இது 100 ஆவது பதிவு.. இது வரைக்கும் என்ன எழுதியும் சாதிக்கவில்லை என்பதுதான் உண்மை.
இங்கு எழுத ஆரம்பித்து நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள், சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் இப்படியும் ஒரு உலகம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். 100 ஆவது பதிவை எழுதும் போது எனக்கு தோன்றியது இனி நிறைய எழுதவேண்டும், நடுவே எதற்காகவோ யாருக்காகவோ எழுதுவதில் தடைகள் இருந்தன.. ஒரு முறை இல்லை மூன்று முறை இனிமேல் எழுதவே கூடாது என்று நினைத்தேன். ஆனால் இப்போது என்னுடைய குழந்தைக்கு எப்போதும் என்னுடைய எழுத்துக்கள் என்னுடைய நினைவுகளாக இருக்க வேண்டும் என்று நினைத்து தொடர்ந்து எழுத வேண்டும் என்று முடிவுடன் வந்துள்ளேன்.
100 என்றவுடன் சட்டென்று/பட்டேன்று நினைவுக்கு வந்த சில -
1. சச்சின் :))))))
2. போலிஸ்
3. 100 ரூபாய் அதில் காந்தி தாத்தாவின் சிரிப்பு
4. ரஜினிகாந்த் நடித்த ராகவேந்திரா..
5. கமல்ஹாசனின் ராஜபார்வை
6. பிளாகர்கள் எழுதும் அவர்களின் 100 ஆவது பதிவு....
7. 100 ஆவது நாள் - திரைப்படம்
8. எல்.கெ.ஜி யில் முழு ஆண்டு தேர்வில் ஆங்கிலோ இந்தியன் டீச்சரிடம் 100/100 என்று என்னுடைய சிலேட்டில் வாங்கிய மதிப்பெண். அதை அழிக்காமல் வீடு வரை கொண்டு வந்து காட்டி எல்லோரிடமும் முத்தம் பெற்றது.
9. பத்தாம் வகுப்பில் கணிதத்தில் 100 வாங்க முயற்சி செய்து 99 வாங்கி 1 மதிப்பெண்' ணில் 100 ஐ இழந்தது.
10. நமக்காக, நாட்டுக்காக உயிர் விட்ட ராணுவ வீரர்கள் பற்றிய பதிவர் சந்தோஷ்' சின் 100 ஆவது பதிவு.
உங்களுக்கு இந்த 100 என்ற எண்ணை பார்த்தவுடன் நினைவுக்கு வருவதை எழுதுங்களேன்...
அணில் குட்டி அனிதா : இந்த அநியாயத்த கேக்க ஆள் இல்லையா? எப்படிங்க இது அம்மணிக்கு 100 ஆவது பதிவாகும். கொஞ்சூண்டு லெப்ட் சைட் பாருங்க.. லேபல்ஸ் ல பாருங்க.. 17 பதிவு நான் எழுதி இருக்கேன். .இவிங்க என்னானா... 100 ஆவது பதிவுன்னு போடறாங்க... இதுல கணக்கல 99 மார்க் ன்னு வேற பீத்தல்... .. கவி.. இதை என்னால ஒத்துக்க முடியாது...... பதிவ மாத்தி எழுந்துங்க...
பீட்டர் தாத்ஸ்:- We cannot adopt the way of living that was satisfactory a hundred years ago. The world in which we live has changed, and we must change with it.
100 ஆஆஆஆஆஆ?
Posted by : கவிதா | Kavitha
on 19:58
Labels:
கதம்பம்
Subscribe to:
Post Comments (Atom)
25 - பார்வையிட்டவர்கள்:
அணில் குட்டி, கவிதா,
மீள் வருகைக்கு வாழ்த்துகள்.
100 ஆவது பதிவுக்கும் வாழ்த்துகள் !
வாங்க கோவி.கண்ணன்.. மிக்க நன்றி.. :)))
அனி, என் கண்ணு, வந்துட்டீயா? கவிதா எப்படி இருக்காங்க? போனவை, போனவையாகவே போகட்டும்னு நான் சொன்னேன்னு சொல்லு. அப்புறம் வேற என்ன மேட்டர்
உஷாமேடம்...ஆம்மா! திருப்பி வந்துட்டோம்.. ! கவிக்கு என்ன சூப்பரா இருக்காங்க...
எம்புட்டு பாசம் உங்களுக்கு எங்க மேல.... சந்தோஷம் தாங்க முடியல....அப்படியே உங்க கழுத்த கட்டிக்கறேன்...எனக்கு ஒரு kiss கொடுங்களேன்...
வாங்க கவி.. 1000-த்திற்கும் நான் பின்னூட்டமிட வேண்டும்..
வாழ்த்துக்கள்..
//போனவை, போனவையாகவே போகட்டும்னு நான் சொன்னேன்னு சொல்லு.//
இதை 100 முறை நானும் ரிப்பீட்டு செய்கிறேன் அனிதா கண்ணு..
// வாங்க கவி.. 1000-த்திற்கும் நான் பின்னூட்டமிட வேண்டும்..//
உண்மைதமிழன்.. ஆனால் ஆயிரம் எல்லாம் ரொம்ப அதிகம்..!! :)))) பார்க்கலாம்..
//வாழ்த்துக்கள்..//
நன்றி
//போனவை, போனவையாகவே போகட்டும்னு நான் சொன்னேன்னு சொல்லு.//
ம்ஹூம்...வாழ்க்கையில் எல்லாமே ஒரு படிப்பினைதான்.. கஷ்டம் என்பது ஒன்றைவிட ஒன்று அதிகமாகும் போது முன்பு நடந்தது ஒன்றுமே இல்லை என தோன்ற ஆரம்பித்து விடுகிறது.. அப்படித்தான்.. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு எளிதாக புரியவைத்தவர்களால் நான் இப்பொது மிக தெளிவாக இருக்கிறேன்.. :)))
போனவை என்ன இனி எதுவந்தாலுமே என்னை எதுவும் செய்யாது... படிப்பினை...
வாழ்த்துக்கள்! :-)
மீண்டும் தமிழ்மணத்தில் இணைந்ததற்கும்...
//வாழ்த்துக்கள்! :-)
மீண்டும் தமிழ்மணத்தில் இணைந்ததற்கும்...//
:))))) நன்றி கிருஷ்ணா...
வாங்க.. 100 பதிவுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்...
அட,திரும்ப வந்தாச்சா? வாங்க வாங்க..
//வாங்க.. 100 பதிவுக்கு வாழ்த்துக்கள்.//
:)) நன்றி முத்துலெட்சுமி-கயல்விழி
//வாழ்த்துக்கள்...//
நன்றி சரவணகுமார்
//அட,திரும்ப வந்தாச்சா? வாங்க வாங்க....//
ஹும் ஆமா வந்துட்டோமே...!!
நூறைத் தொட இன்னும் 37 பாக்கி இருக்கு எனக்கு
பின்னூட்டத்துக்கு ஒரு டிஸ்கி
முன்னாடி கமென்டில் சொன்னது வயசை அல்ல!
ஹலோ கவி, வாழ்த்துகள். நூறாவதுக்கும் மீண்டும் காட்சி கொடுப்பதுக்கும். பார்க்கிறதுக்கே நல்லா இருக்கு.
இன்னும்நிறைய நல்லா எழுதணும்.
//ஹலோ கவி, வாழ்த்துகள். நூறாவதுக்கும் மீண்டும் காட்சி கொடுப்பதுக்கும். பார்க்கிறதுக்கே நல்லா இருக்கு.
இன்னும்நிறைய நல்லா எழுதணும்.//
:)) வல்லிஜி, எப்படி இருக்கீங்க.. என்னங்க காட்சி கொடுக்கறதுன்னு எல்லாம் சொல்றீங்க.. நான் நடு நடுவுல எழுதிட்டு தான் இருந்தேன். .என்ன தமிழ் மணத்துல இல்ல.. அவ்வளவுதான்... !!
ம்ம்..நிறைய எழுதத்தான் திருப்பி வந்தேன்.. எழுதி.. தள்ளப்போறேன்...
//நூறைத் தொட இன்னும் 37 பாக்கி இருக்கு எனக்கு //
லதானந்த்.. நீங்கள் 100 தொட வாழ்த்துக்குள்...
டிஸ்கி :- நான் உங்கள் வயதையும் சேர்த்துதான் சொன்னேன்.. :)))))
டிஸ்கிக்கு ஒரு டிஸ்கி
நூறைத் தொடனு சொன்னது பதிவையும் அல்ல
வாழ்த்துக்கள்!!!
//டிஸ்கிக்கு ஒரு டிஸ்கி
நூறைத் தொடனு சொன்னது பதிவையும் அல்ல///
லதானந்த்...எஸ்கியூஸ்மி....
=============================
விஜய் ஆனந்ந்..உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி... :)
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா ;))
கோபி வாழ்த்துக்களுக்கு நன்றி ! :))
வாழ்த்துக்கள்
டைம் கெடைக்குறப்போ என்னோட பிளாக்கைப் பர்ருங்க முடிஞ்சா!
www.lathananthpakkam.blogspot.com
சரியா?
Post a Comment