உங்களுடைய தசாவதாரம் பார்த்தப்பிறகு, மனதில் தோன்றிய சில எண்ணங்களை இங்கே எழுதுகிறேன். நிறைகளை பாராட்டியும் குறைகளை சொல்லி விமர்சனம் செய்வதும் மிக மிக மிக எளிது…. அதை உணர்வேன்.. அதனாலேயே திரை விமர்சினங்களை நான் எழுதுவதில்லை. அதனால் இந்த கடிதத்தை விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
அந்த படத்தில் நீங்கள் எடுத்து க்கொண்ட உழைப்பையும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு தேவையான மேக்கப் செய்து கொள்ள நீங்கள் எடுத்துக்கொண்ட நேரமும், சிரமமும், பொறுமையையும் கண்டிப்பாக பாராட்டாமல் இருக்கவே முடியாது….. உங்களின் உழைப்பிற்கு HATS OFF.
அதே சமயம் உங்களுடைய சில படங்களையும் அதில் உங்களின் மேக்கப்பையும் நினைவு கூறவேண்டும் என்று தோன்றுகிறது. உங்கள் நடிப்பை விடவும் உங்களின் மேக்கப்பில் அசந்துபோன சில படங்கள்.
“எனக்குள் ஒருவன்” – இந்த படத்தில் இரண்டாவது கதாபாத்திரத்தில் செய்து இருந்த மேக்கப்பில் உங்களை அடையாளமே தெரியவில்லை. அதில் உங்கள் முகத்தில் இந்தியன் தாத்தாவை போன்றோ, தசாவதார கதாப்பாத்திரங்களை போன்றோ முகத்தில் ஒரு செயற்க்கைதனம் தெரியவில்லை.
கல்யாணராமன், ஜப்பானில் கல்யாணராமன், சலங்கை ஒலி வயதான பாத்திரம், அன்பே சிவம் விபத்து பிறகு காண்பிக்கப்பட்ட முகம், ஹே ராம், மகாநதி படங்களில் காலத்திற்கு ஏற்றாற்போன்று நீங்கள் போட்டுக்கொண்ட கதாபாத்திரம் – இவை அனைத்துமே மிக மிக யதார்த்தமாக இருந்தன.
இன்னும் இதைப்போன்ற உங்களின் பல கதாப்பாத்திரங்களை பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.
நமக்கு முகத்தில் ஏற்படும் அத்தனை உணர்வுகளையும் காண்பிப்பது முகத்தில் உள்ள தசைகள் தானே? அந்த தசைகளை மூடிமறைத்து சமீபகாலமாக நீங்கள் போட்டுக்கொள்ளும் மேக்கப்பால் கதாபாத்திரங்களின் முகங்களை உணர்ச்சிகள் அற்ற பொம்மைகளை பார்ப்பது போன்று உள்ளதே தவிர.. யதார்த்த உணர்வுகளையும் முகத்தில் ஏற்படும் பல உணர்ச்சிகளை குறிப்பாக முகச்சுளிப்பு, புருவத்தை சுருக்குதல், கண்கள் அசையும் போது முகத்தில் ஏற்படும் மாற்றங்கள், கோபம், சிரிப்பு என்று எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லை. முடியவில்லை என்பதை விட அவை இல்லவே இல்லை எனலாம். மாபெரும் நடிகனான உங்களுக்கு இதைப்பற்றி சொல்ல தேவையில்லை இருப்பினும் இதை நீங்கள் உணர்ந்தீர்களா என்று தான் தெரியவில்லை.
இந்தியன் தாத்தாவில் கூட உங்களின் உழைப்பை போன்று நடிகை சுகன்யாவிற்கு இருந்ததா என்றால் இல்லை. என்னவோ பொம்மை முகம் இங்கே அங்கே போவதும் வருவதுமாக இருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த நவராத்திரி’ யில் இப்படி அதிகமான மேக்கப் என்று எதுவுமே இல்லாமல் கதாப்பாத்திரங்களில் வித்தியாசம் காட்டி இருந்தார். ஒருவருடன் ஒருவரை ஒப்பிடுவது சரியில்லை என்றாலும், இதற்கு முன் அவர் 9 கதாபாத்திரங்கள் செய்து இருக்கும் போது ஏனோ அப்படத்தின் கதாப்பாத்திரங்களையும் அவற்றின் யாதார்த்தையும் நினைவு கூற நேரிடுகிறது.
இனி வரும் படங்களில் முகத்தில் உள்ள உணர்ச்சிளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்களின் மேக்கப் இருக்கும் என்று நம்புகிறேன்….
கடும் முயற்சி செய்து அற்புதமான படம் அளித்த உங்களுக்கு நன்றி…..
உங்களின் சிறப்பான படங்களை பார்த்து ரசித்த, ரசிக்கும் ஒரு ரசிகை....
அணில் குட்டி அனிதா:- ஐயோ..!! கவி.. இது நியாயமா? உலக நாயகன் கே அறிவுரையா? இது உங்களுக்கு ரொம்ப ஓவரா தெரியலையா? அது எப்படி கவி.... கைப்பூ மாதிரி எவ்வளவு அசிங்க பாட்டாலும், அடிப்பட்டாலும் எதையுமே வெளியில தெரியாதமாதிரி திருப்பி திருப்பி ...உங்களாள இருக்கமுடியுது....??? நிசமாவே நீங்க ரெம்பபபபப..... நல்லவங்க கவி...... !! :((((((((
பீட்டர் தாத்ஸ்:- You can never get enough of the things you don't need, because the things you don't need can never satisfy.
திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு…..
Posted by : கவிதா | Kavitha
on 19:26
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
8 - பார்வையிட்டவர்கள்:
:-)
வாங்க சிங், எப்படி இருக்கீங்க..? வீட்டில் எல்லோரும் செளக்கியமா? அக்காவும், குட்டி பாப்பாவும் எப்படி இருக்காங்க?
ஏன் எப்போது வந்தாலும் ஒரு சிரிப்பு போட்டுட்டு போறீங்க.. அணிலுக்கு சப்போர்ட் ஆ சிரிச்சிட்டு போறீங்களா? புரியல..
எப்படி இருக்கிங்க அக்கா?
தசாவதாரம் பற்றிய உங்களின் பார்வையும் சரிதான் ;)
//எப்படி இருக்கிங்க அக்கா? //
ம்ம்ம்ம்ம்ம்...ரொம்ப நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க?
//தசாவதாரம் பற்றிய உங்களின் பார்வையும் சரிதான் ;)//
:))) நன்றி
PLEASE WATCH DASAAVATHARAM FOR 4 OR 5 TIMES (REFERABLY IN DVD/CD).
YOUR VIEW (PAARVAI) WOULD CHANGE, LIKE IT HAPPEND TO ME.
உங்கள் பல பதிவுகளைப் படித்து இருக்கிறேன்.
இந்த ‘ற்’ என்ற எழுத்துக்குப் பின்னாடி வேற மெய்யெழுத்துக்கள் வரக் கூடாது. அதற்க்கு, இதற்க்கு போன்ற தவறுகளைத் தவிர்க்கப் பாருங்கள்.
அதே போன்று பதிவை ஒரு முறை படித்துப் பார்த்து எழுத்துப் பிழைகளை சரி செய்யவும் பாருங்கள்.
குப்பன், நன்றி... நான் பார்த்ததே DVD யில் தான்... :)))) தியேட்டரில் இனிமேத்தான் பார்க்கவேண்டும். எனக்கு படம் பிடித்திருந்தது. சில கதாபாத்திரங்கள் உணர்ச்சிகளை முழுமையாக காட்டமுடியவில்லை என்பதை மட்டுமே உணர்ந்தேன்..
திரும்பவும் பார்க்க முயற்சிசெய்கிறேன்...
//உங்கள் பல பதிவுகளைப் படித்து இருக்கிறேன்.
இந்த ‘ற்’ என்ற எழுத்துக்குப் பின்னாடி வேற மெய்யெழுத்துக்கள் வரக் கூடாது. அதற்க்கு, இதற்க்கு போன்ற தவறுகளைத் தவிர்க்கப் பாருங்கள்.//
கொத்ஸ் :)) ரொம்ப நன்றி.. எனக்கு இன்னமும் ற், ர வில் குழப்பம், ண, ன வில் குழப்பம். பொருமை, பொறுமை எத்தனை முறை தலையில் ஏற்றினாலும் தவறு செய்கிறேன்.. எழுதும் போது குழப்பம் வந்துவிடும். வானொலி நிலையத்தில் என்னுடைய கவிதைகள், குறிப்புகள் வரும் போது நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு என்னுடைய ற' ர ஆவை திருத்தவும், என்னை திட்டவுமே சரியாக இருக்கும். பிழைக்காக மிகவும் வருத்தமும் அசிங்கமும் படுவேன். என்னவோ..இன்னனும் குழப்பம் மட்டும் தீரவில்லை. :(((( திருத்திக்கொள்கிறேன்.
//அதே போன்று பதிவை ஒரு முறை படித்துப் பார்த்து எழுத்துப் பிழைகளை சரி செய்யவும் பாருங்கள்.//
ம்ம் கண்டிப்பாக செய்கிறேன்... எப்படியும் நீங்கள் எல்லாம் படித்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கை வேறு.. :))))) நிச்சயமாக படித்து சரிசெய்கிறேன்....
Post a Comment