பார்வைகளில் இது ஒன்னு தான் பாக்கி. வருசங்களாக இந்த லேபிலின் கீழ் பதிவுகள்
எழுதனும்னு நினைப்பேன், இருப்பதையே தொடர்ந்து சரியா எழுதமுடியல..இதுல இது
வேறையான்னு நினைச்சி விட்டுடுவேன். சில அழகு மற்றும் வீட்டுக்குறிப்புகளை தேவைப்படும் போது
மறந்துப்போறேன், சரி, எழுதி வைத்தால் பயன்படுமேன்னு......
அழகுக்குறிப்புகள் :
=> வீட்டில் எப்போதும் கஸ்தூரி மஞ்சள் பொடி வைத்துக்கொள்வது நல்லது.
கஸ்தூரி மஞ்சளை - எலுமிச்சை சாறு, முல்தாணிமட்டி, வேப்பிலை விழுது,
துளசி விழுது, கடலைமாவு, பைத்தம்மாவு, கசக்கசா விழுது, பார்லி விழுது, தேன், பப்பாளி பழம், தக்காளி என எவற்றோடும் சேர்த்து பயன்படுத்தலாம். .
பயன்கள் : முகத்தில் கரும் புள்ளிகள் மறையும், பருக்கள் வராது. தொடர்ந்து செய்துவந்தால் முகச்சுருக்கம் நீங்கும். பரு, சூடுக்கட்டிகள், காயங்களை குணப்படுத்தும்.
வீட்டுக்குறிப்புகள் :
=> அவன் (oven) சுத்தம் செய்ய வினிக்கரை பயன்படுத்தினால் எண்ணெய் பசை நீங்கி.. பளீச்'சுனு சுத்தம் ஆகிடும்..
=> வீடு துடைக்கும் போது தண்ணீரில் சிறிது ஷாப்பூ போட்டுத்துடைத்தால், நறுமணம் + சுத்தம்.
சமையல் குறிப்புகள் :
=> கட்டி பெருங்காயத்தை சின்னத்துண்டுகளாக உடைத்து, சிறிது எண்ணெய் விட்டு பொரித்து, ஆறவைத்து டப்பாவில் கொட்டிவைத்துக்கொண்டால்,
சமையலில் சேர்க்கும் போது எளிதாக கரைந்துவிடும். தாளிக்கும் போது மறந்தாலும் பின்பு சேர்ந்துக்கொள்ளலாம்.
=> தேங்காய் சேர்த்த எந்த பொரியலிலும்,
தேங்காவோடு கொஞ்சம் இஞ்சியையும் சேர்த்து துருவி சேர்த்தால் சுவையும் சூப்பர், செரிமானத்துக்கும் நல்லது.

=> பாதங்களை வீட்டில் சுத்தம் செய்துக்கொள்ள, சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறு, உப்பு (கல் உப்பாக இருந்தால் சிறந்தது), ஷாப்பூ சேர்த்து நன்கு கலக்கி அதில் பாதங்களை ஊறவைத்து சுத்தம் செய்யலாம்.
=> பாதங்களில், முட்டிகளில் ஏற்படும் கருப்பு மறைய சியக்காய் (வீட்டில் தயாரித்த) பொடியை குழைத்து 15 நிமிடம் ஊறவைத்து, குளிர்ந்த நீரில் சுத்தம் செய்துவர நீங்கும்.
=>
வீட்டு சுவற்றில் ஆணி அடிக்காமல், முடிந்தளவு சுவிட்ச் போர்ட் கீழ்பக்கம்
இருக்கும் ஸ்க்ரூக்களை லூசாக்கி, அதில் காலண்டர், லெட்டர் பாக்ஸ், சாவி
ஸ்டான்ட் போன்றவற்றை மாட்டிவைக்கலாம்.
=> ஸ்டிக்கர்
பொட்டுகளை பீரோ, வாஷ் பேசின் கண்ணாடி, பாத்ரூம்
சுவர்களில் ஒட்டுவதற்கு பதிலாக, அங்கே காலியான பொட்டு பாக்கெட்டை கட்டி வைத்தால், அதில் இந்த பொட்டுகளை ஒட்டுவைத்து பயன்படுத்தலாம். கண்ணாடி & சுவரில் அழுக்கு சேராது.
சுவர்களில் ஒட்டுவதற்கு பதிலாக, அங்கே காலியான பொட்டு பாக்கெட்டை கட்டி வைத்தால், அதில் இந்த பொட்டுகளை ஒட்டுவைத்து பயன்படுத்தலாம். கண்ணாடி & சுவரில் அழுக்கு சேராது.
=> அவன் (oven) சுத்தம் செய்ய வினிக்கரை பயன்படுத்தினால் எண்ணெய் பசை நீங்கி.. பளீச்'சுனு சுத்தம் ஆகிடும்..
=>
எந்த துணியில் சாயம் பிடித்தாலும் கைகளால் நன்கு துவைத்து, வெயிலில் 2-3
நாள் காயவைத்தால் சாயம் முழுமையாக போய்விடும்.. துணியின் கலர் லேசாக
மாறவும் செய்யும்.
=>
செடிகளுக்கு தேதிகள் முடிந்தப்போன பழைய மாத்திரைகளை நுனுக்கி போடலாம். உரமாக இருக்கும்.
=> வீடு துடைக்கும் போது தண்ணீரில் சிறிது ஷாப்பூ போட்டுத்துடைத்தால், நறுமணம் + சுத்தம்.
சமையல் குறிப்புகள் :
=> கட்டி பெருங்காயத்தை சின்னத்துண்டுகளாக உடைத்து, சிறிது எண்ணெய் விட்டு பொரித்து, ஆறவைத்து டப்பாவில் கொட்டிவைத்துக்கொண்டால்,
சமையலில் சேர்க்கும் போது எளிதாக கரைந்துவிடும். தாளிக்கும் போது மறந்தாலும் பின்பு சேர்ந்துக்கொள்ளலாம்.
=> தேங்காய் சேர்த்த எந்த பொரியலிலும்,
தேங்காவோடு கொஞ்சம் இஞ்சியையும் சேர்த்து துருவி சேர்த்தால் சுவையும் சூப்பர், செரிமானத்துக்கும் நல்லது.
Images courtesy : Google.
அணில் குட்டி : ஒய் த லேபிள் நேம் ஈஸ்.. "கன்யா" ?!! அம்மணி.... நேம் காரணம் ப்ளீஸ்...
பீட்டர் தாத்ஸ் : “The career of motherhood and homemaking is beyond value and needs no justification. Its importance is incalculable.”
―
Katherine Short
0 - பார்வையிட்டவர்கள்:
Post a Comment