இன்று கிருஷ்ண ஜெயந்தி... .. கிருஷ்ணனின் கவனத்தை என் பக்கம் திருப்ப இதை விட நல்ல ஐடியா எனக்கு கிடைக்கவில்லை :))))))))..அவர் ரொம்ப பாவம் தான் ஆனாலும் அதை எல்லாம் பார்த்தால் நடக்குமா?
பார்வைகள் வரலாற்றில் முதல் முறையாக ஒரு கர்நாடக சங்கீத பாடல் பதிவிடுகிறேன். என்ன சொல்ல வரேன்னா....
நான் முறையாக சங்கீதம் பயிலவில்லை.. .., முயற்சி செய்தும்.. உருப்படியாக பாட்டு கத்துக்கல... ஸ்வர வரிசை தாண்டியது இல்லை... அது என்னவோ என்ன மாயமோ...தெரியல.... பாட்டு ஆரம்பிக்கறதுக்குள்ள நான் வகுப்புக்கு போவதை நிறுத்திவிடுவேன் :))
இசையின் அரசி பாடிய இந்த பாடலை அடிக்கடி கேட்கும் பழக்கம் எனக்குண்டு, கேட்டு கேட்டு மண்டையில் ஏற்றி ஏதோ பாடி இருக்கேன்.
குறை ஒன்றும் இல்லை !!
தாளம், ....ம்ம்.. ..ராகம்.. ம்ம்.. எல்லாமே கேட்டு கேட்டு பாடியது தான்... சங்கீதம் பயின்றவர்கள் போன்று பாடி இருக்க வாய்பில்லை. ஏதோ முயற்சி செய்து இருக்கிறேன். சங்கீதம் பயின்றவர்கள் குறையை சுட்டி க்காட்டினால் திருத்திக்கொள்ளகிறேன்.
அணில்குட்டிஅனிதா :................... திருத்தி??!!!! என்ன செய்ய போறீங்க.. திருப்பி பாட போறீங்களா கவி... ?!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !! மக்கா....... உங்களுக்கு எல்லாம் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன் கேட்டுக்கோங்க..அம்மணி கேட்டாங்களேன்னு யாராச்சும் குறை இருக்கு..... தாளம் இங்க நொல்ல அங்க நொட்ட ன்னு சொல்லி... அம்மணிய உசுப்பேத்தி இன்னொரு முறை பாட வச்சிங்க... நான் ச்சும்மா இருக்க மாட்டேன்..சொல்லிட்டேன்...... ... நான் என்ன செய்வேன்ன்னு எனக்கே தெரியாது சொல்லிட்டேன் ஆம்ம்மா.......... என்னைய டென்ஜன் ஆக்கிடாதிங்க.. :((
பீட்டர் தாத்ஸ் : “Music is enough for a lifetime, but a lifetime is not enough for music”
கிருஷ்ணர் ரொம்பவே பாவம் தான்... :) கேட்டுத்தான் ஆகனும்..!!
Posted by : கவிதா | Kavitha
on 08:44
Labels:
அப்பாவிற்காக
Subscribe to:
Post Comments (Atom)
7 - பார்வையிட்டவர்கள்:
குரல் வளம் நல்லா இருக்கு மேடம் !
அருமை.. அருமை.
கிருஷ்ணர் பேரைப் பார்த்து வந்தேன்.. நல்லா பாடிருக்கீங்க, குரல் பிசிறில்லாமல் நன்றாக வந்துள்ளது..
இசையரசி பாடினால் தான் என்றல்ல யார் பாடினாலும் கேட்பவன் தானே கண்ணன் எனும் கருந்தெய்வம்..
கண்ணன் படங்கள் தேர்வும் அருமை.. அதிலும் கருமை நிறக் கண்ணன் கொள்ளை அழகு.
அருமையான குரல் வளம் சகோதரி தங்களுக்கு வாழ்த்துக்கள்
நல்ல பேசிறுக்கீங்க, பாட்டு எப்போ வரும் அடுத்த பதிவுலய?
அணில்குட்டிஅனிதா சொன்னது நல்ல இருக்கு.
மனசு சஞ்சலமா இருக்கிற நேரத்திலே இந்தப் பாட்டு ரொம்ப இதமா இருந்துச்சு. நல்லா பாடி இருக்கிங்க.
குரலும் பாட்டும் நல்லா இருக்குங்க.
@ கோவி கண்ணன் - நன்றி :)
@ ராகவ் - நன்றி :)
@ சக்தி - நன்றி :)
@ ஜானி வாக்கர் - - நன்றி :)
@ ராஜ் - ம்ம்ம்ம்.. - நன்றி :)
Post a Comment