பல காரணங்களுக்காக, திரை விமர்சனம் எந்த படத்திற்கும் எழுதுவதில்லை என்று இருக்கிறேன். ஆனால் இதை எழுதியே தீர வேண்டும் என தோன்றியது..."அறை எண் 305-கடவுள்" – படம் இன்னும் பார்க்கவில்லை, தொலைக்காட்சியில் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது.. பார்க்கும் போது எல்லாம் எரிச்சல் தரக்கூடிய வசனங்கள்….படத்தின் இயக்குனர் தான் வசனகர்த்தாவா என்று தெரியவில்லை, கூகுள்'உதவவில்லை.. எவ்வளவு தேடியும் கிடைத்ததகவல் இயக்குனர் சிம்புதேவன் மட்டுமே. சரி எரிச்சல் தரும் விஷயத்திற்கு வருவோம் –
பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம் கடவுள் – டெல்லிகணேஷ் என்ற கதாபாத்திரத்தை பார்த்து கேட்கும் கேள்விகள் –
1.நீங்கள் ஆள் இல்லாத மலை உச்சிக்கு ஒத்தைஅடி பாதையில் நடந்து போயிருக்கிறீர்களா?
2. நடுகடல் வரை படகு பயணம் செய்து இருக்கிறாயா?
3. ஏழை 10 பேருக்கு சாப்பாடு போட்டு இருக்கிறாயா?
கேட்பது மட்டும் இல்லை இது எல்லாம் செய்யாமல் எப்படி உங்கள் வாழ்க்கை நிறைவடைந்தது என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்வி நிறைவு வேறு????
தனிமனிதனின் விருப்பம் என்பது வேறு..ஒருத்தருக்கு பிடித்த ஒரு விஷயம் நிம்மதி, சந்தோஷம், நிறைவு எல்லாம் எப்படி மற்றவருக்கு நிறைவை தரும். எனக்கு பச்சை நிறம் பிடிக்கும், அதனால் பிடிக்காத அல்லது பச்சை நிறம் பற்றி தெரியாத ஒருவரை பார்த்து உனக்கு பச்சை நிறம் பிடிக்கவில்லை (அ) தெரியவில்லை அதனால் உன் வாழ்க்கையில் நீ நிறைவடையவில்லை என்று சொல்ல முடியுமா?... முட்டாள் தனமான ஒரு சிந்தனை என்றே சொல்லலாம்.
மேல் உள்ள மூன்று விஷயங்களுமே செய்யாமல் எத்தனையோ பேர் நிம்மதியோடும், மிக பெரிய சாதனைகள் செய்தும் , சந்தோஷத்துடனும் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
சில உதாரணங்கள் :-
1. குடும்பம், குழந்தை , கணவன், சமையல் அறை, உறவுகள், டிவி சீரியல்கள், மதிய நேர தூக்கம், கண்ணில் வைக்கும் மை, தினமும் செய்யும் பூஜை, பக்கத்துவீட்டு கதை, புதிதாய் வந்த புடவை டிசைன் மட்டுமே உலகம் சந்தோஷம் என்ற நிறைவுடன் இருக்கும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது போதும்…இதற்கு மேல் தேவையில்லை… இதை முழுமையாக அவர்கள் பெற்றாலே அவர்களின் சந்தோஷத்தை முகத்தில் பார்க்கமுடியும்…..
2. என் நண்பர் ஒருவர் உதவி கேட்கும் போது ரூ.1500/- கொடுத்தார் ஆனால் அவரே கேளிக்கைக்கு ரூ.5000/- மும் அதற்கு மேலும் செலவு செய்யவும் தயாராக இருந்திருக்கிறார், இருக்கிறார். அவரிடம் கேட்பதற்கு முன் நானே என்னை கேட்டு கொண்டு கேள்விகள். அவரின் சம்பாத்தியம் ,அவருக்கு அதை எப்படி செலவு செய்யவேண்டும் என்ற உரிமை உள்ளது…அவரின் சந்தோஷம் – ஏழைக்கு உதவும் போது இருப்பதை விட கேளிக்கைகளில் ஈடுபடும்போது இருக்கிறது.
3. சமீபத்தில் நீயா நானா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டு இருந்த போது ஒரு பெண் தனக்கு ஹை ஹீல்ஸ் அணிவது மிகவும் பிடிக்கும், அதை அணியவிடக்கூடிய, அணிந்தபிறகும் தன்னைவிட உயரம் அதிகம் உள்ள ஒருவரை மணக்க வேண்டும் என்று சொன்னார். மிக சாதாரணமான அல்லது ஆண்களை பொருத்தவரை கேலிக்குறிய, நக்கல் செய்யக்கூடிய ஒரு விஷயமாக இது இருக்கலாம் ஆனால் அந்த பெண்ணை பொருத்தவரை அது தான் சந்தோஷம், நிம்மதி மனதளவில் நிறைவு.
மனநிறைவை தரக்கூடிய எந்த செயலும் அவரவரை பொருத்தவரை வாழ்க்கையின் சாதனையே… வாழ்க்கையின் நிறைவும் கூட….. ஆசைகள், கனவுகள், கற்பனைகள் அத்தனையுமே ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனித்தனி…….அதையும் தாண்டி ஒருவரை ஏதோ விஷயத்திற்காக பிரகாஷ்ராஜை (கடவுள் கதாபாத்திரம்) போன்று- இதை செய்தால் நீ நிம்மதியாக இருப்பாய், சாதனை புரிவாய், சந்தோஷமாக இருப்பாய், வாழ்க்கையில் நிறைவை பெருவாய் என்று உணர்த்துவாரானால். உணர்த்துபவரின் பங்கு அதில் என்ன என்பதை பார்க்கவேண்டும்…
கேள்விகள் மிக எளிதாக கேட்கமுடியும்…..ஆனால் பதில்………….
அணில் குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….ஆரம்பிச்சிட்டாங்கய்யா 'தருமி சீவி…ஹோ'..சாரி…டங் ஸ்லிப்ட்… அறிவு ஜீவி…. சரி கவி மேட்டர விடுங்க.. நம்ம பீட்டர் தாத்ஸ் கவி இம்சை தாங்க முடியாம ஓடிட்டாரு.. சோ…நான் கொஞ்சம் தீவிரமா யோசிச்சி…மிஸஸ்.வாசுகி ய இண்ட்ரோ கொடுக்கிறேன் யாருன்னு பாக்கரீங்களா… அதாங்க நம்ம திருவள்ளூஸ்’ ஒயிஃப் வாசுகி இல்ல அவிங்கதான்… …வூட்டுக்காரு எழுதினத உங்களுக்கு தினம் ஒன்னு சொல்லபோறாங்க.. வாசுகி மேடம் யூ ஸ்டார்ட்… ஆல் தி வெரி பெஸ்டூஊஉ…
மிஸஸ். வாசுகி:-
அன்போடு இயந்த வழக்கென்ப ஆருயிருக்கு
என்போடு இயந்த தொடர்பு
அன்பு-பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் பண்பை நல்கும். அஃது எல்லோரிடத்திலும் நட்பு என்ற அளவுகடந்த சிறப்பையும் தரும்.
-Of precious soul with bodys flesh and bone, The union yields one fruit, the life of love alone.

3 - பார்வையிட்டவர்கள்:
முதன் முறையாய் முரண்படுகிறேன். ஒரு மிகப்பொதுவான விதி கூற வேண்டுமானால், ஒரு வசனம் வரும் சூழ்நிலை கருதாமல் அதை கண்டிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. நான் பார்த்ததிலேயே தலை சிறந்த படம் என்று இதை குறிப்பிடாத போதும், மேற்க்கோள் காட்டப்பட்ட வசனங்கள் சந்தோஷம் என்றாலே படகில் செல்வதும், அன்னதானம் செய்வதும் தான் என்று குறிப்பிடும் எண்ணத்தோடு அமைக்கப்படவில்லை. டெல்லி கணேஷ் கதாபாத்திரம் உலகில் அனைத்தையும் சாதித்ததை போல் வங்கிகளையும், வங்கி நுழைவுத்தேர்வுகளும், அரசாங்க வேலையையும் பற்றி மட்டும் பிதற்ற முயல்கையில் கடவுள் கதாபாத்திரம் தரும் விடை தான் அது. அதன் உள்ளர்த்தம் என்னவென்றால் ஒரு குறுகிய கூட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு மிகப்பெரிய சாதனை புரிந்ததை போல் பேசும் பலர், தன்னையும், தன் குடும்பத்தையும் தாண்டி இயற்கை அழகை ரசிக்கவோ, இயற்கையன்னயுடன் உறவாடவோ, மற்றவர்கள் இன்பத்தில் இன்பம் கொள்ளவோ பழக மறந்து விடுகின்றனர். ஆகவே எண்ணத்தை விரிவித்து, பரந்த மனப்பான்மை கொண்டு, மனதுடன் உரையாடி பழகா மனிதன் வாழ்கையில் முழுமை அடைவதில்லை என்பதே அந்த வரிகளின் உட்கருத்து! இதில் தங்களுக்கு வேறுபாடு உண்டோ?
பீட்டர் தாத்ஸ் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம்! அவரை ஓரம் கட்டியது ஏனோ? :(
//டெல்லி கணேஷ் கதாபாத்திரம் உலகில் அனைத்தையும் சாதித்ததை போல் வங்கிகளையும், வங்கி நுழைவுத்தேர்வுகளும், அரசாங்க வேலையையும் பற்றி மட்டும் பிதற்ற முயல்கையில்//
வாங்க அக்னி, பிதற்றல் ன்னு எப்படி நீங்க சொல்றீங்க..? அது தான் அவருக்கு வாழ்க்கை, நம்மிடையே இன்னமும் நிறைய பேர் அப்படித்தான் இருக்கிறார்கள். அது தான் அவர்களுக்கு சந்தோஷம், அவர்கள் அறிந்த வாழ்க்கை, அவர்கள் அறிந்த நிம்மதி... இதை தான் பதிவின் முதல் எடுத்துக்காட்டில் சொல்லியுள்ளேன்..
//ஒரு குறுகிய கூட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு மிகப்பெரிய சாதனை புரிந்ததை போல் பேசும் பலர், தன்னையும், தன் குடும்பத்தையும் தாண்டி இயற்கை அழகை ரசிக்கவோ, இயற்கையன்னயுடன் உறவாடவோ, மற்றவர்கள் இன்பத்தில் இன்பம் கொள்ளவோ பழக மறந்து விடுகின்றனர்.//
இதற்கும் உங்களுக்கு 2வது உதாரணம் சொல்லியுள்ளேன்... இன்னும் ஒரு உதாரணம் - குடும்பம், குழந்தை, கணவர் இதை எல்லாம் தாண்டி நான் ரசிக்கின்ற, பிடிக்கின்ற குறிப்பாக இந்த இயற்கை, விலங்குகள், பறவைகள், செடி, கொடி மரங்கள் எல்லாம் என் வீட்டில் இருப்பவர்களே ரசிப்பதில்லை.. என்னை லூசு என்று கூட சொல்லுவார்கள். இத்தனையும் நான் செய்தும் இன்னமும் எனக்கு எதிலாவது நிறைவு இருக்கிறாதா என்று என்னை நானே கேட்டுக்கொண்டால், இல்லை என்றே சொல்லுவேன்.. என்னை போன்றவர்களுக்கு தேடல் இன்னமும் இருக்கிறது... எனக்கு அந்த கடவுள் என்ற கதாபாத்திரம் என்ன சொல்லுவார்??
நீங்கள் சொல்லியபடி பார்த்தால் வீடு வாசல், குழந்தை குட்டி எல்லாம் மட்டுமே நினைத்து தன் வாழ்க்கையை நடத்துப்பவர்கள் குறுகிய சிந்தனை உடையவர்கள் என்று சொல்லமுடியாது வீட்டுக்குள் இருக்கும் இல்லத்தரசி'கள்
சொல்லும் சில யோசனைகளை வைத்து தான் வீட்டின் தலைவர் பல நல்ல முடிவுகளை எடுப்பார்.
குறுகிய வட்டத்துக்குள் அவர் இருக்கிறார் என்று நாம் எப்படி முடிவுக்கு வரவேண்டும்.. நமக்கு தெரிந்த குறுகிய வட்டம் என்பது தான்-அவரின் வாழ்க்கை, லட்சியம், நிம்மதி, நிறைவு -இவை அனைத்தையும் அவர்க்கு கொடுக்கும் அது எப்படி அவருக்கு குறுகிய வட்டம் ஆகும். என் மேலதிகாரி அடிக்கடி சொல்லுவார்.. "think from his angle & stand in his shoes" ...
எந்த விஷயத்தை எடுத்தாலும் நமக்கு தெரிந்த அல்லது நாம் சரி என்று நினைக்கிற இடத்திலிருந்து யோசிக்காமல், எதிரில் இருப்பவர் இடத்தில் இருந்து யோசித்தால் அவரே சரி என்று நமக்கு புரியும். உங்களுக்கு "தான் என்ற அகங்காரம் இல்லாதவரை = "ego"
இப்பவும் - உங்களின் இடத்தில் , சிம்புதேவன் இடத்தில் இருந்து பார்த்தால் கண்டிப்பாக சரி' தான்.... நீங்களும் என் இடத்தில் இருந்து யோசிக்காதவரை.... :)))))))))
//பீட்டர் தாத்ஸ் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம்! அவரை ஓரம் கட்டியது ஏனோ? :(//
திரும்பவும் கை, கால் ல விழுந்து கூப்பிட்டா போச்சி...
ஒவ்வொருவரின் கண்ணோட்டமோ வாழ்கை முறையோ விருப்புகளோ மாறுபடாது என்பது என் கருத்து அல்ல... தங்கள் பாணியிலேயே ஒவ்வொரு வாக்கியமாய் மேற்க்கோள் காட்டி பதிலளிக்க முயல்கிறேன்...
//'பிதற்றல் ன்னு எப்படி நீங்க சொல்றீங்க..? அது தான் அவருக்கு வாழ்க்கை, நம்மிடையே இன்னமும் நிறைய பேர் அப்படித்தான் இருக்கிறார்கள். அது தான் அவர்களுக்கு சந்தோஷம், அவர்கள் அறிந்த வாழ்க்கை, அவர்கள் அறிந்த நிம்மதி...'//
டெல்லி கணேஷ் கதாபாத்திரம், எனக்கு அதில் தான் சந்தோஷம் என்று மட்டும் கூறவில்லை... பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தை பார்த்து வங்கி தேர்வு எழுதும் வயதை கடந்ததை மேற்க்கோள் காட்டி மட்டம் தட்ட முயல்வது பிதற்றலா இல்லையா? உங்களது நிம்மதி எதில் உள்ளது என தீர்மானிக்கும் ஏகபோக உரிமை உங்களுக்கு உண்டு... ஆனால் மற்றவன் தங்கள் பார்வையில் நிம்மதி அற்றவனாய் தெரிகிறான் என்று அவனை (தன் நிம்மதி விளக்கத்தின் பெயரில் மிக மகிழ்ச்சியாய் இருப்பவனை கண்டு) ஏளனம் செய்வது (அதுவும் அவ்வளவு குறுகிய கண்ணோட்டத்தை கொண்டு ஏளனம் செய்வது) பிதற்றலே...
//'இன்னும் ஒரு உதாரணம் - குடும்பம், குழந்தை, கணவர் இதை எல்லாம் தாண்டி நான் ரசிக்கின்ற, பிடிக்கின்ற குறிப்பாக இந்த இயற்கை, விலங்குகள், பறவைகள், செடி, கொடி மரங்கள் எல்லாம் என் வீட்டில் இருப்பவர்களே ரசிப்பதில்லை.. என்னை லூசு என்று கூட சொல்லுவார்கள். இத்தனையும் நான் செய்தும் இன்னமும் எனக்கு எதிலாவது நிறைவு இருக்கிறாதா என்று என்னை நானே கேட்டுக்கொண்டால், இல்லை என்றே சொல்லுவேன்.. என்னை போன்றவர்களுக்கு தேடல் இன்னமும் இருக்கிறது... எனக்கு அந்த கடவுள் என்ற கதாபாத்திரம் என்ன சொல்லுவார்??'//
உங்கள் வரிகளிலேயே என் வரிகள் உள்ளது... என்னை போன்றவர்களுக்கு தேடல் இன்னும் இருக்கிறது என்று தாங்கள் குறிப்பிட்டீரே... அது ஏன் டெல்லி கணேஷ் கதாபாத்திரத்துக்கு இல்லை? காரணம் தனக்குள் இருக்கும் ஜீவாத்மா/உள்ளுணர்வு/மனசாட்சி கொடுக்கும் வெற்றியின் விளக்கத்தை அவர் கேட்கவே இல்லையே... அதில் தான் அந்த குறுகிய வட்டமும், வங்கிப்பணி புரிந்த செருக்கும் அவரை சூழ்ந்து விடுகின்றன... ஆங்கிலத்தில் solitude, soliloquy என்று இரண்டு அருமையான வார்த்தைகள் உண்டு... அவ்விரண்டையும் அனுபவிக்கையில் தான் உள் மனதுக்கு என்ன பிடித்திருக்கிறது, வாழ்கையில் நாம் செய்ய நினைப்பதென்ன, செய்ததென்ன என்பதையெல்லாம் அசை போட முடியும். அதே போல் மற்றவர் சந்தோஷத்தில் சந்தோஷம் கொண்டால் எப்படி இருக்கும் என்பது அன்னதானம் செய்து அங்கிருந்து உண்ணும் மக்களின் முகத்தில் இருக்கும் நிறைவையும் நன்றியையும் பார்த்தால் தான் தெளிவாய் புரியும். அதனாலேயே ஒரு எடுத்துக்காட்டாய் ஒரு உருவகமாய் அந்த மூன்று கேள்வியை கடவுள் கதாபாத்திரம் கேட்கிறார்... அதை வரிக்கு வரி இலக்கண அர்த்தம் கொண்டு பார்த்தால் பிறகு டெல்லி கணேஷ் கதாப்பாத்திரம் பேசுவதற்கும் கடவுள் கதாபாத்திரம் பேசுவதற்கும் வித்தியாசமில்லாமல் போய் விடுமே... :)
//'நீங்கள் சொல்லியபடி பார்த்தால் வீடு வாசல், குழந்தை குட்டி எல்லாம் மட்டுமே நினைத்து தன் வாழ்க்கையை நடத்துப்பவர்கள் குறுகிய சிந்தனை உடையவர்கள் என்று சொல்லமுடியாது'//
இந்த கருத்தை கூறும் போது உங்களுக்குள் ஒரு நிமிட முரண் கூட தோன்றவில்லையா? குறுகிய சிந்தனை என்பதன் விளக்கம் என்ன? நீங்கள் மேற்கூறியது தான். என்னையும், என்னை சார்ந்தவர்களையும் தாண்டி என்னால் சிந்திக்க முடியாது என்று சொன்னால் அதற்கு பெயர் தான் குறுகிய சிந்தனை. நம்மில் பலர் அப்படி இருக்கிறோம் என்பதற்காக அது சரி என்று ஒத்துக்கொள்வது தவறு...
//'நமக்கு தெரிந்த குறுகிய வட்டம் என்பது தான்-அவரின் வாழ்க்கை, லட்சியம், நிம்மதி, நிறைவு -இவை அனைத்தையும் அவர்க்கு கொடுக்கும் அது எப்படி அவருக்கு குறுகிய வட்டம் ஆகும்.'//
ஒருவரது வாழ்க்கையும் லட்சியங்களும் குறுகிய வட்டத்துக்குள் அடைய முடியாது என்பது தவறான கருத்து. நான் மேற்கூறியதை போல், டெல்லி கணேஷ் கதாபாத்திரம் நான் நிம்மதியாய் இருக்கிறேன் என்று மட்டும் கூறியிருந்தால் அந்த நிம்மதியை கெடுக்க முயல்வது செருக்கு, ego. என் நிம்மதி தான் நிம்மதியின் சரியான விளக்கம் என்று அனைவருக்கும் உபதேசம் செய்ய முயல்கையில் வெற்றியின், சந்தோஷத்தின், வாழ்க்கையின், நிம்மதியின் உண்மையான அர்த்தத்தை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறதல்லவா? நீங்கள் கூறியதை போல் ஒரு விவாதத்தின் போது வாதியின் நிலைமையில் இருந்தோ, பிரதிவாதியின் நிலையில் இருந்தோ விவாதத்தை நம்மால் அணுக முடியும். ஆனால் அதையும் மீறி நடுநிலையான பார்வை என்று ஒன்றிருக்கிறது... அதுவே நீதியின் பார்வையாய் ஒப்புக்கொள்ளவும் படுகிறது. நான் சிம்புதேவனாகவோ அக்னியாகவோ என் கருத்தை தெரிவிக்கவில்லை. ஒரு நடுநிலையாளனாய் எனக்கு அந்த காட்சி உணர்த்தியது என்ன என்று குறிப்பிட்டேன். அவ்வளவே... மாறாய் நீங்களே டெல்லி கணேஷின் பார்வைக்குள் சிக்குண்டு விட்டீர்கள்.
Post a Comment