நமக்கு நாமே திட்டமிடல் - எல்லா பிஸி நண்பர்களுக்கும்.!!

நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள் எல்லோரும் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வார்த்தை "நான் ரொம்ப பிஸி.." அதனால் சில வேலைகளை செய்ய முடியவில்லை, அல்லது நம்மை தொடர்பு கொள்ள முடியவில்லை, நாம் தொடர்பு கொண்டாலும் பேச முடியவில்லை, ஏன் நாம் அனுப்பும் மெயிலுக்கு கூட பதில் போட நேரம் இல்லை என்று சொல்லுவார்கள். ஒரு மெயிலுக்கு பதில் போட 2-3 நிமிடங்கள் ஆகுமா? முழுமையாக ஒருவருக்கு பதில் அளிக்க முடியவில்லை என்றாலும், உங்களின் மெயிலுக்கு / அழைப்புக்கு கூடிய விரைவில் பதில் அளிக்கிறேன் என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க முடியும் தான். இதற்கு நம்முடைய சோம்பேறி தனம், மெத்தனம் காரணமே ஒழிய நேரமின்மையை காரணமாக கொள்ளமுடியாது. மெயில் வாசிக்கும் போதே அதற்கு பதில் அனுப்பிவிட முடியும். (முடியும் என்றால் முடியும் தானே?!! ). இங்கு இன்னொரு விஷயமும் உள்ளது. வேண்டாம் - வேண்டாம் என்று நினைக்கும் போது, அந்த வேலையை செய்யவே வேண்டாம் தான். வேண்டாம் என்று நாம் நினைக்கும் விஷயத்திற்காக நிச்சயமாக நம் நேரத்தை கொஞ்சமும் வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை. முடியும் என்பதற்கும் வேண்டாம் என்பதற்கும் அதிக வித்தியாசங்கள் உண்டு. :)

வாழ்க்கையில், தொழிலில், செய்யும் வேலையில் முன்னேற்றமும், வெற்றியும் பெற்ற எல்லோருக்குமே இதே 24 மணி நேரம் தான் இருந்து இருக்கிறது. அதே நேரத்தை கொண்டு தான் அவர்கள் சாதித்தும் இருக்கிறார்கள். அவர்களால் முடிந்தது நம்மாலும் முடியும் அல்லவா?

இவர்களின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் மிக முக்கிய காரணம், அவர்களின் தினப்படி நாட்கள்,நாளையதினம், எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மட்டுமெ முன் நிற்கும். காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரையிலான நம் நேரத்தை எப்படி நாம் பயன்படுத்த போகிறோம் என்பதை திட்டமிட வேண்டும்.

திட்டமிடல் என்பது நம்முடைய எல்லா வேலைகளுக்கும் பொருந்தும். திட்டமிடல் ஒரு வட்டமாக சுற்றி சுற்றி வரக்கூடியது, ஒரே இடத்தில் நின்றுவிடுவது அல்ல. இன்று திட்டமிட்டால் நாளை திட்டமிட வேண்டியது இல்லை என்று அர்த்தமில்லை. தினமும் திட்டமிடல் அவசியம் ஆகிறது.

காலையில் எழுந்தவுடன், டைரியை எடுத்து அன்றைய தினம் செய்ய வேண்டியவேலைகளை பட்டியல் இட்டுக்கொள்ளவேண்டும். (மொபைலில் கூட ரெக்கார்ட் செய்து வைத்துக்கொள்ளலாம்) முந்தைய தினபட்டியலை சரிபார்த்து, செய்து முடிக்கமுடியாத வேலைகளை இன்றைய பட்டியலோடு இணைத்துவிட வேண்டும். இப்படி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் -

1. இன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் நம் புத்தி பதிவு செய்து கொள்ளும், அதன்படி அதை எப்படி செயற்படுத்தவேண்டும் என்று கண்டிப்பாக திட்டமிட்டு செய்துவிடுவோம்.
2.செய்ய நினைத்த ஒரு வேலையை செய்து, மற்றொன்றை அடடா மறந்துவிட்டோமே என்று நினைக்கவேண்டியது இல்லை.
3. வேலையின் பளுவின் காரணமாக நம்மை அறியாமல், சில வேலைகளை செய்ய மறந்து, அதனால் பல பிரச்சனைகள் வந்து சேரும், அதை தவிர்க்க முடியும்
4. ஒரு வேலைக்கு எவ்வளவு நேரம், அல்லது எவ்வளவு நாட்கள் எடுத்துகொள்கிறோம் என்று தெரிந்து போகும். நம்மை பற்றி, நம் வேலை திறனை பற்றி நமக்கே ஒரு சுயமதிப்பீடு கிடைக்கும்
5. இதை தொடர்ந்து செய்து வந்தால், நம் அன்றாட வேலைகள் ஒழுங்குப்படுத்தபடும்,
6. நம்மை அறியாமலேயே நாம், நம் வேலைகளில் முழுகவனம் செலுத்த உந்தப்படுவோம்.
7. அப்படி வேலையில் கவனம் செல்லும் போது, தேவையற்ற பேச்சு, கூட்டம் கூடி வெட்டி அரட்டை போன்றவை தானாக நின்று போகும், நல்ல முறையில் நம்முடைய நேரத்தையும் நாட்களை கழிக்க உதவும்.

திட்டமிடல் மட்டும் முக்கியமன்று அதை விடாப்பிடியாக செயற்படுத்துதல், தினமும் 10 வேலைகளை எழுதிவிட்டு தூங்கிக்கொண்டு இருந்தால் பயனில்லை. திட்டமுடும் போதே அதை செயற்படுத்த நம்மை தயார் படுத்திவிடவேண்டும். என்னுடைய இந்த மேனேஜர் vs டெமேஜர் பதிவில் சிலரை உதாரணங்கள் கொடுத்து இருப்பேன். அவர்கள் அத்தனை பேரும் வாழ்க்கையில் என் கண் எதிரில் சாதித்தவர்கள், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன. அதில் ஒன்று திட்டமிடல்.

சில அன்றாட வேலைகளின் திட்டமிடலும் அதற்கான நேரத்தையும் பார்க்கலாம்

1. அலுவலக நேரம் - 8 மணி நேரம் + அதிகப்படியாக - 1 மணி நேரம்
2. தூக்கம் - 8 மணி நேரம் (குறைந்தபட்சம் 7 மணி நேரம்) - 8 மணி நேரம்
3. பயண நேரங்கள் - 2 மணி நேரம் (இது எப்போதும் வெளியில் சுற்றி வேலை
பார்ப்பவர்களுக்கு பொருந்தாது.)
4. சாப்பாடு - 3 வேளையும் சேர்த்து - 45 நிமிடங்கள் (இதற்கு மேல் உட்கார்ந்து
சாப்பிட ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன், அலுவலக நாட்களில் 10 நிமிடங்களுக்கு மேல் உணவு அறையில் அமர்ந்தது இல்லை,ஆனால் நமக்கு கொடுக்கப்படும் இடைவேளை 1/2 மணி நேரமாக இருக்கும், அதில் 10-15 நிமிடங்கள் போதுமானது, மீதம் இருக்கும் 15 நிமிடங்களை க்கூட சரியான முறையில் பயன்படுத்த முடியும், உணவு அறையில் அரட்டை அடிப்பது ஒன்றும் மிக முக்கிய வேலையாகவோ அதனால் நம் மனம், உடல் ஓய்வு எடுக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. அப்படியே சிலருக்காக உட்காரவேண்டிய அவசியம் ஏற்பட்டால், அவர்கள் பேசும் சாரத்தை கவனித்து வைத்துக்கொள்வேன்.)
5. குழந்தைகள், உறவுகள் நிச்சயம் நேரம் ஒதுக்கவேண்டும் குறைந்த பட்சம் 30 நிமிடங்களிலிருந்து அதிகபட்சம் 2 மணி நேரம் ஒரு நாளைக்கு.
6. நம் படிப்பு - 30 நிமிடங்கள். எந்த சந்தர்பத்திலும் ஏதாவது ஒன்றை நாம் படித்துக்கொண்டு இருப்பது நலம். இது நம் அறிவு ஒட்டடை பிடித்துவிடாமல் இருப்பதற்கு உதவும்.
7. கேலிக்கை, பொழுதுப்போக்கு - 6- 10 மணி நேரம்- வாரத்திற்கு ஒரு முறை திட்டமிட்டுக்கொண்டால் நம் மனம் ஆரோக்கியமாக இருக்குமென்று நம்புகிறேன்.

தனித்தனியாக நேரத்தை பிரித்து சொல்லியிருந்தாலும் சில வேலைகளை சேர்ந்தும் செய்யலாம். பொதுவாக காலையில் நான் சமைக்கும் போது, துணியை ஒரு பக்கம் துவைத்துவிடுவேன். (வாஷிங்மிஷின் ல தாங்க). அதற்காக தனியாக எப்போதுமே நேரத்தை செலவு செய்வதில்லை. டிவி பார்த்துக்கொண்டு படிப்பது, எழுதுவது, குழந்தைகளுடன் , உறவினர்களுடன் நேரம் செலவு செய்வது செய்யலாம்.

சாப்பாடு, தூக்கம், அலுவலகம், வீட்டு வேலை, நம் படிப்பு, குழந்தைகள், பெற்றோர்,மனைவி, கணவர் இவை/இவர்கள் மிக முக்கியமாக தினப்படி கவனம் செலுத்தக்கூடிய வேலைகள். இவற்றிற்கான நேரத்தை சரிவர பகுத்து திட்டமிட்டுக்கொண்டால் எதற்கும், எவருக்கும் நேரமில்லை என்றோ, நான் ரொம்ப பிஸி..என்றோ சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டியது இல்லை.

அணில் குட்டி அனிதா: ம்ம்...கொஞ்சம் அசந்த நேரமா பாத்து ஆரம்பிச்சிட்டாங்களா "அட்வைஸ் அம்புஜம் "(பேரு நல்லா இருக்கா.இப்பத்தான் இன்ஸ்டன்டா கவி' க்கு இந்த நாமத்தை சூட்டினேன்..) சரி மக்கா கொஞ்சம் கூட யோசிக்கமா எல்லாருமா சேந்து அம்புஜம் ஒரு நாளை எத்தனை மணி நேரம் தூங்கறாங்கன்னு கேட்டுஊஊ......... அதுக்கு மேல நீங்க பாத்துக்குவீங்க.. அடுத்து.. இவிங்க செய்யற சாப்பாட்டை 10 நிமிஷம் என்ன 3 நிமிஷத்திலியே சாப்பிட முடியும்.. ஏன்னா அவ்வளவு கேவலமா இருக்கும்...ருசி பாத்து சாப்பிட்டீங்க செத்து இல்ல போவீங்க...!! பவ்வ்வ்வ்.. அம்புஜம் முறச்சிஃபை..மி.... ஒரு வேள நைட் சாப்பாடு இன்னைக்கு எனக்கு கட் ஆயிடுமோஓஓஒ....................?!!! :(

பீட்டர் தாத்ஸ் : “When planning for a year, plant corn. When planning for a decade, plant trees. When planning for life, train and educate people.”

அணில் குட்டி'யின் - "இந்தியன் கைஸ்" (Indian Guys)

You want this Indian guy

வேண்டாம் உன்

சிகிரெட்டில் கறுத்த உதடுகள்

I¢ll not be our Indian guy,

நீ தானே

கவிதை கன்றாவிகள்

You want this Indian guy,

நீ தானே

நான் தேடும் Indian guy

I¢ll not be our Indian guy, சாக்கடை தமிழில்


All over the world bring it down,
bring it down guy, guy, bring it
down, bring it down guy, guy, bring
it down bring it down guy, guy
All over the world I loved to beat my
Indian guys

சாக்கடை தமிழில், முறுக்கிய மீசை குரங்கா
black Indian curls

So stinky in the jeans pants country
Indian guys
Rockin¢ product

பான்பாரக் போட்டு கறைபிடித்த பல்லா !

my city Indian guys
Would u love me when I am too ugly?

சம்மதமா உனக்கு மூனு முடிச்சி
சுத்தி வளச்சி அடி வாங்கிக்க தெரியுமா?

Givin¢ givin¢ it when you lovin¢
lovin¢ I¢ll like a true லூசா (infinite)

[Anil kutty]


உன்னோட தண்ணீ நாத்தத்தில் எனக்கு குமட்டுதே.

still I
love them Indian guy

உன் கெட்ட மூச்சி வாசத்தில் தலையில் வச்ச பூ வாடிவதங்கி போச்சே

ஆணுக்கு என்ன பஞ்சம் மண்ணுமேல என்றாலும் உன்

போல எருமை இல்லையே சொல்லுடா,

கருப்புக்கு பாடம் சொல்லி கொடுத்தவனே

கையிலே பாட்டாலோடு உன் கண்றாவி போஸ்,

வர வர உனக்கு வால் முளைக்குது..!!

please don’t touch me

காலேஜ் ரவுடி காக்காத காக்கி யூனிஃபார்ம்
பாத்தாலே பயம்தரும் பக்கி பனாதி
அந்த ஒருவன் அவன் யாரோ
இந்த ஊரில் எங்கும் இருக்கானே..


இந்த மனசில் தோன்றத சொன்னா

கவி வீட்டுக்கு ஆட்டோ வருமே..


[Anilkutty]


All over the world I loved to beat my
Indian guy

நாத்தன் பிடிச்ச ஜீன்ஸ் பேண்டு அழகா

with
black Indian curls

So stinky in the jeans pants country
Indian guys

Rockin’ product குரங்கு புத்தி காரா
my city Indian guys

Would u love me when I look too ugly?

சம்மதமா உனக்கு மூனு முடிச்சி
சுத்தி வளச்சி அடி வாங்கிக்க தெரியுமா?


Givin¢ givin¢ it when you lovin¢
lovin¢ I¢ll like a true லூசா (infinite)

[Anilkutty]


கைய கட்டி கொஞ்ச நேரம்

நில்லு, Burn ஆகி உன்னை அடிக்க நினைக்கும் காரணத்தை கேளு

காரணத்தை கேளு

கொஞ்சம் காரணத்தை கேளு


காரணம் கேட்காவிட்டால் உன் தலை மட்டும் மிஞ்சும்

மத்தவை எல்லாம் பிய்யும்..

ஆடாம நில்லு அடி வாங்கும் போது

ஓடாதே நில்லு, உதவ யாரும் இல்ல லூசே

முன்ன ஒழங்கா வந்துடு, உதைக்கறதை இன்னும் வாங்கிக்கோ என் எருமையே, என்னை என்றும் இன்றும் மனதால் தீண்ட நினைக்காதே

சோம்பேறி, நா…தமிழா, எனபசலம் இன்னும் ஒரு தடவை
என் எதிரில் நடந்து கடந்து செல்

தாங்கமுடியாது என் அடி தொல்லை தான்

என்ன செய்யறது உன் முகம் பூராவும்

அடிச்ச அடியில் வீங்கி, புடைத்து இருந்தாலும்

அடிக்க பிடிக்கும் உன் கண்ணை நோண்ட பிடிக்கும்

அடிவாங்கிய உன் உடம்பு நடுங்குவதை பார்க்க

கரஞ்சுபோகுது like ice-cream புத்தி


மறுத்தும், பல மடங்கு மனசு சுகமாய்
தேடுதே ஒரு கட்டைய என் கை

சீக்கிரம் வா இன்று உன் மூக்கு மேல் மூன்னூரு

தையில் போட வைக்கிறேன்..


[Guy]

அடி ஆத்தாடீஈஈஈஈ... என் இளவயசுக்கு இதுக்குமேல முடியல

என்ன வுட்டுடும்ம்மாஆஆஆ,,,,,,,,,,,,

அடி அம்மாடிஈஈஈஈ... இந்த அல்லக்கை மனசுல

நீ சத்தியமா் இல்லம்மாஆஆஆஆ..
உயிரோடு விளையாடாதே..

விட்டுடும்மாஆஆஆ......

இதயத்தின் மொழி


பேசாத
பல மொழிகள்
பேசுகிறது...

கிடைக்காத
பல சுகம்
கிடைக்கிறது..

பார்க்காத
பொழுதுகளும்
பார்த்தவை
ஆகிறது...

புரியாத
பல
வார்த்தைகள்
புரிகிறது...


பேசுகின்ற
மொழி
மட்டுமே
மொழியாகுமா ?!!

உன்
பேசாத
மொழியும்
என்
இதயம்
பேசுகிறதே...

***************************************
அணில் குட்டி அனிதா : அம்மணி கவிதை எழுதிய ச்சிசூவேச்சன்.. னை எல்லாரும் கேளுங்க...... டிவி ல லைவ் ஷோ... டான்ஸ் கூத்து ஒரு பக்கம், ஆன்லைன் ல வெப்சைட் கிரியேட் செய்து கொடுத்த மகராசன் க்கிட்ட வெப்சைட் பத்தி டிஷ்ஷூம்ஸ் அண்ட் டிசைன், ஃபான்ட் கலர் மாத்த சொல்லி சண்டை ...., ஆதவன் சினிமா புள்ள டவுன்லோடு செய்து வச்சி இருக்கு, அத பாக்கனும்னு அடம் பிடிச்சி ஒரு பக்கம் வாட்சிங்.. இதுக்கு நடுவில்.... "இதயத்தின் மொழி".... .. எகொச..!! இது !!

பின்குறிப்பு : வெப்சைட் செய்து கொடுத்த மகராசன் கவிதை எழுதும் போது விட்ட சாபம் " உன் கவிதை நாசமாபோக.. அது கேவலமாத்தான் வரும்.. !! "

பீட்டர் தாத்ஸ் : It is a mistake to look too far ahead. Only one link in the chain of destiny can be handled at a time.”

.

சில நேரங்களில் சில மனிதர்கள் - 2

கவிதா : தாத்தா ச்சும்மாஆ கும்முன்னு வாசனை வருது..சிக்கன் குழம்ப்பா? சாப்பிட வரவா.. ?

வாட்ச்மேன் தாத்தா : ஆமாம் ...சிக்கன் குழம்பு தான்...

கவிதா : சிக்கன் குழம்பு வைக்கும் போதெல்லாம் கேக்கறேனே... சாப்பிட கூப்பிடவே மாட்டறீங்க..டேஸ்ட் பண்ண க்கூட கொடுக்க மாட்டேங்கறீங்க..

வாட்ச்மேன் தாத்தா: ஆமா.. கொடுக்க மாட்டேன். .உனக்கு கொடுத்துட்டு நான் என்னத்த சாப்பிட. .ஒத்த ஆளு, வாரத்திற்கு ஒரு நாள், கால் கிலோ வாங்கியாந்து சமைக்கிறேன்.. 4-5 துண்டு த்தான் போடறான். .மதியம் ராத்திரி 2 வேளைக்கு வச்சிக்குவேன்... அத்த உனக்கு கொடுக்க சொல்றியா... போம்மா...

கவிதா : ம்ம்ம்... அப்ப கொடுக்க மாட்டீங்க..

வாட்ச்மேன் தாத்தா: மாட்டேன்... அதான் சொல்லிட்டேன் இல்ல...

*****************
கவிதா : உங்க பேரு என்ன..?

குப்பம்மா : என் பேராம்மா முனியம்மா ...

கவிதா : அவங்க குப்பம்மான்னு சொன்னாங்களே...

குப்பம்மான்னு சொன்னவங்க : என்னம்மா நீனு. என் மாமியாரு பேரு முனியம்மா.. எப்படி மாமியாரை பேரை சொல்லி கூப்பிடறது (நாங்க எல்லாம் ஆதி அந்தம் னு பேரு வச்சி கூப்பிட்டவங்க. .எங்கக்கிட்ட இப்படி ஒரு டயலாக் கா? நாடு ரொம்பவே முன்னேறனும்..!!) அதான் நான் குப்பம்மா ன்னு வச்சிட்டேன்..

கவிதா : அம்மா நீங்க சொல்லுங்க உங்க பேரு முனி' யா? குப்பு' வா?

முனியம்மா : ........ (வெட்கம் வெட்கம் வெட்கம்.. ஆஹா அந்த 60 வயதை நெருங்கும் பாட்டியை நேரில் பார்த்து இருந்தால் மட்டுமே ரசித்து இருக்க முடியும்..)..என் பேரு.. .என் பேரு.. முனியம்மா கிருஷ்ணன்... ஹி ஹி ஹி... :)))) :) )

கவிதா : அட இந்த வயசிலும் வெக்கத்த பாரு. !!! .அது யாரு.. கிருஷ்ணன்..?

முனியம்மா : ஹி ஹி.. என்னோட ஹஸ்ஸு...பண்டு.... !!

கவிதா : ஆஹா பீட்டரூ......?!! ம்ம்ம்ம் ம்ம்.....ம்ம்!! :))))))

முனியம்மா : தப்பா இருந்தா மன்னிச்சிக்கோங்க.ம்மா.... எனக்கு இங்லீச்சு தெரியாது..

கவிதா : இல்ல முனி...நீங்க சரியா தான் சொன்னீங்க... ரொம்பவே சரியா சொன்னீங்க.. தப்பே இல்ல.. :)))

*******************************
ஜிம் மில் வியர்வை வடிய பயிற்சி செய்து கொண்டு இருக்கிறேன்... (வியர்வையின் மேலேயே) ஜிம் தோழி நான் எதிர்பார்க்காத போது தீடிரென்று வந்து கன்னத்தில் முத்தமிடுகிறார்.

கவிதா : அவ்வ்வ்வ்வ்வ்.. whaaatttt happen yaar ?!! ..

தோழி : I love you kavitha ..............

கவிதா : :)))))))))))))))))) Thanks... Thanks for the kiss... :))))))))))) I didnt expect this... !!! Thanks !!

************************************
லேடிஸ் மீட்டிங்..சிட் சேட்.. :)

லேடி 1 : உங்கள எப்படி உங்க வீட்டுல கூப்பிடிடறாரு...

லெடி 2 : "வாசு..." (வா...சூ ....சூ.. சூ.!!.... இது நானு...)

லேடி 2 : பவன் வீட்டில....

லேடி 1 : " மஞ்சு......(ம ஞ்....சூ சூ சூ...!!. இது நானு...)

லேடி 2 : ஜாய்ஸி வீட்டுல.

லேடி 3 : ஜாய்....(ஜா..ய் அய்ய அய்ய அய்ய..அய்ய.!!........ இது நானு)

லேடி 1 , 2 & 3: உங்கள என்னான்னு கூப்பிடுவாரு..சொல்லுங்க. .நாங்களும் ஓட்டனும் இல்ல... :(

கவிதா : அதானே எங்க வீட்டில என்னை எப்படி கூப்பிடுவாங்க.. ?..........அவ்வ்வ்்...... !! (ரொம்ப நேரம் யோசித்தும் தெரியவில்லை...:((((((( ) இத்தனை வருஷத்தில் என்னை எங்க வூட்டுக்காரு பேரு சொல்லி கூப்பிட்டதே இல்லை...!! :(((((((((((((((

லேடி 2 : நிஜம்மாவா... பேரு சொல்லி கூப்பிட்டது இல்லையா...

கவிதா : :((( ஆம்ம்மா ..நீங்க கேட்டவுடனே தான் தெரியுது... என்னை அவரு ஒரு தரம் கூட பேரு சொல்லி கூப்பிட்டதே இல்ல... :((((

லேடி 2 : அப்ப எப்படித்தான் கூப்பிடறாரு...

கவிதா : .....ம்மா. ...ஏம்மா வாம்மா போம்மா... ன்னு தான்........... :(( :))
(ஒரு வேளை ஓவர் மரியாதையா இருக்குமோ..????. ஹி ஹி.. மனசாட்சியே இல்லையா உனக்கு... ன்னு நானே என்னை கேட்டுட்டேன்..அதனால நீங்க யாரும் டென்ஜன் ஆகாதீங்க... . !! )

**************************

தோழி 1 - தோழி 2 விடம் -(அட்வைஸ் ஸாம்) எதையாவது நினைச்சிக்கிட்டு குழப்பிக்காதீங்க. .ஒன்னும் நடக்காது.. கவலப்படாம ஜாலி யா என்ஜாய்... பண்ணுங்க.. உம் முன்னு இருக்காதீங்க..

தோழி 2 : சே சே.. அதெல்லாம் ஒன்னும் இல்ல..நான் உம் னு எல்லாம் இருக்கவே முடியாது... அதான் கவிதா வந்தாச்சே.. அவங்கள பாத்தாவே ஜாலி மூட் வந்துடும்....

கவிதா : .............(ஞே... !!) :))))))))))))))

தோழி 1 : ஓ பிசாசு வந்தாச்சா.ஆ..... ?!!

கவிதா : அடிங்... பொறாம பிடிச்சவளே. ..ஓடி போயிடு. .உன் மூஞ்சிய பாத்து யாராச்சும் இப்படி உன் வாழ்க்கையில சொல்லி இருக்காங்களா?.. அதுக்கெல்லாம் முகராசி ன்னு ஒன்னு வேணும்டீ..ஈஈ.!!

தோழி 1 : :))))) ஆரம்பிச்சிட்டியா.. முடியல..போ..போற வரைக்கும் பேச்சை நிறுத்த மாட்ட.. பேசு பேசு....தலை எழுத்து கேக்கறேன்... ... !!

தோழி 2 : :))))))))))))))

*******************************************
கவிதா : நீங்க ரொம்ப நல்லா ஏரொபிக் செய்யறீங்க ப்பா... செம சூப்பர் !! ஆமா உங்க பேரு என்ன?

மீனாகுமாரி : ஓ ரியலி. தாங்ஸ் !!!! மீனாகுமாரி.

வரலா : அய்யோ..அய்யோ... அவங்க உங்களை ஓட்டறாங்க மீனாகுமாரி.. புரியலையா உங்களுக்கு ?!!

மீனாகுமாரி.. : ஓ.. :(((( .... .அப்ப நான் சரியா செய்யலையா..?!! :((((

கவிதா : சே சே... யாரு சொன்னா? நீங்க சூப்பரா செய்யறீங்க. .இவங்க ஒன்னு சொல்லி கொடுக்கறாங்க. .நீங்க அதை வேற மாதிரி செய்யறப்ப.. .நாங்க தினமும் நீயூ நீயூ ஸ்டெப் கத்துக்கறோம் இல்லையா. .சோ யூ ஆர் டீச்சிங் அஸ் நீயூ ஸ்டெப்ஸ் ..... யூ ஆர் ரியலி டூயிங் வெல் . !! :)

மீனாகுமாரி.. : அட ஆமாம் .. ஐம் டீச்சிங் நியூ ஸ்டெப்ஸ்.. எஸ் ஐயம் சூப்பர்..!!

வரலா : (என்னைப்பாத்து)....தூஊஊஊஊ !!

மீனாகுமாரி கிளம்பும் போது கவிதா எங்க எங்க ன்னு தேடுகிறார்......."ஹே கவி.. ஐம் லீவிங்.. பை பை.... "

கவிதா : ...யா..பை பை... நாளைக்கும் சூப்பரா செய்யங்கப்பா... ..!! :))) வீ லேர்ன் நியூ ஸ்டெப்ஸ்..!! ஒகே.. !!

ஜிம் மேனேஜர் : கவிதா..!! மீனாகுமாரி சேர்ந்து 2 டேஸ் தான் ஆச்சி அதுக்குள்ள உங்களை தேடறாங்க....அவங்களையும் விட்டு வைக்கலையா? ..

வரலா : (திரும்பவும்..என்னைப்பார்த்து). தூஊஊஊஊஊஊஊ !!!

கவிதா : துப்பிட்ட இல்ல... போ ..வேலைய பாரு....!! துப்பி துப்பி உனக்கே போர் அடிக்கல..!! :)))

வரலா : (திரும்பவும்) தூஊஊஊ... !! நீ திருந்தவே மாட்டே... !!

********************
அணில் குட்டி அனிதா : நானும் இப்படி துப்பி துப்பி.... . வாயில எச்சி இல்லாம போனதுதான் மிச்சம் அம்மணி திருந்தின பாடு இல்ல... ம்ஹூம். இன்னும் எத்தன பெரு துப்பப்போறாங்களோ... .ஆனா ஒன்னு. .எத்தன பேரு வந்து எவ்வளவு துப்பினாலும் தொடச்சீஈஈஈஈஈஈ விட்டுட்டுவாங்க........... ...

பீட்டர் தாத்ஸ் : “Two things are infinite: the universe and human stupidity; and I'm not sure about the the universe.”

சில நேரங்களில் சில மனிதர்கள்..

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், மின் துறை ஊழியர். மின்சாரம் இல்லாத ஒரு நாளில் இவர் வந்தபிறகு தான் மின்சாரமும் வந்தது :)

கொட்டிவாக்கம் கடற்கரையில் தனியாக அமர்ந்து விளையாடிக்கொண்டு இருக்கும் குழந்தை... :)

மழை நிற்க காத்திருக்கும் பெண்.. :)

மழையில் நடந்துவரும் போது எதிரில் வந்த பெண்....

அவ்வப்போது ஜன்னலின் வழியே மழை நின்றுவிட்டதா என பார்க்கும் போது எல்லாம், மழையை ரசித்தவாறு இவர்கள் வெகுநேரம்(கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு மேல்..) இதேபோல் (குனிந்தபடியே) அமர்ந்திருந்ததால், அட...!!.... என எடுத்தது.....

சென்னை சின்னமலை பகுதியில் தெருவோருத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் துணி துவைக்கும் பெண்.. பஸ் ஸிலிருந்து எடுத்தது..

சென்னை சைதை கூவம், இந்த தண்ணீரில் தான் துணி சலவைக்கு துவைக்கப்பட்டு வருகிறது.. நம்பமுடியாமல் எடுத்தது .... (சலவைக்கு போடுபவர்கள் இதை அறிவார்களா ? )

கொட்டிவாக்கம் கடற்கரை செல்லும் வழியில், தெருக்களில் உலாவந்த குழந்தைகள். இந்த குட்டி அந்த குட்டி கையை பிடித்து கூட்டிக்கிட்டு வருது.. ம்ம்..!!

அணில் குட்டி அனிதா : கவி.. உங்களையும் இதே மாதிரி யாராச்சும் போட்டோ எடுத்து போட போறாங்க. . என்ன.. இதை எல்லாம் பாக்கறாப்பல இருக்கு.. உங்களை.... :(.... பாவம்.. இவ்வளவு நேரமே உயிரோட இருக்காங்களோ என்னவோ?!!

பீட்டர் தாத்ஸ் : - :) I am working every day. But I needed only some proof. So the proof was photos. :)


* படங்கள் மொபைலில் எடுத்தது.

மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்

உண்மை நின்றிட வேண்டும்

ஓம் ஓம் ஓம்


- பாரதியார்

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?


- பாரதியார்

உதவமுடியுமா?

பார்வையற்ற மாணவர்கள், Visually Challenged Students தேர்வு எழுத பார்வையுள்ள யாரேனும் படித்துக் காட்ட வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஞாயிறும் டி.நகர் பத்மா சேஷாத்ரி பாலபவனில் இவர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. தேர்வின் போது அவர்களுக்கு படித்துக்காட்ட ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

நீங்களோ, உங்கள் நண்பர்களோ முடிந்தால் உதவ முயற்சி செய்யுங்கள் ..


நன்றி பரிசல்காரர் .ரின் இந்த பதிவை படியுங்கள்..