.. ம்ம்ம்.. அணில் வந்து பதில் சொல்லும் வெயிட்டு...
@ தமிழ் : நாங்க எல்லாம் எழுத ஆரம்பிச்சா.. .சரி விடு.. உன் அளவுக்கு எல்லாம் இல்ல.. :))
ஆதவன் அண்ணாச்சி... சாக்லெட் தானா. .டீல் கவிதா ரேஞ்சுக்கு இருக்கே. .என் லெவெலுக்கு எப்ப வரீங்களோ அப்பத்தான் டீல். .நவ். .நோ டீல்.. !! கிளம்புங்க.. .கிளம்புங்க..
கவிதைகள் நிஜமாவே நல்லா இருக்கு..!
ஆமா... இதுல நீங்க யாரு...?
super...
கவிதா,, இப்படி ஆகும்னு நினைச்சேன், ஒரு ஃபுல் டே கவிதாயினிகள் ரெண்டு பேரோட நீ மொக்கை போடும் போதே இப்படி எதுனா அசம்பாவிதம் நடக்கும்னு :))
:-))
@ தமிழ் அமுதன் - நன்றி.. அதான் தேடிக்கிட்டு இருக்கேன் கண்டுபிடிச்சவுடனே சொல்லிடறேன் :)
@ வழிபோக்கன் - நன்றி
@ விஜி : சான்சே இல்ல.... :) யூ இன்சல்டட் மீ ... !!
அவங்களுக்கும் எனக்கு சம்பந்தமே இல்ல... .. கவிதை லேபில் ல இதைவிட கொடுமையா எல்லாம் எழுதி இருக்கேன்.. நீ மிஸ் பண்ணிட்ட. .:)))
@ கோபி : சிரிச்சாச்சா. .ஓடுங்க..
:)))
Post a Comment