என்னால் முடிந்த, எனக்கு தெரிந்த, புரிந்ததை எழுதி இருக்கிறேன்.... தப்பு எவ்வளவு இருக்கோ அவ்வளவு போக மீதமுள்ள பொற்காசுகளை எனக்கு எல்லாரும் தனித்தனியா கொடுங்க... நோ குரூப்பிசம் என்டர்டயிண்டு..ஹியர்..!!
அப்புறம்... அந்த ஆட்டோ ஆட்டோ ன்னு சொல்றாங்களே..அதை பத்தி எல்லாம் உங்க யாருக்கும் இது வரைக்கும் தெரியாதுன்னு கேள்விப்பட்டேன்.. :) நிஜமா உங்களுக்கு எல்லாம் தெரியாது தானே ?!! ம்ம்ம் அது..!! அப்படியே மெயின்டெயின் செய்துக்கோங்க.... சரியா ..:)))
சந்தோஷத்துடன் சந்தோஷ்' லிருந்து ஆரம்பிக்கிறேன்..
அமைதிக்கு
மறுபெயர்
சாந்தி..சாந்தி சாந்தி... (சே...!!).
சந்தோஷ்...சந்தோஷ்...சந்தோஷ்...
ஆனால்
நீ
பொங்கிவிட்டால்
பூமி
இல்லை...
நாங்களும்
நடுங்கிபோகிறோம் ...!!
**********
தலை கனத்தோடு
உன்
பக்கம் வந்தால்
தலைதெறிக்க
ஓட வைக்கிறாய்
உன்
ந(க்கல்)கைச்சுவை
எழுத்துக்களால்......!!
@@@@@@@@@@@@@@@@@@@@
முல்ஸ்
பப்பு
இல்லையென்றால்
உன்
பதிவுகள் இல்லை !!
பப்பு
நீ
எப்போது விழிக்க போகிறாய் ?
நாங்கள்
எப்போது
தப்பிக்க போகிறோம்... ?
****
எப்போதும்
உன்
கைகளில்
துண்டு காகிதம், கத்திரி,கலர்கள், கேமரா
ம்ம்ம்.ம்ம்ம்ம்..............
நீ
எதை
வேண்டுமானாலும்
வச்சி'க்கோ......ஆச்சி......
ஆனால்
எங்களையும்
பப்புவையும்
பத்தி
கொஞ்சமா
யோசிச்சிக்கோ..மச்சி....!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிபி
ஸ்ஸ்ஸ்ஸ்.........
உன்
எதிர்கவிதைகளால்
என்
கவிதைகள்
பிரபலம் ..
ஹை........
நானும் பிரபலமாயிட்டேன்....
***
உன்
கலாய்த்தல்
பின்னூட்டம்
இல்லாத
என் பதிவுகள்
ஏதோ
ஒன்றை இழந்தது
போல..............!!
***
என்ன
பேசினாலும்
எப்படி
பேசினாலும்
சிரிக்கவைக்கிறாய்..
நீ
சுவாசிப்பது
என்ன
* N2O வா?
*N2O= Nitrous oxide, happy gas/laughing gas
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜமால்
யூ த ஃப்ஸ்டூ !!
முடிவுகளை
பற்றி
உனக்கு
கவலையில்லை
எப்போதும்
நீ
ஆரம்பம்.... :)
@@@@@@@@@@@@@@@@@@@@
ஹே ராம்
டீச்சர்
வணக்கம்
டீச்சர்..!
குட்மார்னிங் டீச்சர் !!
குட் ஆஃப்டர்னூன் டீச்சர் !!
குட் ஈவினிங் டீச்சர் !!
குட் நைட்..டீச்சர் !!
டீச்சர்.ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..............
அவ்வ்வ்வ்வ்வ்......இதுக்கு மேல எழுத வரல.....டீச்சர்'ஐ பாத்தாவே ஒரே பயம் பயம்மாஆஆஆ இருக்கு....!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சாக்லேட்
அன்பினால்
கட்டி
போடுபவன்
அது
எதுவரை
என்பதை புரிந்தவன்
அதுவரையில்
அதை
நிறுத்தியும் வைப்பவன் :)
இசைஞானி' க்கும்
இவனுக்கும்
என்ன
சம்பந்தம் ??
இதுவரை
எனக்கு
தெரியவில்லை..
உங்களுக்கு
தெரியுமா?
@@@@@@@@@@@@@@@@@@@@@
ரவி
இணையத்தின்
இம்சை !!
இளகிய
மனதோடு
எல்லோர்
இதயத்திலும்
ஒரு
ஓரத்தில்
இடம்
பிடித்தவன்... :)
@@@@@@@@@@@@@@@@@@@@@@
கிருஷ்ணா - லக்கி
உள்ளிருக்கும்
அவனில்
நீங்காத
நல்லவன்
இருக்கிறான்
சில
எழுத்துக்களில்
ஏனோ
எகத்தாளம்
தூக்கல்.!!
ஏனென்று
விடைக்கான
அவனால்
மட்டுமே முடியும்..
அன்பான
ராட்சஷன்.. !!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குசும்பன்
உன்
பதிவுகளில்
பெயர்
மாற்றங்கள்
அருமை....
குசும்பன்' ஐ
கூட
பசும் பொன் !!!
என்று
சொல்லலாமோ?!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பிரபா - தெக்கிக்காட்டான்
நீ
பேசாதவரை
நாங்கள்
தப்பித்தோம்
நீ
பேச ஆரம்பித்தாலே............
கடவுள்
பஞ்சியை
கொடுத்ததின்
நோக்கம்
விளங்கிவிடும்... !!
(ஹி ஹி..நீ பேச ஆரம்பித்தாலே நாங்கள் பஞ்சியை காதில் அடைத்துவிடுவோமே.... )
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
முத்துலெட்சுமி
முத்தான
உன் பேச்சை
கேட்டபிறகு
ஏனோ
உன் எழுத்துக்களில்
முத்தில்லாதது
போன்ற
உணர்வு...........
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
புனிதா
நீ
பிழியும் சோக கவிதை
கண்டு
நிறுத்திவிட்டேன்
என்
சோகத்தை
பிழிய....
@@@@@@@@@@@@@@@@@@@@@
உண்மை தமிழன்
ரிப்பன்.........
பட்டத்து வால்............
ஜெட்' விட்டு சென்ற புகை...........
மாநகர இரண்டு கோச் பேரூந்து.........
மெரினா கடற்கரை.........
இப்படி
நீளமாக எதை பார்த்தாலும்
உன் பதிவுகள்
நினைவுக்கு வருகிறதே முருகா !!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிவா
"ஏதோ சொல்கிறேன்"
என்று...
எதையாவது
சொல்லாமல்
இது' தான்
என்று
சொல்பவன்..!!
(மன)
ஆழத்தை கடக்க
அசரும்
போதெல்லாம்...
இரண்டொரு வார்த்தையில்
எளிதாக
கடக்க வைப்பவன்..
எதையும்
"இல்லை" யென
சொல்லாத
உன் புன்னகை'யும்
உன் நட்பும்..
நான் பெற்றது
கடவுள்
எனக்களித்த
ஒரு வரம் ..!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அணில் குட்டி அனிதா : பொற்காசு கலக்ட் பண்ண இப்படி ஒரு வழியா.. அம்மணி சோத்துக்கு சிங்கி அடிக்கறாங்களோ....??? இப்படி டீசன்ட் பிச்ச ஆரம்பிச்சிட்டாங்க.... ஏதோ பாத்து போடுங்கப்பா தட்டுல... :)))))
பீட்டர் தாத்ஸ் : Know yourself, master yourself, conquest of self is most gratifying.”
ப்ளாகர் சிலரை பற்றிய கவிதைகள்...
Posted by : கவிதா | Kavitha
on 11:33
Labels:
கதம்பம்
Subscribe to:
Post Comments (Atom)
38 - பார்வையிட்டவர்கள்:
:-)
சிபி - தூள்
//கவிதைகள்..."//
எங்க அது??? :)
super.....
நல்லா இருக்கு :)
////கவிதைகள்..."//
எங்க அது??? :)//
டீச்சர் ஆரம்பிச்சிட்டீங்களா??? கேள்வி கேட்க.....:)))))))))))))))))
me the first கவிதை ரொம்ப நல்லா இருந்தது..
நன்றி கவிதா முன்பு முத்துவுக்கு பேசமுடியலன்னு போஸ்ட் போட்டதும் எல்லாரும் ஓடிவந்து ..அச்சச்சோ சாரிங்க உங்களால பேசமுடியாதாமே ந்னு ஊமைன்னு நினைச்சி வருத்தப்பட்டாங்க.. நான் பேசினேன்னு போஸ்ட் போட்டுக் காப்பாத்திட்டீங்க.. :)
தட்டில் துட்டு போடலாம்னு பார்த்தால், என் பேர் மிஸ்ஸிங்
SUMAZLA/சுமஜ்லா
கண்ணு
கணக்கு
பண்ணாம..
தட்டுல
துட்ட
போடு
ஜ்ல(ஆ)சா
பண்ணிக்கிறேன்...
(கேட்டதுக்கு சட்டுன்னு இது தான் எழுத வந்தது.... எதோ பாத்து துட்ட போட்டுட்டு போங்கம்மா... :) )
தூள் கிளப்பீட்டீங்க போங்க
@ புனித் - நன்றி
@ ஜம்ஸ் - ம்ம் சிபி எப்பவும் தூள்ள்ள்ள்ள்ள் தூள்ள்... :) நன்றி
@ இராம் - நன்றி :) நான் தான் எவ்வளவு குறை இருக்கோ அவ்வளவு குறைச்சிக்க சொல்லி இருக்கேன் இல்ல..
ஏய்.. அதுக்காக எல்லாமே குறைன்னு சொல்லி தட்ட காலியா விடப்பிடாது சொல்லிட்டேன் :))))
@ கிள்ளி'வளவன் - நன்றிங்க.. :)
@ சின்ன அம்மணி - நன்றி
@ முத்து - ம்ம் நன்றி..:) நீங்க பேசலன்னு சொன்னாக்கூட யாராச்சும் நம்பறாங்களா என்ன?
@ சுரேஷ் குமார் - நன்றி :)
”அடடே
ஒரு கவிதையே
கவிதை எழுதுகிறதே!!!”ன்னு பின்னூட்டம் போடலாம்ன்னு நினைச்சு வந்தா
// இராம்/Raam said...
//கவிதைகள்..."//
எங்க அது??? :)//
ராம் பின்னூட்டத்தை “ரிப்பீட்டே” போட வச்சிட்டிங்களே ;-)
//ராம் பின்னூட்டத்தை “ரிப்பீட்டே” போட வச்சிட்டிங்களே ;-)//
அப்பன்னா நல்லா இல்லையா? :((((
என்னையும் லிஸ்ட்ல சேர்த்து வைச்சு ஞாபகமாக இருக்கிறதுக்கு மிக்க நன்றிங்கோ..!
எல்லாரையும் விட.. எல்லாத்தையும்விட அனில்குட்டி அனிதாவின் கமெண்ட் சூப்பரோ சூப்பர்..!
உங்க நேர்மை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு..!
//உங்க நேர்மை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு..!//
நன்றி முருகா..:)
ஆனா நிறைய பேருக்கு முருகா.... பிடிக்க மாட்டேங்குது முருகா !! :((
//எல்லாரையும் விட.. எல்லாத்தையும்விட அனில்குட்டி அனிதாவின் கமெண்ட் சூப்பரோ சூப்பர்..!//
.நான் பிச்ச எடுக்கறேன் னு அணிலு சொல்லுது அதை நீங்க சூப்பர் ன்னு சொல்றீங்க.. இது நியாயமா முருகா?
ஓக்கே மச்சி..:-))
//அப்பன்னா நல்லா இல்லையா? :(((//
நல்லா இல்லைன்னு நான் எப்போ சொன்னேன். கவிதை எங்கேன்னு தானே கேட்டேன் :-). வேணும்ன்னா “கவுஜ”ன்னு சொல்லிக்கலாம் [ஆசிப் அண்ணாச்சி கிட்டே சொல்லி உங்களையும் எங்க கவுஜ க்ரூப்ல சேர்த்திடச் சொல்லவா? இல்ல அல்ரெடி நீங்க அங்கே மெம்பரா?]
//
முடிவுகளை
பற்றி
உனக்கு
கவலையில்லை
எப்போதும்
நீ
ஆரம்பம்.... :)//
:-) நல்லாருக்கு கவிதா
//நல்லா இல்லைன்னு நான் எப்போ சொன்னேன். கவிதை எங்கேன்னு தானே கேட்டேன் :-). வேணும்ன்னா “கவுஜ”ன்னு சொல்லிக்கலாம்//
:))))))) அப்ப சரி :))
// [ஆசிப் அண்ணாச்சி கிட்டே சொல்லி உங்களையும் எங்க கவுஜ க்ரூப்ல சேர்த்திடச் சொல்லவா? இல்ல அல்ரெடி நீங்க அங்கே மெம்பரா?]//
இப்படி எல்லாம் குரூப் இருக்கறது எனக்கு தெரியாது... உங்க அளவு எல்லாம் கவிதை கவுஜ எதுவும் எனக்கு எழுத வராது... முதல்ல நீங்க எழுதறது எல்லாம் எனக்கு புரியாது வேற.. :)))
அதுல சேர்ந்து நான் கேட்க போற கேள்வி ஒன்னொனுக்கும் எனக்கு நீங்க விளக்கம் கொடுக்கறதுக்குள்ள விளங்கிடும்..!! :))
ரிஸ்க் எடுக்கனுமா சொல்லுங்க?! :)
//ஓக்கே மச்சி..:-))//
அடடா.. இவ்வளவு சீக்கிரம் ஆச்சி ஒக்கே சொல்லுவாங்கன்னு தெரியாம போச்சே.. எப்பவோ எழுதி இருப்பேனே?!! :))
தாங்ஸ்'டா.... :)
கலக்கல் கவிதா........
இங்க தானே இருக்கனும்...எங்க போச்சு...ம்ம்ம்ம்
அட கண்டிப்பா இருக்கனுமே. இவுங்க பொய் சொல்ல மாட்டாங்களே. திரும்பவும் தேடி பார்ப்போம்.
..
..
..
எதுக்கு வம்பு அவுங்ககிட்டயே கேட்டுடலாம். எங்க கவிதா கவிதைகள்? தலைப்பை பார்த்துட்டு உள்ள வந்தா கவிதைய காணோமே!
//அன்பினால்
கட்டி
போடுபவன்
அது
எதுவரை
என்பதை புரிந்தவன்
அதுவரையில்
அதை
நிறுத்தியும் வைப்பவன் :)
இசைஞானி' க்கும்
இவனுக்கும்
என்ன
சம்பந்தம் ??
இதுவரை
எனக்கு
தெரியவில்லை..
உங்களுக்கு
தெரியுமா?//
அவ்வ்வ்வ் தல எம்புட்டு செலவாச்சுன்னு சொல்லுங்க. நாங்களும் ட்ரை பண்ணுவோம்ல....
யக்காவ்....
கவிதையே கவிதை எழுதலாமா? :-)
//எதுக்கு வம்பு அவுங்ககிட்டயே கேட்டுடலாம். எங்க கவிதா கவிதைகள்? தலைப்பை பார்த்துட்டு உள்ள வந்தா கவிதைய காணோமே!//
:))) வாங்க ஆதவன்... உங்களை சொல்லி தப்பு இல்ல.. எல்லாம் இந்த........................ ஹே ராம்...... !! உங்களை கவனிச்சா போதும் !! :)))
நன்றி ஆதவன் கவிதைய தேடினதுக்கு :))))
//யக்காவ்....
கவிதையே கவிதை எழுதலாமா? :-)//
கிருஷ்ணா.... ஏன் இப்படி?!! :))
//நீளமாக எதை பார்த்தாலும்
உன் பதிவுகள்
நினைவுக்கு வருகிறதே முருகா !!//
அய்யோ அய்யோ சிரிப்பு சிரிப்பா வருது:)
//(*N2O= Nitrous oxide, happy gas/laughing gas)//
கவிதை(?) உலகில் முதல் முறையா
* போட்டு விளக்கம் எல்லாம் கொடுத்திருக்கும் கலங்கரை விளக்கம்
கவிதா வாழ்க வாழ்க!
//ஹி ஹி..நீ பேச ஆரம்பித்தாலே நாங்கள் பஞ்சியை காதில் அடைத்துவிடுவோமே.... )
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
//
தவறான இடத்தில் @@@@@ சிம்பல் அதை கொஞ்சம் மேல போடுங்க! பொருத்தமாக இருக்கும்:)
அம்புட்டு சூப்பரு ;))
யக்கோவ் நல்லா யோசிக்கிறிங்க...நன்றி ;)
@ ஆதவன்
\\அவ்வ்வ்வ் தல எம்புட்டு செலவாச்சுன்னு சொல்லுங்க. நாங்களும் ட்ரை பண்ணுவோம்ல....\\
அம்புட்டு தானே...பார்க்கும் போது சொல்றேன்.
//அம்புட்டு தானே...பார்க்கும் போது சொல்றேன்.//
ம்கும்ம்ம்ம்... சரிதான்... :)
//கவிதை(?) உலகில் முதல் முறையா
* போட்டு விளக்கம் எல்லாம் கொடுத்திருக்கும் கலங்கரை விளக்கம்
கவிதா வாழ்க வாழ்க!//
ஹி ஹி..எல்லாரும் உங்களை மாதிரி இருக்கமாட்டங்களே...
வந்தமா நமக்கு தனியா எழுதி இருக்காங்களே... படிச்சோமா... பொற்காசுகளை அள்ளி அள்ளி கொடுத்தோமான்னு இருக்கா?!
//தவறான இடத்தில் @@@@@ சிம்பல் அதை கொஞ்சம் மேல போடுங்க! பொருத்தமாக இருக்கும்:)//
ம்ம்...பதிவுலகில் நிறைய பேருக்கு இது பொருந்தும்... :))) அதனால.............
சூப்பர்.
அருமை கவிதா
அழகான கற்பனை
அற்புதமாய் கலாய்த்து உள்ளீர்கள்
வாழ்த்துக்கள் சகோதரி
@வெயிலான் - நன்றி
@ சக்தி - நன்றி
@ பீர் - நன்றி
super
@ மகா - நன்றி
Post a Comment