நம்ம துர்கா என்னவோ என்னோட weird குணங்களை எழுத சொல்லி என்னை கூப்பிட்டு இருக்கிறார். ரொம்ப யோசிக்காம பட்டுன்னு எனக்கு தோன்றியதை..
அணில் குட்டி அனிதா:- அம்மணி hold hold......... என்ன உங்கள பத்தி நீங்களே சொல்லிக்க போறீங்களா?.. வூட்டுடுவனா..நானு.. மக்களே கேளுங்க..இவிங்கள பத்தி இவிங்களே சொல்லிக்கிட்டா.. ஓவர் பில்டப்’ஆ இருக்கும், அதனால் நான் அவங்க கதைய அவுத்து வுடறேன்.. பாருங்க..
கவிதான்னாவே..எல்லாரும்.. நிக்காமா..ஓடற ஒரே விஷயம் அவங்களோட அடம் பிடிக்கற குணம் தான்.. பெத்த புள்ளக்கிட்ட கூட அடம் பிடிச்சி நெனச்சத சாதிக்கிற ஒரே ஆளு ஒலகத்துல இந்த அம்மணிதான் தாங்க..
அடம் பிடிக்கறது..:- அவிங்க பிரண்ட்ஸ், சொந்தகாறங்க., பெத்துவச்ச புள்ள, வூட்டுகாரு எல்லாரும் அம்மணிய. ”சீ..!! உன்க்கிட்ட யாரால முடியும்” ன்னு சொல்லிட்டு ஓடிடுவாங்க..அந்த அளவுக்கு அம்மணி அடம் famous ங்க!! அம்மணி வேணும்னு ஒன்னை நினச்சிட்டா போதும் அடம் புடிச்சு நடத்தாம வுடமாட்டாங்க.. அவ்வளோ நல்லவங்க.. எப்படி அடம் பிடிப்பாங்கங்கன்னு கேட்டீங்கன்னு வைங்க.. கேவலமா பாத்து சிரிச்சிட்டு, திட்டிட்டு போவீங்க..
சூப்பரா அழுவாங்க- அழறதுன்னா.. சும்மா எல்லாம் இல்லீங்கோ..!! சத்தம் போட்டு ஊரையே கூட்டுவாங்க..இப்பக்கூட சவுண்டு ஓவர் தான்.. ஏரியா நிச்சயம் கவர் ஆகும்..அதுவும் விடாம..ராத்திரி பூரா அழறது.. நாள் பூரா அழறது.. அப்படி எல்லாம் போவும் கத..
இது அதவிட சூப்பர்ங்கோ.. சாப்பிடாம உண்ணாவிரதம் இருக்கறது..இதுவும் காலவரையற்றது தாங்க.. சாதிக்கிற வரைக்கும் சாப்பிட மாட்டாங்க.. மிச்சம்ன்னு நிறைய தரம் வூட்டுக்காரு வுட்டுடுவாரு..அது வேற விஷயம்..!!
அடுத்தது பேசாம இருந்து சாதிப்பாங்க..- இது அவங்க செய்யற ஒரு நல்ல விஷயம்னு வச்சிக்கலாம். .அவங்க பேசாம வாய மூடிட்டாவே.. பாதி பிரச்சன சால்வ் ன்னு வச்சிக்கலாம்..
வாயாடறது :- வாயாடி, BBC, chatterbox இப்படி பல பெயர்களை வச்சிக்கிட்டு இருந்தாலும், இன்னும் சில கேவலமான பேரை வெளியில சொல்லமுடியாத அளவுக்கு இவிங்க வாயல சேத்து வச்சி இருக்காங்க.. நானே சொல்லமுடியாத அளவுக்கு அம்மணிக்கு சூப்பர் பேரு எல்லாம் இருக்குங்க.. எல்லாம் இவிங்கள சுத்தி இருக்கறவங்க வச்சது தாங்கோ..
அம்மணி பாக்கத்தான்.. இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருப்பாங்க.. வாய தொறந்தாங்க அவ்வளோத்தான்.. எல்லாரும் கை எடுத்து கும்பிட்டு தாயே ஆளை வுட நான் கிளம்பறேன்..ன்னு கிளம்புடுவாங்க.. அம்மணி வாய் சாகசத்த பாத்த அவிங்க வீட்டு மக்கள் எல்லாம் வக்கீல்’லுக்கு படிச்சா பெரிய ஆள வருவா..ஆனா.. இவ கோர்ட்க்கு போய் பேச ஆரம்பிச்சா..அங்க ஜட்ஜ் கூட ஏன்சி..ஓடிடுவாரு..ன்னு சொல்ற அளவுக்கு அம்மணி வாய் பெருசுங்கோ..!! அதுமட்டும் இல்ல.. இப்ப அவிங்க வூட்டுக்காரு நிலமைய நீங்க எல்லாரும் கொஞ்சம் யோசிச்சி பாக்கனும் பரிதாப படணும் சரிங்களா?!!
சுத்தம் ஊர்ல இல்லாத சுத்தம் :- அம்மணிக்கு இது ஒரு வியாதின்னு கூட வச்சிக்கலாம்.. சுத்தம் சுத்தம் ன்னு 108 டிகிரி சொரம் வந்தாக்கூட..குளிக்காம இருக்க மாட்டேன் ன்னு அடம் புடிப்பாங்க.. வூட்டுக்குள்ள கெட்ட நாத்தம்..லேசா எங்கயாவது வந்தத கூட நாய் ரேஞ்சுக்கு மோப்பம் புடிச்சி..க்ளீன் பண்ணிடுவாங்க.. வூட்டுல எல்லாம் வச்சது வச்ச எடுத்துல இருக்கனும்.... எங்கயாவது மாறிப்போச்சி.. இவிங்க ஆடற ஆட்டம் தாங்கமுடியாம..வுட்டுக்காரும் புள்ளையும் ஒரு வாக்கிங் போறேன்ன்னு வெளியில போய்டுவாங்க.. க்ளீன் பண்றேன் பண்றேன்..ன்னு இவிங்க பண்ற அமக்களம் தாங்காதுங்க.. இம்சை’னாலும் இம்சை அப்படிப்பட்ட இம்சை.. இவிங்க சுத்தம்’ டார்சர் தாங்க முடியாம.. இவிங்க புள்ள.. அவரோட ரூம்க்கு இவுங்க வரக்கூடாதுன்னு வூட்டுக்குள்ளேயே..“No Entry” போர்டு மாட்டிடார்ன்னா பாத்துக்கோங்க..அம்ம்ணி எவ்வளோ டார்ச்சர் ன்னு தெரியும்....
அடுத்தது சூப்பருங்க..அம்மணிய ரொம்ப சீக்கிரம் ஏமாத்திடலாம்.. அவிங்கக்கிட்ட போய் ரொம்ப சோகமா..ஓவர் பிரச்சன.. அது இதுன்னு சொல்லி பணமோ வேற ஒதவியோ கேளுங்க.. வுடனே மின்னல் வேகத்துல செஞ்டுவாங்க.. இப்படி அவிங்கள ஏமாத்தி பணம் கறந்தவங்க ஏராளம்.. ஆனா ஒன்னுங்க..எவ்வளோ வுட்டாலும் இன்னமும் திருந்த மாட்டாறாங்க.. நீங்க யாராவது கூட ட்ரை பண்ணாலாம்.. ஏமாற சான்ஸ் நிறைய இருக்கு... நானே அப்படித்தான் இங்க ஒட்டிக்கிட்டு இருக்கேன்.. அம்மணிக்கிட்ட போட்டு குடுத்துடாதீங்க.. அப்புறம் சங்குதான் எனக்கு.....
சரி இவ்வளோ சொல்லிட்டேன்.. பாவமா இருக்கு ஏதாவது ஒரு நல்லவிஷயம் ஒன்னே ஒன்னு சொல்றேன்.. அதாங்க.. அவங்க பொருள்களை பாதுக்காக்கற விஷயம்.. எதுவானாலும்..சரி..என்னையும் சேத்துத்தான்னு வச்சிக்கோங்களேன்.., வீட்டு சாமான்கள், புஸ்த்தகம்,போட்டுக்கற துணி, எதுவா இருந்தாலும் எத்தனை வருஷம் ஆனாலும் அழகா பத்திரமா வச்சிக்குவாங்க.... இதுக்காக.. மட்டும் அவிங்க வூட்டுக்காரு எது புதுசா கிடைச்சாலும் இவிங்க புள்ளக்கிட்ட குடுக்காம.. இவிங்கக்கிட்ட குடுப்பாரு.. ஜாக்கரதையா.. அழகா வச்சிக்குவாங்கன்னு..
சரிங்க.. இம்புட்டுதான்.. சரி நாங்க 5 பேரை கூப்பிடனுமா..இவிங்கத்தான்..
1. கைப்புள்ள
2. சிறில் அலெக்ஸ்
3. உஷாஜி
4. மதுரா
5. மங்கை
பீட்டர் தாத்ஸ் :- Talk time to think it is the source of the power.
கவிதாவின் மற்ற ஐந்து முகங்கள்
Posted by : கவிதா | Kavitha
on 16:30
Labels:
அணில் குட்டி
Subscribe to:
Post Comments (Atom)
19 - பார்வையிட்டவர்கள்:
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
...//அம்மணி வேணும்னு ஒன்னை நினச்சிட்டா போதும் அடம் புடிச்சு நடத்தாம வுடமாட்டாங்க.. அவ்வளோ நல்லவங்க..//....
தாயே...ஊருக்க்குள்ள எந்த பயபுள்ளய பாத்தாலும்...வோர்ல்ட் கப்...வோர்ல்ட் கப்ப்புன்னு பெனாத்தீட்டு திரியறாய்ங்க....கொஞம் மனசு வச்சி அடம்பிடிச்சி வாங்கிக் குடுத்தீங்கன்னா கோயில் கட்டி கும்புடுவாய்ங்க....
இத ஏஞ் சொல்றேன்னா...வெளயாடபோன பயலுக சரியில்லை..தேறமாட்டாய்ங்க போல...எல்லாம் உங்க கைலதான் இருக்கு.....அதுனால்ல...அடம்பிடிங்க தாயே....ஹி...ஹி...ஹி...
ஹா..ஹா...:))))) வாங்க பங்காளி..
அணிலை மாதிரி நீங்களும் ஒரு முடிவோடத்தான்.. கிளம்பி இருக்கீங்க போல இருக்கு..
விளையாடி இல்ல நாம கப்பை வாங்கனும்..அடம் பிடித்து வாங்க சொல்றீங்களே..நல்லாவா இருக்கு.. சொல்லுங்க..!!
//விளையாடி இல்ல நாம கப்பை வாங்கனும்..அடம் பிடித்து வாங்க சொல்றீங்களே..நல்லாவா இருக்கு.. சொல்லுங்க..!! //
அது முடியாதுனு தானே உங்களை அடம் பிடிச்சி வாங்கி தர சொல்லுறார் நம்ம பங்காளி. அதுவும் இல்லாம எத்தனை நாளைக்கு தான் இங்க இருக்குறவங்களை அடம் பிடிச்சி ஏமாத்திக்கிட்டு இருப்பீங்க... இங்க முயற்சி பண்ணலாம்ல...
//அவிங்க வூட்டுக்காரு நிலமைய நீங்க எல்லாரும் கொஞ்சம் யோசிச்சி பாக்கனும் பரிதாப படணும் சரிங்களா?!!//
அந்த மனிதர் வடிவ தெய்வத்த நினைச்சா தான் அணில் ரொம்ப வருத்தமா இருக்கு. ஹ்ம்ம்ம்ம் என்ன பண்ணுறது, அவரு வாங்கி வந்த வரம் அப்படி!!!
இது என்னடா இந்தக் குணமெல்லாம் தெரிஞ்ச விஷயங்களா இருக்கேனு பார்த்தேன் அப்படியே எம்மகதான்.
அம்மா,உங்க அம்மாவைக் காட்டுங்க. விழுந்து கும்பிடரேன்.
என்னை மாதிரி இன்னோரு தாயா:-)
அதுவும் சுத்தம் பாயிண்ட் இருக்கே. சாமி !அவங்க சுத்தம் செய்த இடம் அப்படியே இருக்கணும்னு நாங்க நடக்கக் கூட மாட்டொமே!!
அணிலு ! அசத்திட்டேமா.
// அதுவும் இல்லாம எத்தனை நாளைக்கு தான் இங்க இருக்குறவங்களை அடம் பிடிச்சி ஏமாத்திக்கிட்டு இருப்பீங்க... இங்க முயற்சி பண்ணலாம்ல... //
வாங்க சிவா அண்ணே.. அம்மணி வந்தாங்க.. என்னவோ.. ஹி..ஹி..ன்னு பங்காளி அண்ணனை பாத்து சிரிச்சாங்க.. கமண்டு போட்டுடு போய்ட்டாங்க..
இவிங்க வூட்டுல அடம் புடிக்கற மாதிரி வெளியில அடம் புடிச்சாங்கன்னு வச்சிக்கோங்க.. அம்மணிய..ரவுண்டு கட்டி சாத்து சாத்துன்னு சாத்தி, உடம்பை அக்குவேறா ஆணிவேறா பிரிச்சி இல்ல அனுப்புவாங்க.. அம்மணிக்கு இது எல்லாம் நல்லா தெரியும்.. அதான்.. இவிங்க அடத்தை எல்லாம் வெளியில வச்சிக்கமாட்டாங்க..
வூட்டோட சரி..
//நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி //
யக்காஆஆஆஆ..!! எதுக்குக்கா இத்தன நன்றீஈஈஈஈஈஈ..?!! அம்மணிய பத்தி விபரமா சொல்லவச்சதுக்கு நாந்தேன்..உங்களுக்கு டாக்ஸ் சொல்லனும்..
டாக்ஸ்.டாக்ஸ்..டாக்ஸ்..டாக்ஸ்..டாக்ஸ்!!!!
//அந்த மனிதர் வடிவ தெய்வத்த நினைச்சா தான் அணில் ரொம்ப வருத்தமா இருக்கு. ஹ்ம்ம்ம்ம் என்ன பண்ணுறது, அவரு வாங்கி வந்த வரம் அப்படி!!! //
என்னவோ..வைரம் அட்வர்டைஸ்மென்ட்ல சிநேகா சொல்ற மாதிரி "வரம் வாங்கி" வந்து இருக்காருன்னு சொல்றீங்க.. கவிதா வரமா?.. இம்சைய.. வாழ்க்கை பூரா கூடவே வச்சி இருக்காருங்கோ..!!
//இது என்னடா இந்தக் குணமெல்லாம் தெரிஞ்ச விஷயங்களா இருக்கேனு பார்த்தேன் அப்படியே எம்மகதான்.//
வல்லிஜி சுத்தமா புரியல.. இதுல எம் மகள்னு சொல்றீங்க.. அடுத்து பாருங்க..
//அம்மா,உங்க அம்மாவைக் காட்டுங்க. விழுந்து கும்பிடரேன்.
என்னை மாதிரி இன்னோரு தாயா:-)//
உங்கள மாதிரி ன்னு சொல்றீங்க.. இப்ப தெளிவா சொல்லுங்க..கவிதா உங்களை மாதிரியா..?
உங்க மகள் மாதிரியா?
உங்க அம்மா மாதிரியா?
//அதுவும் சுத்தம் பாயிண்ட் இருக்கே. சாமி !அவங்க சுத்தம் செய்த இடம் அப்படியே இருக்கணும்னு நாங்க நடக்கக் கூட மாட்டொமே!!
அணிலு ! அசத்திட்டேமா. //
ரொம்ப டாக்ஸ்...ங்க!!! அதேதாங்க.. அவங்க வீட்டுல கூட..அம்மணி தொடைக்க ஆரம்பிச்சா.. எல்லாரும் குரங்கு மாதிரி எங்கயாவது தொத்திக்கிட்டு தான் நிக்கனும்.. தரையில கால் பட விடமாட்டாங்க.. அந்த இம்சை எல்லாம் அனுபவச்சா தாங்க தெரியும்.. !!!
உங்களுடைய 5 முகங்களையும் அணில்குட்டி புட்டு புட்டு வச்சிருச்சு போல.. ;-)
//வோர்ல்ட் கப்...வோர்ல்ட் கப்ப்புன்னு பெனாத்தீட்டு திரியறாய்ங்க....கொஞம் மனசு வச்சி அடம்பிடிச்சி வாங்கிக் குடுத்தீங்கன்னா கோயில் கட்டி கும்புடுவாய்ங்க....//
இது நல்லா இருக்கே! இப்படி கூட வோர்ல்ட் கபை வாங்கலாம்ன்னா இவங்க ஒருத்தவங்களை மட்டும் அனுப்பியிருக்கலாமே!!!
நீங்க எழுதுகிற விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ;-)
//உங்களுடைய 5 முகங்களையும் அணில்குட்டி புட்டு புட்டு வச்சிருச்சு போல.. ;-) //
ஆமாங்க.. நான் கொஞ்சம் கவனிக்காம விட்டுட்டா இப்படித்தாங்க அணில் ஆட்டத்தை ஆரம்பிச்சிடுது..!!
//நீங்க எழுதுகிற விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ;-) //
நன்றி :)))))) !!!
//இது நல்லா இருக்கே! இப்படி கூட வோர்ல்ட் கபை வாங்கலாம்ன்னா இவங்க ஒருத்தவங்களை மட்டும் அனுப்பியிருக்கலாமே!!! //
ஏம்ப்பா.......இப்படி எல்லாரும் கிளம்பிட்டீங்க.. விட்டுடுங்கப்பா..
வேணும்னா..பாண்டிபஜார்..ல ரோடு கடையில பேரம் பேசி என் காசு போட்டு ஒரு "கப்" வாங்கிக்கொடுத்து விடுகிறேன்.. எல்லாரும் பார்த்து சந்தோஷப்பட்டுக்கோங்க..
கவிதாக்கா.....சூப்பர் குணங்கள் உங்களுக்கு ;-))
உங்க அவரையும், புள்ளையும் உன்மையிலே கை எடுத்து கும்பிடனும்
\\அவரோட ரூம்க்கு இவுங்க வரக்கூடாதுன்னு வூட்டுக்குள்ளேயே..“No Entry” போர்டு மாட்டிடார்ன்னா பாத்துக்கோங்க..\\
எப்படி எல்லாம் இம்சை பண்ணியிருந்தா இந்த அளவுக்கு அவன் வந்திருப்பான்.
பேசமா உங்களுக்கு சுகாதார துறையில் இருந்து ஏதாவது பதவி கொடுக்கலாம், நாடும் ரோடும் சுத்தாமாகும் ;-))))
அணிலுக்குட்டி, நான் கம்பேர் செய்ததும் உங்க கவிதா அம்மாவையும் என் மகளையும்.
கவிதாவின் அம்மாவோடக் காலைத் தேடினது,
நான் பெண் வளர்த்த மாதிரி அவங்களும்(கவிதாவை) வளர்த்து இருக்காங்களேன்னு.
புரிஞ்சுதாப்பா?:-)
//உங்க அவரையும், புள்ளையும் உன்மையிலே கை எடுத்து கும்பிடனும் //
வாங்க கோபிநாத் அண்ணாச்சி, நல்லா கும்பிட்டுக்கோங்க..நிசமாவே..அவிங்க ரெண்டுபேரும்..அவ்வோளோ நல்லவங்க.. அம்மணிய வச்சி சமாளிக்கறாங்க இல்ல..
//பேசமா உங்களுக்கு சுகாதார துறையில் இருந்து ஏதாவது பதவி கொடுக்கலாம், நாடும் ரோடும் சுத்தாமாகும் ;-)))) //
நீங்க வேற, பதிவி எல்லாம் அவங்களுக்கு வேணாங்க.. இப்பவே.. செய்யறாங்க.. வெளியில ரோடு சுத்தம் செய்யறவர் வரும் போது அவருக்கு தனியா இவிங்க காசி குடுத்து.. இவிங்க வீட்டு முன்னாடி இருக்கற குப்பை எல்லாம் அப்ப அப்ப க்ளீன் பண்ணிடுவாங்க.. பதவி எல்லாம் குடுத்தா அம்மணி ரெம்பத்தான் ஆடுவாங்க அதனால் அப்படி எதுவும் பண்ணிடாதீங்க..!!
//கவிதாவின் அம்மாவோடக் காலைத் தேடினது,
நான் பெண் வளர்த்த மாதிரி அவங்களும்(கவிதாவை) வளர்த்து இருக்காங்களேன்னு.
புரிஞ்சுதாப்பா?:-) //
அடடா..!! உங்களூக்கு விஷயமே தெரியாதா.. அம்மணிக்கு அம்மா எல்லாம் இல்லீங்க.. வளத்தது..அவிங்க ஆயா தாத்தாத்தான்.. வேணுமான்னா.. அவிங்களை நல்லா பாராட்டுங்க..
Post a Comment