பெண்ணிற்கு மார்பகங்கள், குழந்தைக்கு உயிர்பாலூட்ட இறைவன் கொடுத்த அற்புதம் என்பதை தவிற அழகு, கவர்ச்சி என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தானே?. மார்பக புற்று நோய் மற்றும் கட்டி காரணங்களுக்காக பெண்கள் சிலர் மார்பகங்களை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். திருமணத்திற்கு பிறகு இது நிகழ்ந்தால் அவசியம் என புரிந்து கொள்ளும் ஆண்கள், திருமணமாகத பெண்களை புரிந்து கொள்வது இல்லை, இப்பெண்கள் ஆண்களால் ஒதுக்கபடுவது வேதனையாக இருக்கிறது.

மற்றவர்களை போன்று நாம் இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மை ஒருபுறமும் , ஆண்களால் ஒதுக்கபடுவது மற்றொரு புறமும் எத்தனை மன அழுத்தத்தையும், பாரத்தையும் கொடுக்கிறது. செயற்கையாக இதற்காக தயாரிக்கப்படும் உள்ளாடைகள் அவர்களின் அழகை வேண்டுமானால் வெளிபார்வைக்கு சரிசெய்யலாம். ஆனால் உள்ளுணர்வுகளையும், வேதனையையும் சரிசெய்ய முடியுமா..?.

அப்படியே இந்த பெண்கள் திருமண மார்க்கெட்டில் விலைபோக வேண்டும் என்றால், ஏதோ ஒரு விதத்தில் குறையுடைய ஒருவர், மனைவி இழந்த ஆண்கள், தீராத வியாதிக்காரர், அல்லது வயதான ஒரு கிழவருக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கை படவேண்டுயுள்ளது. நல்ல படிப்பு, வேலை, நல்ல உடல் நலத்துடன் இருக்கும் எந்த ஆடவரும் இந்த பெண்களை திருமணம் செய்து கொள்ள முன் வருவது இல்லை. இப்படி ஆண்களினால் நிராகரிக்கபடும் பெண்ணின் மன நிலை எப்படி இருக்கும்?. எத்தனை வேதனைப்படும்? தாழ்வுமனப்பான்மை அவர்களை தினம் தினம் கொல்லாதா?.. திருமணமே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ள படுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு பெண்கள் பத்திரிக்கையில், இந்த பிரச்சனையை மைய கருவாக கொண்ட திரைப்படத்தின் (கோவா திரைப்பட விழாவில் வெளியிட்டது) கதையை படித்தபோது மிகவும் உருக்கமாக இருந்தது. அந்த பெண் ஒரு ஆடவனால் எத்தனை அவமானத்திற்க்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகிறாள் என்பதை மிக அழுத்தமாக, யதார்த்தமான உணர்வுகளின் மூலம் சொல்லப்பட்டிருந்தது.

உணவு விடுதியில் வேலை செய்து கொண்டு,ஆடவர்களிடமிருந்து அரவே ஒதுங்கி இருக்கும் அந்த பெண், நடன அறையில் ஒரு ஆடவனால் வலிய நடனமாட இழுத்து செல்லப்படிகிறாள். விலகி போக நினைத்தாலும், விடாது அவளை அனைத்துக்கொண்டு நடனமாடுகிறான் அவன். முதன் முதலாக ஒரு ஆடவனின் நெருக்கம், அவனின் முத்தம் எல்லாம் இந்த பெண்ணின் பெண்மையை தூண்டிவிட, அவளது அறைக்கு அவனை அழைத்து செல்கிறாள், அவனின் அவசரத்தை தடுத்து தன் குறையை சொல்ல நினைக்கிறாள். ஆனால் அவனோ ஆவேசத்துடன், அவளை படுக்கையில் தள்ளி அனைக்கிறான், அவள் அதற்கு மேல் அவனை விடாது, தனக்கு புற்று நோய் காரணாமாக மார்பகங்கள் அகற்றுபட்டுவிட்டது என்று சொல்கிறாள்..இதை கேட்ட அடுத்த நொடி, அவளிடம் சாரி என்று, அருவருப்போடு சொல்லிவிட்டு, வேகமாக விலகும் அவன், ஏன் இதனை நான் உன்னை முத்தமிடுவதற்கு முன்பே சொல்லி தொலைக்காமல் விட்டாய், என்று திட்டிவிட்டு செல்கிறான்...இவளோ அவனிடம் நானாக உன்னிடம் வரவில்லை நீதானே என்னை அழைத்தாய், என்னை தவிக்க விட்டு விட்டு செல்லாதே என கெஞ்சுகிறாள், அழுகிறாள், பின்னால் துரத்தி செல்கிறாள். ஏதோ பிரச்சனை என்று நினைக்கும் அவளின் தோழிகள் அவனை வளைத்து பிடித்து பாய்லர் அறையில் அடைக்கிறார்கள். அவன் அதன் பிறகு எத்தனை கெஞ்சியும் விடாமல் உள்ளேயே அடைத்து வைக்கபடுகிறான். சிறைக்கொடுமை, பசி, தண்ணீர் கூட கிடைக்காத நிலையில் 2 நாட்களுக்கு மேல் அவனால் தாங்க முடியாத அவன், அவளுடன் சேர்ந்து தன் வாழ்நாளை கழிப்பதாக சத்தியம் செய்கிறான், ஆனால் அவனால் அவமானபட்ட அந்த பெண் அவனின் அந்த வார்த்தைக்கு அடிபனியாமல் இன்னமும் 2 நாள் இருக்கட்டும் அப்போது தான் புத்திவரும் என விட்டு விடுகிறாள். ஆனால் அவனோ தொடர்ந்து அன்பே ஆருயிரே என்று அன்பொழக கதர, அவள் இலகி, இப்படி ஒரு அன்பான வாழ்க்கை தனக்கு கிடைக்க போவதை நினைத்து சந்தோஷமும் கொள்கிறாள், அழகாக ஆடை, அலங்காரம் செய்து கொண்டு 6 வது நாள் அவனை திறந்துவிட செல்கிறாள். ஆனால் அவனை சரியான நேரத்திற்கு திறந்து விடாததால் பசியாலும், பாய்லர் சூடு தாங்காமலும் இறந்து போய் கிடக்கிறான். இறுதியில் இறந்த அவனின் உடலை மடியில் கிடத்திக்கொண்டு எனக்கு வாழ்வளிக்கிறேன் என்றாயே, வா போகலாம்..என்று அழுது புலம்புகிறாள்..

திரைபடம்: ஹெட் ஜூயிதே நாடு: நெதர்லாந்து இயக்குனர்:- மார்டின் கூல்ஹோவன்

இந்த பெண்களின் உணர்வுகளையும், அவர்களின் மன போராட்டாங்களையும், தாழ்வு மனப்பான்மையும் ஆண்களால் புரிந்து கொள்ள முடியுமா?..இப்படியுள்ள பெண்களை காமக்கண் கொண்டு பார்க்காமல், காதலுடன் பார்க்க முடியுமா?. உடம்பை தாண்டி அவர்களுக்கும் ஒரு மனம், உணர்வுகள் இருக்கிறது என்பதை உணரமுடியுமா?..

அணில் குட்டி அனிதா:- என்னங்க..? கவிதா நிறைய கேள்வி கேட்டு இருக்காங்க.. எப்பவும் போல நீங்களும் பதில் சொல்றேன் பேர்விழின்னு திட்டி தீருங்க.. என்னவோ பொம்பளைங்களுக்கு தான் மனசு இருக்காமாம், ஆம்பளைங்களுக்கு இல்லையாமாம்..
நாம எல்லாம் சிம்ரன் ரேஞ்சுக்கு பொண்ணு பார்ப்போம்.. நாம தொட்டா ஒட்டிக்கற கலர்ல இருப்போம்...ஆனா..நமக்கு கண் கூசர அளவுக்கு கலரா பொண்ணு பார்ப்போம்... கருப்பா, குண்டா, குட்டையா, பல் சரியா இல்லைனா, எல்லாத்தையும் விட தலை முடி நீட்டா இல்லைனா (தலமுடிகூட த்தானே நாம வாழ போறோம்) பெண்ணை பிடிக்கலைன்னு சொல்லிடுவோம்........அழகு மட்டுமா..நல்லா படிச்சிருக்கனும், வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்கனும்..........hold hold..நான் என்ன கவிதாவுக்கு support பண்ற மாதிரி இருக்கு?!!

தப்பாச்சே...நான் எப்பவும் ஆம்பளைங்களுக்கு தாங்க support... இந்த மாதிரி breast இல்லாத பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்படிங்க..எப்படிங்க..நினைச்சுக்கூட பார்க்க முடியல..உவ்வே...! ஏதாவது நடக்கற விஷயமா கவிதாவ பேச சொல்லுங்க....அம்மனிய நம்மால direct ஆ திட்ட முடியல... வேற யாராவது திட்டினா.. நமக்கு சந்தோஷம் தாங்காதுங்கோ....! ம்ம். ம்ம்..proceed........