புதுச்சேரி'ஐ தொடர்ந்து குற்றாளம், கோவா, ஹோக்கேனக்கல் போன்ற இடங்களிலும் இதேக்கதை தான். மிக மோசமாக அருவருத்து முகம் சுளிக்கும் விதமாக இருந்தது 'ஹோக்கேனக்கல்'. திரும்பியப் பக்கமெல்லாம் குடிகாரர்கள், கெட்டவார்த்தை, தள்ளாட்டம், வாந்தி, சண்டை, துர்நாற்றம். பார்க்குமிடங்கள் எல்லாம் காலி பாட்டில்கள் சிதறிக்கிடந்தன. ஒரு சில இடங்களில் பாட்டில்களை போட்டிப்போட்டு பாறைகளில் சரமாரியாக அடித்து உடைத்து வைத்திருந்தார்கள். ஓடையிலும் ஆற்றிலும் பாட்டில்கள், ப்ளாஸ்டிக் டம்ளர்கள் மிதந்தன.புதுச்சேரி, குற்றாளம் & கோவா 'விலும் குடிகாரர்களை அதிகம் பார்த்தாலும் 'ஹோக்கேனக்கல்' அளவிற்கு மோசமில்லை.
குறிப்பாக குடிப்பதற்கென்றே இங்கே வருகிறார்கள் போல தெரிகிறது. மீன் வறுவல் ஒரு பெரிய வியாபாராமாக இருப்பதால், குடிகாரர்களுக்கு கேட்கவே வேணாம் கொண்டாட்டம் தான். தண்ணி, சைட் டிஷ் மீன், எண்ணெய் மஸாஜ், அருவி , ஆறு குளியில் என அடித்து ஆட்டம் போடுகிறார்கள்.
இதற்காகவே அங்கீரக்கப்படாத மதுபானக் கடைகள் மலை இடுக்குகளில் ஜெனரேட்டர் வசதியோடு அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து ரக மதுபானங்களும் இங்கு கிடைக்கின்றன. இக்கடைகளுக்கு குடிகாரர்களை அழைத்து வரும் பரிசல்காரர்களுக்கு கமிஷனும் வழங்கப்படுகிறது.
நிற்க, குடித்துவிட்டு ஆட்டம் போட நினைப்பவர்கள் கவனிக்க வேண்டியவை. நீங்கள் செல்லுமிடம் -
1. பொது இடம்
2. குழந்தைகள் மற்றும் பெண்களும் ஓய்வையும் சந்தோஷத்தைத்தையும் நிம்மதியையும் தேடிவரும் இடம்
3. அருவி,ஆறு, கடல், காடு, மலைகள் சார்ந்த இடங்கள் என்பதால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் அதிகம்.
4. குடித்துவிட்டு வீசும் பாட்டில்கள், ப்ளாஸ்டிக் டம்ளர்கள்
போன்றவை சுற்றுப்புறத்தை அசுத்துமாக்குவது மட்டுமில்லாமல், ஆறு, அருவி
நீரோட்டங்களில் மிதந்து அவற்றின் அழகையும்
குலைக்கின்றன.
5. ஆறு, கடல் வாழ் உயிரினங்களுக்கும் இவை தீங்கை விளைவிக்கும்.
5. ஆறு, கடல் வாழ் உயிரினங்களுக்கும் இவை தீங்கை விளைவிக்கும்.
6. இவை எல்லாவற்றையும் விட, குடி போதையில் பேசும் வன்மையான
முகம் சுளிக்க வைக்கும் கெட்ட வார்த்தைகள், பொது இடங்களில், நடக்கும்,
உட்காரும் இடங்களில் வாந்தி எடுத்தல், நிதானம் இழந்து வருவோர் போவோர் மேல்
வந்து விழுதல் போன்றவை சகித்துக்கொள்ள முடியாதவை.
குடித்து கும்மாளம் அடிக்க விரும்புவோர், யாருக்கும் தொந்தரவு இல்லாத தனிமையான இடங்களைத்தேடி செல்லலாமே. ஒருத்தன் குடிச்சிட்டு இருந்தாலே கஷ்டம், இதில் கூட்டம் கூட்டமாக குடித்துவிட்டு ஒன்றாக ஆட்டம் போட்டால்..?!! என்ன கொடுமை இது? குடித்து நிதானம் இழக்க விரும்புவோர், பொது இடங்களை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். அதை நிதானத்தில் இருக்கும் போதே முடிவு செய்யலாமே.. ?
அவங்க கடமை போல, ஆங்காங்கே "குடித்துவிட்டு அருவியில் குளிக்காதீர்கள்" ன்னு எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் அங்கீகரிக்கப்படாத கடைகள் இவர்களுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. என்றோ ஒருநாள் சென்ற எனக்கே மலையை சுற்றி இடுக்குளில் எத்தனை கடைகள் இருக்கின்றன என்பதை தொலைவிலிருந்து பார்த்தே ஊகிக்க முடிந்தது.
நன்றாக குடித்துவிட்டு, எண்ணெய் மஸாஜ் செய்துக்கிட்டு, போதை இறங்காமல் இருக்க கையில் பாட்டில், டம்ளர்களோடு அருவியிலும் ஆற்றிலும் இறங்கி கும்மாளம் அடிக்கும் கூட்டத்தை தொடர்ந்து பார்க்கமுடிந்தது.
என் கணவரோடு சென்றிருந்தாலுமே, எப்ப எவன் வந்து நம்ம மேல விழுவான், வாந்தி எடுப்பான்னு ஒரு பயம் இருந்துட்டே இருந்தது. அவர்கள் நிதானத்தில் இல்லை என்பது தெரிந்த விசயம்... அவர்கள் தவறாக நடக்க முயன்றால் அவர்களை என்ன செய்ய முடியும். யாருமே தனியாளாக இல்லை, எல்லோருமே கூட்டமாக வந்திருக்கின்றனர். பொது இடங்கள் தவிர்த்து, நல்ல பாதுகாப்பான விடுதியில் தங்கியிருந்தாலும், எந்த நேரத்தில் அக்கம் பக்கத்து அறைகளில் இருக்கும் குடிகாரர்கள் வந்து கதவைத்தட்டி கலாட்டா செய்வார்கள் என்ற பயம் எனக்குள் இருந்தது. "நீங்க தமிழ் சினிமா நிறைய பார்க்கறீங்கன்னு" சொல்ல நினைப்பவர்களுக்கு, நாட்டில் உண்மையில் நடக்கும் விசயங்கள் நிச்சயம் அறிந்திருக்கும்.
ஹோக்கேனக்கல், அருவிகள் பல சூழ்ந்து, சில்லென்று சிலுசிலுவென்ற சத்தத்தோடு வேகமாக ஓடும் ஆறு, பாறைகளுக்கு நடுவில் ஆற்றில் பரிசல் பயணம் என மிக ரம்யமான இடம்.. ரசிக்க முடிந்தது தான்.. ஆனால் ஆற்றிலோ, அருவியிலோ நிம்மதியாக அக்காடான்னு நம்மை மறந்து குளிக்க முடியவில்லை....
குடிகாரர்களே, கண்ணுக்கு குளிர்ச்சியையும், மனதுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரக்கூடிய சுற்றலா இடங்களை எந்தவிதத்திலும் அசுத்தப்படுத்தாமல் அச்சுறுத்தாமல் தயவு செய்து வேறு இடம் தேடுங்கள்......
இந்தப்பதிவு - எல்லா குடிகாரர்களுக்கும் சமர்ப்பணம்.
அணில்குட்டி : ம்க்கும்..... எங்கப்போனாலும் இந்த அம்மணிக்கு மட்டும் இந்த மாதிரி எழுத எதாச்சும் மேட்டர் கிடைச்சிடும்........
பீட்டர் தாத்ஸ் : “First you take a drink, then the drink takes a drink, then the drink takes you.” ― F. Scott Fitzgerald
படங்கள் : நன்றி கூகுள்
20 - பார்வையிட்டவர்கள்:
அவ்வ்வ்வ்வ்...
என்னத்த சொல்றது. எல்லா சுற்றுலா தளங்களிலும் இலைமறை காயாக நடந்துகொண்டிருந்த விஷயங்கள் இப்போ பொதுவெளியில் சர்வ சாதாரணமாக நடபதையும், எந்த அமைப்பும் இதை கேள்வி கேட்காமல் இருப்பதாலேயும், பெண்கள், குழந்தைகள், குடி ஜோதியில் கலக்காத இதர ஆண்கள் எல்லோருக்குமே ஒரு மரண அவஸ்தையாக சொந்த செலவில் சூனியமாக இது போன்ற இடங்கள் மாறிவிட்டிருப்பதுதான் காலக்கொடுமை...
ம்ஹூஊஊம்.... சமூகம் திருந்தாது.
@கும்க்கி
// பெண்கள், குழந்தைகள், குடி ஜோதியில் கலக்காத இதர ஆண்கள் எல்லோருக்குமே ஒரு மரண அவஸ்தையாக சொந்த செலவில் சூனியமாக இது போன்ற இடங்கள் மாறிவிட்டிருப்பதுதான் காலக்கொடுமை...//
உண்மை.. :(
@ரவி : ஆமா...
ஒருத்தன் குடிச்சிட்டு இருந்தாலே கஷ்டம், இதில் கூட்டம் கூட்டமாக குடித்துவிட்டு ஒன்றாக ஆட்டம் போட்டால்..?!! என்ன கொடுமை இது? குடித்து நிதானம் இழக்க விரும்புவோர், பொது இடங்களை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். அதை நிதானத்தில் இருக்கும் போதே முடிவு செய்யலாமே.. ?
-நல்ல அறிவுரை.
தனக்கு வருமானம் வருவதால் அரசும் கண்டுகொள்ளாதது வருத்தத்துக்குரியது.
//குறிப்பாக குடிப்பதற்கென்றே இங்கே வருகிறார்கள் போல தெரிகிறது.//
எது என்ன கேள்வி..
எங்களுக்கென்று தனியாக இதைப்போல சூழலுடன் கூடிய இடம் இல்லாததால் நாங்கள் இப்படிப்பட்ட இடங்களுக்கு வார வேண்டி உள்ளது.
- குடிகாரர்கள் சங்கம்
@தங்கராஜூ : கவலப்படாதீங்க.. இன்னும் கொஞ்சநாளில் இந்த இடம் உங்களுக்காகவேன்னு அரசு ஆக்கிடுவாங்க...
ஏன்னா மத்தவங்க யாரும் அங்க போகிற நிலைமையே இருக்காமல் செய்துடுவீங்க...
@ முனைவர் இரா.குணசீலன் : நன்றி
அரசு அங்கீகாரம் இல்லாமல் நடக்கும் கடைகளிலிருந்துக்கூட அரசுக்கு வருமானம் வருமோ?
பல இடங்களில் இதே தொல்லை தான். இந்த குடிகாரர்கள் இல்லாத இடமே இல்லை கவிதா.... இந்தியா முழுதுமே இதே தான்! நான் சென்றிருக்கும் பல மாநிலங்களில் இத்தொல்லைகளைக் கண்டதுண்டு!
@வெங்கட் நாகராஜ் : நன்றி
புதுத்தகவல். தமிழ்நாட்டில் தான் இங்கிதம் தெரியாமல் அதிகமாக நடக்கிறது என்று நினைத்தேன்.
***குடிகாரர்களே, கண்ணுக்கு குளிர்ச்சியையும், மனதுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரக்கூடிய சுற்றலா இடங்களை எந்தவிதத்திலும் அசுத்தப்படுத்தாமல் அச்சுறுத்தாமல் தயவு செய்து வேறு இடம் தேடுங்கள்......***
இது போஸ்ட் மாடெர்ன் உலகம்ங்க. குடிக்கக்கூடாதுனு சொல்றது கெட்டவார்த்தை. குடிகாரர்கள் மரியாதையாக, மிஸ்டர் குடிகாரர்னு சொல்லணும்னு சொல்கிற குடிகாரப்பயலுக மெஜாரிட்டியாகிவிட்ட உலகம். அதனால நீங்க இப்படியெல்லாம் சட்டம் கொண்டு வர முயன்றால், இவர்களைப் பார்த்து கடிந்து எழுதினால், நீங்கள் வெறுக்கப் படுவீர்கள். மேலும் அப்படி சட்டம் கொண்டுவ்ர இயலாது. ஏன் என்றால் குடிக்காதவங்க மைனாரிட்டிபோல் எனக்குத் தோணுது.
ஆனால் இதுபோல் பதிவெழுதி நம்ம ஆசையைத் தீர்த்துக்கலாம். அது உங்கள் பேச்சுச் சுதந்திரம். பேச்சுச் சுதந்திரத்துக்கு மெஜாரிட்டி வாக்குகள் தேவை இல்லை! :)
@கவிதா:
அவ்வ்.. என்னை சங்கத்திற்கு தலைவர் ஆக்கி விட்டுடுவீங்க போல இருக்கே.
இதுவரை ஒகேனக்கல் 2 முறை மட்டுமே சென்று இருக்கிறேன். அதிலும் முதல்முறையே,
உடைந்த கண்ணாடி துகளில் கால் கிழிந்த சம்பவத்தையும் நேரில் பார்த்துள்ளேன்.. இது மிகவும் கொடுமை..
@வருண் : :))
//இவர்களைப் பார்த்து கடிந்து எழுதினால், நீங்கள் வெறுக்கப் படுவீர்கள்//
இவங்க நம்ம வெறுத்தா என்ன வெறுக்காட்டி என்ன?
கடமையை செய்வோம்.. பலனை எதிர்பாராமால்.. யாரோ ஒருத்தர் இருவர் இதைப்பாத்து பொது இடத்தில் தண்ணி அடிக்காமல் இருந்தால் போதுமே...
@தங்கராஜூ : நீங்க தானே சங்கத்துசார்பாக பேச வந்தீங்க? :))
//முதல்முறையே,
உடைந்த கண்ணாடி துகளில் கால் கிழிந்த சம்பவத்தையும் நேரில் பார்த்துள்ளேன்.. இது மிகவும் கொடுமை.. // ம்ம்ம்ம் ... :((((
அப்பாடா இந்தவாட்டி தாத்ஸ் சொன்னது புரிஞ்சுட்டுது ...?
@ஜீவன் சுப்பு : :)) தண்ணி சம்பந்தப்பட்டதில்ல..அதான் புரிஞ்சிட்டிருக்கும்....
தண்ணி சம்பந்தப்பட்டதில்ல..அதான் புரிஞ்சிட்டிருக்கும்...//
லொள் ...!
பச்ச தண்ணிய கூட வடிகட்டிக் குடிக்குற பயங்க நானு ...என்னையப் போயி ....
நானே சொல்லப்புடாது நா ரெம்ப ரெம்ப நல்லவேங்க....
@ஜீவன் சுப்பு: :)))))
சரி .. அப்பன்னா இன்னைக்கு பீட்டர் தாத்ஸ் தண்ணி அடிச்சியிருக்கார்ன்னு வச்சிக்கலாம்.. அதான் புரிஞ்சிடுச்சி..:))
Deal okaykka ...!
குடிமகன்களைப் பற்றிய விரிவான பதிவிற்கு நன்றி :)
அக்கா, இப்பல்லாம் குடிகாரனை யாரும் எதுவும் சொல்றதில்லை.. “அவனே குடிச்சிருக்கான், பாவம்”னு சொல்ற லெவல்லதான் இருக்கு. குடிச்சிட்டு நம்ம வண்டியில் வந்து மோதினாலும் சரி, நம்ம மேல மோதினாலும் சரி, “அவன் குடிச்சிருக்காம்மா, அவனுக்கு என்ன தெரியும்? நீதான் பாத்துப் போகணும்..” என்று சொல்லுமளவு சமூகம் குடிகாரர்கள்மீது பரிதாபப்படத் தொடங்கிவிட்டது.
இன்னுங் கொஞ்ச நாளில் குடிக்காதவர்கள்தான் பாவிகள் என்ற நிலை வந்துவிடும்!! :-(
Post a Comment