காதல் சின்னம் என்று அழைக்கப்படும் தாஜ்மகல், காதலிக்காக கட்டப்பட்டது இல்லை என்பதை தெரிந்து கொண்டது, மிக சில வருடங்களுக்கு முன் அங்கு சென்ற போது தான்.

சிறு வயதில் பள்ளியில், ஷாஜஹான் தன் காதலி மும்தாஜுக்காக ஆக்ராவில் தாஜ்மகல் கட்டினார். இது உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.. என்று படித்தது மட்டுமே.. கொஞ்சம் பெரிய பிள்ளை ஆனாதும், சினிமாக்களில் காட்டும் போது, பிரம்மிப்பாக இருக்கும், நேரில் சென்று ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் ஆசை நிறைவேறிற்று.. அங்கு மகலின் உள்ளே செல்வதற்கு முன் தாஜ்மகலின் வரலாறை பதித்துள்ளனர். அதை படித்தபிறகு தான் ஷாஜஹான் தன் காதல் மனைவிக்காக கட்டியது என்று தெரிந்தது. மும்தாஜ் தன் 15 ஆவது குழந்தை பிறந்தவுடன், இறந்து போனார், அதற்கு பிறகு அவரின் நினைவாக கட்டியது தான் தாஜ்மகல்.

தாஜ்மகலை நேரில் பார்த்த போது, ஷாஜகான் அவர் மனைவி மேல் வைத்த அன்பு எத்தனை ஆழமானது என்று புரிந்தது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு பெரிய மகலை கட்டியிருக்கிறாரே..என்று மிக பிரம்மிப்பாக இருந்தது.. ஒவ்வொரு கல்லிலும் அவரின் காதல் தெரிகிறது. மறைந்து போன அந்த மனிதரை பார்க்க முடியாவிட்டாலும் அவரின் ஆழமான அன்பை அந்த மகலில் உணரமுடிந்தது.

காதலிக்கும், மனைவிக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.. காதலிக்கும் போது ஆண்களுக்கு பெண்களிடம் உள்ள காதலும் அன்பும், மனைவியான பிறகு இருக்காது என்பது தெரிந்த விஷயம்.. மனைவிக்காக..அதுவும் 15 குழந்தைகள் பிறந்த பிறகும் க்கூட ஒருவர் மனைவி மேல் இருக்கும் அன்பை இப்படி வெளிப்படுத்தமுடியுமா என ஆச்சரியமாக இருந்தது.. என் கணவரிடம் கூட இதைப்பற்றி சொன்னேன்.. “நீங்களும் நம் அன்பின் வெளிப்பாடாக எனக்கு இப்படி ஒரு மாளிகை கட்டுங்களேன்னு...” அவரோ “இது ஷாஜஹான் அவர் மனைவி இறந்தபிறகு கட்டியது.. உனக்கு எப்படி வசதி என்றார்.........”

சரி விஷயத்திற்கு வருவோம்... தாஜ்மகலை பார்த்த போது, ஏன் பெண்கள் ஆண்களுக்காக எதுவுமே இப்படி செய்வதில்லை.. பெண்கள் என்ன அன்பில்லாதவர்களா?.. காதல் இல்லாதவர்களா.. கல் நெஞ்சக்காரர்களா?.. காதலனுக்கோ, கணவருக்கோ இதுவரை எந்த பெண்ணாவது (வரலாற்று கதைகளை தவிர) இப்படி நினைவு சின்னங்களோ, இல்லை ஏதோ ஒரு வகையில் வியக்கும்படி தங்களது அன்பை வெளிப்படுத்தி இருக்காங்களான்னா?.. எனக்கு தெரிந்து இல்லை. தாஜ்மகலை விடுங்கள், ஒரு தெருவில் நடந்து போகும் போது பார்த்தால் வீடுகளின் பெயர் “லஷ்மி இல்லம்” “பத்மாவதி இல்லம்”... இப்படி அந்த வீட்டு குடும்ப தலைவியின் பெயரில் இருக்கும். நிச்சயம் இவை பிள்ளைகள் பெயர் இல்லை, (பொதுவாக பிள்ளைகள் பெயர் வாகனங்களில் (கார், பைக்..) பார்க்கலாம்.) இப்படி ஆண்கள் எல்லாவற்றிலும் அதிகமாக தங்களின் அன்பை வெளிபடுத்தும் போது, பெண்கள் ஏன் வெளிபடுத்துவது இல்லை..?!!

எனக்கு தெரிந்து, பொதுவாக பெண்கள் ஆண்களை விட மன வலிமை பெற்றவர்கள். எதையும் எளிதில் வெளியில் சொல்லிவிட கூடியவர்கள் இல்லை. பெண்ணின் மனதை இதுவரை முழுதும் அறிந்தது யாரும் இல்லை எனும் அளவிற்கு மனதளவில் வலிமை கொண்டவர்கள் என்றாலும் உள்ளுக்குள் ஆண்களை விட அதிக அன்பு, நேசம், பாசம் கொண்டவர்கள் பெண்களே.

ஒரு பத்திரிக்கையில் படித்த உண்மை சம்பவம் இது, ஒரு பெண்ணின் கணவர், சிறு வயதிலேயெ ஒரு விபத்தின் மூலம் நடக்கும் மற்றும், பேசும் சக்தியை இழந்து, படுத்த படுக்கையாகிவிட்டார். அவரை அவரின் மனைவி விட்டு விலகி செல்லாமல், வருட கணக்காக ஒரு குழந்தையை போல் கவனித்து வருகிறார். அவரின் பார்வையில் மட்டுமே அசைவு இருக்கிறது..அதையே தன் வாழ்க்கையாக நினைத்து அந்த பெண்மனி இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு முழு பணிவிடையும் இவரே செய்கிறார் (உணவு கொடுப்பது, குளிப்பாட்டுவது, உடைகள் மாற்றுவது, சிறுநீர், மலம் சுத்தம் செய்வது). இத்தனை வருடம் ஆன பிறகும் கூட அவர் இதை செய்ய சோர்ந்து போகவில்லை என்பது வியக்கதக்க பெண்ணின் குணம் அல்லவா?.. இதில் எத்தனை காதல் உள்ளது. அடுத்து கேரளாவிலும் இதை போன்றே ஒரு பெண் தன் கணவரை பார்த்து கொள்கிறார்..அவர் வெளி உலகை பார்த்தே ஆண்டுகள் பல ஆகிவிட்டன என்ற செய்தியும் கூட என்னை பெண்ணின் அன்பையும் காதலையும் எண்ணி வியக்கவைத்தது. இந்த உண்மை கதை, மலையாளத்தில் நடிகை ரேவதி, நடிகர் மோகன்லால் நடித்து திரைபடமாக வெளிவந்துள்ளது. (படம் பெயர் தெரியவில்லை)

ஆக, ஆண்களை போன்று பெண்கள் காதலை வெளிப்படுத்துவது இல்லையே தவிர..ஆண்களை விட பெண்களின் அன்பிற்கே சக்தியும், ஆயுட்காலமும் அதிகம். ஒரு தாஜ்மகல் என்ன ஒராயிரம் தாஜ்மகல் ஒவ்வொரு பெண்ணின் மனதிற்குள்ளும்......

அணில் குட்டி அனிதா:- ஹா..ஹா..ஹா.. கவிதா சூப்பரா வூடு(தாஜ்மகல்) கட்டி இருக்கீங்க போங்க.. ம்ம்... பெண் மனசு பெண்ணுக்கு தானே தெரியும்.. அது இருக்கட்டும்... உங்களுக்கு போய்.. ஹா..ஹா....தாஜ்மகல் ஹா..ஹா... எல்லாம் கட்ட சொல்லி.. ஹா..ஹா...தமாஷ்ஷு போங்க..வர வர நீங்க பண்ற தமாஷ் தாங்க முடியல...அய்யோ..அய்யோ..இது எல்லாம் கேட்டு வரக்கூடாது..அம்மனி..தானா வரனும்.......ஆனா உங்க hubby correct ஆ பதில் சொல்லி இருக்காரு.. என்னைய மாதிரி அவரும் எப்ப விடுதலை கிடைக்கும்னு காத்துக்கிட்டு இருக்காரு போல........அடடா..உடனே..சும்மா முட்ட கண்ண வச்சிக்கிட்டு முறைக்காதீங்க.. பயம்ம்ம்ம்ம்ம்மா இருக்குது இல்ல......