சத்தம் – அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கம், ஏதோ ஒரு சத்தம் எப்போதும் நம் காதுகளில் விழுந்துக்கொண்டே தான் இருக்கின்றன… சில சத்தங்கள் சங்கீதமாக சுகமாக இருக்கும்…... சில சத்தங்களின் பாதிப்புகளும் அதிகம்……
காலையில் எழுந்திருக்கும் போது, விடியலுக்கு என்று ஒரு சத்தம் இருக்கும்…எங்கோ தூரத்தில் சில வண்டிகளின் ஹாரன் சத்தம், படுக்கை அறையில் ஓடும் fan சத்தம்…. ஜன்னல் வழியே பக்கத்துவீட்டில் வாட்டர் டேங்க் தண்ணீர் நிரம்பி கொட்டும் சத்தம்……. எங்கேயோ…கத்தும் காக்கை…இப்படி.. சின்ன சின்ன சத்தங்களுடன் எழுந்துவந்தால்…..
சமையல் அறையில்….சமைக்க ஆரம்பித்தால்..எல்லாமே சத்தம்..தான், குக்கர், ஓவனில் ஏதோ சமைக்க வைத்தால் நேரம் முடிந்தவுடம் அது கொடுக்கும் அலாரம், மேலே அட்டை பெட்டியில் தூங்கி எழுந்த என் அணில்குட்டி கீச் கீச் என்று கத்திக்கொண்டு எகிரி குதித்து வெளியில் ஓடும், நடுவில் ரேடியோ, டிவி நிகழ்ச்சிகள்…. கதவிற்கு வெளியே படிகளை பெருக்கும் போது வரும் சத்தம்…. கைபேசி அழைக்கும்… பக்கத்து வீட்டில் துணி துவைக்கும் சத்தம்…. குழந்தைகளை அம்மாக்கள் அதட்டும் சத்தம்… கண்டுக்கொள்ளாமல் அவர்கள் கத்திக்கொண்டு மொட்டை மாடியில் ஓடி விளையாடும் சத்தம்… இதில் வீட்டில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டால்…அதில் வரும் சத்தத்திற்கு அளவே இல்லை……..
சில நேரங்களில் வெறும் தரையில் படுத்தால்…மிக மெலிதாக கீழ்தளத்தில் fan ஓடும் சத்தம், சில நேரங்களில் அவர்கள் வீட்டு ஊஞ்சல் ஆடும் சத்தமும் இங்கே கேட்கும்….பக்கத்துவீட்டில் ஒவ்வொருத்தர் செருப்பை தேய்த்து நடக்கும் சத்தத்தை வைத்து யார் அவர் என்று அனுமானித்து விடலாம்… எட்டி பார்க்கவேண்டி இருக்காது… என் கணவர் சவரம் செய்யும் போது மெலிதாக சர் சர் என்று ஒரு சத்தம்….
வீட்டை சுற்றியே இப்படி என்றால்…அலுவலகம் பற்றி சொல்லவே வேண்டாம்… எல்லோருக்குமே என்னுடைய சத்தம் பெரிய தொல்லையாக இருக்கும் என்றாலும், ஒரு ஒரு அலுவலக பிரிவிலிருந்து வரும் சத்தமும் பல விஷயங்களையும், அனுபவத்தையும் நமக்கு கொடுக்கும்…. நாம் மட்டுமே வேலை செய்கிறோம், நமக்கு மட்டுமே வேலையால் மன அழுத்தம் அதிகம் என்று நினைத்து சோர்வு அடைந்தால் மற்ற பிரிவுகளிலிருந்து வரும் சத்தங்களிலிருந்து நாம் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றும்..
எத்தனை எத்தனை சத்தம்…….. எதை கேட்பது எதை விடுவது…..??....
கேட்கும் அத்தனை சத்தத்திலும் ஏதோ ஒன்று இருக்கிறது…… உணர்ந்து ரசிக்க பல சமயங்களில் நமக்கு நேரம் இருப்பதில்லை.. அல்லது அப்படி ஒரு சத்தம் வருகிறது என்று நாம் உணராமல் கூட வேறு வேலையில் லயித்து இருப்போம்… ஆனால் இதற்காக உட்கார்ந்து பார்த்தால் ஒரே நேரத்தில் எத்தனை சத்தங்களை நாம் உள்வாங்குகிறோம்.. அதற்கு பதில் அளிக்கிறோம்..அல்லது அதனை கண்டுக்கொள்ளாமல் நம் வேலையை செய்கிறோம் என்று உணர்வோம்….
இதை எல்லாசத்தத்தை விட…….. மனத்திற்க்குள் நாம் நமக்குள்ளேயே பேசும் சத்தம்…. ரொம்ப பெரிய சத்தம்……….. வெளியில் தெரியாத சத்தம்…..
அணில் குட்டி அனிதா :- ம்ஹிம்…..சத்தத்த பத்தி இன்னொரு சத்தம் பேசுது.. .என்னத்த சொல்ல… இவங்கள சுத்தி இருக்கறவங்க எல்லாருமே சொல்லிட்டாங்க… பெத்த அம்மாவிலிருந்து பெத்து போட்ட புள்ள வரைக்கும் “சவுண்ட குறை..”னு.. எங்க…. இவிங்க சவுண்டு இன்னமும் குறையலப்பா…!!! … வாசுகி மேடம் க்கு துணையா பீட்டர் தாத்ஸ் யை கூட்டிட்டு வந்தாச்சி……
மிஸஸ் வாசுகி:
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு
பீட்டர் தாத்ஸ் :- Whatever thing, of whatsoever kind it be, Ii is wisdoms part in each the very thing to see.
சத்தம்……..
Posted by : கவிதா | Kavitha
on 18:52
Subscribe to:
Post Comments (Atom)
4 - பார்வையிட்டவர்கள்:
கரீட்டா எழுதி இருக்கிறீங்க..;-)
ஆனால் அமெரிக்காவில் இருந்த போது எப்போது நம் சத்தங்கள் கேட்போம் என்று ஏங்கியதும் உண்டு.
மனதின் சத்தம் சில முறை கலங்க அடிப்பதும் உண்டு.
அழகான பதிவிற்கு நன்றி.
வாங்க வெற்றிமகள், நன்றி... ஏன் அமெரிக்காவிலும் நம்மை சுற்றி ஏதோ ஒரு சத்தம் கேட்டுக்கொண்டு தானே இருக்கும்..??!! அதையும் பழகிக்கோங்க
//மனதின் சத்தம் சில முறை கலங்க அடிப்பதும் உண்டு.//
ம்ஹம்... நீங்க சொல்லுவது சரியே.. கலங்க அடிப்பது நிஜமே...!! :((
kavitha,
romba naaliku apruma unga blog vanthein.......pathivum , anil kutty commentum super!
//romba naaliku apruma unga blog vanthein.......pathivum , anil kutty commentum super!//
நன்றி திவ்யா.... :)))))))
Post a Comment