சென்னையில், இப்ப பார்க்கற இடமெல்லாம் பசங்க "பிரேமம் தாடி" யோட இருக்காங்க. முதல்ல வீட்டிலிருந்து ஆரம்பிக்கிறேன்..
எம்புட்டு அழகா , ரவுண்டா, வெல்லக்கட்டி மாதிரி ஒரு புள்ளைய பெத்து, அதுக்கு நல்லது கெட்டதை எல்லாம் தேவைப்படும் போது சொல்லிக்கொடுத்து, எப்பவும்.."குட் பாய்'யா இருக்கியா?" ன்னு கேட்டு கேட்டு கன்ஃபார்ம் செய்துக்கிட்டு....வளத்தா....... இந்தப்பய.. மூஞ்சி முழுக்க தாடி வச்சிக்கிட்டு, அதான் Style, Comfort னு சொல்லிட்டு இருக்கு..
(உடனே நீங்க நடுவுல வந்து "நல்லப்புள்ளைக்கும் தாடிக்கும் என்ன சம்பந்தம் னு கேக்கப்பிடாது... கேட்டாலும் அதுக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது, அதனால கேள்விக்கேக்காம, அமைதியா படிக்கிற வழியப்பாருங்க)
தாடியோட அவன் முகத்தை ப்பார்க்கும் போது... "இவன் என் புள்ள தானா" ன்னு எனக்கே சந்தேகம் வந்துடுது. ஏன்னா நவீன் அப்படியே அவங்க அப்பா ஜாடை, அவர் இவ்ளோ தாடிவச்சி நான் பார்த்ததேயில்ல, ஆக இந்த முகம் எனக்கு பரிச்சயம் இல்லா முகமாவே இருக்கு..
ஃப்ரான்ஸ் போகும் போது ஃப்ரென்ச் பியர்ட்' இல்லைன்னா 'கோ(Go)ட்டி' னு ஒன்னு வச்சித்தான் தீருவேனு அவன் அடம் பிடிக்க.." முடியவே முடியாது அச்சு அசலா தீவிரவாதி மாதிரியே இருக்க... சென்னை செக்கிங்''ல சந்தேகத்துல பிடிச்சி வச்சி விசாரிப்பான்.. அவன் விசாரிச்சா உன் வாய் சும்மா இருக்காது.. நீ ஏடா கூடமா பதில் சொல்லுவ , கடுப்பாகி.. என்னா வேணா பண்ணுவாங்க.. விமானமே ஏறமுடியாம போகலாம்.. முதல்ல தாடிய எடு" னு நானு ஒரு பக்கம் இம்சை செய்ய...
"யம்மா...தாயே.....ஒரு தாடிக்கு இவ்ளோ பெரிய பில்டப், டெரரிஸ்ட் ஸ்டோரி எல்லாம் ரொம்பவே ஓவரா தெரியலையா உனக்கு....?" ன்னு கேட்டுட்டு... நீ என்ன சொல்றது நான் என்ன கேக்கறதுன்னு முடிவெட்டும் கடைக்குப்போயிட்டான்..
இதா பக்கத்துல தான்...நமக்கு தெரிஞ்ச கடை தான், இந்த பய சின்னப்புள்ளையிலிருந்து அங்க தான் வெட்றான். 15 நிமிடம் கழித்து, கொட்ற மழையில், குடைய எடுத்துக்கிட்டு பின்னாடியே போனேன். நினைச்சபடி நாற்காலியில் உக்காந்துட்டு இருந்தான்... முடிவெட்டுபவர் தலையில் வேலைப்பாத்துட்டு இருந்தாரு.
"தம்பி இங்கப்பாருப்பா..அவரு இன்னைக்கு வெளிநாடு போறாரு.. கோட்டி வை, ஃப்ரென்ச் பியர்ட் வை ன்னு கேப்பாரு, எதாச்சும் வச்சி அனுப்பாத, பாஸ்போர்ட் ல வேற ஃபோட்டோ இருக்கு...முகம் வேற மாதிரி தெரிஞ்சா, என் புள்ளைய ஏர்போர்ட்ல போலிஸ் புடிக்கும்.. ..அப்புறம் அதுக்கெல்லாம் காரணம் நீதான்னு உன்னை சும்மா விடமாட்டேன் சொல்லிட்டேன்.." னு சொன்னது தான்.. அவனும் தொறந்தவாய மூடல.. என் புள்ளையும் கடுப்பா என்னை முறைக்க...." .இரண்டுப்பேரும் சுதாரிச்சி திரும்ப பதில் பேசறதுக்கு முன்னாடி.. யூடெர்ன் அடிச்சி, வீட்டுக்கு ஓடி வந்துட்டேன்.
வந்தான் பாருங்க என் புள்ள..!!! வழிச்சிவச்ச கோழியாட்டும்!!!!..அட அட அட என்னா அழகு.. :). அம்மா கண்ணே பட்டுப்போச்சி..!!! கிட்டக்க போகாமல் தூராம இருந்தே சுத்திப்போட்டுக்கிட்டேன்
என்னை முறைச்சிட்டு, (வீட்டில் விருந்தாளிகள் இருந்ததால்) நேரா என் வூட்டுக்கார்கிட்ட போனான்.. "எங்கெருந்துப்பா இத கல்யாணம் செய்துக்கிட்டு வந்தீங்க..?" முடி வெட்டற கடைக்கு வந்து.. அந்த அண்ணன் கிட்ட சத்தம் போடறாங்கப்பா.....முடியலப்பா...
ம்க்கும்...இனிமே யார் நம்மை எப்படி திட்டினா என்ன..? தாடிய எடுத்தாச்சு அது போதும்..னு வூட்டுக்கார் பக்கம் திரும்பவேயில்லயே....யார்கிட்ட??!!
ஆனா.. இப்ப கதையே வேறயா இருக்கு.. !!!
பெரிய மனுசர் ஆகிட்டாரு. எதுக்குமே பதில் சொல்றது இல்லை. நானும் வந்த 10 நாளா தினப்படி "தாடிய எடுடா எடுடா.. யாரோ மாதிரி இருக்குடா" ன்னு சொல்றேன். ஒரே வார்த்தை "முடியாது".
நடுவில் டூர் போயிட்டு வந்தாரு. அந்த ஃபோட்டோவெல்லாம் பாக்கும் போது தான் தெரியுது.. கூட இருக்க அத்தன பயலும் அடர்த்தியா தாடி வச்சிக்கிட்டு இருக்கானுங்க..
சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போறேன்.. அங்க.. அக்கா பசங்க, அண்ணன் பசங்க எல்லாரும் தாடி. இதுல ஒரு அண்ணன் பையன் முறுக்கு மீச வேற... யார்னே அடையாளம் தெரியல.. அந்த பய..இப்பதான் கல்லூரி 3 ஆம் ஆண்டு படிக்குது. காலேஜ்'ஜில் எப்படிடா விடறாங்க? ன்னு கேட்டா... "அப்பப்ப அப்பா அம்மாவ கூப்பிடுவாங்க , இவங்களும் வருவாங்க.. அப்ப மட்டும் ஷேவ் செய்துக்குவேன்.. திரும்ப வளத்துக்குவேன்னு" அசால்ட்டா சொல்றான்.
இரண்டு நாள் பயணமாக வந்த என் வீட்டுக்காரரும் நவீனிடம் "இப்படி தாடி வச்சிக்கிட்டு ஆபிஸ் போகறது நல்ல பழக்கம் இல்ல" ன்னு சொல்லிப்பாத்தாரு.. "அப்படி எதும் கட்டுப்பாடு இல்ல... 90% நாங்க எல்லாருமே தாடி தான்.. அவங்க ஒன்னும் செய்ய முடியாது"ன்னு பதில் சொல்றான்.
பாக்கற இடத்தில் எல்லாம் பசங்க..தாடியோட தான் இருக்காங்க.... எல்லாத்தும் அடிப்படை.. இந்த பிரேமம் படம் தான் போல...
தேர்தல் நேரம், சிம்பு ஓட்டுப்போட வந்த வீடியோவை பார்த்து, அடடே தாடியோட பாத்தா நம்ம புள்ளையாட்டும் இருக்காரே,ஆபிஸ் விட்டு வரட்டும் சொல்லலாம்னு.. வந்தவுடனே "தாடியோட நீ சிம்புவாட்டம் இருக்க..அப்ப உனக்கும் நிறைய பொண்ணுங்க ஃபேன்ஸ் கிடைப்பாங்க இல்லாடா? ன்னு கேட்டேன்.....
கிர்ர்ர்னு முகம் மட்டும் மாறிச்சி ஒன்னும் பதிலில்லை. ஆனா அடுத்தநாளே... தாடிய ஒட்ட ட்ரிம் பண்ணிட்டு வந்துட்டான். என் கண்ணே பட்டுடும் போல...
இனிமே "சிம்பு" அடிக்கடி உதவுவார்னு நினைக்கிறேன். !! :)
பீட்டர் தாத்ஸ் : “...'beard' isn't really a superpower.” ― Amy Leigh Strickland, The Pantheon
3 - பார்வையிட்டவர்கள்:
//நல்லப்புள்ளைக்கும் தாடிக்கும் என்ன சம்பந்தம்?//
அதான!!.. என்ன சம்பந்தம்? ;-)
:)))
:))
Post a Comment